Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏழரைச் சனி என்ன செய்யும்?

Featured Replies

 

                            
shanee_saturn+1.gif
 
                                              காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. 
இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். 

முதல் சுற்று: 

பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கம் சிறுவர்களிடம் மிகத் தெளிவாகக்  காணலாம். சனியின் முழுத் திறனும் இவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படும். முதல் சுற்று, முடக்கி முயற்சியை தூண்டும். ‘‘எதுக்கெடுத்தாலும் கத்தி கலாட்டா பண்றான்; எத்தனை தடவை அடிச்சாலும் துடைச்சுப் பொட்டுட்டு மறுபடி மறுபடி தப்பு பண்றான்; எத்தனை தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சாலும் மூக்கு ஒழுகிட்டே இருக்கு...’’ என்று பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். ஏழரைச் சனியின்போது பிறக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் டாக்டர் கையெழுத்து வாங்கிக் கொள்ளும் அளவுக்கு உடல்நிலை பாதிக்கும்.  

குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல், பிரிவு, சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், கணவன் மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. ‘‘அவங்க சொன்னாங்க, இவங்க சொன்னாங்க’’ என்று மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். அதிலும் முக்கியமாக குறுகிய காலத்தில் அறிமுகமாகி நெருங்கிய நண்பராக மாறுவோரால்தான் கருத்து மோதல் பெரிதாகும். தேன் கூடாக இருந்த குடும்பம் தேள் கொட்டின மாதிரி ஆகும் சூழ்நிலை நேரும். 13லிருந்து 19 வரையுள்ள ஏழரைச் சனி நடக்கும் பிள்ளைகளுக்கு செல்போன் தராதீர்கள். கூடா நட்பினில் சிக்குவார்கள். திணறி வெளியே வருவார்கள். அவர்களை கண்கொத்தி பாம்பாக பாதுகாக்கவேண்டும். 

மந்தம், மறதி, தூக்கம் என்று இருப்பார்கள்.‘‘அடங்காதே, அலட்சியப்படுத்து’’ என்ற மனநிலை! பிறகு, ‘‘அப்பவே அம்மா சொன்னாங்க. அப்பா சொன்னாங்க நான் கேட்கலை’’ என்று வருந்துவார்கள். ‘‘வீட்ல அடங்காத பிள்ளை ஊர்ல அடங்கும்.’’ இதுதான் சனிபகவானின் திருத்தும் முறை. தடவித் தடவி சொன்னால் கேட்காத பிள்¬ளயை தடியெடுத்து திருத்தும் வாத்தியார்தான் சனிபகவான். ‘‘சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டுப்போடா’’ என்றால், ‘‘எங்கயோ இருக்கற சாமி என் பிரேயருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டிருக்காரா’’ என்பார்கள். ஆனால், இடரும்போதும், சிக்கலில் சிக்கும்போதும் தாயின் சொற்கள் நினைவுக்கு வரும். ‘‘மத்தவங்க சொல்றபோது செய்யக் கூடாது; தனக்குன்னு எப்போ தோணுதோ அப்போ செய்யணும்’’ என்று முரண்டு பிடிப்பார்கள். தாமதித்து எதையும் செய்ய வைக்கும்.

ஏழரைச் சனியில் பெறக்கூடிய அனுபவங்களும் அவமானங்களும் காயங்களும் வடுக்களாகி, வாழ்க்கை முழுதும் மறக்க முடியாதபடி இருக்கும். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார், சனிபகவான். அப்போ என்னதான் செய்யறது?‘‘குழந்தைகளை விட்டுப் பிடியுங்கள். நீ இப்படிப் பண்ணா இதுதான் ரிசல்ட்’’ என்று அன்பை மனதிற்குள் பூட்டி, வெளியே கண்டிப்பு காட்டுங்கள். சனி நேர்மறையாக மாறுவார். சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும்; அதற்கு சில உபாயங்களையும் சொல்லித் தருவார்; இவற்றை நாம்தான் சரியாகப் புரிந்துகொண்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவேண்டும். ‘‘நீ படிக்கறியோ இல்லையோ. வாராவாரம் அந்த கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்துடு. காலையில சீக்கிரமா எழுந்திரு. பத்து நிமிஷம் சுவாமிகிட்ட உட்கார்ந்து நான் சொல்ற சுலோகத்தை மட்டும் சொல்லு’’ என்று பழக்குங்கள். சனி என்கிற கரி, வைரமாக மாறும் அதிசயம் நிகழும். 

