Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள மன்னவனே. குறுந்தொடர் - 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் குழம்பாதேங்கோ எல்லாரும் நல்லாக் கதை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் தொடர்கள் எழுதிக் கலக்குகிறார்கள் சரி நானும் எழுதிப் பார்ப்போம் என்று வந்திருக்கிறேன். கடியுங்கோ கல்லெறியாதேங்கோ :lol::rolleyes::wub:

 

 

அன்புள்ள மன்னவனே.

குறுந்தொடர்தொடர் 1

 

kg-dreams-diesdas-Fotografia-women-ludzi

 

நரேனினதும் அம்மாவினதும் உரையாடலை கூர்ந்து கேட்டபடி சுமி தன் குழந்தையை அவதானித்துக் கொண்டிருந்தாள். அவள் அவதானிப்பதை கவனியாதவன்போல நரேனும் சுமியின் அம்மா பத்மாவுடன் பேசிக் கொண்டிருந்தான். இயக்க அலுவல்கள் நிமித்தம் கிழக்கு மாகாணத்தில் நின்றிருந்தவன் நீண்ட நாட்களுக்குப்பின்னர் இங்கு வந்திருந்தான்

“அந்தக் கரனைக் கட்ட குடுத்தெல்லோ வச்சிருக்கோணும். நரேன் உங்கட இயக்கத்தில நாலு வருசம் இருந்த ஆட்கள் கல்யாணம் கட்டலாம் என்று சட்டம் இருக்குத்தானே பிறகேன் அந்தக்கரனை விரும்பின பிள்ளை வேற ஆரையோ கல்யாணம் கட்டினதாம்? அப்பாவித்தனமாக அம்மா விடயம் அறியும் ஆவலில் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மாவின் கேள்விக்கு பாதிக்கு பதில் சொல்வதும் மீதிக்கு மிடறு விழுங்குவதுமாக நரேன் பத்மா அம்மாவுக்குள் சிக்குப்பட்டுக் கொண்டிருந்தான். இவன் ஒழுங்காச் சொல்ல மாட்டான் என்று கருதி ஒன்றரை வருடங்களுக்குப்பின்னர்  வீட்டுக்கு வந்திருக்கும் தனது ஒன்று விட்ட அக்காவின் மகனிடம் வீட்டுப்புதினம் கதைக்கத் தொடங்கிய அம்மா….. சுமிக்கு நடாத்தி வைத்த அவசரக்கல்யாணம் அவ் ஒவ்வாத வாழ்வில் சுமி பட்ட இன்னல்கள் தொடர்ந்து தகர்ந்துபோன வாழ்வும் கைக்குழந்தையுடன் தனிமரமான சுமியின் கதையுடன் அழுகையும் ஆற்றாமையுமாக கண்கள் கலங்கி நாசி நீர் கோர்த்து பொருமியும், துடைத்தும் , சீறியும் அரட்டிக் கொண்டிருந்தவள் சற்று ஆசுவாசப்பட்டுக்கொண்டாள். மனதிற்குள் புழுங்கிய வேதனையை யாரிடமாவது சொல்லித் தீர்த்துவிடவேண்டும்  என்று காத்திருந்தவளுக்கு நரேன் கிடைத்தது நிம்மதியைத் தந்திருக்கவேண்டும். அழுது வீங்கிய முகத்தை அலம்பிக் கொண்டுவர எழுந்து கிணற்றடிப்பக்கம் போனாள். சுமி மௌனமாக இறுகி இருந்தாள். நரேனின் மனச்சாட்சி அவனைக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி சாட்டையைச் சொடுக்கிக் கொண்டிருந்தது.

நரேன் மெல்ல தான்’ இருந்த இருக்கையை விட்டு எழுந்து சுமிக்கு அருகில் வந்தான்.

“சுமி”

இறுகிய உணர்வுகளுடன் நரேனை நிமிர்ந்து பார்த்தாள். சுமியை நேராய் பார்க்கும் துணிவின்றி மறுபக்கம் பார்த்தவாறே “அவன் விசரன் மாதிரிப் போய்விட்டான்” என்று முணுமுணுத்தான். நரேனின் முணுமுணுப்பை தெளிவாகப் புரியமுடியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுமியிடம் “என்னை மன்னித்து விடு சுமி. நீ உருக்குலைந்து போய்விட்டாய். அவன் பைத்தியம் மாதிரி தவிக்கின்றான்” சுமிக்குத் தூக்கிவாரிப்போட்டது. நரேன் என்ன சொல்கிறான் மூளைக்குள் அறம்புறமாக நரம்பு மண்டலம் புடைத்தது. சுமியின் பார்வையில் தெரிந்த குழப்பத்தை விளங்கிக் கொண்ட நரேன் “நான் கரனைப்பற்றிச் சொன்னேன்” என்று அழுத்தமாகச் சொன்னான். சுமி ஆடிப்போனாள் அதிர்ச்சியும் , அழுகையும் எவ்வகையில் வெளிப்படுவது என்று தெரியாமல் திணறின.

 

 

தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலத்தின் பின்... உங்களது பதிவை வாசிக்க ஆவலாக உள்ளோம்.
தொடருங்கள்.... வல்வை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வாசிப்பு இலையான் கொல்லியா!...

