Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கபிலனுக்கு மனம் நிறைந்த சந்தோசம். மதுவின் சம்மதம் இன்றுதான் கிடைத்தது. ஒருமாதமாக தூக்கமில்லை, ஒழுங்காக உண்ண  முடியவில்லை, ஏன் மற்றவர்களுடன் கதைத்துச் சிரிக்கக் கூட முடியாமல் தன்னுள் தானே  அவஸ்தையில் மூழ்கியிருந்தான். மதுவைக் கண்ட நாள் முதல் மனம் கிடந்தது அடித்துக் கொண்டது. இவள் தான் எனக்கு ஏற்றவள் என மனம் சொன்னாலும் அவள் அதை ஏற்பாளா என்னும் தவிப்பு. அந்தத் தவிப்புக்கும் காரணம் இருந்தது. கபிலன் சாதாரணமான ஒருவன். மிகவும் அமைதியானவன். நண்பர்கள் பலர் இருந்தாலும் அவர்களுடன் இவனாக அரட்டை அடிக்க மாட்டான். அவர்களின் பம்பலில் தானும் பங்குகொள்வானே தவிர தானாக எதுவும் பெரிதாகக் கதைக்க மாட்டான். நண்பர்கள் இவனை வம்புக்கிழுத்தாலும் என்னை விடுங்கோடா என்பான் அல்லது ஒரு சிரிப்பை பதிலாகத் தந்துவிட்டு இருந்துவிடுவான்.
நண்பன் ஒருவனுடன் ஒரு வீட்டுக்கு சட்லையிட் பூட்டப் போன போதுதான் மதுவை அங்கு கண்டான். பார்த்தவுடன் கண்களை எடுக்க முடியவில்லை. நண்பனிடம் சாடைமாடையாக விசாரித்த பொழுது இப்ப கிட்டடியில் நாட்டில்  இருந்து வந்திருப்பதாகக் கூறினான். இவனுக்கு மீண்டும் அவளைப் பார்க்கவேண்டும் என்று ஆசை வந்தாலும் நண்பனிடம் கூற வெட்கமாகவும் இருந்ததால் கூறவில்லை. ஒரு வாரமாக மண்டையைப் போட்டு உடைத்ததுதான் மிச்சம். எந்த வழியும் தென்படவில்லை. இனியும் தாங்காது நண்பனிடம் கூறவேண்டியதுதான் என இவன் நினைத்த வேளையில் நண்பனிடமிருந்து தொலைபேசி அழைப்பு. காசி அண்ணன் வீட்டில் திருப்பவும் சனல் ஒன்றும் வேலை செய்யுதில்லையாம். எனக்கு தனியப் போக விசராக் கிடக்கு நீயும் வாறியோ என நண்பன் கேட்க இவனுக்கு தன்னை அறியாமலே சந்தோசத்தில் வாயெல்லாம் பல்லானது. நண்பனுக்கு விளங்கிவிட்டது என்னடா ஏதும் பிரச்சனையோ என்று கேட்க ஒன்றுமில்லை என வழமையான மழுப்பல் சிரிப்புடன் நண்பனின் வண்டியில் ஏறினான். வண்டியிலும் வேகமாக அவன் மனம் மதுவிடம் பறந்தது. அவள் வீட்டில் நிப்பாளோ அல்லது எங்காவது போயிருப்பாளோ என மனம் நிலைகொள்ளாது தவித்தது. ஏன்டா கொஞ்சம் பாஸ்ட்டா காரை உடன் என்று சொன்ன இவனை நண்பன் நக்கல்ச் சிரிப்போடு திரும்பிப் பார்த்தான். விளங்கிவிட்டுதடா எனக்கு சரியான கள்ளன்ரா நீ என்று நண்பன் கூற இவன் வெட்கச் சிரிப்பு மட்டும் பதிலாகத் தந்தான். பூனை மாதிரி இருந்துகொண்டு எடேய் அவள் சின்னப் பெட்டை போல கிடக்கு என்று நண்பன் இழுத்தான். அதுக்கென்ன என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 12 வயது வித்தியாசம். கனபேர் ஊரில அப்பிடித்தானே கட்டிறவை என்றான். முதல் பேட்டை ஓம் எண்ண வேணுமெல்லோ அதுக்கு முதல் வீணா ஆசையை வளர்க்காதே என்றுவிட்டு அதற்குமேல் நண்பன் ஒன்றும் கூறவில்லை.

