Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறக்க முடியுமா ??? உண்மைச் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது. எனது தந்தை ஜெர்மனிக்குப் பயணம் போவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அவரை வழியனுப்ப நாங்கள் எல்லோரும் கொழும்பு சென்றோம். அப்பாவைத் தவிர ஒருவரும் முன்னர் கொழும்பு சென்றிருக்கவில்லை. எனது சித்தப்பாவும் எம்முடன் வந்திருந்தார். அவர் அப்போது யாழ் பல்கலைக் கழக மாணவர். ஆனாலும் யாழ்ப்பாணம் தாண்டி வேறு எங்கும் செல்லாத பட்டிக்காடு. அப்பா மிகவும் துணிவானவர் என்னைப்போல். ஆனால் சித்தப்பா பயந்தவர். தனிய எங்கும் போகமாட்டார்.எந்த நேரமும்  புத்தகங்களுடன் கிடப்பார். எங்களுடன் வந்து ஏதாவது பம்பலாகக் கதைப்பது  என்று ஒருநாளும் செய்ததில்லை. எனக்கு அவரைப் பார்த்தால் எரிச்சல் தான் வரும்.எங்கள் குடும்பத்தில் இப்படி ஒன்று வந்து பிறந்திருக்கிறதே என்று.

கொழும்பில் கோட்டைப் புகைபுகையிரத நிலையத்துக்கு முன்பாக அஜந்தா ஹோட்டல் என்று ஒன்று. எமது ஊரவர் ஒருவர் அங்கு மனேஜராக வேலை பார்க்கிறார். அதனால் அங்கேயே போய் நாம் தங்கினோம். வேம்படியில் படித்த எனக்கே கொழும்பைப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு நாளும் நான் பாடசாலை பஸ்ஸில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைக்குச் சென்று வருவது எங்கள் ஊரில் கொழும்பு சென்று வருவது போலத்தான். எமது ஊரில் பிறந்து வளர்ந்து இருபது வயதாகியும் யாழ்ப்பாணம் போகாதவர்கள் எத்தனையோ பேர் இருக்க நான் ஒவ்வொரு நாளும் அங்கு போவதும் மாலையில் புதினம் கேட்க அக்கம் பக்கம் இருக்கும் என்வயதை ஒத்த மற்றவர் வருவதும் எனக்கு மூக்கு நிமிர்த்தி நடக்க வைத்த விடயம் அப்போது. இப்ப நினைக்க சிரிப்புத்தான் வருகிறது.

எமக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கு. அப்பாவோ டிக்கெட் அலுவலில் ஓடித்திரிகிறார். அதனால் எம்முடன்  வெளியே வரமுடியாது. ஆனால் இவ்வளவு தூரம் வந்தனாங்கள் ஒண்டும் பாக்காமல் போகவும் ஏலாது அல்ல அல்ல கூடாது. நான் என் வகுப்பு மாணவிகளிடம் ஏற்கனவே தம்பட்டம் அடித்துவிட்டு வந்திருக்கிறேன். பிரசித்திபெற்ற மிருகக் காட்சிச் சாலைக்குக்  கட்டாயம் போவேன் என்று. போகாவிடில் எந்த முகத்துடன் நண்பர்களைப் பார்ப்பது. அதனால் அம்மாவை நச்சரிக்கத் தொடங்கினேன். அம்மாவுக்கு கொஞ்சம் சிங்களம் தெரியும். பிறகென்ன பிரச்சனை தம்பியும் நிக்கிறான் தானே. போட்டு வாங்கோ என்று அப்பா சொல்ல எனக்கோ தலை கால் தெரியாத மகிழ்ச்சி.

காலை எழுந்து குளித்து வெளிக்கிட்டு நான் எனக்கு மிகவும் பிடித்த கத்தரிபூ நிற குட்டைப் பாவாடையும் வெள்ளைப் பூப்போட்ட மேற்சட்டையும் அணிந்து தயாராகிவிட்டேன். எனக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கைகளும். நான் மூத்த பிள்ளை. என் பெற்றோர் திருமணமாகி ஆறு வருடங்கள் குழந்தை இல்லாது தவமிருந்து என்னைப் பெற்றதாக அம்மா அடிக்கடி கூறுவது எனக்கும் பெருமையாக இருந்திருக்கிறது. அதனால் நான் கேட்காமலேயே எனக்கு எல்லாம் கிடைத்தும் இருக்கிறது. அத்தனை அன்பு என்னில். நாம்  எல்லோரும்  பஸ் தரிப்பிற்கு வந்ததும் அப்பா எம்மை சரியான பஸ்ஸில் ஏற்றிவிட்டு கெண்டைக்டருக்கும் எம்மை இறக்க வேண்டிய இடம் பற்றிக் கூறிவிட்டார். அதனால் கொஞ்சம் பயமின்றி அக்கம் பக்கத்தை இரசித்தபடி செல்லக் கூடியதாக இருந்தது. சிங்களத்தில் மற்றவர் உரையாடுவதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு சென்றது இப்பவும் நினைவில் இருக்கிறது.