 

நன்றி நன்றி :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

TEXT MESSAGE மாதிரி வலு சிக்கனமாக் கிடக்கு, வல்வை! :D

 

நீண்ட காலத்துக்குப் பிறகு வந்திருக்கிற படியால், உங்களிடமிருந்து வேட்டித் துண்டை எதிர்பார்க்கவில்லைத்தான்! ஒரு சால்வைத் துண்டாவது தந்திருக்கலாம்! :o

 

அதுவில்லாமல் லேஞ்சித் துண்டைக்காட்டினால், நாங்கள் என்ன செய்யிறது? :D

 

தொடருங்கள், வல்வை! :icon_idea:

நன்றாக உள்ளது. தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கதை என்கிறீர்கள் பரவாயில்லை. பயப்பிடாமல் எழுதுங்கோ. கதை முடியும்போது எழுத்தில் தெளிவு வந்துவிடும் :D

தொடருங்கள்.நன்றாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலத்தின் பின்... உங்களது பதிவை வாசிக்க ஆவலாக உள்ளோம்.

தொடருங்கள்.... சகோதரி வல்வைசகாரா .  :)

 
ஆனால் இடைவெளி  அதிகம் விட்டு எம்மை வருத்தக்கூடாது
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

TEXT MESSAGE மாதிரி வலு சிக்கனமாக் கிடக்கு, வல்வை! :D

 

நீண்ட காலத்துக்குப் பிறகு வந்திருக்கிற படியால், உங்களிடமிருந்து வேட்டித் துண்டை எதிர்பார்க்கவில்லைத்தான்! ஒரு சால்வைத் துண்டாவது தந்திருக்கலாம்! :o

 

அதுவில்லாமல் லேஞ்சித் துண்டைக்காட்டினால், நாங்கள் என்ன செய்யிறது? :D

 

தொடருங்கள், வல்வை! :icon_idea:

 

கனக்க எழுதினால் வாசிக்கப்பஞ்சிப்படுவார்களே.....ரோமியோ இப்பல்லாம் இதுதான்  பாசன்... :rolleyes:

நன்றாக உள்ளது. தொடருங்கள். :)

 

நன்றி துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் கதை என்கிறீர்கள் பரவாயில்லை. பயப்பிடாமல் எழுதுங்கோ. கதை முடியும்போது எழுத்தில் தெளிவு வந்துவிடும் :D

 

ஆசீர்வாதத்திற்கு நன்றி சுமே :rolleyes:

 

உங்கள் எழுத்துக்கள் எங்களின் வழிகாட்டியா இருக்கும் அக்கா எழுதுங்கோ முடிவு எப்படி என்று பார்க்க ஆவல் உடன் இருக்குறேன் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன குறுந்தொடர்? ஒரு நெடுந்தொடராகவே எழுதவேண்டியதுதானே வாசிக்க நாங்கள் இருக்கிறோம் தானே :D

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட விடுமுறைக்கு பின் வந்திருக்கிறேன் எழுதுங்கள் படிக்கும் ஆவலுடன்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

குறுந்தொடர் நல்லாயிருக்கு!

 

Spoiler
படத்திலுள்ள பெண்ணின் முகம் காண ஆவல்! :D

தொடருங்கள் வல்வை!

  • கருத்துக்கள உறவுகள்

குறுந்தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் அக்கா :)
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thodarai kanavillai enru thiddatheenka my computer has problam dosenot work when i fix it i will write my small story sorry every body

Thodarai kanavillai enru thiddatheenka my computer has problam dosenot work when i fix it i will write my small story sorry every body

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய தொடரும் அப்பிடித்தான்!! :D

 

இரண்டு பேரும் 

தொடரைத்தொடங்கும்   போதே

எச்சரிக்கை  மணி  அடிக்கப்பட்டுள்ளது என்பதை ஞாபகப்படுத்துகின்றேன் :(  

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே.

 

உங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி...

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே.

 

உங்கள் பொறுமைக்கு மிகவும் நன்றி...

 

இவ்வளவு பொறுமையா சகாரா உங்களால் மட்டும்தான் முடியும் எங்களை சோதிக்க. :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு பொறுமையா சகாரா உங்களால் மட்டும்தான் முடியும் எங்களை சோதிக்க. :lol:

 

 

இதனால்தான் தொடர்கள் எழுத விரும்புவதில்லை சாந்தி.

 

இம்முறை கணனி குழப்பி விட்டது.....கணனி ஓகே ஆனபின் நேரம் சோதிக்கிறது....... இப்போதுதான் வேலையால் வந்து ஆறுதலாக நிற்கிறேன் இன்னும் சிறிதுநேரத்தில் சிறியவர்களை இசை வகுப்புகளுக்கு அழைத்துச் செல்லவேண்டும்...திரும்பி வந்து இன்றிரவு எப்படியாவது இந்தக்கதையின் கற்பனை வெளியை சிறிது திறக்கவேண்டும்... :( இனிமேல் இப்படியான தொடர் எழுதுற வேலைக்கு இறங்கக்கூடாது :unsure:

 

எழுதி முடிச்சாத்தான் நிம்மதி :)

  • கருத்துக்கள உறவுகள்

திறமான படைப்புக்கள் ஆக்கம்பெறக் காத்திருப்பதில் பிரச்சனையில்லை.

இந்த நேரப்பிரச்சனை யாரைத்தான் விட்டது
ஓடிக்கொண்டேயிருக்கும்

 

காத்திருப்போம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எழுதேல்லையே ???????

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.