வீட்டு மணியை அடித்ததும் திறந்தது மதுதான். கபிலன் துணிவுடன் அவளைப் பார்த்தான். அவளும் இவனைப் பார்வையால் அளந்தது தெரிந்தது. சித்தப்பா இப்ப  வந்திடுவார் என்றபடி இவர்களை உள்ளே வரவிட்டு கதவைப் பூட்டினாள் மது. தேத்தண்ணி போடவோ என்று கேட்டவளை முடிக்க விடாமல் ஓம் என்றான் இவன். அவள் தேநீர் போட்டுக்கொண்டு வரும் வரை இவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நண்பனும் இவனைக் கடைக் கண்ணால் பாத்துக்கொண்டுதானிருந்தான். தேநீர் வந்தது. அவளைப் பார்த்துக்கொண்டே எடுத்தான். அவள் கண்களிலும் ஒரு படபடப்பு அது தன் பிரமையோ என்று இவனுக்குச் சந்தேகம். ஊரில நீங்கள் எந்த இடம் என அவள் உள்ளுக்குள் சென்றாலும் என்ற அவசரத்தில் கேட்டான். அவளும் அவனுக்கு முன்னாள் இருந்த கதிரையில் அமர்ந்து அவனுடன் கதைக்க வெளிக்கிட நண்பனும் அவர்களைக் கவனிக்காததுபோல் ஆனால் காதால் கேட்டுக்கொண்டே தன்  அலுவலைப் பார்த்தான். ஒரு கட்டத்தில் காருக்கு போட்டுவாறன் என்றுவிட்டு நண்பன் சென்றுவிட கபிலன் மனதுக்குள் நண்பனுக்கு நன்றி கூறிக் கொண்டான். மது எனக்கு உங்களைப் பாத்த நாள் முதல் பிடிச்சுப் போச்சு. மற்றவை மாதிரி எனக்கு சினிமாக் காதலும் வராது. ஒரு மாசமா
உங்களை நினச்சு நித்திரை கொள்ளவில்லை. உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா நான் உங்கட சித்தப்பாவோடை கதைக்கிறன். விருப்பமில்லாட்டிலும் சொல்லுங்கோ என்றுவிட்டு அவளைப் பார்த்தான். அவள் கண்களில் காதல் வழியவில்லை ஆனால் வெறுப்பும் இல்லை என்பது மன நின்மதியைத் தந்தது. நீங்கள் இப்பிடி உடன கேட்டா நான் என்ன சொல்லுறது. ஒரு கிழமை டைம் தாங்கோ சொல்லுறன் என்றவுடன் சரி யோசிச்சு எனக்கு சாதகமான பதிலைச் சொல்லுங்கோ என்றுவிட்டு அதற்குமேல் அங்கு நிற்க முடியாமல் கீழே வரத் திரும்பியவனை உங்கள் போன் நம்பரைத் தந்துவிட்டுப் போங்கோ என்ற அவள் வார்த்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டு உடனே வந்துவிட்டான். என்னிலும் பார்க்கத் துணிவுதான் ஆளுக்கு என மனம் எண்ணினாலும் ஒரு வாரமாக என்ன சொல்லுவாளோ என்று பதட்டம். இன்றுதான் மதுவிடமிருந்து தனக்குச் சம்மதம் என போன் வந்தது. உடனே தன்  நண்பனிடம் தொலைபேசியில் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டான். கெட்டிக்காரன் தான்ரா நீ. உன்னை நானும் குறைச்சு எடை போட்டுவிட்டன் என்று நண்பன் கூற இவனுக்கு பெருமையாக இருந்தது.

