Jump to content

கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!


Recommended Posts

Posted

தாம் அதி புத்திசாலிகள் என்று நினைத்துக் கொண்டு மாறி மாறி முதுகு சொரியும் கூட்டத்தின் வண்டவாளாம் தண்டவாளம்  ஏறிக் கன நாளாச்சு என்று தெரியாமால் பூச்சுற்றும் நடிகர்கள் உண்மையில் அதி மடையர்கள்.    

  • Replies 264
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

வணக்கம் ஜெயபாலன் அண்ணா,   மீண்டும் சுகமாக திரும்பி வந்ததையிட்டு மிக மகிழ்ச்சி.   எங்கும் கலகக்காரனாக அறியப்பட்ட உங்கள் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் மீதான ஆயிரம் விமர்சனங்களுக்கும்

பகலவன்

அன்புள்ள கவிஞர் ஐயா ஜெயபாலன்,   நீங்கள் கைது செய்யப்பட்ட போது ஒரு கள உறவாக நான் எவ்வளவு வேதனைப்பட்டேனோ அதற்கும் அதிகமாக நீங்கள் விடுதலை செய்யப்பட்டதும் மகிழ்வடைந்தேன்.   ஒரு தமிழனை அதுவும் வெளிநாட்டு

புங்கையூரன்

கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்!   நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்!   உங்கள்  'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுப

Posted

நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

 

சபேசன்,

 

கவிஞருக்கு என்றைக்காவது தாயகம் போக வேண்டி தேவை இருக்கும் என்பதையும் அதற்காக எவரையும் நோகடிக்காமல் இருக்கும் தேவை இருப்பதையும் புரிந்து கொள்கின்றேன். அவ்வாறு தேவை இருப்பவர் தன் விடுதலைக்கு உழைத்தவர்களுக்கு பெரிய நன்றி என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். பதிலாக மிக மோசமான மனித உரிமைகளை மீறியவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவேண்டி வந்த தேவை என்ன?

 

நீங்கள் சொல்வது போன்று, அங்கு கைது செய்யப்பட்டு பின் (காசு கொடுத்தோ கொடுக்காமலோ) விடுவிக்கப்பட்டவர்கள் பலரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் விடுதலையாகி வந்து மெளனமாகி இருக்கின்றார்களே ஒழிய, தன்னை நல்லவிதமாக நடத்தினார்களோ என்றோ நெஞ்சு வலியால் அவதிப்பட்டு ஆஸ்பத்திரியில் படுக்க போகும் போது ஒருவர் தன்னை கொலை செய்ய முனைந்தாரென்றோ, கோத்தாவை விட அவர் கொடியவர் என்றோ அறிக்கை விடவில்லையே?

 

 

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது

 

 

 

பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைக் குடித்தவர்கள் கையில் துப்பாக்கிகளுடன் நிற்கையில் அவர்கள் முன் நின்று "அம்மாவின் சமாதியைப் பார்க்க விடு அல்லது சுட்டுக் கொள்ளு" என்று ஆக்ரோசம் கொண்ட கவிஞர் பல்லாயிரம் மைல்கள் கடந்து அறிக்கை விடும் போது மட்டும் நிதானமாக இருக்கின்றார் என்பதை நம்பவேண்டும் என்கின்றீர்கள்.

Posted

நிழலி! இன்றைக்கு கவிஞர் நாடுகடத்தப்பட்டிருக்கிறார். அவர் என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தாயகம் செல்லுவதை நோக்கமாக கொண்டிருப்பார். இதற்கு சிலரை நோகடிக்காமல் இருப்பது அவசியம்தான். வேறு வழியில்லை.

கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டு திரும்பி வந்தவர்கள், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று இருக்கின்ற காலத்தில், கவிஞரால் அது பற்றி பேசவாவது முடிகிறது.

