Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திறமைச் சித்திகள் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

Edited by வல்வை சகாறா

பல்வேறு இடர்களுக்கு மத்தியிலும் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சிறப்புச் சித்திகளைப் பெற்ற தாயகத்தின் சகல பகுதிகளையும் சகல பாடசாலைகளையும் சேர்ந்த என் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்....

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தி அடைந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியடைந்த அனைத்து தமிழ் செல்வங்களுக்கும் எனது வாழ்துக்கள்.....ஒரு வ்ருத்தமான செய்தியும் ஒன்று உள்ளது...pont pedru methodist f.b ..ஹார்ட்லி மாணவனுக்கு வாழ்த்து கூறியிருந்தது....அதற்கு comments கூறிய ஒருதர் advice பண்ணுற மாதிரி....படிக்கப் போ  அரசியல் பண்ணாதை......strike பண்ணாதை என்று ஊசி போடுறர்....அவர் யாழ் பல்கலையில் நடந்ததை என்ன நோக்கோடு பார்க்கிறார்...இன விழிப்பையும் ..இன அழிப்பையும்...தட்டிக் கேட்கும் நம் இளைய சமுதாயத்தை  அடக்க நினைக்கிறாரா....கல்வியில் சிறந்து விளங்கும் எம் உயிரினும் மேலான செல்வங்களே.....கல்வி எமது ஒரு கண்ணென்றல்....இனத்தின் விடுதலை இன்னொரு கண்.....இரன்டையும் காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு......

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமுவந்த பாராட்டுக்கள். கணிதப் பிரிவில் யாழ் மாவட்டத்தில் முதலாவதாகவும், அகில இலங்கையில் மூன்றாவதாகவும் வந்த நமது ஹாட்லி மைந்தன் கபிலனுக்கு விசேஷ பாராட்டுக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

சித்திகள் பெற்ற பிள்ளைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 

 

ஏனய்யா குடும்பத்திலை குழப்பத்தை உண்டுபண்னுறீங்கள்?? :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சில சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்கள். மொத்தமாக 10 பேர் 3A  எடுத்திருக்கிறார்கள். மற்றயவர்கள் விபரம் தெரியவில்லை. எமது
கல்லூரி மாணவர் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இது சிறந்த சதவீதம். இவர்களுக்கும், சிறப்பு தேர்ச்சி பெற்ற மற்றைய அனைத்து மாணவச்
செல்வங்களுக்கும் வாழ்த்துக்கள். சித்தி பெறாதவர்கள் மனதை தளரவிடாமல் முயற்சியுங்கள். A/L உம் பொறியியல்/மருத்துவம்/வர்த்தகம்/அழகியல் மட்டும் வாழ்க்கை அல்ல. தொழில் சார் கற்கை நெறிகளில் உங்களுக்கு எந்தத் துறையில் ஈடுபாடு இருக்கிறதோ, அந்தத் துறையை தெரிவு செய்து உங்களது வாழ்கையை வளம்படுத்துங்கள்.

எமது அற்புதமான ஹாட்லி அதிபர் மதிபிற்குரிய தேவேந்திரராசா சேர் அவர்களுக்கும், எனது அன்பான ஆசான் பிரதி அதிபர் அருளானந்தம் சேர் அவர்களுக்கும் மற்றைய
அனைத்து ஆசிரியர்கள், ஊக்குவித்த பெற்றார், எமது கல்லூரியை தூணாக தாங்கும் பழையமாணவர் சங்கங்கள் (அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஐக்கிய
இராச்சியம்)  அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.    

 

க.பொ.த உயர்தர பரீட்சை 2012.

ஹாட்லிக் கல்லூரியில் 3A சித்தி பெற்றோர் விபரம்

கணிதப் பிரிவு :

01) பாலகோபாலன் கபிலன்

02) சுரேந்திரராசா கிருசாந்த்

03) கனகலிங்கம் செந்தாளன்

04) புஸ்பராசா தஸ்மதன்

05) பத்மநாதன் பானுகோபன்

06) சண்முகநாதன் நிஷாந்தன்

07) சிறீபவான் சரத்பவான்

உயிரியல் பிரிவு :

01) சிறீதரன் இளங்கீரன்

வர்த்தகப் பிரிவு :

01) சபாரட்ணம் பரதன்

02) மகேந்திரன் கோணேஸ்வரன்

Edited by Thumpalayan

ஏனய்யா குடும்பத்திலை குழப்பத்தை உண்டுபண்னுறீங்கள்?? :D

அவரும் "கள்" மயக்கத்தில் உள்ளார்.... :lol:  சித்திகள் என்பதில் வரும் "கள்" ஐ சொன்னேன்.... :D 

க.பொ.த

உயர்தர பரீட்சை 2012 முடிவுகளின் படி, கணிதப்பிரிவில் யாழ் மாவட்டத்தில்

முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தையும் வடமராட்சி ஹாட்லி

கல்லூரியை சேர்ந்த பாலகோபாலன் கபிலன் என்னும் மாணவன் பெற்றுள்ளார்.  

