நான் யாரை கதாநாயகனாகக் கருதுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் நிச்சயமாக மத அடிப்படைவாதத்தினால் தனது நாட்டு மக்களை அடக்கியாளும் ஒருவரை இல்லை என்பது எனக்குத் தெரியும். அப்படியானால் நான் ட்ரம்ப்பையோ அல்லது நெத்தென்னியாகுவையோ கதாநாயகனாக நினைக்கிறேனா என்றால், அப்படியுமில்லை.
நடந்துவரும் இப்போரில் ஈரானின் மத அடிப்படைவாத அடக்குமுறையாளர்கள் ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றப்படவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதற்கு என்னிடம் பல காரணங்கள் இருக்கின்றன. அதனை அமெரிக்காவும், இஸ்ரேலும் முன்னின்று செய்வதனால், அவர்களின் முயற்சிகளுக்கு அதரவாக எழுதுகிறேன். இதில் கதாநாயகத்தன்மை எதுவும் இல்லை.
அறிவு எல்லோரதும் பிறப்புரிமை, சரி. கண்முன்னே நடைபெறும் அடிப்படைவாத அடக்குமுறையினை எதிர்ப்பதனால் நான் ஒரு பக்கவாதியாக உங்களுக்குத் தெரிந்தால் நான் என்ன செய்வது? இந்த விடயத்தில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ஈரானின் மத அடிப்படைவாதிகளை ஆதரித்தும் (எதற்கென்ற தெளிவு சற்றும் இல்லாமல்), அமெரிக்கா தலைமையிலான தாக்குதல்களை எதிர்த்தும் எழுதினால் நான் பக்கச்சார்பற்றவனான இருப்பேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? சரித்திரம், வரலாறு, தனிப்பட்ட அனுபவங்கள், நிகழ்காலச் சம்பவங்கள் என்பவற்றை அடிப்படையாக வைத்தே ஒருவர் பல விடயங்கள் தொடர்பான தனது தனிப்பட்ட நிலைப்பாட்டிற்கு வருகிறார். இதனால் அவர் ஏதோ ஒரு பக்கத்திற்கு ஆதரவாகவும், இன்னொரு பக்கத்திற்கு எதிராகவும் கருத்துக்களைக் கொள்ள அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அப்படியில்லாமல், இவையெல்லாவற்றையும் விட்டு விட்டு, ஒரு பிரச்சினை தொடர்பாக எந்தவித பிரக்ஞையுமற்று, பக்கச்சார்பின்றி அவர் மாறவேண்டும் என்று நீங்கள் கேட்பது சரியானதா?
ஒரு உதாரணத்திற்கு, இலங்கையில் தமிழரின் பிரச்சினை தொடர்பாக தமிழர்கள் தமக்கென்று ஒரு புரிதலினைக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்புரிதல் அவர்களின் கடந்தகால வரலாறு, அனுபவங்கள், இழப்புக்கள், ஏமாற்றங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருப்பது என்றும் வைத்துக்கொள்வோம். ஆனால், தமிழர்கள் இவற்றினைக் கைவிட்டு, இனப்பிரச்சினையினைப் பக்கச்சார்பின்றி அணுகினால் ஒழிய நிலைத்து நிற்கமுடியாது என்று சொல்ல வருகிறீர்களா?
ஒருவிடயம் தொடர்பாக தனியொருவர் கொண்டிருக்கும் எண்ணம் அவருக்கே தனித்துவமானது. அதனைக் கொண்டிருப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதனை கதாநாயக விம்பத்தின பின்னால் போகிறவர்கள் என்று கொச்சைப்படுத்த வேண்டாமே?!
ஒருவர் உலக விடயங்களை எந்தெந்த வழிகளில் அறிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறீர்கள்? உங்களின் வாழ்நாளில் உங்களது அனுபவங்கள் மூலம் பல விடயங்களை நீங்கள் அறிந்துகொள்கிறீர்கள். சரி, உங்களுக்கு முற்பட்ட காலத்தில் நடந்த விடயங்களை, பழைய வரலாறுகளை, முன்னைய சரித்திரங்களை எப்படி அறிந்துகொண்டீர்கள்? அக்காலத்தில் நீங்கள் வாழ்ந்திருக்கவில்லை. ஆகவே யாராவது ஒருவரின் வாய்மொழிமூலமோ அல்லது பத்திரிக்கைகள், நூல்கள், ஆவணங்கள் மூலமோதான் இதனை அறிந்துகொள்கிறீர்கள். அந்த வழியில்த்தான் இன்றைய செயற்கை நுண்ணறிவும் வருகிறது. இன்று உங்களுக்குத் தெரிந்த விடயங்கள் எல்லாம் நீங்கள் பிறக்கும்போது உங்களது மூளையில் பதியப்பட்டிருந்தனவா? அப்படியில்லை என்றால் எவ்வாறு, எங்கிருந்து அவற்றை நீங்கள் பெற்றுக்கொண்டீர்கள்?
By
ரஞ்சித் ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.