Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியின் சுயரூபம் தெரியுமா?; கிழக்கில் துண்டுபிரசுரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
00(23).jpg
ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

வடமாகாண சபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் அனந்தி சசிதரனின் சுயரூபம் உங்களுக்கு தெரியுமா? என்ற தலைப்பில் கிழக்கில் சில இடங்களில் துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வட தமிழ் அமைப்பினரால் உரிமை கோரப்பட்டுள்ள அந்த துண்டுபிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திருகோணமலை மாவட்ட எல்.ரீ.ரீ.ஈ அரசியற்துறைப் பொறுப்பாளர் எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனின் மனைவிதான் அனந்தி. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றிய இவர் தற்போது அரசியலுக்குள் புகுந்து குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக புலிகள் வலையப்பின் திட்டத்திற்கு அமைவாக செயற்படுவதை நீங்கள் அறிவீர்களா ? 

இவர் வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்புக்கள், சில புலம்பெயர் தமிழ்க் குழுக்கள், மீண்டும் புலிகள் தலையெடுப்பதற்கு உதவும் அமைப்புக்கள், மற்றும் மறைந்து வாழும் புலித் தலைவர்களின் உதவியோடு கூட்டமைப்பு சார்பாக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றதை நீங்கள் அறிவீர்களா ?
  
இவர் அரசியல் பலத்தைப் பெற்றவுடன் தமிழ்க் கலாசாரத்திற்கு ஒவ்வாத டெனிம் மற்றும் ரீ சேர்ட் அணிந்து கொண்டு புலிகளின் தேவைக்காக கனடா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுவதை நீங்கள் அறிவீர்களா ?

அங்கு செல்லும் போதெல்லாம் அவர் புலிகள் அமைப்பைச் சந்தித்துள்ளார். இவ்வமைப்புக்களுக்கு முறையான தலைமைத்துவம் இல்லையென்பதினால் தனது ஆதரவுடன் மறுபடியும் புலிகளின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேச அரங்கில் கொண்டு செல்ல முயற்சிக்கின்றார்.

இந்த நோக்கத்திற்காக சட்டவிரோதமாகவும் மற்றும் கப்பம் மூலமும் புலிகளினால் சேர்க்கப்பட்டு இன்று வரை பகிரங்கப்படுத்தப் படாமல் இருக்கும் பணம் அனந்திக்குக் கொடுக்கப்படுகின்றது.

அனந்தி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தலைமை லிகிதராகக் கடமையாற்றியபோது இவர் புலிகளின் உள்ளகப் புலனாய்வுப் பிரிவுக்கு அங்குள்ள அரச அலுவலர்கள் பற்றிய தகவல்களை வழங்கியது உங்களுக்குத் தெரியுமா? 

இறுதி யுத்ததத்தின் போது இரட்டை வாய்க்காலில் நின்ற பொதுமக்களிடம் இராணுவப் பாதுகாப்புப் பிரதேசத்திற்கு அனுப்புவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்ட இவருடைய கணவர் அப்பணத்தை அனந்திக்குக் கொடுத்து அனந்தி உட்பட பிள்ளைகள் மூவருடன் மேலும் ஆறு பேரைச் சேர்த்து டொல்பின் வானில் ஏற்றி ராணுவத்திட்ம் சரணடைவதற்காக அனுப்பி வைத்ததை நீங்கள் அறிவீர்களா ?

புலிகள் அமைப்பில் சிறுவர்களை கட்டாயமாகப் போரில் சேர்த்துக் கொள்ளும் பகுதிக்குப் பொறுப்பாக அனந்தியின் கணவர் எழிலன் இருந்தார்.

வலைஞர் மடம் செபமாலை மாதா ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த 300 இற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியரைக் கடத்திச் சென்றது இவரது கணவர் எழிலன்தானே !! 

அவ்வேளை செல்ல மறுத்த சிறுவர்கள் 4 பேரை அவ்விடத்திலேயே துடிதுடிக்க சுட்டுக் கொன்றது அனந்திக்கு நன்றாகத் தெரியும். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட சிறுவர் சிறுமியர் இன்று எங்கே உள்ளனர் ? இதற்கு சர்வதேச விசாரணை தேவையில்லையா ? 

தனது குழந்தைகளுக்குத் தேவையான பாலுணவைப் பெற்றுக் கொள்ள இராணுவப் பாதுகாப்பு வலயத்திற்குச் செல்ல அனுமதி கேட்ட இரு குழந்தைகளின் தாயை குழந்தைகளின் கண்முன்னாலேயே தனது பிஸ்டலினால் தாயின் தலையில் சுட்டதை நீங்கள் அறிவீர்களா? 
எனவே தனது கணவரின் குரூர செயற்பாடுகளைப் பற்றி அனந்தி அறிந்திருக்கவில்லையா ?

