Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் என் கணவர் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பும்போது இன்னொருவரையும் ஏற்றிக்கொண்டு அவரின் தங்கை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டி இருந்தது. வானுக்குள் ஏறியவுடன் பெரிதாகச் சத்தம். கணவருக்கு விளங்கவில்லை. சைலென்சரில் ஓட்டை விழுந்துவிட்டுதாக்கும் என்று இருவரும் கதைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாச்சு.

அடுத்த நாள் காலை எழுந்தவுடன் எமக்குத் தெரிந்த வாகனத்தைப் பழுது பார்ப்பவரிடம் போன் செய்துவிட்டு வாகனத்தைக் கொண்டுபோய்க் காட்டினால், அவர் வாகனத்தை ஓடிப் பார்த்த்துவிட்டு பின்னர் குனிந்து கீழே பார்த்துவிட்டு எழுந்தார்.

என்னக்கா, அண்ணை சைலென்சரை நடுவால வெட்டி வீட்டில வச்சிட்டு உங்களிட்டை வானைத் தந்துவிட்டவரோ?? என்று கேட்டபோதும் விளங்கவில்லை எனக்கு. அவர் ஒண்டும் செய்யவில்லையே என்று நான் கூற, யாரோ உங்கள் வானின் catletic convertor ஐ நடுவால வெட்டி எடுத்துக் கொண்டு போட்டாங்கள் என்றாரே பார்க்கலாம்.

அதுக்குப் பிறகு என்ன £480 பவுண்ட்ஸ் தண்டப்பணம் செலுத்தி இன்னொண்டு மாத்தினதுதான்.

பிறகுதான் கூறினார் வாகனங்களை ஓடும் பக்கமாக பார்க் செய்தால் அவர்கள் வெட்டும் சந்தர்ப்பம் குறைவு என்று. ஆனால் நாம் எமது CCTV ஐ ஓடவிட்டுப் பார்த்தால் ஒரு சிவப்பு நிறக் கார் வந்து நிற்பது தெரிகிறது.கதவைத் திறந்துகொண்டு இருபக்கமும் இருவர் இறங்குகின்றனர். முன்பக்கம் வருபவன் கையில் ஒரு இலக்கத் தகட்டுடன் வந்து காரின் இலக்கத் தகட்டுக்குமேல் கொளுவுகிறான். பின்னர் இருவரும் கையில் யக்கைக் கொண்டு சென்று எமது வானை உயர்த்துகின்றனர். மற்றவன் குறடு போன்ற இன்னொரு பொருளால் எதோ செய்கிறான். திரும்ப எங்கள் வானில் வெட்டிய துண்டை செத்த கோழியைத் தூக்குவதுபோல் தூக்கிக்கொண்டு காருக்குள் வந்து ஏறுகின்றனர்.

சொன்னால் நம்பமாட்டீர்கள். இவ்வளவும் நடந்தது 52 செக்கன்களில்.

நாம் அதை பிரதி பண்ணி குச்சியைக் காவல்த்துறையிடம் கொடுத்தோம். இதுவரை அவர்களைக் கண்டுபிடிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உண்மையாக்கும் எண்டு பயந்து போனன்!

பிறகு தான் கவனிச்சன், கதை கதையாம் பகுதியில் சுமே பதிஞ்சிருக்கிறா எண்டு! :o

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது உண்மையே அண்மித்தநாட்களில் லண்டன் புறநகர்ப்பகுதியில் தீவிரமா வேலை நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

கார் ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் தரிப்பு செய்தால் ஒன்ராரியோவில் தண்டம் அறவிடுவார்கள். கொஞ்சநாள் போக லண்டனில் எஞ்சினையே தூக்கிக்கொண்டு போயிடுவாங்கள்போலை.. :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த catletic convertor என்ற எரிபொருள் எரியும் போது தோன்றும் மாசு வாயுக்களை குறைந்த மாசற்ற வாயுக்களாக மாற்றும் பொறியில்.. பிளாட்டினம்.. ஒரு இரசாயன ஊக்கியாக பாவிக்கப்படுகிறது. பிளாட்டினம்.. விலை கூடிய மற்றும் அரிதான உலோகமாகும். அதனால் தான் இதனை திருடுகிறார்கள்.

இது குறித்து பல எச்சரிக்கைகள் அண்மைய நாட்களில் பிபிசியிலும் வந்திருந்தது.

Catalytic converter thefts double in three years.

6 November 2013 Last updated at 07:31 GMT

Thefts of catalytic converters from motor vehicles have more than doubled over the past three years, a BBC investigation has found.

http://www.bbc.co.uk/news/uk-24831619

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் உந்தச் சேட்டைஎல்லாம் கிடையாது, தேவையென்றால் காரைக் கொண்டுபோய் தேவையானதைக் கழட்டிப்போட்டு எரிச்சுட்டுப் போவாங்கள்...! :blink:

வேற்று இன நன்பன் சில நாட்களுக்கு முன் சொன்னது..
 
