Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இடியப்பம் விற்றால் ஓகேயா? :unsure:

  • Replies 99
  • Views 6.6k
  • Created
  • Last Reply

சரி ரதி அக்கா மாவீரர் மேல் நீங்கள் கொண்ட பற்றையும் ,பாசத்தையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ............நிச்சயமாய் மாவீரர் மண்டபத்திற்கு வருபவர்களுக்கு தூர இடங்களில் .பிரயாண களிப்புடன் வருபவர்களுக்கு நாம் ,உணவோ ,பானமோ கொடுத்தே ஆக வேண்டும் ........நீங்கள் கூறுவது போல் எல்லோராலும் உணவின்றி, பானம் இன்றி இருக்க முடியாது குழந்தைகள் ,வயோதிபர் ,சுகயீனம் அற்றோர்.............உண்மையில் இலவசமாய் கொடுப்பதற்கு உரிய பொருளாதார நிலைமையில் தற்போது மாவீரர் தினங்களை ஒழுங்கு படுத்துபவர்கள் இல்லை என்பது நீங்களும் நானும் அறிந்த உண்மை ...............கொத்து ரோட்டி என்ற உணவை விட்டாலும் ,எதோ ஒரு வகையில் இவர்களுக்கான ஏதாவது ஓர் உணவு ஒழுங்கு படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது ........

தொடக்க நிகழ்வுகளான மணி ஒலி ,அகவணக்கம் .மலர்வணக்கம், போன்ற உணர்வு பூர்வமான மாவீரரை வணங்கு அந்த நேரத்தில் உண்மையில் அங்கே ஒரு ஒழுங்கு ,கட்டமைப்பு ,அமைதி ................அந்தப்பாடல் [சந்தனப்பேழைகளே ........] கண்நீர்வரும் ...........இவை நடக்கும் தருணத்தில் ஒரு போதுமே இப்படியான உணவு உண்ணல் .தேநீர் குடித்தல் ...நடப்பதே இல்லை .............அதன் பின் நிகழ்சிகள் ஆரம்பமாகும் .............அந்த நேரத்தில் கூட எந்த நிகழ்ச்சியிலும் இல்லாதவாறு மக்கள் அமைதியாகவும் ,உணர்வாகவும் இருந்து நிகழ்ச்சிகளை பார்ப்பார்கள் ................இடை வேளை நேரத்தில் தமக்குரிய உணவுகளை உண்பார்கள் , நான் குறிப்பிட்டது போல் வயோதிபர்,குழந்தைகள் ,சுகயீனம் அற்றோர் முக்கியமான ஆரம்ப நிகழ்சிகள் முடிந்த பின் உணவருந்தலாம் .......................இன்னும் கூறலாம் ஆனால் இந்த தேவையான ,புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படை விடயங்களில் கூட முரண்பாடுகள் இருப்பது ஏன் என்று தெரியாததனால் தான் இவ்வளவு பெரிய கட்டுரை ......ஆனால் விடயம் மிகச்சிறியது .....நன்றி .............

அப்ப இடியப்பம் விற்றால் ஓகேயா? :unsure:

உண்மைதான் இசை அண்ணா எனக்கும் இந்த கொத்து ரோட்டி பிடிப்பதில்லை நான் சாப்பிடுவதும் இல்லை. என்னை மாதிரியே சிலருக்கு இந்த பிரச்சனை இருக்கோ தெரியாது பாவம் அவர்கள். மனதிற்குள் வேறு பிரச்சனை அதை நேரில் சொல்ல முடியாது இப்பிடி ஏதாவது உப்பு சப்பு இல்லாமல் எழுதி எம்மை திசை திருப்ப முயல்வது. யாழில் ஆரோக்கியமான கருத்துக்களை பதியவிடாமல் பல நல்ல கருத்தாளர்களை இதற்க்குள் முடக்குவது அதுதான் இவர்கள் திட்டமோ
  • கருத்துக்கள உறவுகள்

இதில் மாவீரர்கள் மகத்தானவர்கள்

அவர்களுக்கு முன்னால் சாப்பிடக்கூடாது என எழுதிய அத்தனை பேரும்

நான் மாவீரர்கள் மகத்தானவர்கள்

அவர்கள் போற்றுதலுக்குரிய வித்தியாசமான பிறவிகள் என எழுதிய போதெல்லாம்

அவர்களும் சாதாரண மனிதர்கள்

அவர்களும் ஆசாபாசங்களுக்கும் சாதாரண மனித உணர்வுகளுக்கும் உட்பட்டவர்களே என எழுதி என்னை எழுதவிடாது தடுத்தவர்கள்.

