Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கண்ட கனவுகள்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த யாழ்களப் பெருமக்களே.. :D

 

கனவுகள் எல்லோருக்கும் வருவது.. கனவு என்று நான் சொல்வது சும்மா கற்பனை செய்து பிராக்குப் பார்க்கும் பகற்கனவை அல்ல.. :D உண்மையான கனவுகளைச் சொல்கிறேன். முக்கால்வாசிக் கனவுகள் காலையில் எழுந்ததும் மறந்துவிடும். ஆனால் சிலவற்றை ஞாபகத்தில் வைத்திருப்போம்.. 001_unsure.gif

 

எனக்கும் அடிக்கடி கனவுகள் வரும்.. நேற்று இரவும் இரண்டு கனவுகள் வந்தன.. :rolleyes: அவற்றை உங்களுடன் பகிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.. 001_unsure.gif வரும் நாட்களில் காணக்கிடைக்கும் கனவுகளையும் இணைக்கலாம் என்று நினைக்கிறேன்.. 001_unsure.gif உங்களது மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.. அதே வேளையில் உங்கள் கனவுகளையும் (உண்மையானவை) இணையுங்கள்..! :rolleyes:

 

 

முன்குறிப்பு: சில விசேட கனவுகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும். :lol:

 

1) புதிய காதலி

 

இந்தக் கனவின்படி நான் ஒரு இளம்பெண்ணுடன் எங்கோ போய்க்கொண்டிருக்கிறேன். வீடுகள் எல்லாம் ஆப்கானிஸ்தான் வறண்ட பாறைகள் நிறைந்த பூமியில் கட்டப்பட்டுள்ள ஒற்றை மாடி வீடுகள் போல் காட்சியளிக்கின்றன. அவை சிதிலமடைந்த கற்களால் கட்டப்பட்டவையாக இருந்தன. :( தெருக்களும் குறுகலாக உள்ளன. தூசிகள் பறக்கும் இடம்.

 

இந்தத்தெருவில் நானும், அவளும் விரைவாக நடந்து போகிறோம். :lol: அந்தப்பெண் நெற்றியில் விபூதியும், சிறிய பொட்டும் அணிந்திருக்கிறாள். 001_unsure.gif வயதும் அதிகம் இராது. ஆனால் மிக உற்சாகமாகப் பேசிக்கொண்டு வருகிறாள்..

 

போய்க்கொண்டிருக்கும் நான் அந்த அதிமுக்கியமான கேள்வியைக் கேட்கிறேன்.. 001_unsure.gif

 

"எனக்கும் உனக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் இருக்கும்போல் தெரிகிறதே..?!" (காதலியிடம் கேட்கக்கூடிய கேள்வியா இது?! :lol: )

 

அவள் பதில் தரவில்லை.. எதுவும் பேசி உற்சாகத்தைக் கெடுக்கவேண்டாம் என்பதுபோல் என் கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்துவிடுகிறாள்.. :lol:

 

ஆனால் அது வழக்கமான உம்மா போல் இல்லை.. 001_unsure.gif தரையில் தேய்க்கும் மொப் (Mop) போல எச்சிலுடன் தேய்த்துவிட்டிருக்கிறாள். :o (பேயாக இருக்குமோ?001_unsure.gif )

 

எச்சிலைத் தடவிப்பார்த்த நான் குழம்பியபடி நிற்க அடுத்த கனவு வருகிறது.. 001_unsure.gif

 

(தொடரும்..)

  • Replies 50
  • Views 13.4k
  • Created
  • Last Reply

இசை கவனம்!

 

தலிபான்களிடம் மாட்டினால் சிரச் சேதம்செய்து போடுவினம்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப்பெண் நெற்றியில் விபூதியும், சிறிய பொட்டும் அணிந்திருக்கிறாள்.

 

 

 

 

 

ஆப்கானில்  கனவு அதுவும் பொட்டுடன் பெண் என்பதால் இடக்கு மடக்கான கனவாக தான் இருக்கும். :)

மற்றது என்ன நினைவில் திரிகிறோமோ அதே தான் கனவாக வருமாம்.

