Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க்கருத்துக்கள உறவான கலைஞனின் தந்தை இறைபதம் எய்தினார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்கள் பகிரும் இடத்தில் இப்படியான  கருத்துக்களை பகிர்வது தவறு மன்னித்துக்கொள்ளுங்கள்..

 

 ஸ்காபிறோவில் உள்ள மருத்துமனைகளில் இரண்டில் ஒன்றில் கலைஞன் அண்ணாவின் அப்பாவுக்கு இப்படி நடந்திருந்தால் நம்பித்தான் ஆகவேண்டும்.. அவர்களுக்கு ஒரு குறிப்பிட்டவயதை தாண்டிய மனிதர்களை ஊனப்பட்டவர்களை கண்டால் எல்லாம் ஏளனம்..கொஞ்சம் ஏலாட்டிக்கும் சொல்வார்கள் இப்படியானர்களோடு மினக்கடும் நேரம்.. இளவயதினரை காப்பாற்றுவது நன்று என்பார்கள்..என் காதலயே கேட்டுட்டு ரொம்ப மனம் நொந்து இருக்கிறன்...சத்திரசிகிச்சைக்கு என்று சொல்லுகீனம் என்றாலே இனி வரும் காலத்தில் யோசித்து யார் என்றாலும் முடிவை எடுங்கள்...கொஞ்சம் தூரம் என்றாலும் டவுண்ரவுண் பக்கம் உள்ள மருத்துமனைக்கு மாற்ற சொல்லி கேட்டு இருக்கலாம்.

Edited by யாயினி

  • Replies 116
  • Views 11.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வயதானவர்களைப் பராமரிக்காமல் புறந்தள்ளுவது வயது பேதம் (Age Discrimination) பார்ப்பது ஆகும். இவ்வாறான நிகழ்வுகளைக் காண நேரும்போது முறைப்பாடு செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.

 

https://www.cpso.on.ca/policies/complaints/default.aspx?id=2092

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்...

மறைந்த தந்தைக்கு  அஞ்சலிகள்...   பிரிவின் துயரால் வாடும் முரளிக்கு காலம் தான் துயரை ஆற்றவேண்டும்... 

 

ஒவ்வொரு ஆண் பிள்ளைக்கும் தந்தைதான் முதலாவது கதாநாயகன் அதோடு உதாரண மனிதர்... 

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவாவால் துயரிற்றிருக்கும் முரளிக்கும் அவர் குடும்பத்திற்கும் எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையாரின் பிரிவில் துயருற்றிருக்கும் கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் கலைஞன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

முரளியுடன் கதைத்தேன் இன்னும் இறுதிக் கிரியைகள் பற்றிய முடிவு எடுக்கப்படவில்லை.

 

முரளியின் அப்பா காப்பாற்றப்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்களின் ஆணவத்தாலும், அலட்சியத்தினாலும் தான் இறப்பு நிகழ்ந்து இருக்கலாம் என்றும் முரளி கூறினார். ஒரு வித Age discrimination நடந்துள்ளது என்றும் "85 வயதுவரைக்கும் வாழ்ந்து விட்டார் இனி என்னத்துக்கு" போன்ற உணர்வு வெளிப்பாடுதான் மருத்துவர்களிடம் காணப்பட்டதாகவும்,தனக்கு தெரிந்த மருத்துவ நண்பரை அழைத்துக் கொண்டு காட்டும் போது தவறாக சிகிச்சை கொடுத்துள்ளதாக சந்தேகிக்கின்றார் என்றும் குறிப்பிட்டார்.

 

தந்தையை தன் குழந்தையாகவே பார்க்கும் முரளிக்கு தந்தையின் இழப்பு மிகவும் கடினமாக இருக்கப் போகின்றது என்பதை உணர முடிந்தது. என்னால் முடிந்த ஆதரவையும் உதவியையும் தருகின்றேன் என்று கூறி ஆறுதல் படுத்தினேன்.  ஆதரவாகவும், மனம் விட்டுக் கதைப்பதும் துயரத்தினை போக்கும் முக்கிய நிவாரணிகள்.

 

எல்லாத் துயரங்களையும் ஆற்றும் காலம், முரளியின் துயரையும் ஆற்றும்.

