Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தர்மம் மீண்டும்............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வந்தோரை வாழவைத்து

வீட்டிலே தூங்கவைத்து

வாசலில் படுத்தறங்கும் இனம் எம்மினம்

சண்டை என்று வந்தாலும்

சமாதானம்  என்று சொன்னாலும்

சமனாக மதிப்பளித்து

இன்று போய் நாளை வா என

இன மானம் காத்த இனம்

உலக வரைபடத்தில்

யேசு கேட்டதை

காந்தி கனாக்கண்டதை

வள்ளுவன் சொன்னதை

அரங்கேற்றி அரசமைத்த இனம்

நரிக்குண நாட்டவனின்

நடிப்பில் மயங்கி

சுற்றி  வந்த  வர்த்தகஅரக்கர்களின்

பிடிக்குள் சிக்காது

செய் அல்லது செத்துமடியென

செய்து காட்டிய இனம்

முள்ளிவாய்க்காலில்

தன்னை தானே பெட்டியடித்து

சர்வதேசத்துக்கு குறிவைத்த தலைவன்

சொல்லிய  செய்தி

கொன்றால் விடுதலை

விட்டாலும் அது தான்..

தீர்க்க தரிசனம் அவனது ஆயுதம்

இனி போராட்டம் உங்கள் கையில்

அவன் கை காட்டியது  வெளியில்

எல்லாம் முடிந்தது

முட்டாள் என புலம்பித்திரிந்தவர் உளர்

நெஞ்சுக்குள் தீ

இனத்தை

மானத்தை

காப்பை

இழந்து நின்றது எம்மினம்

சீமான் எனும் ஒரு தம்பி மட்டும்

ஊருராய் அழுது திரிந்தான்

ஒன்றாக பத்தாக

நாம் தமிழராக மெல்ல வளர்ந்தான்

ஒரு ஒளி வீச்சு

கண்ணில் கண்டது  எம்மினம்

ஒரு பொறி வெடித்ததுபோல்

மாணவர் வந்தார் எமைக்காக்க

தமிழகமே புயலாக ஓங்கி அடித்தது

அடித்த புயலில்

காங்கிரசு அழிய

அத்தனை கட்சிகளும் கண் திறக்க

அம்மா கொண்டு வந்தார்

தமிழீழ வாக்கெடுப்பு எனும்

எமது தாகத்துக்கான திறவு கோலை

இதற்காகத்தானே

இத்தனை வருடம் தவம் கிடந்தோம்

தமிழீழம்  பிறக்கும்

அம்மாவையும்

தமிழகத்தையும் போற்றும்

வாழ்த்தும்

தமிழன் நிம்மதியாக தூங்கும்  காலம் வெகுதூரமில்லை

தர்மம் வெல்லும்

அதில் மாவீரர்  கனவு பலிக்கும்

நெஞ்சை நிமிர்த்தி எம் மாவீரர் மகிழும் காலம்  விரைவில் வரும்.

கவிதைக்கு பாராட்டுக்கள் . ஒரு குறுகிய அதிகாரங்களை உடைய மாநிலங்களவையில் ஏற்படுத்தப்படும் தீர்மானங்கள் பெரிய அளவில் எமது பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா ??? அப்படியென்றால் இதற்கு முன்பு பல தீர்மானங்கள இதே மாநிலங்களவையில் ஏற்படுத்தப்பட்டன ஆனால் அவை உள்ளக அரசியல் சித்துவிளையாட்டிற்கே பயன்பட்டன . இதுவும் அப்படியே என்று நினைக்கின்றேன் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொறி வெடித்ததுபோல்

மாணவர் வந்தார் எமைக்காக்க

தமிழகமே புயலாக ஓங்கி அடித்தது

அடித்த புயலில்

காங்கிரசு அழிய

அத்தனை கட்சிகளும் கண் திறக்க

அம்மா கொண்டு வந்தார்

தமிழீழ வாக்கெடுப்பு எனும்

எமது தாகத்துக்கான திறவு கோலை

இதற்காகத்தானே

இத்தனை வருடம் தவம் கிடந்தோம்

கவிதைக்கு நன்றி விசுகண்ணா.மாணவர்களினால் மட்டுமே இது சாத்தியமானது என நான் நினைக்கிறேன். இதனை ஏனைய மாநிலங்களுக்கும் பரவ செய்ய மாணவர்கள் முயல வேண்டும்.
 
