Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்க நடை சீமான் .

Featured Replies

சீமான் மூலம் என்றுமே எமக்குத் தமிழீழம் கிடைக்கப்போவதில்லை.  இவரையும் நெடுமாறன் ஐயா போல் மட்டுமே எம்மால் பார்க்க முடியும்.  எமது தேவைக்கு மட்டுமே நாம் இவரைப் பயன்படுத்த முடியும்.  இவருடைய தீவிரவாதப் பேச்சுக்கள், தமிழீழ அரசியல் அறியாமை போன்றவை தமிழீழத்திற்கான எமது கோரிக்கையை சர்வதேசம் மறுபரிசீலணை செய்யும் அளவிற்கே தள்ளிவிடும்.  இவரின் ஆதரவை நாம் ஏற்றுக் கொள்வோமாயின், தமிழீழத்தின் விடிவை இன்னும் பின்தள்ளிவிடுவோம்.  இவருடைய அரசியல் போக்கு, 80களுக்கே பொருந்தும்.  இப்போதைய சர்வதேச அரசியல் போக்கிற்கு எதிரானது.  இவர் எமது மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்பதே எனது எண்ணமும்.  இவரோடு ஒப்பிடும்போது, மணிவண்ணன், சத்யராஜ் போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்.  இந்த விடயத்தில் அர்ஜுன், மற்றும் சாத்திரியின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். 

  • Replies 246
  • Views 15.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

stephen_poloz.jpg.size.xxlarge.letterbox

இப்படியானவர்களுடன் தொடர்பு வைப்பதை விட்டு இன்னமும் சீமானுடன் இழுபடுகின்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எங்கட இனத்தைக்கண்டால் இழக்காரம்

கோட்டும் சேட்டும்  போட்டு வெள்ளையாக இருந்தால்

பின்னால போகும் ரகம்....

உருப்படுமா எமது இனம்???

சீமான் மூலம் என்றுமே எமக்குத் தமிழீழம் கிடைக்கப்போவதில்லை.  இவரையும் நெடுமாறன் ஐயா போல் மட்டுமே எம்மால் பார்க்க முடியும்.  எமது தேவைக்கு மட்டுமே நாம் இவரைப் பயன்படுத்த முடியும்.  இவருடைய தீவிரவாதப் பேச்சுக்கள், தமிழீழ அரசியல் அறியாமை போன்றவை தமிழீழத்திற்கான எமது கோரிக்கையை சர்வதேசம் மறுபரிசீலணை செய்யும் அளவிற்கே தள்ளிவிடும்.  இவரின் ஆதரவை நாம் ஏற்றுக் கொள்வோமாயின், தமிழீழத்தின் விடிவை இன்னும் பின்தள்ளிவிடுவோம்.  இவருடைய அரசியல் போக்கு, 80களுக்கே பொருந்தும்.  இப்போதைய சர்வதேச அரசியல் போக்கிற்கு எதிரானது.  இவர் எமது மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார் என்பதே எனது எண்ணமும்.  இவரோடு ஒப்பிடும்போது, மணிவண்ணன், சத்யராஜ் போன்றவர்களின் பங்களிப்பு மிகவும் அதிகம்.  இந்த விடயத்தில் அர்ஜுன், மற்றும் சாத்திரியின் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். 

தமிழச்சி,

சீமானாலோ அல்லது நெடுமாறன் ஐயாவாலோ அல்லது வைகோ அண்ணனாலோ மட்டும் தமிழீழம் எமக்கு கிடைத்து விடும் நம்பும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை. எப்படி புலம் பெயர் அமைப்புகளால் மட்டும் தமிழீழம் கிடைப்பது சாத்தியமில்லையோ அதே போன்றுதான் இவர்களாலும்.  ஆனால் இவர்களால் கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவும் தமிழகத்தின் மூலம் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கவும் முடியும். 