வடக்கில் வாழும் பெற்றோர்களிடம் புலிகளினால் கடத்தப்பட்ட சிறுவர்களின் கதி குறித்து அனந்தி எப்போதாவது பேசியதுண்டா ? கடத்தப்பட்ட கணவர்மார் பற்றி அவர்களது மனைவியரிடம் அனந்தி பேசியதுண்டா? இதற்கும் ஒரு சர்வதேச விசாரணை தேவையென்று அனந்தி ஏன் கோரவில்லை.? இவர் உண்மையில் தமிழ் சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றாரா என்று யோசித்துப் பாருங்கள் என்றும் அந்த துண்டுபிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
புரளி கிழப்பியவரே செய்தியும் போட்டது போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அரசியல் பலத்தைப் பெற்றவுடன் தமிழ்க் கலாசாரத்திற்கு ஒவ்வாத டெனிம் மற்றும் ரீ சேர்ட் அணிந்து கொண்டு புலிகளின் தேவைக்காக கனடா, ஜேர்மன், டென்மார்க், நோர்வே மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுவதை நீங்கள் அறிவீர்களா ?

குளிர் நாடுகளுக்கு சீலையை கட்டிக்கொண்டு போகவேண்டுமா? எழுதியவர் வேட்டியுடன் வரத் தயாரா? :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் உண்மையா? அப்படியானால் சர்வதேச விசாரணை வரும்போது சாட்சியங்களை ஒழுங்குபடுத்தி எல்லாவற்றையும் சொல்லலாம்தானே! எதற்கு அனாமதேயத் தண்டுப்பிரசுரம் வெளியிட்டு நேரத்தையும் பணத்தையும் வீணடிக்க வேண்டும்.

அவர்களுக்கு விசாரணைதான் வேண்டுமென்றால்

இலங்கையில் நடந்த அத்தனையையும் எழுதியிருக்கலாம்

இது

ஒருவகைப்பைத்தியம்

தெளியவைக்க தடி வேண்டும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் நாடுகளுக்கு சீலையை கட்டிக்கொண்டு போகவேண்டுமா? எழுதியவர் வேட்டியுடன் வரத் தயார

அவர் பர்தா போட்டு மூக்கையும் முகத்தையும் மறைத்துக் கொண்டு பேய்மாதிரிப் போயிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் போலத் தெரிகிறது.  அப்பு அதற்கு நீங்கள் உங்கள் பெண்களைப் பாருங்கள்.  தமிழச்சிகளை நாங்கள் மூடிவைப்பதில்லை.  எங்களிடம் அந்தளவு பிற்போக்குத்தனமும் சந்தேகமுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் மகளீர் அணியினர் விளையாட்டுப் போட்டிகளின் போது காற்சட்டை அணிந்தனர். அப்படி இருக்கும்போது டெனிம் அணிவதால் என்ன பிரச்சனை... அத்தோடு அனந்தி புலிகள் அமைப்பில் இருக்கவில்லை. அதனால் அவர்களின் அமைப்பில் உள்ளவர்களின் விதிகளுக்கு அமைவாக இருக்க வேண்டியதும் அவசியமில்லை. நாளை அனந்தி ஏன் குப்பி கட்டவில்லை என்றும் புறம்போ** கள் எழுதிக் கொண்டிருப்பார்கள். http://www.tamilnet.com/art.html?artid=9893&catid=13

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் நாடுகளுக்கு சீலையை கட்டிக்கொண்டு போகவேண்டுமா? எழுதியவர் வேட்டியுடன் வரத் தயாரா? :icon_idea: 

நான் இங்கு நடந்த அவரது  சந்திப்பில் அவரைச்சந்தித்தேன்

அந்தக்குளிரிலும்

சாறி   தான் கட்டியிருந்தார்

எனக்கே ஒரு மாதிரி  இருந்தது

பாவம்

இப்படியெல்லாம் இருக்கவேண்டிய  நிர்ப்பந்தத்துக்குள் உள்ளாரோ என்று.

