Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1377326080images.jpg

மாவீரர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்த இளையராஜாவுக்கு எதிர்ப்பு

கனடாவில் நவம்பர் 3ம் திகதி இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நடக்கிறது. இதில் முன்னணி பாடகர்கள் பங்கேற்று திரையிசைப் பாடல்களை பாட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழர் அமைப்பு செய்து வருகிறது.

இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா சென்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இளையராஜா நேற்று பகல் 11 மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று அறைக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

(நக்கீரன்)

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் எல்லாம் முடிந்து விட்டது இறந்தவர்கள் இறந்துபோக அவர்களின் பெற்றோர்கள் அந்த நினைவோடு கலங்களை கழிக்க தென் இந்தியா கலைஞர்களின் வசதியான வாழ்க்கைக்கு தீனிபோடும் புலம்பெயர்ந்த எமது சகோதரர்கள் இதனையெல்லாம் வைத்து வியாபாரம்செயும் தமிழ் ஊடகங்கள் என்று இப்படியே காலம் கழிகின்றது இந்த சமூகத்தில் நானும் ஒருவன் என்பதினை நினைத்து வெட்கப்படுகின்றேன் வேதனைப்படுகின்றேன் :(

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]கனடா இசை நிகழ்ச்சியை நவம்பரில் நடத்த வேண்டாம் - இளையராஜாவுக்கு ஆர்கே செல்வமணி கோரிக்கை[/size]

06-illayaraja-75-300.jpg

[size=3][size=4]சென்னை: ஈழத் தமிழர்களின் தியாகத்தைப் போற்றும் நவம்பர் மாதத்தில் இசைஞானி இளையராஜா கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று இயக்குநர் ஆர் கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:[/size][/size]

[size=3][size=4]ஈழத்திலே தமிழர்களின் உரிமைக்காகவும், சுகந்திரத்திற்காகவும் தமிழ்பெண்ணின் மானத்தை காப்பதற்காகவும் தன்னுயிர் ஈந்த புறநானூற்றைப் புரட்டிப்போட்ட மாவீரர்களின் அளப்பரிய தியாகிகளை ஆண்டுதோறும் நினைவுக்கூரும் மாதந்தான் நவம்பர் மாதமாகும்.[/size][/size]

[size=3][size=4]பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த இந்த மாவீரர்கள் கடந்த 50 வருட§களாக ஈழத்தமிழர் விடுதலைக்காகவும், நம் சந்ததியின் சுதந்திரத்திற்காகவும் தங்களின் இளமைக்கனவுகளையும், உற்றார்-பெற்றோரையும் மறந்து தங்களையே ஆகுதியாக்கி வீர காவியமானவர்கள் ஆவார்கள்.[/size][/size]

[size=3][size=4]வாழவேண்டிய வயதிலே அன்பு மனைவியையும், ஆருயிர்க் கணவனையும், மழலைச் செல்வங்களையும் மறந்து மண்விடுதலைக்காக மரணித்திருக்கின்றார்கள். இப்படி ஆணும் பெண்ணும் சரிசமமாக வீரத்துடன் போராடி காற்றோடு காற்றாகக் கலந்துபோன மாவீரர்களைப் போற்றுகின்ற மாதந்தான் நவம்பர் மாதம்.[/size][/size]

[size=3][size=4]இந்த நவம்பர் மாதத்திலே ஈழத்தமிழர் மாத்திரமன்றி உலகத் தமிழர்கள் அத்தனைபேரும் நவம்பர் மாதத்தை தியாகமானதாகவும், வீரமானதாகவும் வணக்கத்திற்குரிய மாதமாகவும் போற்றி வருகின்றார்கள். மாண்டுபோன மாவீரர்களின் நினைவுகளை தம் இனத்திற்கும், சந்ததியினருக்கும் அவர்கள் இரத்தத்திலே ஊற்றி வருகின்றனர்.[/size][/size]

[size=3][size=4]இந்த நவம்பர் மாதத்திலே உலகத் தமிழினம் எந்தவொரு இசை விழாக்களையும், களியாட்ட விழாக்களையும் கொண்டாடி மகிழ்வதில்லை.[/size][/size]

[size=3][size=4]இம்மாதத்தில் அனைத்துக் களியாட்ட விழாக்களையும் புறக்கணித்து புனிதமான மாவீரர்களைப் போற்றுகின்ற மாதமாகப் போற்றுகின்றது.[/size][/size]

[size=3][size=4]வஞ்சகமாக...[/size][/size]