இதிலிருந்த இவர்களின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் நீங்கள் எழுத வேண்டும் என்பதற்காக எழுதுகிறீர்கள் என்று தெரிகிறது. உலகில் எல்லாவற்றிலும் முதன்மையானது இந்த உணவுதான். எல்லோரும் எப்படி ஒரேமாதிரி இல்லையோ அப்படித்தான் எல்லோரின் உடல்நிலையும். எனக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மிஞ்சி பட்டினி கிடந்தால் தலை சுற்றும். மற்றவர்களுக்குக் காட்ட நான் இன்று சாப்பிட மாட்டேன் எனக் கூறிவிட்டு எந்நேரமும் உணவை நினைத்துக்கொண்டு இருப்பதிலும் நான் விரதம் இருப்பதில்லை எனக் கூறுவேன்.

ஒரு மனிதனின் உடல் நிலை எப்படியும் மாறாது என உங்களால் அறிதியிட்டுக் கூற முடியுமா? அப்படித்தான் காலநிலையும் மனிதனின் உடல் நிலையையே மாற்ற வல்லது. எழுதுவது எப்படியும் எழுதலாம். ஆனால் யதார்த்தம் என்ன என்பதுதான் முக்கியம்.

  • தொடங்கியவர்

வணக்கம் கள உறவுகளே !!

எனக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிந்த அனைத்து கள உறவுகளுக்கும் , எனக்கு மாற்றுக்கருத்துகள் என்ற போர்வையில் என்மீது வசைபாடிய அனைத்துக் கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் என்று சொல்லி எனது தலை சாய்கின்றது . எனது கவிதை சொன்ன மூன்று செய்திகள் கள உறவுகளால் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்பதனையும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியது அவசியாமாகின்றது . தாயகத்தில் உள்ள போரளிகளுக்கான கட்டுமானப்பணிகளை இந்த மாவீரர் தினவேளையில் எவ்வளவு தூரத்திற்கு முன்னெடுக்கப் போகின்றோம் ?? சிறைகளில் வாடும் போராளிகளது விடுதலைக்கான முன்னெடுப்புகளில் இந்த வேளையில் எமது நிலைப்பாடு என்ன ??மற்றும் மாவீரர் தினத்தை நடத்தும்பொழுது அதற்கு ஏற்படும் செலவுகளுக்கான மாற்றுத்திட்டங்கள் போன்றவை ஆராயப்படவேண்டும் என்பதே எனது கவிதையின் செய்திகள் . ஆனால் , பதியப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் என்னையும் சாத்திரியையும் வசைபாடுவதிலேயே தங்கள் பொழுதைக்கழித்தன . இது ஒரு கருத்துகளத்திற்கு ஆரோக்கியமான விடையமாக எனக்குத் தெரியவில்லை . ஆயினும் உங்கள் கருத்துக்களை நான் மதிக்கின்றேன் . நன்றி வணக்கம் .

Edited by கோமகன்

[size=4]வணக்கம் கோமகன்,[/size]

[size=1][size=4]நீங்கள் சொல்லவந்த விடயம் எது என்று மேலே குறிப்பிடுகின்றீர்கள், தெளிவிற்கு நன்றிகள். [/size][/size]

[size=1][size=4]இருந்தாலும் தேர்ந்தெடுத்த வரிகள் வேறு நோக்கம் கொண்டவையாக தெரிகின்றன. [/size][/size]

[size=1][size=4]உதாரணத்திற்று இந்த உங்கள் கவிதை வரிகள் : [/size][/size]

[size=1][size=4]

அருவருப்படைந்த

கார்த்திகைப்பூக்கள்

தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை

உங்களை வணங்குகின்றோம்

என்றபெயரில் களியாட்டா விழா

என்மண்ணில் உயிருடன் உலாவும்[/size][/size]

[size=1][size=4]கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி..[/size][/size][size=1][size=4].......[/size]

[size=4]அவள் வாழ்வும் அவள்

பிள்ளைகளும் நடுறோட்டில் ..........

