Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தாக்கப்படுமா ஆனையிறவு?

Featured Replies

April 20, 2013

news_20-04-2013_46ep.jpeg

இலங்கையின் சில முக்கியமான பகுதியில் எதிர்பாராத தாக்குதல்கள் நிகழ்த்தப்படலாம் என்ற வதந்திகள் வெளிவந்த நிலையில், தமிழீழத்தின் ஆனையிறவுப் பகுதியில் மீண்டும் வாகனப் பதிவுகளைப் படையினர் கடந்த வாரம் முதல் ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏ-9 வீதி ஊடாகக்குடாநாட்டுக்கு வெளியே செல்லும் பயணிகள் பேரூந்துகள், உல்லாசப் பயணிகளின் வாகனங்கள் உட்படச் சகல வாகனங்களும் ஆனையிறவு சோதனைச் சாவடியில் வைத்துச் சோதனை செய்யப்படுகின்றன.

கடந்த வாரம் முதல் இந்த நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக அனையிறவுப் பகுதியில் வாகனப் பதிவு நிறுத்தப்பட்டிருந்தது, இதனால் வாகனங்கள் சிரமமின்றியும்இ தாமதமின்றியும் பயணிக்கக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, கடந்த வாரம் குற்ற செயல்களில் ஈடுபட்டார்கள் என்ற பெயரில் சுமார் 120 தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.paristamil.com/tamilnews/view-news-MjY0MzkwMzk2.htm#.UXPUl0qC9S0

Edited by துளசி

தத்தமது ஊடகங்களைப் பிரபலப்படுத்துவதற்காக பரபரப்பான தலைப்பிடும் ஊடகங்கள் குறித்து ஏற்கனவே பலதடவைகள் பிரஸ்தாபித்தாயிற்று. ஆனாலும் இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

சிங்கள அரசின் இராணுவப் பிரசன்னத்தை நியாயப்படுத்தும் விதமான இத்தகைய செய்திகள் தமிழ் மக்களுக்கு விடிவைப் பெற்றுத் தரப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் ஆனையிறவு மீண்டும் தாக்கப்படும். தாக்குதல் அணிகள் இந்து சமுத்திரத்தின் பெயர் குறிப்பிடப்படாத நாடொன்றில் நிறுத்தப்பட்டுளதாகவும். தலைமையின் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் மேலும் தகவல்கள் கசிந்துள்ளன. (இது பரிஸ்தமிழ் இணையத்துக்கு கிடைக்கவில்லையா?)

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் தமிழுக்கு வேறை வேலை இல்லையோ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனையிறவு சமர் வெற்றி எவளவு பெரிய வெற்றி .... மறந்துட்டாலும் .... நினைவூட்டு றாங்க..... :lol:

  • தொடங்கியவர்

பாரிஸ் தமிழுக்கு வேறை வேலை இல்லையோ??

அண்மைக்கால paristamil.com இன் செய்திகளில் சிலவற்றை பார்க்கும் போது எனக்கும் இப்படி தான் தோணிச்சு. :lol:

இவ்வாறான தலைப்புகளை கண்டால் நான் யாழில் இணைப்பதில்லை.

இதையும் இணைக்காமல் விடுவம் என்று யோசித்து விட்டும் ஆனையிறவு பகுதியில் கடந்தவாரம் வாகனப்பதிவுகள், சோதனைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்ற செய்தி உள்ளமைக்காக இணைத்தேன். :D

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவு மீண்டும் தாக்கப்படலாம். இத்தாக்குதல் வெற்றியானது வடமாகாண தேர்த்தலை நடாத்தவிடாது தடுக்கவும் உதவிசெய்யலாம்.

பாரிஸ் பாம்பு குறுப்பு இறங்கப்போகுதோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்திகள் சிறிலங்கா இராணுவம் வடகிழக்கில் நிலை கொண்டுள்ளதை சர்வதேசத்துக்கு நியாயப்படுத்த உதவும் அதனை தமக்கு சாதகமாக பாவித்து சிங்கள பயங்கரவாத அரசு தனது இன அழிப்பை  தொடரப்போகின்றது ... :(  

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸ் பாம்பு குறுப்பு இறங்கப்போகுதோ தெரியாது.

சா சா இந்த காரைநகரை தாக்கின மக்கள் விடுதலை படையை தான் டக்ளஸ் இறக்க போறாராம். :icon_mrgreen:  :icon_mrgreen:

சா சா இந்த காரைநகரை தாக்கின மக்கள் விடுதலை படையை தான் டக்ளஸ் இறக்க போறாராம். :icon_mrgreen:  :icon_mrgreen:

அதற்கு சந்தர்ப்பம் இல்லை. அவர்கள் அகிம்சை வழியில் செல்பவர்கள். ஆயுத அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு சந்தர்ப்பம் இல்லை. அவர்கள் அகிம்சை வழியில் செல்பவர்கள். ஆயுத அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்கள்.