தரிப்பிடம் வந்ததும் எல்லோரும் இறங்கிவிட்டோம். எல்லோரும் சரியாக இருக்கிறோமோ எண்டு நான் சுற்றிவரப் பாக்கிறேன். என் சின்னத் தம்பி இரண்டு வயதானவன் எப்போதும் அம்மாவின் கையை விட்டு இறங்க மாட்டான். மற்றத் தம்பியும் தங்கைகளும் கூடச் சிறியவர்களாதலால் ஒரு எச்சரிக்கைதான். பக்கத்திலேயே மிருகக் காட்சிச் சாலை. உள்ளே நுழைந்ததுமே அழகிய வண்ணவண்ண மீன்கள். என்னடா இவ எங்களுக்கும் சுத்திக் காட்டப் போறாவோ என நீங்கள் சலிப்படைவது தெரிகிறது. சினிமா என்றாலும் கடைசியில் தானே விருவிறுப்பு. அதனால் கொஞ்சம் பொறுமையுடன் வாசிக்கத்தான் வேணும். அம்புக்குறி காட்டிய படி ஒரு இடமும் விடாமல் எல்லாம் பார்த்தோம். அம்மா நினைத்தாவோ தெரியவில்லை கால் உளைந்தாலும் பரவாயில்லை ஒரு இடமும் விடக்கூடாது என நான் நினைத்தேன். எமக்குக் கிட்டவே மூன்று சிங்களப் பெடியள் சிங்களத்தில் எதோ சொல்லிச் சிரித்தபடி எங்களுக்குக் காவல் போல் வந்துகொண்டிருந்தார்கள். எளிய மூதேவியள் என்று அம்மா திட்டுவது கேட்டது. எதுக்குத் திட்டுறா என்று தெரிந்தாலும் யாருக்கம்மா திட்டுகிறீர்கள் எனக் கேட்டேன். நீ இங்க முன்னால வா பின்னால வாறவங்கள் விசர்க் கதை கதைச்சுக் கொண்டு வாறாங்கள். சின்னப் பெட்டையைப் பாத்து உப்பிடிக் கதைக்கிறாங்கள் என்று சித்தப்பாவிடம் தன் எரிச்சலைக் கொட்டினா. அவங்கள் ஒண்டும் பெரிசாச் சொல்லவில்லை இரட்டைப் பின்னலும் ஆளும் குட்டி வடிவாய் இருக்கு என்று சொன்னதாக அம்மா சித்தப்பாவிடம் குசுகுசுத்தது முன்னால் போய்க்கொண்டிருந்த என் காதுகளுக்கு கேட்டது. பிடிக்குதோ பிடிக்கவில்லையோ அது வேற விஷயம். என்னை சயிட் அடிக்கிறாங்கள் என்றது அந்த வயதிலும் பெரிய விடயம் தானே. நான் அம்மாவிடம் திரும்பி எதோ கேட்பதுபோல் கேட்டுக்கொண்டே அம்மாவுக்குத் தெரியாமல் அவர்களைப் பார்த்தது கூட இன்னும் மறக்கவில்லை.

ஒரு மாதிரி இரு இடமும் விடாமல் பாத்தாச்சு. நண்பிகள் என்ன கேட்டாலும் பதில் சொல்லலாம் என எண்ணிக் கொண்டே அம்மா நாளை கடற்கரைக்குப் போவமோ என்கிறேன் நான். அது நாளை அடுத்தபாடு. இப்ப கால் சரியா உளையிது வீட்டை போவம் என்கிறார். உள்ளேயே இருந்த உணவகத்துக்குப் போய் சிற்றுண்டி வகைகளும் தேநீரும் அருந்திக் களைப்பாறிவிட்டு  தரிப்பிடத்துக்குப் போகிறோம். எல்லோருக்கும் அப்போதுதான் நடந்த களைப்புத் தெரிகிறது. பஸ்சிலும் எல்லோருக்கும் இடம் கிடைக்கிறது. நான் அம்மாவுக்குப் பக்கத்தில் யன்னலோரம் அமர்கிறேன். எமக்கு முன்னால் இரு சகோதரிகளும் அதற்கும் முன்னால் தம்பியும் சித்தப்பாவும் அமர்கின்றனர். சின்னத் தம்பியை அம்மா மடியில் வைத்திருக்கிறார். எனக்கோ களைப்பினால் தூக்கம் வருகிறது. முன் கம்பியைப் பிடித்தபடி கைகளில் தலைவைத்துப் படுக்கிறேன். பஸ் குலுக்கக் குலுக்க எரிச்சல் வந்தாலும் அதையும் மீறி களைப்பினால் தூங்கிவிடுகிறேன்.