[/size]

[size=4]நீங்கள் உங்கள் வரிகள் மூலம் வசை மட்டுமல்ல கார்த்திப்பூவை இகழ்ந்தும், கீழ்த்தரமான தமிழ் சொற்பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளீர்கள்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதில் மாவீரர்கள் மகத்தானவர்கள்

அவர்களுக்கு முன்னால் சாப்பிடக்கூடாது என எழுதிய அத்தனை பேரும்

நான் மாவீரர்கள் மகத்தானவர்கள்

அவர்கள் போற்றுதலுக்குரிய வித்தியாசமான பிறவிகள் என எழுதிய போதெல்லாம்

அவர்களும் சாதாரண மனிதர்கள்

அவர்களும் ஆசாபாசங்களுக்கும் சாதாரண மனித உணர்வுகளுக்கும் உட்பட்டவர்களே என எழுதி என்னை எழுதவிடாது தடுத்தவர்கள்.

இதிலிருந்த இவர்களின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ளமுடியும்.

விசுகு அண்ணா உயிரோடு இருக்கும் போராளிகள் ர‌த்தமும்,சதையும் உள்ள மனிதர்கள்...அவர்களுக்கும் பசிக்கும்,காதல் வரும்,அழுகை வருகை ஆனால் செத்துப் போனவர்கள் நாங்கள் கும்பிடும் கட‌வுளிலும் பெரியவர்கள்...அவர்களிற்கு அதற்குரிய மரியாதை குடுத்தேயாக வேண்டும்.

தமிழ்சூரியன் சாப்பாட்டை பற்றி நான் இங்கு எழுதியிருக்கும் முதலாவது கருத்தை வாசித்துப் பாருங்கள்...நன்றி

தமிழ்சூரியன் சாப்பாட்டை பற்றி நான் இங்கு எழுதியிருக்கும் முதலாவது கருத்தை வாசித்துப் பாருங்கள்...நன்றி

வாசித்தேன் அக்கா ...அடுத்து வரும் மாவீரர் தினங்களில் .............புனித ரம்ழான் பண்டிகை போல மாவீரர் தினம் அன்று நோன்பு என்னும் நடை முறையை கொண்டு வந்தாலே நீங்கள் எதிர்பார்க்கும் நியாயமான விடயங்களை நடைமுறைப்படுத்தலாம் என நினைக்கிறேன் ............நன்றிகள் கருத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் கிரிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களை புதைப்பார்கள் ஆண்,பெண் வித்தியாசமில்லாமல் அங்கு போவார்கள் ஆனால் எனக்குத் தெரிஞ்சு ஒருத்தரும் அங்கு போய் இருந்து சாப்பிடுவதில்லை...ஊரில் மாவீரர் கல்லறைக்கு முன்னால் யாராவது சாப்பிட்டதையோ,குடிச்சதையோ ஏன் சப்பாத்துக் காலால் அந்த நிலத்தை மிதிச்சதையோ நீங்கள் கண்டனீங்களா?.கேள்விப்பட்டனீங்களா?...அவ்வளவு புனிதத்தை இங்கு கொடுக்க சொல்லவில்லை...கொடுக்க இயலாது ஆனால் கொஞ்சமாவது மரியாதை கொடுக்கலாம்

நான் இந்த திரியில் எதுவும் எழுதாமல் இருக்க நினைத்து இருந்தேன்...ஆனாலும் ஒரு சிறு குறிப்பை எழுதிக் கொள்ள விரும்புகின்றேன் இப்பொழுது.

நான் கடவுள் இருக்கின்றார் என நம்பிக்கொண்டிருந்த ஒரு காலத்தில் கோவிலுக்கு போவதென்றால் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட அருந்தாமல் போய் அங்கு தரும் தீர்த்தத்தினை அருந்திய பின் தான் வேறு எதனையும் உண்பது.