எம் மக்களிற்கு கிடைக்கக் கூடிய உரிமையுடனான நிம்மதியான தீர்விற்கு இந்தியாவின் பங்களிப்பு விரும்பியோ விரும்பாலோ இன்றியமையாதது. பூகோள அடிப்படையிலான இந்த யதார்த்ததினை புரிந்து கொண்டால் தான் இந்திய மத்திய அரசின் போக்கில் மாற்றம் தேவை என்பதையும் இந்த மாற்றத்திற்கான காத்திரமான பங்களிப்பை புலம்பெயர் மக்களோ அல்லது ஈழ மக்களோ வழங்குவதை விட தமிழகத்தினால் தான் வழங்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

கேரள மக்களின் ஒற்றுமை எந்தளவுக்கு அவர்கள் இனம் சார்பாக, மாநிலம் சார்பாக மாற்றங்களை மத்திய அரசுகளில் ஏற்படுத்த முடிகின்றதோ அதே அளவுக்கு தமிழகம் முயன்றால் கண்டிப்பாக முடியும். அதுக்கு ஒரு இன ரீதியிலான எழுச்சி தமிழகத்துக்கு தேவை. இந்த எழுச்சியின் முதல் பொறியை வைகோ அண்ணன் எழுப்ப, சீமான் அதனை இன்னும் அதிகப்படுத்துகின்றார். இவர்களால் இன்னும் செழுமைப்படுத்தப்பட்ட வடிவில் இயங்க முடிந்தால் கண்டிப்பாக மத்திய அரசில் மாற்றங்களை தமிழகம் உருவாக்க முடியும்.

எல்லாரும் சேர்ந்து தான் தேர் இழுக்க முடியும். தனித்து இழுத்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் தான் உருவாகும்.

எல்லாரும் சேர்ந்து தான் தேர் இழுக்க முடியும்தனித்து இழுத்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் தான் உருவாகும்.

எழுத நினைத்ததை, தெளிவாக இயம்பிய நிழலியின் கருத்திற்கு நன்றி.

தமிழருக்காக பேசியிருக்கும் காப்பரின் படத்தை போட்டிருந்தாலும் பரவாயில்லை.  அந்தாள் தான் முதன் முதல் நிபுணர் அறிக்கையை,  அதுவும் ஐ.நாவால் வெளிவிடப்பட்ட ஐ.நா அறிக்கையேதான் என்று கூறியவர்.

ஐ நா முழுவதிலும் பல வெள்ளைகள், அமெரிக்க அதிகாரிகள் உள்ளடங்கலாக தமிழருக்காக உழைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூட கண்ணில் படவில்லை. பலர் இப்படி வெள்ளையலுக்கு பந்தம் பிடிப்பதை உண்மையான அரசியல் ஆராச்சி என்று நினைத்து ஒத்துக் கருத்து எழுதியிருந்தார்கள். அது மாதிரியேதான் முன்னர் ஒரு தடவை பாட்டொன்றின் பொருளை பிழைகாக விளங்கி கருத்து எழுதியும், பச்சையும் குத்தியிருந்தார்கள்.

இப்போது திரியை ஆரம்பித்த நொக்கம் வேறும் நக்கல் இயல்பால் என்பது புலப்படுகிறது. இந்த நக்கல்கள் எல்லாம் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. அப்படமான நக்கல்கள்.  தலைப்பே நக்கலாக திரிக்கபட்டிருந்தது. அந்த நக்கலிலிருந்து அரசியல் பொருள் கண்டு ஒத்துக்கருத்து எழுதுவது சிந்தனைக்குறைவினால்.

சிலர் நம்முடன் கருத்து மாறுபடுவார்கள். நாம் சொல்வதை ஏற்றுகொள்ள மாட்டர்கள் அவர்களை மாற்ற முடிகிறதோ இல்லையோ அவர்களுக்கு ஒரு விளக்கம் வைத்து பார்க்கலாம்.

ஆனால் கழுதைப் புண்ணகாக இருந்தால் புழுதி வாரி இறைப்பதுதான் இலகுவான மருந்து.

நியானி திரியை நினைச்சு நினைச்சு தொடர்ந்து வெட்டுவதால் எழுத்தக்கது ஒன்றும் இல்லை :(

Edited by மல்லையூரான்

தமிழச்சி,

சீமானாலோ அல்லது நெடுமாறன் ஐயாவாலோ அல்லது வைகோ அண்ணனாலோ மட்டும் தமிழீழம் எமக்கு கிடைத்து விடும் நம்பும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை. எப்படி புலம் பெயர் அமைப்புகளால் மட்டும் தமிழீழம் கிடைப்பது சாத்தியமில்லையோ அதே போன்றுதான் இவர்களாலும்.  ஆனால் இவர்களால் கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவும் தமிழகத்தின் மூலம் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கவும் முடியும். 