பஸ் குலுங்கியபடி எங்கோ நிற்கத் திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். பக்கத்தில் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை.
முன்னுக்குப் பார்கிறேன். தம்பி தங்கைகள் சித்தப்பா ஒருவரையுமே காணவில்லை.

தொடரும்..........

  • Replies 57
  • Views 15.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இடத்தில் நிற்பாட்டி விட்டீர்கள்  படிக்கும்ஆவலுடன்தொடருங்கள். ............ :D

நல்ல இடத்தில் நிற்பாட்டி விட்டீர்கள்  படிக்கும்ஆவலுடன்தொடருங்கள். ............ :D

 

 நானும் ஏதோவென்றல்லாம் நினைத்தேன்.சில வேளை நானும் சுமேரியரைப் பார்த்திருப்பேனோ என்று எண்ணிக்கொண்டிருக்க (கண்ணகை அம்மன் கோவிலடி,பெருங்காடு எல்லாம் அத்துபடி)இவர் ஏதோ கனவில் மிருகக் காட்சிசாலையை பார்த்தமாதிரி நிறுத்திவிட்டார் :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் அந்தநாள் சாவித்திரிமாதிரி இருந்திருப்பா. இளவரசியே கதையை இடையிலை நிப்பாட்டிறது நமக்கு கடுப்பேத்திற விடயம் ஞாபகத்தில வைச்சு கெதியில எழுதி முடியுங்கோ.

சுமேரியருக்காக இந்தப்பாட்டு :-

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன மூக்கு நிமிர்த்தி

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன் சுமோ பேருந்தில் தூங்கின படி கனவு கண்டு இருப்பார் என்று  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய நிலாமதி, ப்ளூபேட்,சாந்தி, ரதி, நந்தன் ஆகியோருக்கு நன்றி. சரி வாசிச்சனியல் இரண்டு நாள் பொறுங்கோவன். மிச்சம் எழுதாமல் ஓடமாட்டன்.
யாழ் மத்திய கல்லூரி அல்லது யாழ் இந்துக்க் கல்லூரியில் படித்த்திருந்தால் என்னைப் பாத்திருக்கலாம் ப்ளூபேட்.நீங்கள் சொல்லும் இடங்கள் எனக்குத் தெரியாதே. :D

 பாடலுக்கு நன்றி சாந்தி :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கதையினை எம்முடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

 

 

பஸ் குலுங்கியபடி எங்கோ நிற்கத் திடுக்கிட்டு கண்விழிக்கிறேன். பக்கத்தில் பார்த்தால் அம்மாவைக் காணவில்லை.
முன்னுக்குப் பார்கிறேன். தம்பி தங்கைகள் சித்தப்பா ஒருவரையுமே காணவில்லை.

வெள்ளை வான் வந்து கடத்திட்டு போயிட்டினமா!

நான் அம்மாவிடம் திரும்பி எதோ கேட்பதுபோல் கேட்டுக்கொண்டே அம்மாவுக்குத் தெரியாமல் அவர்களைப் பார்த்தது கூட இன்னும் மறக்கவில்லை.

 

கொஞ்சம் ஓவறாய் தெரியேலை :lol::D .

 

என்வயதை ஒத்த மற்றவர் வருவதும் எனக்கு மூக்கு நிமிர்த்தி நடக்க வைத்த விடயம் அப்போது.

 

முகத்தை நிமிர்த்தி நடக்க வைத்த விடையம் . அதாவது பெருமையில் நடப்பது கேள்விப்பட்டிருக்கின்றேன் .  அது என்ன மூக்கு நிமிர்த்துவது ?? விளக்கம் தேவை . அருமையான கதைக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் சுமே :) :) .

சுமோ ஏனப்பா இந்தக் கொலைவெறி????? கெதியாய் எழுதுங்கோ!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சுமேரியர்!

எக்கச்சக்கமான இடத்திலை விட்டுப் போட்டுப் போட்டியள்! :wub:  

மூக்கை நிமிர்த்தேக்கை, முகம் தான் நிமிருமாக்கும், கோமகன்!

அதைத்தான், சூசகமா சுமேரியர் சொல்லியிருக்கிறா எண்டு நினைக்கிறான்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சுமேரியர்!

எக்கச்சக்கமான இடத்திலை விட்டுப் போட்டுப் போட்டியள்! :wub:  

மூக்கை நிமிர்த்தேக்கை, முகம் தான் நிமிருமாக்கும், கோமகன்!