அதே போன்றே கடந்த 2 மாவீரர் தினங்களிலும் (2010, 2011) காலையில் இருந்து நானும் மனைவியும் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் காலையிலேயே மலர் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தோம். இம்முறை வார நாள் என்பதால் இருவரும் காலையில் தேனீர் மட்டும் குடித்து விட்டு மதியம் 2:30 க்குப் போய் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கு விற்றுக் கொண்டிருந்த உணவை வாங்கி உண்டு பசியாறினோம். கடந்த 4 நான்கு மாவீரர் தினங்களிலும் வீட்டில் அசைவம் சமைப்பதோ உண்பதோ இல்லை. அங்கு உணவு விற்று இருக்காமல் இருந்திருந்தால், வெளியில் வந்து தமிழர்களின் கடை அல்லாத ஒரு கடையில் (ஏனெனில் அனைத்து தமிழ் உணவகங்களும் மாவீரர் தினத்துக்காக பூட்டி இருந்தன) வாங்கி உண்டு இருப்போம்.

என் நண்பர் குடும்பம் மாவீரர் நிகழ்வு நடந்த இடத்தில் இருந்து 250 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் கிங்ஸ்ரன் எனும் ஊரில் இருந்து மாலை 6 மணி நிகழ்வுக்கு போயிருந்தனர். அவர்களும் அங்கு தான் உணவு வாங்கி உண்டு விட்டு மாலை 9 மணிக்குத் தான் மீண்டும் திரும்பினர்.

என் சகலை, மாவீரர் தின நிகழ்வுக்கு போகாமல் வீட்டில் இருந்து தண்ணி அடித்து விட்டு போனவர்களைப் பற்றி கிண்டல் அடித்துக் கொண்டு இருந்தார்.

நன்றி.

  • தொடங்கியவர்

[size=4]வணக்கம் கோமகன்,[/size]

[size=1][size=4]நீங்கள் சொல்லவந்த விடயம் எது என்று மேலே குறிப்பிடுகின்றீர்கள், தெளிவிற்கு நன்றிகள். [/size][/size]

[size=1][size=4]இருந்தாலும் தேர்ந்தெடுத்த வரிகள் வேறு நோக்கம் கொண்டவையாக தெரிகின்றன. [/size][/size]

உதாரணத்திற்று இந்த உங்கள் கவிதை வரிகள் :

நீங்கள் உங்கள் வரிகள் மூலம் வசை மட்டுமல்ல கார்த்திப்பூவை இகழ்ந்தும், கீழ்த்தரமான தமிழ் சொற்பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளீர்கள்.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள் . உங்களுக்கான பதிவின் மூலம் இரண்டு கருத்துக்களை சொல்ல இருக்கின்றேன் . முதலாவதாக எனது கவிதையில் வரும் கார்த்திகைப் பூக்கள் என்பது போராளிகளுக்கான " குறியீடு " . இங்கு இந்தக் குறியீடு போராளிகளை உருவகப்படுத்தி நிற்கின்றது . மேலும் பெண்போராளிகள் பாலியல் தொழில் செய்கின்றார்கள் என்ற பல செய்திகள் இதே கருத்துக்களத்தில் வந்துளன . ஆகையால் அதையும் எனது கவிதையில் சேர்த்தேன் . மற்றும்படி கார்த்திகைப் பூவையோ அல்லது பெண்போராளிகளையோ களங்கப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை .இரண்டாவதாக இத்துடன் இந்தக் கருத்துக்கான எனது பதிலுடன் இந்தப் பதிவில் இருந்து விலகிக்கொள்கின்றேன் .

Edited by கோமகன்

அங்கு உணவு விற்று இருக்காமல் இருந்திருந்தால், வெளியில் வந்து தமிழர்களின் கடை அல்லாத ஒரு கடையில் (ஏனெனில் அனைத்து தமிழ் உணவகங்களும் மாவீரர் தினத்துக்காக பூட்டி இருந்தன) வாங்கி உண்டு இருப்போம்.

உண்மை நிழலி அண்ணா...

வெளியிலிருந்து sandwich வாங்கி கொண்டு வந்து உண்பதோ அல்லது வீடு செல்லும் போது வேறு கடையில் ஏதும் வாங்கி உண்பதிலும் பார்க்க இங்கு உண்ணலாம்.