:D  :D

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை கவனம்!

தலிபான்களிடம் மாட்டினால் சிரச் சேதம்செய்து போடுவினம்.... :D

கனவில் மட்டும்தான் என்றால் எந்தத் தேசத்தில் இருந்தும் எஸ்கேப் ஆகலாம்தானே மணிவாசகன்? :D

  • கருத்துக்கள உறவுகள்

------

 

அவள் பதில் தரவில்லை.. எதுவும் பேசி உற்சாகத்தைக் கெடுக்கவேண்டாம் என்பதுபோல் என் கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்துவிடுகிறாள்.. :lol:

 

ஆனால் அது வழக்கமான உம்மா போல் இல்லை.. 001_unsure.gifதரையில் தேய்க்கும் மொப் (Mop) போல எச்சிலுடன் தேய்த்துவிட்டிருக்கிறாள். :o (பேயாக இருக்குமோ?001_unsure.gif )

 

எச்சிலைத் தடவிப்பார்த்த நான் குழம்பியபடி நிற்க அடுத்த கனவு வருகிறது.. 001_unsure.gif

 

(தொடரும்..)

 

உம்மாவை ரசிக்காமல், தரையில் தேய்க்கும்... மொப்புக்கா உதாரணம் காட்டுவது. :D  :lol: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானில் கனவு அதுவும் பொட்டுடன் பெண் என்பதால் இடக்கு மடக்கான கனவாக தான் இருக்கும். :)

மற்றது என்ன நினைவில் திரிகிறோமோ அதே தான் கனவாக வருமாம்.

:D:D

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்கிறீங்களா நுணா?? :D அதுவும் சரிதான்.. ஆனால் அண்மை நாட்களில் இப்பிடியான சிந்தனைகளுடன் இருக்கவில்லை எண்டால் நம்பவா போறீங்கள்??! :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

இசை கவனம்!

 

தலிபான்களிடம் மாட்டினால் சிரச் சேதம்செய்து போடுவினம்.... :D

 

அப்படியா???

 

பரவாயில்லையே........ :lol:  :D  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உம்மாவை ரசிக்காமல், தரையில் தேய்க்கும்... மொப்புக்கா உதாரணம் காட்டுவது. :D:lol:

வந்தது பேய்தான் எண்டு இப்ப திடமா நம்பிறன் தமிழ்ஸ்.. :D

அப்படியா???

பரவாயில்லையே........ :lol::D:D:D

சிரம் என்றால் தலைதானே..?! :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வந்தது பேய்தான் எண்டு இப்ப திடமா நம்பிறன் தமிழ்ஸ்.. :D

சிரம் என்றால் தலைதானே..?! :unsure::lol:

 ஓம் தம்பி

 

பயப்படும்படியாக இல்லை :lol:  :D  :D  :D

எனக்கும் விதம் விதமான கனவுகள் வரும். நிறைய புத்தகங்கள் படிப்பதால் தான் எனக்கு வினோதமான கனவுகள் வருகின்றன என நினைத்துக் கொண்டு இருந்தேன். கனக்க 'பலான' கனவுகளும் வரும். 

 

பொதுவாக  கனவுகள் நிஜ உலகில் அசாத்தியமானவை ஆக இருப்பவை. 2+2 என்பது கனவில் 4 ஆக இருக்காது 5 ஆகவும் இருக்கும் 2000 ஆகவும் இருக்கும். வீட்டின் முன் அறை இலங்கையில் வசித்த வீட்டு முன்னறை என்றால் பின் கதவு கனடாவில் இருக்கும். இப்படியான கனவுகள் ஏன் வருகின்றன எனத் தெரியவில்லை. அனேகமான கனவுகள் எனக்கு விடிந்த பின்னும் நினைவில் நிற்கும். சில நேரங்களில் ஒரு கனவு கண்டு இடையில் விழித்து பின் மீண்டும் படுக்கும் போது தொடர்ந்தும் இருக்கு.  ஒரு நாள் ஒரு கனவுக்குள் இருந்து இன்னொரு கனவுக்குள் விழுந்தும் இருக்கின்றன்.

