Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறுத்தப்பட இருந்த போரை நிறுத்த விடாமல் தடுத்ததே இந்தியாதான்: - ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய திருமுருகன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Thirumurukan-ganthy-150.jpg

நிருபர் கேள்வி:இலங்கையில் இறுதிகட்ட போரின்போது போர் நிறுத்தம் கொண்டு வர இந்தியா முயற்சித்தது ஆனால் அதை தமிழகத்தில் உள்ள சிலர் தான் கெடுத்துவிட்டார்கள் என்று சிதம்பரம் அடிக்கடி கூறுகிறாரே.

மே 17 திருமுருகன் பதில்:ஒரு பச்சைபொய்யை இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.இதைபற்றி சற்று விரிவாக பார்தோமேயானால் உண்மை வெளிப்படும். 2009 மார்ச் மாதம் 9ம் தேதியிலிருந்து 12ம் தேதி என்பது போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம்.

இந்த கால கட்டத்தில் ஐநாவின் உயர்மட்டகுழு இலங்கைக்கு விஜயம் செய்து எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்ற ஆவணத்தை பார்த்து அதிர்ந்து போய் உடனடியாக ஐ.நாவின் பாதுகாப்பு சபையை கூட்ட வேண்டும் என்று அநத குழுவின் தலைவரான நவநீதம்பிள்ளை மார்ச் 13 2009 கூறுகிறார். இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கவிருக்கிற நேரத்தில் முதல் நாள் இரவு ஒரு மின்னஞ்சல் வருகிறது.அதில் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்க்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் விதமாக அது வருகிறது.இந்த மின்னஞ்சலை அனுப்பியது இந்தியாவிலிருந்து ஐநாவிற்க்கு அனுப்பப்பட்ட முன்னாள் துணைபாதுகாப்பு செயலாளர் விஜய் நம்பியார்.

இவர் தான் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள் என்று சர்வதேசத்திற்க்கு சொல்லக்கூடாது மற்றும் இலங்கை அரசை குற்றசொல்லாமல் விடுதலைப்புலிகளை குற்றம்சொல்லி அறிக்கை கொடுக்கவேண்டும் என்று கூறுகிறார்.இதன்படி பல செய்திகளை மறைத்து அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நடக்கிறது. இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏன் முக்கியமென்றால் ஐநாவின் மிக அதிகாரம் கொண்ட மனித உரிமை அமைப்பானது அங்கு மனித குலத்திற்க்கு எதிரான குற்றங்கள் நடக்கிறது என்று அறிக்கை கொடுத்தால் உடனே பாதுகாப்பு சபையை கூட்டி போர் நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

இதுதான் உலகத்தில் எல்லா இடங்களிலும் நடக்கிறது.குறிப்பாக சிரியா மற்றும் பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே போர்நிறுத்தம் வ்ந்தது.ஆனால் இந்த அறிக்கை அப்பொழுது வரமால் தடுத்தது இந்திய அரசாங்கம்.குறிப்பாக அப்பொழுது பதவியிலிருந்த சிதம்பரம் அவர்களுக்கு இது தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.எனவே இவர்கள் போரை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சர்வதேசம் இதில் தலையிட நினைத்து தனது ஆட்களை அனுப்புகிறது இதையும் இந்தியாதான் தடுக்கிறது. இதனையடுத்து அங்கு 15ம்தேதி ஐநாவின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் விஜய் நம்பியார் வருகிறார்.

இவர் கொழும்புவிலிருந்த 5நாட்களும் தனது அறையைவிட்டு வெளியே வரவில்லை.ஏன் என்று கேட்டால் வெளியில் climate தட்பவெட்பம் சரியில்லை என்று சொல்லியிருக்கிறார். இந்த சமயத்தில்தான் மே 19அன்று கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் கொல்லப் பட்டிருக்கிறார்கள் இது இந்தியாவின் ஒப்புதலோடு நடந்திருக்கிறது.இப்படி பொறுப்பற்ற அதிகாரியாக ஐநாவிலிருந்த இந்திய அதிகாரி விஜய் நம்பியாரின் அண்ணண் சதிஸ் நம்பியார்தான் இனப்படுகொலை செய்த இலங்கைக்கு இராணுவ பயிற்சி கொடுத்தவர்.