இரண்டாவது சுற்று:

இருபத்தேழு வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல், பாதுகாத்தல், பலமடங்காக பெருக்கித் தருதல் & இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவாணம்போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால், கொஞ்சம் கெடுக்கும். அதனால்தான் கொடுத்துக் கெடுப்பவர்; கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. ‘‘சும்மா, ஒண்ணுமே இல்லாத ஒட்டாண்டியா வந்தான். இப்போ உசரத்துக்கு போயிட்டான்’’ என்பார்கள். காசு, பணம், பதவி, கல்யாணம், சொத்து, சுகம் எல்லாவற்றையும் கொடுப்பார். ஆனால், நடுவில் பிடுங்கிக் கொள்வார். ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்?

‘‘என்னால்தான் எல்லாமும் நடக்கிறது, எனக்கு மிஞ்சி என்ன இருக்கு!’’ என்று ஆணவத்தோடு பேசுவோரின் அனைத்து செல்வங்களையும் பறிக்கிறார். ஏனெனில், இந்த இரண்டாவது சுற்றின்போது சில மிதமிஞ்சிய செல்வ வளத்தால் தாமே சில பிரச்னைகளை உருவாக்கிக் கொள்வார்கள். ‘‘நான் யார் தெரியுமா?’’ என்று ஆணவத்துடன் தன் செல்வாக்கை நிரூபிக்க துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று அடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமே சனி உங்களை ஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார். ஆகவே பேச்சிலோ, செயலிலோ கர்வக் கொம்பு முளைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சனிபகவானால்தான் நம் அறிவுக்கும் சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணருவோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட் கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும் கருப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள். எல்லா வி.ஐ.பி.யையும் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஆனால் ‘‘இந்த விஷயத்தைப்போய் நாம எப்படி சொல்றது! அவர் என்னை தப்பா நினைச்சிட்டா...?’’ என்று தயங்குவீர்கள். 

அப்போது எப்படித்தான் இருக்க வேண்டும்?  

வசதி இருக்கும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். ஸ்டார் ஹோட்டலில் இருந்தாலும் கூழ் குடிக்கும் மனோநிலையிலேயே இருங்கள். அத்தனைக்கும் ஆசைப்பட்டு அத்தனையும் தனக்கே என்று வாரி சுருட்டும்போது சனிபகவான் சும்மாயிருக்க மாட்டார். அமைதியாக இருந்தால் வேலை பார்க்கும் நிறுவனத்தையே விலை பேசும் நிலைக்கு உயர்த்துவார். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம். ‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டை வருமானம்’’  என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால், பாதை மாறினால் அதல பாதாளம்தான். ‘‘சார், நம்ம பிராண்டுக்கு மார்க்கெட்ல தனி மவுசு இருக்கு. அதனால டூப்ளிகேட்டையும்நாமே விடுவோம்’’ என்று சனி சிலரை அனுப்பி சோதிப்பார். ஏனெனில், ஒரு மனிதனின் மனதை சோதித்துப் பார்ப்பதில் இவருக்கு நிகர் எவருமிலர். ‘‘சாப்பாட்டுக்கே வழியில்லாம வந்து சேர்ந்தான். சரின்னு சேர்த்துகிட்டேன். அவன் கொடுத்த ஐடியாவை நம்பினேன். இப்போ அம்போன்னு நிக்கறேன். தப்பான வழியை காட்டிட்டு என்னையும் காட்டிக் கொடுத்துட்டான்’’ என்பீர்கள். நேர்மை என்கிற வார்த்தையை கல்வெட்டாக பதித்துக் கொள்ளுங்கள். ஏழரைச் சனியின் முடிவில் நீங்கள்தான் அந்த வட்டாரத்தின் முக்கியஸ்தர். செல்வந்தர். 

கோடிகோடியாக வைரம், வைடூரியம் குவிந்திருக்கும் திருப்பதியில், வெங்கடாஜலபதிக்கு மண் சட்டியில், தயிர் சாதம்தான் நிவேதனம். பெருமாளே அத்தனை எளிமையெனில் நாமெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.  

இன்னொரு விஷயம். நம்பிக்கை துரோகம் செய்தவர்களைப் பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்யம் பாதிக்கும். ஏழரைச் சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும் அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வ ஜென்ம தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக இந்த இரண்டாவது சுற்று ஜென்ம சனியின்போது பார்ட்டி, கேளிக்கைகளையெல்லாம் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படக் கூடாது. சனி

பகவான், ‘‘நீ போய் கேளு. அவர் தறாரா இல்லையான்னு பார்க்கறேன்’’ என்று சிலரை அனுப்பி வைப்பார். அதனால் பிரதிபலன் பாராத உதவிகள் செய்தால் பொங்கு சனி நல்ல பலன்களை கொடுக்கும்.