 

நேற்று ஒரு கனவு வந்தது. நானும் மனிசியும் ஒரு கட்டுமரத்தில் மோட்டார் பூட்டிக் கொண்டு நடுவில் மகளையும் வைத்துக் கொண்டு கடலில் பயணம் போகின்றோம். இருவரும் கடற்புலிகளின் உடுப்புகளை அணிந்து கொண்டு இருக்கின்றோம். ஆனால் கடல் எங்கள் கடலாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு ஆயுதக் கப்பலுக்கு ஆயுதங்கள் ஏற்ற போகின்ற மாதிரி கனவு அது.

 

முந்த நாள் வந்தது இன்னும் வினோதமானது. நான் ஒரு போட்டியில் கலந்து கொள்கின்றேன். அந்தப் போட்டி என்னவென்றால் பூவரசம் இலையினைச் சுருட்டி விசில் செய்து ஆர் நல்ல சத்தமாக ஊதுகினம் என்ற போட்டி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் புவரசம் இலை விசில் கனவைப் படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியின் புவரசம் இலை விசில் கனவைப் படித்ததும் சிரிப்பு வந்துவிட்டது.. :lol:

 

ஆள், ஒருத்தரும் காணாத கனவைக் கண்டிருக்கிறார். :D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

முந்த நாள் வந்தது இன்னும் வினோதமானது. நான் ஒரு போட்டியில் கலந்து கொள்கின்றேன். அந்தப் போட்டி என்னவென்றால் பூவரசம் இலையினைச் சுருட்டி விசில் செய்து ஆர் நல்ல சத்தமாக ஊதுகினம் என்ற போட்டி.

 

 

 

இது ஒரு செம கனவு தான்.யாராலும் இப்படி கனவு காணமுடியாது. :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கு ...இந்த இடத்தில்...எச்சரிக்கை( <_< ??? :o ) பூவரசம் இலையிலை விசில் அடிகிறேல்லை..பீ..பீ என்று நாதஸ்வரம்(குழல்) ஊதுறவை  என்றுதான்  நான்  கேள்விப்பட்டன்... விசில் சத்தம் பீப்..பீப் என்றுதான் எழுத்திலையும் வரும்....இந்த பூவரசு மரம் கனடாவில் நிற்குதோ??.. எதுக்கும் இனி படுக்கப் போகையில் ..தண்ணி குடித்திட்டு படுங்கோ...சரியான கனவு வரும்...முதல் கனவுகள் நல்லாயிருக்கு.... :)  :)  :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

 

1) புதிய காதலி

 

 

"எனக்கும் உனக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் இருக்கும்போல் தெரிகிறதே..?!" (காதலியிடம் கேட்கக்கூடிய கேள்வியா இது?! :lol: )

 

அவள் பதில் தரவில்லை.. எதுவும் பேசி உற்சாகத்தைக் கெடுக்கவேண்டாம் என்பதுபோல் என் கன்னத்தில் ஒரு உம்மா கொடுத்துவிடுகிறாள்.. :lol:

 

ஆனால் அது வழக்கமான உம்மா போல் இல்லை.. 001_unsure.gif தரையில் தேய்க்கும் மொப் (Mop) போல எச்சிலுடன் தேய்த்துவிட்டிருக்கிறாள். :o (பேயாக இருக்குமோ?001_unsure.gif )

 

எச்சிலைத் தடவிப்பார்த்த நான் குழம்பியபடி நிற்க அடுத்த கனவு வருகிறது.. 001_unsure.gif

 

(தொடரும்..)

