Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அம்மா நான் இந்தக் course படிக்கமாட்டன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

healthy_relationship_between_mom_and_son

அம்மா - நீ

பெத்த கடனுக்கு

நடையாய் நடக்கிறாய்

கிடையாய் கிடக்கிறாய்

ஆனாலும்

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

மண்றாடிப் பயனில்லை

மண்டியிட்டும் பயனில்லை

நான் தெளிவோடு

சொல்கிறேன்

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

வரலாற்றைப் புரட்டிப் பார்

சிக்கென்று இருந்த நீயே

சிதைந்து போனது எதனால்..??!

சில்லறை கூட வேண்டாம்

சிலிர்த்து வந்த சிங்கத்தை

கட்டி - நீ

ஆண்டும்

கண்டதென்ன..?!

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

அம்மா - நீ

ஒரு காலத்தில்

சிங்கக் குட்டிகளை பெற்றதாய்

பெருமை கொண்டாய்

அந்தக் குட்டிகள் - இன்று

எலிக் குஞ்சுகளாய்

பதுங்கும் நிலை

பார்த்தாய் தானே

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

அம்மா - நீ

கெஞ்சிக் கூத்தாடிப் பயனில்லை.

சும்மா சொல்லேல்ல...

பள்ளிப் பரீட்சையில்

பாஸோ.. பெயிலோ

துரித கதியில்

பெறுபேறு தெரிந்துவிடும்.

தாலி கட்டி

எழுதும் இந்தப் பரீட்சை

தொடாமலே

தொட்டது என்பதற்காய்

வாழ்க்கையையே

திசை மாற்றி விடும்.!

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

கட்டிக் கொண்டு

கட்டில் விலங்காட்டம்

எனக்கு வாழப் பிடிக்கல்ல.

கொஞ்சிக் கெஞ்சி

மண்றாடி

கோழையாய்

இருக்கப் பிடிக்கல்ல..!

எச்சில் முத்தத்திற்காய்

ஆயுள் முழுக்க

அடிமையாய் கிடக்க

எனக்கு விருப்பமில்லை..!

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

"தம்பி

உனக்கொரு வாரிசு

பெயர் சொல்ல..."

அம்மா - நீ

சும்மா கதை விடாத

வாரிசு தேவை என்றால்

வாடகைத் தாய்

பிடித்திடுவேன்

கோடிகள் செலவானாலும்

குளோனிங்கும் செய்திடுவேன்

இல்லை என்றால்..

சொந்தக் குரலில் என் பெயரை

ரெக்கோட் செய்தே

போட்டுக் கேட்டிடுவன்

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

"தம்பி..

மனிதனாய் பிறந்தவன்

படிக்கும் பாடம் தானேப்பா"

அம்மா - நீ

சொல்வது நியாயம்.

அது ஒரு காலம்...

திருமணம்

திருவாய் இருந்த காலம்.

இது..

போறவன் வாறவன்

தொட்டுத் தூக்கின

புத்தகம் படித்து

பட்டம் பெற

நான் என்ன..

இழிச்சவாயனா..!!

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

அம்மா - நீ

நாலு PhD

செய்யச் சொல்லு

செய்து முடிக்கிறேன்.

நாலு பேர்

வயிறு முட்ட திண்டு தீர்க்க..

வேள்விக் கடாவாக்கி

மேடை போட்டு

மாலை போட வைச்சு

என்னை

Permanent head damage

ஆக்கிடாதே..!!!

அம்மா - நான்

இந்தக் course படிக்கமாட்டன்.

அம்மா -நான்

இறுதியா

உறுதியாய் சொல்கிறேன்.

அன்புக்கும் பெண்ணிற்கும்

இல்லைத் தொடர்பு.

பெண்ணிற்கும் பேராசைக்கும்

உண்டே தொடர்பு.

அந்த பேராசைப் பெரும் புயலில்

இந்தச் சிற்றம் சிறுசருகை

சிக்க விட்டு

வேடிக்கை பார்க்காதே

நான்  அங்கு

வாழமாட்டேன்

தொலைந்தே விடுவேன்..!

