Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம்

Featured Replies

விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம் [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 00:19 GMT ] [ அ.எழிலரசன் ] Yashwant-Sinha.jpg

சிறிலங்காவில் விரைவில் தமிழீழம் மலரும் என்று பாஜக மூத்த தலைவரும், இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜஸ்வந்த் சின்ஹா சென்னையில் நேற்றுத் தெரிவித்துள்ளார். 

இவரது இந்தக்கருத்து, இதுவரை ஒன்றுபட்ட சிறிலங்காவை வலியுறுத்தி வந்த பாஜக, தற்போது அந்தக் கொள்கையை கைவிட்டு தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக கருதப்படுகிறது. 

தமிழக பாஜக சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான சிறப்புக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜஸ்வந்த் சின்ஹா- 

"சிறிலங்கா பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கொல்லப்பட்ட பாலச்சந்திரன் படத்தைப் பார்க்கும்போது யாருக்குத் தான் துன்பம் வராது?

பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குழந்தை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். 

அந்தக் குழந்தை குண்டுகளை முதுகில் வாங்கவில்லை, நெஞ்சில் வாங்கியிருக்கிறான். 

வாஜ்பாய் தலைமையிலான அரசு சிறிலங்கா பிரச்சினையை பேச்சுக்களின் மூலம் தீர்க்கப் பார்த்தது. 

ஆனால் காங்கிரஸ் தான் ஆரம்பத்தில் இருந்தே சிறிலங்கா பிரச்சினையில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. 

இந்திரா காந்தி காலத்தில் 1974-ல் கச்சத்தீவு சிறிலங்காவுக்கு கொடுக்கப்பட்டது. 

ராஜீவ்காந்தி காலத்தில் சிறிலங்காவுக்கு அமைதிப்படை அனுப்பப்பட்டது. இதில் 2009 இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 

2005-ல் சிறிலங்காவில் ராஜபக்ச தலைமையிலான புதிய அரசு அமைந்ததில் இருந்தே அவர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. 

சிறிலங்கா அரசின் அனைத்து வகையான குற்றங்களுக்கும் இதுதான் காரணம். 

சிறிலங்காவில் கிடைத்த ஆதாரங்கள், இந்தியாவில் கிடைத்த ஆதாரங்களை வைத்து நாடாளுமன்றத்தில் காங்கிரசை குற்றம்சாட்டி பேசினேன். அதற்கு காங்கிரஸ் கட்சியினர் ஒருவர்கூட குறுக்கீடு செய்யவில்லை. 

அப்படி என்றால் சிறிலங்காவில் நடந்த இனப்படுகொலைக்கு காங்கிரசும் காரணம் என்பதை அக்கட்சினரே கூட ஒப்புக்கொள்கின்றனர் என்று தான் அர்த்தம். 

2009-ல் இறுதி யுத்தம் நடந்தபோது ராஜபக்ச அரசுக்கு காங்கிரஸ் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்தது. 

சிறிலங்காவில் ராஜபக்ச, அவரது உதவியாளர், இராணுவ செயலர் கொண்ட ஒரு குழுவும், இந்தியாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையிலான மூவர் குழுவும், இறுதிக்கட்டப் போர் நடந்த போது, பரஸ்பரமாக பேசி இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளனர். 

உச்சகட்ட போர் நடந்த போது, மன்மோகன் சிங் செயற்படாமல், "மண்' மோகன் சிங்காக தான் இருந்தார். 

இந்தியாவின் உயர்தலைமை வரை எங்களுக்கு உதவியிருக்கிறது என்று சிறிலங்கா அரசு கூறுகிறது. 

அப்படியென்றால் மன்மோகன் சிங் வரை ஆதரவு என்றுதானே அர்த்தம்? 

சிறிலங்கா அரசை இந்தியா நிர்பந்தம் செய்யுமானால், சீனா அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து விடும் என்று மத்திய அரசு இப்போது சாக்குபோக்கு சொல்கிறது. 

ஆனால் இப்போதும் சிறிலங்காவில் தான் சீனா அமர்ந்துள்ளது. அதைத் தடுப்பதற்கு இந்தியாவால் முடிந்ததா? 

