Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த்தூ.....ஆனந்த விகடன்..!

Featured Replies

தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு

போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊர் பாஷையில் சொல்லப் போனால், அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராயும் போஸ்ட்மார்ட்டம் பகுதிக்கு நாம் இந்த வாரம் (07-11-2012) தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த நேற்று நான் விடுதலைப் போராளி இன்று நான் பாலியல் தொழிலாளி ஒரு பெண் போராளியின் வாக்குமூலம் என்ற தலைப்பில் மாணவ நிருபர் ம.அருளினியன் செய்ததாக வெளிவந்திருக்கும் ’நேர்காணலை’ எடுத்துக் கொள்வோம்.

அது இது தான்.

1.jpeg

30 ஆண்டுகாலம் ஈழத்தில் நடைபெற்ற இன விடுதலைப் போராட்டம் குறித்தும்,தற்பொழுது அது எதிர்நோக்கியுள்ள நிலை குறித்தும் அதில் பங்கு பெற்ற ஒரு 'போராளி' இப்பொழுது அனுபவிக்கும் துயரத்தையும் பகிர்வதாகச் சொல்லும் இந்த நேர்காணல் 6 பக்கங்களில் விரிவாக அதி முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் நேர்காணல் அளித்தவர் ஒரு முன்னாள் ’பெண் போராளி’ என்றும் சொல்லப்பட்டுள்ளது.ஆனால் பாதுகாப்புக் கருதி அவரது புகைப்படம் வெளியிடப்படவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இந்த நேர்காணல் தொலைபேசி வாயிலாகப் பெறப்பட்டதா..? அல்லது மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டதா..?அவ்வாறு தொலைபேசி அல்லது ின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது எனில் அதன் நம்பகத்தன்மை என்ன..? இல்லை நேரடியாக யாழ்ப்பாணம் சென்று எடுக்கப்பட்டதா..? அவ்வாறு நேரடியாகச் சென்று எடுக்கப்படதாயின் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பங்கு பெற்றமைக்கு சான்றுகள் எதும் தந்தாரா போன்ற ஆதாரங்கள் இல்லை.அது போக இந்த 'அதிமுக்கியத்துவம்' வாய்ந்த, நேர்காணல் ஒளிப்பதிவு,ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளதா..?

இப்படி எண்ணற்ற கேள்விகள் எஞ்சி இருக்கின்றன.ஆனால் விடை தெரியாத வினாக்கள். அப்படியாயின் நேர்காணலுக்கு என்ன ஆதாரம்..?

ஆகவே இந்த நேர்காணலை முதற்கண் சந்தேக நோக்கிலேயே அணுக வேண்டியுள்ளது.இப்படி ஒரு நேர்காணல் உண்மையிலேயே விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியால் கொடுக்கப்பட்டதா? அல்லது தங்கள் சொந்த வன்மத்துக்காகவோ நிருபராலோ அல்லது அதிகார வர்க்கத்தின் மறைமுகத் திட்டங்களுக்காக சிலரால் திட்டமிட்டு வலிந்து உருவாக்கப்பட்டதா? என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இனி அதன் சில பகுதிகளை ஆராய்வோம். முதல் 2 பத்தி அறிமுகத்தில் கழிந்து விடுகிறது.ஆகவே அதை விட்டு விடுவோம்.

முதலாவது கேள்வி இது.

praba.jpeg

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து மிக உயர்வாக சொல்லியிருக்கிறார். உண்மை என்னவென்றால் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராளிகள் யாரும் பிரபாகரன் என்று அழைப்பதில்லை. அண்ணன் என்றோ தலைவர் என்றோ தான் அழைப்பார்கள்.அவர் பெயர் சொல்லி அழைப்பதில்லை.அவர்கள் தங்களில் ஒருவராகத் தான் அவரைக் கருதினார்கள். அதுவும் இவர் மூத்த போராளி.அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தக் கேள்வியும் பதிலும் உண்மையான நேர்காணல் தானா என்னும் சந்தேகத் தொனியை எழுப்புகிறது.

அடுத்ததாக 2 ஆவது கேள்வி இது.

இந்தக் கேள்வியே செயற்கையாகத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.முந்தைய கேள்வியிலேயே விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் குறித்து உயர்வாகவும் பெருமிதமாகவும் சொல்கிறார்.அதே போன்ற கேள்வி தான் இதுவும்.பதிலும் ஏறக்குறைய அதுதான். ஆனால் கூடுதலாக இடம் பெற்ற தகவல் என்னவென்றால் பிரபாகரன் இறந்து விட்டார், ஈழப் போர் முடிந்து விட்டது.இனி ஈழம் சாத்தியமில்லை.

ஆக மொத்தத்தில் இந்தக் கேள்வியில் பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை போராளி வார்த்தையாக வலியச் சொல்கிறது.அல்லது திணிக்கிறது.

இத்தனைக்கும் வழக்கமாக ஊடகவியலாளர் எவர் ஒருவரும் முன்னாள் போராளிகளைச் சந்தித்தால் கேட்கும் முதல் கேள்வி கடைசி நேரத்தில் என்ன தான் நடந்துச்சுங்க..? பிரபாகரன் இப்ப எங்க இருக்கிறார் என்பது தான்.ஆனால் இதில் அப்படி ஒரு கேள்வியை நிருபர் கேட்கவே இல்லை.சுற்றி வளைத்துக் கேட்பது போன்ற தொனியை கேள்வியாக்கி உள்ளார்.

ஏனென்றால் அது படிப்பவர்களுக்கு நிருபரின் எண்ணத்தை பளிச்சென்று காட்டிக் கொடுத்து விடும் என்ற முன் எச்சரிக்கையாம்.

இதற்கு அடுத்து வந்த கேள்விகள் மிக நீண்ட தூரம் தூரப்போய் பயணிக்கிறது.

இந்த இடத்தில் சில விஷயங்களை நினைவு கூறுதல் அவசியம்.

முள்ளிவாய்க்கால் கொடூரம்

பேட்டி அளித்தவராகச் ’சொல்லப்படுபவர்’ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஈழத்தின் பெரும் போர்களில் பங்கெடுத்தவர்,பல்லாயிரக்கணக்கில் தமிழர்களைப் பலி கொண்ட முள்ளிவாய்க்கால் போரில் இறுதி வரை களத்தில் இருந்தவர் என்பதையும்,உலகையே அதிர வைத்த முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் அரங்கேறிய கொடூரம் இன்னும் முழுமையாக வெளிப்படாமல் எவ்வளவோ அந்தக் கடலில் புதைந்து இருக்கிறது என்பதையும் நேர்காணல் வெளிவருவது தமிழின் முன்னணி இதழில் என்பதையும் விடுதலைப்புலிகளை ஆதரித்து பெரும்பாலான நேரத்தில்(வணிக நோக்கம் என்றாலும்) எழுதிய இதழ் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையான நேர்காணல் என்றாலோ,சமூகப் பொறுப்புடைய பத்திரிகையாளர் என்றாலோ அடுத்த கேள்விகள் எப்படி நிருபரிடம் இருந்து வந்திருக்க வேண்டும்..?

முள்ளிவாய்க்காலில் கடைசிக் கட்டத்தில் என்ன தான் நடந்தது..? மக்கள் இறுதி நாட்களில் என்னென்ன துயரத்தை எதிர்கொண்டார்கள்..?மக்கள் மீது என்ன வகை குண்டுகளை வீசினார்கள்.?பிரபாகரன் இறந்ததாகச் சொல்கின்றீர்களே எப்படி நிகழ்ந்தது என்று துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களைப் போல ஒன்றன்பின் ஒன்றாக சரமாரியாக வெளிப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா..?

ஆனால் எந்தக் கேள்விகளும் இல்லை.அப்படியே கடந்து செல்கின்றார்.ஒரு பத்திரிகையாளனாக நமக்கு மிக மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.யோசிக்க வைக்கிறது.அதே சமயம் நேர்காணலின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் வலுக்கிறது.

சரி அடுத்த பகுதியைப் பார்ப்போம்.

amaichar.jpeg

இந்தக் கேள்வியையும் அதன் பதிலையும் பார்க்கும் பொழுது நமக்கும் சில கேள்விகள் எழுகிறது.சிங்கள அமைச்சர்கள்,உயர் அதிகாரிகள் எங்களைக் கற்பழித்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வருகிறது.அவர்கள் பெயரைச் சொல்வதில் என்ன தயக்கம்.ஒரு காமுகனை பெயர் சொல்வதில் என்ன பின் வாங்கல்?.பேட்டி கொடுத்தவரின் பெயர் வெளியிடப்படவில்லை.இத்தனைக்கும் குற்றச்சாட்டிற்கு உள்ளானவர்கள் சிங்கள அமைச்சர்கள்.இதழ் அச்சாவது இந்திய நாட்டில்.வெளிவருவது உண்மையை உரக்கச் சொல்வதாகச் சொல்லும் விகடன் குழும இதழில்.சர்வதேச விசாரணை அமைப்புக்களுக்கு அளிக்க வேண்டிய விஷயத்தை ஏன் விகடன் அமைதியாக கையாளுகின்றது.?பெண்ணின் குரலை மட்டுமாவது வெளிக்காட்டலாமே?