எமக்காக போராடும் அம்மாணவர்களுக்கு யாழ்களம் சார்பாக எந்தெந்த வழிகளில் நாம் உதவலாம் என சிந்திக்க வேண்டும்.பங்காளி ஆக வேண்டும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் விசுகு! இன்னும் எழுதுங்கள்.

தர்மம் வெல்லும்

அதில் மாவீரர்  கனவு பலிக்கும்

நெஞ்சை நிமிர்த்தி எம் மாவீரர் மகிழும் காலம்  விரைவில் வரும்.

தர்மம்  நிச்சயம் வெல்லும்

"வெல்லும் வரை செல்வோம்"

Edited by சுந்தரம்

நன்றி விசுகு, தமிழக மாணவர்களின் போராட்டத்தால்தான் இந்த ஒரு நிலையை எட்ட முடிந்தது. நன்றிகள் சகோதரங்களே

  • கருத்துக்கள உறவுகள்

----

த‌மிழ‌க‌ மாண‌வ‌னின் திற‌வுகோல் மூல‌ம், ஈழ‌த்த‌மிழ‌ன் நிம்ம‌தியாக உற‌ங்கும் கால‌ம் விரைவில் வ‌ர‌வேண்டும்.

அருமையான... கவிதை விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள்,விசுகர்!

வழி மீது விழி வைத்துக் காத்திருந்து, இலவு காத்த கிளியாகிப் போய்விட்டவர்கள் நாங்கள்!

ஏதும் ஒரு திசையில் 'ஒளி' தெரிந்தாலும், நம்ப மறுக்கிறது, மனது!

இருட்டுக்குப் பழகிப் போய்விட்டதோ,எமது கண்கள்? :D

இன்னும் உடைக்கப்படவேண்டிய, 'மாய வலைகள்' இன்னும் இருக்கின்றன!

இந்தப் பொழுதாவது எமக்காக விடியட்டும்! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பாராட்டுக்கள் . ஒரு குறுகிய அதிகாரங்களை உடைய மாநிலங்களவையில் ஏற்படுத்தப்படும் தீர்மானங்கள் பெரிய அளவில் எமது பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா ??? அப்படியென்றால் இதற்கு முன்பு பல தீர்மானங்கள இதே மாநிலங்களவையில் ஏற்படுத்தப்பட்டன ஆனால் அவை உள்ளக அரசியல் சித்துவிளையாட்டிற்கே பயன்பட்டன . இதுவும் அப்படியே என்று நினைக்கின்றேன் :) :) .

நன்றி  கோ

ஒரு

குறுகிய அதிகாரங்களை உடைய மாநிலங்களவையில் ஏற்படுத்தப்படும் தீர்மானங்கள்

பெரிய அளவில் எமது பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா ???

எமது போராட்டத்தில் அச்சாணி  என்றும் தமிழகம்தான்

இதை என்றுமே எழுதிவருபவன் நான்

அந்தவகையில் இன்றைய மாற்றங்களை  இலக்கு நோக்கி  நகர்வதற்கான பெரும் பாய்ச்சலாக பார்க்கின்றேன்.

அந்தவகையில் இன்றைய மாணவரது புரட்சியைப்பார்த்ததிலிருந்து மனதில் ஏதாவது செய்யணும் எழுதணும் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்த திரி.

அப்படியென்றால்

இதற்கு முன்பு பல தீர்மானங்கள இதே மாநிலங்களவையில் ஏற்படுத்தப்பட்டன ஆனால்

அவை உள்ளக அரசியல் சித்துவிளையாட்டிற்கே பயன்பட்டன . இதுவும் அப்படியே

என்று நினைக்கின்றேன் :) :) .

