Jump to content

மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் உதய மூர்த்தி, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். 

இளைஞர்களுக்காக பல்வேறு சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ள உதயமூர்த்தி, ஆனந்த விகடனில் எழுதிய 'நம்மால் முடியும் தம்பி நம்பு' என்ற சுய முன்னேற்றத் தொடர் வாசகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

உதய மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

http://news.vikatan.com/?nid=12112#cmt241

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

பல பயனுள்ள கருத்துக்களைத் தந்தவர். குறிப்பாக எண்ண அலைகளின் தாக்கம் பற்றி. இவரின் கருத்துக்கள் தந்த பாதிப்பினால்தான் எதிர்மறையாக எண்ணுவதை, பேசுவதை கைவிட்டேன்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

தனது வாழ்வு மூலம்  சமூகத்திற்கு  நல்வழி காட்டியுள்ளார்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

எண்ண அலைகள் பற்றியது முக்கியமானதொரு கோட்பாடு. இன்றைய காலச்சூழலில் மிகவும் பொருந்துவது.

 

எப்பப் பார்த்தாலும், புலிகள் தோல்வி, போராட்டம் தோல்வி என்று இங்கே எழுதப்படுவதைப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. இது எண்ண அலைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. சிங்களம் போர் வெற்றி என்று கொண்டாடி வருவது உயர்ந்த எண்ண அலைகளை சிங்கள மக்களிடம் விதைப்பதற்கே.

 

இதன் ஒரு அங்கமாகத்தான் புலிகளும் தங்களது தாக்குதல்கள் முற்றுப்பெறாதபோதெல்லாம், முதலில் மௌனமாக இருந்துவிட்டு, பின்னர் பின்னடைவு என்று சொல்லி முடித்துவிடுவார்கள்.. தோல்வி என்கிற சொல்லை அவர்கள் பயன்படுத்தியதே ஏறக்குறைய இல்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

'உன்னால் முடியும் தம்பி' நம்பிக்கைத் தொடரின் மூலம் தன்நம்பிக்கையை ஊட்டியவர்.

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இவரது கருத்துக்களை,வாசித்துள்ளேன்!

 

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கட்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

 

யாழ் நூலகம், மற்றும் கொக்குவில் நூலகங்களில் இரவல்பெற்று இவர் எழுதிய ஏராளம் நூல்களை நானும் வாசித்துள்ளேன். இவர் எழுதி முன்பு வாசித்தவைகளை பிற்காலத்தில் எனக்குள் சிந்தித்தபோது இவர் கூறிய பல உளவியல் விடயங்கள் தவறானவையாக எனக்குத்தென்பட்டன. சமூக நல்வழிப்படுத்தல் எனும் தொனியில்/பார்வையில் இவரது சிந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை. ஆனால், யதார்த்தரீதியாக மற்றும் விஞ்ஞானரீதியாக அணுகும்போது இவரது பல கருத்துக்கள் என்னால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவையாக இருக்கவில்லை. உளவியல் எனும்பெயரில் வீசி எறியப்பட்ட குப்பைகளாகவே அவை தோன்றின. ஜனரஞ்சகமாக - மக்களைக்கவரும் வகையில் எழுதப்படும், கூறப்படும் விடயங்கள் அனைத்தையும் சரியானவையென/துல்லியமானவையென ஏகமனதாக ஏற்றுக்கொள்ளமுடியாது. எனது இக்கருத்துடன் பலர் உடன்படாமல் இருக்கலாம், ஆச்சரியப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த வருத்தங்கள்.

Link to comment
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

 

அவர் விட்ட பணிகளை  மற்றவர் தொடரட்டும்.

அதுவே அன்னாருக்கான உண்மையான அஞ்சலியாக அமையும்.

Link to comment
Share on other sites

தமிழ்கூறு நல்லுலகத்தின் முத்து என்றே அவரைக் குறிப்பிடுவேன் . தன்னைச் சுற்றி உள்ளவர்களை முன்றேற்றுவதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவர் டாக்டர் உதயமூர்த்தி . அவரின் எழுத்துக்களாலும் கொள்கைகளாலும் அதிகமாகவே ஈர்க்கப்பட்டேன் . அவரின் பிரிவால் துன்புறும் அவரின் குடும்பத்தார்க்கு எனது இரங்கலையும் , அவரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

நம்முடைய உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வாழ்க்கையில்
வெற்றிபெற உதவிய உத்தமர்.ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் உதயமூர்த்தியின் தொடர் கட்டுரைகளை, தமிழக சஞ்சிகைளில் வந்த போது... வாசித்துள்ளேன். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு, எழுதிய கட்டுரை ஒன்றில்.... ஈழத்தமிழனுக்கு தமிழீழம் வேண்டுமென்று ஒற்றை ஆளாக இருந்த பிரபாகரனால்... மாபெரும் இயக்கத்தை கட்டி எழுப்ப முடியுமானால், அதே... வழியை தமிழகமும்... ஏன் முயற்சிக்க வில்லை என்னும் பொருள் பட, எழுதியதாக ஞாபகம் உள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.