Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 வணக்கம் உறவுகளே !

பெண்கள் பற்றிய ஒரு கருத்தாடலை உங்களுடன் நடத்த வேண்டும் என்ற என் எண்ணத்துக்கு இன்றுதான் எனக்குத் துணிவு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாகவே இதுபற்றி எழுதவேண்டும் என எண்ணினாலும் மற்றவர் அதிலும் ஆண்களின் பார்வை எப்படி இருக்குமோ என்ற சிறிய அச்சத்தினால் எழுதத் தயக்கம் ஏற்பட்டது. ஆனாலும் துணிந்து ஒருவர் சொல்வதன் மூலம் சிலருக்காவது அது நன்மை பயக்குமெனில் சொல்வதே நன்று என எண்ணித் துணிந்ததனால் எழுதுகிறேன்.

எமது பண்பாடும் கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. எம் முன்னோர் தம் அனுபவத்திற் கண்டவற்றை அலசி ஆராய்ந்ததன் பயனாக பல கட்டுப்பாடுகளையும் பயங்களையும் ஊட்டி எம்மினத்தை ஒரு மேன்மையான இனமாக்கி, வழிவழியாக இத்தனை காலமாக வழிநடத்தியுள்ளனர். தமிழன் என்றால் அவன் தனக்கென சிறந்த பண்பாட்டினைக் கொண்டவன் என உலகே அறிந்திருந்த காலம் ஒன்றிருந்தது.

போரின் பின்னரான இடப்பெயர்வுகள் எம்மினத்தின் அனைத்தையும் புலம் பெயர் தேசங்களில் சிதைத்தது மட்டுமன்றி, தாம் வாழும் தேசத்தின் கலாச்சாரச் சூழலில் வாழ்வதால் எப்படியும் வாழலாம் எனும் கோட்பாட்டையும் பலர் மனங்களில் ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் புலம் பெயர் தேசத்தில் திருமணமான ஆண் பெண் இருபாலாரும் குடும்ப வாழ்க்கை வாழும்போதே நெறி பிறழ்ந்து மாற்றான் மனைவியுடனும், மாற்றாள் கணவனுடனும் தவறான தொடர்புகளை ஏற்படுத்தி தம் வாழ்வையும் இழந்து, மற்றவர் வாழ்வையும் சிதைக்கின்றனர்.

இதனால் புலம் பெயர் நாடுகளில் வாழும் பல குடும்பங்களின் பிள்ளைகள், பாரிய இழப்புக்களுடன் வாழவேண்டியவர்களாக, தம் சுயம் தொலைத்து வாழ்வை வீணாக்கிக் கொள்வது மட்டுமல்லாது, இளம் சமுதாயமும் அவர்களைப் பார்த்து மேற்குலக நாகரிக வாழ்வைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றனர். இதனை ஒரேயடியாக நிறுத்த முடியாவிட்டாலும் புலம்பெயர் தேசத்தின் எம் இளஞ்சந்ததி ஒரேயடியாக அந்நியக் கலாச்சாரத்துள் மூழ்காது தடுக்கலாம் என்னும் ஒரு நப்பாசைதான் இதை எழுதத் தூண்டியது எனலாம்.

பொதுவாகவே பெண்களிற் பலர் பேராசை கொண்டவர்கள். உணர்வுமயமானவர்கள். இலகுவில் அன்புக்கு அடிமையாகுபவர்கள், ஏமாறக் கூடியவர்கள் என்று  பலவகையினர் உள்ளனர். திருமணமான பெண் தவறு செய்ய எண்ணுகிறாள் என்றால் நாம் உடனே அப்பெண்ணை தவறாகவே பார்க்கின்றோம். அவள் அத் தவறினை ஏன் செய்கின்றாள் என ஒரு கணமேனும் எண்ணிப் பார்ப்பதில்லை. பல எதிர் பார்ப்புகளுடன் கணவனைக் கைப்பிடிப்பவள், அவனிடம் அவை இல்லை என்று தெரியும்போது எத்தனை ஏமாற்றத்துக்கு உள்ளாவாள் என நீங்கள் எண்ணிப் பார்த்ததுண்டா? ஏமாற்றத்திற்கு உள்ளானாலும் பின்னர் சுதாகரித்துக் கொண்டு வாழ முற்படும் மனைவியை கணவனின் செய்கையே அவனிடம் வெறுப்பை ஏற்படுத்திவிடுகிறது. அவளை, அவளின் உணர்வுகளை, அவளின் ஆசைகளைக் கூட பல கணவர் தெரிந்து கொள்வதில்லை. தானும் தன்சார்ந்த விருப்பு வெறுப்புக்களையும் அவளிடம் திணிப்பதும், அவளின் அபிலாசைகளுக்கு மதிப்பளிக்காததும், அவளை இன்னொருவனை நாட வைக்கின்றன.

அதற்கான காரணம், முன்பிருந்த எமது குமுகாய வாழ்வுமுறை இன்று புலம்பெயர் தேசத்தில் இல்லாமையும், குமுகாயத்தின்பால் இருக்கும் பயமின்மையும் பொருளாதார வாழ்வாதாரத்தை இங்குள்ள அரசுகள் தாராளமாக வழங்குவதும், அதனால் பிறர் கையை எதிர்பார்க்க வேண்டிய தேவை இல்லாதிருப்பதுவுமே பல பெண்களை துணிந்து முடிவுகளையும் எடுக்க வைக்கின்றன. அன்புக்காக எங்கும் பெண் தன் கணவனிடம் உடனே அது கிடைக்காவிடினும் காத்திருக்கிறாள். சிலருக்கு அதுவே பழகிப் போய் எதிர்பார்ப்புக்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு அந்த ஏதுமற்ற வாழ்விற்கு தன்னைப் பழக்கப் படுத்தியும் கொள்கிறாள். ஆனால் எல்லாப் பெண்களாலும் அப்படி இருக்க முடிவதில்லை. எங்கே அந்த அன்பு கிடைக்கிறதோ அதை முன்யோசனையின்றி பற்றியும் கொள்கிறாள். செக்ஸ் என்பதை விட தன்னில் ஒருவன் அன்பு செலுத்துகிறான், அக்கறையாக இருக்கிறான் என்பதே அவளுக்கு பெரிதாகப் படுகிறது. அதனால் தவறு என்று தெரிந்தும் அவள் மாற்றானிடம் ஆசை கொள்கிறாள்.

பல ஆண்கள், வாழ்வில் ஒரு பெண்ணை பாலினச்சேர்க்கை  மட்டுமே திருப்பதிப் படுத்தப்போதுமானது என எண்ணுகிறான். பாலினச்சேர்க்கை வாழ்க்கையில் முக்கியம்தான். அனால் கணவனின் ஆளுமை அதையும் மீறி அனைத்து விடயங்களிலும் இருப்பதையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர்.  படித்த கணவன் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பது பல பெண்களின் விருப்பமாக இருந்தாலும் கிடைக்கும் வாழ்வை மகிழ்வுடன் ஏற்று வாழும் பெண்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒரு ஆண் பெண்ணைக் கவர படித்தவனாக இருக்கவேண்டும் என்பது இல்லை. அவனின் பேச்சு வன்மையே ஒரு பெண்ணை வீழ்த்தப் போதுமானது. அதன்பின் அவன் சமூகத்துடுடன் பழகக் கூடிய தன்மை, ஒரு விடயத்தை எதிர்கொள்ளும் துணிவு, அவனின் நேர்மை என்பனவே ஒரு பெண்ணை, ஆணின் பால் செல்ல வைக்கிறது. ஆனால் விதிவிலக்குகள் பலவும் உண்டுதான். வெளியே மிகவும் அப்பாவிகள் போல் தோற்றமளிக்கும் பலர் இரட்டை வாழ்க்கை வாழ்வதை நான் கண்டு பிரமித்திருக்கிறேன். பல ஆண்கள் அப்படியான பெண்களைக் உலகத்தில் இல்லாத உத்தமிகள் போல் போற்றுவதும், அவர்களை உதாரணம் காட்டி, அவர்களுக்காகத் தன் மனைவியை தூற்றுவதையும் கூட பல இடங்களில் அவதானித்தும் உள்ளேன்.