எமக்கென்று ஒரு இலக்கு இருக்கும்போது நடப்பவைகளை நாம் பாவித்தாகணும் என்ற நிலைவரும்போது ஐயங்கள் கணக்கில் வரா.

அந்த மக்களின் எழுச்சியை நாம் இவ்வாறு உதாசீனம் செய்வோமாயின் தமிழனுக்கு என்றுமே விமோசனமில்லை. தங்களது இந்த வரிகள் பெரும் எமது இலக்கு மீது நாமே நம்பிக்கையற்று சடமாகிவருவதை உறுதிப்படுத்துகிறது.

நன்றி  நேரத்திற்கும் கருத்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி விசுகண்ணா.மாணவர்களினால் மட்டுமே இது சாத்தியமானது என நான் நினைக்கிறேன். இதனை ஏனைய மாநிலங்களுக்கும் பரவ செய்ய மாணவர்கள் முயல வேண்டும்.
 
எமக்காக போராடும் அம்மாணவர்களுக்கு யாழ்களம் சார்பாக எந்தெந்த வழிகளில் நாம் உதவலாம் என சிந்திக்க வேண்டும்.பங்காளி ஆக வேண்டும்.

நன்றி  நுணா

இந்த மாணவர்களது எழுச்சி

எம்மையும் புலம்பெயர் தேசமெங்கும்  தட்டி எழுப்பியுள்ளது என்பதும் ஒத்துக்கொள்ளவேண்டிய செய்தியாகவுள்ளது.

அந்தவகையில் கண்ணுக்கெட்டிய  தூரம்வரை எதுவுமே தெரியாது தவித்த இனத்துக்கு தேனமுர்தமே கிடைத்தது போல் இந்த மாணவர்களது எழுச்சி  அமைந்துள்ளதை ஏதோ ஒரு வகையில் எழுதணும் என்று மனம்குறுகுறுத்தது.

அதுவே இத்திரியாகியது.

நிச்சயம் எனது பங்களிப்பும் பணியும் என்றுமிருக்கும்

நன்றி  தம்பி  நேரத்துக்கும் ஊக்கத்துக்கும்

வணக்கம் விசுகு! இன்னும் எழுதுங்கள்.

நன்றி  அண்ணா

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

தர்மம்  நிச்சயம் வெல்லும்

"வெல்லும் வரை செல்வோம்"

நிச்சயம் சகோதரா

ஒளி வீச்சொன்று  கண்முன்னே தெரியுது

அதை செய்து காட்டும் மாணவருக்கு நன்றி  சொல்வோம்

உறுதுணையாக இருப்போம்

நன்றி  நேரத்துக்கும் கருத்தக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகு, தமிழக மாணவர்களின் போராட்டத்தால்தான் இந்த ஒரு நிலையை எட்ட முடிந்தது. நன்றிகள் சகோதரங்களே

நன்றி  வந்தியத்தேவன்

யெயலலிதா எனக்கு பிடித்த தலைவி

இந்தியாவுக்கு இவர் போன்ற தலைவி  வேண்டும் என்று பல முறை இங்கு எழுதியுள்ளேன்

காரணம்

அவரது குணம்

பின் விளைவுகளையெல்லாம் யோசிக்கமாட்டார்

உண்டு

இல்லை

என்று ஒரே முடிவை உடனே எடுக்கும் தைரியம் கொண்டவர்

முதுகில் குத்தும்பழக்கமில்லாதவர்

இன்றைய அவரது முடிவு

அவரது துணிச்சலான பக்கத்தைக்காட்டுகிறது

இதையே கருணாநிதியென்றால் எத்தனை கணக்கு வழக்குப்பார்த்திருப்பார்

இன்று இவர் ஆட்சியில் இருப்பது எமக்கு பெரும் பேறு என்றுதான் சொல்லவேண்டும்.