அண்ணண் இனப்படுகொலை செய்கிறவர் தம்பி அதனை வேடிக்கை பார்த்தவர் இவர்கள் இருவரும் இந்தியாவை சேர்ந்தவர்கள்.இவர்களை இந்த இடத்தில் கொண்டுவந்தது இந்தியாதான்.இது எதுவும் பா.சிதம்பரத்திற்க்கு தெரியாமல் நடந்திருக்காது. இது ஏதோ மே17இயக்கத்தின் கருத்தோ அல்லது திருமுருகனின் கருத்தோ இல்லை எல்லாமே ஆவணமாக விக்கிலீஸ் மற்றும் ஐநாவின் உள்ளக ஆய்வறிக்கையிலேயே இருக்கிறது.ஆகவே இவர்கள் செய்த அனைத்தும் ஆவணமாகவே இருக்கிறது. இதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்க்காகத்தான் அடுத்தவர்களின் மீது பழியை போடுகிறார்கள்.

மூன்றாவது நாடுகளின் முலம் முயற்சித்தோம் என்பதெல்லாம் சுத்த பொய் மற்ற நாடுகளின் தலையீட்டை தடுத்ததே இந்தியாதான்.இதை நாங்கள் ஆதாரபூர்வமாகவே சிதம்பரம் அவர்களுடன் விவாதிக்க தயாராக இருக்கின்றோம்.ஆனால் அவர் இதற்க்கு தயாரா என்பதுதான் எங்கள் கேள்வி.எனவே இந்த போரை நடத்தி இத்தனை மக்களை கொன்று குவித்ததற்க்கு முழுகாரணமும் இந்தியாதான்.

http://www.seithy.com/breifNews.php?newsID=98273&category=TamilNews&language=tamil

  • Replies 57
  • Views 3.6k
  • Created
  • Last Reply

எங்களைப் போல் இளிச்சவாயர் வேற்ங்கிலும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாவது நாடுகளின் முலம் முயற்சித்தோம் என்பதெல்லாம் சுத்த பொய் மற்ற நாடுகளின் தலையீட்டை தடுத்ததே இந்தியாதான்

இந்த போரை நடத்தி இத்தனை மக்களை கொன்று குவித்ததற்க்கு முழுகாரணமும் இந்தியாதான்.

உண்மை

மூன்றாவது நாடுகளின் முலம் முயற்சித்தோம் என்பதெல்லாம் சுத்த பொய் மற்ற நாடுகளின் தலையீட்டை தடுத்ததே இந்தியாதான்

இந்த போரை நடத்தி இத்தனை மக்களை கொன்று குவித்ததற்க்கு முழுகாரணமும் இந்தியாதான்.

உண்மை

எல்லாத்தையும் செய்து முடித்துப்போட்டு நல்லவனுக்கு நடிக்கப்பாக்கிறாங்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேர் இன்னும் இந்தியா தீர்வு எடுத்து தரும் என்கிறார்கள்.  அவர்கட்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

திருமுருகன் தான் யு என் ஈ மெயில் எல்லாம் செக் பண்ணுபவர் போல ,

இந்தியா நல்லது செய்யுதோ கேட்டது செய்யுதோ அவர்களால் தான் எதுவும் முடியும் .

இவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது .

அதுதான் இங்கு விளங்க வேண்டியது .

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சப்பேர் இன்னும் இந்தியா தீர்வு எடுத்து தரும் என்கிறார்கள்.  அவர்கட்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

எங்கள் ஊரில் (மதுரையில்) அட்டாக் பாண்டி குழு, தொழில் போட்டியில் தனது பழைய சகவான 'பொட்டு' சுரேஷை போட்டுத் தள்ளிவிட்டு, எழவு வீட்டில் மிகவும் அப்பாவியாக பொட்டு சுரேஷின் உடலருகே அமர்ந்து கொண்டு கேவிக் கேவி அழுது கண்ணீர் விட்டார்களாம்.