[size=3][size=4]ஆனால், இலங்கை அரசாங்கம் இந்த மாவீரர்களின் மாதத்தை மறக்கடிக்க முயல்கிறது. துரோகிகளை பயன்படுத்தி களியாட்டங்களை நடத்தி வீரநிகழ்ச்சிகளை மறக்கடிக்க முயல்கிறது. இதற்காக தமிழ்திரைப்பட துறையே கூட வஞ்சகமாக அவர்களுக்கு தெரியாமல் பயன்படுத்திக்கொள்ளத் துடிக்கிறது.[/size][/size]

[size=3][size=4]இதற்காக கருணாவைப்போல், கே.பி யைப்போல் ஈழ தமிழர்களே சில துரோகிகளை பயன்படுத்தி தமிழ்திரைப்பட துறையை விலைபேச நினைக்கிறது.[/size][/size]

[size=3][size=4]இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி அறியாமல் நமது கலைஞர்கள் கனடா நாட்டில் டோராண்டோ மாநகரில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள் என்ற அதிச்ச்சியான செய்தி இப்போது தெரியவந்துள்ளது.[/size][/size]

[size=3][size=4]இளையராஜா...[/size][/size]

[size=3][size=4]தமிழ்மண்ணிசையை உலகமெங்கும் எடுத்து சென்ற இசை மாமேதை இசைஞானி இளையராஜா அவர்கள் தலைமையில், இதுவரை ஈழப்போராட்டங்களை தலைமையேற்று நடத்திய இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்கள் உட்பட இளையராஜா யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, யேசுதாஸ், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம் போன்ற இசைகலைஞர்களும், விவேக், கோபிநாத், சினேகா, பிரசன்னா போன்ற திரைக்கலைஞர்களும் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் போன்ற மாபெரும் இயக்குநர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.[/size][/size]

[size=3][size=4]இச்செய்தியை அறிந்தவுடன் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களைத் தொடர்பு கொண்டபோது இந்நிகழ்ச்சியை நவம்பர் மாதம் தவிர்த்து முன்னதாக அக்டோபர் மாதத்திலோ அல்லது தள்ளி டிசம்பர் மாதத்திலோ நடத்தபட்டால் கலந்துகொள்வேன். இல்லையேனில் கலந்து கொள்ள போவதில்லை என்று உறுதியளித்துள்ளார்.[/size][/size]

[size=3][size=4]இசைஞானி இளையராஜா டோராண்டோ நகரில் உள்ளதால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் சென்னை திரும்பியபுடன் நேரடியாக சந்தித்து நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.[/size][/size]

[size=3][size=4]மேலும் இந்நிகழ்சியில் கலந்து கொள்வதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய துரோகங்களுக்குத் துணை போகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின்

செயல்களையும் புறந்தள்ளுவதன் மூலம் நாம் ஒரு மானமுள்ள, கூடவே மனிதமுள்ள கலைஞர்கள் என தொடர்ந்து நிலைநாட்டுவோம்.[/size][/size]

[size=3][size=4]ஈகர்களின் புனித மாதமாம் நவம்பர். இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் மே மாதம் எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு களியாட்ட விழாக்களைச் செய்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை மிகவும் வினயமாகத் தெரிவித்துக்கொள்கின்றேhம்.[/size][/size]

[size=3][size=4]தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.[/size][/size]

[size=3][size=4]ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற இலங்கை அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.[/size][/size]

[size=3][size=4]http://tamil.oneindi...aja-162735.html[/size][/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் இளையராஜாவை எதிர்த்து கோஷம்... இசை நிகழ்ச்சி தேதி மாறுமா?

06-illayaraja.jpeg

டொரன்டோ: கனடா தலைநகர் டொரன்டோவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் இலங்கைத் தமிழர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 3-ம் தேதி டொரன்டோவில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. ஆனால் இந்த மாதம் முழுவதும் இலங்கைத் தமிழர்கள் துக்க மாதமாக அனுஷ்டிப்பதால், அந்தத் தேதியில் இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என இலங்கைத் தமிழர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே இந்த நிகழ்ச்சி பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா சென்றார். டொரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இளையராஜா வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு அங்கு சென்றபோது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நவம்பர் மாதத்தில் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று ஹாலுக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சி மூலம் திரளும் பணத்தில் ஒரு பகுதியை ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காக தரத் திட்டமிட்டிருந்தார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.oneindia.in/movies/news/2012/10/naam-tamilar-party-protests-against-ilayaraaja-162727.html