அம்மா - நான்

இந்தக் course படிக்கவே மாட்டன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு உள்நாட்டு அழுத்தம் ஆரம்பமாகிவிட்டதா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்கவிதையை வாசித்து முடித்தபின்னால் எல்லாம் அவுட்டான ஆள் இந்தக்கவிதையை எழுதி தன்னை ஆசுவாசப்படுத்திறமாதிரி இருக்கு....இந்தக்கவிதை எழுதின ஆளுக்குத்தான் இந்தக்கருத்து அது நெடுக்கா இருந்தால்.... விதிவிலக்கு விமர்சனம் எதுவும் கிடையாது... கி கி... :lol: :lol: :D:icon_mrgreen:

  • தொடங்கியவர்

அண்மையில் ஒரு செய்தி படித்தேன்.. தனது 3 வது குழந்தையை சாருக்கான் வாடகைத் தாய் மூலம் பெற்றதாக...! :icon_idea:

The month-long wait for details of actor Shahrukh Khan's third baby, born with the help of a surrogate mother, is over.

http://dawn.com/news/1022556/shahrukh-khan-becomes-father-for-third-time

நெடுக்கருக்கு உள்நாட்டு அழுத்தம் ஆரம்பமாகிவிட்டதா? :icon_idea:

இருந்தது.. ஆனால் இப்போது இல்லை..! இல்லாமல் செய்திட்டன். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஷாருக் கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைங்களா பேத்திட்டு தன்னோட wife ஓட சொந்த கார பொண்ணு கூட அதாவது அவா தான் வாடகை தாயாம் குழந்தை பெத்திருக்கிறார்.....

  • கருத்துக்கள உறவுகள்

என்ன எழுதி இருக்கிறார் என்ற ஆவலில் வந்து பார்த்தால் கடவுளே...ம்ம்ம்....என்னத்தை சொல்வது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

       எச்சரிக்கை:  ஒரு பிரமச்சரியத்தின் அஸ்தமனம் ஆரம்பமாகின்றது. :D

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பிடிக்கின்றார் நெடுக்ஸ் 

ஆனாலும் விரைவில் மாட்டுப்படுவார்  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடம்பிடிக்கின்றார் நெடுக்ஸ் 

ஆனாலும் விரைவில் மாட்டுப்படுவார்  :D  :lol:

பொறி வச்சிட்டாங்களோ  :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் course யை நான் மப்பில intercourse என்று வாசிச்சிப்போட்டேன் மன்னிக்கவும் நெடுக்ஸ் :D

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷாருக் கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைங்களா பேத்திட்டு தன்னோட wife ஓட சொந்த கார பொண்ணு கூட அதாவது அவா தான் வாடகை தாயாம் குழந்தை பெத்திருக்கிறார்.....

இரண்டு பிள்ளைப் பெற்றவருக்கே.. வெறுத்திட்டுது..! நவீன அறிவியலைப் பாவிச்சுப் பார்த்திருக்கிறார். :lol:

என்ன எழுதி இருக்கிறார் என்ற ஆவலில் வந்து பார்த்தால் கடவுளே...ம்ம்ம்....என்னத்தை சொல்வது.

ஏன் தங்கச்சி கடவுளைக் கூப்பிடுறீங்க. அந்தாள் பிழையா டிசைன் பண்ணி ஆணும் பெண்ணும் என்று சிலதுகளை.. உருவாக்கி விட்டதால தானே இவ்வளவு பிரச்சனையும். டிசைன் பண்ணேக்க சரியான டிசைனப் பண்ணி இருந்தா.. ஏன் இந்தப்பாடு. நான் ஏன் குளோனிங்.. வாடகைத் தாய் என்று நம்பி.. அலையப் போறம். :lol:

       எச்சரிக்கை:  ஒரு பிரமச்சரியத்தின் அஸ்தமனம் ஆரம்பமாகின்றது. :D

சூரியனுக்கு சோடி இல்லையே. ஆனாலும் அது மாலையில்.. அந்தஸ்மனமாகி  காலையில் மீடும் உதயமாகிடுதே..! :D