Edited by துளசி

[size=1]

[size=4]கோமகன்,[/size][/size][size=1]

[size=4]இந்தக்களத்தில் அதிகம் தமிழ் மொழி / நயம் சம்பந்தமான திரிகள், பதிவுகள், கவிதைகள், விமர்சனங்கள் பதிபவர் நீங்கள். குறளுகளை அதை பன்மொழியில் எழுதி பொருள் தருபவர் நீங்கள். [/size][/size]

[size=1]

[size=4]அதேவேளை தாயகம் சம்பந்தமாக நாள் ஒன்றிற்கு பதியப்படும் பல நூறு திரிகளில்/கருத்துக்களில் சர்ச்சைக்குரிய, மற்றையவர்களை புண்படுத்தக்கூடிய விடயங்களை மட்டும் எடுத்து அலசுவதும் நீங்கள். [/size][/size]

[size=1]

[size=4]ஒரு படைப்பை ஒருவர் எழுதி அதை முழு உலகத்திற்கும் முன்னால் வைத்துவிட்டு, பின்னர் நான் கூற வந்தது, "அது இல்லை இது " என கூறுவது உங்களுக்கு பொருந்தாது என்பது எனது நிலைப்பாடு. [/size][/size]

[size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

//அதே போன்றே கடந்த 2 மாவீரர் தினங்களிலும் (2010, 2011) காலையில் இருந்து நானும் மனைவியும் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் காலையிலேயே மலர் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தோம். இம்முறை வார நாள் என்பதால் இருவரும் காலையில் தேனீர் மட்டும் குடித்து விட்டு மதியம் 2:30 க்குப் போய் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கு விற்றுக் கொண்டிருந்த உணவை வாங்கி உண்டு பசியாறினோம். கடந்த 4 நான்கு மாவீரர் தினங்களிலும் வீட்டில் அசைவம் சமைப்பதோ உண்பதோ இல்லை. அங்கு உணவு விற்று இருக்காமல் இருந்திருந்தால், வெளியில் வந்து தமிழர்களின் கடை அல்லாத ஒரு கடையில் (ஏனெனில் அனைத்து தமிழ் உணவகங்களும் மாவீரர் தினத்துக்காக பூட்டி இருந்தன) வாங்கி உண்டு இருப்போம்.

என் நண்பர் குடும்பம் மாவீரர் நிகழ்வு நடந்த இடத்தில் இருந்து 250 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் கிங்ஸ்ரன் எனும் ஊரில் இருந்து மாலை 6 மணி நிகழ்வுக்கு போயிருந்தனர். அவர்களும் அங்கு தான் உணவு வாங்கி உண்டு விட்டு மாலை 9 மணிக்குத் தான் மீண்டும் திரும்பினர்.//

நன்றி நிழலி உங்கள் கருத்திற்கு

நிச்சயம் ...............நாம் எந்த ஓர் நிகழ்வுக்குப்போனாலும் ...........எம் அன்றாட அத்தியாவசியமான ஒன்றான உணவு உன்ன வேண்டும் .........

புலம் பெயர் வாழ நாடுகளின் நடைமுறைச்சிக்கல்கள் காரணமாக சில வற்றை நாம் மாற்றித்தான் அமைக்க வேண்டும் ...........மாவீரர் மண்டபத்திற்கு அப்பால் இவற்றை ஒழுங்கமைக்கலாம் ......ஆனால் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்ளத்தான் வேண்டும் ...........இப்படியான கருத்துக்கள் ,பிழையானவை அல்ல ...........ஆனால் இவற்றை இனி வரும் காலங்களில் எப்படி தீர்த்துக்கொள்ளலாம் என்ற உங்களது திட்டங்களையும் சேர்த்து இணைக்கும்போது அவை ஆரோக்கியமான விடையங்களாக மாறும் என்பதே என் கருத்து .................