 

மூன்றாவது சுற்று: 

கிட்டத்தட்ட ஐம்பது வயதைத்தாண்டி வரும் ஏழரைச் சனி. இதுதான் உங்களுக்கு கடைசி சனி என்று யாராவது பயமுறுத்தினால் பயப்படாதீர்கள். படபடப்பையும், பயத்தையும் தரும் சுற்று இது. உங்களை முடக்க முயற்சி செய்யும். அதற்குள், உங்களை மீறி உங்களிடத்தில் ஒரு கட்டுப்பாடு வந்துவிட வேண்டும். ‘‘காலையில நாலு இட்லி சாப்பிடுவேன்’’ என்றால் அதை மூணாக்கி அப்புறம் இரண்டே போதும் என்று நிறுத்திக் கொள்ளும் தெளிவு வேண்டும். அவ்வளவுதான். அதீத இயக்கத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தன்னை தாழ்த்தியே உயர்த்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். மருமகள் மார்க்கெட்டிற்கு போக தயாராக இருந்தால் நீங்கள்போய் வாங்கிக் கொண்டு வரவேண்டும். எது நடந்தாலும் குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டிருக்கக் கூடாது. இள வட்டங்கள் ஏளனமாகப் பேசும். இந்த மூன்றாவது சனியில் முதல் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது. ‘‘எங்க போறாங்கன்னு எங்கிட்ட சொல்றதேயில்லை’’ என்று அடிக்கடி சொல்லக் கூடாது. வீட்டில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்கக் கூடாது என்று நினைக்கக் கூடாது. ‘‘நான் எவ்ளோ பெரிய போஸ்ட்டுல இருந்தேன்’’ என்றெல்லாம் பேசிக்கொண்டு வீட்டை அலுவலகமாக்கக் கூடாது. ஆடையைத் துறந்தால் மகாத்மாவாகலாம். ஆசையைத் துறந்தால் புத்தனாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லோருக்கும் எல்லா பணிகளிலும் உதவியாக இருங்கள். உங்களை சனி உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்ப்பார். ஏழரைச் சனியில் எப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று திரும்பத் திரும்ப சந்தேகம் வருகிறதா? ஏழரையில் மனசாட்சிக்கு பயப்படுங்கள். மனசாட்சியை மீறி எது செய்தாலும் சனியின் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உங்கள் மனசாட்சி வேறல்ல... சனிபகவான் வேறல்ல என்பதை நீங்களே அறிவீர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சாதகத்தை நம்புவதில்லை என்று சொல்லத்தான் விருப்பம்.. ஆனால் சனீஸ்வர பகவானில் தனி மரியாதை இருக்கு.. :(:D

  • கருத்துக்கள உறவுகள்

சாதகத்தை நம்புவதில்லை என்று சொல்லத்தான் விருப்பம்.. ஆனால் சனீஸ்வர பகவானில் தனி மரியாதை இருக்கு.. :(:D

 

இது  போதும் எமது பிழைப்பைத்தொடர............. :lol:  :D

இரண்டாவது சுற்று - அதற்கு பொங்கு சனி என்று பெயர்.  ????  :mellow: 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இசையை வைச்சே ஒரு எள்ளெண்ணை எரிக்கும் வியாபாரம் தொடங்கலாம். :)

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப பொங்குசனிதான்  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்ப பொங்குசனிதான்  :D

 

 

அது நீங்க யாழுக்கு வந்தபோதே எங்களுக்கு தெரியும்.......... :lol:  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அது நீங்க யாழுக்கு வந்தபோதே எங்களுக்கு தெரியும்.......... :lol:  :D  :D  :D

 

அப்ப யாழை விட்டுப் போறவைக்கு எந்தச் சனி?????? :lol: :lol: :lol:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப யாழை விட்டுப் போறவைக்கு எந்தச் சனி?????? :lol: :lol: :lol:

 

அட்டமச்சனி தான்

எங்க போனாலும் விடாது........ :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

மங்குசனி, பொங்கு சனி, மரணச்சனி.  அதோடு ஆள் காலி

 

  • தொடங்கியவர்

மரணச் சனி 

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்தச்சனி வந்தாலும் ஒருமுறை திருநள்ளாறு சென்றுவந்தால்

நல்ல பலன் கிடைக்குமாம் :)

 

  • தொடங்கியவர்

அப்ப யாழை விட்டுப் போறவைக்கு எந்தச் சனி?????? :lol: :lol: :lol:

மரணச் சனி 

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மரணச்சனியையும் தாண்டிய கொடாக்கண்டர்கள் ஜப்பானில் உள்ளார்கள்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

"சனியைப் போல கொடுப்பாரும் இல்லை,சனியைப் போல கெடுப்பாரும் இல்லை"...சனியை தொடர்ந்து கும்பிட்டுக் கொண்டு இருந்தால் சனி பின்னாலேயே வந்து விடுமாம் :lol: பிறகு விட்டுப் போகாதாம் :D  ஆகவே குறிப்பிட்ட கிழமை விரதம் இருந்து சனியை வழிபட்ட பின் நிப்பாட்டி விடவும் :)  இல்லாட்டி சனி உங்களைத் துரத்தும் :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏழரைச்சனி புலத்துக் கோவில்களுக்கு, ஒரு நிரந்தரமான வருவாய்க்கான வழியாக, நீண்ட காலத்துக்கு இருக்கும்!