 

ஹாட்லியின் மைந்தனுக்கு எனது வாழ்த்துக்கள்

 

ஹாட்லிக் கல்லூரி மீண்டும் தனது உயர் நிலையை அடைந்தது மகிழ்ச்சியே!

சிங்கள அரச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட தொடர் அழிப்புக்கு உள்ளான முதலாவது பிரதான பாடசாலை ஹாட்லிக் கல்லூரி என கேள்விப்பட்டுளேன்!

1980 களில் இரண்டு தடவைகள் ஹாட்லிக் கல்லூரியின் நூலகம்  சிங்கள அரச பயங்கரவாதிகளால் எரிக்கப்பட்டது. 

பின்னர் 10 வருடங்களாக சிங்கள ராணுவப் பயங்கரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டது! 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் பாரட்டுக்கள்.....யாழ்ப்பாணத்தானுக்கு விசேட பாராட்டுக்கள்....என்ட மண்வாசிகள் வாழ்க வளர்க......கல்விதான் எங்கன்ட அழியா செல்வம்.....

மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு கல்வி கற்பித்த எனது விரிவுரையாளர்களின் மகள் மிதுரிக்கா மிகுந்தனுக்கும் எனது வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு கல்வி கற்பித்த எனது விரிவுரையாளர்களின் மகள் மிதுரிக்கா மிகுந்தனுக்கும் எனது வாழ்த்துக்கள்...

 

மிதுரிக்காவில் ஒரு சிறப்பு.. பொதுவாக உயிரியல் ஆக்கள் பெளதிகவியலில்.. நல்ல பெறுபேற்றை பெற்றாலும் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை. மிதுரிக்கா.. பெளதீகவியல் ஒலிம்யாட்டில் வெற்றி பெற்று ஆசிய மட்டத்தில் போட்டியிடவும் தெரிவாகி இருக்கிறா.

 

வேம்படி இணையத்தளத்தில் போட்டிருந்தாங்க..! :icon_idea::)

மிதுரிக்காவில் ஒரு சிறப்பு.. பொதுவாக உயிரியல் ஆக்கள் பெளதிகவியலில்.. நல்ல பெறுபேற்றை பெற்றாலும் அதிகம் ஆர்வம் செலுத்துவதில்லை. மிதுரிக்கா.. பெளதீகவியல் ஒலிம்யாட்டில் வெற்றி பெற்று ஆசிய மட்டத்தில் போட்டியிடவும் தெரிவாகி இருக்கிறா.

 

வேம்படி இணையத்தளத்தில் போட்டிருந்தாங்க..! :icon_idea::)

 

தகவலுக்கு நன்றிகள் நெடுக்ஸ்... உந்த பெளதீகம் தான் என்ர வாழ்க்கையை இடிச்சது..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவில் படிக்கும் எனது அண்ணனின் மகனுக்கு கலைப்பிரிவில் 

இரண்டு A யும் ஒரு C யும் கிடைத்தும் உயர்கல்வித் தகுதி கிடைக்குமா என்பதில் சந்தேகம்.

 

வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மாற்றங்கள் செய்வது நல்லது.

தமிழ் மாணவ சமூகத்தை தரப்படுத்தி அலட்சியப்படுத்துவது எதிர்காலத்தில் இன்னும் அதிகமான அளவில் தமிழ்மாணவர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தும்.


சித்தியடைந்த மாணவர்களுக்கும் உயர்சித்திகளைப்பெற்ற மாணவர்களுக்கும் வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

711111607uni-2.jpg

யாழ். வேம்படி மாணவிகள் இருவர் உயிரியல் பிரிவில் மாவட்ட ரீதியில் முன்னிலை (படங்கள்)

யாழ். வேம்படி பாடசாலை மாணவிகள் இருவர் நேற்று (30) வெளியாகிய க.பொ.த உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ளனர். 

மிகுந்தன் மிதுரிகா உயிரியல் பிரிவில் முதல் இடத்திலும் நவிந்திரன் சரண்ஜா இரண்டாவது இடத்திலும் உள்ளனர். 

ோம மாணவிகளின் கல்வித் திறமை குறித்து அம் மாணவர்கள் தெரிவிக்கையில், 

கடின உழைப்பே எனது வெற்றிக்கு வழிவகுத்தது. இவ்வாறு கூறினார் க.பொ.த. உயர்தரப் பெறு பேறுகளின் அடிப்படையில் உயிரியல் பிரிவில் யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ள வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிகுந்தன் மிதுரிகா. 