இது எனக்கும் தொரிம்.அவருக்கு அந்த இழப்பை தாங்கும் சத்தியை இயற்ககை வழங்கும் எனன்று எதிர்பாக்கிறேன்.அந்த பக்குவம் அவருக்கு இருக்கு.மற்றம் இங்கு வைத்திய்ர்களின் அசமந்தப்பொக்கு யாவரும் அறிந்ததே.இதே போக்கால் எமது இனததை சேர்ந்த நன்பன் ஒருவனையும் ஒரு மாததற்க்கு முன் நான் இழந்தேன். :(

கலைஞன் அண்ணாவின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி.... :(

கலைஞன் அண்ணா மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

 

இணைக்கப்பட்டதில் முதலிரு படங்களும் சத்திர சிகிச்சைக்கு முன் எடுக்கப்பட்டது, மூன்றாவது படம் சத்திர சிகிச்சைக்கு பின் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். வயது கூடிய நேரங்களில் சத்திரசிகிச்சை செய்வதும் ஆபத்து... :rolleyes:

 

 

 

எங்கே இணைத்திருந்தவர்??

எங்கே இணைத்திருந்தவர்??

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117164&p=864379

 

நன்றி துளசி

அன்னாரின் ஆத்மசாந்திக்கு, இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அவரின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தொலைபேசியில் தொடர்பு வைத்திருக்கும் நண்பர்களில் முக்கியமானவர் முரளியாகும் ஆதலால் அவர் தனது தாய் தந்தையுடன் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார் என்றும், இன்று தந்தையை  இழந்த அவரது  உணர்வுகள் எப்படியிருக்கும் என்பதையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

அவரது தந்தையின் இழப்பு பற்றிய செய்தியை அவர்மூலமாகவே தொலைபேசியில் கேட்டபோது எனக்கு மிகவும் சங்கடமாகவே இருந்தது.
இழப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது என்ற வார்த்தையுடன் அனுதாபம் தெரிவிப்பது இலகுவாகும் ஆனால் அனுபவரீதியாக அதை சந்திக்கும்போது மனம் ஏற்றுக் கொள்வதில்லை அதுதான் பாசத்தின் வெளிப்பாடு.

முரளி தனது தந்தையை இழந்து தனது தாயாருடன் தனிமையில் யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற நிலமையில் இருப்பதாக தோன்றுகின்றது.
அவரது உறவினர்கள் அனைவரும் தொலைவில் இருப்பதால் வந்துசேர்வதிற்கு தாமதமாகிறது போலுள்ளது.

தங்களது குடும்ப உறுப்பினரை இழந்து தவிக்கும் முரளிக்கும், தாயாருக்கும் அனைத்து உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.

ஜயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.!
ஓம் சாந்தி!!!

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் இழப்பால் துயருற்றிருக்கும் முரளிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். தந்தையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்களும்.. கலைஞனின் தந்தையாரது ஆத்மா சாந்தியடைய இறைஞ்சுதல்களும்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..எதோ ஒரு விதத்தில் மறந்து போனேன்...

அவரின் ஆன்ம சாந்தியடைய வேண்டுகிறேன்

மிகவும் துயரமான செய்தி . தந்தையை இழந்து தவிக்கும் கலைனன் அண்ணாவிற்கும் ,அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முரளி அண்ணா, மிக அதிர்ச்சிகரமான செய்தி. நேற்றுத்தான் மற்றைய திரியில் எனது கருத்தையும் எழுதி வாழ்த்துவதற்காக ஒரு பச்சையையும் குத்தியிருந்தேன். உங்களை அறிந்ததிலிருந்து, நீங்கள் மிக மென்மையானவர் என்றும் குடும்பத்தினரில் மிகவும் பாசமானவர் என்றும் நன்கு தெரியும். ஐயாவை இழந்து தவிக்கும் உங்களுக்கும், உங்கள் அம்மா, அக்காமார் மற்றும் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். ஐயாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மனதைத் தளரவிட வேண்டாம். உங்கள் மனப்
பாரங்கள் கவலைகள் நீங்கி, நீங்கள் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு இறைவனை வேண்டுகின்றேன்.

 

முரளி உங்கள் அம்மாவுக்கு பக்கபலமாக ஆறுதலாக இருங்கள்.

தந்தையின் இழப்பினால் துயருற்றிருக்கும் முரளியினதும் அவரது குடும்பத்தினரதும் துயரில் நானும் பங்கு கொள்கிறேன்.

 

 

தந்தையை இழந்து தவிக்கும் முரளிக்கும் அவரது குடும்பத்துக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...!. தந்தையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துக்கமான செய்தி....ஐயாவின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறோம்.  முரளிக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையை இழந்து தவிக்கும் முரளிக்கும் தாயாருக்கும் அவரது உறவுகளுக்கும்

ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்

 

தந்தையின் ஆன்ம சாந்திக்காகப் பிராத்திக்கின்றேன்.
.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.