Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர் அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நான் 2005 சமாதான காலத்தில ஊருக்குப் போயிருந்தேன்...பயணம் முடிஞ்சு திரும்பி கொழும்புக்கு வரும் போது எனக்கு ரெயினில் போக வேண்டும் என ஆசையாயிருக்குது ரெயினில் போவோம் என்று அம்மாட்ட சொன்னேன்...அம்மா சொன்னா ரெயினில் போனால் நிறைய நேர‌ம் செல்லும்,தனக்கு காலும் எலாது வான் புக் பண்ணி கொழும்புக்கு போவோம் என சொன்னார்...நான் இல்லை என்று அட‌ம் பிடிச்சு ரெயினில் புக் பண்ணியாச்சு.
 
நான் பயணக்கட்டுரை எழுதலேல்ல...அம்மா சொன்ன மாதிரி ரெயின் சரியான நேர‌ம் எடுத்தது அத்தோடு நின்று,நின்று மெதுவாய்ப் போச்சுது...அம்மாவும்,தம்பியும் என்னைப் பேசி,பேசி வந்தார்கள் நான் காதில போட்டுக் கொள்ளேல்ல வடிவாய் எஞ்ஜோய் பண்ணிக் கொண்டு வாறன் :lol: ...சொல்ல மறந்து போனேன் நாங்கள் பயணம் செய்த பெட்டி பூரா முஸ்லீம் ஆட்கள் தான்...ஒரு சில சிங்களவர்கள் மருந்திற்கு கூட‌ தமிழர் இல்லை.
 
ரெயின் ஒரு மாதிரி குருணாகலுக்கு வந்திட்டு சரியாய் ஞாபகம் இல்லை குருணாகலாய்த் தான் இருக்கும் என நினைக்கிறேன்...ஏனென்டால் அது முற்று முழுதான சிங்களப் பிர‌தேச‌ம் இல்லை தமிழர்,முஸ்லீம் எல்லோரும் இருக்கும் இட‌ம் தான்.
 
குருணாகல் ஸ்ரேச‌ன் வந்தவுட‌ன் டிரைவர் இறக்குபவர்களை இறக்கிப் போட்டு ரெயினை ஸ்டாட் பண்ணி நடுத் தண்ட‌வாளத்தில் கொண்டு வந்து ரெயினை நிப்பாட்டிப் போட்டு[3 தண்ட‌வாளங்கள் அருகருகே இருக்கும்] இஞ்சினை கழட்டி எடுத்துக் கொண்டு சொல்லாமல்,கொள்ளாமல் போட்டான் :o ...அங்கிருந்த 2,3 வாப்பாமார் ஸ்ரேச‌ன் மாஸ்ட‌ரிடம் போய் கேட்டால் அவர் சொல்லியிருக்கிறார் டிரைவர் டீச‌ல் இல்லை அடிச்சுக் கொண்டு வர‌ப் போயிட்டார் என்று ...எவ்வளவு நேர‌த்தால வருவார் எனக் கேட்டால் தெரியாது என சொல்லியிருக்கிறார்.
 
நடுச்சாமம்...அம்மா,தம்பியியும் என்னைப் போட்டுப் பேசினம் :D ...பேசாமல் இருங்கோ உப்ப சமாதான காலம்,பத்தாதிற்கு இது தமிழ் இட‌ம் தானே ஏன் பயப்படுறீங்கள் என நானும் பதிலுக்கு கத்தினேன்...பத்து நிமிச‌த்தால பார்த்தால் எங்கட‌ பெட்டியில் இருந்த ஒரு சனத்தையும் காணேல்ல :( ...அடுத்த பிளட்போமில இன்னொரு ரெயின் வருகுதாம் அது கொழும்புக்கு போகுதாம் அதில போகலாம் என முழுச்சனமும் இறங்கிட்டுது...இதைப் பார்த்த அம்மா சும்மா இருப்பாவோ வா இறங்குவோம் என கத்துறா...நடுத் தண்ட‌வாளத்தில ரெயினை விட்டுப் போன டிரைவர் எப்படியும் வந்து ரெயினை எடுப்பான். உங்களுக்கு காலும் ஏலாது.பிளட்போமில் ரெயின் நிக்காட்டில் இறங்கிறது எவ்வளவு கஸ்ட‌ம் என சொல்லிப் பார்த்தும் கேட்கிறா இல்லை...தம்பியை போய் மற்ற பெட்டியில் ஆட்கள் இருக்கினமா எனப் பார்த்திட்டு வா என்டால் பார்க்கிறானுமில்லை
 