தான் காரால் குழந்தையை தூக்கி வரும் போது கையில் இருந்த தன் பையை வெளி வாசலுக்குப் பக்கத்தில் காருக்கு அருகில் வைத்து விட்டு வந்து  குழந்தையை வீட்டில் விட்ட பின் போய்ப் பார்த்த பொழுது பையைக் காண வில்லையாம்.
 
அவன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் கப்பலில் வந்த தமிழர்கள் பலர் ஒரு வீட்டில் இருக்கிறார்கள்.  :wub:
 
அவன் சொன்னது  we have some dishonest ppl  in our neighborhood !
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் உண்மையாக்கும் எண்டு பயந்து போனன்!

பிறகு தான் கவனிச்சன், கதை கதையாம் பகுதியில் சுமே பதிஞ்சிருக்கிறா எண்டு! :o

பொய் இல்லைப் புங்கை. உண்மைதான். எதில் பதிவது என்று தெரியாமல்தான் இதில் பதிந்துள்ளேன்.

கார் ஓடும் திசைக்கு எதிர்த்திசையில் தரிப்பு செய்தால் ஒன்ராரியோவில் தண்டம் அறவிடுவார்கள். கொஞ்சநாள் போக லண்டனில் எஞ்சினையே தூக்கிக்கொண்டு போயிடுவாங்கள்போலை.. :blink::D

அவங்கள் இஞ்சினை எல்லாம் விசர்த்தனமாக் கழட்டிக்கொண்டு போகமாட்டாங்கள். காரைத்தான் அப்பிடியே கொண்டு போவாங்கள். அவ்வளவு திறமான சட்டம் இங்க. 

வேற்று இன நன்பன் சில நாட்களுக்கு முன் சொன்னது..
 
தான் காரால் குழந்தையை தூக்கி வரும் போது கையில் இருந்த தன் பையை வெளி வாசலுக்குப் பக்கத்தில் காருக்கு அருகில் வைத்து விட்டு வந்து  குழந்தையை வீட்டில் விட்ட பின் போய்ப் பார்த்த பொழுது பையைக் காண வில்லையாம்.
 
அவன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் கப்பலில் வந்த தமிழர்கள் பலர் ஒரு வீட்டில் இருக்கிறார்கள்.  :wub:
 
அவன் சொன்னது  we have some dishonest ppl  in our neighborhood !

நான் நினைக்க வில்லை தமிழ் அஆட்கள் எடுத்திருப்பினம் என்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிராம் இலகு பிளாட்னம் அதாவது மாத்துக் குறைந்தது அதனது தர அலகு 850 ஆக இருந்தால் கள்ளன் கையில் கொடுத்தாலும் கயாலாங்கடையில கொடுத்தாலும் அதிகபட்சம் 18 பவுண்டுகள் பெற்றுக்கொள்ளலாம் அதுவே தர அலகு 999 ஆகவிருந்தால் 21.50 பவுண்டுகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஜேர்மனியில் தை மாதத்துக்குப் பின்பு சில கார்களுக்கு கற்லற்ரிக் கொண்வேர்டர் சந்தையில் புதிதாகவந்த நவீன மடல் பொருத்தாவிட்டால் தெருவில இறக்கமுடியாது. சிலவேளை லண்டன் தெருக்களில் புடுங்கிக்கொண்டுபோய் அங்கு சந்தைப்படுத்துகிறார்களோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது உண்மையே அண்மித்தநாட்களில் லண்டன் புறநகர்ப்பகுதியில் தீவிரமா வேலை நடக்கு

croydon இல் மட்டும் ஒரு மாதத்துள் எமக்குத் தெரிந்த எழு தமிழர்களின் வாகனங்களில் வெட்டப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியல் ,நானும் ஒருக்கா குனிஞ்சு பாக்கோனும்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப வேண்டாம், சத்தம் கேட்டாப்போலை குனிஞ்சு பாருங்க போதும். என்ன வெட்டி எடுத்திருந்தான்னா ரண்டு ஓட்டை தெரியும்.

பொய் இல்லைப் புங்கை. உண்மைதான். எதில் பதிவது என்று தெரியாமல்தான் இதில் பதிந்துள்ளேன்.

சுமே, சமூகச் சாளரம் பக்கம் நகர்த்தியுள்ளேன்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

croydon இல் மட்டும் ஒரு மாதத்துள் எமக்குத் தெரிந்த எழு தமிழர்களின் வாகனங்களில் வெட்டப்பட்டுள்ளது.

pfeile00077.gifஎதுக்கும் சிங்கன் மேலையும் ஒருகண் இருக்கட்டும் :lol: pfeile00077.gif
 