அதன்பின்னர் அவன் தாமதிக்கவில்லை. கபிலனின் தாயார் இரண்டு வருடங்களின் முன் தான் இறந்துவிட்டார்.
தந்தை தானும் தன்பாடும். ஒரு மூத்த சகோதரி திருமணமாகி குழந்தைகளுடன் கொழும்பில் வாழ்வதால் இவன் திருமணத்தில் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. மதுவின் சிறிய தந்தையும் தன் பெரும் பொறுப்பு தானாகக் குறைந்ததில் கபிலன் மேல் நல்ல மரியாதையும் மதிப்புமாக திருமணத்தை நடத்தி முடித்துவிட்டார். கபிலனும் வேலை செய்வதால் தனிய வீடும் எடுத்து மதுவுக்கு விரும்பியது போலவே கதிரை மேசை கட்டில் என வாங்கிப் போட்டு மதுவை தலையில் தூக்கி வைக்காத குறைதான். மதுவும் நல்ல மனைவியாக வாழ்க்கையை நன்றாகவே இரசித்து அனுபவித்தனர். பலருக்கு கபிலன் மேல் சிறு பொறாமை கூட எட்டிப் பார்த்தது. இவனுக்கு இவ்வளவு இளம் மனைவியா என்று. ஒரு வருடத்தில் அவர்களின் அன்பின் சாட்சியாக ஒரு மகனும் பிறந்துவிட்டான். பெயர் வைத்தது கூட மதுதான். மதனுக்கு இப்ப வேலையும் அதிகம். மகன் பிறந்தபின் செலவும் அதிகமானதால் தவிர்க்க முடியாததாகி விட்டது. காலையில் போனால் இரவு எழு மணியாகும் வர. நான் நாள்முழுதும் தனிய இருக்கிறன் என்ற மதுவின் புலம்பலுக்கு அதுதான் பெடியன் இருக்கிறானே துணைக்கு என்று சிரித்துச் சமாளித்தாலும் மனம் வருந்தத்தான் செய்தது.

மது உமக்கு கம்பியூட்டர் தெரியும் தானே. அதில கொஞ்சம் பழகின்னீர் எண்டா எனக்கு வீடியோ எடிட் செய்ய உதவிசெய்யலாம். சனி ஞாயிறுகளில் வீடியோ எடுக்கப் போனால் நல்ல காசுவரும் என்றான். ஏற்க்கனவே வீட்ட வாறது பிந்தி. இதுக்குள்ள சனி ஞாயிறு வேற போகப் போறியளே என மது சலிப்புடன் கேட்டாள். எல்லாம் உம்மை சந்தோசமா வச்சுக் கொள்ளத்தானே. சொந்த வீடு வாங்கவேணும் என்று சொன்னனீர் எல்லோ. கொஞ்சம் காசு இருந்தாத்தானே கடன் தருவான் என்றவுடன் மதுவும் ஒன்றும் கூறவில்லை. பின்னர் வந்த நாட்களில் மது கொஞ்சம் கொஞ்சமாக கணனியில் பழகிவிட்டாள். கபிலனுக்கு ஆச்சரியம் இவ்வளவு விரைவாக எல்லாம் பழகிவிட்டாளே  என அதை அவளிடமே மகிழ்வோடு கூறினான். தம்பி தன்ர பாட்டில விளையாடுவான். நான் என்பாட்டில கொம்பியூட்டரில செய்வான் என மது கூற கபிலனுக்கு மனது நின்மதியாகிப் போனது. இவளுக்குப் பொழுது போகிறது பிரச்சனை இல்லை என எண்ணி நின்மதிடைந்தான். ஆனால் அந்த நின்மதி இன்னும் கொஞ்ச நாட்கள் வரைதான் என பாவம் அவன் அறியவில்லை.

தொடரும்............

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 100
  • Views 9.2k
  • Created
  • Last Reply

ம்ம்........ தொடருங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்
12 வயசு வித்தியாச‌த்தில் கட்டுறது ஓர‌ளவுக்கு பர‌வாயில்லை ஆனால் கட்டினப் பிறகாவது வீட்டிலே இருந்து மனைவியை கவனிக்காது விட்டால் அன்பு காட்டுபவர்களிட‌ம் அந்தப் பெண் போயிருப்பார்...பாவம் அந்த ஆண் பணம் மட்டும் தான் வாழ்க்கை என நினைத்து விட்டார் போலும் :(
 

எடேய் அவள் சின்னப் பெட்டை போல கிடக்கு என்று நண்பன் இழுத்தான். அதுக்கென்ன என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 12 வயது வித்தியாசம். கனபேர் ஊரில அப்பிடித்தானே கட்டிறவை என்றான்.

 

உருப்பட்ட மாதிரித்தான்.............  :lol:  :lol: .  என்ன சுமே நீங்களும் பிற்போக்குத்தனங்களை ஊக்குவிக்கிறியளோ ?? பெடிச்சியின்ரை வயசை கூட்டியிருக்கலாம் .  கதையோடை கதையா இது விற்றுத்தீர்ந்த காதல் கதையின்ரை எஃபெக்ற் இல்லைத்தானே ??  கதைக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில வயது வித்தியாசமாக கட்டுவது சாதாரண விடயம். ஆனால் புலம்பெயர் நாடுகளில....? கதை சொல்லும் சுமோவுக்கு எனது வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்துப் பேசிப் பழகாமல், கண்டதும் காதல், கலியாணம், பிள்ளைப் பேறு என்று வழமையான சமாச்சாரமாக இருக்கின்றது..