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் வரை, பிரச்சனைகள் இருக்காது என எண்ணி பெண்ணை வீட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்கள் பலர் இருக்கின்றனர். வீடுக்குத் தேவையான அனைத்தையும் தாமே வாங்கிவந்து நீ ஏன் கஷ்டப் படுவான். அதுதான்  நானே எல்லாவற்றையும் உனக்குச் செய்கிறேன் என மார்தட்டும் பல ஆண்கள், தன் மனைவியை வெளியே விட்டால் வேறு ஆண்களை பார்ப்பாளோ, வேறொருவன் என் மனைவி மனதை மாற்றிவிடுவானோ என தம்மிடமுள்ள தாழ்வு மனப்பாங்கினால், மனைவியின்பால் சந்தேகம் கொள்ளும் கணவர்களும் பலர் உள்ளனர்.  சில பெண்கள் அதை உண்மை என்று நம்பி வாக்கை பூராவும் அவனுக்கு அடிமையாக இருந்தே காலம் கழித்து விடுகின்றனர். அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் வாழ்வில் சிறு சிறு பூசல்களில் தொடக்கி பெரிதாகி குடும்பம் பிரியும் நிலையும் இதனால் ஏற்பட்டுப் போகின்றது.
பல பெற்றோர் நன்மை செய்வதாக எண்ணிக் கொண்டு பல பெண்களின் வாழ்வை தாமே சீரழித்த சம்பவங்கள் கூட எத்தனையோ உள்ளன. பல பெற்றோர் சுயநலம் மிக்கவர்களாகவே இன்றுவரை உள்ளனர். எழுதுவதற்கும் பேசுவதற்கும் பெற்றோர் உத்தமர்களாக இருப்பார்கள். பெரும்பாலானவர்கள் யதார்த்த வாழ்வில் முரண்பட்டே இருக்கின்றனர். அதுவும் மூத்த பெண்கள் என்றால் அவர்கள் கீழே உள்ள சகோதரிகளுக்காக சிலவேளைகளில் விருப்பமற்ற திருமண வாழ்க்கைக்கு சம்மதித்து, காலம் முழுவதும் ஒரு இழப்பின் தாக்கத்துடனேயே வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்கும் ஆளாகின்றாள்.

பல ஆண்கள், மனைவியுடன் உறவில் ஈடுபடும்போது அவளின் விருப்பு வெறுப்புகளிற்கு அப்பாற்பட்டு இயந்திரத்தனமான உறவை மேற்கொள்கின்றனர். ஓர் இனிய தாம்பத்திய உறவுக்குப் பழக்கப்படாத பெண்ணிற்கு சிலநாட்களிலேயே கணவனில் வெறுப்பு ஏற்பட்டுவிடும். அத்தகையவர்களும் வேறொருவனை நாடும் சந்தர்ப்பம் உண்டு. புலம் பெயர் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னும் கட்டுப் பெட்டிகளாக இருக்கும் ஆண்கள் இங்கு நிறையவே இருக்கின்றார்கள்.

ஒரு பெண் தவறு செய்வதற்கான காரணம், அவளுக்கு தானாகவே ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது அல்லது ஏற்படுத்தப் படுகிறது.
எப்போதும் மதுவில் மூழ்கிக் கிடக்கும் கணவன் தன்  மனைவிக்கு நியாயமான கிடைக்கவேண்டிய உடல் சார்ந்த உறவை வழங்கத் தவறிவிடும் பட்சத்தில், அவள் இன்னொருவனை நாடுவதை எப்படித் தவறென்று கூற முடியும். இப்படி நான் எழுதுவதற்கு கல்லெறியாது நியாயப்படி யோசித்தீர்களானால் உங்களுக்குக் கோபம் ஏற்படாது. ஆனாலும் பெருப்பாலான பெண்கள் அதைக் கூடச் சகித்துக் கொண்டு வாழ்கின்றார்கள். மேற்கத்தைய சமூகத்துடன் ஒப்பிடும் பொழுது தமிழ்ப் பெண்களை கணவன்மார் கும்பிடத்தான் வேண்டும். மேற்கத்தேயப் பெண்கள் போல் நாம் வாழத் தலைப்பட்டால் தமிழ் ஆண்களின் நிலை என்ன ஆகும்.

இன்னும் சில ஆண்கள் தாம் அடிக்கடி மனைவியுடன் உறவு கொள்வதை மனைவி விரும்புவதாக எண்ணிக்கொண்டு அல்லது தன் பலவீனத்தை மூடி மறைப்பதற்கு எப்போதும் விரசமாகக் கதைப்பதும், நேர காலம் பார்க்காது உறவில் ஈடுபட நிர்ப்பந்திப்பதும் கூட பெண்களுக்கு ஆணின்மேல் வெறுப்பையே வளர்க்கும். பலர் வீடியோ காட்சிகளைப் போட்டு இன்னும் வெறுப்பை அதிகரிக்கச் செய்வர். இவையெல்லாம் பெண்களுக்கு உடலுறவில் வெறுப்பைத்தான் ஏற்படுத்தும். இப்படியானவையால் நாட்  செல்லச் செல்ல ஒருவித இயந்திரத் தனம் தலை தூக்கப் பார்க்கும்  என்கின்றனர் மனோவியலாளர்கள். இப்படியான காரணிகள் கூட பெண்ணை தடம் புரள வைக்கின்றன.

பலர் வெளிநாடு தானே என எண்ணி மனைவியை மதுவகைக்களுக்குப் பழக்கப் படுத்துவதும் தன் சொற்ப நேர ஆசைக்காக குடிக்கும்படி வற்புறுத்துவதும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பெண் பெண்ணாக இருக்கும் வரைதான் ஒரு குடும்பமும் குடும்பமாக இருக்கும். நாகரிகம் என்பது வேறு பண்பாடு பழக்க வழக்கம் என்பது வேறு. எம் சமூகத்தில் அதி உன்னத குடும்ப வாழ்வியலை ஏற்படுத்தியுள்ளனர். அவற்றை உடைந்து போகாது  பாதுகாக்க வேண்டிய கடமை ஆண்  பெண் இருவருக்குமே இருந்தாலும் ஆண்கள்தான் வேலியாக இருந்து  காக்கவேண்டியவர்கள்.

ஆண்கள் தானே நாம் எதுவும் செய்யலாம் என்னும் மனப்போக்கும் பல ஆண்களுக்கு  உண்டு. உங்கள் மனைவியிடம் நேர்மையை உண்மையை எதிர் பார்க்கும் நீங்கள் உங்கள் மனைவிக்கும் உண்மையாக இருக்க வேண்டாமா. என் நண்பியின் கணவன் பொறுப்புள்ள அப்பா. நல்ல குடும்பத் தலைவன். சமுதாயத்தாலும் மதிக்கப் படும் ஒருவர். ஆனால் தன நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களிடம் அவருக்குத் தொடர்பு இருப்பதாக பலர் கூறுவதைக் கேட்டு எனக்குக் கோபம் வந்தது. நண்பியிடம் கூறுவோமா? சரியாகத் தெரியாது எப்படிக் கூறுவது என எண்ணிக்கொண்டிருந்தவேளை,  எனது  தொலைபேசிக்கு நண்பியின் கணவர் அழைத்திருக்கிறார். நான் எடுக்கவில்லை என்பதால் அது தானாகவே தகவல்ப் பெட்டிக்குப் போய்விட்டது. நண்பியின் கணவர் தொலை பேசியை நிறுத்த மறந்து ஒரு பெண்ணுடன் வார்த்தைகளில் சல்லாபித்தது என் தொலைபேசியில் பதிவாகிவிட்டது.

நான் செய்திகளை உடனுக்குடன் கேட்கும் பழக்கமற்றவள் என்பதனால் ஒரு வாரம் செல்ல எல்லாச் செய்திகளையும் கேட்கும்போது இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அன்று மாலையே என் நண்பியிடம் சென்று அதைப் போட்டுக் காட்டி உன் கணவரைக் கொஞ்சம் கவனித்துக் கொள் என்றேன். அவள் சொன்னாள் என்னுடனேயே அவருக்கு முடிவதில்லை பல நாட்கள் மற்றவர்களிடமா போகப் போகிறார். சும்மா பகிடிக்குக் கதைத்திருப்பார் என்றாள் சிரித்துக் கொண்டே. எனக்கு என்ன செய்வது என்றே தெரியாது மன்னிப்புக் கேட்டுவிட்டு வந்துவிட்டேன். இப்படிப் பட்ட அப்பாவிப் பெண்கள் இருக்கும் வரை தவறு செய்யும் ஆண்களும் இருந்துகொண்டே இருப்பார்கள் தான்.

பல ஆண்கள் பெண்ணை முழு குடும்பச் சுமையை இழுக்கும் ஒரு வண்டியாகவே இன்றும் கூட பயன்படுத்துகின்றனர். ஆண்கள் வேலைக்குப் போவது கடினம் தான் இல்லை என்று கூறவில்லை. அதைவிட பிள்ளைகளை பராமரித்து, சமைத்து, வீட்டுவேலைகள் எல்லாம் பார்த்து காலை எழுந்தநேரம் தொடக்கி இரவுவரை துன்பப்படும் பெண்களும் பலர் உள்ளனர். கணவன் மனைவிக்கு ஒரு தேநீர் கூடப் போட்டுக் கொடுப்பதில்லை. ஆனாலும் பல பெண்கள் சளைக்காமல் குடும்பத்துக்காக உழைத்துக் கொண்டே இருக்கின்றனர். கணவனுக்கு நோய் ஏற்பட்டால் அதற்காக மனைவி கணவனை விட்டுப் பிரிந்து போவதில்லை. தன் ஆசைகளை அடக்கி அவனுக்காகவே அவனுடன் வாழ்ந்தும் விடுவாள். அப்படியிருக்க பெண் பாதை மாறிப் போகிறாள் எனில் காரணம் என்னவாக இருக்க முடியும் ????நீங்கள் தான் கூற வேண்டும்.