அடப்பாவியல் ,நானும் ஒருக்கா குனிஞ்சு பாக்கோனும்

ஒரு கிராம் இலகு பிளாட்னம் அதாவது மாத்துக் குறைந்தது அதனது தர அலகு 850 ஆக இருந்தால் கள்ளன் கையில் கொடுத்தாலும் கயாலாங்கடையில கொடுத்தாலும் அதிகபட்சம் 18 பவுண்டுகள் பெற்றுக்கொள்ளலாம் அதுவே தர அலகு 999 ஆகவிருந்தால் 21.50 பவுண்டுகள் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஜேர்மனியில் தை மாதத்துக்குப் பின்பு சில கார்களுக்கு கற்லற்ரிக் கொண்வேர்டர் சந்தையில் புதிதாகவந்த நவீன மடல் பொருத்தாவிட்டால் தெருவில இறக்கமுடியாது. சிலவேளை லண்டன் தெருக்களில் புடுங்கிக்கொண்டுபோய் அங்கு சந்தைப்படுத்துகிறார்களோ தெரியாது.

ஜேர்மன்காரர் பழைய பொருட்கள் வாங்கமாட்டார்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஒருத்தர் புது BMW வாங்கியிருந்தாராம்.. ஒருநாள் காலையில் பார்த்தால் கார் மரப்பலகைகளுக்கு மேலே நின்றதாம்.. :rolleyes: பார்த்தால் நாலு சில்லுகளையும் காணவில்லையாம்.. :lol:

கனடாவில் ஒருத்தர் புது BMW வாங்கியிருந்தாராம்.. ஒருநாள் காலையில் பார்த்தால் கார் மரப்பலகைகளுக்கு மேலே நின்றதாம்.. :rolleyes: பார்த்தால் நாலு சில்லுகளையும் காணவில்லையாம்.. :lol:

நல்ல வேளை சில்லை மட்டும் கொண்டுபோனார்கள் காரை விட்டது பெரியவிடயம். :wub: எனது வேலையிடத்து நண்பி இரவு தனது வீட்டிற்கு முன்னால் நிறுத்திய வாகனத்தை காலையில் காணல :o அதே போல் எனது தெரிந்த ஒருவர் கடைகளுக்கு சொந்தமாக வாகனதரிப்பிடத்தில் காரை நிறுத்திவிட்டு சிலபொருட்கள் கடையில் வாங்கிவிட்டு வெளியில் வந்தால் வானத்தை காணுமாம் ...இப்படி பல கதைகள் நடக்குது. இப்படியான விடயங்களுக்கு எப்படி கவனமாக இருப்பது என்று தெரியல :blink:

நீங்கள் வேற வீட்டுக்கு முன்னாலா நிப்பாட்டி இருந்த காரையே தூக்கிட்டு போயிருக்கிறாங்கள் :lol:
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியல் ,நானும் ஒருக்கா குனிஞ்சு பாக்கோனும்

வண்டி விடுமோ குனிய...?  :D

  • கருத்துக்கள உறவுகள்

வண்டி விடுமோ குனிய...? :D

அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு முகம்பாக்கிற கண்ணாடிய கீழ வைக்கவேண்டியது தான்

அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு முகம்பாக்கிற கண்ணாடிய கீழ வைக்கவேண்டியது தான்

அப்ப இனி முகம் பார்க்கிற கண்ணாடியோடு தான் நீர் எல்லா இடமும் போகவேண்டும்
  • கருத்துக்கள உறவுகள்

croydon இல் மட்டும் ஒரு மாதத்துள் எமக்குத் தெரிந்த எழு தமிழர்களின் வாகனங்களில் வெட்டப்பட்டுள்ளது.

வீடு புகுந்து நகைகளைத்தான் திருடுகின்றார்கள் என்றுதான் கேள்விப்பட்டேன். இப்ப உலோகங்களையும் வாகனங்களில் இருந்து வெட்டி எடுக்கின்றார்களா! லண்டன் பக்கம் வந்தால் அவதானமாகத்தான் இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வீடு புகுந்து நகைகளைத்தான் திருடுகின்றார்கள் என்றுதான் கேள்விப்பட்டேன். இப்ப உலோகங்களையும் வாகனங்களில் இருந்து வெட்டி எடுக்கின்றார்களா! லண்டன் பக்கம் வந்தால் அவதானமாகத்தான் இருக்கவேண்டும்.

சுமே

இவர் கொஞ்சம் வில்லங்கமாக  பேசுகின்றார்

ஒரு கண் இவர் மேல் இருக்கட்டும்.. :lol:  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவியல் ,நானும் ஒருக்கா குனிஞ்சு பாக்கோனும்

வடிவாப் பாருங்கோ உங்கட வானை

சுமே, சமூகச் சாளரம் பக்கம் நகர்த்தியுள்ளேன்...

நன்றி நிழலி

சுமே

இவர் கொஞ்சம் வில்லங்கமாக  பேசுகின்றார்

ஒரு கண் இவர் மேல் இருக்கட்டும்.. :lol:  :D  :D

நான் வீட்டில நகைகள் வைப்பதில்லை. அதனால் ஆர் வந்தாலும் பயமில்லை. :D :D

வருகை தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.