டிஸ்கி:

www.yarl.com/forum3/index.php?showtopic=106410

முதலிலேயே இது குறித்த விளம்பரம் செய்யபட்டு இருந்தது அதை இங்கிட்டு இணைத்தும் இருந்தேன். அப்ப எல்லாம் எதுவுமே சொல்லாமல் .. மக்களிடம் செல்லாமல் .உரியபடி எதிர்பை தெரிவிக்காமல்.. ஆலுகாஸ் விளம்பரத்தில் கூட முல்லை பெரியாறு சிக்கலின் போது தள்ளி போட்டது கேள்வி( அப்புறம் நடிச்சாரே இல்லையா என்று எனக்கு தெரியாது) இப்ப வந்து ஜிங்கு ஜிங்குசா பச்சை கலரு ஜிங்குசா என்று கும்மியடிப்பது.. அப்போ எல்லாம் என்னா லொலிப்புப்பு சப்பிட்டு இருந்தா மாறி.. எனக்கென்னவோ நல்லதாக படவில்லை.. ஒருத்தரை வீட்டுக்கு கூப்பிட்டு அப்புறம் அவமானபடுத்திற மாறி கிடக்கு..

டிஸ்கிக்கு டிஸ்கி:

உண்மையிலேயே இசைஞானி இதை அவமானமாகத்தான் கருதுவார்.. நாளைக்கு இது பற்றி நீயுசு வரும். துக்ளக்கு தினமலரில் உடனே எழுதிடுவனான் " தமிழக கலைஞசன் ஈழதமிழர்களால் அவமானம்" தமிழக மக்களிடம் நல்ல அபிமானம் கிடைக்கும்.. யோசிச்சு எதுவாக இருந்தாலும் செய்யுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]மாவீரர் நினைவைக் குழப்பும் சதித்திட்டம் - கனடா நிகழ்வில் பங்கேற்பதில்லை என பாரதிராஜா அறிவிப்பு.[/size]

paarathiraajaa.jpg

[size=3][size=4]மாவீரர் நாளை குழப்புவதற்காக ஏற்கனவே தமிழர்கள் சிலரை பல்வேறு அமைப்புக்கள் ஊடாக களமிறக்கிவிட்டுள்ள சிறிலங்கா, தற்போது அந்த மாதத்தில் பல்வேறு தமிழ்க் கலை நிகழ்ச்சிகளை நடத்தி மாவீரர் நாளை மழுங்கடிக்க முனைந்து வருகின்றது.[/size]

[size=4]அவ்வகையில் இசைஞானி இளையராஜா தலைமையில் தமிழகக் கலைஞர்களைக்கொண்டு கனடா நாட்டில் டோராண்டோ மாநகரில் வருகின்ற நவம்பர் 3ம் திகதி ஒரு கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களை சிலரைக்கொண்டு சிறிலங்கா ஏற்பாடு செய்த இந்த நிகழ்சிக்கு தற்போது கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இது குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். (கீழுள்ள செய்தியில் அதனைப் பார்க்கவும்)[/size][/size]

[size=4]இதேவேளை, டோராண்டோ நிகழ்வில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, யேசுதாஸ், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம் போன்ற இசைகலைஞர்களும், விவேக், கோபிநாத், சினேகா, பிரசன்னா போன்ற திரைக்கலைஞர்களும் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் போன்ற மாபெரும் இயக்குநர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் என்பது மேலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது சிறிலங்காவின் இந்தச் சதித்திட்டத்தை அறிந்துகொண்ட பாரதிராஜா இந்நிகழ்வில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நவம்பர் மாதம் தவிர்த்து முன்னதாக அக்டோபர் மாதத்திலோ அல்லது தள்ளி டிசம்பர் மாதத்திலோ நடத்தபட்டால் கலந்துகொள்வேன். இல்லையேனில் கலந்து கொள்ள போவதில்லை என்று உறுதியளித்துள்ளார். இசைஞானி இளையராஜா டோராண்டோ நகரில் உள்ளதால் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. அவர் சென்னை திரும்பியபுடன் நேரடியாக சந்தித்து நவம்பர் மாதத்தில் நடத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்க உள்ளோம்.

மேலும் இந்நிகழ்சியில் கலந்து கொள்வதாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கலைஞர்களிடமும் மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்வது என்னவெனில் தயவுகூர்ந்து அறிந்தோ அறியாமலோ இத்தகைய துரோகங்களுக்குத் துணை போகவேண்டாமெனவும், இவர்களையும் இவர்களின் செயல்களையும் புறந்தள்ளுவதன் மூலம் நாம் ஒரு மானமுள்ள, கூடவே மனிதமுள்ள கலைஞர்கள் என தொடர்ந்து நிலைநாட்டுவோம்.

ஈகர்களின் புனித மாதமாம் நவம்பர். இனப்படுகொலைகளின் கொடுமை சுமக்கும் வலிதந்த மாதமாம் மே மாதம் எனும் இவ்விரு மாதங்கள் தவிர்ந்த ஏனைய மாதங்கள் பத்திலும் எவராவது எந்தவொரு களியாட்ட விழாக்களைச் செய்வதில் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லையென்பதனை மிகவும் வினயமாகத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், விநியோகஸ்தர்கள் சங்கங்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனம் என திரைப்பட துறையின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை அனைத்து ஈழதமிழர்களுக்கான அனைத்து போராட்டங்களிலும் தோளோடு தோள்நின்று போராடி வந்திருக்கின்றோம்.

ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் திரைப்படதுறை மாவீரர்களின் நினைவுகளை மறக்கடிக்க நினைக்கின்ற சிங்கள அரசின் இந்த சதிக்கு பலி ஆகிவிட கூடாது என்று அன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்ச்சி நிரல் பற்றி அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களிடம் அறிவிப்பதற்காக இளையராஜா கனடா சென்றிருக்கின்றார். டோரான்டோ நகரில் பத்திரிகையாளர்களை அவர் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இளையராஜா நேற்று வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு அங்கு சென்ற போது இலங்கை தமிழர்களும் சீமானின் நாம் தமிழர் கட்சியினரும் நூற்றுக்கணக்கில் திரண்டு இளையராஜாவை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

நவம்பர் மாதம் விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாக கடை பிடிக்கப்படுகிறது.

அந்த மாதம் முழுவதும் மகிழச்சியான நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. எனவே இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என கோசம் போட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விழாக் குழுவினர் இளையராஜாவை பாதுகாப்பாக அழைத்து சென்று அறைக்குள் தங்க வைத்தனர். நீண்ட நேரம் தமிழர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் என தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் கருத்தே என்னுடையதும்.. உள்ளதையும் கெடுப்பதற்கான ஏற்பாடு இந்தப் புறக்கணிப்பு..

ம்ம்ம்.. பாரதிராஜாவும் இறங்கியுள்ளார்.. சற்று சிந்திக்க வேண்டியது.. பொறுத்திருந்து பார்ப்போம்..

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]

மாவீரர் நினைவைக் குழப்பும் சதித்திட்டம் - கனடா நிகழ்வில் பங்கேற்பதில்லை என பாரதிராஜா அறிவிப்பு.[/size]

ம்ம் ரெண்டு மாதத்திற்கு முன்பு தெரியல போல கிடக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்றால் ஒன்றுமாக விளங்கவில்லை மாவீரர் தினத்தை இவர்கள் எப்படி குழப்பமுடியும்? தெரிந்தவர்கள் யாராவது எனக்கு விளக்கம் கொடுங்கோ

டிஸ்கி:

www.yarl.com/forum3/index.php?showtopic=106410

முதலிலேயே இது குறித்த விளம்பரம் செய்யபட்டு இருந்தது அதை இங்கிட்டு இணைத்தும் இருந்தேன். அப்ப எல்லாம் எதுவுமே சொல்லாமல் .. மக்களிடம் செல்லாமல் .உரியபடி எதிர்பை தெரிவிக்காமல்.. ஆலுகாஸ் விளம்பரத்தில் கூட முல்லை பெரியாறு சிக்கலின் போது தள்ளி போட்டது கேள்வி( அப்புறம் நடிச்சாரே இல்லையா என்று எனக்கு தெரியாது) இப்ப வந்து ஜிங்கு ஜிங்குசா பச்சை கலரு ஜிங்குசா என்று கும்மியடிப்பது.. அப்போ எல்லாம் என்னா லொலிப்புப்பு சப்பிட்டு இருந்தா மாறி.. எனக்கென்னவோ நல்லதாக படவில்லை.. ஒருத்தரை வீட்டுக்கு கூப்பிட்டு அப்புறம் அவமானபடுத்திற மாறி கிடக்கு..

டிஸ்கிக்கு டிஸ்கி:

உண்மையிலேயே இசைஞானி இதை அவமானமாகத்தான் கருதுவார்.. நாளைக்கு இது பற்றி நீயுசு வரும். துக்ளக்கு தினமலரில் உடனே எழுதிடுவனான் " தமிழக கலைஞசன் ஈழதமிழர்களால் அவமானம்" தமிழக மக்களிடம் நல்ல அபிமானம் கிடைக்கும்.. யோசிச்சு எதுவாக இருந்தாலும் செய்யுங்கப்பா

[size=6]//விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கடை பிடிக்கப்படுகிறது// :wub::unsure::blink::icon_mrgreen: [/size]

[size=6]wat is that ????? தமிழர்களுடை மாவீரர் தினம் !!!!!!!![/size]

Edited by தமிழ்சூரியன்

இசை நிகழ்ச்சி நடக்கும் செய்தி வெளியே தெரிந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு தேதியை மாற்றியிருக்கலாம். அதை விட்டு விட்டு இப்படி பகிரங்கமாக அறிக்கைப் போர் நடத்துவது இன்னும் பிரிவினைகளைத்தான் அதிகரிக்கும். இது அழகும் அல்ல.இதைவிட, நிகழ்ச்சி மாவீரர் வாரத்திலும் நடக்கவில்லை.