ஊரில் கிரிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களை புதைப்பார்கள் ஆண்,பெண் வித்தியாசமில்லாமல் அங்கு போவார்கள் ஆனால் எனக்குத் தெரிஞ்சு ஒருத்தரும் அங்கு போய் இருந்து சாப்பிடுவதில்லை...ஊரில் மாவீரர் கல்லறைக்கு முன்னால் யாராவது சாப்பிட்டதையோ,குடிச்சதையோ ஏன் சப்பாத்துக் காலால் அந்த நிலத்தை மிதிச்சதையோ நீங்கள் கண்டனீங்களா?.கேள்விப்பட்டனீங்களா?...அவ்வளவு புனிதத்தை இங்கு கொடுக்க சொல்லவில்லை...கொடுக்க இயலாது ஆனால் கொஞ்சமாவது மரியாதை கொடுக்கலாம்

கிறிஸ்தவர்கள் புதைத்து விட்டு உடனே ஒரு உணவகம் சென்று எல்லோரும் சாபிடுவது வழக்கம் அது சுடலையில் இல்லை. இதுவும் சுடலை அல்ல மண்டபம் என்ன எழுதுறோம் என்று யோசிச்சு எழுதுங்கோ அக்கா

அதே போன்றே கடந்த 2 மாவீரர் தினங்களிலும் (2010, 2011) காலையில் இருந்து நானும் மனைவியும் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் காலையிலேயே மலர் வைத்து அஞ்சலி செலுத்தி விட்டு வந்தோம். இம்முறை வார நாள் என்பதால் இருவரும் காலையில் தேனீர் மட்டும் குடித்து விட்டு மதியம் 2:30 க்குப் போய் அஞ்சலி செலுத்தி விட்டு அங்கு விற்றுக் கொண்டிருந்த உணவை வாங்கி உண்டு பசியாறினோம்.

கடந்த 4 நான்கு மாவீரர் தினங்களிலும் வீட்டில் அசைவம் சமைப்பதோ உண்பதோ இல்லை. அங்கு உணவு விற்று இருக்காமல் இருந்திருந்தால், வெளியில் வந்து தமிழர்களின் கடை அல்லாத ஒரு கடையில் (ஏனெனில் அனைத்து தமிழ் உணவகங்களும் மாவீரர் தினத்துக்காக பூட்டி இருந்தன) வாங்கி உண்டு இருப்போம்.

[size=1]

[size=4]எங்கள் வீட்டிலும் இதை அடுத்தமுறை அமுல்படுத்த முயசிக்கின்றேன். [/size][/size][size=1]

[size=4]நன்றிகள். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் விளக்கத்திற்கு, நன்றிகள் கோமகன்!

நாயன்மார்களைப் பற்றியும், ஆழ்வார்களைப் பற்றியும், தமிழனின் உயர் மறையான திருக்குறளைப் பற்றியும், மண்ணின் வாசனை பற்றியும், எழுதும் உங்களைப் பற்றி, வாசகர்கள் ஒரு படத்தை மனதில் வைத்திருக்கின்றார்கள்.

உங்கள் கருத்துகளை,நீங்கள் வெளிப்படுத்துவதில், எந்தத் தவறையும் நான் காணவில்லை! ஒரு கருத்துக்களத்தின் நோக்கமே அது தானே!

ஆனால், உங்கள் வார்த்தைப் பிரயோகங்களில், அதை, உபயோகித்த விதங்களில்,தான் எனக்கு முரண்பாடே!

நான் அதிகம் கோவில்களுக்குப் போவதில்லை. மிகவும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் போவேன்!

ஆனால், அந்தத் தெய்வங்களைப் பற்றி, அதை வணங்குபவர்களுடன், விமரிசிப்பதில்லை!

ஏனெனில், அவர்களுக்கு, அதை நம்பும் உரிமை இருக்கின்றது!

எங்களுடன் இணைந்திருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி அண்ணா சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில் கொத்துரொட்டி போல சூடும் காரமும் கூடித்தான் போய்விட்டது .

மாவீரரை மதிப்பளிக்க போவர்களை பார்க்கிலும் எதுக்கும் அள்ளுப்படும் பொதுஜனங்கள் என்ற ஒரு வட்டத்தை கவரத்தான் இப்படியான செயற்பாடுகள் எல்லாம் .

அதை நியாயப்படுத்த இங்கு பலர் சொல்லும் காரணங்கள் புல்லரிக்க வைக்கின்றது .மாதக்கணக்கில் காடு, மேடு, கடல், வெளி ,வெயில் ,மழை ,பார்க்காது சுமக்கமுடியாத சுமைகளை தூக்கி பசி பட்டினி இருந்து கடைசியில் உயிரையும் கொடுத்தவர்களு செலுத்தும் அஞ்சலியில் ஒருநாள் பட்டினி இருக்கமுடியாது என்று சொல்பவர்களையும் காலநிலை பற்றி கதையளப்பவர்களையும் நினைக்க வெட்கமாக இருக்கின்றது .