எங்கே ஆக்ரோசத்தை வெளிப்படுத்த வேண்டும், எங்கே நிதானத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருக்கிறார் என்றே எனக்கு படுகிறது.

 

சபேசன் அப்படியாயின் உங்களின் அண்மைய கருத்துக்களும் இவ்வாறான உள் நோக்கம் கொண்டவையோ? உங்களின் தனிப்பட்ட நலங்களுக்காக உண்மைகளைப் பொய்களாக எழுதும் உங்களைப் போன்றவர்களின் எழுத்துக்கள்  எமது போராட்ட அரசியலுக்குத்  தேவையா என்று சிந்திக்க வேண்டி இருக்கிறது ?

Posted

நாரதர்! நான் சில வேளைகளில் தேவை கருதி உண்மை பேசுவதை தவிர்த்திருக்கலாம். ஆனால் உண்மைகளை பொய்யென்று எழுதியது இல்லை. உண்மை என்றும் உண்மைதான்.

Posted

யாழ் இணையத்திலை இன்னமும் உலக அரசியல் தெரியாத  றெம்ப அப்பாவிகள்  இருக்கிறாங்கள். :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது தான் ஐயா யாழ்ப்பாணத்தில் சொன்ன கருத்து..

 

Posted

"புலம்பெயர் மக்களின் தாயகப் பயணம்" என்பது தனிப்பட்ட நலன் மட்டும் அல்ல, அது ஒரு இனத்தின் நலன். அதனால் தாயகம் சென்று வருபவர்கள் சில இடங்களில் மௌனமாக இருப்பதையும், சமாளித்து போக முனைவதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

Posted

யாழ் இணையத்திலை இன்னமும் உலக அரசியல் தெரியாத  றெம்ப அப்பாவிகள்  இருக்கிறாங்கள். :lol: :lol:

 

உலக அரசியல், கவிஞர் ஐயாவின் அரசியல் என்பன தெரிந்திருந்தாலும் கவிஞர் ஐயா தனது கைதின் பின்னராவது மாறி தமிழ் மக்களுக்காக கதைக்க மாட்டாரா என பலர் எதிர்பார்த்திருந்தார்கள். (நிச்சயமாக நான் எதிர்பார்க்கவில்லை. அவர் மாறமாட்டார் எனவே நினைத்திருந்தேன்.)

தமிழ் மக்களுக்காக கதைக்க கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதை அவர் தவற விட்டு விட்டார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது தான் ஐயா யாழ்ப்பாணத்தில் சொன்ன கருத்து..

 

 

ஐயாவின் இந்தப் பேச்சை முழுமையாகக் கேட்டேன். பல விடயங்களை சமகால யதார்த்தங்களோடு நின்று.. நியாயமாகவே பகிர்ந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது..! இருந்தாலும்.. இந்தியாவை மையப்படுத்தியே அவர் தமிழர்களின் உரிமையை தக்க வைக்க நினைக்கிறார்.. அதற்கு அப்பால் செல்ல பயப்படுகிறார்..!

Posted

என்னுடைய பார்வையில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைய வேண்டும் என்பது தமிழர்களின் நலனுக்கு ஆதரவான கருத்து.

முஸ்லீம்களை தூற்றி வருகின்ற கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கு எதிரான கருத்துக்கள்.

"தமிழர்களுக்காக கதைப்பது" என்பதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சமகால யதார்த்தச் சூழலை வைச்சுக் கொண்டு பார்க்கையில் சொல்லப்பட்ட விடயங்கள் சில நல்ல..நியாயமான நோக்கங்களை வெளிக்காட்டி இருந்தாலும்.... எதிர்காலம் பற்றிய இனங்காட்டல்கள் தெளிவாக இல்லை. மீண்டும் மீண்டும்.. இந்தியா என்ற எதிர்கால உலகிற்கு ஒவ்வாத ஒரு கூட்டமைப்பை (இந்தியாவுக்குள்ளேயே இன்று.. பல புடுங்குப்பாடுகள் உள்ளன.) மையப்படுத்தி பேசிக் கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை..!