இதிலிருந்து  உங்களுக்கு இரண்டும் தெரியாது என்பது புரிகிறது...

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு சந்தர்ப்பம் இல்லை. அவர்கள் அகிம்சை வழியில் செல்பவர்கள். ஆயுத அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்கள்.

சொல்லில் மட்டும் தானா அகிம்சை. எங்கே துணிவிருந்தால் ஆயுதத்தோடு திரியும் ஒட்டுக்கும்பல் மக்கள் முன் நிராயுதபாணியாக  தோன்றச்சொல்லுங்கள் பார்க்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவை இனி  மழை  காத்து புயல்  பூமியதிர்ச்சி இப்பிடி ஏதாவது தாக்கினால் தான்   அதுக்காக  கடவுளை  வேண்டலாம்  அருச்சனை செய்யலாம். மற்றபடி  ஆனயிறவு முகாம் என்று பேப்பரிலை எழுதிட்டு கிழிக்கலாம்.அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பிடிச்சதை வைத்திருக்க எங்களுக்கு வக்கில்லாமல் போச்சு பிறகென்ன பேச்சு 

சொல்லில் மட்டும் தானா அகிம்சை. எங்கே துணிவிருந்தால் ஆயுதத்தோடு திரியும் ஒட்டுக்கும்பல் மக்கள் முன் நிராயுதபாணியாக  தோன்றச்சொல்லுங்கள் பார்க்கலாம்.

நுணாவிலான்! இன்றைக்கு எந்த ஒரு அரச ஆதரவுக் குழுவும் ஆயுதத்தோடு திரிவது இல்லை. எந்த ஒரு தமிழ்க் குழுவும் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் சிறிலங்கா அரசு மிகக் கவனமாக இருக்கிறது. சில குழுக்கள் இரகசியமான முறையில் ஆயுதங்கள் வைத்திருக்க சந்தர்ப்பம் இருக்கலாம். ஆனால் போர் நடைபெற்ற காலத்தை போன்று தமிழ் குழுக்கள் இப்பொழுது பகிரங்கமாக ஆயுதங்களோடு நடமாட முடியாது.

ஆயுதமும் நபர்களும் தயாரகா உள்ளார்கள் ஒரு சிறு பிரச்சனை என்றாலும் அந்த இடத்திற்க்கு ஆயுதத்துடன் வருகின்றனர் ...கோவில் பிரச்சனை என்றாலும் இராணுவம்,பொலிஸ் மற்றும் ஆயுததாரிகள் ஸ்போட்டில் 5 நிமிடத்தில் நிற்கின்றனர்....நேரில் கண்டவை

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுறுத்தி பணம் பறிக்கும் தேவானந்தா கட்சி : அமெரிக்க வெளியுறவுத்துறை புகார்

கொழும்பு : சட்ட விரோத கொலைகள், ஆட்கள் காணாமல் போதல் போன்ற மனித உரிமை மீறல்கள், கடந்த ஆண்டு இலங்கையில் நடந்ததாக, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், இலங்கையின் மனித உரிமை மீறல் குறித்து கடந்த ஆண்டுக்கான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அறிக்கையில் கூறியுள்ளதாவது:இலங்கையில் சமூக ஆர்வலர்கள், தொண்டு செய்பவர்கள் மீது விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அரசுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் படி பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.கடந்த ஆண்டில், அரசு படைகளால், சட்ட விரோத கொலைகளும், ஆட்கடத்தலும் நடந்துள்ளன. மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஒரு சில அதிகாரிகள் மட்டுமே, அரசால் விசாரிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களிடம் விசாரணை நடைபெறவில்லை.

இலங்கை அரசுடன் கூட்டணி வைத்துள்ள, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, யாழ்பாண பகுதியில், மக்களை மிரட்டி பணம் பறித்தல், அச்சுறுத்தல், ஊழல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க, இலங்கை அரசு தவறி விட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்ற குற்றச்சாட்டை கடந்த வாரம், பிரிட்டிஷ் அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Dinamalar

உதயன் பத்திரிகையை ஆயுதத்துடன் எரித்தவர்கள் தமிழில் பேசினார்கள். தேவானந்தா உதயன் மீது வழக்கு தாக்கல் செய்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் பத்திரிகையின் முன் பக்கத்தில் அந்த செய்தி வந்திருக்கு....