கடைசியில் அம்மாட‌ கத்தல் தாங்கேலாமல் இறங்குவோம் என சொல்லி தம்பியும்,நானும் சேர்ந்து அம்மாவை தூக்கி இறக்கி,நான் கொண்டு வர‌ இருந்த சூட்கேசுகளை இறக்கி...பிளட்போமில அம்மாவை ஏத்தி,சூட்கேசுகளை ஏத்தி நாங்களும் ஏறி அடுத்த ரெயினுக்காக வெயிட் பண்ணுறம்...பிளட்போமில ஏறின பிறகு பார்த்தால் எங்கட‌ பெட்டியில் இருந்த சனம் மட்டும் தான் இல்லை.மற்றப் பெட்டியில் எல்லாம் சனம் அப்படியே இருக்குது :lol:
 
பிளட்போமில் ஏறி 20 நிமிச‌த்தால பார்த்தால் கொழும்புக்கு ரெயின் போகப் போகுது போய் ஏறுங்கோ என எனோன்ஸ் பண்ணுறாங்கள்...எந்த ரெயின் எனப் பார்த்தால் நாங்கள் எந்த ரெயினில் வந்தோமோ அதே ரெயின் தான் :) ...ரெயினில் ஏறினப் பிறகு அம்மாவுக்கும்,தம்பிக்கும் நல்ல பேச்சு...நாங்கள் மட்டும் அந்த பெட்டியில் வந்து திரும்பி ஏறேல்ல...இறங்கின ஒரு சிலரைத் தவிர‌ மற்றவர்கள் எல்லாம் அந்தப் பெட்டியில் தான் வந்து ஏறிச்சினம் :D
 
புலம் பெயர்ந்து வந்தனால் தைரியத்தையும்,பொறுமையும்,அனுபவத்தையும் மனோ திட‌த்தையும் கொஞ்ச‌மாவது நான் கற்றுக் கொண்டேன்...ஊரிலே இருந்திருந்தால் நானும் இப்படி எல்லாத்திற்கும் பயந்து கொண்டு இருந்திருப்பேனோ தெரியாது  :unsure:
 
  • கருத்துக்கள உறவுகள்

ரதி அந்தாள் (ரைவர்)தனக்கு தான் டீசல்(கசிப்பு)அடிக்க போனவர்.  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கதை நல்ல பகிடியா ஒரு பொம்பிளை ஆபத்து நேரத்திலை நாலைஞ்சு முடிவுகளை எடுப்பாள் எண்டு சொல்லாமல் சொல்லுது . வாழ்த்துக்கள் அக்கா :)  :)  :) .

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த பெண்கள் சிலரே துணிவானவர்களாகவும் மனோதிடம் உள்ளவர்களாகவும் மாறி இருக்கிறார்கள் பலர்  துணிவையும் மனோதிடத்தையும் இழந்தவர்களாக எதையும் முடிவெடுக்கும் துணிச்சல் அற்றவர்களாகவும் பல வருடங்கள் சென்ற பின்னும் வாழ்க்கிறார்கள். நிதானம் என்பது பலரிடம் இல்லை.

புலம் பெயர்ந்ததால்தான் மனோதிடமும் துணிச்சலும் உருவாகியது என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியவில்லை. அடிப்படையில் உங்களுக்குள் இருக்கும் ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது. அடிப்படைக்குணம் எந்த இடத்தில் இருந்தாலும் மாறாது.

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வேறு அனுபவங்களையும் பகிருங்கள்.

உண்மையில் நானும் நாட்டில் இருந்ததை விட புலம்பெயர்ந்த பின்னர் தான் பல அனுபவங்கள் மூலம் பல விடயங்களை கற்றுக்கொண்டேன். தனியாக துணிச்சலுடன் அனைத்து இடங்களுக்கும் சென்று வரும் ஆற்றல் எனக்கு இப்பொழுது உண்டு. :) அதற்கு காரணம் இங்கு தனியாக நான் வசிப்பதாலும் என்று நினைக்கிறேன். :unsure:

ஏனென்றால் தமது சொந்தங்கள் வீட்டில் வந்திருக்கும் நபர்களில் பலர் (எல்லோரும் அல்ல) எங்கு செல்வதென்றாலும் சொந்தக்காரரின் உதவியுடன் தான் செல்வார்கள். அல்லது என்ன செய்வதென்றாலும் யாராவது ஒருவர் தேவை. தனித்து இயங்க மாட்டார்கள். துணிவும் அவர்களுக்கு குறைவாக தான் உள்ளது. குறைந்தளவில் ஆண்கள், கூடுதலாக பெண்கள்.