அவர் மேலும் தெரிவித்ததாவது: 

பரீட்சைப் பெறுபேறுகள் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. எனது விடாமுயற்சிக்குக் கிடைத்த பரிசாகவே இதனைக் கருதுகின்றேன். அன்றன்று கற்கும் பாடங்களை உடனுக்குடனேயே மீட்டுப் பார்த்துவிட்டுத்தான் மறுவேலையில் ஈடுபடுவேன். 

இதனால் எனக்கு கல்வி ஒரு சுமையாகத் தென்படவில்லை. நாம் எமது பாடங்களை அன்றன்றே கற்போமானால் கற்றல் மிக இலகுவானதாக அமையும். நான் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

யாழ். வேம்படி மகளிர் கல்லூரியில் பயிலும் தென்மராட்சி உசனைச் சேர்ந்த மாணவியான மிதுரிகாவின் தந்தை விவசாயபீடப் பேராசிரியர் குணசிங்கம் மிகுந்தன். தாயார் விவசாய பீட இயந்திரவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி துஷ்யந்தி மிகுந்தன். 

யாழ்.மாவட்ட ரீதியில் உயிரியல் பிரிவில் இரண்டாம் இடம் பெற்ற நவிந்திரன் சரண்ஜா கூறுகையில், 

கல்வியில் முழமையாக மனதைச் செலுத்தி படித்தேன். அதற்கு கிடைத்தது தான் இந்த சாதனை என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

(அத தெரண நிருபர்)

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றிகள் நெடுக்ஸ்... உந்த பெளதீகம் தான் என்ர வாழ்க்கையை இடிச்சது..

 

ம்ம்..! எனக்கு நான் கற்ற எல்லாப் பாடமும் பிடிக்கும். அதிக விருப்பப் பாடம் இது. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

144745 மாணவர்கள் பல்கலைக்கு தகுதி: 9057 பேர் 3 பாடங்களில் ஏ சித்தி: 18485 பேர் கோட்டை!

2012 ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்த 128,809 மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குச் செல்லத் தகுதி பெற்றுள்ளனர். 

இவர்களில் 8544 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

பரீட்சைக்குத் தோற்றிய 207,910 பேரில் 61.35 வீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுள்ளனர். 

பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 16,538 பேர் அனைத்துப் பாடங்களிலும் குறைந்த மதிப்பீட்டைப் பெற்று சித்தியடையத் தவறியுள்ளனர். 

அதேநேரம், பழைய பாடத்திட்டத்தின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய 25,724 மாணவர்களில் 15,936 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 513 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியைப் பெற்றுள்ளனர். 

இவர்களில் 1947 பேர் அனைத்துப் பாடங்களிலும் குறைந்த புள்ளிகளை பெற்று சித்தியடையத் தவறியுள்ளனர். 

2012 ஆம் ஆண்டு க. பொ. த உயர்தரப் பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் கீழ் உயிரியல் விஞ்ஞானத் துறையில் 313 பேர் மூன்று பாங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றிருப்பதுடன், பெளதீக விஞ்ஞானத்தில் 443 பேரும், வர்த்தகத் துறையில் 6471 பேரும், கலைத்துறையில் 1313 பேருமாக 8544 பேர் அனைத்து மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 

பழைய பாடத்தின் கீழ் உயிரியல் விஞ்ஞானத்துறையில் 72 பேரும், பெளதீக விஞ்ஞானத்துறையில் 47 பேரும், வர்த்தகத்துறையில் 234 பேரும், கலைத்துறையில் 160 பேரும் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

  • தொடங்கியவர்

ஒலிம்பியா யாட் பௌதீகவியல் போட்டிக்கு வடமாகாண மாணவர் இருவர் தெரிவு

 

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான ஒலிம்பியா யாட் பௌதீகவியல் போட்டில் கலந்துகொள்ளவதற்காக வடமாகாணத்தில் இருந்து இரண்டு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

இந்த போட்டில் பங்குபெற்றுவதற்காக இலங்கையில் இருந்து 8 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் வடமாணத்தில் இரந்து இரண்டு மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.


வவுனியா தமிழ் வித்திர்யலயத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் பவிந்திரன் மற்றும் யாழ் வேம்படி மகளீர் கல்லூர் மாவணவி மிகுந்தன் விதுரிகா ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

 

 



http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/58183-2013-02-02-14-46-54.html

  • கருத்துக்கள உறவுகள்

கடுமையான சூழ்நிலைகளுக்குள்ளும் சாதனை புரிந்த பிள்ளைகளுக்கு எனது வாழ்த்துக்கள்!!!!!

சர்வதேச ஒலிம்பியாட் பௌதீகவியல் போட்டிகளிலும்  கடந்த 6, 7 வருடங்களில் பல தமிழ் மாணவர்கள் கலந்துள்ளமையை பத்திரிகைகள் மூலம் அறிந்துள்ளேன்!

  • கருத்துக்கள உறவுகள்

image001.gif
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.