அடம்பிடிக்கின்றார் நெடுக்ஸ் 

ஆனாலும் விரைவில் மாட்டுப்படுவார்  :D 

கன்னி வைக்கிற கண்ணில.. மாட்டுப்படுறது என்றால் எப்பவோ பட்டிருப்பம். கொஞ்சம் விவரமா நம்மை இயற்கை படைச்சிட்டுது. :lol:

பொறி வச்சிட்டாங்களோ  :D

கண்ணி வைச்சவங்க.. தப்பிடமில்ல..! :lol:

இந்தக் course யை நான் மப்பில intercourse என்று வாசிச்சிப்போட்டேன் மன்னிக்கவும் நெடுக்ஸ் :D

சம்சாரிகளுக்கு.. மப்பில அந்த நினைப்புத்தானே வரும். இந்தாலும் புத்தனுக்குமா..??! :lol:

Edited by nedukkalapoovan

இந்த course படிக்க சொல்கிற இந்த நவீன கால அம்மாவுக்கு சொல்லுங்கோ. இதுக்கு படிக்க தேவை இல்லை என்று. பரிசோதனை கூடமும் பொருட்களும் இருந்தால் செயல் முறை மூலம் 40 நாட்களில் இந்த course  முடிக்கலாம் என்று. :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த course படிக்க சொல்கிற இந்த நவீன கால அம்மாவுக்கு சொல்லுங்கோ. இதுக்கு படிக்க தேவை இல்லை என்று. பரிசோதனை கூடமும் பொருட்களும் இருந்தால் செயல் முறை மூலம் 40 நாட்களில் இந்த course  முடிக்கலாம் என்று. :D 

பரிசோதனைக் கூடமா.. அல்லது பூங்காக்களின் புதர்ப் புறங்களா..??! பொருட்களா.. ஆய்வாளர்களா..???! இப்போது இந்த ஆய்வுகளை ஆய்வாளர்கள்.. புதர்களுக்குள்ளும்.. கார்களுக்குள்ளும் கச்சிதமாக முடித்து விடுகின்றனர். பத்தாக்குறைக்கு.. மக்டொனால்ட்.. கே எவ் சி கக்கூசுகள் வேற ஆய்வுக்குப் பயன்படுத்தப்படுவதாகக் கேள்வி....! என்ன விளை பொருட்களை அகற்றத்தான் அரசுகளுக்கு மேலதிக செலவாகிறதாம்..! :lol::D

நன்றி உங்கள் ஆய்வுக்கு. பூங்காவிற்கு போனால் இயற்கை இரசிக்கணும். மக்டொனால்ட் போனால் செத்த கோழியை சாப்பிடணும். அதை விட்டு பூங்காவின் புதர்களுக்குள்ளும் . , மக்டொனால்டின் மலசல கூடதினுள்ளும் , அடுத்தவன் காரினுள்ளும்  என்ன ஆராய்ச்சி.  :D 

என்ன நெடுக்ஸ்.... பயமா இருக்கா? :lol: 

வேற வழியில்லை. நீங்கள் course ஐ படிச்சுத்தான் ஆகவேண்டும். :wub:

எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன் கூடிய வாழ்த்துக்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பள்ளிக்கு...

படிப்புக்கு..........

முதல் மாதம் முதலைப்பால்

மூன்றாம் மாதம் புட்டிப்பால்

ஆறிலிருந்து 

மிருதுவான தடி பானம்

அதன்பின்னர் சாப்பாடு

தவண்டு எழும்ப

எழும்பி  நடக்க

ஓடி  வர

நெஞ்சம் பதைபதைக்க பயிற்சி

உன் உடலை அளந்து உடுப்பு

உன் கலருக்கு ஏற்ப சேட்டு

கால்

அதன் விரல் 

அதற்கேற்ப செருப்பு

அது கடித்தால் நெருப்பு

உன் வீரத்திற்கு ஏற்ப விளையாட்டு

உன் வளத்தை அறிந்து கல்வி

எதுவும் பிழையில்லை

இடைக்கிடை சறுக்கினாலும்

மீண்டும் மீண்டும் முயற்சித்து எழுந்தோமே

காலம் வந்ததும்

பயிர் செய்யும் வேளை  வந்ததும்

இத்தனையும் தெரிவு செய்த அப்பனுக்கும் அம்மாவுக்கும் வகுப்போ....