Posted

என்னுடைய பார்வையில் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைய வேண்டும் என்பது தமிழர்களின் நலனுக்கு ஆதரவான கருத்து.

முஸ்லீம்களை தூற்றி வருகின்ற கருத்துக்கள் தமிழர்களின் நலனுக்கு எதிரான கருத்துக்கள்.

"தமிழர்களுக்காக கதைப்பது" என்பதை எப்படிச் செய்ய வேண்டும் என்று யார் முடிவு செய்வது?

 

தமிழர்களும் முஸ்லிம்களும் இணைய வேண்டும் என்பதற்கு குறுக்காக இலங்கை முஸ்லிம்கள் தான் உள்ளார்கள்.

இலங்கையிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் மட்டுமல்ல முஸ்லிம் பொதுமக்களிலும் பலர் (அனைவரும் அல்ல) தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். அண்மையில் கமரூனுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்ததை எதிர்த்து முகநூலில் சில இலங்கை முஸ்லிம்கள் கருத்து கூறியிருந்தார்கள். அடடா நல்லவர்களாக உள்ளார்களே என பார்த்து விட்டு அவர்கள் timeline க்கு போய் பார்த்தால் புலி எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு கருத்துகள் பல இருந்தது. ஆனாலும் அவர்கள் கமரூனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து கருத்து கூறியிருந்தமைக்கு காரணம் சிங்களவர்களால் தமக்கு அநியாயம் நடக்கும் போது பேசாமல் மௌனமாக இருந்த முஸ்லிம் தலைவர்கள் இப்பொழுது மட்டும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என கூறியிருந்தார்கள். (அரசாங்கத்துக்காக கதைக்கும் பலர் மத்தியில் தமது முஸ்லிம் மக்களை நினைத்து தன்னும் சிங்களவர்களுக்கு எதிராக கருத்து கூறியமைக்கு அவர்களை பாராட்ட தான் வேணும்.)

 

முஸ்லிம்கள் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக தூற்றி கருத்து கூறினால் அது மட்டும் தமிழர்களின் நலன்களுக்கு நன்மை தரும் விடையமா என்ன? அவர்கள் செய்வதற்கு எதிராக உங்களை போன்றவர்கள் விமர்சனம் வைப்பதில்லை. தனியே தமிழர்களில் தான் பழி சுமத்துகிறீர்கள்.

 

இங்கு கவிஞர் ஐயா தமிழ் மக்களுக்காக எவ்வாறு கதைத்திருக்க வேண்டும் என்பது பற்றி பலர் கருத்து கூறி விட்டார்கள். அவர் அரசாங்கத்தை பற்றி நல்லறிக்கை கொடுப்பதை தவிர்த்து இலங்கை அரசாங்கத்தின் உண்மை தன்மையை கூறியிருக்க வேண்டும். இன்னும் பல மக்கள் அங்கு கைது செய்யப்பட்ட நிலையில் உள்ளார்கள். உலகம் மற்றும் ஊடகங்கள் தனது விடுவிப்புக்கு தலையிட்டது போல் அவர்கள் விடுவிப்புக்கும் தலையிட வேண்டும் என கோரியிருக்க முடியும். ஊடகங்களின் கவனத்தை பெறாத கைதுகள் பெரும்பாலும் கொலையில் முடிவடையும் சந்தர்ப்பமே உள்ளது இல்லாவிட்டாலும் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்பதையும் கூறியிருக்க முடியும். இனி அங்கு செல்வோரும் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதை தனது கைது நிரூபிக்கிறது என கூறியிருக்க முடியும். இவ்வளவையும் அவர் கூறாதது ஏன்? கூறாதது மட்டுமல்லாமல் அரசாங்கத்தை பற்றி நல்லறிக்கை கொடுத்திருக்கிறார். இவர் கைது செய்யப்பட்டார் என்றதும் அதை ஊடகங்கள், பல முக்கிய நபர்கள் அரசாங்கத்துக்கு எதிராக அதை பயன்படுத்தினார்கள். அப்படியானவர்கள் விடுதலையின் பின்னர் இவர் என்ன கூறுகிறார் என்பதை அறியவும் முயற்சிப்பார்கள்.