எம் மக்களிற்கு கிடைக்கக் கூடிய உரிமையுடனான நிம்மதியான தீர்விற்கு இந்தியாவின் பங்களிப்பு விரும்பியோ விரும்பாலோ இன்றியமையாதது. பூகோள அடிப்படையிலான இந்த யதார்த்ததினை புரிந்து கொண்டால் தான் இந்திய மத்திய அரசின் போக்கில் மாற்றம் தேவை என்பதையும் இந்த மாற்றத்திற்கான காத்திரமான பங்களிப்பை புலம்பெயர் மக்களோ அல்லது ஈழ மக்களோ வழங்குவதை விட தமிழகத்தினால் தான் வழங்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

கேரள மக்களின் ஒற்றுமை எந்தளவுக்கு அவர்கள் இனம் சார்பாக, மாநிலம் சார்பாக மாற்றங்களை மத்திய அரசுகளில் ஏற்படுத்த முடிகின்றதோ அதே அளவுக்கு தமிழகம் முயன்றால் கண்டிப்பாக முடியும். அதுக்கு ஒரு இன ரீதியிலான எழுச்சி தமிழகத்துக்கு தேவை. இந்த எழுச்சியின் முதல் பொறியை வைகோ அண்ணன் எழுப்ப, சீமான் அதனை இன்னும் அதிகப்படுத்துகின்றார். இவர்களால் இன்னும் செழுமைப்படுத்தப்பட்ட வடிவில் இயங்க முடிந்தால் கண்டிப்பாக மத்திய அரசில் மாற்றங்களை தமிழகம் உருவாக்க முடியும்.

எல்லாரும் சேர்ந்து தான் தேர் இழுக்க முடியும். தனித்து இழுத்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் தான் உருவாகும்.

நன்றி நிழலி .உங்களை ஒரு கண்ணியமான நிர்வாகியாக மட்டும் பார்த்தேன் .ஆனால் இப்போ ஒரு யதார்த்த வாதியாக ,அதாவது அதுதான் இது .............என்று சொல்லும் உண்மைவதியாகப்பார்க்கிறேன் ..................உங்களைப்போன்றவர்கள் இன்னும் உள்புகுந்து நிறைய செயல்படவேண்டும் என்பதே ..............நிகழ்கால தேவை .நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அலை அரசி .............சரியான கேள்வி ..............

உங்களையே கேள்வி கேட்கும் அளவிற்கு வைத்துவிட்டார்கள் .............

[உண்மையில் எனக்குப்பிடித்த எம்மைப்போல் அலட்டாமல் உண்மையை எழுதும் உறவு நீங்கள் ........அதனாலேயே இப்படி எழுதினேன் ...........]

:o அதிர்ச்சியில்  உறைந்தே  விட்டேன் 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு.. விளம்பரம் கொடுத்த, அர்ஜுனை பாராட்ட வார்த்தை கிடைக்கவில்லை.
தாங்ஸுப்பா.

:o அதிர்ச்சியில்  உறைந்தே  விட்டேன்

இதுமட்டுமா இன்னும் விறைக்க வைக்க எவ்வளோவோ விஷயம் இருக்கு பாஸ் ,,,,,,,சென்டிமெண்டில் கவிழ்ந்துவிடாமல் நிதானமாய் இருங்க பாஸ் ............... :D 

  • கருத்துக்கள உறவுகள்
கலைஞனின்ட கருத்தை வாசிக்கும் போது எங்களால்,எங்களுக்காக போராட முடியாது.யாராவது கஸ்டப்பட்டு போராடி[ஆயுத/அகிம்சை] எடுத்து தரட்டும் நாங்கள் அனுபவிப்போம் என்ட மாதிரித் தான் இருக்குது.அவரை மாதிரி மனநிலையில் தான் இங்கு கண பேர் இருக்கினம்

ராஜ நடை ராமதாஸ் பற்றி இப்பொழுது இங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

தமிழச்சி,

சீமானாலோ அல்லது நெடுமாறன் ஐயாவாலோ அல்லது வைகோ அண்ணனாலோ மட்டும் தமிழீழம் எமக்கு கிடைத்து விடும் நம்பும் அளவுக்கு இங்கு யாரும் இல்லை. எப்படி புலம் பெயர் அமைப்புகளால் மட்டும் தமிழீழம் கிடைப்பது சாத்தியமில்லையோ அதே போன்றுதான் இவர்களாலும்.  ஆனால் இவர்களால் கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றங்களைக் கொண்டு வரவும் தமிழகத்தின் மூலம் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கவும் முடியும். 