 

நன்றாகப் பழகக்கூடிய இன்னொருவன் வந்தால் கதி அதோ கதிதான்..

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் .

 

 

இவளுக்குப் பொழுது போகிறது பிரச்சனை இல்லை என எண்ணி நின்மதிடைந்தான். ஆனால் அந்த நின்மதி இன்னும் கொஞ்ச நாட்கள் வரைதான் என பாவம் அவன் அறியவில்லை.

பிரச்சனை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய உறவுகளுக்கு நன்றி. இது ஒரு உண்மைச் சம்பவம். யாழில் வந்த எந்தக் கதையையும் சார்ந்து எழுதப்பட்டதும் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

பல குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவதற்கு வயது வித்தியாசங்களும் ஓரு காரணம். மீதியை படிக்க ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
கருத்தெழுதிய உறவுகளுக்கு நன்றி. இது ஒரு உண்மைச் சம்பவம். யாழில் வந்த எந்தக் கதையையும் சார்ந்து எழுதப்பட்டதும் அல்ல.

 

முதல்லை கதையை எழுதி முடியுங்கள்  அறிக்கையை  பிறகு விடலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்!!

கதை ஏதோ ஒரு கருவை நோக்கி நகர்கிறது என நினைக்கின்றேன். பாராட்டுக்கள். தொடருங்கள். வாசிக்க ஆவலாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுவுக்கு இப்ப நேரமே கிடைப்பதில்லை. காலையில் எழுந்து மகனின் அலுவல்கள் பாத்து சாப்பாடெல்லாம் கொடுத்து கொட்டுக்குள் விளையாட்டுப் பொருட்களைப் போட்டுவிட்டால் அவன் தன்பாட்டில் விளையாடுவான். பிறகு கொஞ்ச நேரம் டிவியில் போகும் நாடகங்கள் பார்ப்பது, சமைப்பது எனப் போய்விடும்.மதியம் சமைத்துச் சாப்பிட்டு மகனை வெளியில் கொண்டுபோட்டு வீட்டுக்குள் வந்தால் பிறகு face book. படம் ஏதாவது இருந்தால் பார்ப்பாள். அல்லது இருக்கவே இருக்குக் கணணி. நல்ல காலம் ஒண்டும் தெரியாமல் விசரி மாதிரி இருந்திருப்பன். கபிலனுக்குத்தான் நன்றி சொல்ல வேணும் என மனதில் அடிக்கடி நினைத்துக் கொள்வாள். இதுக்கும் இல்லாவிட்டால் என் நிலை என்ன ஆகியிருக்கும். தமிழ் குடும்பங்கள் கொஞ்சம் அங்கங்கே இருக்கிறார்கள் தான். அனால் எல்லாம் பட்டிக்காட்டுக் கூட்டம். மொடே னான குடும்பங்கள் ஒன்றும் இல்லை. அதனால் மதுவும் அவர்களுடன் பழகுவதற்கு பெரிதும் விரும்புவதில்லை. கணனியில் ஆர்வம் இல்லாமல் இருந்த மதுவை கபிலன் தான் கட்டாயப்படுத்தி கணணியைப் பழக்கி விட்டது.

இப்ப எனக்கு எத்தனை நண்பர்கள். வாழ்வு எவ்வளவு ஆனந்தமாகப் போகிறது. அதுகும் இப்ப கரன் அடிக்கடி தனி மடலில் எழுதுபவற்றை வாசிக்கவே மனதெல்லாம் ஒரே படபடப்பு. என் படத்தை அனுப்பும்படி வேறு தொந்தரவு.  நான் கேட்காமலே தன படத்தை அனுப்பியுள்ளான். அழகாய்த்தான் இருக்கிறான். லண்டனில இருக்கிறபடியால் கொஞ்சம் மாடர்ன் ஆகவும் தெரிகிறான். இப்போதெல்லாம் அவனுடன் கதைக்காமல் இருக்கவே முடியவில்லை. ஸ்கைப் எவ்வளவு உதவி செய்கிறது. யாரிடமும் மாட்டத் தேவை இல்லை. பண விரயமும் இல்லை. ஆனா .......மனம் ஒரே தடுமாற்றமாகவும் இருக்கே. கபிலனுக்கு நான் துரோகம் செய்கிறேனோ? ஒருவருடன் கதைப்பது தவறில்லை. நானும் தான் என்ன செய்வது நாள் முழுவதும் வீட்டுக்குள் தனியே இருந்து இது என் குற்றம் இல்லை என தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாள் மது. இது ஒன்றும் தெரியாது கபிலனும் தன் வேலை வீடு என நாட்கள் நகர்ந்தன. மதுவுக்கும் கரனுக்குமான நெருக்கமும் கூடிக்கொண்டு போனது. மனைவியுடன் அதிக நேரம் செலவிடாததாலும் வேலைக் களைப்பாலும் மதுவிடம் ஏற்பட்ட மாற்றங்களை கபிலன் அவதானிக்கவில்லை. வேலையால் வந்தால் மகனுடன் செலவழிக்கவே நேரம் போய்விடும். மகனும் இப்ப தத்தி நடை போடுவதால் அதைப் பார்க்கவே ஆனந்தம் தான். ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியே எங்காவது போவோம் என்றாலும் மது அதை விரும்புவதில்லை.