உண்மை எனில் அதை உரக்கச் சொல்வதில் என்ன தயக்கம்.?ஆனால் வெளியிடப்படவில்லை.

இந்தக் கேள்விகளையும் பதில்களையும் பார்க்கையில் அதே சந்தேகம் மறுபடியும் எழுகிறது.முன்னாள் போராளி எனத் தெரிந்தும் ஈழத்தில் இருக்கும் தமிழ்த் தலைவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை என்று சொல்கிறார். யார் யாரைச் சந்தித்தேன்,யார் உதவ மறுத்தார்கள் என்று சொல்லியிருக்கலாமே?

நான் பாலியல் தொழிலாளியாக மாறி விட்டேன் என்று தைரியமாகச் சொல்லும் ’போராளி’யால் எந்த தலைவர்கள் தனக்கு உதவி செய்யவில்லை என்று சொல்வதற்கு எந்த தயக்கமும் இருந்திருக்காது. தைரியமாகச் சொல்லலாம்.

ஆனாலும் சொல்லவில்லை. அவர் சொல்லவில்லையெனில் அதைக் கேட்பது பத்திரிகையாளனின் கடமையல்லவா.? அயோக்கியர்களை அம்பலப்படுத்தில் என்ன தவறு?

ஆனால் பத்திரிகையாளர் எதுவும் கேட்கவில்லை.(போராளி என்று ஒருவரை நேர்காணல் செய்திருந்தால் தானே கேள்விகள் கேட்பதற்கு என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது)

//சிறிது காலத்தில் அவர்களாகவே என்னை விடுவித்தனர்.//

1995 இல் இருந்து இயக்கத்தில் இருக்கும் ஒரு மூத்த பெண் போராளியை,சிங்கள ராணுவத்துடன் பல்வேறு போர்களில் பங்கெடுத்த ஒரு போராளியை உலகின் மிக மோசமான ராணுவம் அவ்வளவு விரைவாக விடுவித்து விடுமா என்ன.? இயக்கத்தில் இருந்த பல போராளிகள் இப்பொழுது புனர்வாழ்வு முகாமில் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் 1995 இல் இயக்கத்தில் சேருகிறார்.சக போராளி ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்கிறார்.

2009 ஆம் ஆண்டு போர் முடிவுறுகிறது.அதன்பின் அகதிகள் முகாமில் சிறிது காலம் இருந்திருக்கிறார்.அந்தக் காலம் ஒரு 6 மாதம் என வைத்துக் கொள்வோம்.

இரண்டு குழந்தைகள் இருப்பதாய்ச் சொல்கிறார்.

இந்த சமயத்தில் அவரது குழந்தைகள் கண்டிப்பாய் பெரியவர்களாக இருந்திருப்பார்கள்.ஆனால் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் பாலுக்காய் அழுவதாகவும் எழுதியிருக்கிறார்.

குழந்தைகள் பிறந்ததில் இருந்து வளரவே இல்லையா..?கட்டுக்கதைகளில் தான் இது சாத்தியம்.

என்னங்கடா உங்க லாஜிக்..?

இது அடுத்த கேள்வி.இதிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன.

உள்ளூர் அரசியல் கட்சிகள் தனக்கு உதவி மறுத்ததைக் கூட வெறுப்புடன் மட்டும் சொல்பவர், தமிழ்நாட்டுக் கட்சிகளைக் குறித்துக் கேட்டவுடன் வெறுப்புடன் கூடுதலாக அனலாய்க் கோபமும் கொள்வது ஏன்..?

//அடுத்த வேளை உணவு இல்லாமல்//

இதற்கு முந்தைய கேள்வியில் பாலுக்காய் கஷ்டப்படும் குழந்தைகள் இப்பொழுது எப்படி உணவுக்காய் ஏங்குவார்கள்.இப்பொழுதும் பாலுக்காகத் தானே ஏங்க வேண்டும்..? திரைப்படத்தில் ஒரே பாட்டில் பணக்காரனாவது போல் ஆ.விகடன் நேர்காணலில் ஒரே கேள்வியில் பிள்ளைகள் வளர்ந்து விட்டார்களா..?

எழுதும் திரைக்கதையை சரியா எழுதுங்க.!

//விளக்குமாறால் அடிப்பேன்.//

ஈழத்தவர் யாரும் விளக்குமாறு என்று சொல்வதில்லை.

தம்புதடியால் அடிப்பேன் என்று தான் சொல்வார்கள்.

இதை விட இந்த நேர்காணல் உருவாக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கிய ஆதாரம்.

//ஈழத் தமிழர்கள் நாங்கள் தோற்றுவிட்டோம் என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக் கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.//

இந்த வார்த்தை போராளியின் வார்த்தையாக வெளிவந்திருக்கிறது.ஆனால்

wait.jpg

இந்த வார்த்தைகள் ஆனந்த விகடன் மாணவ நிருபர் அருளினியன் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் என்னத்தச்சொல்ல என்னும் தலைப்பில்எழுதிய பதிவில் இருக்கிறது.

//நாம் ஈழ தமிழர் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்ற NAKED TRUTH புரியாத வரை என்னத்த சொல்ல.//

ஆக இது மூத்த பெண் போராளி என்று சொல்லப் படுபவரின் வார்த்தையா அல்லது நிருபர் அருளினியனின் கற்பனையா என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்த கேள்வியையும் அதற்கான பதிலையும் குறித்து நாம் இறுதியில் பார்ப்போம்.

இந்த நேர்காணலில் பொதுவான விஷயங்களாக நாம் அறிவது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை பொதுவாகப் புகழ்வது போல் தோன்றினாலும் ஈழப் போராட்டத்தின் தோல்வியை மிக மோசமான ஒப்பீடுகளுடன் விமர்சிக்கிறது.வன்மம் தோய்ந்த வார்த்தைகளால் அவதூறு செய்கிறது.

இதைவிட இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால்,சிங்கள இனவாதம் குறித்தும் இறுதிக் கட்டப் போரில் அது பயன்படுத்திய மனித நாகரீக நெறிமுறையற்ற போர்முறைகள் குறித்தும் இன்றும் அங்கு நிலவும் கொடுமைகள் குறித்தும் மறந்தும் பேச மறுக்கிறது.(சிங்கள அமைச்சர்கள் குறித்து மட்டும் ஒருவரி விமர்சனம் இருக்கிறது.)

தமிழ்நாட்டுத் தலைவர்கள் குறித்தும் ஈழத்தில் உள்ள தமிழ் தலைவர்கள் குறித்தும் விமர்சன எல்லையைத் தாண்டி மிக இழிவான வார்த்தைகளில் விமர்சனம் செய்கிறது.ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது இல்லை.அதைப் போல இனி அங்கு போருக்கு சாத்தியம் இல்லை என்று உறுதியாகச் சொல்கிறது.

மேற்கண்ட விஷயங்கள் அனைத்தும் பொதுவாக யாருடைய வார்த்தைகள் என்றால் சிங்கள இனவாதம் மற்றும் அதற்கு இந்தியா மற்றும் இலங்கையில் துணை போகும்,அதற்கு சாமரம் வீசும் நபர்களுடையவை.

சரி இனி இதை பிறிதொரு கோணத்தில் பார்ப்போம்.

விடுதலைப்புலிகளையும் அவர்களின் அரசியலையும்,தமிழ்நாட்டில் அதனை முன்வைத்துச் செயல்படும் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அவர்களின் தவறுககளையும் யாரும் விமர்சிக்க கூடாதா என்ற கேள்வி எழலாம்.விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு.கண்டிப்பாய் விமர்சிக்கலாம்.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் இருவகை.

இவ்வாறு விமர்சிப்பவர்கள் தமிழ்நாட்டிலும் ஏன் புலம்பெயர் தமிழர்களிலும் ஒரு பிரிவினரும் இருக்கின்றனர்.விடுதலைப்புலிகளின் அரசியலை விமர்சிக்கும் அதே சமயம், சிங்கள இனவாதத்தையும்,அதற்குத் துணை போகும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஏகாதிபத்தியத்தையும் மிகத் தீவிரமாய் எதிர்க்கின்றனர்.