அமெரிக்கா விற்கு தெரிஞ்சது கூட சபேசன் அண்ணா சண்ட மாருதன் அண்ணா போன்றவர்களுக்கு தெரியாமல் போனது ஆச்சரியமே........

விடுதலைப்புலிகளின் தவறுகளை விமர்சிப்பதாக கூறுபவர்கள் இன்னொரு அமைப்பு விடும் தவறுகளை பூசி மெழுகி அந்த அமைப்பை நல்ல அமைப்பாக காட்ட முற்படுவது கண்டனத்திற்கு உரியது..... ஒரு அமைப்பின் மீது இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியை கட்டியம் கூறி நிற்கின்றது.....

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்! இன்றைக்கு எந்த ஒரு அரச ஆதரவுக் குழுவும் ஆயுதத்தோடு திரிவது இல்லை. எந்த ஒரு தமிழ்க் குழுவும் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் சிறிலங்கா அரசு மிகக் கவனமாக இருக்கிறது. சில குழுக்கள் இரகசியமான முறையில் ஆயுதங்கள் வைத்திருக்க சந்தர்ப்பம் இருக்கலாம். ஆனால் போர் நடைபெற்ற காலத்தை போன்று தமிழ் குழுக்கள் இப்பொழுது பகிரங்கமாக ஆயுதங்களோடு நடமாட முடியாது.

அண்மையில் எனது நண்பன் நேரில் கண்ட சாட்சி.
இடம்: கண்டி வீதி. கொடிகாமம் -- சாவகச்சேரி வரை இராணுவமும் ஒட்டுக்குழுவும் தடல் புடலாக நின்றது. யாரோ  மகிந்தவின் அமைச்சில் இருந்து ஒருவர் வருவதாக மக்கள் பேசிக்கொண்டார்கள்.
 
இராணுவ ட்ரக் வண்டிகள் முதல் சென்றன. பின்னர் மோட்டார் சைக்கிளில் இராணுவம். அதற்கு அடுத்ததாக ஈ.பி.டி.பியின் மோட்டார் சைக்கிள் கோஸ்டி.இவர்கள் தான் மிக மோசமானவர்கள்.ஏனெனில்  றோட்டுகரையில் நிற்பவர்களை கூட மோட்டார் சைக்கிளில் செல்லும் போது காலால் எட்டி உதைந்து விட்டு படு தூசணத்தால் பேசி விட்டு செல்வார்கள்.யாரைக்கேட்டாலும் மோட்டார் சைக்கிள் குழு பற்றி சொல்வார்கள்.நிச்சயமாக ஆயுதமும்வைத்திருப்பார்கள்.

ஏதோ வேற்று கிரகத்தில் நாங்கள் எல்லாரும் இருப்பதாக இங்கு பலர் நினைக்கின்றார்கள் போலகிடக்கு .

எனது குடும்ப உறுப்பினர்கள் சிலர் இப்பவும் யாழ்பாணத்தில் நிற்கின்றார்கள் .இ.பி டி.பி  செயல்களை நான் நியாயபடுதவரவில்லை .சிங்களவனின் தோற்றுவிட்ட ஆதங்கங்கள் மக்கள் மனதில் இருக்கு ஆனால் புலிகள் அழிந்ததை பற்றி பெரிதாக எவரும் கவலைபடுவதே இல்லை என்றார்கள் .மக்களுக்குள் உளவு என்று அவர்கள் செய்த அநியாயங்களும் இனம்தெரியாதவர்கள் என்ற பெயரில் அவர்கள் செய்த கொலைகள் மக்கள் மனதிவிட்டு என்றும் அகலாது .

இன்று ஈபி பி டி யும் அதைதான் செய்கின்றார்களாம் ஆனால் புலிகள் செய்ததுடன் ஒப்பிடும் போது ஒரு பத்துவீதமும் இல்லையாம் .

உங்கள் உறவினர்கள் ஈபி டி பி முகாமிட்குள்ளேயே இருந்தால் வீதாசாரம் இப்படிதான் இருக்கும். 

வெளியிலே வெளிக்கிட்டு மக்கள் இருக்கும் நடமாடும் இடங்களுக்கு ஒருமுறை செல்ல சொல்லுங்கள்.
மக்கள் நாயகங்களைதன் இவர்கள் மக்கள் என்று நினைத்து உங்களுக்கு கதை விடுகிறார்கள்.

அத்தான் ஒரு புலி ஆதரவாளர் தம்பி .

Edited by arjun

தயவு செய்து மீண்டும் ஆனையிறவை தாக்கி அதி இல்லாமல் செய்யவும்...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.