அந்த மாதிரி கதைதான் இந்தியாவின் பங்கு இந்த ஈழப் படுகொலைகளில்...

திருமுருகன் தான் யு என் ஈ மெயில் எல்லாம் செக் பண்ணுபவர் போல ,

இந்தியா நல்லது செய்யுதோ கேட்டது செய்யுதோ அவர்களால் தான் எதுவும் முடியும் .

இவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது .

அதுதான் இங்கு விளங்க வேண்டியது .

அதான்  எத்தனையோ ஆயிரம் பெடியளையும் கொண்டு போய் காம் போட்டு  காத்து கொண்டு கிடந்தனாங்கள். ஆயுதம் தருவான்  ஈழம் காண்போம் என்டு.

இந்த திருமுருகன் ஏன் தீக்குளிக்க கூடாது?

யாரவது அப்பாவிகள் தான் ஒரே தீகுளிகிரார்கள்

திருமுருகன் தான் யு என் ஈ மெயில் எல்லாம் செக் பண்ணுபவர் போல ,

இந்தியா நல்லது செய்யுதோ கேட்டது செய்யுதோ அவர்களால் தான் எதுவும் முடியும் .

இவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாது .

அதுதான் இங்கு விளங்க வேண்டியது .

இந்தியா  மாலைதீவை பிடிக்க சொல்லி தமிழ் பெடியளை அனுப்பி போட்டு பின்னாலை பெடியளை அடிக்க இந்தியா தன் நேவியை அனுப்பின கதை என்ன மாதிரி....?? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திருமுருகன் ஏன் தீக்குளிக்க கூடாது?

யாரவது அப்பாவிகள் தான் ஒரே தீகுளிகிரார்கள்

ஏன் உங்க தலீவர் தீக்குளிக்கலாமே. அவரின் "எதிர்கட்சி தலைவரே.. கள்ளக் காதல் கண்றாவிக் காதல் என்று தானும் மகேஸ்வரி மாதிரியும் இருக்கிறப்போ... இவருக்கு மட்டும் என்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்குது..???! :lol::D

திருடர்கள் தீக்குளிப்பது இல்லை :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின், முள்ளமாரித் தனத்தை... வெளிச்சம் போட்டுக் காட்டிய, திருமுருகனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் (மதுரையில்) அட்டாக் பாண்டி குழு, தொழில் போட்டியில் தனது பழைய சகவான 'பொட்டு' சுரேஷை போட்டுத் தள்ளிவிட்டு, எழவு வீட்டில் மிகவும் அப்பாவியாக பொட்டு சுரேஷின் உடலருகே அமர்ந்து கொண்டு கேவிக் கேவி அழுது கண்ணீர் விட்டார்களாம்.

அந்த மாதிரி கதைதான் இந்தியாவின் பங்கு இந்த ஈழப் படுகொலைகளில்...

அட்டாக் பாண்டியை என் கவுன்ட்டர் இல் போட்டு தள்ளியாச்சு என்று சொல்கின்றார்களா உண்மையா?

இவர் கூறுவது தவறு, நடக்கக் கூடாத போரை, தொடக்கி வைத்ததே இந்தியா தான், அதே போல் 2000ம் ஆண்டு புலிகள் பலமாஹா இருந்த போது போரை நிறுத்தியது இந்தியா தான்

இதை அறிந்த பின்தான் புலிகளுக்கு ஆதரவளிப்பதை பலர் தவிர்த்து விட்டனர்..