இதில் புரியாத விடயம் மாவீரர் தினங்களுக்காக புலத்தில் இருந்து எழும் வீரியமான அறிக்கை போர்கள் மாதிரி, பட்டினியில் நலிந்து வாழும் போராளிகளுக்காக எந்த அறிக்கைப் போரும் நடப்பதில்லை. அவர்கள் மரணிக்கும் மட்டும் விளக்கேற்ற காத்துக் கொண்டு இருக்கிறார்களோ தெரியாது.

மாவீரர் தினங்களை குழப்பும் நோக்கம் முன்பு சிங்கள அரசுக்கு இருந்திருக்கலாம் ஆனால் இப்போது மாவீரர் தினம் ந கா அரசு போன்றவற்றை குழப்பும் அவசியம் எதுவும் சிங்கள அரசுக்கு இல்லை ஏனெனில் தமிழர்களே தங்களுக்குள் குத்துப்பட்டு தம்மை தாமே சிதைத்துக்கொள்வார்கள் என்று சிங்கள அரசுக்கு நன்கு தெரியும். மேலும் புலிகள் மீதான பயங்கரவாதத்தடை மேற்கு நாடுகளில் தொடர்ந்து இருப்பதால் மாவீரர் தினம் என்பது ஒரு வரையறைக்கு உட்பட்டது என்பதும் அவ்வாறான நிகழ்வுகளை வைத்து சிங்கள அரசு இயந்திரத்தை ஆட்டுவிப்பது அல்லது தமிழர் உரிமை குறித்து முன்நகர்வது சத்தியம் இல்லை என்னும் தெளிவு சிங்கள அரசுக்கு போதுமானளவு இருக்கின்றது.

நவம்பரில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு என்பதுக்கும் சிங்களத்துக்கும் சம்மந்தம் இருப்பது உண்மையா அல்லது தற்போது முதுபெரும் உடகவியலாளர்களுக்கும் (முடியல) சிங்களத்துக்கும் சம்மந்தம் இருப்பது உண்மையா என்றுபார்த்தால் இரண்டாவதுக்கு அதிக சந்தர்ப்பம் உள்ளது. இளையராஜா தமிழுக்கு என்ன செய்தார் என்ற கேள்வியின் அறிவீனம் எமக்கு இளையராஜாவே தமிழின் ஒரு கூறு என்ற அறிவு புத்திசாலிகளுக்கு நிச்சயம் இருக்கும் அப்புத்திசாலிகள் தமிழர்களுக்கு விரோதமானவார்களாகவும் இருக்கலாம். ஒருவன் பதின்ம வயதில் தமிழில் பற்றுடனும் பாசத்துடனும் இருப்பதுக்கு அவனை பாலுட்டி சீராட்டி வளர்த்த தாய்க்கும் தொடர்பிருக்கின்றது. அவன் வளர்ந்து வரும் பாதையில் கூடவே இவரின் இசையும் இருக்கின்றது.

நாம் மேலும் நுணுக்கமாக சிதைய ஆரம்பித்திருக்கின்றோம். மிக அருவெருப்புக்குள் எம்மை திணிக்கத்தொடங்கியிருக்கின்றோம். இப்படியே போனால் சிங்களவனின் மூத்திரத்தால்தான் எமக்குப் பிடித்த சாபத்தை போக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=6]//விடுதலைப்புலிகளின் மாவீரர் தினம் கடை பிடிக்கப்படுகிறது// :wub::unsure::blink::icon_mrgreen: [/size]

[size=6]wat is that ????? தமிழர்களுடை மாவீரர் தினம் !!!!!!!![/size]

சரியா எழுதியிருக்கிறாங்கள்..கடை பிடிக்கப்படுகிறது அததான் நடக்கிது

இசை நிகழ்ச்சி நடக்கும் செய்தி வெளியே தெரிந்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு தேதியை மாற்றியிருக்கலாம். அதை விட்டு விட்டு இப்படி பகிரங்கமாக அறிக்கைப் போர் நடத்துவது இன்னும் பிரிவினைகளைத்தான் அதிகரிக்கும். இது அழகும் அல்ல.இதைவிட, நிகழ்ச்சி மாவீரர் வாரத்திலும் நடக்கவில்லை.

