Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் கே எஸ் .பாலசந்திரன் காலமானார் .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!!!!மறக்க முடியாத ஈழத்துக் கலைஞர்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல வார்த்தைகள் இல்லை...!

 

ஆழ்ந்த இரங்கல்கள் ...!

  • கருத்துக்கள உறவுகள்

திங்க்கிழமை தலைமுடி வெட்டப்போயிருந்தேன்

ஐபிசி  வானொலியில்

அந்த நேரம் நடக்கவிருந்த  நேரடித்தொலைபேசி  நிகழ்ச்சிக்கு

தொலைத்தொடர்பில் நெருக்கடி ஏற்பட்டதால்

இவரது அண்ணை ரைற்றை  போட்டார்கள்

ரசித்து சிரித்துக்கொண்டிருந்தேன்

சலூன்காறர் சொன்னார்

தனக்கு கேட்டு கேட்டு அலுத்துவிட்டதாக...

 

அதற்கு நான் சொன்னது

நானும் பலமுறை கேடடது தான்

 

ஆனால் ஒருவர்

ஒரு பயணத்தில் நடக்கக்கூடிய  அத்தனை  விடயங்களையும்

ஒவ்வொன்றாக

நுணுக்கமாக  கவனித்து

அவற்றை

ரசிக்கும்படியும்

அவர்  சொல்லும் ஒவ்வொரு காட்சியும்

எம் மனக்கண்முன்னே காட்சியாக விரியும் தந்திரம்  போற்றத்தக்கது

அதனால்தான் இத்தனை  வருடங்கள் சென்றும்அது நிலைக்கிறது என்றேன்.

 

அற்புதமான கலைஞர்

தமிழரின் சொத்துக்களில் ஒருவர்

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
KS-Balasanthiran-200-seithy.jpg

எஸ். பாலச்சந்திரன் இன்று (26) கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார். 10 ஜூலை 1944 கரவெட்டியில் பிறந்த இவர் பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், உள்நாட்டு இறைவரித்திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்தவர். இலங்கை வானொலி நடிகர்களில் ஒருவர். ஏறக்குறைய 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்ததோடு, தணியாத தாகம் என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமுஎன்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களானநிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

  

1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய “புரோக்கர் பொன்னம்பலம்” என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்)ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

இலங்கை வானொலிக்காக ஏராளமான நகைச்சுவை நாடகங்களையும், தனி நாடகங்களையும், தொடர் நாடகங்களையும் எழுதியவர். தொடர் நாடகங்களில் கிராமத்துக் கனவுகள் இவரது பிறந்த இடமான கரவெட்டியை பின்னணியாக கொண்டிருப்பதும், வாத்தியார் வீட்டில் இவர் வாழ்ந்த இடமான இணுவிலை பின்னணியாகக் கொண்டிருப்பதும் தனிச்சிறப்பாகும்.

எமது வானொலியில் “மனமே மனமே” என்ற தொடர் நாடகத்தை எழுதி, இயக்கி தயாரித்து வழங்கியிருக்கிறார். கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய்,காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.

தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிரிகதை’களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் ‘ஒரு பேப்பர்’ என்ற பத்திரிகையில் ‘கடந்தது..நடந்தது’ எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் “தாய் வீடு” பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், “தமிழ் ரைம்” சஞ்சிகையில் “என் கலைவாழ்வில்” என்ற அனுபவத்தொடரையும் எழுதியவர். அண்மையில் தாய்வீடு பத்திரிகையில் , “வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை” என்ற தொடரையும், “தூறல்” என்ற காலாண்டு சஞ்சிகையில் “என் மனவானில்” என்ற தொடரையும் எழுதி வந்தார்.

இலங்கையில் ரூபவாகினிக்காகவும், கனடாவிலுள்ள தொலைக்காட்சிக்காகவும் இவர் எழுதிய பல தொலைக்காட்சி நாடகங்களில் திருப்பங்கள் குறிப்பிடத்தக்கது. 2003ல் இவர் ஒளிபரப்பிய ‘Wonderful Y.T.Lingam Show’ இவரது படைப்பே எம்மிடையே முதலாவது TV Show நிகழ்ச்சி யாகும்.. “நாதன், நீதன்,நேதன்” என்ற நகைச்சுவைதொடரை 2007 இலிருந்து 6 மாதங்களாக எழுதி, நெறிப்படுத்தி ஒளிபரப்புச் செய்தார்.

கனவுகளும் தீவுகளும், தலைமுறைகள், குரங்கு கைத்தலையணைப் பஞ்சுகளாய், காரோட்டம், கலாட்டாக்காரர்கள் முதலான 20க்கு மேற்பட்ட மேடை நாடகங்களை எழுதி, இயக்கி, மேடையேற்றியுள்ளார்.