இந்திய கொள்கை வகுப்பாளர்களிள் தமிழின விரோதம் என்பது புலிகளின் காலத்திற்கு முற்பட்டது என்பது வரலாற்றை சரியாக படித்தவர்களுக்கு புரியும். புலிகளும், ராஜீவ் காந்தி கொலையும் இந்தியாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம். தங்களது தமிழின எதிர்ப்பை மறைத்து அதேவேளை தமிழர்களை அடக்கி ஒடுக்க இதனை சிறந்த வாய்ப்பாக அவர்கள் பயன் படுத்தினர். இவ்விரண்டும் இல்லாதிருந்திருந்தால் தமிழர்களை அடக்க வேறு வழியை தேடியிருப்பார்களேயொழிய தமது தமிழின எதிர்ப்பு கொள்கையை என்றுமே மாற்றியிருக்க மாட்டார்கள்.

Edited by tulpen

பலர் மறைக்கனினைக்கும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

திருடர்கள் தீக்குளிப்பது இல்லை :lol::icon_mrgreen:

உண்மை. திருடர் கூட்டம் அதிமேதாவிதனமாக கருத்து மட்டும் எழுதுவார்கள். :icon_mrgreen:  :icon_mrgreen:

இந்திய கொள்கை வகுப்பாளர்களிள் தமிழின விரோதம் என்பது புலிகளின் காலத்திற்கு முற்பட்டது என்பது வரலாற்றை சரியாக படித்தவர்களுக்கு புரியும். புலிகளும், ராஜீவ் காந்தி கொலையும் இந்தியாவிற்கு கிடைத்த வரப்பிரசாதம். தங்களது தமிழின எதிர்ப்பை மறைத்து அதேவேளை தமிழர்களை அடக்கி ஒடுக்க இதனை சிறந்த வாய்ப்பாக அவர்கள் பயன் படுத்தினர். இவ்விரண்டும் இல்லாதிருந்திருந்தால் தமிழர்களை அடக்க வேறு வழியை தேடியிருப்பார்களேயொழிய தமது தமிழின எதிர்ப்பு கொள்கையை என்றுமே மாற்றியிருக்க மாட்டார்கள்.

எதையும் எங்கள் விருப்பத்திற்கு எழுதலாம் அதை மற்றவர்கள் நம்ம வேண்டுமெனில் ஆதாரங்களுடன் எழுத வேண்டும் .

தமிழின விரோதம் என்று அங்கு ஏதுமில்லை .வல்லரசுகளின் அல்லது பிராந்திய வல்லரசுகளின் கொள்கை வகுப்பு என்பது எப்போதும் அண்டை நாடுகளுக்கு பிடித்ததாக இருக்காது .

இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்ன சிங்களவனுக்கு சார்பானதா ? ஆனால் அவன் அதை விளங்கி நடக்கின்றான் (இடைக்கிடை சவுண்ட் விடுவது வேறுவிடயம் )

எம்மவர் இன்னமும் கட்டபொம்மன் ,சங்கிலியன்,பண்டாரவன்னியன் அரசியல் தான் செய்கின்றார்கள் அதில் பெருமை வேறு .

------------

நியானி: நீக்கப்பட்டுள்ளது

Edited by நியானி

எதையும் எங்கள் விருப்பத்திற்கு எழுதலாம் அதை மற்றவர்கள் நம்ம வேண்டுமெனில் ஆதாரங்களுடன் எழுத வேண்டும் . இப்ப நாம காக்கா வன்னியன், எட்டப்பன் தலைமையில் அரசியல் தொடங்கியிருக்கிறோம். இன்னும் முப்பது எமக்கு மனித உரிமை கிடைத்து விடுமுங்கோ...

எதையும் எங்கள் விருப்பத்திற்கு எழுதலாம் அதை மற்றவர்கள் நம்ம வேண்டுமெனில் ஆதாரங்களுடன் எழுத வேண்டும் .

தமிழின விரோதம் என்று அங்கு ஏதுமில்லை .வல்லரசுகளின் அல்லது பிராந்திய வல்லரசுகளின் கொள்கை வகுப்பு என்பது எப்போதும் அண்டை நாடுகளுக்கு பிடித்ததாக இருக்காது .

இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்ன சிங்களவனுக்கு சார்பானதா ? ஆனால் அவன் அதை விளங்கி நடக்கின்றான் (இடைக்கிடை சவுண்ட் விடுவது வேறுவிடயம் )

எம்மவர் இன்னமும் கட்டபொம்மன் ,சங்கிலியன்,பண்டாரவன்னியன் அரசியல் தான் செய்கின்றார்கள் அதில் பெருமை வேறு .

------------

நியானி: நீக்கப்பட்டுள்ளது

  • புலிகள் இல்லாத  4 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அரசியல் தீர்வு விடயத்தில் எந்த அக்கறையும் இன்றி ஸ்ரீலங்கா அரசை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் விதமாக செயற்படும் இந்தியா எப்படி எமக்கு உரிமை பெற்று தரும்?
  •  
  • தானே உருவாக்கிய மாகாண சபையின் அதிகாரங்கள் ஒவ்வொன்றையும் சிங்கள அரசு பிடுங்கி மாகாண சபையை வலுவிழக்க செய்யும் போது ஏன் இந்தியா வேடிக்கை பார்க்கிறது?
  • தமிழின அழிப்பை  திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை  ஏன் மகிழ்வுடன் வேடிக்கை பார்கிறது?

இப்போது தான் புலிகள் இல்லையே. தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, அத்துடன் இந்தியாவுடன் நல்லுறவை பேணும் தலைமை தானே நான்கு ஆண்டுகளாக  இருக்கிறது. தனக்கு விசுவாசமான ஒரு தலைமை அங்கு இருந்தும் ஏன் இந்த ஓர வஞ்சனை. இதையே தமிழின எதிர்ப்பு என்று குறிப்பிட்டிருந்தேன். இதில் தாமதிக்க என்ன ராஜதந்திரம் இருக்கிறது. தமிழர்கள் மேலும் பலவீனபடுத்தபடும்வரை இந்தியா தாமதிக்கிறது என்று எடுத்து கொள்ளலாமா? அவ்வாறு பலவீனபடுத்த பட்டு அவமான படுத்த பட்ட தமிழர்களுக்கு சிறிய கிள்ளி தெளிக்கும்  சலுகைகளை பெற்று கொடுப்பது போல் நடிப்பதற்காக இந்தியா தாமதபடுத்துகிறது என்று எடுத்து கொள்ளலாமா. இவ்வாறான நியாயமான கேள்விகள் எழுவது இயற்கைதானே அர்ஜீன்.

நீங்கள் கூறிய கட்டபொம்மன், சங்கிலியன், பண்டார வன்னியன்  அரசியலை வெறுக்கும் இந்தியாவால் எ்ப்படி அவர்களை போலவே அந்நியரை எதிர்த்து போரிட்ட சப்புமால் குமரய்யாவின் அரசியல் செய்யும், துட்ட கெமுனுவின் அரசியல் செய்யும் சிங்களவர்களுடன் ஒத்து போக முடிகிறது. பதில் மிகவும் எளிதானது. மனம் உண்டானால் இடம் உண்டு. இந்தியாவை பொறுத்த வரை மனம் இல்லை. ஈழத்தமிழர்கள் கெளரவமான சமஸ்சி ஆட்சியை அடைவதையும் இந்தியா விரும்பவில்லை என்பதே எனது கருத்து.

உங்களுக்கு தெரியும் பொஸ்னிய பிரச்சனையில் ஐரோப்பிய நாடுகள் எப்படி நடந்து கொண்டன என்பது. சம்பந்த பட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடும் அழுத்தம் பிரயோகித்து எல்லோரையும் பலாத்காரமாக  பேச்சு வாரத்தை மேசைக்கு வரப்பண்ணி பொருத்த மான அரசியல் தீர்வை ஒரு களத்தில் உருவாக்கி மறுகளத்தில் குற்றம் இழைத்த சேர்பிய படைகள் மீது போர்குற்ற வழக்கின் மூலம் தண்டனை வழங்கியது.