வைகோ,நெடுமாறன்,திருமாவளவன்,சீமான், மணியரசன்,போன்றோர்களின் செயற்பாட்டை விமர்சிப்பது தவறு என்று ஒருக்காலும் சொல்லி விட முடியாது. கண்டிப்பாய் விமர்சிக்க வேண்டும்.ஆகவே தவறல்ல.விமர்சனத்திற்கு உட்படாத மனிதர்,அரசியல் என்று யாரும் கிடையாது.அதுவும் இவர்கள் அரசியல்வாதிகள்.கண்டிப்பாய் விமர்சனம் செய்யத் தான் வேண்டும்.ஆனால் விமர்சன நோக்கம் உண்மையாய் இருக்க வேண்டும்.

ஆனால் சிலர் இருக்கின்றனர்.விடுதலைப்புலிகளின் செயற்பாட்டை மட்டும் விமர்சிப்பர்.அதே சமயம் சிங்கள அரசின் இனவாதத்தை கமுக்கமாக கண்டுகொள்ளாமல் சென்று விடுவர்.இந்திய அரசின் செயற்பாட்டைப் பற்றியோ சொல்லவே வேண்டாம்.இவர்கள் நோக்கம் விடுதலைப்புலிகளை விமர்சித்துப் பிழைப்பு நடத்துவது.அதற்கு விடுதலைப்புலிகளின் பின்னடைவைப் பயன்படுத்திக் கொள்வது.வெளித்தோற்றத்தில் மக்கள் மீது அக்கறை இருப்பதைப் போல் காட்டிக் கொள்வது.

டக்ளஸ் வகையறாக்கள் இதில் முதலிடம் பிடிப்பர்.தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்றொழித்த இலங்கை அரசின் ஊது குழலாய்ச் செயல்படும் இவர்களின் நோக்கம் பிழைப்புவாத அரசியல்.தங்களின் சுயநலனுக்காய் சிங்கள அரசையும் அதற்குத் துணை போகிறவர்களையும் நத்திப் பிழைப்பது.இதனை கண்டிப்பாய் மாற்றுக்கருத்து என்றும் மக்கள் நலன் சார்ந்த அரசியல் என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தக் கட்டுரையைப் படிக்கும் பொழுது டக்ளஸ் வகையறாக்களின் குரலுக்கும் வார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சிறிதும் குறைவில்லாமல் இருக்கிறது.

மலத்தில் தோய்த்த இவர்களது வார்த்தைகள்,பொதுவாய் சமூகத்தில் பெரிய எதிர் வினையை உண்டாக்குவது இல்லை.

ஆனால் இதுவரை ஈழ விஷயத்தில் நடுநிலைச் செய்திகளை மற்ற இதழ்களைக் காட்டிலும் ஓரளவுக்கு வெளியிட்டு வந்த ஆனந்த விகடன் போன்ற தமிழின் முக்கிய இதழில் அதி முக்கியத்துவத்துடன் வந்திருப்பதால் பரபரப்பையும் திகைப்பையும் ஒருசேர உண்டாக்கியுள்ளன.

*

இவரது நேர்காணல் உண்மைத்தன்மை சிறிதும் இல்லாமல் இருப்பதால் அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் நாம் அறிய வேண்டியுள்ளது.

நேர்காணலைச் செய்தவர்பெயர் ம.அருளினியன்.விகடன் மாணவ நிருபர். 22 வயது தான் ஆகிறது.பத்திரிகைத் துறையிலும் அரசியல் துறையிலும் எந்த அனுபவமும் இல்லாத பின்னணியும் இல்லாத ஒருவர் தான் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார்.ஈழத்தைச் சேர்ந்தவர்.

அவரைப் பற்றியும் அவரது பின்னணி குறித்தும் அறிவதற்கு முன்னர் அவரது எழுத்துக்களை நாம் அறிவோம்.

arul+2.jpg

arul+2.jpg

விகடன் மாணவ நிருபர் ம.அருளினியன்

இவர் ’அருளினியன் பதிவுகள்’ என்றொரு பெயரில் பிளாக்கில் எழுதுகிறார்.(அதை அவர் எந்தக்கட்டத்திலும் அழிக்க வாய்ப்பு இருக்கிறது.)

2010 ஆம் ஆண்டில் இருந்து தனது கருத்துக்களை அதில் எழுதுகிறார் .அதனை படித்துப் பார்த்தால் நமக்கு அவரைப் பற்றி ஒரு சித்திரம் வருகிறது.

ஆனந்த விகடன் நேர்காணலில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது தான் அவரது கருத்து.அவரது பதிவுகளைப் படித்தால் அவை அனைத்தும் நேர்காணலில் போராளியின் வார்த்தைகளாகச் சொல்லப்பட்டிருக்கிறது என எண்ண முடிகிறது.

praba.jpg Add caption

ஒன்று மட்டும் வித்தியாசம் இருக்கிறது.தனது பதிவுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை மிக கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நேர்காணலில் வெளிப்படையாய் விமர்சிக்கவில்லை.

புகழ்வது போல் இகழ்வதும்,நடுநிலையாய்ப் பேசுவது போ நடித்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதும் கைக்கூலிகளுக்கு கைவந்த கலை.

அவர் பதிவுகளின் சுருக்கமாக நாம் அறிவது இதுதான்.

சிங்கள இனவாதத்தை வார்த்தைகளால் கூட எதிர்க்காதவர்.விடுதலைப்புலிகளை கடுமையாக விமர்சிப்பவர்.தமிழ்நாட்டுத் தலைவர்களை மிக மிகக் கடுமையாக விமர்சிப்பவர். இந்தியாவில் விதிக்கப்படும் மரண தண்டனை முறையை எதிர்க்கிறார்.ஆனால் பேரறிவாளன் குற்றமற்றவரா என்று எனக்குத் தெரியாது என்கிறார்.

//பேரறிவாளன் உட்பட மூவரும் அப்பாவிகளா எனக் கூறும் அளவிற்கு எனக்கு அரசியலும் தெரியாது,இந்தியாவின் நீதித்துறையின் நம்பகத்தன்மையின் அளவும் தெரியாது//

அதே சமயம் அப்துல் கலாம் மிகப்பெரிய அறிவாளி என்று கண்டுபிடித்து துதிபாடுகிறார்.அவர் தான் ஈழ மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.

(அதென்ன பாஸ்? பேரறிவாளன் தனக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்குக்கும் தொடர்பில்லை என்று எத்தனையோ ஆதாரங்கள் கொண்டு அவரே புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.அதைப் படித்தும் அவர் குறித்து உங்களுக்கு ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.ஆனால் அப்துல் கலாம் உலக மகா அறிவாளின்னும் அவர் தான் எங்கட மக்களுக்கு அறிவு கொடுக்க வரணும்னு எதை வைத்து கண்டுபிடித்தீங்க..?

அதே சமயம் (இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை) ஆங்கிலம் வடிவாத் தெரியாததால் யாழ்ப்பாணத்தில் பெண்டுபிள்ளைகளை கரெக்ட் செய்ய முடியவில்லை என்றும் அங்கலாய்க்கிறார்.முகநூலில் மட்டும் தோராயமாக தனது 1000 புகைப்படங்களைப் பதிந்துள்ளார்.

http://www.facebook....alingam?fref=ts

ஈழத்தவர் அனுபவிக்கும் கொடுமை குறித்த புகைப்படங்கள் அதில் நம் கண்ணுக்குத் தட்டுப்படவில்லை.

pombalai.jpg

சுருக்கமாகச் சொன்னால் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு.எந்த அரசியல் அனுபவமும் தெளிவும் புரிதலும் அற்ற 22 வயது.அவரது எழுத்துக்களும் இப்பொழுது தான் எழுதப் பழகுகிறார், ஆரம்பித்துள்ளார் என்பதை அறிவிக்கிறது.

jollu.jpg Add caption

மொத்தத்தில் ஒரு போக்கிரித்தனமான கேரக்டர் என்று எண்ணத் தோன்றுகிறது.

இவரைப் பற்றி அறிய இவரது குடும்பப் பின்னணியையும் அறிய வேண்டும்.இவரது குடும்பம் போர்கள் பல கண்டு மாவீரர் ஆன குடும்பம் அல்ல.

இவரது சொந்த ஊர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் அருகேயுள்ள குப்பிழான் கிராமம்.இவர் ஆரம்பப் பள்ளிக் கல்வி பயின்றது விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்.உயர் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.படித்து முடித்த பின் இங்கு பெங்களூர் வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.விகடன் நிறுவனத்தில் மாணவ நிருபராய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

jaffna.jpg யாழ் இந்துக் கல்லூரியில் படித்தது.

