Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமியார் வீடு...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன்.......

 

இதுவரை நான் ஜீவாவின் இந்தக் கதையைப் படிக்கவில்லை. வேண்டுமென்றே தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தேன். கதை முற்றுப் பெற்றவுடன் முழுமையாக ஒரேதடவையில் வாசித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தேன். தற்போது ஜீவா இத்துடன் நிறுத்தி விட்டதாக வேறு ஒரு திரியில் அறிந்தேன். வருத்தத்துக்குரிய செய்தி அது. எனினும் அவர் அதனை மறுபரிசீலனை செய்தால் மகிழ்ச்சி அடைவேன். எனினும் ஏலவே இன்னுமொரு திரியில் ஒர் அன்பர் சொன்னதன்படி, உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை நீங்கள் வஞ்சகம் இல்லாமல் எழுதுகிறீர்கள், ஆனால் அதுவே நாளைக்கு உங்களுக்கு ஆப்பாகி விடக்கூடாது.

  • Replies 276
  • Views 24.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
இது அவசரப்பட்டு எடுத்த தப்பான முடிவு ஜீவா...நீங்கள் எழுதுகின்ற இத் தொடரை வைத்து ஒருத்தரும் உங்களை மனம் நோகப் பண்ணவில்லைத் தானே! அத்தோடு உங்கள் சொந்த விபரங்களை இத் தொடரில் நீங்கள் எழுதப் போவதில்லை தானே!...நீங்கள் சரியான சென்சிட்டிவ் ஆக இருப்பீர்கள் என நினைக்கிறேன்...நல்ல ஒரு தொடரைத் தந்து கொண்டு இருந்த நீங்கள் கண் பட்ட மாதிரி எழுதாமல் விடுவது நல்லதில்லை...எல்லோரது கருத்தை செவி மடுத்து தொடரை வழமையாக எழுதுவது மாதிரி எழுதுவீர்கள் என்ட நம்பிக்கையுடன்....
 
[மாமா சொல்லைக் கேட்காதீங்கோ :lol:  அவர் பிழையான முடிவுகளைத் தான் எடுக்க தூண்ட்வார் :D ...அவர் கொஞ்சம் பயந்தவர் :icon_idea: ]
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்புடன் தம்பி ஜீ வாவுக்கு ............

........அருமையான் காதல்  கதையை பா தியில் நிறுத்தி விடீர்களே.. மீண்டும் என்  இளமைக் கால நினை வுகளுடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இவர்களுக்காக ஏ ன் உங்கள் திறமையை .. முடக்க வேண்டும்.  சவாலை  சந்தியுங்கள் ஒரு தொடர் மட்டுமாவது   எழுதி சுபம் போட்டு முடியுங்கள்.  இங்கு ஊதி ஊதி  பெரிதாக்குபவ ர்கள் தான் அ திகம். பிளீஸ் ஒரே ஒரு பதிவு மட்டும் போட்டு நிறைவாக்குங்கள்.

நிலா அக்கா

 

அக்கா,

நான் இணைந்ததிலிருந்து இன்றுவரை தனிமடலில் கூட தொடந்து உற்சாகம் தரும் ஒருவர்.

ஒரு பகுதி அல்ல முழுவதும் எழுதி முடிக்கிறேன் அக்கா.

 

நன்றி நிலா அக்கா

என்ன மூண்டுதரம் எக்கோ பண்ணுது? :D

 

எடிட் பண்ண, எல்லா திரிகளிலும் எழுத அனுமதி இல்லை மாம்ஸ்.

அதான் எக்கோ பண்ணுது.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜீவா !!!!! குளத்துக்கு பயந்து பம்பரை கிளீன் பண்ணாமல் இருக்கேலுமோ .  நீங்கள் ஆர் எண்டு எழுத்திலை காட்டவேணும் .  சும்மா இந்த கதையளை விட்டுட்டு கதையை எழுதுங்கோ . பிரியா பாவமல்லோ .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 10

 

நாளை ஒருநாள் தான் கடைசி நாள் குடும்பமாக வெளியே போக மறுநாள் விஷாலிக்கு ப்ளஸ் டூ பரீட்சை இருக்கு என்றால், லச்சி அத்தைக்கும் வேலை. அதாலை அவங்களுக்கு யாரோ சொல்லி இருக்கிறார்கள் "புட்லூர்" என்ற இடத்தில் ஒரு அம்மன் கோவில் இருக்கு என்றும், அது மிகவும் பிரசித்தி பெற்றது என்றும்.

லச்சி அத்தை அதிகம் எங்கும் வெளியே போயிராததால் அவர் விரும்பும் இடத்திற்கு போவதாய் முடிவு.

 

ஏற்கனவே திருத்தணிக்கு பஸ்ஸிலை போய் குலுங்கின குலுக்கிலை எனக்கு நாரிப்பிடிப்பே வந்திட்டுது, இரவு தான் அயோடெக்ஸ் போட்டு மசாஜ் பண்ணிவிட்டவள் மறுபடியும் பஸ்ஸா?????

 

நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து பூந்தமல்லி போய் பிறகு அங்கிருந்து ஆவடி போய் ஆவடியிலிருந்து நேரே புட்லூர் தான்.

 

எந்த இடத்திற்கு போனாலும் ஒவ்வொரு கதை வைத்திருந்தாள் என்னிடம் சொல்வதற்கு..

பிறந்தது, வளர்ந்தது,ஸ்கூல் போனது, காலேஜ் போனது, டிகிறி முடிச்சது,வேலை செய்தது என்று சென்னையில் அவள் போகாத இடமே இல்லைப்போல என்று ஆச்சரியப்பட வைத்தது.