காலம் செய்யும் கோலம் இது

அடுத்த பரம்பரை

கனக்கத்தெரிந்ததாய்

கதை விடுவதுண்டு

காலம் போக

மீண்டும் மடிவந்து

அதைப்படிக்க வழி கேட்பீர் எம்மிடமே

ஆடும்

ஆடுங்கள்

அதுவரை...

எதுவரை........... :D

ம்ம்................ கவிதை நல்லாய் தான் இருக்கு நெடுக்ஸ் :)   நெடுக்காவது இந்தக் course படிக்காமல் இருக்கட்டும். ஒராளளையாவது  கிணற்றுக்குள் விழாமல் பதுகாப்போமாக! :lol:  :lol: 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

அலையக்கா நாங்க நிச்சயம் பாழாங்கிணற்றில் விழமாட்டம். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னமோ நெடுக்ஸ் அண்ணா நிறைய மல்லு சைட்டுகள் பார்த்து மனம் விட்டிட்டார் போல .. :D:lol::icon_mrgreen::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ நெடுக்ஸ் அண்ணா நிறைய மல்லு சைட்டுகள் பார்த்து மனம் விட்டிட்டார் போல .. :D:lol::icon_mrgreen::icon_idea:

anatomy யே படிச்சவனுக்கு மல்லு சைட்டு யுயுபி..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

anatomy யே படிச்சவனுக்கு மல்லு சைட்டு யுயுபி..! :lol::D

அதை நாங்களும் படிச்சதாலை சொல்லுறம் .. ஃபீல் பண்ணுறதைப் பார்த்தால் பின்விளைவு :rolleyes: பலமா இருக்கும் போல ... :icon_idea:  படிச்சதோடை இருக்காம பழகிப்பாருங்கோ . :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதை நாங்களும் படிச்சதாலை சொல்லுறம் .. ஃபீல் பண்ணுறதைப் பார்த்தால் பின்விளைவு :rolleyes: பலமா இருக்கும் போல ... :icon_idea:  படிச்சதோடை இருக்காம பழகிப்பாருங்கோ . :D

உடலை வெட்டிப் படிக்கலாம். சூரியனைத் தொட்டுப் படிக்கலாமா..??! சுடுமென்று தெரிந்தும்.. நெருப்போட விளையாடுறது வீண் வேலை..! றிஸ்க் எடுக்க விரும்பிறவை விளையாடினம். நமக்கேன் அந்த விளையாட்டு..! :lol::D

வாழ்க்கையே பல Course களின் படிமக் கலவை. அதில் இதுவும் ஒன்று.

Intercourse உம்  வேண்டாம், இந்தக் Course உம் வேண்டாம் என்றால் என்ன மாதிரி. :D  தாயின் விருப்பைத் தனயன் நிறைவேற்ற வேண்டும்.

கூடிய விரைவில் மனதை மாற்றி நல்ல முடிவெடுக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையே பல Course களின் படிமக் கலவை. அதில் இதுவும் ஒன்று.

Intercourse உம்  வேண்டாம், இந்தக் Course உம் வேண்டாம் என்றால் என்ன மாதிரி. :D  தாயின் விருப்பைத் தனயன் நிறைவேற்ற வேண்டும்.

கூடிய விரைவில் மனதை மாற்றி நல்ல முடிவெடுக்க எல்லாம் வல்ல அந்த இறைவனை வேண்டுகிறேன்.

Intercourse க்கும் இந்தக் Course க்கும் உசுப்பேத்தி விடுறது இலகு. ஆனால்.. உசுப்பேறிறவை படுறபாடு தான்.. அங்க முக்கியம்..! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.