இவருடன் உடன் பிறந்தவர்கள 3 பேர்.ஒரு தங்கை ஒரு தம்பி,ஒரு அண்ணன்.இவர்களில் தம்பியைத் தவிர இருவரும் வெளிநாட்டில் வசிக்கிறார்கள்.தங்கை ஆக்ஸ்போர்டு பல்கலையில் படித்துக் கொண்டிருக்கிறார்.

appan.jpg

இவரது தந்தை சிவ.மகாலிங்கம் சைவசமய பேச்சாளர்.ஆன்மீக கட்டுரைகள் எழுதுபவர்.பலாலி ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்.அதன்பின் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரியின் விரிவுரையாளர். இப்பொழுது ஓய்வு பெற்ற பின் வயதான காலத்தில் சொந்த ஊரான குப்பிழான் பாடசாலை அபிவிருத்தி மன்றம் தலைவர் பொறுப்பில் இருக்கிறார். யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்க உதவித் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.ஓய்வு நேரத்தில் இதுவரை ஞான விளக்கு,சிவஜோதி,முருக மந்திரம் என 3நூல்கள் எழுதியுள்ளார்.

2009+gnana+deepam.jpg

இவர் 2009 ஆம் ஆண்டு எழுதிய ஞானதீபம் என்ற நூல் 2009 ஆம் ஆண்டு வெளிவந்ததில் சிறந்த நூல் என்று யாழ் இலக்கிய வட்டம் தேர்ந்தெடுத்து இலங்கை இலக்கிய விருதினை வழங்கியுள்ளது. விருதினைப் பெற்றுள்ளது. 12-06-2011 அன்று நல்லை ஞானசம்பந்தர் ஆதின மடத்தில் இதனை அவர் பெற்றுக் கொண்டார்.

siva.maha+photo.JPG இலங்கை இலக்கியப் பேரவை விருது வாங்கிய பொழுது

சுருக்கமாக இப்படிப் பார்க்கலாம்.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை உலகமே மனம் பதைபதைத்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது தமிழ்நாட்டில் அதற்கு எதிர்வினையாய் 15 பேர் மாண்ட பொழுது,கூப்பிடு தூரத்தில் உள்ள குழப்பானில் இருந்து கொண்டு சிவ.மகாலிங்கம் ஒய்வை அனுபவித்துக் கொண்டும்,சைவ சமய நூல் எழுதுவதிலும் ,விருதுகள் வாங்குவதிலும் பட்டிமன்றங்களுக்குச் சென்று சைவ சமயத்தைப் பரப்புவதிலும் மூழ்கியிருந்தார்.

படைப்பு மனம் எவ்வளவு கொடூரமாய் இருந்திருக்கிறது பாருங்கள்.அவர் மகனும் இப்பொழுதைய விகடன் மாணவ நிருபருமான ம.அருளினியன் கொழும்பு சார்ஜா மைதானத்தில் இங்கிலீசு வடிவாத் தெரியாததனால் பொம்பளப் பிள்ளைகளைக் கரெக்ட் பண்ண முடியலைன்னு வருத்தத்தில் அரற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்.

அங்க தமிழன் கொத்துக் கொத்தாய்ச் செத்துக் கிட்டிருந்தான்.

எல்லாம் முடிந்த பின் தமிழ்ச்சமூகத்திற்கு அறம் போதிக்கவும் அரசியல் சொல்லிக் கொடுக்கவும் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்.அவரை விகடன் வாரி அணைத்துக் கொண்டது.

சரி இவரது குடும்ப அரசியல் பின்னணி என்ன..?

பொதுவாக இவரது குடும்பம் டக்ளஸ் தேவானந்தாவின் மீது அன்பு உள்ளவர் என்று சொல்கிறார்கள்.இவர்களது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

2 விஷயங்களை குறிப்பாகச் சொல்லலாம்.

விகடன் நிருபர் ம.அருளினியனின் தந்தை சிவ.மகாலிங்கம் கல்லூரி விரிவுரையாளர் பதவியில் இருக்கும் பொழுதே அதை விடக் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்பதற்காய் அதைப் பாதியில் விட்டு விட்டு இந்து சமய கலாச்சார தினைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பதவியைப் பெற்றுள்ளார். இந்தப்பதவியை அவருக்குப் பெற்றுத் தந்தது டக்ளஸ் தேவானந்தா என்று ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காலகட்டத்தில டக்ளஸ் தேவானந்தா 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் அமைச்சர்பொறுப்புவகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அவரின் கீழ் உதவிப் பணிப்பாளராய் சிவ.மகாலிங்கம் பணியாற்றியுள்ளார்.

இவர் உதவிப் பணிப்பாளராய் 2005 ஆம் ஆண்டில் இருக்கும் பொழுது அவரே முன்னிட்டு பொறுப்பெடுத்து தெய்வச் சேக்கிழார்-ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலரை தயாரித்துள்ளார்.அதற்கு இந்து சமய அலுவல்கள் அமைச்சும் நிதி உதவியும் வழங்கியுள்ளது. இவரது பரிந்துரையை ஏற்று அதன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கு நிதி உதவி அளித்ததோடு மட்டுமல்லாமல் வாழ்த்துச் செய்தியும் தந்துள்ளார்.

அதில் சிவ.மகாலிங்கம் ஆன்மீகம் குறித்து ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார்.

douglas.jpg

அதைப் போல யாழ் தமிழ்ச்சங்கத்தில் இவர் செல்வாக்காய் இருக்கும் பொழுது இந்தியாவில் கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிய,இன்றும் தேடப்பட்டுக் கொண்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ் தமிழ்ச்சங்க கட்டிடத்திற்கு 2009 ஆம் ஆண்டு வரவழைத்ததில் முக்கியப் பங்கு வகித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. tamil+sangam+yaal.jpg 2009 ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா யாழ் தமிழ்ச்சங்கம் வருகை தந்த பொழுது

ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் இவரையும் இவரது குடும்பத்தையும் சுற்றி சந்தேகத்தின் நிழல் நன்கு படிந்துள்ளது.

விகடன் நிருபரின் அப்பா சிவ.மகாலிங்கம் வாழ்நாள் முழுவதும் அரசுப்பணியிலும் அது முடிந்த பின் சைவம் தழைத்தோங்குவதற்கும் அல்லும் பகலும் உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.

அவரது அருமைப் புதல்வர் ம.அருளினியன் பெங்களூரு வந்து வாழ்க்கையை அனுபவிக்கிறார்.இவர் எடுத்ததாகச் சொல்லும் நேர்காணலை நாம் இந்தப் பின்னணியில் தான் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.ஆகவே அதன் உண்மைத் தன்மை குறித்தும் நடுநிலை குறித்தும் அவரது எழுத்துக்கள்,குடும்பப் பின்னணி நமக்கு உணர்த்துகிறது.

இத்தனை சொன்ன பின்னும் உங்கள் மனதில் ஒரு சிறிய எண்ணம் இருக்கலாம்.இந்த நேர்காணல் உண்மையானது தான்.ஆனந்த விகடனும் அதன் நிருபரும் உண்மையைத் தான் வெளிக் கொணர்ந்துள்ளார்கள் என்று துளியாவது எண்ணலாம்.

உங்களுக்கு ஒரு கூடுதல் ஆதாரம் தர வேண்டியுள்ளது.நேர்காணலின் இறுதிக் கேள்வியும் பதிலும் இது தான்.வலிய இந்தக் கேள்வி கேட்கப்பட்டிருகிறது என்பதை உணர முடியும்.

6+-+Copy.jpeg

நான் எனது உடலைத் தான் விற்கிறேன்.ஆன்மாவை அல்ல.//

இதே வார்த்தையை அவர் 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எழுதிய தனது பதிவில் எழுதியுள்ளார்.

kanal.jpg

//ஈழத் தமிழரை வைத்து அரசியல் செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விட பெங்களூரில் எம்.ஜி.ரோட்டில் விபச்சாரம் செய்யும் பெண் எவ்வளவோ மேல்.அவள் உடலைத் தான் விற்கிறாள்.ஆன்மாவை அல்ல.//

இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது.தனது வன்மத்தில் தோய்த்த வார்த்தைகளை மூத்த பெண் போராளியின் பெயரில் நேர்காணல் என்று வெளியிட்டமைக்கு வேறு என்ன ஆதாரம் உங்களுக்கு வேண்டும்.?

ஆக இது ஒரு வன்மம் நிறைந்த திட்டமிட்ட டேபிள் ஒர்க் என்று நாம் நிருபணம் செய்துள்ளோம்.இது எப்படி நிகழ்ந்தது?

மாணவ நிருபரின் திட்டமிட்ட கைக்கூலித் தனத்திற்கு வக்கிரத்திற்கு ஆனந்த விகடன் ஆசிரியர் குழு அறியாமையினால் துணை போயிற்றா..?

இந்த அறியாமைக்கு பின்னணியில் எந்தெந்த நிருபர்கள் அலுவலகத்தில் இருக்கிறார்கள்?

அல்லது யாருடைய ’நிர்ப்பந்தங்களாலோ’ நிர்வாகம் அறிந்து இச்செயலில் ஈடுபட்டதா..?

’அறியாமை’யினால் இந்த நேர்காணல் வந்தது என்றால் சில கேள்விகள் எழுகின்றன..?