அதைத்தான், சூசகமா சுமேரியர் சொல்லியிருக்கிறா எண்டு நினைக்கிறான்!

 

நான் நெஞ்சை நிமிர்த்தி தான் பாத்திருக்கேன்  , கேட்டிருக்கேன்  :)

நல்லகதை தொடருங்க

 

ஆமா நீங்க என்ன தூங்கு மூச்சியா, இயற்கையை ரசிக்காமல்?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நெஞ்சை நிமிர்த்தி தான் பாத்திருக்கேன்  , கேட்டிருக்கேன்  :D

 

நந்து, பொம்பிளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு!

 

எண்டு ஊரிலை ஒரு சொல்லடை (கோமகனிடம்  கடன் வாங்கிய வார்த்தை) உண்டு!

 

இதன் கருத்தை நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்தேன்!

 

இன்று உங்கள் பதிவைப் பார்த்ததும் தான், லபக்கென்று விளங்கின மாதிரிக் கிடக்கு! :D

அம்மா இறங்கினதைக் கவனிக்காமல்  எங்கேயோ பிராக்குப்பாத்துக்கொண்டிருந்திருக்கிறார் போலும்... 

நானும் மனைவியும் ஒரு இடத்துக்கு சென்றபோது நான் இறங்கினேன். மனைவியைக் காணவில்லை. பார்த்தபோது  அவர் தொடர்ந்து போய்க்கொண்டிருந்தார் பின்னர் நான் திரும்பவும் ஒரு றாம் பிடித்து அடுத்த இடத்துக்குச் சென்ற போது அவர் இறங்கி .......... நின்றார்...    

 

கதையை த் தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தெகிவளையிலிருந்து... கோட்டைக்குப் போன பஸ்சிலை... தனிய இருந்த, சுமோ என்ன செய்திருப்பார் என்று அறிய ஆவலாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகள் பகிர்ந்த கறுப்பி கோமகன்  அலை புங்கை வந்தி சென்பகன் தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றி. நெஞ்சு நிமிர்த்துவது என்பது எதுக்கும் துணிந்து பயமின்றிப் போவதைத்தான் கூறுவார்கள். எமதூரில் மூக்கு நிமிர்த்துவது  என்றால் தலை மட்டும் நிமிர்த்தி கர்வமாகத் திரிபவரை அப்படிக் கூறுவர். ஆண்கள் அனேகமாக அப்படித் திரிவதில்லை. அதனால்த்தான் உங்கள் ஒருவருக்கும் அதுபற்றித் தெரியவில்லை. :D :D

  • கருத்துக்கள உறவுகள்
வேம்படியில் படித்த எனக்கே கொழும்பைப் பார்க்கப் பிரமிப்பாக இருந்தது. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் ஒவ்வொரு நாளும் நான் பாடசாலை பஸ்ஸில் யாழ்ப்பாணத்தில் உள்ள பாடசாலைக்குச் சென்று வருவது எங்கள் ஊரில் கொழும்பு சென்று வருவது போலத்தான்.
அப்ப நீங்கள் வேம்படி காய் போலகிடக்கு....தொடருங்கோ உங்கள் சுற்றுலாவை
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப நீங்கள் வேம்படி காய் போலகிடக்கு....தொடருங்கோ உங்கள் சுற்றுலாவை

 

இப்ப வேம்படி பழுத்த பழம்  :lol:  :D

 

உண்மைக்கதையினை எம்முடன் பகிர்வதில் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு ரசனையே இல்லை எண்டு பக்கத்து வீட்டு பொடி மல்லி சொன்னது சரியா தான் இருக்கு :D

கதை சூப்பர் அக்கா அதுவும் எழுதிய விதம் இருக்கே ஆகா ஓஹோ ரகம் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழது எனக்கு பதின்முன்று வயது

அதை விடுங்கோ இப்ப உங்களிற்கு எத்தனை வயது. :lol:

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய புத்தன் உடையார் சேவகன் சாத்திரி சுண்டல் அனைவருக்கும் நன்றி. கட்டாயம் நாளைக்கு மிகுதிக் கதையை எழுதிப் போடுவன். அதுசரி என்ர வயது தெரிஞ்சு என்ன செய்யப் போறியள் சாத்திரியும் சுண்டலும். :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

எங்க பொது அறிவ வளர்க்கப்போரம் :D

அதை விடுங்கோ இப்ப உங்களிற்கு எத்தனை வயது. :lol:

 

 58 என்று திண்ணையில் போட்டவா, பார்க்கவில்லையா? என்ன நீங்க, இந்த புலனாய்வில் சறுக்கிவிட்டீர்கள் :icon_mrgreen:  :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.