தினகரன், வீரகேசரி முதலான பத்திரிகைகளில் ‘மலர் மணாளன்’ என்ற புனைபெயரில் சிறுகதைகள் எழுதியதோடு, சிரித்திரன் இதழில் பல ‘சிரிகதை’களை எழுதியுள்ளார். தினகரன், ஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளில் திரைப்படம், விளையாட்டுத் துறை தொடர்பான பல கட்டுரைகளையும் எழுதினார். ஐரோப்பாவில் வெளிவரும் ‘ஒரு பேப்பர்’ என்ற பத்திரிகையில் ‘கடந்தது..நடந்தது’ எனும் நகைச்சுவை கட்டுரைத் தொடரையும், கனடாவில் “தாய் வீடு” பத்திரிகையில் வாழ்வியல் சம்பந்தமான கட்டுரைத் தொடரையும், “தமிழ் ரைம்” சஞ்சிகையில் “என் கலைவாழ்வில்” என்ற அனுபவத்தொடரையும் எழுதியவ்ர். த்ற்போது தாய்வீடு பத்திரிகையில் , “வாத்தியார் வீட்டிலிருந்து வான்கூவர் வரை” என்ற தொடரை எழுதி வருகிறார்.

இலங்கையில் வாடைக்காற்று, Blendings (ஆங்கிலம்) ஆகிய திரைப்படங்களின் உதவி இயக்குனராகவும் கனடாவில் எங்கோ தொலைவில், மென்மையான வைரங்கள் ஆகிய திரைப்படங்களின் இயக்குனராகவும் செயற்பட்டவர். இவர் தாகம், வாழ்வு எனும் வட்டம் (சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்றது), உனக்கு ஒரு நீதி (சிறந்த இசைக்கான விருது பெற்றது) ஆகிய குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

1992ம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற அவுஸ்திரேலியா-இலங்கை டெஸ்ட் துடுப்பாட்டப் போட்டித் தொடரிலும், அதே ஆண்டில் நியூசிலாந்து-இலங்கை அணிகளின் டெஸ்ட் ஆட்டத் தொடரிலும் வானொலி நேர்முக வர்ணனையளராக பங்காற்றியவர். 1991ல் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய கூட்டமைப்பின் விளையாட்டு போட்டிகளின் போது, கூடைப் பந்தாட்டத்தின் வானொலி நேர்முக வர்ணனையாளராக பணியாற்றியவர்.

இலங்கை வானொலியில், ‘கலைக்கோலம்’ சஞ்சிகை நிகழ்ச்சியையும், ‘விவேகச் சக்கரம்’ என்ற பொதுஅறிவுப் போட்டி நிகழ்ச்சியையும் தயாரித்து வழங்கியிருக்கிறார்.

1973ல் இலங்கை வானொலி நிலையத்தில் ரசிகர்கள் முன் ஒலிப்பதிவாகி, 1974ல் யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மகாநாட்டில் அரங்கேறி, 33 ஆண்டுகளாக உலகின் பல நகரங்களில் மேடையேறிய ‘அண்ணை றைற்’ இவரது புகழ்பெற்ற தனிநடிப்பு நிகழ்ச்சியாகும்.

அண்ணை றைற், ஓடலி இராசையா, தியேட்டரில் உள்ளிட்ட தனி நடிப்பு நிகழ்ச்சிகள் இறுவட்டாக வெளிவந்துள்ளன. இவர் கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நூல்), (புதினம், 2009, வடலி வெளியீடு), நேற்றுப் போல இருக்கிறது, (கட்டுரைத் தொகுப்பு, 2011,கனகா பதிப்பக வெளியீடு) ஆகிய நூல்களை வெளியிட்டார்.

கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற புதின நூலுக்கு 2009ம் அண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருது கிடைத்தது. அவர் எழுதிய “நேற்றுப் போல இருக்கிறது” என்ற கட்டுரைத் தொகுப்பு இலங்கை சாகித்ய விருதுக்காக சிறந்த நூலாக நானாவித பிரிவில் தேர்ந்தெடுக்கபட்டது. “ நேற்றுப் போல இருக்கிறது” என்ற கட்டுரைத் தொகுப்பு 2011ல் இலங்கை இலக்கியப் பேரவை – யாழ் இலக்கியவட்டம் வழங்கிய சிறந்த நூலுக்கான (நானாவிதப்பிரிவு) விருதையும் பெற்றது.