இதற்கு சில வாரங்களுக்கு முன் நிருபர் ம.அருளினியன்,யோ.கர்ணன் என்பவரை இறுதிக் கட்டம் வரை முள்ளிவாய்க்கால் போரில் பங்கெடுத்த போராளி என்று தவறாகவும் இட்டுக் கட்டியும் குறிப்பிட்டார் அவர் பல காலம் முன்பே இயக்கத்தில் இருந்து விலகி விட்டதாக அவரே சொல்லியிருக்கிறார்.விகடன் முன்னாள் நிருபர் அருள் எழிலன் இது குறித்து பேஸ்புக்கில் ஒரு நிலைத்தகவலும் இட்டிருக்கிறார்.அப்பொழுதே சுதாரித்திருக்க வேண்டும்.இவர் குறித்து எச்சரிக்கையுடன் அணுகி இருக்க வேண்டும்.

karnan.jpeg

மேலும் பரந்துபட்ட மக்கள் திரள் கொண்ட ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்திய இயக்கத்தை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் எந்தவித அரசியல் அறிவும் இல்லாத ஒரு லும்பன், தற்குறி,கைக்கூலியான நிருபர் போகிற போக்கில் எழுதுவதை எப்படி நிர்வாகம் அனுமதித்தது..?

கழிசடையான திரைப்படங்களைக்கண்டு ஒரு பக்கம் விமர்சனம் எழுதுவதற்கே மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் தலைமை,மூத்த நிருபர்களை மட்டும் அனுமதிக்கும் நிர்வாகத்திற்கு இது ஏன் தெரியவில்லை.?

தங்கள் இனத்துக்காக உயிரைத் துச்சமெனத் துறக்கத் துணிந்த பெண் போராளிகளைப் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று எழுதுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

இது சமூகத்தில் எவ்வளவு பெரிய விளைவுகளையும் உளவியல் ரீதியாக அவர்களிடத்திலும் எவ்விதப் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அறியவில்லையா..?

உள்ளூரில் உள்ள நபர்களே விகடன் மாணவ நிருபர் திட்டத்தில் இணைய முடியாமல் சிரமப்படும் பொழுது எங்கோ யாழ்ப்பாணம் அருகில் இருப்பவருக்கு எப்படி இடம் கிடைத்தது..?அவர் பின்னணி அறியாமல் உண்மையில் இடம் கிடைத்ததா..? அல்லது அறிந்ததனால் கிடைத்ததா..?அல்லது யாராகிலும் திட்டமிட்டு நுழைத்தனரா..?

ஆனால் எது ஒன்றானாலும் விகடன் தன் தவற்றிற்கு பகிரங்க மன்னிப்புக் கேட்பதுடன் நிருபரை வேலையை விட்டு வெளியேற்றுவது தான் சரி.

அதை விடுத்து அடுத்த வாரம் வைகோ பேட்டியையோ,சீமான் பேட்டியையோ வெளியிட்டோ உங்கள் நடுநிலையை நிருபிக்கலாம் என்றோ, எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று நினைத்தால் அது அயோக்கியத்தனம்.அதை விட செட்டப் செய்யப்பட்ட எதும் ஒலி நாடாவை வெளியிட்டீர்கள் என்றால் இன்னும் அம்பலப்படுத்தப் படுவீர்கள்.

இதுவரை விகடன் குழும இதழ்கள் ஈழ ஆதரவைக் காட்டியும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் போஸ்டர்களை பல வண்ணத்தில் அடித்தும் எத்தனையோ லட்சம் பிரதிகள் கூடுதலாக விற்பனை செய்தது.இதற்கும் மேலாக விகடன் பிரசுரம் மூலம் ஈழப் போரின் கொடூர உண்மைகளை,அவர்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காசாக்கி கொண்டது.

இன்றோ நம்பகத்தன்மை சிறிதும் இல்லாமல்,மூன்றாந்தர பத்திரிகைகளுக்குப் போட்டியாக மலினமாய் நடந்து கொண்டுள்ளது.

சாதாரண கட்சியின் வட்டச் செயலாளருக்கு எதிரான செய்தி என்றாலே ஒன்றுக்கு பலமுறை யோசித்து,வக்கீல் நோட்டீஸ் வருமோ என்று பயந்து நடுங்கும் விகடன்,எந்தவித நிருபணமும் இல்லாமல் அதிகார்பூர்வமாய் பதில் சொல்வதற்கு பொறுப்பான யாருமில்லாத இயக்கத்தைப் பற்றி எந்தவிதப் பொறுப்பற்ற தனமாய் போக்கிலித் தனமாக வெளியிட்டுள்ளது.

உங்களுக்கும் டாஸ்மாக்கில் ஓசி சாராயம் குடித்து விட்டு ஆள் இல்லாத தெருவில் நாக் கூசும் வார்த்தைகளால் வாய்க்கு வந்த படி பேசுபவனுக்கும் என்ன வித்தியாசம்.?

அல்ல. இந்த நேர்காணல் நிர்வாகம் திட்டமிட்டு வெளியிட்டது எனில் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை.நீங்கள் பகிரங்க மன்னிப்புக் கோராத பட்சத்தில்,நிருபரையும் அலுவலகத்தில் இதற்கு பின்னணியாகச் செயல்பட்டவர்களையும் நீக்கம் செய்யாத பட்சத்தில், நாம் அப்படியே முடிவுக்கு வர வேண்டியதிருக்கும்.அப்பொழுது விகடன் குறித்து வாங்கும் வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

பதில் சொல்லுமா விகடன்.?

தொடர்புடைய இணைப்புக்கள்

http://aruliniyan.bl...01_archive.html

http://aruliniyan.bl...og-post_09.htmlhttp://kuppilan.net/?p=1659

http://www.kuppilanw...formations.html

http://puthu.thinnai.com/?p=1251

http://ayalveedu.blo.../blog-post.html

http://aruliniyan.bl...og-post_14.html

http://aruliniyan.bl...og-post_24.html

Posted by

கலகக்குரல்at 06:04 icon18_email.gificon18_edit_allbkg.gif

[size=4]

புகழ்வது போல் இகழ்வதும்,நடுநிலையாய்ப் பேசுவது போ நடித்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதும் கைக்கூலிகளுக்கு கைவந்த கலை.
[/size]

[size=1]

[size=4]

அடுத்த வாரம் வைகோ பேட்டியையோ,சீமான் பேட்டியையோ வெளியிட்டோ உங்கள் நடுநிலையை நிருபிக்கலாம் என்றோ, எதிர்ப்பை நீர்த்துப் போகச் செய்யலாம் என்று நினைத்தால் அது அயோக்கியத்தனம்.அதை விட செட்டப் செய்யப்பட்ட எதும் ஒலி நாடாவை வெளியிட்டீர்கள் என்றால் இன்னும் அம்பலப்படுத்தப் படுவீர்கள்.

இதுவரை விகடன் குழும இதழ்கள் ஈழ ஆதரவைக் காட்டியும் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் போஸ்டர்களை பல வண்ணத்தில் அடித்தும் எத்தனையோ லட்சம் பிரதிகள் கூடுதலாக விற்பனை செய்தது.இதற்கும் மேலாக விகடன் பிரசுரம் மூலம் ஈழப் போரின் கொடூர உண்மைகளை,அவர்களின் ரத்தம் தோய்ந்த வரலாற்றை லட்சக்கணக்கில் விற்றுக் காசாக்கி கொண்டது.

இன்றோ நம்பகத்தன்மை சிறிதும் இல்லாமல்,மூன்றாந்தர பத்திரிகைகளுக்குப் போட்டியாக மலினமாய் நடந்து கொண்டுள்ளது.

[/size][/size]

[size=4]மேலே கூறப்பட்டவை இந்த கட்டுரையின் 'ஹைலைட்ஸ்' [/size]

இவரது சொந்த ஊர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வலிகாமம் அருகேயுள்ள குப்பிழான் கிராமம்.இவர் ஆரம்பப் பள்ளிக் கல்வி பயின்றது விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்.உயர் கல்வி பயின்றது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.படித்து முடித்த பின் இங்கு பெங்களூர் வந்து கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்.விகடன் நிறுவனத்தில் மாணவ நிருபராய்ப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனந்த விகடன் இங்கே இரண்டாம் பட்சம்தான். முன்னாள் போராளி யாழ்பாணத்தில் பாலியல் தொழில் செய்வதாக யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவர் எழுதும்போது என்னத்தை சொல்வது? விகடன் மன்னிப்புக்கேட்பதா இல்லை இந்த எழுத்தாளர் மன்னிப்புக்கேட்பதா ? இந்த எழுத்தாளர் தனது பிரபலத்துக்கு போராளியையும் விகடனையும் சேர்த்து பலிக்கடாவாக்கியுள்ளாரா? இங்கேயும் ஒருவிரல் விகடனை சுட்டிக்காட்டுகின்றது மற்ற நான்கும் எம்மவரையே சுட்டிநிற்கின்றது, எழுதியது எம்மவர்தானே !!