 

"புட்லூர்" மலையாளப்பெயர் போலவோ இல்லை கன்னடப்பெயர்போலவோ இருந்தாலும் சுத்த தமிழ்கிராமம்.

 

ஒற்றைவழி குன்றும் குழியுமான பாதை

செம்பாட்டு மண்

நாற்று நடும் பெண்கள்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை.

தமிழ்திரைப்படங்களில் வரும் நாற்று நடும் காட்சியை அப்படியே நேரில்கண்ட மகிழ்ச்சி.

 

பஸ்ஸில் இருந்து இறங்கியதும், அருகில் நின்றவர்களிடம் விசாரிக்க போகும் போதே அடையாளம் கண்டுகொண்டவர்களாய்

 

"என்ன கோயிலுக்கா? அப்படியே நேரில் போங்கள், பக்கத்திலை தான்" என்றார்கள்

அவர்களின் பேச்சிலேயே அந்த ஊரின் விருந்தோம்பல் தெரிந்தது.

 

கிராமம் என்றதனாலேயோ என்னவோ அவ்வளவு துப்பரவாக வைத்திருந்தார்கள். ஒவ்வொரு வீடும் எட்டத்திலை தான் இருந்தது ஓரளவு பெரிய கல்வீடுகளும்,குடிசைகளும் என்று ரம்மியமாய் இருந்தது.

 

"இப்படி ஒரு இடத்திலை காணிவாங்கி வீடுகட்டினால் எப்படி இருக்கும்? சூப்பரில்லே"

எந்த தொந்தரவும் இல்லாமல்...,

காலையிலையே பேப்பர் போடுறவன், பால் கொண்டு வாறவன், தண்ணிக்கான் போடுறவன், பழைய சாமான் வாங்குறன், கீரை விக்குறவன், குச்சி மிட்டாய், குருவி ரொட்டி விக்கிறவன் என்று எத்தனை பேற்றை கூச்சல் இல்லாமல்.

 

"நீ ... நான் ..... நம்ம ரெண்டு பிள்ளையள் மட்டும்.."

 

"போடா.. என்னாலை இப்படி ஒரு இடத்திலை இருக்க முடியாது, எப்பவுமே கூட்டமா, இரவிரவா பிசியா இருக்கிற இடத்திலை

இருக்கிறது போல வராது, எங்களுடைய தாலாட்டே அந்த இரைச்சலும் அந்த மண்ணின் மணமும் தான்."

 

"அப்ப ஜேர்மனிக்கு வந்து என்ன செய்யப்போகிறாய்?"

 

"ஏன்"?

 

"ஜேர்மனி என்றதும் அதிகம் கற்பனை பண்ணாதே வானுயரக் கட்டிடங்கள்,மேர்சிடஸ் பென்ஸ்,அவுடி,பெராரி,லம்போகினி கார் முதல்,ஆடம்பர பஸ் மணிக்கு 300மைல் வேகத்தில் செல்லும் புகையிரதம் அருகருகே உயர் தரம் வரைக்கும் பாடசாலைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், ஒன்லைனில் தட்டிவிட்டதும் என்ன வேண்டுமோ உடனே கிடைக்கும் வசதி புதிது புதிதாக வரும் அத்தனை தொழில்நுட்பங்களும் கிடைக்கும், ஆனால் சென்னையைப் போல மட்டும் இப்படி காது கிழியும் இரைச்சல்,கறிக்கடை போன்ற கூட்டம் எதுவுமே இருக்காது"

 

"ரொம்ப கஸ்டம் தான் போல .."

 

"இதுக்கெல்லாம் பீல் பண்ணாதையடி ஃபோரடிச்சால் ஒரு குட்டிப் பாப்பா பெத்துக்கலாம்."

 

"டேய் .. குட்டிச்சாத்தான் கடுப்பேத்தாதை டா என்னை.!!  நாலைஞ்சு வருசத்துக்கு அந்த நினைப்பே இருக்கக் கூடாதுடா."

 

தண்ணிவிடாய்க்கிறது போல இருக்க அருகில் இருந்த பெட்டிக்கடையில் தண்ணி வாங்க..

 

"டேய் என்னடா அந்த பொம்பிளை  உன்னையே பார்க்கிறாள்"??

 

"அழக்காகாகாகாகாகாகாகாகஆஆஆஆஆ..... இருக்கேன்லே.."

 

"டேய்.. பிரியாக்கு கோவம் வர வைக்காதை அடிச்சிடுவேன் ஓடிடு"...

 

கொஞ்ச தூரம் நடந்திருப்போம். ஒரு வீட்டில் பெரிய பதாகையில்

"தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனினதும், வீரப்பனினதும் உருவப்படம் பொறித்து இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று இருந்தது"

 

உண்மையில் என்மனம் அடைந்த பூரிப்புக்கு அளவே இல்லை. கூகிளில் தேடினாலும் கிடைக்குமோ தெரியாது அப்படி ஒரு இடத்தில் இதைப்பார்க்கும் போது எத்தனை பேரின் இதயத்தில் எம் தலைவர் இருக்கிறார் எனும் போது வார்த்தைகளுக்கு அப்பால் உணர்வுகள் தான் ஆர்ப்பரித்தன..

 

"பாரு.. சொந்த நாட்டிலை மாண்ட வீரர்களுக்காய் ஒரு செங்கல் கூட நடமுடியாதளவு அடக்குமுறைக்குள் எங்கள் மக்கள் இருக்கும் போது .. எத்தனை உறவுகள் தம் மனத்தில் எம்மைச் சுமக்கின்றனர்."