 

உங்களுக்குக் கிடைத்தது உம்மா இல்லை

கனவு கண்டபோது நீங்கள் ஏதாவது உளறியிருக்கலாம்

அதைக் கேட்டு அம்மா உண்மையாகவே உங்கள் முகத்தில் 

 மொப் பண்ணியிருக்கின்றார் :lol:  :lol:  :D   

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குக் கிடைத்தது உம்மா இல்லை

கனவு கண்டபோது நீங்கள் ஏதாவது உளறியிருக்கலாம்

அதைக் கேட்டு அம்மா உண்மையாகவே உங்கள் முகத்தில் 

 மொப் பண்ணியிருக்கின்றார் :lol:  :lol:  :D   

அது கனவில காணாததை கண்டு இசை வடிச்ச வீணி  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி ஆப்கான் எண்டு தெரிந்தது முதல்லை எழுத்தோட்டத்திலை போட்டாங்களா?? கனவின் கடைசிலை  கதை வசனம்  இயக்கம் யாரெண்டு  இருந்தது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி ஆப்கான் எண்டு தெரிந்தது முதல்லை எழுத்தோட்டத்திலை போட்டாங்களா?? கனவின் கடைசிலை கதை வசனம் இயக்கம் யாரெண்டு இருந்தது

அடடா.. ஆப்கானிஸ்தான் போல எண்டு எழுதினதை கவனிக்கவில்லையா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடடா கலோ இசை கனவு கண்டது சரி கடந்த சில நாட்களுக்குள் விசுபரூபம் படம் பார்த்தீர்களா?.... கமலுக்கு கதை எழுதுகிறவர் விட்ட காப்பை நிரவினமாதிரி இருக்கு உங்கள் கனவு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பதிந்த எல்லோருக்கும் நன்றி. :D

 

2) களவொழுக்கம்

 

இந்தக் கனவின் பின்னணி நான் ஏற்கனவே அரசல் புரசலாக நேர்முகத் தேர்வு திரியில் கூறிய விடயம்தான். எனது முதல் வேலை நிறுவனத்தின் முதலாளி ஊரைவிட்டு ஓடிய கதையின் ஒரு தொடர்ச்சி.. :unsure:

 

அப்போது உண்மையில் நடந்தது.. நான் வேலை செய்துகொண்டிருந்தபோது வேலைத்தளத்தில் இருந்து ஒருநாள் வீடு திரும்பும் வழியில் எனது முதலாளியின் அலுவலகத்திற்குச் சென்றேன். அலுவலகம் என்றால் அங்கே யாரும் பெரும்பாலும் இருக்கமாட்டார்கள். கட்டடம் கட்டும் வேலை என்பதால் அப்படி..

 

வாசலில் ஒரு மரவேலை செய்பவர் கதவோ அல்லது ஜன்னலோ செய்து கொண்டிருந்தார். நான் முதலாளி இருக்கிறாரா என்று கேட்டதற்கு ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்தார். பிறகு பின்பக்கமாகப் போய் பாருங்கள் என்று ஒரு பதில் வந்தது.. :blink:

 

நானும் ஒரு அப்பாவியாக வீட்டுக்குப் பின்பக்கம் போய், பின்கதவைத் தட்ட நினைத்தேன்.. ஆனால் கதவு திறந்திருந்தது.. இரும்பு கிறில் மட்டும் பூட்டப்பட்டிருந்தது.. உள்ளே ஒரே இருட்டாக இருக்க.. ஒரு ஆணும் பெண்ணும், பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.. :unsure:

 

எனக்கு ஓரளவு விடயம் விளங்கி விட்டது.. :D

 

உடனடியாக வெளியேறும்போது அதே மரவேலை செய்பவர் அதே நமுட்டுச்சிரிப்புடன் கேட்டார்.. "என்ன.. சாரை பார்த்திட்டீங்களா?" :icon_mrgreen:

 

இப்போது கனவு..