ஆண்கள் வந்தவுடன் வேலைக்கு செல்வதால் வேலையும் வீடும் நண்பர்களும் என்று செல்கிறது. சில முக்கிய விடயங்களுக்கு இன்றும் பலர் இன்னொருவரின் உதவியை நாடுவதை அவதானித்திருக்கிறேன்.

பெண்கள் வரும்போதே வேறு யாராவது ஒருவரின் கட்டுப்பாடு இருக்கும். கணவன் அல்லது அவர்கள் சித்தி, மாமா, மாமி என்று யாராவது இருந்தால் தனியே தமது அலுவல்களை பார்க்க செல்ல அனுமதிக்காமல் தாமும் சேர்ந்து செல்வார்கள். எனவே இப்பொழுதும் துணிச்சல் என்பது இல்லை. இதற்கு நான் குறித்த பெண்ணை குறை சொல்ல மாட்டன். சொந்தக்காரரில் தான் குறை சொல்வேன். வந்தவுடன் அப்பெண்ணை தனியே விடாமல் சேர்ந்து செல்வது நல்லது. ஆனால் கொஞ்ச காலத்தின் பின்னர் பிரச்சினைக்குரிய இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களுக்கு அவர்களையே அவர்கள் அலுவலை பார்க்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் வேலைகளை செய்ய விட வேண்டும்.
 
ரதி அந்தாள் (ரைவர்)தனக்கு தான் டீசல்(கசிப்பு)அடிக்க போனவர்.  :D

:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, இடைக்கிடை உங்கள் அனுபவங்களைப் பதியுங்கள்!

ஒருக்கா ஊருக்குப் போயிற்று வந்த மாதிரி இருக்கு! :D 

மற்றும்படிக்கு வல்வை சொல்லுற மாதிரித் தான்!

எல்லாப் பெண்களுக்கும் புலத்து வாழ்க்கை, துணிவையும், சுதந்திரத்தையும் கொடுத்து விடுவதில்லை!

எனக்குத் தெரியப் பல  பெண்கள் சிறகுகள் அரியப்பட்டுத் தான் வாழ்கின்றார்கள்!

என்னவோ குடும்பம், குடும்பக்கவுரவம் என்று, இல்லாத ஒரு மாயைக்குள் தங்களைச் சிறைப்படுத்திக்கொண்டு, வாழ்வை வாழ்ந்து முடித்து விடுகின்றார்கள்!

அடுத்த தலைமுறையாவது, நிச்சயம் சுதந்திரத்துடனும், துணிவுடனும் வாழ வேண்டும் என்பதே எனது ஆசையும், எதிர்பார்ப்புமாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு உங்கள் அனுபவம் ரதி. அடிக்கடி வாருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி வெளி நாட்டுக்கு வந்த பின் அனுபவங்களும் துணிச்சலும் கூடி இருக்கலாம். அது இயற்கையாகவும் கொஞ்சம் இருக்க வேண்டும்.

Edited by nunavilan

புலம் பெயர்ந்த பெண்கள் சிலரே துணிவானவர்களாகவும் மனோதிடம் உள்ளவர்களாகவும் மாறி இருக்கிறார்கள் பலர்  துணிவையும் மனோதிடத்தையும் இழந்தவர்களாக எதையும் முடிவெடுக்கும் துணிச்சல் அற்றவர்களாகவும் பல வருடங்கள் சென்ற பின்னும் வாழ்க்கிறார்கள். நிதானம் என்பது பலரிடம் இல்லை.

புலம் பெயர்ந்ததால்தான் மனோதிடமும் துணிச்சலும் உருவாகியது என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியவில்லை. அடிப்படையில் உங்களுக்குள் இருக்கும் ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது. அடிப்படைக்குணம் எந்த இடத்தில் இருந்தாலும் மாறாது.

உண்மை, புலத்தில்  தைரியம் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை சவாலாக வாழ்ந்த பல பெண்கள் , இங்கு  தங்கள் சுயத்தை இழந்து,செல்லப்பிராணி  போல் மனசு வலிக்க வாழ்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டிங்கள் ...தொடருங்கோ உங்கள் அனுபவங்களை.....