தயவு செய்து ஆரோக்கியமான கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள்.

  • Replies 148
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted
தயவு செய்து ஆரோக்கியமான கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள்.

 

 

ஆரோக்கியமுன்னா.. பரசிற்றமோல்.. கொடுத்து காய்ச்சல் சுகப்படுத்திற மாதிரியானதா. :lol:

 

உங்கள் எழுத்தில் எனக்கு நிறைய முரண்பாடுகள் தென்படுகின்றன சுமே அக்கா.

 

நீங்கள் ஆண்களை ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போலவும் பெண்கள் பூகோளவாசிகள் போலவும் வைச்சு சிந்திக்கிறீங்க. ஆணும் உங்களைப் போல ஒரு மனிதன் என்ற அடிப்படையை நீங்களும் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அப்படி பெண்கள் ஆண்களை கருதாத வரை ஆண்களும் உங்களை மனிசரா கருதவே மாட்டாங்க..! அப்புறம் குறை சொல்லி.. பயனில்லை..!

 

 

பொதுவாகவே பெண்களிற் பலர் பேராசை கொண்டவர்கள். உணர்வுமயமானவர்கள். இலகுவில் அன்புக்கு அடிமையாகுபவர்கள், ஏமாறக் கூடியவர்கள் என்று  பலவகையினர் உள்ளனர்.

 

பேராசை... பெண்களுக்கு மட்டுமா இருக்குது. பொதுவா மனிசருக்கு இருக்குத்தானே. அன்புக்கு ஆண்கள் அடிமையாவதில்லையோ..??! பெண்களுக்கு ஏமாற மட்டுமா தெரியும்..?! ஏமாற்றவே மாட்டார்களோ..???!

 

ஒரு உதாரணத்திற்கு இது.. இப்படி நிறைய முரண்பாடுகள்.. ஒரு பக்கச்சார்பான ஆதங்கக் கொட்டுகை என்பதைத் தவிர வேற சொல்ல இல்லை..! :):icon_idea:

Posted

திருப்தி என்றால் என்ன என்பதை பற்றி பெண்கள் கற்க வேணும்.

 

ஆசை, மற்றவர்களைப்பற்றிய கொசிப்புகள், பொறமைகள், மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது, ..........இப்படி பல எழுதலாம்......

 

நீங்க எழுதியது ஒரு சில பெண்களின் பக்கம். பல பெண்களை தெரியும் எப்படி கணவனின் காசை சுருட்டிக்கிட்டு மற்றவனுடன் ஓடினார்களென்று.

 

இப்படி இருபாலரிலும் இருக்கின்றார்கள், அது அவர்களின் மனம் &  வாழ்கின்ற சூழ்நிலைகளை பொறுத்தது

  • கருத்துக்கள உறவுகள்
Posted
திருப்தி என்றால் என்ன என்பதை பற்றி பெண்கள் கற்க வேணும்.

 

ஆசை, மற்றவர்களைப்பற்றிய கொசிப்புகள், பொறமைகள், மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது, ..........இப்படி பல எழுதலாம்......

 

நீங்க எழுதியது ஒரு சில பெண்களின் பக்கம். பல பெண்களை தெரியும் எப்படி கணவனின் காசை சுருட்டிக்கிட்டு மற்றவனுடன் ஓடினார்களென்று.

 

இப்படி இருபாலரிலும் இருக்கின்றார்கள், அது அவர்களின் மனம் &  வாழ்கின்ற சூழ்நிலைகளை பொறுத்தது

 

வந்திதேவனின் கருத்தை நான் வழிமொழிகிறேன்.

 

 

பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் வரை, பிரச்சனைகள் இருக்காது என எண்ணி பெண்ணை வீட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்கள் பலர் இருக்கின்றனர். வீடுக்குத் தேவையான அனைத்தையும் தாமே வாங்கிவந்து நீ ஏன் கஷ்டப் படுவான். அதுதான்  நானே எல்லாவற்றையும் உனக்குச் செய்கிறேன் என மார்தட்டும் பல ஆண்கள், தன் மனைவியை வெளியே விட்டால் வேறு ஆண்களை பார்ப்பாளோ, வேறொருவன் என் மனைவி மனதை மாற்றிவிடுவானோ என தம்மிடமுள்ள தாழ்வு மனப்பாங்கினால், மனைவியின்பால் சந்தேகம் கொள்ளும் கணவர்களும் பலர் உள்ளனர்.

 

உதாரணத்திற்கு.. மிகச் சுலபமாக சுமே அக்கா ஆண்கள் மீது பழியையும் போட்டு.. தாழ்வுமனப்பான்மை என்ற பட்டத்தையும் சூட்டிட்டுப் போயிட்டா. ஆனால் பல பெண்கள்.. வேலையிடத்திலோ.. வெளியிலோ.. கணவனையோ.. காதலனையோ.. ஏமாற்றி பேராசை கொண்டோ.. ஆசை கொண்டோ.. ஏதோ ஒரு உணர்ச்சியின் உந்துதலிலோ.. தேவையிலோ.. தகாத உறவுகளை வளர்த்துக் கொண்டு.. நம்பிய உள்ளங்களை நோகப்படுத்தி வாழ்ந்து கொண்டும்.. உளர். அவர்களுக்கு உள்ள உளவியல் பிரச்சனையை ஏன் சுமே அக்கா அப்படியே மறைச்சிட்டா..???!

 

பெண்கள் தங்களைப் பற்றிய பகிர்வில்.. சொந்த விடயங்களில் உள்ள transparency க்கு இடமளிக்காமல்.. எல்லாப் பழியையும் ஆணின் மீது தூக்கிப் போட்டுவிட்டு சொந்தத் தவறுகளுக்கும் அவனே பொறுப்பென்று கூறித் தப்பிக்க விளைகின்றனர். இது மிகத்தவறான அணுகுமுறை மட்டுமன்றி.. தங்கள் தவறை உணரவும் திருத்தவும் அவர்களால் முடியாத நிலைக்கு இந்த உளவியல் நிலை அவர்களை இட்டுச் செல்லும்.

 

புலம்பெயர் நாடுகளில் பல... தமிழ் பெண்கள் பெரிய பிள்ளைகளையும் வைத்துக் கொண்டும்.. குடும்பப் பிரிவினைக்கும்.. தகாத உறவுகளுக்கும் போகின்றனர்..!! பிள்ளைகளும் இதனால் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர். கணவன் என்ற அந்த ஆணும் தவறான வழியில் இழுக்கப்பட்டு.. அல்லது தள்ளப்பட்டு சீரழிக்கச் செய்யப்படுகிறான்.

 

பெண்கள் தங்கள் சமூப்பாத்திரம் அறியாமல் வெறும் உணர்ச்சிப் போக்கில் வாழ்வதே வாழ்வு என்று அல்லது வாழ விளைவது கூட ஆபத்தான ஒன்று. அண்மையில் புலம்பெயர் நாட்டில் ஒரு பள்ளியில் (அநேகம் தமிழ் மாணவ மாணவிகள் கற்கும் பள்ளி) கற்கும் மாணவர்கள் சொன்னது ஆச்சரியப்பட வைத்தது. அங்கு கல்வி பயிலும்.. 90% மாணவிகள் virgin இல்லை என்பது தான் அது. அந்தளவுக்கு கட்டுப்பாடிழந்து உணர்ச்சி வேகத்தில் வாழ்ந்தால்.. எப்படி அந்த வாழ்க்கை.. பிற்காலத்தில் நிம்மதியானதாக இருக்கும்..????!

 

ஒரு உயிரினத்திற்கு அதன் உணர்வுகளுக்கு கட்டுப்பாடு வேண்டும். அதனை மீறினால் அந்த உயிரி இயற்கையால் ஏதோ ஒரு வகையில் அழிக்கப்படும். அது மனிதப் பெண்களுக்கும் பொருந்தும் ஆண்களுக்கும் பொருந்தும். :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிற்சயமாக இது ஆண்கள் மீதான தக்குதலன்றி வேறு ஏதுவுமில்லை .