 

"உண்மை தான் இங்கு இப்படி எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஆனால் இந்த அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் குழப்பி தம் சுயநலத்துக்காக பாவிக்கிறார்கள்."

 

"அட உனக்கு அரசியிலும் நல்லா வருதடி  செல்லம்."

 

போகும் போது அந்த வீட்டின் வெளியே ஆக்கள் இருந்ததால் போட்டோ எடுக்க முடியவில்லை.. "சே.. நந்தி போல நிக்குறாங்களே"

"வரும்போது எடுப்போம் வாங்கோ"

 

"அம்மா.. வாங்கோம்மா இஞ்சை சிலிப்பரை கழட்டி விடுங்கோ"

"ஆமா என்ன தர.. இந்த தேசிக்காய் மாலையை அம்மனுக்கோ போடுங்கோ வளையலை ஜயரட்டை குடுங்கோ அவர் அம்மனுக்கு போட்டிட்டு வேறை தருவார். இது தான் இங்கு பிரசாதம். தேசிக்காய் மாலையையும் கேட்டு வாங்கிகொண்டு போங்கோ, அர்ச்சனைக்கு இந்தாங்கோ பூ,பழம்,தேங்காய் இதை அங்கை குடுங்கோ, அதை இங்கை குடுங்கோ என்று கேட்காமலே விற்ற அந்த பெண்ணின் வியாபார தந்திரம் மலைக்க வைத்தது"

 

கூட்டம் அதிகம் இருக்கவில்லை, தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற வாசகமும், திருவள்ளுவருக்கு கூட சிலை வைத்து வழிபடுவதும் புதுமை.

 

வாயில் தாண்டி உள்ளே போனதும் ஆச்சரியம். மண்ணால் செய்யப்பட்ட பெரிய அம்மன் படுத்திருப்பது போல, அம்மன் கர்ப்பிணியாக காட்சியளித்தார்.

"அம்மன் எப்ப குட்டிமா கர்ப்பிணி ஆனா????? நான் எங்கையும் இப்படி படிக்கலையே"

 

"இந்த ஊரிலை இப்படி ஒரு ஜதீக கதையிருக்காம்,கிராம தேவதை அது தான் கர்ப்பிணி போல அம்மன் செய்து கும்பிடுறாங்க னு கதை சொன்னாள்"

 

கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வந்து அம்மன் முன் வந்ததும் ஜயர் மந்திரம் ஓதிவிட்டு அவளை முழங்காலில் இருக்கச்சொல்லி

துப்பட்டாவை இரு கைகளாலும் பிடிக்கச்சொல்லி எலுமிச்சை மாலையை அம்மனின் வயிற்றில் வைக்கும் போது ஓடிவந்து மடியில் விழுந்தது எடுத்ததும் அம்மனின் கையில் இருந்த வளையலைக் கையில் போடச்சொல்லித் தந்தார்.

 

வேளியே வந்ததும் வேம்பும்,அரசும் பின்னி பிணைந்திருக்கும் மரத்துக்கு கீழே இருந்த சின்ன சந்நிதானத்தில் மஞ்சள் குங்குமம் கொட்டி கும்பிட்டு சிறிது நேரம் இருந்து விட்டு வருகிறோம்.

 

அத்தை வெளியே போனதும் நாங்கள் இருவரும் மாறி மாறி புகைப்படம் எடுப்பதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த வயதான தாத்தாவின் முகத்தில் சாந்தமான புன்சிரிப்பு..

"ஏதோ சொல்வது போல இருந்தது, ஏனோ எனக்கும் அவரிடம் பேச வேண்டும் போல இருந்தாலும் எப்படி? எதைப்பேச??"

 

"உணர்ச்சிகளுக்கு கூட பாசை இருக்கு போல என்று நினைத்தாலும், அவரின் அந்த முகக்குறிப்புக்கு என்ன பதில் என்பதைத் தான் என்னால் உணரமுடியவில்லை.."

 

வெளிய வந்ததும் எப்படா அதை போட்டோ எடுப்பது என்று துடித்தது மனது.

601129_408642182543404_941010116_n.jpg

 

வரும் போதும் வீட்டில் யாரோ பேசும் சத்தம் கேட்டதால் தூரத்திலிருந்து போனில் படம் எடுத்த பின் தான் மனம் அமைதி கொண்டது.

 

கிராமம் என்பதால் பலமணிநேரத்திற்கு ஒரு முறை தான் பஸ் என்பதால் நீண்ட நேரக்காத்திருப்பின் பின் பஸ் பயணம்.

"நெருக்கித் தள்ளும் கூட்டம் சில மணி நேரம் என்னையும் அவளையும் பிரித்து வேடிக்கை பார்த்தது..

கண்களின் மோகம் செந்தரையில் கொட்ட..

கிராமத்து அழகியை கண்களால் கற்பழித்தேன்.."

 

தொடரும்.....

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றைவழி குன்றும் குழியுமான பாதை

செம்பாட்டு மண்

நாற்று நடும் பெண்கள்

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை.

 

இயற்கையுடன் மனம் ஒன்றாக இணையும் போது மட்டுமே, மனித மனம், உள்நோக்கிய பயணத்தைத் தொடங்குகின்றது!

 

உங்கள் பயணக் கதை, மண்ணோடும், அதில் வாழும் மக்களோடும் பயணிப்பது, மிகவும் நன்றாக உள்ளது.

 

தொடருங்கள், ஜீவா! :D

"ரொம்ப கஸ்டம் தான் போல .."


"இதுக்கெல்லாம் பீல் பண்ணாதையடி ஃபோரடிச்சால் ஒரு குட்டிப் பாப்பா பெத்துக்கலாம்."
 

