Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அவசர உடல் நல ஆலோசனை கோரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகனின் நண்பரின் தகப்பனார்  (வயசு 59)

கோமா நிலையில் உள்ளார்.

அவருக்கு இதயக்கோளாறு வந்து 10 நிமிடம் இதயம் இயங்கவில்லை. இதனால் மூளையில் சில செதுள்கள் பழுதாகி (வெடித்து) விட்டன  என்கின்றனர்   வைத்தியர்கள்.

நான் நேற்றிரவு போய்ப்பார்த்தேன். அவருக்கு மருந்துகள் மட்டுமே ஏறுகின்றன. செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை.  எல்லாமே இயற்கையாக இருக்கிறது. ஆனால் மூளை  மட்டும் வேலை செய்ய  மறுக்கிறது என்கிறார்கள்.  ஆனால்  நான் பக்கத்தில் நின்றபோது பல முறை  அவரது உடல் சில அதிர்வுகளுக்கு தானாக அசைகிறது. 

ஆனால் தொடுகையை  உணர்ந்து அசைந்தாலே அது சரியான அறிகுறி  என்கின்றனர் வைத்தியர்கள்.

நாளை  திங்கட்கிழமை கடைசி  பரிசோதனையின் பின  கையை  விரிப்பார்கள் போலுள்ளது.

இது பற்றி  தங்களது ஆலோசனை  தேவை.

அவசரம்........

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வாரக்கணக்கில் கோமா நிலையில்  இருந்தவர்கள்  மீண்டும்

சுக நிலைக்குத் திரும்பியிருக்கின்றார்கள்.

அந்த வகையில் உங்கள் மகனின் நண்பரின் தந்தையும்  குணமடைய வேண்டுகின்றேன்

தலையங்கத்தில் எழுத்துப்பிழை திருத்திவிடவும்

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் அவர் பூரண குணமடைய வேண்டுகின்றேன்.
 
அவர் அதிர்வுகளுக்கு உணர்கின்றார் என்றால் அவரின் மூளை செயற்படுகின்றது அவர் பழைய நிலைக்கு வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.
 
எல்லாத்துக்கும் மேல் எம்மையெல்லாம் ஆளும் சக்தி ஒன்று உள்ளது ..... 
  • தொடங்கியவர்

நன்றி வாத்தியார்

நானும் அதைத்தான் சொன்னேன்

தலையங்கத்தை திருத்தியுள்ளேன்

நன்றி

முதலில் அவர் பூரண குணமடைய வேண்டுகின்றேன்.
 
அவர் அதிர்வுகளுக்கு உணர்கின்றார் என்றால் அவரின் மூளை செயற்படுகின்றது அவர் பழைய நிலைக்கு வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது.
 
எல்லாத்துக்கும் மேல் எம்மையெல்லாம் ஆளும் சக்தி ஒன்று உள்ளது ..... 

நன்றி  தமிழரசு

உங்களுக்கு தெரிந்த எவராவது   வைத்தியராக இருந்தால்   நிலமையைச்சொல்லி  கேட்டுப்பாருங்கள்

அவர்களுக்கு என்ன  செய்வது என்று தெரியாது நிற்கின்றனர்.

உங்கள் மகனின் நண்பரின் தந்தையும்  குணமடைய வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு மருத்துவ குழுவை கொண்டு பரிசோதித்து 2 nd ஒபினியன் கேட்டு பாருங்க ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேறு ஒரு மருத்துவ குழுவை கொண்டு பரிசோதித்து 2 nd ஒபினியன் கேட்டு பாருங்க ...

நன்றி  சுண்டல்

சொல்லியுள்ளேன் சுண்டல்

ஆனால் கோமா நிலையிலுள்ள ஒருவரை வேறு  இடங்களுக்கு மாற்றுவதை அனுமதிப்பார்களா?

அது எம்மைப்பொறுத்தவரையும் மிகவும் ஆபத்தான  முயற்சி  அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றாமல்.... உதாரணமாக அவரின் குடும்ப நல வைத்தியியர் முதலில் அங்கு வந்து பாத்து அவரின் ஆலோசனைக்கு அமைய செயல்ப்படலாம்..... நிறைய medicine செய்யிய தமிழ் ஆக்கள் அங்க இருக்கினம் தானே அவையல கேக்கலாம்...