எம் மக்களிற்கு கிடைக்கக் கூடிய உரிமையுடனான நிம்மதியான தீர்விற்கு இந்தியாவின் பங்களிப்பு விரும்பியோ விரும்பாலோ இன்றியமையாதது. பூகோள அடிப்படையிலான இந்த யதார்த்ததினை புரிந்து கொண்டால் தான் இந்திய மத்திய அரசின் போக்கில் மாற்றம் தேவை என்பதையும் இந்த மாற்றத்திற்கான காத்திரமான பங்களிப்பை புலம்பெயர் மக்களோ அல்லது ஈழ மக்களோ வழங்குவதை விட தமிழகத்தினால் தான் வழங்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

கேரள மக்களின் ஒற்றுமை எந்தளவுக்கு அவர்கள் இனம் சார்பாக, மாநிலம் சார்பாக மாற்றங்களை மத்திய அரசுகளில் ஏற்படுத்த முடிகின்றதோ அதே அளவுக்கு தமிழகம் முயன்றால் கண்டிப்பாக முடியும். அதுக்கு ஒரு இன ரீதியிலான எழுச்சி தமிழகத்துக்கு தேவை. இந்த எழுச்சியின் முதல் பொறியை வைகோ அண்ணன் எழுப்ப, சீமான் அதனை இன்னும் அதிகப்படுத்துகின்றார். இவர்களால் இன்னும் செழுமைப்படுத்தப்பட்ட வடிவில் இயங்க முடிந்தால் கண்டிப்பாக மத்திய அரசில் மாற்றங்களை தமிழகம் உருவாக்க முடியும்.

எல்லாரும் சேர்ந்து தான் தேர் இழுக்க முடியும். தனித்து இழுத்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் தான் உருவாகும்.

நீங்கள் சொல்வது சரி.  ஆனால், சீமான் அதற்கேற்ற ஆள் அல்ல என்பதே எனது வாதம்.  தமிழகம் மூலம் இந்தியாவில் மாற்றங்களை கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியம்.  அதற்கு வைகோ, ஜெயலலிதா போன்றோர்களே பொருத்தமானவர்கள்.    சீமானது தீவிரவாத, உணர்ச்சிப் பேச்சுக்கள் குறுகிய காலத்திற்கு எடுபடலாம்.  ஆனால், நீண்டகாலத்தில் அது எமக்குப் பாதகமாகவே இருக்கும்.  சீமானின் புலிக்கோசம் அவர் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் மட்டுமே.  வைகோவின் புலிகளுக்கான ஆதரவு அவரது மனப்பூர்வமான ஆதரவு.  ஆனால், சீமானது வெறும் வேசம் மட்டுமே.  அவரது அரசியல் ஞானமும் மட்டுப்படுத்தப்பட்டதே.  இவருக்கு ஆதரவு கொடுப்பது எமது மக்களை நாமே ஏமாற்றுவதற்குச் சமன்.  நாம் சரியானவருக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால், தகுதியற்ற ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அவரை வளர்த்து  மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாகுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது வாதம்.  இனிமேலாவது, நாம் சிந்தித்து, பொருத்தமானவர்களுக்கு மட்டும் ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்துவிடுவோம்.  பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி களைகளை வளரவிடாது தடுப்போம்.