நட்பு என்பது பரஸ்பரமாக ஏற்பட வேண்டுமே அல்லாமல், நயந்து சென்று பெறுவதாக இருக்கக் கூடாது. 

சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா.வில் இந்தியாவே தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். 

ஆனால் காங்கிரஸ் அரசு, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையே நீர்த்துப் போகச் செய்து ஆதரித்துள்ளது. 

தமிழர் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை அகற்ற வேண்டும் என்றும் கோரினேன். ஆனால் செவிமடுக்கப்படவில்லை. 

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். அந்தத் தேர்தல் அனைத்துலக கண்காணிப்பின் கீழ்தான் நடத்தப்பட வேண்டும். 

இதற்கு சிறிலங்கா அரசு ஒத்துக்கொண்டால் தான் தமிழர்கள் பற்றிய சிந்தனையில் சிறிலங்காவுக்கு மாற்றம் வந்துள்ளது என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியும். 

சிறிலங்கா தவிர்த்த மற்ற நாடுகளைச் சேர்ந்த ஒரு குழுவை அமைத்து சிறிலங்காவில் போரின்போதும், போருக்குப் பிறகும் இடமபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து ஆராய வேண்டும். 

இது தொடர்பாக நடாளுமன்றத்தில் வலியுறுத்தியபோது, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் சிறிலங்காவில் தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம் என்கிறார். 

வீடு கட்டிக் கொடுப்பது மனிதஉரிமைகளைப் பெற்றுத் தருவதாக அமையாது. 

சிறிலங்காவில் கொமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்பது இந்தியா முழுவதும் உள்ளவர்களின் கோரிக்கை. 

இந்தியா நினைத்தால் இதனை எளிதாகச் செய்யலாம். ஆனால் இந்தியா செய்யுமா என்பது சந்தேகம். 

அடக்குமுறையின் மூலமாக ஒரு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்க முடியாது. 

அடக்குமுறை அதிகரித்தால் அப்பகுதியில் உள்ள மக்களின் சுதந்திர உணர்வும் அதிகரிக்கும். 

பாகிஸ்தானின் அடக்குமுறையால் தான் பங்களாதேஸ் உருவானது. 

வடக்கு சூடான், தெற்கு சூடான் என பிரிந்திருப்பதற்கு ஆட்சியாளர்களின் அடக்குமுறைதான் காரணம். 

எனவே, அடக்குமுறையைச் செலுத்தினால் ஈழம் அமைய வெகுநாள் ஆகாது என்பதை ராஜபக்ச அரசுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

இன்னும் காலம் இருக்கிறது. அதனால் ராஜபக்ச அரசு திருத்திக் கொள்ள வேண்டும். 

தமிழக மீனவர் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் கச்சத்தீவை சிறிலங்காவுக்கு தாரைவார்த்தது தான். 

அதோடு பலவீனமான மத்திய அரசு மற்றும் பலவீனமான பிரதமர் இருப்பதுதான். 

வருங்காலத்தில் பாஜக ஆட்சி அமையும். அப்போது தமிழர்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130404108047

கட்சிகளின் கொள்கைகளில் தமிழர் சார்ந்த விடயத்தில் மாற்றம் கொண்டுவரும் மாணவ சமூகத்திற்கு நன்றிகள். காங்கிரசும் பகிரங்கமாக, கொள்கை சார்ந்து, இலங்கை பற்றி பேச வேண்டிய நிரப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 

 

 எனவே, அடக்குமுறையைச் செலுத்தினால் ஈழம் அமைய வெகுநாள் ஆகாது என்பதை ராஜபக்ச அரசுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

 

இது மட்டும் நூறு வீதம் உண்மை!

தமிழ்நாட்டு ஆதரவைப் பொறுவதற்காக தமிழ்நாட்டில் மட்டும் கதையளக்காமல் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் இதனைச் செய்ய வேண்டும்.