அவரது மகனுக்கு அறிவித்துள்ளேன் சுண்டல்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக இதயம் நின்று 5 நிமிடத்தில் மூளை இறந்து விடும் என்பது தான் நியதி. மூளை இறந்து விட்டால் இதயம் தொடர்ந்து துடிக்க வாய்ப்பில்லை. காரணம்.. இதயத் துடிப்பை கட்டுப்படுத்துவது மூளை. ஆனால் 10 நிமிடங்கள் ஆகியும்.. இதயமும் வேலை செய்கிறது... சுவாசமும்.. வேலை செய்கிறது..மூளையும் பகுதியாக இயங்குகிற நிலையில்.. அவருக்கு பகுதியான மூளைச் செய்யற்பாடுகளே நின்றுபோயுள்ளது. ஒருவேளை முழுப் 10 நிமிடத்திற்கும்.. இதயத்துடிப்பு நின்றிருக்காது.. இதயம் வெகு குறைவாகத் துடித்திருக்கலாம்.

எதுஎப்படியோ.. நிகழ்ந்த நிகழ்வுகளின் படி பார்த்தால்.. அவரின் மூளை இன்னும் இயங்குகிறது. ஆனால் அது எத்தனை சதவீதம் இயங்குகிறது என்பதை பரிசோதனைகள் மூலம் தான் அறியலாம். மூளையின் பெரும்பகுதி இயங்கும் நிலையில்.. உடல் உறுப்புக்கள் சரியாக இயங்கின் அவர் உயிர் வாழ்வது தொடரும். ஆனால் மீள பழைய நிலைக்கு வர (டாக்டர்கள் சொன்னது போலா மூளை பாதிக்கப்பட்டிருப்பின்) நீண்ட காலம் எடுக்கலாம். இன்றேல்.. கூடிய விரைவில் மீளவும் வாய்ப்புள்ளது.

பிரார்த்தனைகளும்.. டாக்டர்களின் விடா முயற்சியும் இருந்தால்.. இவரை வாழ வைப்பது பற்றி யோசிக்க இடமுண்டு..!

விசுகு அண்ணா நீங்கள் குறிப்பிட்ட விரபங்களுக்கு அமையத்தான் தகவல் தந்துள்ளோம். உண்மையில் நோயாளியின் நிலைமையை அங்கிருக்கும் சாதனங்களே அதிகம் அறிந்திருக்கும். அந்த வகையில் செயற்கை சுவாசம் இயற்கை சுவாசம் போதிய அளவுக்கு நிகழாத போது அளிக்கப்படலாம். மூளைக்கு பிற உறுப்புகளுக்கு நிறைய ஒக்சிசன் தேவை. வெறுமனவே மந்தமான இயற்கை சுவாசம் உள்ள ஒருவரிடம் அதனூடு இவற்றை எதிர்பார்க்க முடியாது. செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது என்பதற்காக அவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார் என்றும் முழுமையாகச் சொல்லி விட முடியாது. ஆனால் வைத்தியர்கள் அவரைக் கைவிடா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லம். அவர் விரைந்து நலம் பெறப் பிரார்த்திப்போமாக.

Brain death occurs when a person no longer has any activity in their brain stem and no potential for consciousness, even though a ventilator is keeping their heart beating and oxygen circulating through their blood.

When brain stem function is permanently lost, the person will be confirmed dead.

http://www.nhs.uk/conditions/brain-death/Pages/Introduction.aspx

இவர் நீங்கள் குறிப்பிட்ட அறிகுறிக்கமைய.. அவர் மூளை இறப்பில் இல்லை. அந்த நிலையை தாண்டி விட்டார் என்றே நினைக்கிறேன். அவரின் நிலை இதுவாக இருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இருந்து மீள வாய்ப்பும் உள்ளது.

Persistent vegetative state

There is a difference between brain death and a persistent vegetative state (PVS), which can occur after extensive damage to the brain.

Someone in a PVS can show signs of wakefulness (they may open their eyes, for example) but have no response to their surroundings.

In rare cases, some patients may demonstrate some sense of response that can be detected using a brain scan, but not be able to interact with their surroundings.

However, the important difference between PVS and brain death is that a patient with PVS still has a functioning brain stem, therefore:

  • Some form of consciousness may exist in someone in a PVS.
  • A person in a PVS can still breathe unaided.
  • A person in a PVS has a slim chance of recovering because the core functions of the brain stem are often unaffected, whereas a person with brain death has no chance of recovery as the body cannot survive without artificial support.

http://www.nhs.uk/conditions/brain-death/Pages/Introduction.aspx

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  நெடுக்கு

வைத்தியர்கள் அவரைக் கைவிடா வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லம்......