சீரியா போர் தொடங்கி எத்தனை மாதங்கள் ஆகின்றது ஏன் உலகம் தினமும் இவ்வளவு அழிவுகளையும் பார்த்துக்கொண்டு மௌனமாக இருக்கின்றது ,

கனடாவில் பழங்குடிமக்கள் இன்னமும் பல இடங்களில் எதுவித வசதியுமில்லாமல் இருக்கின்றார்கள் ,சிலருக்கு குடிக்க ஒழுங்கான தண்ணீரே இல்லை .மாறி மாறி வரும் அரசுகள் சிங்கள அரசுகள் போல தீர்வுகளை தட்டி கழித்துக்கொண்டே வருகின்றார்கள் .

இப்படி உலகம் முழுக்க பிரச்சனைகள் வெவ்வேறு வடிவங்களில். மனிதர்கள் சாப்பிட வழியில்லாமலும் ஒழுங்கான இருப்பிடம் இல்லாமலும் வாழுகினார்கள் .அதை விட கொடுமை பாலியல் வல்லுறவு ,சித்திரவதை ,கொலை என்று ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஒரு மூலையில் நடந்துகொண்டே இருக்கு .

சர்வதேசம் விரும்பினால் இதை நிறுத்த முடியாதா அல்லது குறைக்க முடியாதா ? இரண்டும் அவர்களால் முடியும் ஆனால் அவர்கள் இன்னமும் இவற்றை கூட்டிக்கொண்டு போகின்றார்களே ஒழிய குறைக்க எதுவித நடவடிக்கையும் எடுப்பதில்லை .

ஆனால் தீர்க்க முயற்சிப்பது போல் ஊடகங்ககளில் விலாவாரியாக பேசுவார்கள் .(சிதம்பரம் ,வாசன் பேசுவது போல ) இன்று ஜோ பைடனும் ஆசிய பிராந்திய நலம் பற்றி பேசியிருந்தார் .

அடுத்து இந்தியாவிற்கு வருவம் ,ஒவ்வொரு மாநிலத்திலும் தலை போகும் பிரச்சனை ,காஸ்மீர் பிரச்சனை சுதந்திரத்திற்கு முதலே இருந்து இன்றுவரை தொடருது ,இவை இப்படியெல்லாம் இருக்க முதல் வேலையாக இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுத்து இந்தியா தீர்க்கும் என்று நாங்கள் எப்படி எதிர்பார்ப்பது ,

மன்மோகன்சிங் யாழ்பாணம் வந்து பார்த்தால் மனதிற்குள் நினைப்பார் இது கல்கத்தாவை விட ஆயிரம் மடங்கு சுத்தம் ,கஷ்மீரை விட ஆமி பிரச்சனை குறைவு ,மீசரோம்,மணிப்பூர் பகுதிகளை விட பாலியல் வல்லுறவு இல்லை .பீகாரை விட எவ்வளவோ படித்தவர்களும் பள்ளிக்கூடங்களும் அதிகம் இருக்கு ,இலங்கை தமிழனுக்கு நல்ல கொழுப்பு இருக்கு இன்னமும் கொஞ்சம் இறக்கவேண்டும் என்றுதான் மனதிற்குள் நினைப்பார் .

முடிவு -இப்படியே விட கொஞ்சநாளில் சரியாகிபோய்விடும் என்று இலங்கை பிரச்சனை பற்றிய பைல் குப்பைக்குள் போய்விடும் .

சம்பந்தரும் விக்கியும் ஏலுமட்டும் முயற்சிக்கட்டும் நாங்களும் பொறுத்திருந்து பார்ப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தமிழனுக்கு, எதிராகவும்....
முஸ்லீமுக்கு சார்பாகவும்,
இணக்க அரசியல், விதண்டாவாதம் செய்யும் உறுப்பினர்கள்...
வார்த்தைகளை... அளந்து, பேசுவது நல்லது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.