"டேய் .. குட்டிச்சாத்தான் கடுப்பேத்தாதை டா என்னை.!!  நாலைஞ்சு வருசத்துக்கு அந்த நினைப்பே இருக்கக் கூடாதுடா."
 

தண்ணிவிடாய்க்கிறது போல இருக்க அருகில் இருந்த பெட்டிக்கடையில் தண்ணி வாங்க..
 

"டேய் என்னடா அந்த பொம்பிளை  உன்னையே பார்க்கிறாள்"??
 

"அழக்காகாகாகாகாகாகாகாகஆஆஆஆஆ..... இருக்கேன்லே.."
 

"டேய்.. பிரியாக்கு கோவம் வர வைக்காதை அடிச்சிடுவேன் ஓடிடு"...

 

சினிமாவின் தாக்கம் சிறிது தூக்கலாக இருந்தாலும் , சூழ்நிலையை வெளிப்படுத்தும் பக்குவம் உங்களிடம் அதிகமாகவே காண்கின்றேன் . நிறைகுடம் தளும்பாது என்ற ஒருசிலர் பட்டியலில்  நீங்களும் உதரணமாகி இருக்கின்றீர்கள் .  வாழ்துக்கள் . தொடருங்கோ .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க நல்லாத்தான் இருக்கு.. :D

"போடா.. என்னாலை இப்படி ஒரு இடத்திலை இருக்க முடியாது, எப்பவுமே கூட்டமா, இரவிரவா பிசியா இருக்கிற இடத்திலை

இருக்கிறது போல வராது, எங்களுடைய தாலாட்டே அந்த இரைச்சலும் அந்த மண்ணின் மணமும் தான்."

 

"அப்ப ஜேர்மனிக்கு வந்து என்ன செய்யப்போகிறாய்?"

 

"ஏன்"?

 

"ஜேர்மனி என்றதும் அதிகம் கற்பனை பண்ணாதே வானுயரக் கட்டிடங்கள்,மேர்சிடஸ் பென்ஸ்,அவுடி,பெராரி,லம்போகினி கார் முதல்,ஆடம்பர பஸ் மணிக்கு 300மைல் வேகத்தில் செல்லும் புகையிரதம் அருகருகே உயர் தரம் வரைக்கும் பாடசாலைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், ஒன்லைனில் தட்டிவிட்டதும் என்ன வேண்டுமோ உடனே கிடைக்கும் வசதி புதிது புதிதாக வரும் அத்தனை தொழில்நுட்பங்களும் கிடைக்கும், ஆனால் சென்னையைப் போல மட்டும் இப்படி காது கிழியும் இரைச்சல்,கறிக்கடை போன்ற கூட்டம் எதுவுமே இருக்காது"

 

"ரொம்ப கஸ்டம் தான் போல .."

 

சாதாரணமாக வெளிநாடு என்றாலே ஊர் போல் வராது. ஆனால் ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்சில் சில பகுதிகளில் தமிழர்கள் குவிந்து போய் இருப்பார்கள். ஜேர்மனில் அப்படியல்ல. உங்கள் மனைவி ஜேர்மன் வந்ததும் எப்படி சமாளிக்க போகிறாரோ தெரியவில்லை. :)

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் நன்றாகப் போகின்றது  தொடருங்கள் ஜீவா 

  • கருத்துக்கள உறவுகள்

வர்ணனை பிரமாதம். தொடருங்கோ......

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய நடையில்.... தொடர்ந்து எழுதுங்கள் ஜீவா. உங்களுடன் நாமும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா நல்ல எழுத்தாற்றல் கதை சுப்பராய் போகுது...விமானத்தில் நடந்ததை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்

 

உண்மை தான் அக்கா விமானத்தில் நடந்ததில் கால்பங்கு கூட எழுதவில்லை , சிலவற்றை அதிகம் எழுதுவதென்பது

"எமது பல்லைக் குத்தி நாமே மணந்து பார்ப்பது போன்றது" அதனால் தான் பலவற்றை தவிர்த்தேன்.

 

நன்றி உங்கள் கருத்து பகிர்வுக்கு.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான் ரதி! ஜீவாவின் எழுத்தாற்றலை  பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.பயணங்களை எழுத்துவடிவில் தருவதற்கு ஒரு தனியான திறமை வேண்டும்.அது தம்பி ஜீவாவிடமும் நிறையவே இருக்கின்றது. சந்தோசம் ஜீவா!!!!

 

நன்றி தாத்தா,

உங்களைப்போன்ற ஜாம்பவான்களின் ஊக்கம் தான் சிறிதளவேனும் எழுதவேண்டும் என்ற ஊக்கத்தை தருகிறது. :)

ஜுவா அண்மைக்காலமாக  உங்கள் கதையை அனுபவித்து படித்த அளவிற்கு எந்த கதையையும் நான் படிக்கவில்லை.  கதை  சொன்ன விதம் அதற்குள்ளான உணர்வு .  சேர்க்கப் பட்ட நகைச்சுவை.     இன்றைய தலைமுறைக்கு ஒரு  சிறந்த மசாலா படத்தின் கதை வசனத்தை ஒழுதும் திறைமை உங்களிடம் உள்ளது .  வாழ்த்துக்கள்.  யாழில் பகலவனின்  தொடர் கதைக்கு  அடுத்த படியாக  நான் இரசித்து படித்த  தொடர்  இதுதான். :)

 

நாங்கள் வாய்பிளந்து பார்க்கும் எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர் நீங்கள்,

உங்களிடம் இருந்து வரும் ஊக்கம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

நன்றி சாத்திரி அண்ணா.. :)

சாத்த்ஸ் அண்ணா பகலவன் அண்ணா கோமகன் அண்ணா வல்வை அக்கா என்று யாழ் களத்தின் எழுத்துலக ஜாம்பவான்களே அசந்து நிற்கும் போது நான் என்ன சொல்ல இருக்கு அழகான ஒரு திரைப்படம் பார்த்த திருப்த்தி வாழ்த்துக்கள், மீண்டும் ஒரு முறை சென்னைக்கு அழைத்து சென்றதற்கு ....நன்றிகள் :D

 

நன்றி மச்சான். :)

ஜீவா இங்கு எல்லாரும் சொன்ன மாதிரி உங்கள் எழுத்தோடு எல்லோரையும் கட்டிப்போட்டு விட்டீர்கள்.அருமையான பதிவு நன்றி.