முற்று முழுதாக ஆண்களினாலேயே பெண்கள் குற்றமிழைக்கிறார்கள்  ஏன்ற போர்வையில் பதியப்படிருக்கிறது 
பெண்களின் பேராசையும் பொறாமையும் தெரிந்தே செய்யும் தவறுகளும் குறிப்பிடப்படவில்லை (குறிப்பிடவில்லையா இல்லை மறைத்து விட்டீர்களா )
பெண்ணியம் பேசும் பெண்களும் ஆணை குறைகூறும் பெண்களும் ஆண்களை மணந்து வாழ தானே ஆசைப்படுகிறீர்கள்.
உங்கள் பேராசைகளுக்கு உரிய ஆணை நீங்கள் ஆரம்பத்திலயே தெரிந்தேடுத்துகொண்டீர்களானால் நீங்கள் பின் வருத்தப்பட வேண்டியதில்லை 
கடினமாக இருந்தால் திருமணம் செய்யாதீர்கள் :icon_idea: .
இப்படியான பல கருத்துகளால் தான் என்னை போன்றவர்கள் பெண்கள் என்றால் விழுந்தடித்து ஓடிவிடுகிறோம்  :D 
பெண் எண்டாலே கடுப்பாயிருக்கு அக்கா.
ஏதோ உங்களால் முடிந்தளவுக்கு சூனியம் வைத்திருக்கிறீர்கள் :wub:
Posted

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ...........என்பது எம் வேதவாக்கு .

மணவாழ்க்கை அமைவதற்கோர் மனைவி  வாய்க்க வேண்டும் .குலமகளாய் கிடைப்பதற்கோ கொடுத்துவைக்க வேண்டும் என ஒரு கவிஞன் எழுதினான் , .

 

நீ அவனாகவும்  நீ அவளாகவும் இருக்கக்கடவீர்கள் என்னும் நோக்கில் திருமணம் என்னும் பந்தத்தை இறைவன் உருவாக்கினான் .

 

 

உண்மையில் திருமணமான பின்பு  இருவர் [ நானும் அவளும்,] ஒருவராகிறோம் ..இது யதார்த்தம். அந்த ஒருவராகிய நானும்  ,என் துணைவியும்  இந்த உலகில் இறக்கும் வரை வாழவேண்டும். ஒருவராக வாழவேண்டும். இந்த உண்மையை புரிந்து கொண்டு ஆணும் பெண்ணும் வாழும்போது அனைத்து சுமைகளும்,துன்பங்களும் ,பாரங்களும் பேரின்பமாக தெரியும். ஒட்டு மொத்தத்தில் இந்த விடயத்தைப்பொறுத்தவரையில்   ஆயிரம் கட்டுரைகளை எழுதினாலும் ஆயிரம் ஆயிரம் ஆய்வுகளை செய்தாலும் ,மனிதன் [ஆணும்,பெண்ணும் ] அன்பு ,பாசம், இரக்கம், போன்ற பண்புகளை புரிந்து கொள்ளாதவரை இதற்கு விடை காணமுடியாது. ஆகவே புரிந்துணர்வு என்னும் காரணியே திருமணபந்தத்தில் இணைந்துள்ள ஆணினதும் ,பெண்ணினதும் பிணக்குகளை நிர்ணயிக்கின்றது.

பதிவுக்கு நன்றிகள் அக்கா

Posted

திருமணத்தின் பின் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருவரும் விட்டுக் கொடுத்து, தங்கள் வசதிக்கேற்ப   வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாட்டி வாழ்க்கை முழுக்க கஷ்டம்தான். அதைவிட பிரிந்து வாழலாம்.

  

 சிலர் குடிப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்வார்கள். அது மாதிரி பெண்கள் பாதை மாறிப் போவதற்கான முழுப் பழியையும்  ஆண்கள் மேலேயே போடுகிறீர்கள் சுமே. எவ்வளவோ தாங்கிட்டம்  இதையும் தாங்க மாட்டமா. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப பெண்களுக்கு முக்கியம் பக்கத்து வீட்டுக்காறியின் வாழ்க்ககையும் அவளை மாதிரி வாழ பணம் பணம் பணம்.மற்றதெல்லாம் இப்ப வெறும் ஏட்டுச்சுரைக்காய்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே

இந்த தலைப்பை பார்த்ததும்  ஓடி வந்தேன்.

ஏதாவது பெண்கள் பற்றிய  நல்ல நிலையை  தொட்டிருப்பீர்கள் என்று.

ஆனால் பலம் பெயர் பெண்கள் பற்றி தவறான கண்ணோட்டத்தில் முதல் சில வரிகளில் தொடங்கியிருப்பதைப்பார்த்ததும் வேதனையாக இருந்தது. தப்பான தேடல்.

மீதியை  வாசிக்கவே இல்லை.

 

பெண்களே  இவ்வாறு தம்மை பிரித்து இவர் நல்லவர் அவர் கெட்டவர்

ஊரில் இருப்பவர் உத்தமர் வெளியில் வந்தவர் தறிகெட்டோர் என்று எழுதுவதும் பேசிக்கொள்வதும் முதலில் நிறுத்தப்படணும்.

கனக்க  எழுதலாம்

நேரமின்மை காரணமாக இத்துடன்................. :(  :(  :(

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமோ அக்காவின் கட்டுரைக்கு பலத்த அடி விழுந்திருப்பது சுமோ அக்கா இனி கதை பக்கமே தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று சொல்லி நிக்கின்றது...... சுமோ அக்கி இன்னுமொருவன் அண்ணா மாதிரி உங்களால முடியாது அவர் கொஞ்சம் வித்தியாசம் அதனால உங்களிடம் இருக்கும் கருப்பொருளை வைத்து கதைகளை எழுதிங்கள் அது தான் உங்களுக்கு வரும்

என்னினும் யாழிர்க்காக இவளவு பெரிய ஒரு ஆக்கத்தை எழுதிய உங்களுக்கு நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மனிதர்கள் எல்லோரும் ஒருகோணத்தில் இருப்பவர்களல்ல.சுமேரி தனது பார்வையில் வேறு கோணத்தில் ஒரு கட்டுரையை தந்திருக்கின்றார். அதில் எமது ஒருசில புலம்பெயர்குடும்பங்களில் நடப்பவற்றை பூசிமெழுகாமல் வெளிப்படையாக சொல்லியிருக்கின்றார்.பல சிரமங்கள் மத்தியிலும் ஒரு சமூகத்தில் ஒழிந்திருக்கும் கருத்தை சொன்ன சுமேரிக்கு என் பாராட்டுக்கள். :)

Posted

இந்த கட்டுரை மாத்திரமல்ல இங்கு பலர் சிந்தனைகளும் வெறும் பழைய பஞ்சாங்கங்கள் ஆகவே இருக்கின்றன .நாட்டில் கூட எவ்வளவோ மாற்றங்கள் இப்போ வந்துவிட்டது .

வெளிநாடு வந்துவிட்டோம் அல்லது பெண்ணுரிமை என்று பிழையான சில செயல்களில் இறங்குபவர்கள் ஒரு சிலரே , பெரும்பான்மையானவர்கள் மிக தெளிவாக எவரையும் சார்ந்திராது தமது செயற்பாடுகளை எப்பவோ தொடங்கிவிட்டார்கள் .பலர் மிக ஆழுமையுடன் எமது சமூகத்தில் வலம் வந்துகொண்டிருப்பதை பார்க்க மிக சந்தோசமாக இருக்கின்றது .(எனக்கும் சில நண்பிகள் இருக்கின்றார்கள் ).

 

நியானி: சில வரிகள் தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் கவனமாக  கையாள  வேண்டிய ஒரு பகிர்வு.  ஒருவருடை ய பலவீனமே மற்றவர்களுக்கு  

 

வாய்ப்பாக  போகிறது . நன்மை தீமைகளை புரிந்து வாழ தெரிந்து  விட்டால் வாழ்வு  சீராக செல்லும்.

Posted
என் அனுபவம் மற்றும் கண்ணால் கண்ட உண்மைகள்
15-21 பவுணிலே தாலிகொடி,கை நிறைய காப்பு,ஒவ்வொரு விழாக்கள் நிகழ்வுகளுக்கு புதிய புதிய புடவை இந்தப்புடவையை அவர்கள் பாவிப்பது சாதாரண(disposal) கையுறை போலத்தான் ஏனெனில் திருப்பி பாவிக்க மாட்டார்கள்.கணவனுக்கு தெரியாமல் சீட்டு, நகைச்சீட்டு மற்றும் வட்டிக்கு விடுதல் கொடுத்து ஏமாந்து போனவர்களும் உண்டு.சொந்தச்சகோதரங்களுக்கு போட்டியாக வாழ நினைக்கிறார்கள் இங்கு வெளி நாட்டில் வாழும் பெண்கள் அக்கா வீடு மூன்று படுக்கையறையாயின் தங்கைஎப்படியாவது புருசன் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை நான்கு படுக்கையறையுடன் வீடு வாங்கி விடுவாள்.தங்கை சியானா வாங்கினால் அக்கா ஒடிசி அல்லது பைலட் வாங்குவார்.தங்கைக்கு பிள்ளைகளே இருக்காது ஏன் நான்கு அறை வீடு பாவம் புருசன் டபிள் அடிச்சு இரவு சாமத்தில் தான் வருவான்,என்ன பாவம் செய்தானோ தெரியாது.இதற்கு இடையில் இங்கே இருக்கும் மாமிமார் வயசு குறைந்த பெடியனை ஒழுங்கு பண்ணி கொடுத்துவிடுவார்கள் பேப்பர் போட....குடும்பமே நாசம் அதுவும் அந்த பெடியன் படமெடுத்துவிட்டால் கூப்பிடுகிற நேரமெல்லாம் போகவேணும்.அவன் கேக்கிற நேரமெல்லாம் காசு அள்ளி இறைக்க வேண்டும்.இதுதான் இங்கு கனடாவில் அதிகமாக நடக்கிற விடயம்.இதைவிட என்னால் சகித்துகொள்ள முடியாதது.கோவில்களில் பெண்களின் அராஜகம்.வருவார்கள் பிள்ளைகளைத்தூக்க மாட்டார்கள்.தூக்கினால் சாறி சாரயாகிவிடும்.புருசன்காரன் வேலைகாரனைப்போல் பிள்ளயை கூடையில் வைத்து காவிக்கொண்டுவருவான்.அதைவிட குழந்தையின் தேவைக்கான பையொன்று.வழக்கமாக கோவிலில் சாமி கும்பிட இரண்டுபக்கங்கள் இருக்கும்.ஒருபக்கம் ஆண்களும் அடுத்தபக்கம் பெண்களும்.கனடாவில் எல்லா பக்கமும் பெண்கள் தான்.ஐயர் தீபம் கொண்டுவரும் போது தொட்டு கும்புடுவதோடு நிறுத்தாதுதாலியையும் ஒரு சுழட்டு சுழட்டி எடுத்துவிடுவார்கள்.தாலிக்கு குங்குமம் வைப்பார்கள் ஆனால் தாலி கட்டியவனை ஓரமாய் நின்று சாமி கும்பிட விடமாட்டார்கள்.ஆகவே பெண்களை வெறுத்துவிட்டது. 
Posted