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை ஒன்றும் நடக்கேல்ல.. :( இல்லாட்டில் டில்லி பெண்ணுக்கு நடத்தினமாதிரி போராட்டங்கள் நடத்தியிருப்பம்.. :D

ரதி, உங்கள் அனுபவங்களைப் பதியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவ பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

ஆனால் எனக்கு ஒருவிடயம் புரியவில்லை.

இருந்த இடத்தில் இருப்பவன் கோழையா?

வேறு இடம் நகர்ந்து எதையாவது தேடி ஓடுபவன் கோழையா?

வெளியில் இருந்து சென்றுவிட்டு அங்கு எல்லாவற்றையும் நேரடியாக பார்த்து உணர்ந்து புரிந்து நடப்பவர்கள் கோழைகள் என்பது சரியா???? :(

குருணாகல் ஸ்ரேச‌ன் வந்தவுட‌ன் டிரைவர் இறக்குபவர்களை இறக்கிப் போட்டு ரெயினை ஸ்டாட் பண்ணி நடுத் தண்ட‌வாளத்தில் கொண்டு வந்து ரெயினை நிப்பாட்டிப் போட்டு[3 தண்ட‌வாளங்கள் அருகருகே இருக்கும்] இஞ்சினை கழட்டி எடுத்துக் கொண்டு சொல்லாமல்,கொள்ளாமல் போட்டான் :o ...அங்கிருந்த 2,3 வாப்பாமார் ஸ்ரேச‌ன் மாஸ்ட‌ரிடம் போய் கேட்டால் அவர் சொல்லியிருக்கிறார் டிரைவர் டீச‌ல் இல்லை அடிச்சுக் கொண்டு வர‌ப் போயிட்டார் என்று ...எவ்வளவு நேர‌த்தால வருவார் எனக் கேட்டால் தெரியாது என சொல்லியிருக்கிறார்.

அக்கி .....  மெயில் றெயின் எண்டாலே இப்பிடித்தான் . நான் இலங்கையிலை நிண்டபொழுது அனுபவிச்சதை நீங்களும் அனுபவிச்சிருக்கிறியள் :icon_mrgreen: . எனக்கு அனுராதபுரத்துக்கும் குருநாகலுக்கும் இடையிலை இரவு ஒரு மணிக்கு நடுக்காட்டிலை நிப்பாட்டிபோட்டான் சிங்கன்  ^_^ . விடியப்பறம்   நாலுமணி வரைக்கும் கோச்சி அரக்கேலை . இதுக்குள்ளை கறன்ற் வேறை இல்லை .  " கொறா கட்டிய " வுக்கு பயந்து ஜன்னல் எல்லாம் பூட்டு  :( .  அக்கி என்ரை நிலமையை யோசிச்சு பாருங்கோ :( ??? என்னை வறுத்து எடுப்போட்டாங்கள் அக்கி :lol: :lol: . ஆலவர்ணம் இல்லாமல் கதை தந்ததுக்கு வாழ்த்துக்கள்  :) .  ஆளுமை என்கின்ற விடையம் , சிறுவயதில் குடும்பச்சூளலிலும் தங்கியிருக்கின்றது . வீட்டில் மூத்தவர் பெண்ணாகவோ அல்லது ஆண்களுக்கு ஒரு பெண்ணாகவோ இருந்தால் ஆளுமை கூடியவர்களாக இருப்பார்கள் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்
ரதியின் அனுபவத்தின் படி தான் அங்கு இருந்திருந்தால் அம்மா மாதிரி பயந்து கொண்டு புகையிரதத்தில் இருந்திருப்பார் என்றும் தனக்கு வெளிநாட்டுக்கு வந்ததால் அந்த துணிவு வந்தது என்றும் கூறி உள்ளார்.ரதியை போல் இன்னும் பலரும் இருக்கலாம். ஆனால் அங்கிருந்தால் கோழை அல்லது வீரர் என்றோ , இங்கிருப்பவர் கோழை அல்லது வீரர் என்றோ வரையறுக்க முடியாது.
 
ரதி என்ற பெண் வெளிநாட்டில் பெற்ற அனுபவங்களை ( நல்லதோ கெட்டதோ) அங்கிருக்கும் பெண் பெற்றிருக்க முடியாது தானே !!!
  • கருத்துக்கள உறவுகள்
 
ரதி என்ற பெண் வெளிநாட்டில் பெற்ற அனுபவங்களை ( நல்லதோ கெட்டதோ) அங்கிருக்கும் பெண் பெற்றிருக்க முடியாது தானே !!!

