Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி ஆனந்தபுர கிராமத்தில் பாராட்டுக்குரிய தமிழினி என்ற சாதனைச் சிறுமி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thamilini-150-seithy.jpg

கிளிநொச்சி ஆனந்தபுரத்தில் வசித்து வருகிறாள் தமிழினி என்ற சிறுமி. கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலய ஐந்தாம் வகுப்பில் கல்வி கற்று வரும் தமிழினி கடந்த புலமை பரீட்சையில் 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருக்கிறார்.

மாவட்டத்தில் இந்த பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற்று முதலாம் இரண்;டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்கள் பலர் இருக்க வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகளை பெற்ற இந்த தம்ழினியை பற்றி ஏன் எழுதவேண்டும்? தமிழினியின் வாழ்க்கை பெரும் துயரத்தில் மிதக்கிறது. அவளது வாழ்வில் இந்தப் புள்ளிகள் ஒரு சாதனையாகின்றன.

Thamilini-Anandapuram171012-011.jpg

தமிழினியின் தந்தை தனபாலளை யுத்தம் இந்த உலகை விட்டு அழித்துவிட்டது. தாய் புவனேஸ்வரி வறுமையினால் வெளிநாட்டில் உழைப்பதற்காக இந்த நாட்டை விட்டே சென்று விட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு கொடிய இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை உடையார்கட்டு இருட்டுமடு என்ற இடத்தில் நடந்த செல் தாக்குதல் ஒன்றில் தந்தையார் இறந்துபோக தாய் மூன்று குழந்தைகளுடன் மெனிக்பாம் சென்று பின்னர் மீண்டும் கிளிநொச்சியில் மீள்குடியேறியவர்.

ஆனால் தமிழினியின் தாயார் இப்பொழுது மலேசியாவில் வீட்டுப்பணிப்பெண்னாக இருக்கிறார். தனது மகள் தமிழ்நிலாவுக்கு (வயது 03) இதயநோய் காரணமாக அவருக்கு சிகிசை அளிப்பதற்கு நான்கு இலட்சம் ரூபா தேவைப்படுகிறகு என மருத்துவர்கள் தெரிவிக்க அந்த பணத்தினை சம்பாதிக்க அவர் வீட்டுப்பணிப்பெண்ணாக மலேசியா சென்று இப்பொழுது ஆறு மாதங்கள் ஆகின்றன.

Thamilini-Anandapuram171012-02.jpg

கணவனை இழந்த அந்த இளம் பெண் தனது மகளை எப்படியென்றாலும் நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மூத்த பிள்ளை பத்து வயதான தமிழினியுடன் ஏழு வயதான தமிழ்ராஜ், மூன்று வயதான தமிழ்நிலா ஆகிய மூன்று குழந்தைகளையும் தனது சகோதிரியின் பராமரிப்பில் விட்டுவிட்டு சென்றுள்ளார் அவரது சகோதரி ஆதாவது தமிழினியின் சித்தி கிளிநொச்சி நகரிலுள்ள உள்ள ஒரு தனியார் புத்தக கடையில் வேலை செய்கின்றார் அந்த வருமானத்தில்தான் இந்த மூன்று குழந்தைகளும் தமிழினியின் சித்தி மற்றும் அம்மம்மா ஆகியோர் ஒரு குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அரசின் எந்த உதவிகளும் கிடைக்க வாய்ப்பே இல்லை. இவர்கள் குடியிருக்கும் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்திற்கு பின்புறமாக உள்ள அரச காணிகளில் வசிக்கிறார்கள். இவர்கள் குடியிருக்கும் குடிசையிலிருந்து 25 மீற்றர் தொலைவில் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களால் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட மின்சார நிலையம் உள்ளது. இவர்களது குடிசைக்கு மேலாக உயர்வலு, குறைவலு என மின்கம்பிகளும் மின்கம்பங்களும் செல்கிறது. ஆனால் இவர்களது வீட்டுக்கு இதுவரை மின்சாரம் இல்லை என்பதே சோகம். சொந்த காணி இல்லை. சொந்த வீடு இல்லை. வீட்டில் கிணறு இல்லை, இருக்கு என்று சொல்வதனை விட இல்லை என்று சொல்வதற்கே ஏராளாம் துயரங்கள் உள்ளன. அப்பா உழைத்து சிறுக சிறுக சேகரித்த சொத்துக்களும் அப்பாவோடு உடையார்கட்டோடு யுத்த்தில் அழிந்துவிட்டன. இப்படியான சோகமான வரலாற்று பின்னணியை கொண்ட ஏதுவுமற்ற வீட்டில் வசிக்கும் இடிந்த குடும்பததின் மூத்த பிள்ளையே தமிழினி,

எமது சமூகத்தில் தரம் ஜந்து புலமைப் பரீட்சையில் தோற்றவிருக்கும் ஒரு பிள்ளைக்கு பெற்றோர்கள் எப்படியான கவனிப்புக்களை செலுத்துகிறார்கள் என்பதே முக்கியமானது.