நன்றி  நேரத்துக்கும்  கருத்துக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ மாண‌வ‌னின் திற‌வுகோல் மூல‌ம், ஈழ‌த்த‌மிழ‌ன் நிம்ம‌தியாக உற‌ங்கும் கால‌ம் விரைவில் வ‌ர‌வேண்டும்.

அருமையான... கவிதை விசுகு.

நன்றி  சகோதரா

ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கிய  எமக்கு பெரும் ஓயாத அலை அடித்ததுபோல் இந் நிகழ்வைப்பார்க்கின்றேன்

தமிழகம் சிறு சிலிர்ப்பு செய்தாலே பெரும் அதிர்வலைகள் வரும் என்று காத்துக்கிடந்த எமக்கெல்லாம் பெரும் வரப்பிரசாதம் இது

நன்றி  சிறி

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

\\ஒரு பொறி வெடித்ததுபோல்
மாணவர் வந்தார் எமைக்காக்க
தமிழகமே புயலாக ஓங்கி அடித்தது

அடித்த புயலில்
காங்கிரசு அழிய
அத்தனை கட்சிகளும் கண் திறக்க
அம்மா கொண்டு வந்தார்
தமிழீழ வாக்கெடுப்பு எனும்
எமது தாகத்துக்கான திறவு கோலை
இதற்காகத்தானே
இத்தனை வருடம் தவம் கிடந்தோம்\\

தேவையான நேரத்தில் அர்த்தமான கவிதையை தந்த உங்களுக்கு நன்றிகள் ..................

உண்மையில் இந்தசூழலில் தமிழகத்தில் ஏற்பட்ட   மாணவர் போராட்டம் மிக மிக முக்கியமான திருப்பம் என்றே கூறவேண்டும்.. அதன் ஊடாக அதன் வழியாக தமிழக[ குறுகிய ]அரசினால் கொண்டுவரப்பட்ட தமிழீழத்திற்கான தேர்தல் தேவை என்ற தீர்மானம் அதை விட முக்கியமானதாகும் .............

ஏனனில் 2009 ஆம் ஆண்டும் மாணவர் போராட்டம் தமிழகத்தில் நடந்தது .ஆனால் அவை அன்றுள்ள தமிழக [குறுகிய] அரசின் உதவியுடன் மத்திய அரசு [காங்கிரஸ்] முடக்கி செயலிள க்கவைத்தது .அனால் இன்று நடக்கும் மாணவர் போராட்டத்தை மத்திய அரசால் நிறுத்த முடியல ............அதற்கு தற்போதுள்ள தமிழக [குறுகிய அரசு ] துணை நிற்கவில்லை .மாறாக அந்த மாணவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டுக்கொண்டிருப்பது என்பதே உண்மை ..........அதற்கு ஒரே ஒரு சான்று இந்த வாக்கெடுப்பு தீர்மானமாகும் .............

இங்கே உண்மை என்ன என்றால் அன்றுள்ள அரசியல், புவியியல் ,பொருளாதார நிலைமைகள் வேறு ..........இன்றுள்ள அரசியல், புவியியல் ,பொருளாதார நிலைமைகள் வேறு......இவை மாறியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாத உண்மை .............ஆகவே இன்னும் நிலைமைகள் மாறும் ...........இந்த மாற்றம் எமக்கு தேவை .இந்த மாற்றத்தையே எம் தேசியத்தலைவர் தீர்க்கதரிசனமாய் மாறும் என்று கூறினார் .................இந்த மாற்றங்களை சரியாக பயன்படுத்துவது எம் ஒவ்வொரு தமிழனதும் தலையாகிய கடமை ....

  • கருத்துக்கள உறவுகள்

காத்திரமான வெளிப்பாடு விசுகு அண்ணா..! மேலோட்டமாக சில ஆழமான விடயங்களையும் உள்ளடக்கியிருக்கிறீர்கள்..! ஆனால் அவற்றை இப்போது பொதுத்தளத்தில் விவாதித்துப் பயனில்லை..!