நேற்று நான் பார்த்ததில்

அந்த குடும்பத்துடன் கதைத்ததில்

வைத்தியர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது தெரிந்தது

அவரது மகனும் அதை  உணர்ந்து பேசினார்.

மூளை  இயங்குவது போல் இருக்கும்போது சிறு பகுதியின் இழப்புக்காக முற்றாக செயலிளக்கச்செய்வது  மிகவும்  வேதனையாக  இருந்தது.

அதனால்தான் வைத்திய ஆலோசனையைக்கேட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்கள் மகனின் நண்பரின் தகப்பனார், விரைவில் குணம் பெற பிரார்திக்கின்றேன்.

சொறி

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மருத்துவ அறிவில்லை! எனினும் ஒரு வாரமாவது, அவதானத்தில் வைத்துப்பார்ப்பது புத்திசாலித் தனமானது என நினைக்கிறேன், விசுகர்!

அவர் நலம் பெறப் பிரார்த்திக்கின்றேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மகனின் நண்பரின் தகப்பனார்  (வயசு 59)

கோமா நிலையில் உள்ளார்.

அவருக்கு இதயக்கோளாறு வந்து 10 நிமிடம் இதயம் இயங்கவில்லை. இதனால் மூளையில் சில செதுள்கள் பழுதாகி (வெடித்து) விட்டன  என்கின்றனர்   வைத்தியர்கள்.

நான் நேற்றிரவு போய்ப்பார்த்தேன். அவருக்கு மருந்துகள் மட்டுமே ஏறுகின்றன. செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை.  எல்லாமே இயற்கையாக இருக்கிறது. ஆனால் மூளை  மட்டும் வேலை செய்ய  மறுக்கிறது என்கிறார்கள்.  ஆனால்  நான் பக்கத்தில் நின்றபோது பல முறை  அவரது உடல் சில அதிர்வுகளுக்கு தானாக அசைகிறது. 

ஆனால் தொடுகையை  உணர்ந்து அசைந்தாலே அது சரியான அறிகுறி  என்கின்றனர் வைத்தியர்கள்.

நாளை  திங்கட்கிழமை கடைசி  பரிசோதனையின் பின  கையை  விரிப்பார்கள் போலுள்ளது.

இது பற்றி  தங்களது ஆலோசனை  தேவை.

அவசரம்........

என்னத்தை சொல்வது விசுகு? பல விடயங்கள் வைத்தியர்களிலையே தங்கியுள்ளது.ஒரு சில வைத்தியசாலைகளில் முயற்சி செய்வார்கள். பல இடங்களில் அதுவுமில்லை.
 
சம்பந்தப்பட்டவரின் மருத்துவகாப்புறுதியின் வலிமையை எப்படியோ அதன்படிதான் வைத்தியர்களும் இயங்குகின்றார்கள்.இதுதான் இன்றைய நிலை.....
 
மற்றும்படி நானறிந்தவரையில் கோமாநிலைக்கு சென்றவர்கள் வருடக்கணக்கில்,மாதக்கணக்கில் இருந்து மீண்டும் ஓரளவு சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளனர்.
உங்கள் நண்பனின் தகப்பனார் நலம்பெற வேண்டுகின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பனின் தகப்பனார் நலம்பெற வேண்டுகின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர்கள் முற்றாக கைவிட்டு  விட்டனர்.

:(

  • கருத்துக்கள உறவுகள்

அவர் நலம்பெறப்  பிரார்த்திக்கின்றேன் !

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியர்கள் முற்றாக கைவிட்டு  விட்டனர்.

:(

அந்த உறவு நலம் பெற்று வாழ வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

ஏன் வைத்தியர்கள் கை விட்டார்கள்..இத்தனை நாட்களுக்குள் அவரது உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றத்தையும் காண முடியவில்லையா..???

இன்றுதான் பார்த்தேன் இந்த திரியை. கவலையான விடயம்.

இதயத்துடிப்பு சில நிமிடங்களுக்கும் மேல் நின்று போகும் போது மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்காமல் போவதால் தான் மூளை பகுதி பகுதியாக செயலிழந்து போய் கோமாவுக்கு செல்கின்றனர் என பல இடங்களில் வாசித்துள்ளேன். இவ்வாறானவர்கள்  மீண்டு வருவது அரிது என்றும் அப்படிப் மீண்டாலும் கடுமையான பின் விளைவுகள் இருக்கும் என்றும் அறிந்துள்ளேன். அரிவரியில் இருந்து ஆரம்பிப்பது போன்றுதான் அவர்களின் வாழ்க்கை மீண்டும் ஆரம்பிக்கும் என வாசித்துள்ளேன்.