Posted

ஜெயபாலன் யாரினதும் கைத்தடி அல்ல ,அவர் போக்கே அப்படிதான் .அது உண்மையா நடிப்பா என்று இன்றுவரை எனக்கு தெரியாது .

ஜெயபாலன் கனடா வந்திருந்த போது அடுத்தநாள் நடக்க இருக்கும் யாழ் இந்துவின் கலையரசி ஒத்திகைக்காக மண்டபத்தில் இருக்கும் போது ஒருவர் அவரை அங்கு கூட்டி வந்தார் .வழிய சென்று நான் அவருடன் கதைத்த போது என்னை எக்காலமும் தெரியாத மாதிரி நடந்துகொண்டார் (இப்படி பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கு ),ஆனால் அவரின் ஊரவர்களுடன் பழைய உறவுகள் எல்லாம் சொல்லி உறவாடினார் .இந்தியாவிலும் இப்படியான அனுபவங்கள் பல அவருடன் எனக்கு இருந்ததால் நான் அதை பெரிதாக எடுக்கவில்லை ,ஆனால் அவர் எதையும் செய்ய கூடியவர் தேவை என்றால் நடு வீதியில் படுத்திருந்து ஒப்பாரியும் வைப்பார்.

புளொட் நிக்கேரவேட்டிய வங்கி கொள்ளை அடித்துவந்த நேரம் மிக துணிச்சலாக கொஞ்ச காசுக்காக புத்தளம் (கட்டுடைப்பு ) என்ற மிக முக்கிய புவியியல் கடற்கரையை காட்டி கொடுத்துவிட்டார்கள் என்று கத்தித்தீர்த்தார்.பலர் அன்று ஜெயபாலனுக்கு எதுவும் நடக்கலாம் என்று நினைத்தார்கள் .அதுதான் ஜெயபாலன் .

அவரின் இப்படியான  நிலைப்பாடு தெரிந்துதான் அவர் எந்த முக்கிய பதவிகளிலும் இருத்தப்படவில்லை .

வெறும் பொய்யான தேசியவாதியோ அல்லது துரோகியோ அல்லது சோரம் போனவரோ அல்ல அவர் ஒரு கலகக்காரனாக தன்னை கட்டிக்கொள்ள விரும்பும் ஒருவர் .

கவிஞராக எழுத்தாளராக நடிகராக அவர் பலரால் எட்டமுடியாத  உயரத்தில் தான் இருக்கின்றார் .இந்த கலகங்களை எல்லாம் அந்த உயரம் மறைத்துதான் விடுகின்றது .

Posted

ஆயிரம் ஆயிரம் கருத்துக்கள் ,முரண்பாடுகள் ,இருந்தாலும் நான் கருத்துக்களம் மூலம் பழகிய ,பேசிய உறவு  துன்பம் என்னும் கொடூரத்தை தாண்டி வெளியே வந்ததை இட்டு மகிழ்ச்சியடைகிறேன் ..............உங்களுக்கு சமாதனாம் உண்டாவதாக .இறைவனுக்கு நன்றி.