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104530&category=TamilNews&language=tamil

சிறந்த ஈழத்து கலைஞனும் யாழ் கள உறவுமாகிய கே.எஸ்.பாலச்சந்திரன் அண்ணாவுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவரது இழப்பால் துயருற்று இருக்கும் அவர் குடும்பத்தினரதும் உறவுகளினதும் துக்கத்தில் மானசீகமாக பங்கு கொள்கின்றோம்.

ஆழ்ந்த  அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கீழேயுள்ள புகைப்படம் வாடைக்காற்று திரைபடத்தில் கே.எஸ் பாலசந்திரன் அவர்கள் . 

70 களில் அந்த காலம் வானொலியில் புகழ் பெற்று நடைபெற்று கொண்டிருந்த வரணியூரானின் புழுகர் பொன்னையா என்ற நாடகத்தையும் பிரபல வானொலி அறிவிப்பாளர்கள் மற்றும் கலைஞர்களை கொண்டு வந்து வடமராட்சி பகுதியில் பெரியொதரு நிகழ்ச்சி கொண்டு வந்து நிகழ்த்தினார் .அது நடைபெற்றது கரவெட்டி அத்துளு அம்மன் கோவில் அல்லது கரவெட்டி கிழவிதோட்டம் பிள்ளையார் கோவிலாக இருக்க வேண்டும் ...இந்த நிகழ்ச்சிக்கு முன் பிரபலங்கள் அடங்கிய ஸ்டார் நைற் மாதிரியான நிகழ்ச்சிகள் அப்பகுதியில் நடைபெற்றதாக எனது நினைவில் இல்லை. சினிமா நடிகர்களுக்கு திருளும் ஒரு வெறித்தனமான கூட்டம் போல வானொலி கலைஞர்கள்களுக்கும் இருந்தது . முண்டி அடித்த பார்த்த கலைஞரில் ஒருவரான கே.எஸ் பாலசந்திரன் அவர்களை. சில காலங்களில் தினமும் சென்று வரும் பாதையில் ஒரு வெஸ்பா கூட்டரில் காணக்கூடியவராக இருந்தார். 

எனது வலைபதிவில் தமிழா நீ பேசுவது தமிழா என்ற தலைப்பில் சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருந்தேன் . பிராந்திய மொழி உச்சரிப்பு தொடர்பாக தமிழ்நாட்டு சகோதர வலை பதிவர் ஒருவரோடு ஏற்பட்ட ச ச்சரவின்பொழுது அந்த பதிவை போட்டிருந்தேன் .அந்த பதிவில் பாலசந்திரன் அவர்கள் பின்னூட்டம் அளித்த மாத்திரமில்லாமல் . தெனாலியில் வரும் திரைபடத்தில் வரும் ''இஞ்சருங்கோ'' என்ற சொல்லாடல் இலங்கை தமிழரால் பாவிக்கப் படுவதில்லை ..பாலசந்திரன் அவர்களால் வலிந்து புகுத்தப்பட்ட ஒன்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள் என்று எழுதியிருந்தார் . 

யாழ் பிராந்திய வழக்கு மொழியில் வடமராட்சி மற்றும் தீவு பகுதியினர் தனக்கே உரிய பல சொல்லாடல்களை வைத்திருக்கிறார்கள் .அதை வானொலி நாடகங்ளில் பல நாடகங்ளில் வெளிபடுத்தி இருந்தார். அது போல இஞ்சரூங்கோ ஒன்று போல நினைத்திருந்தேன். பொதுவாக எல்லோரும் பாவிக்கு சொல் இன்றும் பழை தலைமுறையினரிடம் எல்லா இடங்களில் இருக்கிறது என்று பல வலை பதிவர்கள் அந்நேரம் அப்பதிவுக்கு பின்னூட்டம் இட்டிருந்தனர்....

இன்று அவர்பற்றிய துயர செய்தி அறிந்தேன்  .இந்த சின்னக்குட்டியின் அஞ்சலிகள்

 

1780642_711362248903590_2075565399_n.jpg

ஈழத்தின் மாபெரும் கலைஞ்சருக்கு அஞ்சலி .அவரது பிரிவால் துயருறும் அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

ஆழ்ந்த அனுதாபங்கள்! அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல கலைஞர் எனது அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் நடிப்பு துறையில் தனி இடம் பிடித்த கே எஸ் பாலச்சந்திரன் அவர்களை இழந்துவிட்டோம் என்ற செய்தி கவலை கொள்ள செய்கிறது.இன்றும் அவரின் படைப்புகள் பேசப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன. அண்ணை ரைட்டிலிருந்து வைத்திய லிங்கம் வரையும் பல நூல்கள் வாயிலாகவும் அவர் எம்மோடு வாழ்ந்துகொண்டேயிருப்பார்.அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருடன் நானும் இணைகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். இவரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளை ஜி ரி வில் தீபம் ரீவியில் பார்த்திருக்கிறேன். :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பன்முக ஆற்றல் கொண்ட கலைஞனின் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம்... அறிந்த,
 

யாழ்கள உறவுகளில், பாலச்சந்திரன் அண்ணாவினது இறப்பு, இரண்டாவது என... நினைக்கின்றேன்.
 