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு பாராட்டுக்கள் . ஒரு குறுகிய அதிகாரங்களை உடைய மாநிலங்களவையில் ஏற்படுத்தப்படும் தீர்மானங்கள் பெரிய அளவில் எமது பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா ??? அப்படியென்றால் இதற்கு முன்பு பல தீர்மானங்கள இதே மாநிலங்களவையில் ஏற்படுத்தப்பட்டன ஆனால் அவை உள்ளக அரசியல் சித்துவிளையாட்டிற்கே பயன்பட்டன . இதுவும் அப்படியே என்று நினைக்கின்றேன் :) :) .

எல்லாவற்றிலும் தோல்வியடைந்து ஒன்றுமே முடியாது என்ற நிலையில் இருந்தால் அவநம்பிக்கை வரும்தான். எனினும் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்தமிழ் இனத்திற்கு கிடைத்த துரும்புபோன்றாவது இந்தத் தீர்மானத்தில் நம்பிக்கை கொள்ளலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள்,விசுகர்!

வழி மீது விழி வைத்துக் காத்திருந்து, இலவு காத்த கிளியாகிப் போய்விட்டவர்கள் நாங்கள்!

ஏதும் ஒரு திசையில் 'ஒளி' தெரிந்தாலும், நம்ப மறுக்கிறது, மனது!

இருட்டுக்குப் பழகிப் போய்விட்டதோ,எமது கண்கள்? :D

இன்னும் உடைக்கப்படவேண்டிய, 'மாய வலைகள்' இன்னும் இருக்கின்றன!

இந்தப் பொழுதாவது எமக்காக விடியட்டும்! :lol:

நன்றி  புங்கை

எனக்கு ஏதோ ஒரு சக்தி அருகில் வந்தது போல்  உணர்வு

கிணற்றில் விழுந்து தவிப்பவனுக்கு எது கிடைத்தாலும் பிடித்துக்கொள்வானே அந்தநிலை

யாரோ பலர் சேர்ந்து கை கொடுத்தால் எப்படியான உணர்வு வரும்

அந்த நிலை

 கருணாநிதியை  தாக்கியும் இதில் எழுதினேன்

எனது நோக்கத்தை அது சிதைத்துவிடும் என்பதால் அதை அழித்துவிட்டேன்

நீங்கள் இங்கு சுட்டிக்காட்டுவது அதைத்தான் என்று நினைக்கின்றேன்

ஆனால் இதையெல்லாம் மீறி  தர்மம் வெல்லுமல்லவா?

வெல்ல வேண்டுமல்லவா?

அதுவே எடுதுகோள்

நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும் என  ஊரவரே......

  • கருத்துக்கள உறவுகள்

\\ஒரு பொறி வெடித்ததுபோல்

மாணவர் வந்தார் எமைக்காக்க

தமிழகமே புயலாக ஓங்கி அடித்தது

அடித்த புயலில்

காங்கிரசு அழிய

அத்தனை கட்சிகளும் கண் திறக்க

அம்மா கொண்டு வந்தார்

தமிழீழ வாக்கெடுப்பு எனும்

எமது தாகத்துக்கான திறவு கோலை

இதற்காகத்தானே

இத்தனை வருடம் தவம் கிடந்தோம்\\

தேவையான நேரத்தில் அர்த்தமான கவிதையை தந்த உங்களுக்கு நன்றிகள் ..................

உண்மையில் இந்தசூழலில் தமிழகத்தில் ஏற்பட்ட   மாணவர் போராட்டம் மிக மிக முக்கியமான திருப்பம் என்றே கூறவேண்டும்.. அதன் ஊடாக அதன் வழியாக தமிழக[ குறுகிய ]அரசினால் கொண்டுவரப்பட்ட தமிழீழத்திற்கான தேர்தல் தேவை என்ற தீர்மானம் அதை விட முக்கியமானதாகும் .............