 

எப்போதும் தொடந்து ஊக்கம் தரும் ஒருவர் நீங்கள்.

நன்றி சஜீவன் அண்ணா, வரவுக்கும் கருத்து பகிர்வுக்கும். :)

வணக்கம் ஜீவா!

 

இன்று தான் உங்கள் பதிவை வாசித்தேன். முதலாவது பகுதியிலிருந்து இறுதிப் பதிவுவரை ஒரு மூச்சாக வாசித்து முடித்தேன். அதற்குக் காரணம் உங்கள் எழுத்து.

 

நீங்கள் எழுதியிருக்கிற விசயம் ஒன்றும் புதியதல்ல. அனேகமாக அனைவரும் சென்று வருகின்ற விமானப் பயண மற்றும் தமிழகப் பயண அனுபவம் தான். ஆனாலும் உங்கள் எழுத்து நடை கவரக்கூடியதாக இருக்கிறது. தொடர்ச்சியாக வாசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்....

 

தொடர்ந்து உங்கள் படைப்புக்களைத் தாருங்கள். 

 

நன்றி மணிவாசகன் அண்ணா. :)

இன்று தான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது உங்களின் மாமியார் வீட்டுக் கதையை வாசிப்பதற்கு .... உண்மையாகவே நன்றாக அனுபவித்து எழுதி இருக்குறீங்க ஜீவா அண்ணா . உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணித்தது போன்று உள்ளது . அத்துடன் உறவுகளை வெறுக்கும் இக் காலத்தில் கூட்டுக்குடும்பமாக வாழ நினைக்கும் உங்களை பார்க்க பெருமையாக இருக்குறது . இன்னும் நீங்கள் நிறையவே கதைகள் எழுதணும். நாங்கள் வாசிக்க காத்திருக்கின்றோம் .

 

நன்றி அக்கா,

உங்கள் வரவிற்கும், கருத்துப் பகிர்வுக்கும். :)

அன்புடன்.......

 

இதுவரை நான் ஜீவாவின் இந்தக் கதையைப் படிக்கவில்லை. வேண்டுமென்றே தள்ளிப்போட்டுக்கொண்டு வந்தேன். கதை முற்றுப் பெற்றவுடன் முழுமையாக ஒரேதடவையில் வாசித்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தேன். தற்போது ஜீவா இத்துடன் நிறுத்தி விட்டதாக வேறு ஒரு திரியில் அறிந்தேன். வருத்தத்துக்குரிய செய்தி அது. எனினும் அவர் அதனை மறுபரிசீலனை செய்தால் மகிழ்ச்சி அடைவேன். எனினும் ஏலவே இன்னுமொரு திரியில் ஒர் அன்பர் சொன்னதன்படி, உங்கள் தனிப்பட்ட அனுபவங்களை நீங்கள் வஞ்சகம் இல்லாமல் எழுதுகிறீர்கள், ஆனால் அதுவே நாளைக்கு உங்களுக்கு ஆப்பாகி விடக்கூடாது.

 

இன்னும் கொஞ்சம் தான் முடிச்சிடுறேன். படியுங்கள் அண்ணா.

தொடங்கியாச்சு முடிச்சிடணுமே.. இருந்தாலும் உங்கள் எல்லோரினதும் ஆலோசனைகளும்,அறிவுரைகளும் என்னைப் புடம் போடும்.

 

நன்றி அண்ணா உங்கள் வரவிற்கும், கருத்திற்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையுடன் மனம் ஒன்றாக இணையும் போது மட்டுமே, மனித மனம், உள்நோக்கிய பயணத்தைத் தொடங்குகின்றது!

 

உங்கள் பயணக் கதை, மண்ணோடும், அதில் வாழும் மக்களோடும் பயணிப்பது, மிகவும் நன்றாக உள்ளது.

 

தொடருங்கள், ஜீவா! :D

 

இயல்பாகவே எனக்கு பயணங்கள் மிகவும் பிடிக்கும் புங்கை அண்ணா,

பல்வேறு வகையான மனிதர்கள்,பல்வேறு வகையான கலை,கலாச்சாரம் என்று அந்தந்த மண்ணில் இருக்கும் போது அதன் சுகானுபவம் ஆஹா..!!!

 

எல்லாவழியிலும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப அவர்களுடன் ஒருவராக இருக்கும் போது அது ஏதோ புது இரத்தம் பாய்ச்சுவது போல இருக்கும்.

 

உதராணமாய் இங்கையும் பேர்கர்,பிஸ்ஸா சாப்பிட்டு அங்கையும் போய் அதையே செய்வதால் கிடைக்கும் புதுமை என்ன என்பதைத்தான் மனம் பார்க்கும்.

 

வீதியோரம் மாங்காய் விற்பவனைக் காணுகையில் ஊரில் தள்ளுவண்டியில் கரஞ்சுண்டல்,கிளிச்சொண்டு மாங்காய் கொண்டுவருபவன் தான் ஞாபகம் வருவான்,பழைய நினைவுகள் வரும்.