மது பாடு இப்ப பெரிய திண்டாட்டம். கரன் காதல் மழையில் தினமும் குளிக்க வைக்கிறான். தன்னிடம் வரும் படி ஒரே கரைச்சல். மதுவுக்கு என்ன முடிவு எடுப்பதென்றே தெரியவில்லை. பாவம் கபிலன் என்னை விரும்பிச் செய்தவர் அவருக்கு சரியான ஏமாற்றமா இருக்கும். ஆனால் அதுக்காக நான் என் சந்தோசத்தை இழப்பதா. மகனையும் கொண்டு போகவேணும். அதிலும் இப்ப பெரிய தலைவலி பிள்ளையையும் விட்டுவிட்டு வரச்சொல்லி கரன் கூறுகிறான். அதுதான் யோசனை. பாவம் சின்னப் பிள்ளை. ஆனால் பிள்ளையைக் கொண்டு போனாலும் மற்றவை கேள்வி கேட்பார்கள். ஒருவாரச் சிந்தனையின் பின் மகனை விட்டுவிட்டுப் போவது தான் சிறந்தது என மது முடிவெடுக்கிறாள். எல்லாத்துக்கும் துணிஞ்சாச்சு. இனி யோசிச்சுப் பலனில்லை. கபிலனோட கதைக்கத்தான் வேண்டும் என எண்ணியபடி அவனுக்காகக் காத்திருந்தாள் மது.

கபிலன் வேலையால் வந்து சாப்பிட்டு முடிச்சு மகனுடன் விளையாடி மகன் தூங்கும் வரை பார்த்துக்கொண்டிருந்தவள் அதன் பின் கபிலன் நான் உங்களுடன் கதைக்க வேணும் என்றாள். கதையுமன் எதோ அந்நிய ஆக்களுக்குச் சொல்லுற மாதிரிச்சொல்லுறீர் என்றான். மதுவிடம் எந்தவிதச் சிரிப்பையும் காணவில்லை. அவனுக்கு யோசனையாக இருந்தது. தாய்க்கு காசு அனுப்பக் கேட்டகப் போறாளோ என . என்ன பேச்சை காணேல்லை என்ன எண்டு சொல்லுமன் என்றான். என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. நான் உங்களை ஏமாத்திப் போட்டன் என்றாள். என்ன என்னைக் கட்ட முதல் யாரையாவது காதலிச்சனீரோ? அதை என்னிடம் சொல்லவில்லையோ இத்தனை நாள் அதுதானே? நீர் என்னைக் கட்டமுதல் யாரைக் காதலிச்சிருந்தாலும் எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. நீர் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம் என்றான். நான் மற்ற ஆம்பிளையள் மாதிரி இல்லை மது உமக்குத் தெரியும் தானே என்றுவிட்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவனின் பார்வையைத் தவிர்த்தபடி என்னை மன்னிச்சிடுங்கோ நான் இரண்டு மாதமா நால்லா யோசிச்சிட்டுத்தான் இப்ப கதைக்கிறன். உங்களை நான் வெறுக்கேல்லை ஆனால் எனக்கும் காரனுக்கும் இப்ப 3 மாதமா பழக்கம். நாங்கள் இரண்டுபேரும் விரும்பிறம் என்றுவிட்டு நிமிர்ந்து கபிலனைப் பார்த்தாள். கபிலன் அதிர்ந்துபோய் இருப்பது தெரிந்தது. ஆனாலும் என்ன செய்வது. உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கும் என்று எனக்குத் தெரியும். ஆஅனால் உங்களை ஏமாற்றிக் கொண்டு தொடர்ந்து என்னால் இருக்க முடியாது என்றாள். கபிலன் திட்டுவான் அடிப்பான் என எதிர் பார்த்தவளுக்கு அவன் ஒன்றும் பேசாமல் இருந்தது ஒரு குற்ற உணர்வைத் தோற்றுவித்தது. கொஞ்ச நேரம் சத்தம் ஒன்றும் இல்லை அமைதியிலேயே கழிந்தது. அவநின் அதிர்ச்சி தெரிந்தாலும் மீண்டும் கபிலன் கபிலன் என அவனை இருமுறை கூப்பிட்டு அவனுக்கு ஒன்றுமில்லை என்பதை  நிச்சயம் செய்து கொண்டாள்.