இங்கு மேற்கத்தியப்பெண்கள் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.அவர்கள் ஒரே நேரத்தில் இரு தோணியில் கால் வைக்க மாட்டார்கள்.அதே போல கடன் பட்டு ஆடம்பரமாகவும் வாழமாட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருத்தெழுதிய உறவுகள் அனைவருக்கும் நன்றி. நேற்றே உங்களுக்குப் பதில் தந்திருக்கவேண்டியது.என் கணணி செய்த சதியால் முடியாது போய்விட்டது மன்னியுங்கள். இதில் நான் எழுதியது உங்களுக்கு ஒரு பக்கச் சார்பாகத் தெரிந்தாலும் நானே இரண்டு பக்கத்துக்குமாக எழுதியிருந்தால் ஆண்கள் தம் கருத்துக்களை முன்வைக்க முடியாமற் போயிருக்கும். அத்தோடு எனக்குத் தெரிந்த, பார்த்த, கேட்டு அறிந்தவற்றை மட்டும் வைத்தே இதை எழுதினேனே அன்றி உலகில் நடக்கும் அத்தனை விடயங்களும் எனக்குத் தெரியாது தானே .

 

அண்மையில் புலம்பெயர் நாட்டில் ஒரு பள்ளியில் (அநேகம் தமிழ் மாணவ மாணவிகள் கற்கும் பள்ளி) கற்கும் மாணவர்கள் சொன்னது ஆச்சரியப்பட வைத்தது. அங்கு கல்வி பயிலும்.. 90% மாணவிகள் virgin இல்லை என்பது தான் அது. அந்தளவுக்கு கட்டுப்பாடிழந்து உணர்ச்சி வேகத்தில் வாழ்ந்தால்.. எப்படி அந்த வாழ்க்கை.. பிற்காலத்தில் நிம்மதியானதாக இருக்கும்..????!


ஆண்கள் ஒன்றும் இல்லாமலே சொல்வார்கள் அவள் என்னுடன் வந்தவள் என்று. ஆண்கள் சொல்வதனால் மட்டும் அவர்கள் கூறுவது உண்மையாகாது. அதுகும் பாடசாலையிலோ பல்கலைக்கழகங்களிலோ உள்ள மாணவர்கள் இப்படிக் கூறுவதை தமக்குப் பெருமையாக எண்ணுவது வழமைதான் நெடுக்ஸ். இது உங்களுக்கும் தெரிந்துதான் இருக்கும்.

 

 

 

நீங்க எழுதியது ஒரு சில பெண்களின் பக்கம். பல பெண்களை தெரியும் எப்படி கணவனின் காசை சுருட்டிக்கிட்டு மற்றவனுடன் ஓடினார்களென்று.

 

 

கணவனின் காசைச் சுருட்டிக் கொண்டு ஓடுகிறாள் பெண் எனில், அந்த ஆண் ஒன்றும் தெரியாத மடையனாக இருக்க வேண்டும் வந்தி. அப்போ அந்த ஆணில் தான் தவறு.

 

இப்படியான பல கருத்துகளால் தான் என்னை போன்றவர்கள் பெண்கள் என்றால் விழுந்தடித்து ஓடிவிடுகிறோம்  :D 
பெண் எண்டாலே கடுப்பாயிருக்கு அக்கா.
ஏதோ உங்களால் முடிந்தளவுக்கு சூனியம் வைத்திருக்கிறீர்கள் :wub:

 

 


உங்களுக்குச் சூனியம் வைக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை அட்டங். :D  எல்லாப் பெண்களும் இப்படி என்று  நான் அடித்துக் கூறவில்லையே. ஒன்று இரண்டு சரியில்லை என்பதற்காக ஒட்டுமொத்தமாக எல்லோரும் அப்படி என்று முடிவுகொள்வது தவறு.

 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ...........என்பது எம் வேதவாக்கு .

மணவாழ்க்கை அமைவதற்கோர் மனைவி  வாய்க்க வேண்டும் .குலமகளாய் கிடைப்பதற்கோ கொடுத்துவைக்க வேண்டும் என ஒரு கவிஞன் எழுதினான் , .

 

நீ அவனாகவும்  நீ அவளாகவும் இருக்கக்கடவீர்கள் என்னும் நோக்கில் திருமணம் என்னும் பந்தத்தை இறைவன் உருவாக்கினான் .

 

 

 ஒட்டு மொத்தத்தில் இந்த விடயத்தைப்பொறுத்தவரையில்   ஆயிரம் கட்டுரைகளை எழுதினாலும் ஆயிரம் ஆயிரம் ஆய்வுகளை செய்தாலும் ,மனிதன் [ஆணும்,பெண்ணும் ] அன்பு ,பாசம், இரக்கம், போன்ற பண்புகளை புரிந்து கொள்ளாதவரை இதற்கு விடை காணமுடியாது.

 

உண்மைதான் தமிழ்ச் சூரியன். எத்தினை கட்டுரைகள் எழுதினாலும் முடிவு காண முடியாதுதான். ஆனால் தாக்கத்தினைக் குறைக்க முயலலாம் என்பதே என் நோக்கம்.

 

திருமணத்தின் பின் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருவரும் விட்டுக் கொடுத்து, தங்கள் வசதிக்கேற்ப   வாழப் பழகிக்கொள்ள வேண்டும். இல்லாட்டி வாழ்க்கை முழுக்க கஷ்டம்தான். அதைவிட பிரிந்து வாழலாம்.

 

 

நீங்கள் கூறுவது 100% சரி தப்பிலி. ஆனால் சிலவேளைகளில் குழந்தைகளுக்காகப் பிரிந்து போகாதிருப்பது  பிள்ளைகளுக்கு நன்மை பயக்கும். சுயநலமாக நோக்காது பெற்ற பிள்ளைகழளுக்காக எம் சந்தோசங்களைக் கட்டுப்படுத்தி வாழ்தல் நன்று.

 

இப்ப பெண்களுக்கு முக்கியம் பக்கத்து வீட்டுக்காறியின் வாழ்க்ககையும் அவளை மாதிரி வாழ பணம் பணம் பணம்.மற்றதெல்லாம் இப்ப வெறும் ஏட்டுச்சுரைக்காய்தான்.

 

 

எல்லாப் பெண்களும் பணத்துக்காகப் பறப்பதில்லை சஜீவன்

 

சுமே

இந்த தலைப்பை பார்த்ததும்  ஓடி வந்தேன்.

ஏதாவது பெண்கள் பற்றிய  நல்ல நிலையை  தொட்டிருப்பீர்கள் என்று.

ஆனால் பலம் பெயர் பெண்கள் பற்றி தவறான கண்ணோட்டத்தில் முதல் சில வரிகளில் தொடங்கியிருப்பதைப்பார்த்ததும் வேதனையாக இருந்தது. தப்பான தேடல்.

மீதியை  வாசிக்கவே இல்லை.

 

 

விசுகு அண்ணா, நான் பெண்ணாக இருப்பதனால் பெண்ணை பற்றிய உண்மைகளை எழுதாது இருக்க முடியாது. அது நேர்மையும் இல்லை.

 

சுமோ அக்காவின் கட்டுரைக்கு பலத்த அடி விழுந்திருப்பது சுமோ அக்கா இனி கதை பக்கமே தன்னுடைய கவனத்தை செலுத்த வேண்டும் என்று சொல்லி நிக்கின்றது......