ராஜ நடை ராமதாஸ் பற்றி இப்பொழுது இங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

தமிழன் .................என நினைக்கிறேன் சபேசன்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜ நடை ராமதாஸ் பற்றி இப்பொழுது இங்குள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ராமதாசிடம் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் தமிழ்நாட்டில் புலிகளைப் பற்றி பேசவே முடியாது இருந்த காலத்தில்  தன்னை  வளர்த்துக் கொள்ள நினைத்தேனும். முதன் முதலாக ராஜுவ் காந்தி கெலையில்  மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருந்த  23 பேருக்கு  ஆதரவாக குரல் கொடுத்து  அந்த வழக்கை  மீண்டும்  நீதி மன்றத்திற்கு கொண்டு வந்ததோடு அதற்காக ஜார்ச் பெர்ணாண்டஸ்  தலைமையில்(இதே  ஜார்ச் பெர்ணாண்டஸ்  இந்திய பாதுகாப்பு அமைச்சராக  இருந்த பொழுது புலிகளின் ஆயுத கப்பல்  ஒன்று இந்திய கடற்படையில் மூழ்கடிக்கபட்டது  அது சம்பந்தமாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது  எனது நாடு அதன் பாது காப்பு முக்கியம் என சொல்லியிருந்தார்)  ஒரு குழுவையும் அமைத்து  அதில் 19 பேரிற்காக  விடுதலை வாங்கி கொடுக்கும் நிலைக்கு  தள்ளி விட்டிருந்தார். பின்னர் அவர் வளர்ந்த பின்னர்  ஈழத் தமிழரை பற்றி கதைத்தது குறைவு.செயற்பாடுகளும் குறைவு.அப்படி எதையாவது சீமானும் எம்மவர்களிற்காக எதையாவது சாதித்து விட்டு  எம்மை வைத்து அரசியலை செய்து அவரும் முன்னேறட்டும்  வேண்டாம் எண்டு சொல்லவில்லை. ஆனால் எதுவுமே செய்யாமல் ஆரம்பத்தில் தான்  பெரியார் பேரன் என்றார். பிறகு திராவிடம் கூடாது   பிரபாகரன் தம்பி என்கிறார்.  புலிகள் இயக்கமே கைவிட்ட இடதுசாரி கொள்கையை  சரியென்றும் புது  சாசனம் வரையதேவையில்லையென்கிறார்.  ஆரம்பமே குழப்பமாயிருக்கே . அவரிற்கே  எந்த பாதையை தெரிவு செய்வது என்று தெளிவு இல்லை  அதுதான் பிரச்சனை மற்றபடி  நான் இன்றுவரை அவரை நல்லதொரு திரைப்பட இயக்குனராகவும். நல்ல நண்பராகவும்  தொடர்ந்து பார்க்கிறேன்.சீமான் உனக்கு நண்பனா எண்டு யாரும் பொங்கி எழாமல்  நிதானமாக சீமானேடு  கதைத்திட்டு வந்து எழுதுங்கப்பா. நன்றி வணக்கம். :lol: பி.கு  சீமானை சென்னையில் நாலு தெருவை விட்டு தாண்டினாய் தமிழ நாட்டில் யாருக்கும் தெரியாது.  எம்மவர்களி்ற்கு சென்னைதான் தமிழ்நாடு என்றும் தமிழ்ஈழம்  என்றால் யாழ்ப்பாணம் மட்டுமே  என்று நினைப்பவர்கள் மட்டும் சீமான்தான் அடுத்த தேசிய தல

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி.  ஆனால், சீமான் அதற்கேற்ற ஆள் அல்ல என்பதே எனது வாதம்.  தமிழகம் மூலம் இந்தியாவில் மாற்றங்களை கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியம்.  அதற்கு வைகோ, ஜெயலலிதா போன்றோர்களே பொருத்தமானவர்கள்.    சீமானது தீவிரவாத, உணர்ச்சிப் பேச்சுக்கள் குறுகிய காலத்திற்கு எடுபடலாம்.  ஆனால், நீண்டகாலத்தில் அது எமக்குப் பாதகமாகவே இருக்கும்.  சீமானின் புலிக்கோசம் அவர் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் மட்டுமே.  வைகோவின் புலிகளுக்கான ஆதரவு அவரது மனப்பூர்வமான ஆதரவு.  ஆனால், சீமானது வெறும் வேசம் மட்டுமே.  அவரது அரசியல் ஞானமும் மட்டுப்படுத்தப்பட்டதே.  இவருக்கு ஆதரவு கொடுப்பது எமது மக்களை நாமே ஏமாற்றுவதற்குச் சமன்.  நாம் சரியானவருக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால், தகுதியற்ற ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அவரை வளர்த்து  மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாகுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது வாதம்.  இனிமேலாவது, நாம் சிந்தித்து, பொருத்தமானவர்களுக்கு மட்டும் ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்துவிடுவோம்.  பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி களைகளை வளரவிடாது தடுப்போம்.