ஏனனில் 2009 ஆம் ஆண்டும் மாணவர் போராட்டம் தமிழகத்தில் நடந்தது .ஆனால் அவை அன்றுள்ள தமிழக [குறுகிய] அரசின் உதவியுடன் மத்திய அரசு [காங்கிரஸ்] முடக்கி செயலிள க்கவைத்தது .அனால் இன்று நடக்கும் மாணவர் போராட்டத்தை மத்திய அரசால் நிறுத்த முடியல ............அதற்கு தற்போதுள்ள தமிழக [குறுகிய அரசு ] துணை நிற்கவில்லை .மாறாக அந்த மாணவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டுக்கொண்டிருப்பது என்பதே உண்மை ..........அதற்கு ஒரே ஒரு சான்று இந்த வாக்கெடுப்பு தீர்மானமாகும் .............

இங்கே உண்மை என்ன என்றால் அன்றுள்ள அரசியல், புவியியல் ,பொருளாதார நிலைமைகள் வேறு ..........இன்றுள்ள அரசியல், புவியியல் ,பொருளாதார நிலைமைகள் வேறு......இவை மாறியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாத உண்மை .............ஆகவே இன்னும் நிலைமைகள் மாறும் ...........இந்த மாற்றம் எமக்கு தேவை .இந்த மாற்றத்தையே எம் தேசியத்தலைவர் தீர்க்கதரிசனமாய் மாறும் என்று கூறினார் .................இந்த மாற்றங்களை சரியாக பயன்படுத்துவது எம் ஒவ்வொரு தமிழனதும் தலையாகிய கடமை ....

அருமையான... கருத்து தமிழ்ச்சூரியன். :)

கவிதைக்கு நன்றிகள்,விசுகர்!

வழி மீது விழி வைத்துக் காத்திருந்து, இலவு காத்த கிளியாகிப் போய்விட்டவர்கள் நாங்கள்!

ஏதும் ஒரு திசையில் 'ஒளி' தெரிந்தாலும், நம்ப மறுக்கிறது, மனது!

இருட்டுக்குப் பழகிப் போய்விட்டதோ,எமது கண்கள்? :D

இன்னும் உடைக்கப்படவேண்டிய, 'மாய வலைகள்' இன்னும் இருக்கின்றன!

இந்தப் பொழுதாவது எமக்காக விடியட்டும்! :lol:

 உண்மைதான் புங்கை.... இதே கருத்துதான் எனதும்.

என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.

கவிதைக்கு மிக்க நன்றி விசுகண்ணை! :)

  • கருத்துக்கள உறவுகள்

253700_460420837359346_1374397863_n.jpg

கவிதைக்கு பாராட்டுக்கள் . ஒரு குறுகிய அதிகாரங்களை உடைய மாநிலங்களவையில் ஏற்படுத்தப்படும் தீர்மானங்கள் பெரிய அளவில் எமது பிரச்சனைகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா ??? அப்படியென்றால் இதற்கு முன்பு பல தீர்மானங்கள இதே மாநிலங்களவையில் ஏற்படுத்தப்பட்டன ஆனால் அவை உள்ளக அரசியல் சித்துவிளையாட்டிற்கே பயன்பட்டன . இதுவும் அப்படியே என்று நினைக்கின்றேன் :) :) .

நல்ல மனது அண்ணை தங்களுக்கு.இதை எழுதும்போது உங்களுகு ஏற்பட்டிருக்கும் சந்தோசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.இப்பொழுது எல்லாம் உங்கள் அரசியல் தெளிவாக தெரிகிறது.
 
அருமையான கவிதையில் உள்ளகிடக்கையில் கொட்டி உள்ளீர்கள்.நன்றி விசுகண்ணா கவிதைக்கு.தமிழரின் கனவு ஒரு நாள் நனவாகும்.அந்த நம்பிக்கையை தளராமல் உங்களைப்போல் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும்.மேலே கருத்தெழுதியவர்கள் போல் மக்களின் உள உறுதியை உடைக்கும் வகையில் எழுதும் களைகள் அப்பப்ப முளைத்துக்கொண்டே இருக்கும்.அவற்றை களைந்தெறிந்துவிட்டு நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக தொடர்ந்து பயணிக்கவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