இவற்றைக் கடந்து இந்தச் சம்பவம் பெய் அல்லது உண்மை அல்லது சற்று உண்மையுடன் நிறையப் புனைவுகள் என்று எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் முன்னாள் போராளிகள் வாழ்வு ஏனையோரை விட அவலத்துள் தள்ளப்பட்டுள்ளது என்பது உண்மை. பலர் தற்கொலை செய்துள்ளதும் உண்மை.

முதலில் யாழ் தளத்தில் இந்த செய்தியை இணைத்தவர் ஆராய்ந்து பார்த்தா இணைத்தார்? அதில் அந்த செய்தி உண்மை என்பது போல புலம்பெயர் மாணிக் கங்கள் புலம்பெயர் தேசிய வாதிகளை கொச்சைப் படுத்தி யாரும் முன்னாள் போராளிகளுக்கு உதவவில்லை புலிகளின் பணம் எங்கே எங்கே எண்டு குலைத்தார்கள். அந்த செய்தி தவறானா செய்தி என்று கருத்திட்ட எம் போன்றவர்கள் திட்டப் பட்டார்கள். இனியாவது ஒரு செய்தி வந்தால் அதை பல கோணங்களில் ஆராய்ந்து கருத்துகளை இணையுங்கள் நண்பர்களே...

  • கருத்துக்கள உறவுகள்

முக்கோணமா எண்கோணமா ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சொந்தங்கள் ஈழத்தமிழர்கள் மேல் வைத்திருக்கும் கரிசனையை நான் குறைத்து மதிப்பிடவில்லை அவர்கள் எப்போதும் பெரிய ஆதரவை வழங்கி வந்தார்கள் அவர்களின் ஒருசிலர் ஈழதமிழர்களின் அவலவாழ்க்கையையும் போராளிகளின் தியாகங்களையும் தமது நலனுக்காக குறிப்பாக வியாபார நோக்குடனையே அனுகிவந்தார்கள் இதில் புத்தகங்களும் சில சினிமாவும் அடங்கும் குறிப்பாக தலைவரின் புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்து அதிக பிரதிகளை விற்று இலாபம் ஈட்டுதல் உண்மைக்கு புறம்பாக கற்பனை கதைகள் பிரசுரித்து போராட்டத்தின் உண்மைத்தன்மையை திசை திருப்பி இந்திய புலனாய்வு பிரிவினருக்கும் உதவியும் வருகின்றனர் இதற்க்கு இவர்களுக்கு பெருந்தொகை பணமும் கிடைத்திருக்கலாம் அதுமட்டுமின்றி மக்கள் மத்தியில் குழப்பத்தையும் உருவாக்கி சிங்கள அரசுக்கு உதவுகின்றனர் இதனை எம்மீது அக்கறை கொண்ட அனைவரும் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து.

எனக்கென்னவோ கட்டுறையை பொய் என நிருவமுனைபவர்கள் மீதுதான் சந்தேகம்..

பி.கு.. தனியார்சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.. புலிகள் தோத்தது இதுவும் ஒரு காரணம்..

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

இதுவும் அவரது பதிவு தான். எழுந்த மானமாய் அவர் மீது குற்றம் சாட்டுபவர்களே அவரது மிச்ச பதிவுகளையும் பார்க்கவும்

http://ta.indli.com/site/aruliniyan.blogspot.com

JPL [JAFFNA PREMIER LEAGUE] இல் கோவணம் தூக்கிய நண்பர்களுக்கும் , அறிவிப்பாளர்களுக்கும் மேலும் சில பெரிசுகளுக்கும் சில கேள்விகள்

[size=2]

[/size][size=3]

j1.jpg

1]நீங்கள் நடன மங்கையருடன் ஆட்டம் போட்ட யாழ் இந்துக் கல்லூரி கடந்த நூறு ஆண்டுகளாக தமிழனின் அடையாளம் ஆக இருப்பது உங்களுக்கு தெரியுமா..............?

2]போர் முடிந்து முழுதாக மூன்று வருடங்கள் கழிந்த பின்பும் இன்னமும் அகதி முகாம்களில் வார்த்தைகளால் விபரிக்க முடியாத கேவலமான வாழ்க்கை வாழ்பவர்கள் சுமார் 50,000 என்பது உங்களுக்கு தெரியுமா....?

3]லட்சக்கணக்கில் செலவழித்து JPL கொண்டாடும் நீங்கள் முகாமிலே உள்ள மக்களை எக் கணத்தில் ஆவது சிந்தித்துப் பார்த்தது உண்டா...?,எந்த சந்தர்பத்தில் ஆவது அவர்களை முகாமை விட்டு வெளியில் எடுத்து அவர்களும் சாதாரண மக்கள் போல நோர்மலான வாழ்க்கை வாழ எதாவது செய்ய வேண்டும் என நினைத்தது உண்டா...?

4]முகாமில் இருந்து வெளியேறிய மக்களிலும் சுமார் 1 லட்சம் வரையானவர்கள் கிளிநொச்சி , முல்லைத்தீவில் அடுத்த நேர உணவிற்கே வழியில்லாமல் இருக்கிறார்கள் என்கிற நிர்வாண உண்மை உங்களுக்கு தெரியுமா..?,தெரிந்து இருந்தால் நடன மங்கையருடன் கூத்தடிக்க உங்களுக்கு மனம் வருமா.......?

5]ராணுவம் சூழ இந்துக் கல்லூரியில் நடை பெற்றது உங்களின் JPL,எமது இந்துக் கல்லூரியில் இருந்து எமது மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக போராட்டத்திற்கு சென்று இறந்து போன அப்பாவி வாலிபர்களின் எண்ணிக்கை குறைந்தது ஆயிரம் என்றாவது தெரியுமா....?,அவர்கள் எதற்காகப் போராடினார்களோ எதற்காக எவனும் எந்த சந்தர்பத்திலும் கொடுக்க முன்வராத உயிரைக் கொடுத்தார்களோ அதில் ஒன்றை கூட அடையாமல் ,அவர்களின் நினைவுகளை இன்னமும் சுமந்து கொண்டிருக்கின்ற யாழ் இந்தக் கல்லூரி மைதானத்தில் இராணுவத்தினர் புடைசூழ உங்களால் எப்படி மனசாட்சி சிறிது இல்லாமல் விழா நடத்த முடிந்தது............? ,நடன மங்கையருடன் ஆட்டம் போட முடிந்தது.............?

6] இராணுவத்தினர் புடைசூழ நடனமங்கையருடன் நடந்த உங்களின் கோதாரி JPL இன் புகைப் படங்கள் தெளிவாக திட்டம் இட்டு சர்வதேசம் எங்கும் பரப்பப்படுவதுடன் , ஈழப் போரில் இனப் படுகொலை செய்யப்பட்ட சுமார் ஒரு லட்சம் பேரும் தற்கொலை தான் செய்தார்கள் என்கிற ரேஞ்சுக்கு பக்கா பிராடு செய்தியை இலங்கை அரசு , அரச சார்பு ஊடகங்களின் உதவியுடன் பரப்பி வருவது உங்களுக்கு தெரியாதா...?

j2.jpg

7]நடன மங்கைகளுடன் இந்து அன்னையின் மைதானத்தில் நாட்டியம் போட்ட போது , எமது மக்களுக்காக நீர் கூட அருந்தாது உண்ணா விரதம் இருந்து மெழுகு திரிபோல உடலின் ஒவ்வொரு கலமும் துடிக்க துடிக்க இறந்து போன இந்துவின் மைந்தன் திலீபன் ஆவது உங்களுக்கு நினைவு வரவில்லையா................?

8]ஈழத் தமிழர்களுக்கு எந்த விதமான உரிமையும் இன்னமும் கொடுக்கப்படாத நிலையில்[அட்லீஸ்ட் பதின் மூன்றாவது திருத்த சட்டம்] , சிங்கள அரசியல்வாதிகளுடனும் [அர்ஜுனா ரணதுங்கா ஒரு அரசியல் வாதி ]ராணுவத் தினருடனும் சேர்ந்து நாம் எப்படி கூத்தடிப்பது..................

..?

9] கல்வியால் மாத்திரம் தான் நாம் இழந்த பெருமையை பெறலாம் என்பது அடிப்படை யதார்த்தம் ,அசுர குணத்தில் இருக்கும் எமது அடுத்த சந்ததியை கல்வியை நோக்கி திருப்ப வேண்டும் என்கிற அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லையா..........?,இருந்தால் நடனப் பெண்கள் என்கிற புதுப் பாணி கலாச்சாரத்தை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி , எமது இளம் சந்ததியை பார்வையை இன்னமும் கல்வியில் இருந்து தூரச் செல்ல வைப்பீர்களா............?