 

 

ஒருவருக்கு ஒன்று வரும் வராது என்பதை ஒரு கட்டுரை தீர்மானிக்காது சுண்டுப் பையா. :D :D

 

மனிதர்கள் எல்லோரும் ஒருகோணத்தில் இருப்பவர்களல்ல.சுமேரி தனது பார்வையில் வேறு கோணத்தில் ஒரு கட்டுரையை தந்திருக்கின்றார்.

 

 


உங்கள் அனுபவத்தில் என் கட்டுரை வாசித்து விளங்கிக் கொண்டமைக்கு நன்றி அண்ணா.

 

இந்த கட்டுரை மாத்திரமல்ல இங்கு பலர் சிந்தனைகளும் வெறும் பழைய பஞ்சாங்கங்கள் ஆகவே இருக்கின்றன .

 

பழைய பஞ்சாங்கங்கள் என்று எண்ணித் தூக்கிப் போடுவதனாலேயே பல பிரச்சனைகள் பெரிதாகின்றன அர்ஜுன். எதையும் எம்முடன் சார்ந்தவர்களை மட்டும் வைத்து எடை போடுவது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
மிகவும் கவனமாக  கையாள  வேண்டிய ஒரு பகிர்வு.  ஒருவருடை ய பலவீனமே மற்றவர்களுக்கு  

 

வாய்ப்பாக  போகிறது . நன்மை தீமைகளை புரிந்து வாழ தெரிந்து  விட்டால் வாழ்வு  சீராக செல்லும்.

 

பெண்கள் வரமாட்டீர்கள் என எண்ணினேன். நிலா நீங்கள் வந்தது மகிழ்ச்சி. பெரும்பாலும் பலவீனங்களே வாழ்வின் தோல்விகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.

 

 

எல்லோரும்  பெண்களே 

 

 

Kssson, உங்கள் பெயரைப் போலவே கருத்துப் படமும் விளங்கவில்லை எனக்கு.

 

 

கோவில்களில் பெண்களின் அராஜகம்.வருவார்கள் பிள்ளைகளைத்தூக்க மாட்டார்கள்.தூக்கினால் சாறி சாரயாகிவிடும்.புருசன்காரன் வேலைகாரனைப்போல் பிள்ளயை கூடையில் வைத்து காவிக்கொண்டுவருவான்.அதைவிட குழந்தையின் தேவைக்கான பையொன்று.வழக்கமாக கோவிலில் சாமி கும்பிட இரண்டுபக்கங்கள் இருக்கும்.ஒருபக்கம் ஆண்களும் அடுத்தபக்கம் பெண்களும்.கனடாவில் எல்லா பக்கமும் பெண்கள் தான்.ஐயர் தீபம் கொண்டுவரும் போது தொட்டு கும்புடுவதோடு நிறுத்தாதுதாலியையும் ஒரு சுழட்டு சுழட்டி எடுத்துவிடுவார்கள்.

 

 

 

 

நீலப் பறவை, உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றன. பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும்தான். ஆனால் இப்படி பெண்ணுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆண்களில் தான் தவறு என்று நான் கூறுவேன். அதுதான் நான் முதலில் கூறினேன் ஆண்  ஆழுமையுள்ளவனாக இருக்கவேண்டும் என. நன்றாக நொந்து நூலாகிப் போயுள்ளீர்கள் என்று தெரிகிறது. இப்போதும் ஒன்றும் கேட்டுப் போய் விடவில்லை. உங்கள் மனைவியை இருத்தி வைத்து துணிவோடு கதைத்தால் எல்லாம் சரியாகும். இன்னும் திருமணமாகவில்லை எனில் கோவிலுக்குப் போனால் சுவாமியை வணங்குவதை விட்டு எவளோ தாலிக்கொடியைத் தூக்கிப் போடுவதை  நன்றாகவே பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி பகிர்வுக்கு, உங்களை ஏன் கஷ்டப்படுத்துவான் இன்னும் எழுதி.....

 

நீங்க ஒரு  hero ஏதிர்பார்த்தா நாங்களும் ஒரு ஐஸ்ஸை எதிர்பார்க்கத்தொடங்கிடுவம். :lol:  :D

 

வாழ்கையை வாழத் தெரிந்தா இந்த பிரச்சனைகள் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted



உடையார் நீங்கள் எழுதுவதால் நாங்கள் துன்பப்படவே மாட்டோம். எதையும் துணிவுடன் எழுதலாம். நான் எழுதியதற்கும் கீரோவுக்கும் துளியும் தொடர்பே இல்லையே. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted
முதலில் திரியை ஆரம்பித்த சுமோவுக்கு நன்றி.
 
ஒரு குடும்பத்தில் ஆண்கள் மனோதிடம் மிகுந்தவர்களாகவும், தைரியமானவர்களாகவும்,சுயமாக முடிவு எடுக்க கூடியவர்களாகவும்,ஒரு பெண்ணின் தேவையை புரிந்து நடப்பவனாகவும் இருக்க வேண்டும்...அப்படி இருந்தால் தான் அந்த குடும்பமே சிறந்து விளங்கும் அப்படி இல்லாமல் எதிர் மறையான குணங்களை கொண்டிருந்தால் அந்தக் குடும்பமே அழிந்து சின்னா,பின்னமாகி விடும்.
 
ஒரு தந்தை தான் உழைத்து தன்ட‌ குடும்பத்தை பார்க்க வேண்டும்...தாயும்,தந்தையின் உழைப்பில் வாழப் பழக வேண்டும்...பிள்ளைகளை வளர்க்க முடியா விட்டால் பிள்ளைகளை பெறக் கூடாது...தந்தை சரியில்லா குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் வளரும் போது குடும்ப பார‌ம் கார‌ணமாக பலியாவது மூத்த மகனோ அல்லது மகளோ தான்...மூத்தது மகளாயிருந்தால் குடும்ப பார‌த்தை காட்டி அவளது விருப்பு,வெறுப்புகளை ஏற்காது வெளிநாட்டு மாப்பிள்ளை நீ போனால் கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மாய் எல்லோரும் வெளிநாட்டுக்கு போயிட‌லாம் என ஆசை காட்டி அல்லது பயமுறுத்தி அனுப்பி விடுவார்கள்.
 
இங்கு வந்தாலோ பெண்ணுக்கு புது இட‌ம்,மொழி,ஊரில் வாழ்ந்த வாழ்க்கைக்கு முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கை...கணவனோ எந்த நேர‌மும் வேலை,வேலை என்று திரிய எந் நேர‌மும் வீட்டுக்குள் அடைபட்டு கிட‌க்கும் பெண்கள்,அன்பு,பாச‌த்தை எதிர் பார்த்து வந்த பெண்கள் அது தங்களது கணவனிட‌த்து கிடைக்கா விட‌த்து தங்கள் மேல் அன்பை,பாச‌த்தை காட்டும் ஆண்களை நோக்கி செல்கிறார்கள்...இது வெறும் செக்ஸ்க்காக இல்லை.அந்த ஆண்கள் பழகும் விதம்,பாச‌ம் காட்டுதல்,அக்கறை செலுத்துதல் போன்றன தான் முக்கியமாக இருக்கும்...இதே நேர‌த்தில் கணவன் மிக நன்றாக தன் மனைவியை வைத்திருந்தும் உட‌ம்பு சுகத்திற்காக வேறு ஆண்களைத் தேடிப் போகும் பெண்களும் இருக்கிறார்கள்.இன்னொருத்தர் மனைவி என தெரிந்தும் அவர்களை ஆசை காட்டி தவறாகப் பயன்படுத்தும் ஆண்களும் இருக்கிறார்கள்.
 
பெண்கள் எளிதில் உணர்ச்சி வச‌ப்படுபவர்கள் தங்களது குடும்ப பிர‌ச்ச‌னையை இன்னொரு பெண்ணிற்கு சொல்வதிலும் பார்க்க ஆண் நண்பர்களுக்கே சொல்ல விரும்புகிறார்கள்...அவர்களிட‌மிருந்து ஆறுதல்,ஆலோச‌னைகள் கிடைக்கும் என்பதை விட‌ குடும்ப ர‌கசியம் வெளியே போகாமல் ஆண்கள் காப்பாற்றுவார்கள் என்ட‌ நம்பிக்கையும்,எதிர் பால் ஈர்ப்பும் கார‌ணமாக இருக்கலாம்.
 
பெண்கள் தட‌ம் மாறிப் போவதற்கு ஆண்கள் முதுகெலும்பு இல்லாமல் இருப்பது தான் கார‌ணம்...ஒரு குடும்ப தலைவன் தன் மனைவி சரி சமமாய் நட‌த்தி,அவளது ஆலோச‌னைகளைக் கேட்டு அவளை அவனும்,அவனை அவளும் புரிந்து கொண்டு நட‌க்க வேண்டும்.
 