மண்டப வாடகை ,வேறு செலவுகள் என்பதில் ஒருவித நியாயம் இருந்தாலும் அவர்களிடம் இருக்கும் பணத்திற்கு இதில் வரும் பணம் ஒரு தூசு . பணம் தான் முக்கியம் என்றால் அடுத்த வருடம் பார் கூட திறப்பார்கள் ,அதை வேறு பலர் வந்து நியாய படுத்துவார்கள் .

இது முற்றுமுழுதாக மக்கள் வருகையின் எண்ணிக்கையை உயர்த்திக்காட்ட எடுக்கும் ஒரு யுக்தியே தவிர வேறொன்றும் இல்லை .அமைதியாக ஆடம்பரமம் இல்லாமல் வந்து ஒரு விளக்கு கொழுத்திவிட்டு போங்கள் என்றால் சொந்தங்களை பறிகொடுதவர்களை விட ஒரு குருவியும் வராது .

தமிழ் நாட்டில் பஸ் பஸ்சாக மக்களை ஏற்ரிவந்து கூட்டம் போட்டு முடிய ஒரு பிரியாணி பாசல் கொடுப்பார்கள். அப்படிதான் இதுவும் .

இதை நடத்துபவர்களுக்கு ஆத்மார்தமாக மாவீரர்களுக்கு கொடுக்கும் மரியாதையை விட அங்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் தான் அக்கறை .எனவே எவராலும் எதுவும் செய்யமுடியாது .

இதென்ன பாரிசில் வாழும் தமிழர்களுக்கு கொத்து ரொட்டி வாங்க காசில்லை. ஆகவே தமிழ் மக்கள் மாவீரர் தினத்திற்கு சென்றது கொத்து ரொட்டி சாப்பிடத்தான் என்பது சுத்த அறிவிலித்தனமானது. இதில் நீங்கள் ஏதோ முன்னாள் போராளி வெளிநாட்டில் இருத்து போனதாக மார் தட்டினீர்கள்.இவ்வளவு தான் மாவீரர் நாளை பற்றி அறிந்து வைத்திருக்கிறீகளோ??

கனடாவில் உவ்வளவு சனம் வந்தது கொத்து ரொட்டி கொடுத்தோ கூப்பிட்டவர்கள் அண்ணா??

இதென்ன பாரிசில் வாழும் தமிழர்களுக்கு கொத்து ரொட்டி வாங்க காசில்லை. ஆகவே தமிழ் மக்கள் மாவீரர் தினத்திற்கு சென்றது கொத்து ரொட்டி சாப்பிடத்தான் என்பது சுத்த அறிவிலித்தனமானது. இதில் நீங்கள் ஏதோ முன்னாள் போராளி வெளிநாட்டில் இருத்து போனதாக மார் தட்டினீர்கள்.இவ்வளவு தான் மாவீரர் நாளை பற்றி அறிந்து வைத்திருக்கிறீகளோ??

கனடாவில் உவ்வளவு சனம் வந்தது கொத்து ரொட்டி கொடுத்தோ கூப்பிட்டவர்கள் அண்ணா??

எழுதியதை வாசித்துவிளங்கும் அறிவே இல்லை போலகிடக்கு அதற்குள் வியாக்கியானம் கொடுக்க வந்துவிட்டீர்கள் .என்ன எழுதியிருக்கின்றேன் என்பதை முதலில் வாசித்துவிளங்கி பின்னர் பதில் எழுதவும்.

இங்கு பின்னூட்டம் இடும் எல்லோரும் தான் பிடித்த முயலுக்கு மூன்று காலென்ற கணக்கில்தான் நிற்கின்றார்கள் .ஏதோ தூரத்தில் இருந்துவந்தால் கட்டாயம் சாப்பிட வேண்டும் போலவும் அந்த ஒருநாள் கூட ஏதோ கட்டாயம் தமிழ் சாப்பாடு தான் சாப்பிட வீண்டும் என்பதுபோலும் ஏதோ முழு நாளும் அங்குதான் இருந்தனாங்கள் என்பதுபோலவும் கருத்துக்கள் .