 

இழந்தவற்றை தேடும் போது தான் அது இனிமையாகிறது போல..

 

நன்றி அண்ணா வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு .....(தொடர்ச்சி..) பகுதி - 11

 

கிராமம்,கோயில் குளம் என்றே சுற்றியதால் எனக்கு மட்டுமல்ல ,உங்களுக்கும் கூட அலுப்புத்தட்டியிருக்கும்

ஒரு நாள் மாமா வீடு, பாட்டி வீடு என்று அவர்களின் விருந்தோம்பலில் கழிந்து விட்டது இருக்கும் இந்த மூன்று நாளில்

வாங்கோ ஷொப்பிங் போவம்..

 

மதியம் என்பதால் நாங்கள் ஏறும்போது அவ்வளவு கூட்டம் இருக்கவில்லை, இருக்கை இருந்ததனால் இருந்து விட்டோம். அன்று சனிக்கிழமை என்பதால் கொஞ்ச தூரம் செல்லச் செல்ல கூட்டமும் கூடிக்கொண்டே போனது, தனியார் வகுப்புகளில் இருந்து வரும் பிள்ளைகளின் கலகலப்பிலோ என்னவோ எனக்கு 750ம் இலக்க  பருத்தித்துறை யாழ்ப்பாண பஸ் தான் நினைவுக்கு வந்தது.

 

நான்கு வருடங்களாய் நாங்கள் செய்த அட்டகாசங்கள் கொஞ்சநஞ்சமல்ல...

சீசன் எடுத்தால் CTB யில் மட்டும் தான் போய் வரலாம் என்றதால், ஃபேர்சனல் கிளாஸ் இருக்கு, அந்த புரொஜெக்ட் இருக்கு இந்த புரொஜெக்ட் இருக்கு CTB பஸ் ரைம் எல்லாம் சரிவராது என்று வீட்டை பொய் சொல்லிப்போட்டு எந்த பஸ்ஸிலை ஃபிகருகள் கூட வருகுதோ அதிலை ஏறி நடத்துனர் பின்னுக்கு போ.. பின்னுக்கு போ என்று சொல்லும் போது அவளுகளோடை உரஞ்சிக் கொண்டு போற சுகம் இருக்கே..

 

காலமை எண்டதாலை சிலவேளை பருத்தித்துறையிலை இருந்து வரேக்கை பெருசா கூட்டமிருக்காது, நெல்லியடிச்சந்தியிலை இருந்து ஆரம்பிச்சால் அச்சுவேலி போனதும் சொல்லிவேலையில்லை, கம்பஸ்க்கு, ரெக்னிக்கல் காலேஜ்க்கு, சயன்ஸ்ஹோலுக்கு,விக்னா ரியூசனுக்கு என்று ஏறுற பொடியள், பெட்டையள் இருக்கே சொல்லி வேலையில்லை.. பிறகு அப்படியே ஆவரங்கால்,புத்தூர்,சிறுப்பிட்டி,நீர்வேலி,இருபாலை,நல்லூர் என்று ஒரே கண்ணுக்கு குளிர்ச்சியா தான் இருக்கும்.

 

அதுவரைக்கும் பாக் கை கொழுவி வச்சிருப்பேன், மேல்லை தட்டிலை வைக்க இடம் இருக்கும், எவன் வைப்பான்

நல்ல பிகரா பார்த்து இதை வச்சிருங்கோ இறங்கும் போது வாங்குறேன் என்று குடுத்திட்டு அந்த பிள்ளைய பார்க்குற பார்வை இருக்கே, அதுக்காகவே காலம் முழுக்க படிக்கலாம்.

 

பஸ்ஸிலை இருந்து இறங்கினதும் அந்த பாக்கை யாரும் பார்க்கிறாங்களா என்று சுத்து முத்தும் பார்த்திட்டு முகத்திலை ஒத்தி பார்க்கும் போது ஒரு மெல்லிய சூடும்,அந்த சென்ற் வாசனையும் வருமே... இதுவரைக்கும் நான் யாரட்டையும் சொன்னதில்லை.

 

A9 பாதை மூடிய பிறகு இருந்த காலம் தான் பஸ்ஸில் எங்களை ஹீரோவாக்கிய காலம் என்று சொல்லலாம்.

வல்லை,ஆவரங்கால் சந்தி,நீர்வேலிசந்தி, இருபாலையில் ஆமி பஸ்ஸில் இருந்து எல்லாரையும் இறக்கி சோதனை செய்துவிட்டு தான் அனுப்புவான். வல்லையிலையும், இருபாலையிலும் இறக்கி செக் பண்ணாமல் ஏத்தின நாளே இருக்காது.

 

நமக்கு பப்ளிசிட்டி என்பது ஜென்ரலா பிடிக்காது ஆனால் தற்பாதுகாப்புக்காக அப்பவெல்லாம் சென்றிபொயின்ட் வந்ததுமே மருத்துவ மாணவன் என்று சொல்லி சேட் பொக்கற்றிலை அடையாள அட்டைய குத்திப்போட்டு பாக்கிலை எப்பவுமே stethoscope

வச்சிருப்பேன். ஆமி பார்த்திட்டு இறக்கி நடக்கவெல்லாம் விடமாட்டான் போய் பஸ்ஸிலை ஏறி இரு என்றிடுவான்.

 

எல்லாரும் நடந்து போக நான் மட்டும் பஸ்ஸிலை இருக்கும் போது கொஞ்சம் கெத்தா தான் ஃபீல் பண்ணி இருக்கிறேன்.