பெண்களை வேலைக்கோ/படிக்கவோ அனுப்புவதில்லை.தன்ட‌ மனிசிக்கு ஒன்டும் தெரியாது. தான் தான் எல்லாம் செய்யிறனான் என மற்றவருக்கு சொல்லிப் பெருமைப் படும் ஆண்களும் இருக்கினம்...பெண்கள் எங்கே போனாலும் இத்தனை மணிக்கு வீட்டை வர‌ வேண்டும் என கட்டுப்பாடு போடும் ஆட்களும் இருக்கினம்...ஊரில் போய் தங்களது உண்மையான குடும்ப நிலவர‌த்தை சொல்லிக் கட்டாமல் தங்களுக்கு வீடு,கார் இருக்கு,தான் இன்ன வேலை,இவ்வளவு சம்பளம் என பொய் சொல்லிக் கட்டுகின்ற ஆட்கள் தான் பெரும்பான்மை...இப்படியான ஆட்களை நம்பி அதிக ஆசைகளை சுமந்து கொண்டு வரும் பெண்கள் தாங்கள் எதிர்பார்த்த வாழ்க்கை இல்லை என்றானவுட‌ன் ஏமாந்து போகின்றார்கள்...பலர் சுதாகரித்து கொள்கின்றனர்,சிலர் புதைகுழிக்குள் விழுகின்றனர்...எது எப்படியாயிருந்தாலும் பெண்களது இந் நிலைக்கு கார‌ணம் ஆண்களது முதுகெலும்பிலாத் தன்மையே...நான் பார்த்த‌ இந்த உலகத்தில் 100க்கு 90% ஆண்கள் ஏதோ ஒரு விதத்தில் கோழையே :(  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Posted

  
இந்த விடயத்தை உணர்வுப் பூர்வமாக நோக்கினால் இது ஒரு முடிவற்ற விவாதத்திற்கு இட்டுச் சொல்வதுடன் பரஸ்பர குற்றசாட்டுகளிலே முடியும்.  இதை வேறு ஒரு கண்ணோட்டத்துடன் நோக்கினால் கொஞ்சம் தெளிவடையலாம்.

ஆண்களைப் போல பெண்களும், பெண்களைப் போல ஆண்களும் சிந்திக்கவும் முடியாது செயல்படவும் முடியாது. மானுடம் தோன்றிய காலத்தில் இருந்து இப்படியே உள்ளது. இனிமேலும் அப்படியே. இருவரும் சமதளத்தில் இயங்கும் சாத்தியம் மிகக் குறைவே. ஏனெனில் அவர்கள் இருவரது மூளையும் வெவ்வேறு விதமாக இயங்குகிறது.  இதில் சிலர் விதிவிலக்கு. இதுதான் அறிவியல் உண்மை. வெவ்வேறாக இயங்கும் இரு மூளைகளால் ஒரு விடயத்தை ஒரேவிதமாக நோக்குவது கடினமே.

ஆண்களின் மூளை செயல்பாட்டை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடியது(single-tasked), இயந்திரம் போல் செயல்படக்கூடியது(mechanist thinking) என வகைப்படுத்துகிறார்கள்.

பெண்களின் மூளைச் செயல்பாட்டை ஒரே நேரத்தில் வெவ்வேறு பணிகளைச் செய்யக் கூடியது(multi tasking), உணர்வுப் பூர்வமாக செயல்படக் கூடியது(mentalistic thinking) என வகைப்படுத்துகிறார்கள்.

பெண்கள் மூளை, ஆண்களின் மூளையை விட அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வதில்(emotional intelligence) வல்லமை கொண்டது. அடுத்தவர்களின் உணர்வுகளை எளிதில் உள்வாங்கி அதற்கிசைந்தவாறு செயல்படும் திறன் கொண்டது.ஒரு சின்ன உதாரணமாக, ஒரு குளிர் சாதனப் பெட்டியில் ஒரு பொருளைப் போட்டு ஆணையும் பெண்ணையும் தேடச் சொன்னால் பெண் அதை எளிதில் கண்டுபிடித்துவிடுவாள். அகலமற்ற மூளை(narrow) கொண்ட ஆணால் அவ்வளவு எளிதாக தேட முடியாது. இதே காரணத்திற்காக பெண்களை இரவில் நீண்ட நேரம் வண்டி ஓட்டக் கூடாது என்பார்கள். ஏனெனில் அவர்களால் நீண்ட நேரம் ஒரே வேலையில் சிந்தனையை நிறுத்த முடியாது. அதேபோல் பெண்களின் மூளை அதிகமான நிறங்களை கிரகிக்கும் தன்மை கொண்டது.

காமத்தை பொருத்தவரையில் ஆண்களின் மூளை புறத்தூண்டுதலுக்கு எளிதில் ஆட்பட்டுவிடும். பெண்களின் மூளை அகத் தூண்டலுக்கு உள்ளாக வேண்டும். ஆண்கள் சினிமாவில் வரும் ஒரு சின்ன கவர்ச்சி ஆட்டத்தில் காம உணர்வு கொள்ள முடியும். பெண்கள் அப்படி அல்ல.

 

மானுடப் படைப்பை அறிந்து கொள்ளுவோம். அதன்படி புரிந்துணர்ந்து நடப்போம்...  

சமீபத்தில் மரப்பசு என்பவர் தனது வலைப்பதிவில் எழுதிய ஒரு பதிவை வாசித்தான். இந்த விவாதத்திற்கு ஒட்டியதாக இருந்தது. கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்  
 

 

அன்று எங்கள் ஏரியாவில் கட்சி மீட்டிங் முன்னர் போடும் டான்ஸ் போட்டு கொண்டிருந்தார்கள். நான் ஆர்வத்தோடு பார்த்து கொண்டிருந்தேன்.”புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க” பாட்டுக்கு ஆணும் பெண்ணும் ஆடினார்கள்.

பெண் பாவாடை சட்டை போட்டு உள்ளே ஒரு லெகின்ஸ் போட்டிருந்தாள்.

சுத்தி சுத்தி ஆடினாள். ஒவ்வொருமுறை அவள் பாவாடை சுத்தும் போதும், அவள் உள்ளே போட்டிருக்கும் ’லெக் இன்ஸ்’ தெரிந்தது. உண்மையில் பார்த்தால் அதில் எந்த ஆபாசமும் கவர்ச்சியும் இல்லை.

ஆனாலும் ஆண்கள் கூட்டம்( என்னையும் சேர்த்துதான்) பாவாடை சுத்தும் போது ஆர்வத்தோடு பார்க்கிறது. இதுதான் ஆண்களின் மன உலக தத்துவம். இதை எல்லா பெண்களும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி சிந்தித்து கொண்டே இருந்தேன்.

ஆண் இனத்தின் மீதே ஒரு வாஞ்சை வந்தது. ”பாவம்டா நீங்கள்” இது மாதிரி இயற்கை உங்களை படைத்து விட்டதே என்று. எங்கு போனாலும் இதனால் கெட்ட பெயர் கிடைத்து விடுகிறதே உங்களுக்கு.

புதுசா கட்டிகிட்ட ஜோடி தானுங்க” பாட்டு முடிந்தது. அடுத்தது என்ன பாட்டு என்று எல்லோரும் ஆர்வமாய் இருக்கிறோம்.மனைவிடம் மேட்டரை சொல்லி வர நேரமாகும் என்று சொல்லி அடுத்த பாட்டுக்கு காத்திருக்கிறேன். கூட்டத்தோடு சேர்ந்து காத்திருக்கிறோம்.

அடுத்து எம்.ஜி.ஆர் மட்டும்தான் வந்தார். “நான் ஆணைஇட்டால அது நடந்து விட்டால்” என்று.

வெறும் ஆம்பிளை மட்டும் வந்தால் எப்படி. கூட்டம் கலைந்து டீ குடிக்க சென்றது, நான் கடுப்பில் வீட்டுக்கு கிளம்பி விட்டேன். ஆனால் கூட்டம் டீ குடித்து விட்டு கண்டிப்பா அடுத்த ஜோடி பாட்டுக்கு திரும்ப வரும்.

அவர்களுடைய ஒரே வேண்டுதல் அடுத்த பாட்டில் ஆடும் பெண்ணாவது பாவாடையை இன்னும் Higher Elevation இல் பறக்க விட வேண்டும்.