தமிழச்சி.. அவர் தமிழகத்தில் அரசியல் செய்கிறார்.. அவரை தடுப்போம், வளர்ப்போம் என்கிறீர்களே.. அவருக்கான தளத்தில்தானே அவர் புலிக்கொடியை வைத்திருக்கிறார்..? ஈழத்திலா போட்டியிடப் போகிறார்?

ராமதாஸ் தன்னை வன்னியன் என்று சொல்கிறார். அவருடைய அடிப்பொடிகளும் இன்றைக்கு தாம் முதலில் வன்னியர், பின்பு தமிழர் என்று கோசம் எழுப்புகிறார்கள். ஈழத் தமிழரை ஆதரித்தாலும், தமிழ்நாட்டிற்கு ஒரு கேடாக ராமதாஸ் விளங்குகிறார்.

சீமானுடை ஈழம் சார்ந்த உணர்வை வேசம் என்று நான் நம்பவில்லை. அது உண்மையான உணர்வே. ஆனால் அவருடைய இன உணர்வு என்பது இனவெறியாக மாறி விட்டது. இவருடைய சிந்தனைகள் பாசிசம் சார்ந்தவைகளாகி விட்டன. இவரும் தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கக் கூடியவரே.

இவர்களைப் போன்ற தலைவர்களால் எமக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை, ஏமாற்றம் என்பதைத் தவிர. பாதிப்பு தமிழ்நாட்டில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி.  ஆனால், சீமான் அதற்கேற்ற ஆள் அல்ல என்பதே எனது வாதம்.  தமிழகம் மூலம் இந்தியாவில் மாற்றங்களை கொண்டுவரவேண்டியது மிகவும் அவசியம்.  அதற்கு வைகோ, ஜெயலலிதா போன்றோர்களே பொருத்தமானவர்கள்.    சீமானது தீவிரவாத, உணர்ச்சிப் பேச்சுக்கள் குறுகிய காலத்திற்கு எடுபடலாம்.  ஆனால், நீண்டகாலத்தில் அது எமக்குப் பாதகமாகவே இருக்கும்.  சீமானின் புலிக்கோசம் அவர் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் மட்டுமே.  வைகோவின் புலிகளுக்கான ஆதரவு அவரது மனப்பூர்வமான ஆதரவு.  ஆனால், சீமானது வெறும் வேசம் மட்டுமே.  அவரது அரசியல் ஞானமும் மட்டுப்படுத்தப்பட்டதே.  இவருக்கு ஆதரவு கொடுப்பது எமது மக்களை நாமே ஏமாற்றுவதற்குச் சமன்.  நாம் சரியானவருக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.  ஆனால், தகுதியற்ற ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அவரை வளர்த்து  மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலை உருவாகுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே எனது வாதம்.  இனிமேலாவது, நாம் சிந்தித்து, பொருத்தமானவர்களுக்கு மட்டும் ஆதரவு கொடுத்து அவர்களை வளர்த்துவிடுவோம்.  பொருத்தமற்றவர்களைப் புறந்தள்ளி களைகளை வளரவிடாது தடுப்போம்.

உங்கள் பார்வை மிகவும் தவறானது.

வைகோ.. ஜெயலலிதா செய்ய முடியாததை சீமான் செய்து காட்டியுள்ளார். வைகோ தமிழக அரசியல் களத்தில் மிக நீண்ட காலம் இருப்பவர். அப்படியே ஜெயலலிதாவும். கருணாநிதியும் கூட.

1984/6 களில் ஈழ ஆதரவு தான் தமிழக அரசியலாக இருந்தது. அதன் மூலம் வலுப்பெற்றதே எமது போராட்டமும் கூட.. இன்று மீண்டும்.. அந்த நிலையை ஏற்படுத்தியது சீமான் மட்டுமே..! அந்த உணர்தலை தள்ளி வைத்துவிட்டு.. புலிக்கோசம் ஆபத்து என்று சொல்லிக் கொண்டு.... தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது.. முழு வெளிவேசமாகத்தான் இருக்கும். அது ஒட்டுக்குழுக்களுக்கு அடிவருடி ஆயுத அரசியல் செய்யத்தான் சரி வரும். புலிகள் அற்ற தமிழ் மக்கள் எனி எங்கும் இல்லை.. என்பதே யதார்த்தம். புலிகள் இன்று ஒவ்வொரு தமிழனிலும் வாழ்கிறார்கள். அதை உலகும் உணர்ந்தே உள்ளது. அதை நீங்கள் உணராதது உங்கள் தவறு ஆகும்..! புலிக்கொடியும்.. சீமானும் தமிழர்கள்.. தவிர்க்க முடியாத கதாப்பாத்திரங்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