கபிலனுக்கோ பூமிஒஇ பிளந்து தன்னை மூடிக் கொள்ளக் கூடாதா என மனம் ஏங்கியது.கத்தி அழவேண்டும் போல் மனம் ஆர்ப்பரித்தது . ஆனாலும் தன்னை அடக்கிக் கொண்டான். நான் உமக்கு என்ன பிழை விட்டனான் மது என தோய்ந்துபோன குரலில் கேட்டான் மதுவுக்கு அதற்குமேல் அடக்க முடியவில்லை. அவள்  என்னை மன்னிச்சுக் கோளுங்கோ என்று கூறியபடி பெலத்து அழத்தொடங்கினாள். அவள் அழுது முடியுமட்டும் அவனும் ஒன்றும் கதைக்கவில்லை. அழுது முடிய சரி நீர் முடிவெடுத்து விட்டீர். விருப்பம் இல்லாத ஒரு ஆளை கட்டாயப் படுத்தி இருக்க வைக்க முடியாது. எனக்கு உம்மில இப்பகூடக் கோவம் வரேல்லை. அவ்வளவு நான் உம்மில அன்பு வச்சிருக்கிறன. இண்டைக்கு வேறை ஒண்டும் கதைக்க வேண்டாம் . இரவு முழுவதும் நாளை பகல் முழுதும் யோசியும். நாளைக்கு கதைப்பம் என்றுவிட்டு எழுந்து போய்ப் படுத்துவிட்டான்.

தொடரும் .............

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

முதல் கியறிலை போய் இப்ப ரெண்டாம் கியறுக்கு மாத்திறியள் . ஆனால் ஒரு விசையம் விளங்கேலை . தேன்குடிக்க பூவுக்கு பூ தாவிற வண்டுகளை கேள்விபட்டிருக்கிறன் . ஆனால் பூ வந்து வண்டுகளை தேடி ஓடிறது புதுமையாத்தான் இருக்கு . இப்பிடிபட்ட ஆக்களை காதல் எண்ட மெல்லிய உணர்ச்சிக்குள்ளை போட்டு காதலை பரிசுகெடப் பண்ணாதையுங்கோ . அதுக்காக உங்கடை கதாநாயகி கற்பு எண்டு சொல்லிற சாமானோடை இருக்கவேணும் எண்டு நான் சொல்லேலை , லண்டன் சீவியமாவது நிலைக்குமோ ???????? படைப்புக்கு வாழ்த்துக்கள் சுமே :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் எமக்குத் தெரியாத விடயங்கள் எத்தனையோ இருக்கு. நாம் எம்மைச் சுற்றி நடப்பவற்றை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் அதேபோல் தான் என எடை போட முடியாது. எம் சமூகக் கட்டுப்பாடுகள் எம்மினத்தை  ஒரு கட்டுக் கோப்புக்குள் வாழவைத்துக் கொண்டிருந்தது.அதுவுமல்லாமல் புலத்தில் சமூகம் சார் வாழ்க்கை முறை மிக இறுக்கமாக இருந்ததால் எல்லோரும் நல்லவர்களாக வாழ்ந்தார்கள். இங்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் அற்ற நிலை. பல குடும்பங்களில் சீர்கேடுகள் எப்பவோ புலம் பெயர் நாடுகளில் ஆரம்பித்தாலும் எம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் வாழுகின்றோம். நானே பெண்ணை இருந்துகொண்டு இப்படி ஒரு பெண்ணின் கதையை எழுதுவது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் கதையின் முடிவும் நீங்கள் எதிர்பாராததாக இருக்கும். நன்றி கோமகன்.