ஒரே கட்சியில் ஆளுக்கு ஆள் கொள்கை மாறுபடுமா? 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் போராட்டம்  இந்திய  அளவில் சிந்திக்க  வைத்திருக்கிறது

அது தமிழக தேர்தலைக்கருத்தில் கொண்டு அமைந்தாலும் மத்தியிலும் இனி கணக்கெடுக்கப்படும்  ஒன்றாக மாறியிருப்பதை இது போன்ற தலைவர்களது உரை சொல்லி  நிற்கிறது

இதை வருகின்ற தேர்தலில் யெயலலிதா தன் கூட்டுக்கு பாவிப்பார்.

ஈழம்தான் முடிவு என இரு கட்சிகளும் அறிவித்து தேர்தலில் நின்றால் 40 ஆசனங்களைப்பெற்று முதலாவது உச்ச வலு கொண்ட மாநிலமாக ஆட்சிப்பொறுப்பிலுள்ளவர்களை  தீர்மானிக்கும் சக்தியாக வரமுடியும்

 

பார்க்கலாம்

அடுத்த கட்ட நகர்வுகளை.....

BJP may change stance on Tamil Eelam, hints Sinha

 

Senior BJP leader and former union minister Yashwant Sinha on Wednesday night warned Sri Lankan President Mahinda Rajapaksha that the latter’s policies of continued “oppression” against the Tamils there could open the floodgates to Tamil Eelam.

 

 

“So far, the BJP’s position to resolve the much-prolonged Tamils ethnic crisis in Sri Lanka has been for a negotiated settlement within the territorial Integrity of Sri Lanka,” Sinha said, addressing a special meeting on the ‘Island-Tamils crisis’ in Chennai, organised by the BJP’s Tamil Nadu unit.


But recent history has shown that the more the rulers of a country decide to suppress an already heavily discriminated section of its people, the more independent minded they become,” Sinha said, citing recent examples of separation of East Timor, and North and South Sudan becoming two countries among others. 

 

Stating that he was sending out a message to Rajapaksha from Chennai, Sinha stressed that rulers trying to suppress people’s movements does not work for all times. “If people rise there is no stopping,” Sinha said.

 

http://www.deccanherald.com/content/323730/bjp-may-change-stance-tamil.html

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா – பாஜகவின் கொள்கையில் மாற்றம் [ வியாழக்கிழமை, 04 ஏப்ரல் 2013, 00:19 GMT ] [ அ.எழிலரசன் ] Yashwant-Sinha.jpg

வாஜ்பாய் தலைமையிலான அரசு சிறிலங்கா பிரச்சினையை பேச்சுக்களின் மூலம் தீர்க்கப் பார்த்தது. 

ஆனால் காங்கிரஸ் தான் ஆரம்பத்தில் இருந்தே சிறிலங்கா பிரச்சினையில் தவறான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. 

http://www.puthinappalakai.com/view.php?20130404108047

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எவ்வளவுக்கு இந்தனை நம்புவது என்று தெரியவில்லை அப்படி அவர் கூறுவது போல் நடந்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். 

 

பாஜகவின் கொள்கையில் மாற்றத்தை தொடர்ந்து அமுல்படுத்த வைக்க தொடர்ச்சியான போராட்டங்கள் மாணவ சமூகத்தினால் தொடர்ந்து முன் எடுக்கப்படல் வேண்டும்.

 

அத்தோடு பிற மாநில மாணவர்கள் மத்தியிலும் போராட்டத்தை கொண்டு சென்று ஈழத்துக்கு ஆதரவை பெருக்குவதன் மூலம் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்தியாவை நிர்பந்திக்க முடியும். 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பிஜேபியுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா அம்மையார் இப்போது ஒரு முன் நிபந்தனை விதிக்கலாம். அதாவது ஆட்சிக்கு வரும்பட்சத்தில், இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையை பிஜேபி அரசு மாற்றும் என உறுதியளித்தால் கூட்டணிக்குத் தயார் என்று.