தங்கள் பிள்ளைக்கு அதிகாலை வகுப்பு. பின்னர் பாடசாலை கல்வி. அதன்பின்னர் பாடசாலையிலிருந்து நேரடியாக சீருடை கூட மாற்றாமல் ரீயூசன். பின்னர் இரவில் வீட்டில் பிரத்தியேக வகுப்பு. அதன் பின்பு அன்று பாடசாலை மற்றும் ரீயூசன்களில் கொடுக்கப்பட்ட வீட்டுவேலை என்று அந்த ஒரு வருடமும் அந்த பிள்ளை நிம்மதியை தொலைத்துவிடும். இதற்கு அப்பால் பெற்றோர் பிள்ளையின் போக்குவரத்து முதல் பேசனல் கிளாஸ, கற்றல் உபகரணங்கள் உள்ளிட்ட எல்லாற்றுக்கும் பெரும்தொகை பணத்தினை செலவழித்து விடுவார்கள். அது மட்டுமன்றி அந்த பிள்ளையை ஆள் முதல் ஆடை வரை பராமரிக்க என அதிகம் கவனம் எடுப்பார்கள்.

தரம் ஜந்து பரீட்சையில் தோற்றும் பிள்ளைகளில் பெருபாலும் மூன்றில் இரண்டு பகுதி பிள்ளைகள் அவர்களது பெற்றோர்களால் இவ்வாறே நடத்தப்படுகின்றனர். ஆனால் இதில் துரதிஸ்டவசம் என்வெனில் இவ்வாறு விழுந்து விழுந்து கவனிக்கப்டும் பிள்ளைகளில் பலர் பரீட்சையில் சித்தியடைவது இல்லை. இதற்கு பிறகு அந்த பிள்ளைகள் பெருபாலான பெற்றோர்களால் திட்டி தீர்க்கப்படுவதும் கவனிக்கபடாமல் விடுவதும் தொடர்ந்து நடந்தேறுகின்றன.

இப்படி ஒரு சூழலில்தான் தமிழினியின் கதை முக்கியமாகிறது. தமிழினி நெருக்கடியான நிலைமையிலேயே தனது கல்வியினை தொடர்ந்துள்ளார் தொடர்கிறாள். ஒரு பிள்ளைக்கு படிப்பதற்கு என்ன அடிப்படை வசதிகள் தேவையோ அவை அனைத்தும் அற்ற நிலையிலேயே தம்ழினி படிக்கிறாள். ஒழுங்கான வீடு இல்லை. வீட்டில் கதிரை மேசைகள் இல்லை. மின்விளக்குகள் இல்லை. இப்படி ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இல்லை ஏதுவுமில்லாத ஒரு சூழலிலேயே தமிழினி தனது தரம் ஜந்து பரீட்சையில் தோற்றி மாவட்ட வெட்டுப்புள்ளியான 146 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துளாள்.

பெருபாலான நேரங்களில் தமிழினியே வீட்டு வேலைகளையும் கவனிக்கவேண்டிய நிலைமையும் உண்டு. அயல் வீட்டுக்குச் சென்று குடிப்பதற்கு, குளிப்பதற்கு துவைப்பதற்கு என தண்ணீர் பெற்றுவருவது முதல் தனது ஆடைகளை துவைத்து சுத்தம் செய்வது உள்ளிட்ட பணிகளுடன் இதய நோயினால் பாதிக்கப்பட்ட தங்கையின் தேவைகள், தம்பியின் தேவைகளையும் கவனிக்க வேண்டும்.

பத்து வயதிலேயே பக்குவமாய் எல்லாப் பணிகளையும் செய்து தானும் தனது கல்வியினை தொடர்ந்து சித்தியடைந்த இந்தப் பிள்ளை உண்மையிலேயே பாராட்டுக்குரியவள். தந்தை இல்லாத சோகம் தாயின் அரவணைப்பு இல்லாத ஏக்கம் வறுமையின் தாக்கம் இவற்றுக்கு மத்தியில் தமிழினி இந்த வெற்றியைச் சாதித்திருகிறாள்.