உலகத்தில் எமக்குத் தெரியாத விடயங்கள் எத்தனையோ இருக்கு. நாம் எம்மைச் சுற்றி நடப்பவற்றை மட்டும் வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் அதேபோல் தான் என எடை போட முடியாது. எம் சமூகக் கட்டுப்பாடுகள் எம்மினத்தை  ஒரு கட்டுக் கோப்புக்குள் வாழவைத்துக் கொண்டிருந்தது.அதுவுமல்லாமல் புலத்தில் சமூகம் சார் வாழ்க்கை முறை மிக இறுக்கமாக இருந்ததால் எல்லோரும் நல்லவர்களாக வாழ்ந்தார்கள். இங்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் அற்ற நிலை. பல குடும்பங்களில் சீர்கேடுகள் எப்பவோ புலம் பெயர் நாடுகளில் ஆரம்பித்தாலும் எம்மால் அதை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலையில் வாழுகின்றோம்.

நானே பெண்ணை இருந்துகொண்டு இப்படி ஒரு பெண்ணின் கதையை எழுதுவது பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கும். ஆனால் கதையின் முடிவும் நீங்கள் எதிர்பாராததாக இருக்கும். நன்றி கோமகன்.

 

இப்படியான சமூகப்பிறள்வுகள் எல்லாக்காலத்திலும் நடந்திருக்கின்றது . அன்றைய காலக்கட்டங்களில் ஊடகங்களின் தாக்கம் மக்களில் பெரிதாக இருந்திருக்கவில்லை . அதனால் அவை மக்கள்முன் வெளிச்சத்திற்கு வரவில்லை .என்னைப் பொறுத்தவரையில் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளை எழுத்தில் சமரசங்கள் வைக்காது உரித்துக்காட்டுபவரே ஒரு சிறந்த படைப்பாளியாவார் . இதற்கு ஆண் பெண் வேறுபாடு தேள்வையில்லை , எழுத்தில் நேர்மைத்தன்மை இருந்தாலே போதுமானது . நான் வைத்த  கருத்து கதையில் வந்த கதாபாத்திரத்திற்கே ஒழிய , உங்கள் எழுத்தை மட்டம் தட்டி இல்லை . இந்த கோவை கோவிச்சுபோட்டியளே சுமே :lol: :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

போலி கலாச்சார காவலர்களிற்கு மத்தியில் இதுபோன்ற முகத்தில் அறையும் உண்மைகளை  பெண்கள் எழுதுவது குறைவு  அதை நீங்கள் செய்ய முநை்திருக்கிறீர்கள். வரவேற்கப் படவேண்டியது . ஆனால் எழுத்து நடையில் மேலும்  மாற்றங்கள் கொண்டுவந்தால்  இன்னும் சிறப்பாக இருக்கும். யாரவன் எனக்கு புத்தி சொல்ல எண்டு நினைச்சால்  வேண்டாம். உங்கள் பாணியில்  தொடருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் உங்களுக்காக மட்டும் அந்தப் பதிலை எழுதவில்லை கோமகன். இனி வாசிப்பவர்களுக்குமானது அது. எனக்கு கோவம் இல்லை. :D

நான் நல்லவற்றை கேட்பேன் சாத்திரி. இப்ப தானே ஆரம்பித்துள்ளேன். போகப் போக மாற்றம் கொண்டுவர முனைகிறேன். நன்றி. :D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்!

கவர்ச்சியை மட்டுமே அடித்தளமாகக் கொண்ட ஒரு காதல் ! 

அன்பின் அவசர வெளிப்படுத்தல்கள்! உடலியல், சமூகத் தேவைகள்!

ஒருவரை ஒருவர் முற்றாகப் புரிந்து கொள்ள முதலே, பொருளாதார, சமூகக் காரணிகள் திருமணமொன்றை 

அவசரமாக முடித்து வைப்பதன், விளைவை நன்றாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்,சுமே!

மது, ஒரு வண்ணத்துப் பூச்சியாகிறாள்!

இறுதியில், மதுவின் காதல், ஊமத்தைப் பூக்களை, அடையாளம் கண்டு கொள்ளும், என நம்புகின்றேன்!

 

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் எழுத்துப்பிழைகளை கொஞ்சம் கவனத்தில் கொண்டால் நன்று...இவ்வளவு பெரிய தடித்த எழுத்தும் வேணுமா என்று நினைக்க தோன்றுகிறது..உங்கள் விருப்பம்.