Posted

நாடு கடந்த அரசோ அது சார்ந்தவர்களோ இல்லை புலத்து தேசீயக் கோஸ்டிகளோ தமிழ்த்தேசீயத்தை வழிநடத்தக் கூடிய நிலையில் இல்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அது சார்ந்தவர்களும் அப்படியே. இதற்கெல்லாம் பிரதான காரணம் இவர்கள் அனைவரும் மையவாதச் சகதிக்குள் புதைந்து கிடப்பவர்கள். எக்காலத்திலும் தமிழர்களுக்கு துரும்பளவு நன்மையும் இவர்களால் ஏற்படாது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்கள் இஸ்லாமியத்தமிழர்களின் ஐக்கியப்பாட்டை வலியுறுத்துகின்ற அதே வேளை இந்தியாவின் நல்லுறவை வளர்ப்பதிலும் கவனமாக இருப்பவர். இஸ்லாமியத் தமிழர்களின் ஐக்கியப்பாடும் இந்திய ஆதரவும் இன்றி தமிழர்களுக்கு விமோசனம் என்ற கற்பனைக்கே இடமில்லை. (மையவாதிகள் நல்லூரை சுற்றி 10 ஏக்கர் நிலத்தை தமிழீழமாக தந்தால் போதும் என்பர்கள். அவர்களுக்கு இவை புரியாது) அந்தவகையில் கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களே தற்போதைய சூழலில் தமிழ்த்தேசியத்தை வழிநடத்த முன்னெடுக்க சரியான நபர்கள். சரியான முறையில் சிந்திக்க வல்லவர்கள். அவர்கள் பணி தொடரவேண்டும். பேரினவாதிகளிடம் இருந்தும் மையவாதிகளிடம் இருந்தும் தமிழர்களின் விடுதலைநோக்கிய பயணம் தொடர்வது காலத்தின் கட்டாயம்.

Posted

சண்டமாருதன் அண்ணா,

இலங்கை முஸ்லிம் தலைவர்கள் மற்றும் இந்தியாவை நம்பி எந்த பிரயோசனமும் இல்லை. இந்தியா மற்றும் உலகத்துக்கு அழுத்தம் கொடுத்து சாதிக்க நினைப்பவர்களால் தான் பிரயோசனம் உண்டு. அந்த வகையில் தமிழக மக்களின் வாக்குகள் தமக்கு தேவை எனின் அவர்கள் விரும்புவதை செய்வது போல் நடிக்க இந்தியா முயலும். அந்த நடிப்பால் கிடைக்கும் நன்மையை தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். இங்கு தமிழக மக்கள் மற்றும் அவர்கள் போராட்டம் முக்கிய வலுவாக உள்ளது.

அதேபோல் தமிழர்கள் அதிகளவில் உள்ள நாடுகள் தொடர்பில் தமிழர்களின் வாக்குகள் தமக்கு தேவை எனின் அவர்கள் விரும்புவதை சிறிதேனும் செய்ய வேண்டும் எனும் நிலையில் புலம்பெயர் மக்களின் போராட்டங்கள், அழுத்தங்கள் செல்வாக்கு செலுத்துகிறது. (சிலர் எதிர்பார்ப்பில்லாமல் தொடர்ச்சியாக குரல்கொடுத்து வருவதுமுண்டு.)

அதேபோல் இன்றைய உலக அரசியல் மாறி வருவதும் எமக்கு சாதகம்.

 

புலம்பெயர் அமைப்புகள், தமிழர்கள் ஏனோ தானோ என்றிருந்தால் இந்த உலகம் எம்மை பற்றி நினைத்து கூட பார்க்காது. அவ்வாறு இருப்பின் மகிந்தவுக்கு தமிழ் மக்களை மேலும் அழிக்க இன்னும் வசதி.

சும்மா புலம்பெயர் அமைப்புகள் மேல் காழ்ப்புணர்வில் எழுதி விட்டு ஜெயபாலன் ஐயாவை உயர்த்தி வைக்காதீர்கள். இவ்வளவு காலமும் அவர் முயற்சித்து அதனால் கிடைத்த நன்மை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்கள உறவு ஜெயபாலன் அவர்கள் மீண்டும் நோர்வேக்கு திரும்பிவந்தது மகிழ்ச்சி. இனிமேல் தேவையில்லாமல் சிங்களதேசத்துக்கு செல்லவேண்டாம்.