கலைஞனின்ட கருத்தை வாசிக்கும் போது எங்களால்,எங்களுக்காக போராட முடியாது.யாராவது கஸ்டப்பட்டு போராடி[ஆயுத/அகிம்சை] எடுத்து தரட்டும் நாங்கள் அனுபவிப்போம் என்ட மாதிரித் தான் இருக்குது.அவரை மாதிரி மனநிலையில் தான் இங்கு கண பேர் இருக்கினம்

உண்மை ரதி.  இங்கு கருத்தெழுதுபவர்களில் அநேகர் இப்படித்தான் சிந்திக்கிறார்கள்.  எல்லோரும் மற்றவர்கள் போராடட்டும்.  நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம் என்றுதான் சொல்கிறார்கள்.  யாரும் முன்னெடுத்துச் செய்ய முன்வருவதில்லை.  அப்படியே நாம் முயற்சித்தாலும் எம்மை நசுக்கவே இப்போதுள்ள அனைத்து அமைப்புகளும் முயல்கின்றன.   இது நான் எனது அனுபவத்தில் கண்டவை. 

அது சரி.. நீங்கள் என்ன வடிவில் போராடிக் கொண்டு.. இதனை மற்றவர்கள் மீதும்.. (கலைஞன் உட்பட) சீமானிற்கும் சொல்கிறீர்கள் என்று அறிந்து கொண்டால்.. நாமும் உங்களிற்கு ஆதரவளிக்க ஏதாவது வழி இருக்கோ என்று பரிசீலிக்கலாம்.

நீங்களும் அதே குட்டையில் தான் கிடக்கிறீர்கள்.. அதில் இருந்து கொண்டு.. செயலைச் செய்யும் சீமானை நோக்கி.. கூவுவது.. உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல..! :D:lol:

Edited by nedukkalapoovan

உங்கள் பார்வை மிகவும் தவறானது.

வைகோ.. ஜெயலலிதா செய்ய முடியாததை சீமான் செய்து காட்டியுள்ளார். வைகோ தமிழக அரசியல் களத்தில் மிக நீண்ட காலம் இருப்பவர். அப்படியே ஜெயலலிதாவும். கருணாநிதியும் கூட.

1984/6 களில் ஈழ ஆதரவு தான் தமிழக அரசியலாக இருந்தது. அதன் மூலம் வலுப்பெற்றதே எமது போராட்டமும் கூட.. இன்று மீண்டும்.. அந்த நிலையை ஏற்படுத்தியது சீமான் மட்டுமே..! அந்த உணர்தலை தள்ளி வைத்துவிட்டு.. புலிக்கோசம் ஆபத்து என்று சொல்லிக் கொண்டு.... தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது என்பது.. முழு வெளிவேசமாகத்தான் இருக்கும். அது ஒட்டுக்குழுக்களுக்கு அடிவருடி ஆயுத அரசியல் செய்யத்தான் சரி வரும். புலிகள் அற்ற தமிழ் மக்கள் எனி எங்கும் இல்லை.. என்பதே யதார்த்தம். புலிகள் இன்று ஒவ்வொரு தமிழனிலும் வாழ்கிறார்கள். அதை உலகும் உணர்ந்தே உள்ளது. அதை நீங்கள் உணராதது உங்கள் தவறு ஆகும்..! புலிக்கொடியும்.. சீமானும் தமிழர்கள்.. தவிர்க்க முடியாத கதாப்பாத்திரங்கள்..! :icon_idea:

அப்படியானால், அடுத்த தேசியத் தலைவர் என்று சொல்கிறீர்கள்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

ராமதாஸ் தன்னை வன்னியன் என்று சொல்கிறார். அவருடைய அடிப்பொடிகளும் இன்றைக்கு தாம் முதலில் வன்னியர், பின்பு தமிழர் என்று கோசம் எழுப்புகிறார்கள். ஈழத் தமிழரை ஆதரித்தாலும், தமிழ்நாட்டிற்கு ஒரு கேடாக ராமதாஸ் விளங்குகிறார்.