 

முதலாளி அந்தப் பெண்ணுடன் எடுக்கு மடக்காக இருந்துவிட்டு, பாதுகாப்புக் கவசத்தை அலட்சியமாக குப்பை வாளிக்குள் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார். :o  பிற்பாடு அவரது மனைவி வந்து குப்பையை எதேச்சையாகப் பார்த்தபோது கையும் களவுமாகப் பிடித்துவிடுகிறார்.. :(

 

எடுத்த கவசத்தை சுடுதண்ணீரில் வெளிப்புறமாகக் கழுவுகிறார்.. ஆனால் தன் கணவர் உபயோகித்தது என்று எப்படி கண்டுபிடிப்பது..? அதனால் டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்போகிறேன் என்று கணவனுக்கு சவால் விடுகிறார்..

 

திடீரென்று யோசனை வந்தவராக.. ஐயையோ சுடுநீரில் கழுவுகிறேனே.. எல்லாமே செத்திருக்குமே என்று உள்ளே எட்டிப் பார்க்கிறார்.. உள்ளே ஒன்றையும் காணவில்லை.. ஒரே ஒரு குட்டிமீன் மட்டும் நீந்தித் திரிகிறது.. சுபம். :lol:

 

(மேலும் கனவுகள் வரும்போது தொடரும்..)

எப்பவும் யாரைக் காதலிக்கலாம் என்ற நினைப்பில திரிந்தால் காதல் கனவுதான் வரும். :D

தொடருங்கள்.

 

எனது கனவுகள் அர்த்தமற்றவை. ஊரில இருந்து வேலைக்குப் புறப்பட்டு லண்டனில் வேலை செய்கிற மாதிரியும் பின்னேரம் இந்தியாவில் உள்ள வீட்டிற்குச் செல்வது மாதிரியெல்லாம், ஒரே கனவில 'லொக்கேஷன் ' எல்லாம் மாறும். Barnet இல் உள்ள ஒரு வளைவில் ஆர்மிக்கு கண்ணி  வைத்து தம்பட்டையில் சண்டை நடக்கும். இரவு கண்ட கனவில் லண்டனில் வேலை செய்யும் பெண்ணுக்கு திருமணம் நடந்து ஊரில் உள்ள வீட்டிற்குக் கூப்பிட்டுச் சாப்பாடு கொடுப்பது மாதிரிக் கனவு. சில தெளிவான கனவுகள் வந்த பொழுது, நிஜத்தில் நல்லது கெட்டதும் நடந்துள்ளது.

 

சில கிளர்ச்சியான ரீமிக்ஸ் கனவுகளை குடும்ப வலைத் தளத்தில் பகிர்ந்து கொள்வது அழகல்ல. இருந்தாலும், பதின்மத்தில் பருவமெய்தியதை உறுதிப்படுத்திய கனவில் வந்த அந்த 'சன்னதமாடும் காத்திரமான முலைகள்' இன்றும் அடிக்கடி கனவில் வந்து தொல்லை கொடுக்கும்.

 

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

எனது கனவுகள், கொஞ்சம் வித்தியாசமானவையாக இருக்கும்! ஆனால், நிறையக் கற்பனை கலந்து, நிறைவேற முடியாத ஆசைகள் நிறைந்ததாக இருக்கும்! வேற யாராவது, கன்னி ராசிக்காரரின்,அனுபவங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை! :D

 

ஒரு கிறிஸ்தவப் பெண்ணின் மீது, ஆசை வரும்போது, திடீரென ஏசுநாதர், அந்தப்பெண்ணின் தகப்பனின் கனவில் வந்து, அவரது மகளை எனக்குக் கட்டிக்கொடுக்கும் படி சொல்வது போலவும், அவர் இருட்டில், விழுந்தடிச்சுக் கொண்டு, ஓடி வந்து, எங்கட வீட்டுக்கதவைத் தட்டுவது மாதிரி வரும்!

 

அல்லது ஊரிலை இருக்கிற சொந்தங்களும், அவர்களது வீடுவளவுகள் எல்லாம், அப்படியே தூக்கி எடுக்கப்பட்டு, நான் வசிக்கும் தேசத்தில், திரும்ப ஒரு இடத்தில் கொண்டுவந்து வைக்கப்படுவது மாதிரி வரும்!