 

தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் அடுத்த தேர்தலில் எப்படியும் ஈழ ஆதரவுக் கூட்டணி ஒன்றுக்கே 40 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளது (கூட்டணி சரியாக உள்ள பட்சத்தில்).. 40 தொகுதிகள் தனது கூட்டணிக்கு என்றால் பிஜேபிக்கு கசக்குமா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களுக்கும் மக்களுக்கும் நன்றி நல்லதொரு முடிவு, அதிமுகா இனி வடிவாக காய் நகர்த்தலாம். திமுக & காங்கிரஸ் கூட்டோடு அழியனும்

மதிமுகவுக்கு ஐந்து இடங்களை ஒதுக்க அதிமுக சம்மதம்???????, கூட்டணி உறுதியானதா செய்தி///

தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை பா.ஜ.கா உளப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் ஏற்றுக்கொலாமல் இவர்கள் சாதிக்கப்போவது சுள்ளியத்தைத் தாண்டாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மாணவர்களுக்கு கோடி நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஜத்வன் சிங்கா எல்லாம் ப ஜ க வில் பெரிய ஆளே கிடையாது....இப்ப....

அண்மையில் மாற்றி அமைக்கப்பட கட்சி பதவிகளிலும் அவருக்கு முக்கியமான பதவிகள் கொடுக்கல்ல.....

இப்பிடியே உங்களுக்கு ஒவோருத்தன் பேசுறத நம்பிட்டு இருக்கிறதே வேலையா போச்சு

தமிழ் நாட்டுக்கு வந்தா இப்பிடி தான் பேசணும் எண்டதுக்காக பேசிட்டு போறாங்க.... That's all

மற்றும்படி காங்கிரசும் சரி பிஜேபி யும் சரி தமிழ் ஈழம் பெற்று தரும் என்பது வெறும் பகல் கனவே.....

இனவாதி ரணிலை அவர்சார அவசரமா இனவாதி மகிந்த அத்வானியை சந்திக்க அனுப்பியது நினைவிருக்கலாம்.....

சுண்டல் சூப்பர் .

ஜத்வன் சிங்கா எல்லாம் ப ஜ க வில் பெரிய ஆளே கிடையாது....இப்ப....

அண்மையில் மாற்றி அமைக்கப்பட கட்சி பதவிகளிலும் அவருக்கு முக்கியமான பதவிகள் கொடுக்கல்ல.....

இப்பிடியே உங்களுக்கு ஒவோருத்தன் பேசுறத நம்பிட்டு இருக்கிறதே வேலையா போச்சு

தமிழ் நாட்டுக்கு வந்தா இப்பிடி தான் பேசணும் எண்டதுக்காக பேசிட்டு போறாங்க.... That's all

மற்றும்படி காங்கிரசும் சரி பிஜேபி யும் சரி தமிழ் ஈழம் பெற்று தரும் என்பது வெறும் பகல் கனவே.....

இனவாதி ரணிலை அவர்சார அவசரமா இனவாதி மகிந்த அத்வானியை சந்திக்க அனுப்பியது நினைவிருக்கலாம்.....

 

 

இங்கே நம்புவது/நம்பியது  இல்லை முக்கிய விடயம். மாணவர் போராட்டம் எமது பிரச்சனையை தமிழக மற்றும் இந்திய பிரச்சனையாக மாற்றும் வல்லமை உள்ளது என்பதுதான்.

 

அதை மாணவர்கள் பலரும்தெளிவாக கூறி உள்ளார்கள்

 

டெல்லியில் இந்திய அரசு தமிழீழத்தை ஆதரித்து தீர்மானம் நாளை நிறைவேற்றாது என்பது தெரியும். ஆனால் முதல் சுயாதீன போர்க்குற்ற விசாரணைக்கு தீர்மானத்தை நிறைவேற்றக முடியும்.

  • தொடங்கியவர்

சுண்டல் சூப்பர் .

எந்தக் கடை?

  • கருத்துக்கள உறவுகள்

ஜத்வன் சிங்கா எல்லாம் ப ஜ க வில் பெரிய ஆளே கிடையாது....இப்ப....

அண்மையில் மாற்றி அமைக்கப்பட கட்சி பதவிகளிலும் அவருக்கு முக்கியமான பதவிகள் கொடுக்கல்ல.....