தேவையான நேரத்தில் தேவையான கவிதை.நன்றி விசுகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

\\ஒரு பொறி வெடித்ததுபோல்

மாணவர் வந்தார் எமைக்காக்க

தமிழகமே புயலாக ஓங்கி அடித்தது

அடித்த புயலில்

காங்கிரசு அழிய

அத்தனை கட்சிகளும் கண் திறக்க

அம்மா கொண்டு வந்தார்

தமிழீழ வாக்கெடுப்பு எனும்

எமது தாகத்துக்கான திறவு கோலை

இதற்காகத்தானே

இத்தனை வருடம் தவம் கிடந்தோம்\\

தேவையான நேரத்தில் அர்த்தமான கவிதையை தந்த உங்களுக்கு நன்றிகள் ..................

உண்மையில் இந்தசூழலில் தமிழகத்தில் ஏற்பட்ட   மாணவர் போராட்டம் மிக மிக முக்கியமான திருப்பம் என்றே கூறவேண்டும்.. அதன் ஊடாக அதன் வழியாக தமிழக[ குறுகிய ]அரசினால் கொண்டுவரப்பட்ட தமிழீழத்திற்கான தேர்தல் தேவை என்ற தீர்மானம் அதை விட முக்கியமானதாகும் .............

ஏனனில் 2009 ஆம் ஆண்டும் மாணவர் போராட்டம் தமிழகத்தில் நடந்தது .ஆனால் அவை அன்றுள்ள தமிழக [குறுகிய] அரசின் உதவியுடன் மத்திய அரசு [காங்கிரஸ்] முடக்கி செயலிள க்கவைத்தது .அனால் இன்று நடக்கும் மாணவர் போராட்டத்தை மத்திய அரசால் நிறுத்த முடியல ............அதற்கு தற்போதுள்ள தமிழக [குறுகிய அரசு ] துணை நிற்கவில்லை .மாறாக அந்த மாணவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டுக்கொண்டிருப்பது என்பதே உண்மை ..........அதற்கு ஒரே ஒரு சான்று இந்த வாக்கெடுப்பு தீர்மானமாகும் .............

இங்கே உண்மை என்ன என்றால் அன்றுள்ள அரசியல், புவியியல் ,பொருளாதார நிலைமைகள் வேறு ..........இன்றுள்ள அரசியல், புவியியல் ,பொருளாதார நிலைமைகள் வேறு......இவை மாறியுள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாத உண்மை .............ஆகவே இன்னும் நிலைமைகள் மாறும் ...........இந்த மாற்றம் எமக்கு தேவை .இந்த மாற்றத்தையே எம் தேசியத்தலைவர் தீர்க்கதரிசனமாய் மாறும் என்று கூறினார் .................இந்த மாற்றங்களை சரியாக பயன்படுத்துவது எம் ஒவ்வொரு தமிழனதும் தலையாகிய கடமை ....

அருமையான கருத்து

நான் எதை எண்ணி  இத்திரியை  எழுதினேனோ அதைச்சொல்லும் வரிகள்

பொது நலம் சார்ந்து சிந்திக்கும் எமது கருத்துக்கள் எப்பொழுதும்  ஒரே வகையாக இருப்பதற்கு அந்த தாயகவேட்கையே  காரணம்.

நன்றி  தம்பி  கருத்துக்கும் நேரத்திற்கும்

காத்திரமான வெளிப்பாடு விசுகு அண்ணா..! மேலோட்டமாக சில ஆழமான விடயங்களையும் உள்ளடக்கியிருக்கிறீர்கள்..! ஆனால் அவற்றை இப்போது பொதுத்தளத்தில் விவாதித்துப் பயனில்லை..!

நன்றி.

நன்றி  சகோதரா

இரவும் பகலும் எமக்குள் உளலும் விடயங்கள் இவை.