மீண்டும்... உங்களை, நினைவு, கூர்கின்றேன்... வைத்தி லிங்க‌ம் அண்ணை.

 

"வ‌ண‌க்க‌ம்... வண‌க்க‌ம்...., மீண்டும் எல்லோருக்கும்........"
 

என்ற‌, உங்க‌ள் குர‌ல்... என் காதில், என்றும் ஒலித்துக் கொண்டே.. இருக்கும்.
 

சென்று வாருங்க‌ள்... அண்ணா.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அமரர் உயர்திரு கே. எஸ். பாலசந்திரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி ஈழத்தமிழர்கட்கு ஓர் பேரிழப்பாகும்: - CTC 

[saturday, 2014-03-01 21:29:14]
CTC%20logo%20seithycom.jpg

அமரர் உயர்திரு கே. எஸ். பாலசந்திரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி ஈழத்தமிழர்கட்கு ஓர் பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பு ஈடுசெய்ய முடியாததாகும். இவர் நாற்பது ஆண்டுகட்கும் மேலாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் முதல் கனடிய ஊடகங்களிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியதின் மூலம் நம் மக்களின் மனங்களில் நீங்காத இடத்தைப்பிடித்துள்ளார்.

  

ஈழத்தில் கரவெட்டியில் 1944 ஜூலை 10ல் பிறந்த இவர் தனது 69வது வயதில் நம்மை விட்டுப்பிரிந்தாலும் அவர் விட்டுச்சென்ற அவரது ஆக்கங்கள் நம்மை விட்டகலாது அவரது இருப்பை எம் தமிழுலகிற்கு உணர்த்திக்கொண்டேயிருக்கும். இவர் பல ஆளுமைகளை தன்னகத்தேகொண்ட பன்முக கலைஞராவார்.

நடிகர், எழுத்தாளர், ஒலிபரப்பாளர், கதாசிரியர், தயாரிப்பாளர் என பலநிலைகளில் தன்னை வெளிப்படுத்திய ஓர் திறமைசாலியாவார். இலங்கை வானொலியில் தணியாத தாகம் நிகழ்ச்சியின் மூலம் 'சோமு' வாக முதலில் பிரபல்லியமானார். பல வானொலி நாடகங்களான 'கிராமத்து கனவுகள்', 'விழுதுகள்', 'கதம்பம்', ' வாத்தியார் வீட்டில்', 'மத்தாப்பு', 'குதூகலம்'...போன்றவைகள் மறக்கமுடியாதவைகள்...'அண்ணை றைற்'..இன்றும் மனதை விட்டு நீங்காதவை. இவரது 'கரையைத்தேடும் கட்டுமரங்கள்' எனும் நாவல் அமுதன் அடிகளின் இலக்கிய விருது பெற்ற சிறந்த நாவலாகும். இலங்கையில் மட்டுமன்றி கனடாவிலும் இவரது வானொலி தொலைக்காட்சி நிகழ்சிகள் பல சாதனைகளை படைத்துள்ளன.

இந்த வேளையிலே அன்னாரை பிரிந்து வேதனையுறும் அவரதுகுடும்பத்தினருக்கு கனடிய தமிழர் பேரவையும் தங்கள் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றது.

கனடிய தமிழர் பேரவை

 

http://www.seithy.com/breifNews.php?newsID=104713&category=TamilNews&language=tamil

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நன்றாகத் தெரிந்த பழகிய திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்

இவர் யாழ்கள உறுப்பினர். ஈழத்தில் சிறந்த நாடகக்கலைஞர்.

கரவெட்டியில் பிறந்து இணுவிலில் வசித்தவர். வாடைக்காற்று என்ற வெற்றிப்படத்தில் நடித்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=3MeJs4ZoSFY

  • 1 year later...
On 2/26/2014 at 6:42 PM, arjun said:

1543156748_1e434014a2.jpg

 

கலைஞர், யாழ் கள உறவு கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களிற்கு ஆழ்ந்த அஞ்சலிகளும், இரண்டாம் ஆண்டு நினைவுகூறலும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.