உங்கள் நண்பரை மருத்துவம் கைவிட்டதால், அவரது குடும்பத்துக்கு என் ஆறுதல்கள். 

விசுகு, இறப்பு ஒன்றுதான் அவருக்கான மீட்சி என்று மருத்துவம் தீர்மானித்து அதற்கேற்ப நடந்தால் அவர்களிடம் organ donation பற்றி முடிந்தால் கதைத்துப் பாருங்கள். அவரது உடலில் இன்னும் இயங்கக் கூடிய உறுப்புகளை ஒரு சிலருக்காவது தானம் கொடுத்தால் ஒரு சிலரின் வாழ்க்கை இன்னும் நீட்சியடையும் - இவரும் மரணத்தின் பின்னும் வாழ்வார் என்று கூறிப்பாருங்கள்.

இப்போதைக்கு எனக்கு practical ஆக இதுதான் சரியான விடயம் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட  உறவுகளுக்கு நன்றி.

நிழலி

சனிக்கிழமை அங்கு சென்றேன். 

அவர் கிடந்த நிலை

அவரது மகனது பேச்சு  போன்றவற்றைப்பார்த்தபோது

முன்பே சிலரை இவ்வாறு பார்த்த அனுபவத்தை வைத்து

அவரது மகனுடன் இதை ஆரம்பித்திருந்தேன்.

உங்களுடைய  அப்பாவுடைய  உடல்நிலை பற்றி முடிவுகளை  நீங்கள் பூரணமாக எடுங்கள். அதை 100 வீதம்  உறுதிப்படுத்துங்கள்.  அப்படி 100 வீதம் உறுதிப்படுத்தி அவரைக்காப்பாற்றமுடியாது என்று தெரிந்தால் இந்த தானம் பற்றி  தயவு செய்து சில மணித்துளிகளுக்கு முன் சிந்தித்து அனுமதியுங்கள்  என்று.  அனுபவங்களின் அடிப்படையில் இது வேண்டும் என்பதற்காக கைவிட்ட  கதைகளும் உண்டு என அவருக்கு சொல்லி  மிகவும் கவனமாக இருங்கள். பலருடனும் பேசுங்கள்.  பலரையும் கொண்டு வைத்தியர்களுடன் பேசுங்கள். எப்படியாவது காப்பாற்ற வழி கேளுங்கள்.  காப்பாற்ற  முடியாது என்று வைத்தியர்கள் கைவிட்டது 100 வீதம் தெரிந்தால் அவரது உறுப்புக்களை  தானம் செய்ய  மறவாதீர்கள்.

உங்களப்பா மீண்டும் இப்பூமியில்  வாழ்வார் என்று.

நேற்று  திங்கட்கிழமை

வைத்தியர்கள் தங்கள் முடிவைச்சொல்வதாக சொல்லியிருந்தார்கள்.

எடுக்கப்பட்ட அத்தனை  சோதனைகளிலும் எதிர்மறை முடிவுகளே  வந்துள்ளன.  தற்பொழுது அவரது   மூளை முற்றாக இறந்துவிட்டது.   இனி என்ன   செய்தும் அவரைக்காப்பாற்றமுடியாது.  எனவே தானம் செய்யுங்கள் என்ற  கோரிக்கையை  முன் வைத்ததாகவும்

என்னோடு பேசிய  மகன் (எனது மகனின் நண்பன்) மட்டுமே சம்மதித்ததாகவும் 

தாயாரும் மேலும் இரு பிள்ளைகளும் அம்மா வேண்டாம் என்றால் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக அறிந்து நேரே நேற்று சென்றேன்.

3 மணித்தியாலம் பேசினேன்.

எத்தனையோ  லட்சம்பேர்

குழந்தைகள் உட்பட படுக்கையில் கிடக்கிறார்கள்.

இவர் மூலம் உயிர் பெற்று எழுவார்கள் என்று வேண்டினேன்.

அவருக்கு தனது கணவனைக்காப்பாற்றுவோம்  என்று சொன்ன  வைத்தியர்கள் காப்பாற்றவில்லை என்ற  கோபம்.

இறுதியாக அம்மா

நாளைக்கு உங்களுடைய  ஒரு பிள்ளைக்கு  கூட இது தேவைப்படலாம்

அப்பொழுது  இதற்காக பெருதும் வேதனைப்படுவீர்கள் என்று சொன்னேன்.