என்னைப் பொறுத்த மட்டில் இருப்பதை விட்டு பறக்க துடிக்கும் மது போன்ற பெண்களின் செயல்பாடுகளினால் தான் நல்லமுறையில் பழகுபவர்களைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. இது இருபாலாருக்கும் பொருந்தும்..ஆண்களோடு நட்பாக,அண்ணாவாக,தம்பியாக பழகுவதில் தப்பில்லை. ஓரளவுக்காவது பிரச்சனைகளின்றி வாழ்பவர்கள் அதையும் குழப்பிக்கொண்டு பறக்க வெளிக்கிட்டால் அப்படியானவர்களின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது ..கதையின் படி பார்க்க போனால் தனிமை என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாத ஒரு பெண் மனதை அலையவிடுவதை கண்டிப்பாக நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்..சரி கணவர் தன்டபாட்டுக்கு வேலைக்கு போறதும் வாறதுமாக இருக்கிறார் என்றால் அந்த குழந்தை என்ன பாவம் செய்தது....தானும் அவஸ்த்தைக்கு உள்ளாகி தன்னைத் சார்ந்தவர்களையும் அதே நிலைக்கு தள்ளுகிறார்கள்...இங்கும் இப்படி நிறைய சம்பவங்களை நாளாந்தம் கேக்க கூடியதாக இருக்கிறது..தந்தை ஒரு வழி,தாய் இன்னோரு வழி என்று திரிபவர்களது பிள்ளைகளினது நிலை பற்றி அறிந்திருக்கிறேன்.....பிரச்சனைகளோடு இருக்கும் வீடுகளைப் பார்த்தால் வளர்ந்த பிள்ளைகள் கூட இருப்பார்கள்.பெற்றோர் பிரச்சனைப்பட்டுக் கொண்டே  காலத்தை இழுப்பதால் படிப்பை கூட ஒழுங்காக தொடர முடியாத சூழ் நிலைக்கு பிள்ளைகள்  தள்ளப்பட்டு இருக்கிறார்கள். மதுபோன்றவர்களினது செயல்பாட்டை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள ஏலாது..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிஞ்சு இங்கே ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்து லண்டனுக்கு வந்தார்.வந்த ஒரு வருடத்தில் விசா கிடைத்தவுடன் அவரை விவாகரத்து செய்து விட்டு ஊரில் இருந்த தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டி இப்ப பிள்ளையோடும்,கணவரோடும் சேர்ந்து கோயிலுக்கு வருகின்றார்...இதில் விசேசம் என்ன என்டால் அதே கோயிலில் தன்ட பழைய கணவரோடு சேர்ந்து வந்தவர்...அப்போது கோயிலுக்கு வந்து முட்டிக்காலில் இருந்து நேர்த்திக் கடன் வைத்து விழுந்து என்னோ எல்லாம் செய்து தான் தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டினவர்...அவர்கள் நல்லாய் இருக்க மாட்டார்கள்,அழிந்து போய் விடுவார்கள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் சரி வராது...எனக்குத் தெரிஞ்சு அப்படியான ஆட்களுக்குத் தான் நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குது

எனக்குத் தெரிஞ்சு இங்கே ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்து லண்டனுக்கு வந்தார்.வந்த ஒரு வருடத்தில் விசா கிடைத்தவுடன் அவரை விவாகரத்து செய்து விட்டு ஊரில் இருந்த தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டி இப்ப பிள்ளையோடும்,கணவரோடும் சேர்ந்து கோயிலுக்கு வருகின்றார்...இதில் விசேசம் என்ன என்டால் அதே கோயிலில் தன்ட பழைய கணவரோடு சேர்ந்து வந்தவர்...அப்போது கோயிலுக்கு வந்து முட்டிக்காலில் இருந்து நேர்த்திக் கடன் வைத்து விழுந்து என்னோ எல்லாம் செய்து தான் தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டினவர்...அவர்கள் நல்லாய் இருக்க மாட்டார்கள்,அழிந்து போய் விடுவார்கள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் சரி வராது...எனக்குத் தெரிஞ்சு அப்படியான ஆட்களுக்குத் தான் நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குது

 

இப்ப என்னதான் சொல்லவாறியள் அக்கை  :o  :o  ?? காப்பிறேட் உலகத்திலை இதெல்லாம் நோர்மல் எண்டால் பேந்தேன் கலியாணமும் புடலங்காயும் :unsure: :unsure: ??  ரோட்டலி பெடியளை கேணைபயலுகள் ஆக்கிறதுக்குத்தான் வழிபண்ணுறியள் :lol: :lol: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.