ரதி  என்பது பெண்ணின்  பெயர்.

ஆனால் அதை இங்கு சுமப்பவர் பெண் தான் என்று எதை வைத்துச்சொல்கின்றீர்கள் நுணா?

அப்படி அவர் பெண் இல்லை  பெண் பெயரில் வரும் ஆண் என்றால் உங்களது கணிப்பு

தலை கீழாகுமே...???

(ரதி  தான் ஒரு  பெண்தான் என எங்கும் எழுதியதாகக எனக்கு ஞாபகமில்லை)

  • கருத்துக்கள உறவுகள்

இதைப் பார்த்த அம்மா சும்மா இருப்பாவோ வா இறங்குவோம் என கத்துறா...

நடுத் தண்ட‌வாளத்தில ரெயினை விட்டுப் போன டிரைவர் எப்படியும் வந்து ரெயினை எடுப்பான்.

உங்களுக்கு காலும் ஏலாது.பிளட்போமில் ரெயின் நிக்காட்டில் இறங்கிறது எவ்வளவு கஸ்ட‌ம் என சொல்லிப் பார்த்தும் கேட்கிறா இல்லை...

கடைசியில் அம்மாட‌ கத்தல் தாங்கேலாமல் இறங்குவோம் என சொல்லி தம்பியும்,நானும் சேர்ந்து அம்மாவை தூக்கி இறக்கி,நான் கொண்டு வர‌ இருந்த சூட்கேசுகளை இறக்கி...
 
என்ன நுணா

கதையை  வடிவா வாசிச்சீங்களா?

அம்மா தான் இறங்கச்சொல்கிறா

ரதி

வேண்டாம் உள்ளுக்கேயே  இருப்பம் என்கிறார்..........

ரதியின் அனுபவத்தின் படி தான் அங்கு இருந்திருந்தால் அம்மா மாதிரி பயந்து கொண்டு புகையிரதத்தில் இருந்திருப்பார் என்றும் தனக்கு வெளிநாட்டுக்கு வந்ததால் அந்த துணிவு வந்தது என்றும் கூறி உள்ளார்.ரதியை போல் இன்னும் பலரும் இருக்கலாம். ஆனால் அங்கிருந்தால் கோழை அல்லது வீரர் என்றோ , இங்கிருப்பவர் கோழை அல்லது வீரர் என்றோ வரையறுக்க முடியாது.
 
ரதி என்ற பெண் வெளிநாட்டில் பெற்ற அனுபவங்களை ( நல்லதோ கெட்டதோ) அங்கிருக்கும் பெண் பெற்றிருக்க முடியாது தானே !!!

ரதி  என்பது பெண்ணின்  பெயர்.

ஆனால் அதை இங்கு சுமப்பவர் பெண் தான் என்று எதை வைத்துச்சொல்கின்றீர்கள் நுணா?

அப்படி அவர் பெண் இல்லை  பெண் பெயரில் வரும் ஆண் என்றால் உங்களது கணிப்பு

தலை கீழாகுமே...???

(ரதி  தான் ஒரு  பெண்தான் என எங்கும் எழுதியதாகக எனக்கு ஞாபகமில்லை)

றதி தான் பெண் தான் என்று சொல்லியிருகிறா, அவவின் புறோபயிலில் தான் female என்று தான் போட்டிருக்கின்றா! அலைக்கு வந்த ஒரு warning point க்குக் காரணமே இது தான். அலை, றதியை பெண் இல்லை என்று சொன்னது, (அதை அவா நிர்வாகத்திற்கு முறையிட்டு, அவா தான் முறையிடப்போவதாகச் சொன்னவா, முறையிட முன்)

ரதி

Member Since 14 Nov 2008

OFFLINE Last Active Private

Find content

Community Stats

  • Groupகருத்துக்கள உறவுகள்
  • Active Posts6,280
  • Profile Views1,090
  • Member TitleAdvanced Member
  • AgeAge Unknown
  • BirthdayBirthday Unknown
  • Gender
    Femalefemale.png
  • Location
    தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests
    வாசித்தல்
     
ரதி

Member Since 14 Nov 2008

OFFLINE Last Active Private

Find content

Community Stats

  • Groupகருத்துக்கள உறவுகள்
  • Active Posts6,280
  • Profile Views1,090
  • Member TitleAdvanced Member
  • AgeAge Unknown
  • BirthdayBirthday Unknown
  • Gender
    Femalefemale.png
  • Location
    தேம்ஸ் நதிக்கரையோரம்
  • Interests
    வாசித்தல்
     
இதுக்கும் ஒரு warning point வருக்குதோ அல்லது இன்றிலிருந்து  அலைமகள் யாழிலிருந்து அவுட்டோ தெரியாது, பார்க்கலாம்.