10]எமது இளம் சந்ததியை கெடுப்பதற்கு என்றே சிங்களப் பேரினவாத அரசாங்கம் திட்டம் இட்டு போதைப்பொருட்களை யாழ்ப்பாணத்தில் இளம் சந்ததி இடையே அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்தது அதன் ஒரு நீட்சி தான் உங்களின் "நடனப் பெண்கள்" என்கிற அடிப்படை அறிவு / தெளிவு உங்களுக்கு இருக்கா..............?

11]சமூகத்தில் வயதில் மூத்த நீங்கள் அடுத்த சந்ததிக்கு நல் வழி காட்டாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை கலாச்சாரக் பாலியல் வல்லுறவு செய்து கெடுக்கலாமா............?

12]'JPL' பின்னால் உள்ள அரசியல் மெய்யாலும் விளங்கவில்லையா இல்லை விளங்காதது போல நடிக்கிறீர்களா...........?

13]ஏன் நண்பர்களே நாம் இழந்தது இன்னும் போதாதா...........?, இன்னும் இழக்க வேண்டும் என எதிர் பார்க்கிறீர்களா.........?

http://ta.indli.com/site/aruliniyan.blogspot.com[/size]

தமிழ்நாட்டு தமிழர்கள் ஒரு மாதிரி டைப்.. எதுவும் உடனடியாக எதுவும் உறைக்காது.. எருமை மாட்டி மீது மழை பெஞ்ச மாதிரிதான்.. இவர்களுக்கு இப்படி சொன்னால்தான் ஆர்வம் காட்டுவார்கள்.. எனக்கென்னவோ கட்டுறையை பொய் என நிருவமுனைபவர்கள் மீதுதான் சந்தேகம்..

பி.கு.. தனியார்சுதந்திரத்தில் தலையிடாதீர்கள்.. புலிகள் தோத்தது இதுவும் ஒரு காரணம்..

புலிகள் தோற்கவில்லை ஈழத்தமிழன் தோற்றான் ,காட்டி கொடுப்பு ,நயவஞ்சகம், சூழ்ச்சி எல்லாம் சேர்ந்துதான் எம்மை நாம் இழந்தோம்

  • கருத்துக்கள உறவுகள்

சரி இவரது குடும்ப அரசியல் பின்னணி என்ன..?

இவர்களது தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆவார்.

ஒரு சின்ன சந்தேகம் யாழ் மாவட்டப் பாராளுமன்றத்தேர்தல் இப்பொழுது விகிதசார அடிப்படையில்தான் தெரிவு செய்யப்படுகிறது. தொகுதி அடிப்படையில் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவதில்லை. குப்பிளான் என்ற ஊர் மானிப்பாய் தொகுதியின் கீழ் வருகிறது. தீவுப்பகுதிகளில் விழும் முறைகேடான வாக்குகள் மூலம் டக்லஸ் தெரிவு செய்யப்பட்டு வருகிறார். ஊர்காவற்துறை தொகுதியில் சென்ற தேர்தலில் 71.99 வீதவாக்குகள் சுதந்திரக்கட்சி பெற்றது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 18.68 வீத வாக்குகளைத்தான் பெற்றது. மானிப்பாய் உட்பட மற்றைய யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதல் இடம் பிடித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட செய்திகள் வர நாமும் ஒரு காரணம்.

முன்னாள் போரளிகள் பலர் கஷ்டப்படுகின்றார்கள், செய்ய வெளிக்கிடுபர்களையும் எள்ளி நகையாடி முளையிலேயே கிள்ளி எறிவதில் எம்மைபோல் வின்னர்கள் யாருமில்லை. ஒருவன் எது செய்தாலும் மயிரை பார்த்துப் பிடுங்குவதே பலரின் வேலை, மற்றவனை ஊக்கப்படுத்துவது என்பது கற்க வேண்டிய பாடம்

சுரேஷ் பிரேமச்சந்திரனே தொகுதி எம்பி.

வலிகாமம் கிழக்கு கோப்பாய் தொகுதிக்குள் வருகிறது.

கோப்பாய் தொகுதிக்குள் குப்பிளான் கிராமம் வருகிறது.

இவரது குடும்பத்திற்கும் டக்குவிட்கும் தொடர்பில்லை

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தவிகடன் கட்டுரை தமிழகத்திற்காக எழுதப்பட்டிருக்கிறது..! அங்கே இப்படி ஏதாவது எழுதினால்தான் வேகும்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஷ் பிரேமச்சந்திரனே தொகுதி எம்பி.

வலிகாமம் கிழக்கு கோப்பாய் தொகுதிக்குள் வருகிறது.

கோப்பாய் தொகுதிக்குள் குப்பிளான் கிராமம் வருகிறது.

இவரது குடும்பத்திற்கும் டக்குவிட்கும் தொடர்பில்லை

குப்பிளான் மானிப்பாய் தொகுதிக்கு கீழ் வருகிறது. அருகில் இருக்கும் கட்டுவன் காங்கேசன் துறை தொகுதிக்கு கீழ் வருகிறது..

நான் இலங்கையினை விட்டு வெளியேறி 20 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்பொழுது குப்பிளான் உடுவில் தொகுதியின் கீழ் இருந்தது. இப்பொழுது உடுவில் தொகுதி மானிப்பாய் தொகுதியாக மாறிவிட்டது. சிலவேளை யாழ் அன்பு சொல்வது போல குப்பிளான் கோப்பாய் தொகுதிக்குள் தற்பொழுது சென்றிருக்கலாம்.

விக்கிபீடியா தகவலின் அடிப்படையில் குப்பிளான் வலிகாமம் தெற்கில் இருக்கிறது. வலிகாமம் தெற்கு தான் மானிப்பாய் தொகுதி. முன்பு உடுவில் தொகுதி. வலிகாமம் வடக்கு காங்கேசன் துறை தொகுதி. வலிகாமம் கிழக்கு கோப்பாய் தொகுதி.

http://en.wikipedia.org/wiki/Kuppilan

http://www.citypopul...php?adm2id=4115

http://www.citypopul...php?adm2id=4118

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அருளினியனின் சகோதரங்களை பற்றிய தகவலில் பிழைகள் இருக்கின்றன.

  • தொடங்கியவர்

ஆனந்தவிகடன் கட்டுரை தமிழகத்திற்காக எழுதப்பட்டிருக்கிறது..! அங்கே இப்படி ஏதாவது எழுதினால்தான் வேகும்.. :unsure:

முற்றிலும் தவறான கருத்து. முன்னர் புலம் பெயர் ஊடகங்களில் ஆய்வாளர்கள் என்போர் பல கற்பனைகளை எழுதி மக்களை ஏமாற்றினர். புலிகளின் தோல்வியின் பின் மக்கள் மிகப் பெரும் சோர்வை ஏற்படுத்தியது இது.அத் தோடு மக்கள் இவ்வகை ஊடகங்களையோ ஆய்வாலர் எனப்படுவோரையோ நம்பவில்லை.

பொய்களின் மீது திரட்டப்படும் இத் தகைய ஆதரவு என்பது இலகுவில் நீர்த்து விடும். மக்களிடம் உண்மையைப் பேசி அவர்களை அரசியல் தெளிவுல்லவர்களாக வளர்க்க வேண்டும்.இத் தகைய ஆதரவே நிரந்தரமானது.

மக்களை மந்தைகளாக்குவது போராட்டத்துக்கு வலுச் சேர்க்காது.அத் தோடு இந்த கட்டுரை பல நுண்னய விடயங்களைச் செருகி போராட்டத்தின் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்புட்டுள்ளது.

இந்தக் கட்டுரையின் மூலம் நிச்சயமாக சிறிலங்கா புலனாய்வுத் துறை தான்.வரும் தகவல்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

எழுதியவரின் தந்தையார் டக்கிளசுடன் மிக நெருக்கமானவர் என்று தெரிகிறது.

ஆனந்தவிகடன் கட்டுரை தமிழகத்திற்காக எழுதப்பட்டிருக்கிறது..! அங்கே இப்படி ஏதாவது எழுதினால்தான் வேகும்.. :unsure:

அதுவும் ஒரு காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் துன்பத்தில் குளிர் காயும் வேசி பழக்கத்தை தமிழக பத்திரிக்கைகள் நிறுத்த வேணும்.. ^_^ ^_^

அடுத்தவன் துன்பத்தில் குளிர் காயும் வேசி பழக்கத்தை தமிழக பத்திரிக்கைகள் நிறுத்த வேணும்.. ^_^ ^_^

உண்மை தோழா........... இந்தக்கருத்தை நீங்கள் சொல்வதே மிக பொருத்தமாய் இருக்கும் ................நன்றிகள்

நாங்கள் சொல்லலாம் ...............அதன் பின் இந்த திரி நீண்டு பரந்து மையப்பொருளை தாண்டி எங்கெல்லாம் சென்றுவிடும் ...