இப்பிடியே உங்களுக்கு ஒவோருத்தன் பேசுறத நம்பிட்டு இருக்கிறதே வேலையா போச்சு

தமிழ் நாட்டுக்கு வந்தா இப்பிடி தான் பேசணும் எண்டதுக்காக பேசிட்டு போறாங்க.... That's all

மற்றும்படி காங்கிரசும் சரி பிஜேபி யும் சரி தமிழ் ஈழம் பெற்று தரும் என்பது வெறும் பகல் கனவே.....

இனவாதி ரணிலை அவர்சார அவசரமா இனவாதி மகிந்த அத்வானியை சந்திக்க அனுப்பியது நினைவிருக்கலாம்.....

நீங்கள் எழுதியவை உண்மைகள் என்றாலும்............

 
இந்திய நலன் என்று பார்த்தால் அது ஈழத்தை சார்ந்தே இருக்கிறது.
 
இப்போதைய காங்கிரஸ் அரசின் செயற்பாடு எல்லாம் வெறும் பழி வாங்கும் வேலை மடுமே. இதில் இந்தியாவிற்கு நஷ்டம் மட்டுமே உண்டு.
 
இதை தொடர்வதால் இனிவரும் அரசுக்கு எந்த இலாபமும் இல்லை.
ஆனால் "றோ" வின் தொடர் விம்பம் அதே அதிகாரிகள் கொஞ்ச நாளைக்கு அதை இதை சாக்கு போக்கு சொல்லி தக்கவைத்து கொள்ளலாம்.
 
பிராந்திய நலனில் பா.ஜ.க  முக்கிய பங்கு எப்போதும் எடுத்து வருகிறது. அது இந்தியாவின் சந்தையை நிர்ணயிக்க கூடியது. தற்போது அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவை விலை பேசி வாங்குகிறார்கள் . இலஞ்சமாக கொஞ்சத்தை தற்போதைய ஆட்சியாளருக்கு  கொடுக்கிறார்கள். ஊழல் மட்டுமே தலை விரித்தாடுகிறது. 
 
இலங்கை இராணுவ முகாமே சீனாவின் காணிக்குள் என்ற நிலையில் இப்போது இலங்கையில் சீன  கால்பதித்திருக்கிறது. அடியாள்  மாதிரி  கூட இழுபட்ட இந்தியா கூடி நின்று கொலை செய்தவர்கள் எந்த களத்திலும்  சிங்கள அரசி அதற்காக சாடவும் முடியாது அதுபற்றி பேசவும்  முடியாது.
இந்த ஆப்பை தனக்கு தானே இந்தியா அடித்துள்ளது. இதை தளர்த்துவது என்றால் தமிழரை விருப்ம்பியோ விரும்பாமலோ  அணைக்கத்தான் வேண்டும்.
 
நீங்கள் எழுதியதில் முக்கியமானது............
பா. ஜ .க  வின் முக்கியமில்லாத நபரை தமிழ் நாட்டிற்கு அனுப்பியதுதான்.
உண்மையான அரசியல் நகர்வுகள் இப்படிதான் ஆரம்பிக்கும். அவருடைய வார்த்தைகள்  எப்படியான நிலைமையை தோற்று விக்கின்றன என்பதை பொறுத்து .
அடுத்த நகர்வை தொடரலாம்.
இப்போ இதே நிலைபாட்டிலும் நிற்கலாம்.
அது வருடைய சொந்த கருத்து என்று நிராகரித்தும் நிற்கலாம்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாப்பமே!!!

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள முன்னாள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா அவர்களே!

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் முன்னாள் இந்தியப் பிரதமர் என்ற நிலையை அடைந்தவுடன் உங்களைப்போலவே நீதி, நியாயங்களை உணர்ந்துகொள்ளும் மனிதராக மாறிவிடுவார் என்பதில் எள்ளளவும் எங்களுக்குச் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா யஷ்வந்த் சின் சுஸ்மா சுவராஜ், சுஸ்மா சுவராஜ்,என்ற லேடி உங்க கட்சியா இல்லை மகிந்தவின் கட்சியா? 

mr02.jpg

MR_Sushma-1.jpg

DSC_06681.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.