எனவே உதவிகள் என்பது இவர்களை போன்றவர்களுக்கே தேவைப்படுகின்றது. தந்தை இல்லாத குடும்பம். இதய நோயினால் பாதிக்கப்பட்ட தங்கை. அதற்காக நான்கு இலட்சம் ரூபாவுக்கு தாய் நாட்டைவிடடை சென்ற தாய். இப்படியான குடும்பத்தில் கல்வியை இறுக்கமாகப் பிடித்த தமிழினி நம்பிக்கை தரும் சிறுமி.

http://www.seithy.co...&language=tamil

தமிழினி மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]தமிழினி மேலும் மேலும் சாதனைகள் படைத்து [/size][size=1]

[size=5]பிரகாசமான எதிர்காலம் பெற வாழ்த்துக்களும்,[/size][/size][size=1]

[size=5]பிரார்த்தனைகளும் . [/size][/size]

உண்மையிலேயே பாராட்டுக்கு உரிய சிறுமி. மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்

[size=4]ஒருவித வெட்க உணர்வுடன் வாழ்த்தி நிற்கிறேன்.[/size]

தமிழினிக்கு வாழ்த்துகள்.

10,000 ஆண்டு காலமாக எப்படி ஒரு இனம் வெட்ட வெட்ட மீண்டும் தளிர்க்கிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான விளக்கம் இந்த செல்வம்.

ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆளும்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சிறுமி. மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி

வாழ்த்துக்கள் தமிழினி...உங்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையட்டும்.

தமிழினத்தின் திறமையின் அடையாளமான இந்த செல்லம் மேலும் சிறந்து விளங்கவும் .இவளுடைய எல்லாத்தேவைகளையும் அந்த இறைவன் வழங்கி அருளும்,ஆசியும் பெற வாழ்த்துகிறேன்

யாராவது தமிழினியின் தொடர்பெடுத்து தரமுடியுமா..?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இந்த பிள்ளைக்கும் அவரது குடும்பத்துக்கும் நேரடியாக எப்படி உதவி செய்யலாம் என்பதை இச்செய்தியை போட்டவர்கள் அல்லது யாரவது தெரியபடுத்தினால் நல்லது.[/size]

Edited by Queen

யாராவது தமிழினியின் தொடர்பெடுத்து தரமுடியுமா..?

எனது வேண்டுதலும் அதுவே

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழினி.

[size=4]ஒருவித வெட்க உணர்வுடன் வாழ்த்தி நிற்கிறேன்.[/size]

உண்மை அகூதா.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நிலா, தமிழினி அழகான தமிழ்ப்பெயர்கள்.

வாழ்த்து(க்)கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினி மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

தமிழினி மேலும் மேலும் சாதனைகள் படைத்து

பிரகாசமான எதிர்காலம் பெற வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது வேண்டுதலும் அதுவே

Intha Kulanthaiyin Bank account irunthaal thayavu seythu therivikkavum

பலர் உதவ விரும்புகிறார்கள். நேசக்கரம் போன்றோர் பொறுப்பெடுத்து அந்த உதவிகள் இந்த சிறுமிக்கு போக செய்ய முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படியானவர்களுக்கு புலம்பெயர்மக்களால் மட்டுமே உதவமுடியும்.பழைய பேதங்களை மறந்து.....விபரம்,அனுபவம் உள்ளவர்கள் முன்னுக்கு வர வேண்டும்.முன்னெடுத்து செல்ல வேண்டும். வீட்டுமதில் கட்டுவதற்கும், மோட்டர்சயிக்கிள் வாங்குவற்கும்,சீதனக்காசு ஒரு கோடி கொடுப்பதற்கும் பணம் அனுப்புவதை புலம்பெயர்மக்கள் நிறுத்த வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எல்லோரும் ஒருமனதாக உதவ வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களுக்கு புலம்பெயர்மக்களால் மட்டுமே உதவமுடியும்.பழைய பேதங்களை மறந்து.....விபரம்,அனுபவம் உள்ளவர்கள் முன்னுக்கு வர வேண்டும்.முன்னெடுத்து செல்ல வேண்டும். வீட்டுமதில் கட்டுவதற்கும், மோட்டர்சயிக்கிள் வாங்குவற்கும்,சீதனக்காசு ஒரு கோடி கொடுப்பதற்கும் பணம் அனுப்புவதை புலம்பெயர்மக்கள் நிறுத்த வேண்டும்.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எல்லோரும் ஒருமனதாக உதவ வேண்டும்.

உண்மை தான் குமாரசாமியண்ணை!

பழைய புண்ணை, மீண்டும் மீண்டும், கிழறுவதால், சீழ் தான் வரும்!

ஆக்க பூர்வமாக, ஏதாவது செய்வது தான் எல்லோருக்கும் நன்மையைத் தரும்!

[size=1]தமிழினி தொடந்து முன்னேற வாழ்த்துக்கள்.[/size][size=1]

நான் எழுத நினைத்ததை மல்லையூரான் பதிவு [/size][size=1]

செய்துள்ளீர்கள் . நன்றி [/size][size=1]

நேசக்கரம் சாந்திக்கு ஈ. மெயில் போட்டுள்ளேன் .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.