Posted

வலி. வடக்கிற்குச் சென்ற முதலமைச்சரை திருப்பி அனுப்பியது இராணும் news
வடக்கு மாகாண முதலமைச்சரும் இந்துக்குருமார்களும் இன்று வலி. வடக்கிற்குச் சென்றவேளை இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் வீடழிப்புகளுடன்  அங்குள்ள இந்து ஆலயங்களும் இடித்துடைக்கப்படுவதாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இன்று முதலமைச்சர் தலைமையில் இந்துகுருமார்கள் பார்வையிடுவதற்காக சென்ற வேளை மாவிட்டபுரம் பகுதியில் உள்ள காவலரணில் இருந்த இராணுவத்தினர் அவர்களை மேலும் செல்லவிடாது தடுத்து நிறுத்தியதுடன் திருப்பியனுப்பியும் உள்ளனர்.

இது தொடர்பாக  இந்துக்குருமார்கள் தெரிவிக்கையில், இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும்.

இதனால் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மதங்களுக்கிடையிலான நல்லிணக்கங்களை ஏற்படுத்துவதாக கூறி வருகின்றமை அரசின் ஏமாற்று நாடகம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான வீடுகள் , ஆலயங்கள். பொதுக்கட்டடங்கள்  அனைத்தும் அண்மைக்காலமாக இடித்தழிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=840942475429565747#sthash.0jNNIkys.AM3Lu9FN.dpuf

 

முதலமைசருக்கு பாட்டு எழுத தெரியாது. அல்லது கத்த தெரியாது. அப்படியாயின் பாது காப்பு வலையத்துக்குள் விட்டிருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயபாலன் கனடா வந்திருந்த போது அடுத்தநாள் நடக்க இருக்கும் யாழ் இந்துவின் கலையரசி ஒத்திகைக்காக மண்டபத்தில் இருக்கும் போது ஒருவர் அவரை அங்கு கூட்டி வந்தார் .வழிய சென்று நான் அவருடன் கதைத்த போது என்னை எக்காலமும் தெரியாத மாதிரி நடந்துகொண்டார்

 

அட கொடுமையே...

நோர்த் புளொக்கிலிருந்து... சவுத் புளொக் வரைக்கும்,

சல்மான் கானிலிருந்து... சல்மான் ருஷ்டி, என்று எல்லோரும் அறிந்த அர்ஜூனை தெரியாது என்று சொன்ன ஜெயபாலனை, மிக வன்மையாகக் கண்டிக்கின்றேன். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லிம் மக்களோடு இணைந்து எக்கால கட்டத்திலும் வாழவே முடியாது. இதனை வாழ்ந்து அனுபத்தே கூறுகின்றோம் எமது வாழ்விடங்களை அபகரிப்பதும், அப்பாவி மக்களை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்க வைத்து அவர்களது வளங்களை சுரண்டுவதும், கலைகலாச்சார பண்பாட்டு விழுமியங்களை திட்டமிட்டு சீர்குலைப்பதும், வலிந்த பாலியல் துஷ்பிரயோகங்களும் என் இனத்தின் மீது முஸ்லிம் சமுகத்தினாலேயே அரங்கேற்றப்படுகின்றது. சும்மா ஆய்வு எழுதுபவர்களும், கவி வடிப்பவர்களுக்கும் தங்களின் இருப்பு கருதி எதையும் எழுத முடியும். யதார்த்தம் என்ற ஒன்று இருக்கின்றது. நல்லிணக்கம் பேசுபவர்களும் ஆய்வு பத்தி எழுதுபவர்களும் என் மக்களோடு வாழ்ந்து எழுதுங்கள் அப்போது தெரியும் உண்மை நிலை. மக்களுக்கான வாழ்வாதார, விழிப்புனர்வு, மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட எனக்கு அந்த மக்களுடன் வாழ்ந்து அவர்களின் மேம்பாட்டுக்கு உழைத்த எனக்கு, திட்டமிட்ட சீரழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை மிக லவமாக களைந்த எனக்கு தெரியும் யதார்த்தம் எது என்று. தயவு செய்து மறுபடியும் நல்லிணக்கம் பேசி எம் மக்களை படுகுழியில் தள்ளாதீர்கள்! வேண்டும் என்றால் எமக்கான வலுவான சுழல் உருவாகும் இடத்து இதனை பற்றி சிந்திக்கலாம். அதுவரையும் எதுவுமே சாத்தியப்படாது.