 



 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
என் அனுபவம் மற்றும் கண்ணால் கண்ட உண்மைகள்
15-21 பவுணிலே தாலிகொடி,கை நிறைய காப்பு,ஒவ்வொரு விழாக்கள் நிகழ்வுகளுக்கு புதிய புதிய புடவை இந்தப்புடவையை அவர்கள் பாவிப்பது சாதாரண(disposal) கையுறை போலத்தான் ஏனெனில் திருப்பி பாவிக்க மாட்டார்கள்.கணவனுக்கு தெரியாமல் சீட்டு, நகைச்சீட்டு மற்றும் வட்டிக்கு விடுதல் கொடுத்து ஏமாந்து போனவர்களும் உண்டு.சொந்தச்சகோதரங்களுக்கு போட்டியாக வாழ நினைக்கிறார்கள் இங்கு வெளி நாட்டில் வாழும் பெண்கள் அக்கா வீடு மூன்று படுக்கையறையாயின் தங்கைஎப்படியாவது புருசன் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை நான்கு படுக்கையறையுடன் வீடு வாங்கி விடுவாள்.தங்கை சியானா வாங்கினால் அக்கா ஒடிசி அல்லது பைலட் வாங்குவார்.தங்கைக்கு பிள்ளைகளே இருக்காது ஏன் நான்கு அறை வீடு பாவம் புருசன் டபிள் அடிச்சு இரவு சாமத்தில் தான் வருவான்,என்ன பாவம் செய்தானோ தெரியாது.இதற்கு இடையில் இங்கே இருக்கும் மாமிமார் வயசு குறைந்த பெடியனை ஒழுங்கு பண்ணி கொடுத்துவிடுவார்கள் பேப்பர் போட....குடும்பமே நாசம் அதுவும் அந்த பெடியன் படமெடுத்துவிட்டால் கூப்பிடுகிற நேரமெல்லாம் போகவேணும்.அவன் கேக்கிற நேரமெல்லாம் காசு அள்ளி இறைக்க வேண்டும்.இதுதான் இங்கு கனடாவில் அதிகமாக நடக்கிற விடயம்.இதைவிட என்னால் சகித்துகொள்ள முடியாதது.கோவில்களில் பெண்களின் அராஜகம்.வருவார்கள் பிள்ளைகளைத்தூக்க மாட்டார்கள்.தூக்கினால் சாறி சாரயாகிவிடும்.புருசன்காரன் வேலைகாரனைப்போல் பிள்ளயை கூடையில் வைத்து காவிக்கொண்டுவருவான்.அதைவிட குழந்தையின் தேவைக்கான பையொன்று.வழக்கமாக கோவிலில் சாமி கும்பிட இரண்டுபக்கங்கள் இருக்கும்.ஒருபக்கம் ஆண்களும் அடுத்தபக்கம் பெண்களும்.கனடாவில் எல்லா பக்கமும் பெண்கள் தான்.ஐயர் தீபம் கொண்டுவரும் போது தொட்டு கும்புடுவதோடு நிறுத்தாதுதாலியையும் ஒரு சுழட்டு சுழட்டி எடுத்துவிடுவார்கள்.தாலிக்கு குங்குமம் வைப்பார்கள் ஆனால் தாலி கட்டியவனை ஓரமாய் நின்று சாமி கும்பிட விடமாட்டார்கள்.ஆகவே பெண்களை வெறுத்துவிட்டது. 

 

 

மன்னிக்கவும்

இது போன்ற  ஒரு கருத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted
என் அனுபவம் மற்றும் கண்ணால் கண்ட உண்மைகள்
15-21 பவுணிலே தாலிகொடி,கை நிறைய காப்பு,ஒவ்வொரு விழாக்கள் நிகழ்வுகளுக்கு புதிய புதிய புடவை இந்தப்புடவையை அவர்கள் பாவிப்பது சாதாரண(disposal) கையுறை போலத்தான் ஏனெனில் திருப்பி பாவிக்க மாட்டார்கள்.கணவனுக்கு தெரியாமல் சீட்டு, நகைச்சீட்டு மற்றும் வட்டிக்கு விடுதல் கொடுத்து ஏமாந்து போனவர்களும் உண்டு.சொந்தச்சகோதரங்களுக்கு போட்டியாக வாழ நினைக்கிறார்கள் இங்கு வெளி நாட்டில் வாழும் பெண்கள் அக்கா வீடு மூன்று படுக்கையறையாயின் தங்கைஎப்படியாவது புருசன் பிச்சையெடுத்தாலும் பரவாயில்லை நான்கு படுக்கையறையுடன் வீடு வாங்கி விடுவாள்.தங்கை சியானா வாங்கினால் அக்கா ஒடிசி அல்லது பைலட் வாங்குவார்.தங்கைக்கு பிள்ளைகளே இருக்காது ஏன் நான்கு அறை வீடு பாவம் புருசன் டபிள் அடிச்சு இரவு சாமத்தில் தான் வருவான்,என்ன பாவம் செய்தானோ தெரியாது.இதற்கு இடையில் இங்கே இருக்கும் மாமிமார் வயசு குறைந்த பெடியனை ஒழுங்கு பண்ணி கொடுத்துவிடுவார்கள் பேப்பர் போட....குடும்பமே நாசம் அதுவும் அந்த பெடியன் படமெடுத்துவிட்டால் கூப்பிடுகிற நேரமெல்லாம் போகவேணும்.அவன் கேக்கிற நேரமெல்லாம் காசு அள்ளி இறைக்க வேண்டும்.இதுதான் இங்கு கனடாவில் அதிகமாக நடக்கிற விடயம்.இதைவிட என்னால் சகித்துகொள்ள முடியாதது.கோவில்களில் பெண்களின் அராஜகம்.வருவார்கள் பிள்ளைகளைத்தூக்க மாட்டார்கள்.தூக்கினால் சாறி சாரயாகிவிடும்.புருசன்காரன் வேலைகாரனைப்போல் பிள்ளயை கூடையில் வைத்து காவிக்கொண்டுவருவான்.அதைவிட குழந்தையின் தேவைக்கான பையொன்று.வழக்கமாக கோவிலில் சாமி கும்பிட இரண்டுபக்கங்கள் இருக்கும்.ஒருபக்கம் ஆண்களும் அடுத்தபக்கம் பெண்களும்.கனடாவில் எல்லா பக்கமும் பெண்கள் தான்.ஐயர் தீபம் கொண்டுவரும் போது தொட்டு கும்புடுவதோடு நிறுத்தாதுதாலியையும் ஒரு சுழட்டு சுழட்டி எடுத்துவிடுவார்கள்.தாலிக்கு குங்குமம் வைப்பார்கள் ஆனால் தாலி கட்டியவனை ஓரமாய் நின்று சாமி கும்பிட விடமாட்டார்கள்.ஆகவே பெண்களை வெறுத்துவிட்டது. 

 

 

ஏன் பெண்கள் மட்டும் தான் பிள்ளைகளை சுமக்க வேண்டுமா நீலப் பறவை?...ஆண்கள் சுமந்தால் அதில் என்ன பிழை?...பெண்கள் தானே குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமக்கிறார்கள்...அவர்கள் எப்பவாவது உங்களை வயிற்றில் சுமக்க சொல்லிக் கேட்டு இருக்கிறார்களா?...ஒரு பெண் மற்றப் பெண்களோடு தன்னை ஒப்பீடு செய்து அதிகம் கேட்கிறால் என்டால் அவளை குடும்ப நிலைமை சொல்லி அவளை தன்னோடு இணைந்து பயணிக்க வைக்க முடியாதவன் எப்படி நல்ல ஆண்மகனாகவோ அல்லது சிறந்த கணவனாகவோஇருப்பான்?
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வருகைக்கு நன்றி ரதி. நீங்கள் வந்தால் எவருக்கும் பயப்படாது உங்கள் கருத்தை முன்வைப்பது வரவேற்கத் தக்க ஒன்று. முகமூடி இல்லாவிடில் நீங்களும் எப்படியோ தெரியவில்லை. ஆனாலும் உங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டியதே. பிள்ளைகளை ஒழுங்காக, பொறுப்பாக வளர்ப்பது பெண்களாய் இருந்தாலும், ஆண் ஆணாய் இருந்து குடும்பத்தை வழிநடத்துவதுதான் சிறந்தது. ஆண்  எப்போது தன் பொறுப்புகளில் இருந்து விலகுகிறானோ அன்றே குடும்பப் பொறுப்பை பெண் ஏற்று நடத்தவேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகின்றாள். அப்படி பெண் ஏற்கும்போது பல குடும்பங்களில் ஆணின் நிலை மதிப்பிழந்து போகின்றது. சில பெண்கள் சமாளித்து குடும்பத்தை நடத்திக் கொண்டு போய் விடுவர். வாழ்க்கையைத் தன் போக்கில் வாழவிரும்பும் பெண் குடும்பத்தைப் பற்றியோ குழந்தைகளைப் பற்றியோகூட நினைக்காது தமது வாழ்வை மட்டும் எண்ணும் போதுதான் எல்லாம் சீரழிந்து போகிறது. ஆனாலும் எதையும் அவரவர் நிலையிலிருந்து பார்க்கவேண்டுமே தவிர நாம் மற்றவர் நிலையிலிருந்து கருத்துகளை முன் வைப்பது தவறுதான்

ஆதித்திய இளம்பிறையனின் கருத்துக்கள் முற்றிலும் சரியென  ஒத்துக்கொள்ள வேண்டியதே ஆனாலும் எல்லோரும் ஆணின் நிலையை அவர் நிலையிலிருந்து பார்க்க முடியாது என்பதுதான் உண்மை.நன்றி ஆதித்தியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.