 

எள்ளு வியாபாரிகளுக்கு ஒரு நிரந்தரமான சந்தையை அமைத்துக் கொடுத்திருக்கின்றது! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பன் ஒருவன் வாழ்கையில் அடிபட்டவன், சொல்லுவார். தான்/நாங்கள் ஏதும் செய்து முன்னுக்கு போனால் சனியன் அதுக்கு முதலே அங்கே போய் நிற்கும் என்று.

என்றாலும் சனிக்கிழமை விரதம் பிடித்து வாழை இலையில் முருங்கைகாய்,+உ ருளை கிழங்கு கறி, மற்ற மற்ற கறிகள் உடன் சாப்பிடுவது/ சாப்பிட்டது நல்ல அனுபவம். காகதிற்கு சோறு வைத்து..அதை மறைந்து இருந்து பார்த்து...  :D  

 

எனக்கு சனி பிரச்சனையே இல்லை .................வெள்ளிதான் பெரிய பிரச்னை ............ஊத்தி வாசித்துவிட்டு  மரக்கறி  சாப்பிடசொன்னால் .. :D 

 

  • கருத்துக்கள உறவுகள்
 

எனக்கு சனி பிரச்சனையே இல்லை .................வெள்ளிதான் பெரிய பிரச்னை ............ஊத்தி வாசித்துவிட்டு  மரக்கறி  சாப்பிடசொன்னால் .. :D 

வாசித்து முடிய மரக்கறியை ஊத்தி விட்டு மிகுதியைச் சாப்பிட்டால் தெரியவா போகின்றது :lol:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 எவர் எந்த மதமெண்டாலும்????? சனீஸ்வரனை எப்பிடித்தான் நக்கலடிச்சாலும்?????
கோபம் வரேக்கை மட்டும் மற்றவரை சனியனே எண்டு திட்டுற சந்தோசம்  வேறை ஒண்டிலையும் இல்லை.......அங்கைதான் என்ரை ஈஸ்வரன் நிக்கிறான் :D

 

  • கருத்துக்கள உறவுகள்

சனியா  பிடித்த டெனிஸ் பற்றையாவது ஒரு முறை பிடித்துவிட வேண்டும் என்று . ஓவரு நாளும் கும்பிட்டு  வருகிறேன். எப்ப இந்த சனி வந்து என்னை கூட்டி கொண்டு போகுமோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

ஏழரைச் சனி என்ன செய்யும்?
Started by யாழ்அன்புMay 23 2013 11:30 AM

 

 

இதுக்கு கலியாணம் கட்டினவைதான் பதில் சொல்லோணும்.. :D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இதுக்கு கலியாணம் கட்டினவைதான் பதில் சொல்லோணும்.. :D

 

 

தம்பி ராசா! இதுக்கு ஏன் கலியாணம் கட்டினவையள் குடித்தனம் போனவையள் எண்டு கனக்க எதிர் பாக்கிறியள்?
 
கொஞ்சகாலமாய் உங்கடை கதை கவிதை கட்டுரையிலையே தெரியுது.....தெரியுது ராசா....இல்லை தெரியுதெண்டே அடிச்சு சொல்லுறன்.......உங்களுக்கு ஏழரைச்சனி ஆரம்பம்....அதாவது கலியாணம் நடக்கப்போகுது....வெல்கம்...வெல்கம்...வெல்கம். :lol:  :D  :wub:

எந்தச்சனி வந்தாலும் ஒருமுறை திருநள்ளாறு சென்றுவந்தால்

நல்ல பலன் கிடைக்குமாம் :)

 

கனடாவிலிருந்து ரிக்கெற் போட்டு, அங்கு போய் வந்தபின்பும் அது ஆளை ஆட்டிப் படைத்து விட்டது.   அதோடு வெறுத்தவள்தான்.    வருவதை எதிர்கொள்ளத் துணிந்து விட்டால் சனியல்ல, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.   (கோவிலுக்குப் போய் 12 வருடங்களுக்கு மேலாகிவிட்டது.)

  • கருத்துக்கள உறவுகள்

சனியனின் பார்வையிலிருந்து, நாம் தப்ப வேண்டுமா?
செவ்வாய்க்ழமை, வியாழக்கிழமை, வெள்ளிக் கிழமை..... குழித்து, விரதம் இருங்கள்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.