 

 

 

Posted

Poet அய்யா போனா போகுது ..புலி வாழ்க புலி தான் எல்லாம் புலி தான் சரி என்று கூவிட்டு போங்க உங்கட rating  யாழில் எப்பிடி எகிறும் என்று பாருங்க

 

Posted

நடு வீதியில் படுதித்திருப்பது முன்பு சரியாக இருந்திருக்கலாம். தற்போது நடை பெறுவது அரக்கர் ஆட்சி. ஆயுத முனைக்கு முன்பு எதுவுமே செல்லா காசுதான். ஜெயபாலன் சினிமா நெறையவே பார்க்கிறார் சிங்கம் சூர்யா நெனைப்பில் நெஞ்சை நிமிர்த்தி சுடு பார்ப்பம் எண்டு கனவில் கத்‌தி இருப்பாரோ......காணாமல் போன உறவுகளையே கொச்சைப்படுத்திவிட்டார்....

Posted

யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது.

நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும்.  . 

Posted

பொறுப்போடுதான் பேசுகின்றீர்கள்..... இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் பொறுப்போடு ஈழ தமிழர்களிற்கு எக்காலமும் விடிவே கிடைக்க கூடாது என்ற அதி உன்னத பொறுப்போடு.....

Posted

யாழ்க்கள நண்பர்களே, நான் பொறுப்பில்லாமல்பேசி என்னோடு தொடர்பு கொண்டவர்களையும் எனக்காக அலுவல் பார்த்தவர்களையும் ஆபத்துக்குள் மாட்டி விடமுடியாது. எனது இரண்டாவது அறிக்கை எழுதுமுன்னம் நான் என் தோழ தோழியர்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பண்ணைவீட்டை ஒரு அமைச்சர் அபகரிக்க திட்டமிட்டுள்ளார். அவரது சேட்டைகள் இங்கு ஒரு கிழைக்கதையாக உள்ளது. என் தோழ தோழியர் நலன்கருதி நான் ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பேசுவது முக்கியமாக உள்ளது.

நெடுக்காலபோவான் போன்றவர்கள் என்னை புரிந்துகொள்ளுகிற காலம் வரும்.  .

வணக்கம்... கண்டதில் மகிழ்ச்சி.....!!!

உங்களின் உரையில் இருந்து ஒண்று மட்டும் எனக்கு புரிகிறது.... நீங்கள் மீண்டும் இலங்கை போக போகிறீர்கள் என்பதுதான் அது...

அப்போது நீங்கள் மீண்டும் கைது செய்யபட மாட்டீர்கள்... செய்யப்படாமல் இருக்க ஆவன செய்து கொண்டு இருப்பீர்கள்... !!!

உங்களுக்கு தமிழ் வெளிநாட்டு ஊடகங்கள் பெருமளவில் ஆதரவை தந்தன... அது ஜெயபாலன் எனும் தனிமனிதனுக்காக அல்ல... இலங்கை அரசின் அடக்கு முறையில் சிக்கிய ஒருவருக்கு... இதை நீங்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்...

அந்த அடக்கு முறையை மழுப்பும் போக்கானது உங்களுக்கான ஆதரவை மீளாய்வு செய்யும் நிலைக்கே எல்லாரையும் கொண்டு செல்லும் என்பதை புரிந்து கொள்ள உங்களால் முடியும் எண்று நம்புகிறேன்...

அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.