இதில் புரியாத விடயம் மாவீரர் தினங்களுக்காக புலத்தில் இருந்து எழும் வீரியமான அறிக்கை போர்கள் மாதிரி, பட்டினியில் நலிந்து வாழும் போராளிகளுக்காக எந்த அறிக்கைப் போரும் நடப்பதில்லை. அவர்கள் மரணிக்கும் மட்டும் விளக்கேற்ற காத்துக் கொண்டு இருக்கிறார்களோ தெரியாது.

மரணித்தவர்கள் திரும்பிவந்து கேள்விகேட்கமாட்டார்கள் என்கின்ற துணிவுதான்.

இதனால் ஓர் விடயம் நடைபெறப்போவது மட்டும் உண்மை.

இப்படி ஆளாளுக்கு அறிக்கைகள் விட்டு அப்படிச்செய், இப்படிச்செய் என்று உத்தரவிடும் போது சனங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு இவர்கள் நடாத்துகின்ற மாவீரர் தின நிகழ்வுகளிற்கு போகும் ஆர்வமே குன்றிவிடும். இவர்களின் மாவீரர் தின நிகழ்வுகளை புறக்கணித்துவிட்டு வேறு காரியங்களில் ஈடுபடத்தொடங்கிவிடுவார்கள்.

சரியா எழுதியிருக்கிறாங்கள்..கடை பிடிக்கப்படுகிறது அததான் நடக்கிது

அப்படியானால் விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம் என்று கொங்கணம் கட்டுகிறார்கள் ..............அதன்பின் நடந்த மாவீரர்தினங்கள் அவர்கள் ஆவியாலா நடத்தப்பட்டது...................அல்லது .. விடுதலைப்புலிகள் இன்னும் அழிக்கப்படவில்லை என்கிறீர்களா

Edited by தமிழ்சூரியன்

சாத்திரியார் திண்ணையில் பாரதிராஜாவை திரும்ப வரவழைக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறினார். இந்த திரியில் நான் எனது முதலாவது கருத்தில் பாரதிராஜாவை யாரும் பககைக்க வேண்டாம் என்று கூறியிருந்தேன். எனக்கு அவர் மீது இருக்கும் ஆரவம் காரணமாக ஒரு தொடர்பை என்ன நடக்கிறது என்று கேட்டேன். "பாரதிராஜா இனி இதற்குள் வரும் சந்தர்ப்பம் சீரோ" என்று கூறுகிறார். இளையராஜா தமிழ் நாடு திரும்பியபின் நிகழ்சி நாளை மாற்ற கூடிய சந்தர்பம் தான் இருப்பதாக கூறினார். அவர் ஆங்கில நொவெம்பரா தமிழ் கார்த்திகையா என்ற விவாதத்தில் இறங்க போவதிலை என்றும் கூறினார். நிகழ்சிநாள் மாறினால் பரதிராஜா திரும்ப வரலாம். ஆனல் இந்த நாளில் வரவே மாட்டார் என அடித்து சொன்னார். அதை கேட்டால் நான் நினைக்கவில்லை சாத்திரியார் எடுத்த முயற்சி வெற்றி அளிக்கும் என்று. எனக்கு இளையராஜா என்ன செய்கிறார் என்பது அக்கறை இல்லை. பாரதிராஜா என்ன செய்ய போகிறார் என்பதை ஆர்வத்துடன் கவனிப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/gNoyZKpA-uM

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை மாதம் எமது புனித மாதம்.

[sunday, 2012-10-07 11:26:31]

கார்த்திகை மாதம் என்றாலே அது, எம் மண்ணுக்காக தம்முயிரை ஈந்த மாவீரர்களை நினவு கூர்ந்து, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி,அவர்தம் கனவை நனவாக்க நாம் உறுதி பூணும் மாதம். இது ஈழ மக்கள் யாவரும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கும் மாதம் என்பது யாவரும் அறிந்த செய்திதான்.

இந்த கார்த்திகை மாதத்தில் நாம் எந்த களியாட்டு நிகழ்ச்சிகளையும் நடத்தவும் கூடாது, கலந்து கொள்ளவும் கூடாது என்பது இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனதும் இரத்தத்தோடு ஒன்றி விட்ட உணர்வு. எமது ஈகையாளர்களின் புனிதமான இந்த கார்த்திகை மாதத்தில் இளையராஜாவின் தலைமையிலான தென்னிந்திய இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சியை கனடாவில் நடத்துவதென்பது ஈழ தமிழ் உணர்வாளர்களின் மனங்களை புண் படுத்தும் செயலாகும். அந்த இசை கலைஞர்களுக்கு இந்த செய்தி தெரியாமல் நிகழ்ச்சி நடத்த ஒத்து கொண்டிருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்துபவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகளே. மாவீரர் மாதத்தை களங்கப் படுத்துவதற்காகவே இந்நிகழ்ச்சியை கார்த்திகை மாதத்தில் நடத்த ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சிங்கள அரசின் சதித் திட்டமே.