சொறி றதி குறிப்பிட்டதிற்கு!

அனுபவ பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.

ஆனால் எனக்கு ஒருவிடயம் புரியவில்லை.

இருந்த இடத்தில் இருப்பவன் கோழையா?

வேறு இடம் நகர்ந்து எதையாவது தேடி ஓடுபவன் கோழையா?

வெளியில் இருந்து சென்றுவிட்டு அங்கு எல்லாவற்றையும் நேரடியாக பார்த்து உணர்ந்து புரிந்து நடப்பவர்கள் கோழைகள் என்பது சரியா???? :(

அண்ணா, ஒரு train இல்லாவிட்டால் அடுத்த train இல் செல்வது தவறில்லை. ரதி அக்காவை அவர் அம்மா பேசும் போது பயப்பிட்டு பேசினாரோ தெரியவில்லை. அந்த அர்த்தத்தில் தான் நான் நோக்கினேன்.

தாயகத்தில் இருப்பவர்கள் பயப்படுவதற்காக அவர்கள் கோழை என்றில்லை. அவர்களுக்கு அங்கிருக்கும் ஆபத்துகள் தெரிந்ததால் அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதையும் நாம் மறுக்க முடியாது.

நிச்சயமாக இங்கிருந்து செல்வோர் ஒரு கிழமை அல்லது ஒருமாதம் நின்று விட்டு வரும் போது நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் தெரிய வாய்ப்பில்லை. எனவே துணிச்சலும் இருக்கும். அதனால் தான் நாட்டுக்கு சென்று வருவோர் நாடு நன்றாக இருக்கு என்று சொல்வார்கள். தொடர்ந்து நாட்டில் இருந்தால் தான் பல பிரச்சினைகள் தெரிய வரும்.

ஆனால் ரதி அக்கா 2005 ஆம் ஆண்டு, அதாவது சமாதான காலத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். சமாதான காலத்திலும் சில பிரச்சினைகள் இடம்பெற்றாலும் 2006 இற்கு முன் ஓரளவு பயமில்லாமல் தான் போக்குவரத்து செய்தார்கள் என்று நினைக்கிறேன். அதன் அடிப்படையில் நாம் கருத்து வைத்தோம்.

Edited by துளசி

என்ன நுணா

கதையை  வடிவா வாசிச்சீங்களா?

அம்மா தான் இறங்கச்சொல்கிறா

ரதி

வேண்டாம் உள்ளுக்கேயே  இருப்பம் என்கிறார்..........

இது தான் நுணா அண்ணாவின் வரி.

"ரதியின் அனுபவத்தின் படி தான் அங்கு இருந்திருந்தால் அம்மா மாதிரி பயந்து கொண்டு புகையிரதத்தில் இருந்திருப்பார் என்றும் தனக்கு வெளிநாட்டுக்கு வந்ததால் அந்த துணிவு வந்தது என்றும் கூறி உள்ளார்."

இதில் எனக்கு விளங்கியதன்படி ரதி அக்கா அங்கிருந்தால் தானும் பயந்து கொண்டு இருந்திருப்பார் என்ற கருத்தை தான் நுணா அண்ணா முன்வைத்துள்ளார். சம்பவம் புகையிரதத்தில் நடைபெற்றது என்பதால் "புகையிரதத்தில்" என்ற சொல்லை சேர்த்துள்ளார். நீங்கள் அதிலுள்ள "புகையிரதத்தில் இருந்திருப்பார்" என்ற சொல்லை முக்கிய பொருளாக கருதி பதிலெழுதி இருக்கிறீர்கள்.

அந்த சொல் இரு அர்த்தத்தை தரும்.

  • புகையிரதத்தில் (சம்பவ இடத்தில்) பயந்து கொண்டிருந்திருப்பார். (உதாரணமாக அவர் அம்மா வெளியே போவம் என்று சொன்னது அவர் பயத்தை காட்டுகிறது.)
  • பயந்து புகையிரதத்தினுள்ளேயே இருந்திருப்பார்.