அதுவரைக்கும் "காவாலி" போல என்று நினைச்சதுகளின் பார்வையில் கூட ஒரு மாற்றம் தெரிந்தாலும், அதுவே பின்னர் லுக்கு விடுவதையும் சங்கடமாக்கி விட்டிருந்தது.

 

ஒரே ஃப்ளோவா.. போயிட்டிருந்த என் கனவைக் கலைத்தாள் என்னவள்.

 

"நாளைக்கு தியேட்டருக்கு போவமா?"

 

ம்ம்ம்ம்ம்.. அதுக்கென்ன .. போகலமே..

 

"அப்ப வீட்டை வரும் போது ரிக்கற் புக் பண்ணிப்போட்டு வருவம் சரியா.."!

 

பேசிக்கொண்டு வரும் போதே நாங்கள் இறங்க வேண்டிய தரிப்பிடம் வந்தது.

 

"குட்டிமா ஒரு சன்கிளாஸ் வாங்கட்டா?"

 

எதுக்கு??

 

"இண்டைக்கு நல்ல வெய்யிலா இருக்கு கண்கூசுதடி.."

 

பொய் சொல்லாதையடா சைட் அடிக்கதானே??..

 

"என்னை நம்பு குட்டிமா.. நான் அச்சா பிள்ளை.."

 

"நான் கூட இருக்கும் போதே சைட் அடிச்சவன் தானே டா நீ.. அதில்லாம அந்த ரோஸ்கலர் சுடிதார் நல்லா இருக்கு என்று

என்னட்டையே சொன்னவன் தானே டா நீ"

 

"2011 செப்டெம்பர் 15 முதன் முதலாய் அவளைப்பார்த்த நாள், அந்த சந்திப்பின் போது தான் ஒரு நாள் நாங்கள் சரவணா ஸ்டோர்ஸ் க்கு போயிருந்தோம், நாங்கள் மாடியில் ஏறுகிறோம், எதிரே ஒரு பெண் இறங்குகிறாள்.

ரோஸ் கலர் சுடிதார் போட்டு, பொது நிறம் நல்ல களையா இருந்தாள், பார்த்ததும் பிடித்துப் போகும் வனப்பு,

அப்போது எதுவும் சொல்லவில்லை அதே நாள் ஷொப்பிங் முடித்து திரும்பும் போது பஸ்ஸில் வேறோரு பெண் ரோஸ் கலர் சுடிதார் போட்டு அவ்வளவு அழகாய் இருந்தாள்."

 

எங்களுக்குத்தான் வஞ்சகம் பண்ணத்தெரியாதே..

 

"என்ன குட்டிமா உங்க ஊரிலை ரோஸ் கலர் சுடிதார் போட்ட ஃபிகரெல்லாம் சூப்பரா இருக்கு"???

 

"இதுக்கு அவள் சொன்ன பதில் எல்லாம் சென்சார்......"

 

உனக்கு சன்கிளாஸ் இல்லை கண்ணுக்கு ப்ளாஸ்டர் ஒட்டிட்டு தான்டா கூட்டிக்கொண்டு வரவேணும்.

 

சனிக்கிழமை அனேகருக்கு வேலை லீவு நாள் என்பதாலோ என்னவோ நல்லூர் தேர்த்திருவிழா போல தி-நகரில் கூட்டம் இருந்தது.

 

"என் கையையே விடாமல் இழுத்துக்கொண்டு வந்தாள்.."

 

"கொஞ்ச நேரமாச்சும் ஃப்ரீயா விடடி"

 

"போடா .. உன்னை எல்லாம் நம்ப முடியாது"

 

"தாலி கட்டி இருக்கிறேன், கையைப் பிடிச்சுக் கொண்டுவந்தால் சைட் அடிக்க முடியாது அதானே கழட்டி விடப் பார்க்குறாய்" !!

 

"நடக்காதடா மவனே"

 

ஷொப்பிங் முடித்ததும் .. பசி வயிற்றைக்கிள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைகிறோம், மேற்கத்தேய பாணியில் நன்றாக இருந்தது.

 

சாப்பாடு அவளுடைய தெரிவாகவே இருந்தது.

 

மேசைக்கு உணவு வந்ததும் சாப்பிட ஆரம்பித்திருந்தோம். எனக்கு சிக்கன் பிடித்தாலும் எலும்பு எல்லாம் கடிப்பது பிடிக்கவே பிடிக்காது..

"எனது சாப்பாட்டைப் பார்த்தவள்"

 

இப்படியா சாப்பிடுறது?

சிக்கனை நல்லா சப்பி சாப்பிடவேணும் பார் நான் எப்படி சாப்பிட்டிருக்கிறேன்.

என்னுடைய கோப்பையில் கை வைத்து எல்லாம் ஒழுங்கி படுத்தி, அதை அப்படி சாப்பிடு, இதை இப்படிச் சாப்பிடு என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

எல்லார் கண்களும் எம்மீதே..

 

உண்மையில் எனக்கு கோவம் வந்து விட்டது ..

 

"குட்டிமா.. எல்லாரும் பார்க்கிறாங்க, இப்படியா பப்ளிக் பிளேசிலை இன்டீஸன்டா நடந்துக்கிறது?

நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கு தெரிஞ்சது போல சாப்பிடுறேன், நீ  உன் சாப்பாட்டை கவனி.."

 

"யார் பார்த்தால் என்ன? பார்க்கட்டும், பார்த்திட்டு போகட்டும்.."

 

உண்மையில் எனக்கு என் அப்பா தான் ஞாபகத்தில் வந்தார்..

 

"நான் சின்னனிலை நிறையக் குழப்படி செய்வேன் அப்பா தடி முறிய முறிய அடிப்பார்.