மீண்டும் நன்றிகள் தோழா

  • கருத்துக்கள உறவுகள்

முற்றிலும் தவறான கருத்து. முன்னர் புலம் பெயர் ஊடகங்களில் ஆய்வாளர்கள் என்போர் பல கற்பனைகளை எழுதி மக்களை ஏமாற்றினர். புலிகளின் தோல்வியின் பின் மக்கள் மிகப் பெரும் சோர்வை ஏற்படுத்தியது இது.அத் தோடு மக்கள் இவ்வகை ஊடகங்களையோ ஆய்வாலர் எனப்படுவோரையோ நம்பவில்லை.

பொய்களின் மீது திரட்டப்படும் இத் தகைய ஆதரவு என்பது இலகுவில் நீர்த்து விடும். மக்களிடம் உண்மையைப் பேசி அவர்களை அரசியல் தெளிவுல்லவர்களாக வளர்க்க வேண்டும்.இத் தகைய ஆதரவே நிரந்தரமானது.

மக்களை மந்தைகளாக்குவது போராட்டத்துக்கு வலுச் சேர்க்காது.அத் தோடு இந்த கட்டுரை பல நுண்னய விடயங்களைச் செருகி போராட்டத்தின் மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் வகையில் எழுதப்புட்டுள்ளது.

நாரதர்..

நான் அங்கு நிலவும் எதார்த்தத்தைச் சொன்னேன்.. :huh: நீங்கள் அங்கு கொடுக்கவேண்டிய பதார்த்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்..! :D

நாரதர்..

நான் அங்கு நிலவும் எதார்த்தத்தைச் சொன்னேன்.. :huh: நீங்கள் அங்கு கொடுக்கவேண்டிய பதார்த்தத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள்..! :D

:lol::D :D

நல்லதொரு அரசியல் அவதானியின் விமர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில எதிர்க்க என்ன இருக்கு? இப்பிடியான செய்திகளின் ஊடகக தமிழக மக்களை எம்பக்கம் திருப்பலாம் தானே?

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராளியை விபச்சாரியாக்கிய அருளினியனைத் தேடுகிறது விகடன்!

PostDateIcon.pngசெவ்வாய்க்கிழமை, 01 ஜனவரி 2013 04:54
lg-share-ta.gif

vikatan-logo-100x128.jpg “.........அந்தப் பேட்டியே ஒரு புனைவு எனவும் விகடன் துரோகம் இழைத்துவிட்டது எனவும் பேட்டியின் வார்த்தைகளுக்குள் உளவியல் கபடி ஆடிப்பார்த்தனர்.....” இவை ஆனந்த விகடன் சஞ்சிகை சில மாதங்களுக்கு முன்னர் எழுதியிருந்தமை ஈழத்தமிழ் உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் மனதில் பதித்திருந்த வரிகளாகும். வித்தயா ராணி என்ற ஈழத்து பெண் போராளி ஒருவர் தொடர்பில் வெளியாகிய பதிவினை அடுத்து எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து  ஆனந்தவிகடன் ஆசிரியர் எழுதிய பதிவின் சில வரிகள் அவை.

அந்த வரிகள் எழுவதற்கு ஆனந்தவிகடனுக்கு எழுந்த தேவை என்ன? அவர்கள் எழுதியதும் அவர்கள் எழுவதற்கு காரணமாக அமைந்த முன்னாள் பெண் போராளி தொடர்பில் வெளியாகியிருந்த நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களும் உண்மையானவையா? என்பதற்கான ஆதாரங்களை மீண்டும் தேடியது தமிழ்லீடர். தமிழ்லீடரின் தேடலின் விளைவாய்.. ஆனந்தவிகடன் ஒரு பொய்யை நியாயப்படுத்த இன்னும் பொய் சொல்லப் புறப்பட்டிருக்கின்றமை தெரியவந்திருக்கின்றது.

முன்னாள் பெண் போராளி தொடர்பிலான நேர்காணல் பதிவினை மேற்கொண்டிருந்த அருளினியன் தொடர்பிலான பல்வேறு விடயங்களை தமிழ்லீடர் ஏற்கனவே வெளியிட்டிருந்தது. எமக்கு கிடைத்த புதிய தகவலின் அடிப்படையில் அருளினியன் என்கின்ற நபர் விகடனுடனான தொடர்புகள் அனைத்தையும் துண்டித்திருப்பதாக தெரியவருகின்றது.

மாணவ நிருபர் பகுதி ஊடாக ஆனந்தவிகடனில் சின்ன சின்ன விடயங்களை எழுதி வந்த அருளினியன் ஒரு கட்டத்தில் முன்னாள் பெண் போராளி ஒருவர் தொடர்பிலான நேர்காணல் ஒன்று தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். இதனை அடுத்து ஈழப்பிரச்சினைகள் குறித்த விகடன் பத்திகளுக்கு பொறுப்பான ஊடகர் அந்த விடயத்தினை பிரசுரிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதுடன், அதற்கான ஆதாரத்தினை அருளினியனிடம் கேட்டிருக்கின்றார்.  இதனிடையே இவர்களுக்கான தொடர்புகள் மின்னஞ்சல் ஊடாகவே பரிமாறப்பட்டிருக்கின்றன. மின்னஞ்சல் ஊடாக ஆதார ஒலிப்பதிவினை அனுப்ப முடியாது என்று ஆனந்தவிகடன் நிர்வாகத்தினை நம்பவைத்திருக்கிறார் அருளினியன்.

குறித்த நேர்காணல்  வெளியாகியதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து அருளியனைத் தொடர்புகொள்வதற்கு முயன்ற நிர்வாகம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன. விடகன் தொடர்புகொள்ளக்கூடிய அனைத்து வழிகளையும் மூடியிருக்கிறார் அவர். இதனை அடுத்து அதிர்ந்து போன ஆனந்தவிகடன்.. உடனடியாகவே தமது உயர் பீடத்தினைக் கூட்டி என்ன செய்வது என ஆராய்ந்திருக்கிறது.

தமது சஞ்சிகையில் வெளியாகிய பதிவு தவறானது என்பது வெளித் தெரியவந்தால், வாசகர்களின் வெறுப்பினைச் சம்பாதிக்க நேரிடலாம் என்றும் அதற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கும் ஆனந்தவிகடன் முற்பட்டிருக்கின்றது. அதன் தொடராகவே குறித்த பதிவினை நியாயப்படுத்தும் வகையில் ஆசிரியர் கருத்து என்ற பெயரில் செய்த தவறினை நியாயப்படுத்துவதுடன் மட்டும் நின்றுவிடாது விமர்சனம் முன்வைத்தவர்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஒரு பதிவினை வெளியிட்டு விட்டார்கள். அது மட்டுமல்லாமல் அடுத்த வெளியீடுகளில் ஈழத்தமிழர் விவகாரத்தினையும் இலங்கை விவகாரத்தினையும் முக்கியத்துவப்படுத்தி பதிவுகளை வெளியிட்டது மட்டுமல்லாமல் “புலித்தடம் தேடி...”புறப்பட்டது.. விகடன் குழு. (மகா. தமிழ் பிரபாகரன் இலங்கைக்கான பயணம் மேற்கொண்டு பயணக் கட்டுரை ஒன்றை ஜூனியர் விகடனில் எழுத ஆரம்பித்திருக்கின்றார் குறித்த கட்டுரைக்கான தலைப்பு “புலித்தடம் தேடி...”)

 

2009ஆம் ஆண்டு போர் நிறைவு பெற்று மூன்று ஆண்டுகளான பின்னர் திடீரென்று “புலித்தடம் தேடி..” விகடன் குழுமம் புறப்பட்டதன் பின்னணி என்ன? என்பது தற்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். விகடன் நீண்ட ஊடகப் பாரம்பரியத்தினைக் கொண்டது என்றாலும் முன்னாள் பெண் போராளி விடயத்தில் நடந்துகொண்ட சின்னத்தனமான செயற்பாட்டினால் அது தனது வரலாற்றுப் புத்தகத்தில் அழிக்கமுடியாத வடுவினை பதித்துவிட்டிருக்கின்றது என்பதே உண்மையானது.

தவறு நடைபெற்றிருக்கின்றது, உண்மைக்கு புறம்பான விடயம் வெளியாகியிருக்கின்றது என்பதை அறிந்த பின்னரும் அதற்காக வருத்தம் தெரிவிக்கவோ, அதற்காக பகிரங்க மன்னிப்புக்கோரவோ முற்படாத விகடன், தான் வெளியிட்ட ஆசிரியர் குறிப்பில் செருக்குத்தனமான எழுத்து நடை வெளிப்பட்டிருந்தமையை தமிழ் உணர்வாளர்கள் எவரும் என்றும் மறக்கப்போவதில்லை.

 

http://www.tamilleader.com/mukiaya/8392-2012-12-31-23-32-14.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.