விடை(ஈழம்) கிடைக்கும்வரை எம்முடனேயே  பயணிக்கும்

அதை அனுபவிப்பவருக்கு மட்டுமே அவை புரியும்

நன்றி  தம்பி  நேரத்திற்கும்  கருத்துக்கும்

 எல்லாவற்றிலும் தோல்வியடைந்து ஒன்றுமே முடியாது என்ற நிலையில் இருந்தால் அவநம்பிக்கை வரும்தான்.

எனினும்

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நம்தமிழ் இனத்திற்கு கிடைத்த துரும்புபோன்றாவது இந்தத் தீர்மானத்தில் நம்பிக்கை கொள்ளலாம்.

அருமையான இரு வரிகள்

இரண்டையும்  கவிதையில் தொட்டிருக்கின்றேன்

அப்புறம் போராட்டுத்துக்கான காரணங்கள் அப்படியே  இருப்பதை உணர்ந்த எவரும் இது போன்ற கேள்விகளை முன் வைக்கமாட்டார்கள். கிடைப்பதை பாவித்து அதிலிருந்து விடுபடவே முயல்வர்.

 உண்மைதான் புங்கை.... இதே கருத்துதான் எனதும்.

என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கின்றீர்கள்.

கவிதைக்கு மிக்க நன்றி விசுகண்ணை! :)

நன்றி

தம்பி கவிதை

253700_460420837359346_1374397863_n.jpg

வெற்றி  சாத்தியமற்றது என்பது  இயலாதவனின் கூப்பாடு

தமது லட்சியத்தில் உறுதியானவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த எமக்கு இது கூட தெரியவில்லை என்றால்........???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனது அண்ணை தங்களுக்கு.இதை எழுதும்போது உங்களுகு ஏற்பட்டிருக்கும் சந்தோசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.இப்பொழுது எல்லாம் உங்கள் அரசியல் தெளிவாக தெரிகிறது.
 
அருமையான கவிதையில் உள்ளகிடக்கையில் கொட்டி உள்ளீர்கள்.நன்றி விசுகண்ணா கவிதைக்கு.தமிழரின் கனவு ஒரு நாள் நனவாகும்.அந்த நம்பிக்கையை தளராமல் உங்களைப்போல் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும்.மேலே கருத்தெழுதியவர்கள் போல் மக்களின் உள உறுதியை உடைக்கும் வகையில் எழுதும் களைகள் அப்பப்ப முளைத்துக்கொண்டே இருக்கும்.அவற்றை களைந்தெறிந்துவிட்டு நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக தொடர்ந்து பயணிக்கவேண்டும்.

முதலில் தமிழுக்கு நன்றிகள்

தொடர வாழ்த்துக்கள்

தமிழரின் கனவு ஒரு நாள் நனவாகும்.

அந்த நம்பிக்கையை தளராமல் உங்களைப்போல் ஒவ்வொருவரும் இருக்கவேண்டும்

நிச்சயமாக

நானும்

எனது  பிள்ளையும்

பேரப்பிள்ளையும் இருக்கும் தம்பி

தர்மம் நிச்சயம் வெல்லும் என்ற ஒளி  கண்ணில் தெரிகிறது

அதற்காக எல்லோரும் ஒன்றாகி  உழைக்கவேண்டுகின்றேன்

இல்லாது விட்டால் காலம் கொஞ்சம் அதிகமாகலாம்

ஆனால் நிச்சயம் வெளிச்சம் வரும்

நன்றி  கருத்துக்கும் நேரத்துக்கும்

அழகு தமிழுக்கும் (எமது எல்லாப்போராட்டமும் இந்த தமிழுக்காகத்தானே ராசா)

  • கருத்துக்கள உறவுகள்

தர்மம் வெல்லும்

அதில் மாவீரர்  கனவு பலிக்கும்

நெஞ்சை நிமிர்த்தி எம் மாவீரர் மகிழும் காலம்  விரைவில் வரும்.

http://www.youtube.com/watch?v=eimd6wdzbVo

அதுவரை பயணிப்போம் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தளராமனதுடனும்..நன்றி கவிதைக்கு அண்ணை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கவிதை விசுகு, வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.