சரி

இந்த அங்கிள் சொல்வது போல் செய்யுங்கள் என்று அழ ஆரம்பித்துவிட்டார்.  பிள்ளைகள் அப்பால் கூட்டிப்போய் விட்டனர். அதனால் அதைத்தொடர்ந்து அவர்களுடன் பேசமுடியவில்லை.

திங்கட்கிழமை காலையில் கொடுத்திருக்கும் இணைப்புக்களை  கழட்டுவதாக இருந்தது.  இன்னும் கழட்டவில்லை.  காரணம் மனம் மாறுவார்கள் என காத்திருக்கின்றார்கள்  என்றே  நினைக்கின்றேன்

 தற்பொழுதும் எனது 3  மக்களும் அங்கு தான் உள்ளனர்.

முதலில்  தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக தள்ளி  தள்ளி  இருந்த உறவுகள் எல்லாம் வந்து அவரது உடம்பில் கை  வைக்க விடக்கூடாது

அது எமது மதத்தர்மத்துக்கு அழுக்கு என்றெல்லாம் பேசுகின்றார்களாம்.

இதற்கு  மேலும் என்னால்................................??? :(

அவர் குணமடைந்து தனது குடும்பத்தவருடன் மீண்டும் மகிழ்ச்சியாய் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக ..............

இந்தப் பகுதியில் சிலவற்றை பேச முடியாதுள்ளது...நம்மவர்களை திருத்தவே முடியாது...மதம்,சமுதாயம்,சம்பிரதாயம்...இன்னும்,இன்னும் பேச தோன்றும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.மூளையில் பிரதானமாக இரண்டு பாகம் உண்டு, மூளை சோனைகள்,- நினைவு,இயக்கம், உணர்வுகள் போன்ற செயற்பாடுகளை செய்யும் பகுதி, மூளை தண்டுப்பகுதி, சுவாசம் இதய அடிப்பு போன்றவரை கட்டுப்படுத்தும் பகுதி. மூளை இறப்பு என்பது இரண்டினதும் செயற்பாடுகள் நிற்கும் நிலை.

சாதரணமாக இறப்பு என்பது சுவாசமும் இதய அடிப்பும் நிற்கிற செயற்பாடு ஆகும். மூளை இல்லாவிட்டாலும் இதயத்தில் பாதிப்பு இல்லாவிட்டால் இதயம் தொடர்ந்து இயங்கும், ஆனால் சுவாசம் நின்று விடும்.

ஒருவருக்கு BRAIN death என்று வந்தால், சட்ட ரீதியாக அவர் இறந்து விட்டார் என்று U S A இல் கருதுவார்கள். அதற்கு பிறகு கருவிகள் மூலம் இதயத்த்தையும் -பெரும்பாலான சந்தர்பங்களில் அது தேவைப்படுவது இல்லை, சுவாசத்தையும் குறிப்பிட்ட அளவு நேரம் வரை வைத்திருப்பார்கள். யாரும் வேண்டியவர்கள் பார்பதர்ர்காகாக , உடல் அவயங்களை மீள எடுப்பதற்க்க. இங்கே கூடினது ஒரு 6/7 மணித்தியாலம் வைத்திருப்பார்கள். ஆனால் நட்ட்கனக்காக வைத்திருப்பது இல்லை . அது ஒரு முறையற்ற செயற்பாடு. இங்கே USA இல் . அதே நேரத்தில் பிரைன் டெத் ஆன ஒருவரிடம் இருந்து குறிக்கப்பட்ட நேரத்துள் உடல் உறுப்புகள் அகற்ற பட வேண்டும். அல்லா விடின் அதில் பிரயோசனமும் இல்லை.

உடல் உறுப்பு தானம் எந்த வித "அழுத்தமும் " இல்லாமல் செய்யப்பட வேண்டும். யாருக்கும் விருப்பம் இல்லை என்றால் அழுத்தம் கொடுக்க கூடாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் பகுதியில் சிலவற்றை பேச முடியாதுள்ளது...நம்மவர்களை திருத்தவே முடியாது...மதம்,சமுதாயம்,சம்பிரதாயம்...இன்னும்,இன்னும் பேச தோன்றும்..

எதற்க்கெடுத்தாலும் எங்களை நாங்களே தாழ்த்திக்கொள்வது அழகல்ல....
உலகளாவிய ரீதியில் அனைவரும் உடலுறுப்புகளை தானம் செய்ய  முன் வந்தமாதிரியும் எம்மவர் மட்டும் ஏதோ பின் தங்கி நிற்பது போல் உங்கள் கருத்து இருக்கின்றது.
 
இன மதங்களுக்கப்பால் தானம் தர்மம் என்பது ஒரு தனிநபர் விருப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.