இப்போது விளங்குகின்றது ஏன் போராடபோகாமல் நாட்டைவிட்டு ஓடிவந்தனீர்கள் என்று உங்களால் உங்களை சிறிதளவும் எதையும் ஒறுக்கமுடியாது.ஒருநாள் அவர்களுக்காக ஒதுக்கமுடியாமல் கொத்துரோட்டி ,ரோல்ஸ் பற்றி கதைப்பவர்களை நினைக்க வெட்கமாக இருக்கின்றது .

உங்கள் மனசாட்சிக்கே தெரியும் நீங்கள் செய்வது பிழை என்று ஆனால் அப்படியே வாழப்பழகிவிட்டீர்கள் மாறுவது கஷ்டம் .

சுபாசுக்கு மண்டபத்திற்கு போகும் போது இருந்த உணர்வுதான் எல்லோருக்கும் கட்டாயம் இருந்திருக்கிருக்கும் .சிலருக்கு அப்படி இருந்திராது ஏனெனில் அவர்கள் மனிதர்களே இல்லை .

"குறிப்பிட்ட படம் எடுத்ததற்கு எனக்கு எந்த நோக்கமும் இல்லை...எந்த தேவையும் இருக்கவில்லை..நான் எந்த புலத்து அரசியல் சில்லெடுப்புகளிலும் சிக்குவதும் இல்லை..எனது சுயத்தை நான் இளக்க விரும்புவதும் இல்லை என்பதுதான் இதற்கான காரணம்...குறிப்பிட்ட படம் நான் எடுத்ததிற்கான காரணமும் அதை யாழில் போட்டதிற்கான காரணமும் எனக்கு கொத்துரொட்டிவியாபாரம் மாவீரர்மண்டபத்தின் முன்னால் நிகழ்வதை பார்க்க அருவருப்பாக இருந்ததே..ஆனால் எனது படம் பல்வேறு அதிரவலைகளையும் பலர் தம் சொந்த அரசியல் செயல்பாட்டை கொண்டு செல்ல எடுப்பார்கள் என்பதையும் சற்றும் எதிர்பாக்கவில்லை"

இந்தவாக்கியம் தான் உண்மையிலும் உண்மை .

ஏதோ தூரத்தில் இருந்துவந்தால் கட்டாயம் சாப்பிட வேண்டும் போலவும் அந்த ஒருநாள் கூட ஏதோ கட்டாயம் தமிழ் சாப்பாடு தான் சாப்பிட வீண்டும் என்பதுபோலும் ஏதோ முழு நாளும் அங்குதான் இருந்தனாங்கள் என்பதுபோலவும் கருத்துக்கள் .

அப்ப வேறு சாப்பாடு அதுவும் வேறு கடைகளில் வாங்கி சாப்பிடலாம், அது தவறில்லை என்று சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை "செத்த வீட்டிற்குக் கண் காட்டப் போய் வந்தவர்" பார்வையில் எழுதப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தவொரு இழவுவீட்டில் கூட இறுதியில் உணவுதான் முக்கிய இடம் வகிக்கின்றது. அது இனமதங்களுக்கேற்ப வேறுபடும்.ஆனாலும் கவிதையின் தலைப்பும் அதில் உள்ள உட்கருத்துக்களும் மாவீரர்தினத்தையே தூசுபடுத்திவிட்டது. சொல்ல விரும்பியதை வேறுவிதமாக சொல்லியிருந்தால் வரவேற்கப்பட்டிருக்கும்.

எந்தவொரு இழவுவீட்டில் கூட இறுதியில் உணவுதான் முக்கிய இடம் வகிக்கின்றது. அது இனமதங்களுக்கேற்ப வேறுபடும்.ஆனாலும் கவிதையின் தலைப்பும் அதில் உள்ள உட்கருத்துக்களும் மாவீரர்தினத்தையே தூசுபடுத்திவிட்டது. சொல்ல விரும்பியதை வேறுவிதமாக சொல்லியிருந்தால் வரவேற்கப்பட்டிருக்கும்.

அற்புதமான கருத்து குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.