இதில் நுணா அண்ணா கூற வந்தது முதலாவது அர்த்தம். நீங்கள் விளங்கியது இரண்டாவது அர்த்தம். இன்னொருக்கா வாசித்து பாருங்கோ... :D

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
முதலில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
 
ரதி அந்தாள் (ரைவர்)தனக்கு தான் டீசல்(கசிப்பு)அடிக்க போனவர்.  :D

டிரைவர் தண்ணீ அடிக்க போயிருப்பான் என்று தான் தம்பியும் சொன்னவன் :lol:
 
புலம் பெயர்ந்த பெண்கள் சிலரே துணிவானவர்களாகவும் மனோதிடம் உள்ளவர்களாகவும் மாறி இருக்கிறார்கள் பலர்  துணிவையும் மனோதிடத்தையும் இழந்தவர்களாக எதையும் முடிவெடுக்கும் துணிச்சல் அற்றவர்களாகவும் பல வருடங்கள் சென்ற பின்னும் வாழ்க்கிறார்கள். நிதானம் என்பது பலரிடம் இல்லை.

புலம் பெயர்ந்ததால்தான் மனோதிடமும் துணிச்சலும் உருவாகியது என்று நீங்கள் கூறுவதை ஏற்க முடியவில்லை. அடிப்படையில் உங்களுக்குள் இருக்கும் ஆளுமை வெளிப்பட்டிருக்கிறது. அடிப்படைக்குணம் எந்த இடத்தில் இருந்தாலும் மாறாது.

உண்மை தான் அக்கா...நானும் இங்கே தனியே வந்து,உலகம் அடிபட்டு,கற்றுக் கொண்டது...ஆனாலும் வாழ்க்கையை இன்னும் முழுமையாக கற்கவில்லை...இன்னும்  நான் அடி வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன்...அனுபவத்தை விட சிறந்த பாடம் ஒன்றுமில்லை.
 
மனதில் கவலைகள் இல்லாத போது துணிச்சலான முடிவுகள் எடுக்க கூடியதாய் இருக்குது...இதே கவலையே வாழ்க்கையாகி விட்டால் முடிவுகள் எடுப்பதே கஸ்டமாய் விடும் :(

இங்க வாழ்ந்த / பயண அனுபவங்கள் சந்தர்ப்பத்திற்கேற்ப நடக்கும்  துணிவைத் தந்திருக்கும்.  

சிறிலங்காவில் சில தடவைதான் புகையிரதத்தில் பிரயாணம் செய்த படியால், இந்த இஞ்சினைக் கழட்டிட்டு  தனியே டீசல் அடிக்க 'joy riding'  போனது சுவாரசியமாக இருக்கிறது.

புலம் பெயர்ந்து வந்தனால் தைரியத்தையும்,பொறுமையும்,அனுபவத்தையும் மனோ திட‌த்தையும் கொஞ்ச‌மாவது நான் கற்றுக் கொண்டேன்...ஊரிலே இருந்திருந்தால் நானும் இப்படி எல்லாத்திற்கும் பயந்து கொண்டு இருந்திருப்பேனோ தெரியாது  :unsure:

அக்கை லொஜிக் இடிக்குதே :icon_mrgreen: ???  எனக்கெண்டால் ஆர்வக்கோளாறிலை எக்குதப்பாய் கையை வைச்சுப்போட்டியள் போலை கிடக்கு  . உங்களிட்டை ஒரு கேள்வி கேக்கவேணும்  :unsure:  . நீங்கள்தானே எண்டு கேக்கிறன் . இந்த ஊரிலை நிண்டு கடைசிவரைக்கும் போராடின அவ்வளவு பெண்போராளியளும் பயந்து கொண்டும் , ஆழுமை இல்லாமலோ இருந்தவை :o :o  ???? அவயின்ரை சரித்திரங்களை உலகமே திரும்பி பாத்திது . நீங்கள் என்னெண்டால் புலத்துக்கு வந்ததாலைதான் தையிரியம் வந்ததாய் சொல்லிறியள் . எல்லாரும் கேட்டு கொண்டு இருக்கினம்  :wub:  . இதையே நான் சொன்னால்  ????

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வேறு அனுபவங்களையும் பகிருங்கள்.