நான் அழுதுபோட்டு சாப்பிடாமல் படுத்திடுவேன். அப்பா தோட்டத்தாலை வந்து அம்மாட்டை சொல்லி நல்லெண்ணையிலை மஞ்சள் போட்டு சூடாக்கி கொண்டு வருவார். நான் நித்திரை கொள்ள மாட்டேன், நித்திரை போல நடிப்பேன் அப்பா காலுக்கு எண்ணை பூசிக்கொண்டே அம்மாக்கு சொல்லுவா " நான் வேணுமெண்டே அடிச்சனான் என்ரை பிள்ளைக்கு குழப்படி செய்தான் அடிச்சுப்போட்டன் என்டுவர்"

 

பிறகு என்னை எழுப்பி பசி இருக்க மாட்டேன் என்று தெரியும் சாப்பிடச் சொல்ல நான் உடனை கோவம் போனமாதிரிக் காட்டக்கூடாது என்று வேண்டாம் என்று சொல்ல, திரும்ப போய் தடி எடுத்துக் கொண்டுவந்து சாப்பிடு என்று அவரே சாப்பாட்டு தட்டை தருவார் சாப்பிடும் போது அப்பாவோடு கண்கலங்கும்.. அப்ப அது புரியவில்லை"

 

"காற்று கூட புக முடியாத அளவுக்கு அவளை இறுக்கி கட்டிப்பிடிச்சு உச்சிமோரணும் போல இருந்திச்சு"

 

பஸ்ஸில் வரும் போது நடத்துனருக்கும், ஒரு மனுசிக்கும் இடையில் நடந்த "செந்தமிழ்" ச் சண்டை

அந்த பஸ்ஸில் பாட்டு இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்தது.

 

விருகம்பாக்கம் வந்ததும் இறங்கி அங்கிருந்த மெட்ரோ மாலில் "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படத்திற்கு ரிக்கற் புக் பண்ணிவிட்டுப் பயணமாகிறோம் வீடு நோக்கி..

 

தொடரும்..

 

 

 

(எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது)

 


 

 

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

பயணத்தை மிகவும் அனுபவித்து எழுதுகின்றீர்கள்.. பாராட்டுக்கள் ஜீவா.

ஆவரங்கால்,புத்தூர்,சிறுப்பிட்டி,நீர்வேலி,இருபாலை,நல்லூர் என்று ஒரே கண்ணுக்கு குளிர்ச்சியா தான் இருக்கும்.

 

ஏன் கோப்பாயிலை ஒண்டும் இல்லையோ  :o  ^_^  ???? பிச்சுபோடுவன் பிச்சு  :icon_mrgreen:  . தொடருங்கோ  :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயணத்தை மிகவும் அனுபவித்து எழுதுகின்றீர்கள்.. பாராட்டுக்கள் ஜீவா.

 

நன்றி கிருபன் அண்ணா,

உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.. :)

நல்லா தான் பொண்ணுங்களை சைட் அடித்திருக்கிறீர்கள் ஜீவா அண்ணா. :icon_idea:  ஊர் நினைவுகளை அடிக்கடி மீட்டு பார்க்கிறீர்கள். :)

 

பஸ்ஸில் வரும் போது நடத்துனருக்கும், ஒரு மனுசிக்கும் இடையில் நடந்த "செந்தமிழ்" ச் சண்டை

அந்த பஸ்ஸில் பாட்டு இல்லையே என்ற குறையை நிவர்த்தி செய்தது.

 

:lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆவரங்கால்,புத்தூர்,சிறுப்பிட்டி,நீர்வேலி,இருபாலை,நல்லூர் என்று ஒரே கண்ணுக்கு குளிர்ச்சியா தான் இருக்கும்.

 

ஏன் கோப்பாயிலை ஒண்டும் இல்லையோ  :o  ^_^  ???? பிச்சுபோடுவன் பிச்சு  :icon_mrgreen:  . தொடருங்கோ  :) .

 

நாங்கள் கோப்பாயுக்குள்ளை ஏரியா செய்யேல்லை பாருங்கோ ஆனால் அந்த மாதா கோயிலடியிலை இருந்து ஒரு நல்ல பிகர் ஏறுறது. :rolleyes:

 

கோப்பாய்,கல்வியங்காடு எல்லாம் ரூட்டிலை விட்டு போச்சு பாருங்கோ.. :lol:

 

நன்றி அண்ணா உங்கள் கருத்து பகிர்வுக்கு.. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆவரங்கால்,புத்தூர்,சிறுப்பிட்டி,நீர்வேலி,இருபாலை,நல்லூர் என்று ஒரே கண்ணுக்கு குளிர்ச்சியா தான் இருக்கும்.

 

ஏன் கோப்பாயிலை ஒண்டும் இல்லையோ  :o  ^_^  ???? பிச்சுபோடுவன் பிச்சு  :icon_mrgreen:  . தொடருங்கோ  :) .

 

உங்களைப் பாத்தபிறகு  இருந்த நம்பிக்கையும் போச்சு  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து இம்முறை இன்னும் சுவாரசியமாக இருக்கு ஜீவா. பிரியா கெட்டிக்காரிதான். பிரியாவின் முன்னாலேயே 
சைட் அடித்த உங்களுடன் திருமணம் வரை வந்திருக்கிறாரே :D

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

சுமோ அக்கா சொன்னது போல உங்கள் எழுத்தில் உற்சாகமும், நகைச்சுவையும் தூக்கலாகவே தெரிகிறது. இத்தனை நாளும்  எங்கு வைச்சிருந்த்தீர்கள் இவ்வளவு திறமையை ஜீவா.?

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.