சீமானுடை ஈழம் சார்ந்த உணர்வை வேசம் என்று நான் நம்பவில்லை. அது உண்மையான உணர்வே. ஆனால் அவருடைய இன உணர்வு என்பது இனவெறியாக மாறி விட்டது. இவருடைய சிந்தனைகள் பாசிசம் சார்ந்தவைகளாகி விட்டன. இவரும் தமிழ்நாட்டிற்கு கேடு விளைவிக்கக் கூடியவரே.

இவர்களைப் போன்ற தலைவர்களால் எமக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை, ஏமாற்றம் என்பதைத் தவிர. பாதிப்பு தமிழ்நாட்டில்தான்.

உண்மையான கருத்து .சபேசன் ...................இந்த மையப்பொருளை வைத்து சிந்திப்போமானால் இன்று இந்த திரி இவ்வளவு நீண்டு சென்றிருக்காது என்பதே என் கருத்து .........................ஆனாலும் தமிழ்நாட்டில் உள்ள ஆபத்தை சிந்திக்கும் உங்களுக்கு ....தமிழக மீனவர்கள் மூலம் அவர்களின் படுகொலைகளின் மூலம் உள்ள ஆபத்து ஒட்டுமொத்த தமிழனுக்கும் சுட்டுவிரல் காட்டி நிற்பதை இன்னும் சிந்திக்காமல் இருப்பதேன் வேதனையை தருகிறது.

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் சீமான்தான் என்பது மிகப் பெரிய மோசடி. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவே. முள்ளிவாய்க்காலின் பின்பே இந்த மாற்றம் ஏற்பட்டது.

மற்றைய கட்சிகள் மீது நம்பிக்கை இழந்திருந்த இளைஞர்கள் சீமானின் உரைகளை கேட்டு அவர் பின் திரண்டார்கள் என்பது ஓரளவு உண்மை. ஈழத் தமிழர்களுக்கு போராட வேண்டும் என்று துடிப்போடு இருந்தவர்கள் தமக்கேற்ற ஒரு தலைவனை தேடிக் கொண்டிருந்தார்கள். சீமான் அந்த இடத்தை நிரப்புவார் என்று நம்பினார்கள்.

சீமான் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மாற்றம் ஏற்பட்டதை புரிந்து அதை ஒரு எழுச்சியாக மாற்ற முற்பட்ட ஒருவர். ஆனால் யார் கண் பட்டதோ? இன்றைக்கு சீமானை விட்டு இளைஞர்கள் ஓடுகின்ற நிலைக்கு கொண்டு வந்து விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால், அடுத்த தேசியத் தலைவர் என்று சொல்கிறீர்கள்.  :icon_idea:  :icon_idea:  :icon_idea:

அவர் தன்னை தேசிய தலைவராக அடையாளப்படுத்த அல்ல அரசியல் செய்கிறார். நீங்கள் அப்படிக் கருதிக் கொண்டு வாழாதிருப்பது போலவல்ல அவர் இருக்கிறார். அவர் தேசிய தலைவரின் கொள்கைகளுக்கு.. ஒரு செயற்படு வடிவத்தைக் கொடுக்கும் தொண்டனாகவே இருக்கிறார். தேசிய தலைவரை உச்சரிக்கும் நீங்கள் இன்று அவர் dormant ஆக உள்ள நிலையில்.. அவரின் என்ன கொள்கையை எவ்வாறு முன்னெடுக்கிறீர்கள்.. தமிழ் மக்களின் விடிவுக்காக என்று சொல்ல முடியுமா..??! சொல்லிவிட்டு சீமானை திட்டுங்கள்..!

அதை விடுத்து தேசிய தலைவரின் வழி நடக்கும் சீமானை திட்ட உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.. என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது ஆகும்..!  :)  :icon_idea: 

பொதுபல சேனாவிற்கும் "நாம் தமிழர்" இயக்கத்திற்கும் நான் அதிக வித்தியாசத்தை காணவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.