இதை இசைஞானி இளையராஜா அவர்களும், அவருடன் வருகை தர இருக்கும் திரைக் கலைஞர்களும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நாட்டு திரைப்படத்துறையே ஒன்று சேர்ந்து ஈழ மக்களுக்காக குரல் கொடுத்ததையும்,எமக்காகஇன்றும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதையும் நாம் மறந்து விடவில்லை.

இந்த நேரத்தில் சிங்கள அரசின் சதித்திட்டத்தை புரிந்து கொண்டு கார்த்திகை மாதத்தில் ஈழ தமிழர்கள் வாழும் நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதை தவிர்த்துக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். கனடாவில் நீங்கள் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சியை இந்த அக்டோபர் மாதக் கடைசியிலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ நடத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

எங்கள் அன்பு வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகின்றோம்.இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால், விரும்பத் தகாத எதிர்ப்பு போராட்டங்கள் நடை பெறுவதும் தவிர்க்க முடியாததாகி விடும். எங்களுக்காக எப்போதும் துணை நிற்கும் திரையுலகம் இப்போதும் துணை நிற்கும் என்று நம்புகிறோம்.நன்றி.

இன உணர்வாளர்,

வன்னி புஷ்பா.

http://seithy.com/breifNews.php?newsID=67975&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி எங்கடை இடத்தில ஒரு சாமத்திய வீடு வாற மாதம் நடக்கப்போகுது .போகலாமோ அல்லது போகக் கூடாதோ. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் வரப் போகுதென்னாடால் காணும் யாழில் சினிமாப் பாட்டு கேட்க கூடாது,படம் பார்க்க கூடாது என்று தொடங்கிடுவார்கள்...போன வருடம் இதைச் சொன்னவர்கள் இந்த வருடம் பேசாமல் இருக்கிறார்கள் ஆனால் இந்த வருடம் கொஞ்சப் பேர் புதிசாய் தொடங்கி இருக்கினம்...தெரியாமல் தான் கேட்கிறேன் நவம்பர் மாதத்தை தவிர மற்ற மாதத்தில் உங்களுக்கு மாவீரர் ஞாபகம் வாரதேயில்லையா?...உண்மையாகவே மாவீர‌ர்களை நேசிப்பவர்கள் இப்படி கூச்சல் போட‌ மாட்டார்கள் தாங்கள் செய்ய வேண்டியதை மாவீர‌ர்களுக்கு அமைதியாக செய்து கொண்டு தான் இருப்பார்கள்...ஆண்ட‌வா இதற்கெல்லாம் சீக்கிர‌ம் முடிவு கட்ட‌வாவது ஒருத்தர் வர‌ வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள இருக்கிற அரசியல் பற்றி விடுவோம்.

ஆனால், ஒரு உவமைக்காக, 'அல்லா' வருஷம் முழுக்கத் தானே, இருக்கிறார்!

அதென்ன, 'ரமடான்' மாதத்தில் மட்டும் நோன்பு?

வருசத்தில எந்த மாதமும், நோன்பு இருக்கலாம் தானே, என்று நாங்கள் கேட்பதில்லை?

எங்கள் ஒற்றுமையை, உடைக்கும் ஒரே நோக்கத்தோடு, எங்களால் இலகுவில் நிராகரிக்க முடியாத, எமது பலவீனங்களை நோக்கிய, ஒரு முன்னெடுப்பாகவே இது எனக்குத் தோன்றுகின்றது!

மணப்பெண் அருகில் இல்லாவிட்டால், 'வாழைமரத்தைப் பெண்ணாகப் பாவித்துத், தாலி கட்டித் திருமணம் செய்யும், இனமெல்லவா, எமது இனம்?

எல்லாவற்றுக்கும், விதிவிலக்குத் தேடினால், இறுதியில் விலக்குவதற்கு, எதுவும் மிஞ்சப் போவதில்லை, என்பது எனது, தாழ்மையான கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கின்றேன் என்று யாரும் குறை நினைக்காதேங்கோ ஏன் இந்த பிரச்சனை எல்லாமே கனடாவில் நடக்கின்றது ? :D

அங்குள்ள தமிழர்களின் உணர்வை குறைத்து மதிப்பிடுகின்றார்களா நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் ? :rolleyes:

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் வரப் போகுதென்னாடால் காணும் யாழில் சினிமாப் பாட்டு கேட்க கூடாது,படம் பார்க்க கூடாது என்று தொடங்கிடுவார்கள்...போன வருடம் இதைச் சொன்னவர்கள் இந்த வருடம் பேசாமல் இருக்கிறார்கள் ஆனால் இந்த வருடம் கொஞ்சப் பேர் புதிசாய் தொடங்கி இருக்கினம்...தெரியாமல் தான் கேட்கிறேன் நவம்பர் மாதத்தை தவிர மற்ற மாதத்தில் உங்களுக்கு மாவீரர் ஞாபகம் வாரதேயில்லையா?...உண்மையாகவே மாவீர‌ர்களை நேசிப்பவர்கள் இப்படி கூச்சல் போட‌ மாட்டார்கள் தாங்கள் செய்ய வேண்டியதை மாவீர‌ர்களுக்கு அமைதியாக செய்து கொண்டு தான் இருப்பார்கள்...ஆண்ட‌வா இதற்கெல்லாம் சீக்கிர‌ம் முடிவு கட்ட‌வாவது ஒருத்தர் வர‌ வேண்டும்

வெள்ளிக்கிழமைகளில் தான் கோவிலுக்குப் போக வேண்டுமென்று இருக்கின்றது. அதற்காக மற்றைய நாட்களில் கடவுளை நினைப்பதில்லையா? அதைப்போலத் தான் இதுவும்.

வெள்ளிக்கிழமை வீட்டில் மச்சம் காச்சும் செயலுக்கு ஒப்பானது இது. உங்களுக்கு இளையராஜா நிகழ்ச்சி பார்க்கவேண்டுமென்றால் பார்த்து விட்டுப் போங்கள். மற்றவர்கள் கூச்சல் போடுகின்றார்கள் என்று குற்றம் சாட்டி நீங்கள் நல்லவர் வேஷம் போட முயலாதீர்கள்.அவர்கள் தங்கள் ஆதங்கத்தை அப்படி வெளிப்படுத்தலாமே?

தாங்க முடியவில்லையடா சாமி :icon_mrgreen: :icon_mrgreen:

கேட்கின்றேன் என்று யாரும் குறை நினைக்காதேங்கோ ஏன் இந்த பிரச்சனை எல்லாமே கனடாவில் நடக்கின்றது ? :D

அங்குள்ள தமிழர்களின் உணர்வை குறைத்து மதிப்பிடுகின்றார்களா நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் ? :rolleyes:

கூட்டிக் கொடுக்கும் காட்டிக்கொடுக்கும் விஷக்கிருமிகள் இங்குதான் அதிகம் போலும். ஒரு கஸ்டமும் படாமல் ஸ்பொன்ஸரில் இலகுவாக வந்து அதிகம் பேர் இங்கு "கொட்டுப்பட்டதும் "ஒரு காரணமாக இருக்கலாம்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sing in the rain i'm swing in the rain..

அது சரி எங்கடை இடத்தில ஒரு சாமத்திய வீடு வாற மாதம் நடக்கப்போகுது .போகலாமோ அல்லது போகக் கூடாதோ. :rolleyes: :rolleyes:

ஒரு வரி மடக்கு எழுதாமல், திரியை வாசித்து உபயோகமான கருத்தாக உங்கள் நினைவை விளக்கி இரண்டு மூன்று வசனங்களில் எழுதுங்கள்.

உங்கள் கருத்துக்கு தமிழிச்சி மேலே பதில் அளித்திருக்கிறா என்று நினைக்கிறேன். அந்த பதில்களையா நீங்கள் எதிர்பார்பது என்று நாம் சொல்வது கஸ்டம் ஏன் எனில் நீங்கள் விபரங்களை குறிப்பிடவில்லை. ஆகையால் நீங்களேதான் அவற்றை வாசித்து முடிவு கட்ட வேண்டும்.

பிழை திருத்தம்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சியை இங்கே நடத்துபவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகளே. மாவீரர் மாதத்தை களங்கப் படுத்துவதற்காகவே இந்நிகழ்ச்சியை கார்த்திகை மாதத்தில் நடத்த ஒழுங்கு செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க சிங்கள அரசின் சதித் திட்டமே.////

அவர்கள் இலங்கையின் கைக்கூலிகள் என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கின்றதா? எடுத்தவுடனே உடனே அவர்கள் மீது குற்றச்சாட்டு செய்ய எவ்வாறு இந்த மாதிரி முடிகின்றது?? முதலில் இவ்வாறு கைக்கூலிப்பட்டம் சொல்லுகின்ற தகுதி உங்களுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சென்ற வருடம் மாவீரர் தினத்தை இரண்டாக அடிபட்டு, குத்துப்பட்டுச் செய்ய முயன்ற செயல் மாவீரர் தினத்தைக் களங்கப்படுத்தவில்லையா? அதுவும் சிங்கள அரசின் சதித்திட்டங்களில் அடங்கவில்லையா? அப்போது இந்த வன்னி புஸ்பா என்ன **** என அறியலாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.