உண்மையில் நானும் நாட்டில் இருந்ததை விட புலம்பெயர்ந்த பின்னர் தான் பல அனுபவங்கள் மூலம் பல விடயங்களை கற்றுக்கொண்டேன். தனியாக துணிச்சலுடன் அனைத்து இடங்களுக்கும் சென்று வரும் ஆற்றல் எனக்கு இப்பொழுது உண்டு. :) அதற்கு காரணம் இங்கு தனியாக நான் வசிப்பதாலும் என்று நினைக்கிறேன். :unsure:

ஏனென்றால் தமது சொந்தங்கள் வீட்டில் வந்திருக்கும் நபர்களில் பலர் (எல்லோரும் அல்ல) எங்கு செல்வதென்றாலும் சொந்தக்காரரின் உதவியுடன் தான் செல்வார்கள். அல்லது என்ன செய்வதென்றாலும் யாராவது ஒருவர் தேவை. தனித்து இயங்க மாட்டார்கள். துணிவும் அவர்களுக்கு குறைவாக தான் உள்ளது. குறைந்தளவில் ஆண்கள், கூடுதலாக பெண்கள்.

ஆண்கள் வந்தவுடன் வேலைக்கு செல்வதால் வேலையும் வீடும் நண்பர்களும் என்று செல்கிறது. சில முக்கிய விடயங்களுக்கு இன்றும் பலர் இன்னொருவரின் உதவியை நாடுவதை அவதானித்திருக்கிறேன்.

பெண்கள் வரும்போதே வேறு யாராவது ஒருவரின் கட்டுப்பாடு இருக்கும். கணவன் அல்லது அவர்கள் சித்தி, மாமா, மாமி என்று யாராவது இருந்தால் தனியே தமது அலுவல்களை பார்க்க செல்ல அனுமதிக்காமல் தாமும் சேர்ந்து செல்வார்கள். எனவே இப்பொழுதும் துணிச்சல் என்பது இல்லை. இதற்கு நான் குறித்த பெண்ணை குறை சொல்ல மாட்டன். சொந்தக்காரரில் தான் குறை சொல்வேன். வந்தவுடன் அப்பெண்ணை தனியே விடாமல் சேர்ந்து செல்வது நல்லது. ஆனால் கொஞ்ச காலத்தின் பின்னர் பிரச்சினைக்குரிய இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களுக்கு அவர்களையே அவர்கள் அலுவலை பார்க்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் வேலைகளை செய்ய விட வேண்டும்.

:lol: :lol:

நான் ஊரில் இருந்து முதல்,முதல் வரும் போது எனக்கு ஒழுங்காய் சமைக்க கூடத் தெரியாது...அம்மா தன்ட கைக்குள்ளே வைச்சுத் தான் எங்கள வளர்த்தவ...அப்பாவில் வேலை காரணமாக நாங்கள் இருந்தது வேறு இடம் என்பதால் பள்ளி விட்டால் வீடு,வீடு விட்டால் பள்ளி என்று தான்  இருந்தோம்...முதல்,முதல் இங்கே வரும் போது கண்னைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருந்தது.

வந்த கொஞ்ச நாள் உறவினர் ஒரு,சிலர் உதவியாய் இருந்தார்கள்...பிறகு சந்தர்ப்ப சூழ்நிலையால் நான் தனித்து இயங்க வேண்டிய சூழல் உருவாகியது.அதுவே வாழ்க்கையில் நிறையக் கற்றுத் தந்தது...யார் நல்லவர்,கெட்டவர் என்று கண்டு பிடிப்பதே முதலில் கஸ்ட‌மாயிருந்தது இப்ப,இப்ப கொஞ்ச‌ம் பழகிட்டேன்...வந்ததில் இருந்து நிறைய ஏமாற்றங்களையும்,தோல்விகளையும் சந்தித்து வாழ்க்கை ஓர‌ளவுக்கு வாழப் பழகிட்டேன்.

துளசிநீங்கள் எழுதின மாதிரி பலரை நான் சந்தித்து இருக்கிறேன்...எனக்கும் வாழ்க்கையில் தோல்விகள்,ஏமாற்ற‌ங்கள் இல்லா விட்டால் நானும் இப்படித் தான் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருப்பேன்...எல்லாத்துக்கும் மற்ற‌வர்களை நம்பிக் கொண்டு,அவர்களை எதிர் பார்த்துக் கொண்டு கடைசி வரைக்கும் வாழ்ந்திருப்பேன்...அப்படி இல்லாமல் ஓர‌ளவுக்கு தன்னம்பிக்கையும்,தைரியமும் உள்ள பெண்ணாக இங்கு வாழ்வதற்கு வாழ்க்கையில் நான் பட்ட அடிகளே கார‌ணமாக இருக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.