 

ஒரு மிகவும் பலவீனமான ஆழ் மனது எனக்கு, அல்லது எனது கையாலாகாத் தனத்தின் வெளிப்பாடு என்பது எனது கருத்தாகும்! :o 

 

சில எதிர்பாராத 'ஐடியாக்களும்' கனவில தான் வாறது! :D  

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முன்பு எதுவோ பிரமாண்டமான பிராணி ஒன்று துரத்துவதுபோல் அடிக்கடி கனவு வரும். வரவேணும் எண்டு ஆசைப்பட்ட  கனவும் ஒருநாளும் வந்ததே இல்லை என்பதுதான் என் கவலை. இப்போதெல்லாம் கனவு காண்பது நின்றுவிட்டது ஏனென்று தெரியவில்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மாம்ஸ் நல்லதொரு திரியைத் தொடங்கியிருக்கிறீர்கள். :icon_idea:

 

ஒன்றா, இரண்டா, ஆயிரக்கணக்கான கனவுகள் கண்டிருக்கிறேன். ஊரில் இருக்கும் போதெல்லாம் அடிக்கடி கனவு வரும்.

பாம்பு துரத்துறது போல, அம்மாளாச்சியோடு கதைப்பது போல, பேய் கனவு, ஆமி சுடுவது போல, விண்வெளியில் பறப்பது போல, நான் இறந்த பின்னர் முனிவராக இருப்பது போல , வாத்சாயனாரின் கசமுசாக்கள் கூட கனவில் வந்திருக்குது. :rolleyes:

 

ஆனால் அண்மையில் கண்ட கனவு என்றால்.

எனக்கு நாலு வயசிலை ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்கு கிண்டர் கார்டென்னிலை கொண்டுபோய் விட்டிட்டு வந்து வேலை செய்வம் என்று இருக்கிறன். வேலை பெருசா இல்லை பொழுத போக வேணுமே என்று சொல்லிப் போட்டு பேஸ்புக்கிலை இருக்கிற பொம்பிளைப்பிள்ளையளின்ரை பேரிலை இருக்கிறவைக்கு கடலை போடுவம் என்றால். ஒரு இளவு விழுந்தவையளும் வரவே இல்லை, சரி எதையாச்சும் தட்டுவம் என்று பார்த்தால் என்ரை தூண்டில்லை வந்து ஒரு மீன் மாட்டுது பிறகென்ன அப்படியே மொக்கை போட்டு எம் எஸ் என் னிலை கதைச்சு உறுதிப்படுத்திப் போட்டு என்ரை ஆணழகன் :icon_mrgreen:  போட்டோவைக் குடுக்கிறன்.

 

அவள் பாவி மனுசியின்ரை பிரண்ட் போல பகிடியா இதை எல்லாம் சொல்லிப் போட்டாள். :unsure:

 வேலை முடிச்சு வீட்டை போக மனுசி கேட்குது, என்ன ஐயா இண்டைக்கு வேலையிலை பிசி போல?

ஆரும் புது பிரண்ட் கிடைச்சினமோ??

 

எனக்கு வயித்தைக் கலக்க அந்த இடத்திலையே ஆயிப்போடுவனோ என்று பயத்திலை தறு..புறு என்று முழுச .. :blink::unsure:

 

இல்லை.. அது சும்மா லண்டனுக்கு பழையமாணவர் ஒன்று கூடலுக்குப் போகும் போது சும்மா ஜென்ரல் நொலேஜ் ஜ வளர்க்கலாம் என்று தான் குடுத்தேன். :lol: .... இப்படி இழுக்கவே கனவு கலையுது.

 

மனுசி வந்து."என்னங்க"..

வேலைக்கு போக நேரம் போட்டுது குண்**யிலை வெய்யில் படும் வரைக்கும் நித்திரை என்று மனுசி தண்ணி அள்ளி உத்தூறாள்.  :lol::icon_idea: .

 

பி.கு: இந்தக் கனவுக்கு நான் காப்புரிமை வாங்கிவைத்திருக்கிறேன். :lol:

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.