இப்ப  பார்த்தால்

அது  உண்மை என்று தெரியுது.. :(  :(  :(

நாட்டின் ஒரு மூலையில் வந்த சிறிய அனாமதேய துண்டும் பிரசுரத்திற்கு நாட்டின் முக்கிய ஆங்கிலப் பத்திரிகையின் தமிழ்ப் பதிப்பான தமிழ்மிரர் முக்கியத்துவம் வழங்கி பிரசுரிக்கிறதென்றால் அப்பிரசுரத்தை யார் வெளியிட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறதல்லவா.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தியை விடுவம் ஆனால் எழிலனைப் பற்றி சொன்னது உண்மை தானே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆனந்தியை விடுவம் ஆனால் எழிலனைப் பற்றி சொன்னது உண்மை தானே

உண்மைதான் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தியை விடுவம் ஆனால் எழிலனைப் பற்றி சொன்னது உண்மை தானே

எது உண்மை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லது .கதை கேட்டு கதை விடக்கூடாது

ஆனந்தியை விடுவம் ஆனால் எழிலனைப் பற்றி சொன்னது உண்மை தானே

உண்மைதான் நானும் எனது நான்கு நண்பர்களும் வரும்போது எழிலன் வாளால் வெட்டி எமது  மண்டையோடு சிதறியது. நல்லகாலம் நாங்கள் எல்லோரும் எக்ஸ்ரா மண்டையோடு வைத்திருந்த படியால் அதை பொருத்தி ஒரு மாதிரி தப்பி வந்து விட்டோம். எக்ரா மண்டையோடு வைத்திருக்காதவர்கள் தப்ப முடியவில்லை.

ஆனந்திக்கு நாவடக்கம் தேவை ,எழிலன் என்ன செய்தார் என்பதை வன்னி மக்களிடமும் ,திருக்கோணமலை மக்களிடமும் கேட்டால் தெரியும் .சுருக்கமாக சொன்னால் எழிலன் அரசியல் பொறுப்பாளராக இருந்த பொழுது திருமலையில் சொதப்பியதுதான் மிச்சம் .இங்கு சிலர் ஆதாரம் கேட்கின்ற போர்வையில் உங்களுடைய பல்லைக்குத்தி ம --- முயற்சிக்காதீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

40 ஆயிரம் பொதுமக்களைக் கொன்று குவித்த சிங்களக் காட்டேரிகளின் துண்டுப் பிரசுரத்தோடு, அவர்களின் படுகொலை பற்றிக் கேட்க வக்கிலாதவர்கள் வந்துடுவாங்கள்... எழிலன் என்ன சொதப்பினார் எனப் பட்டியல் இடுகின்றீர்களா ஹரி...

சிங்களம் செய்த கொலைகள் இன்று கேள்வியில்லாமல் போவதற்கு ஒரே காரணம் அதற்கு இணையாக புலிகள் செய்த கொலைகள் தான் .

எந்த கோர்ட்டிற்கு சென்றாலும் நீங்கள் திறமோ என்று கேட்கின்றான் . 

பொத்திக்கொண்டு வரவேண்டிக்கிடக்கு .

அர்ஜுன்,

நீங்கள் எவ்வளவோ அனுபவமும் அறிவும் உள்ளவராக இருந்தும் இங்கு பலரும் உங்களை அவமதிக்கும் விதமாக எழுதுவதற்கு உள்ள பல காரணங்களில் ஒன்று உங்களுக்கும் இன்னும் கோபம் தீராமல் இருப்பதாகும். அது மேலுள்ள கருத்திலும் தெரிகிறது. இலங்கையில் சிங்களவர், தமிழர், புலிகள், பிளாட் இப்படி ஆயுதம் தூக்கிய பெரும்பாலனவர்கள் மோசமான கொலைகாரராகவே இருந்திருக்கிறார்கள். இலங்கை வன்முறையால் அழிந்து போகும் ஒரு நாடு. இந்த வன்முறைகள் பற்றி கேள்வி இல்லாமல் போனதுக்கு முக்கிய காரணம் புலிகள் இல்லை. அவர்களால் தான் இன்று அமெரிக்கா கேள்வி கேட்கிறது. இலங்கையை போரால் அழித்து, இராஜபக்ஷவிடம் கொடுத்து, சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வைத்து, அமெரிக்காவை எதிரியாக்கி, இன்று வட கொரியாவின் அளவுக்கு உலகம் ஒதுக்க வைத்தது புலிகள். ஆனால் அதற்கு கொடுத்த விலையும் அழிவும் மிக மோசமானது.

இதை அமெரிக்காவே விரும்பவில்லை. இன்றுவரை புலிகளுக்கு அமெரிக்காவில் தடை இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, இவ்வாறாக அமெரிக்காவை புலிகள் தமது திட்டப்படி இலங்கைக்கு எதிரியாக்கியதாகும். ஆனால் இதுதான் அங்கு உள்ள மக்களுக்கு விடிவுக்கான வழியானால், கொலைகளுக்கு இதுதான் முடிவு தருமானால், அவர்கள் தான் அதற்கு வழி வகுத்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தான் இங்க ஒரு ஜேர்மன் காரனும் துருக்கி காரனும் சோந்து ஒரு கொலைகாரன் மேலை வழக்கு போட்டவை. 

இதை விசாரிச்ச நீதிபதியின் தீர்ப்பு இப்படி இருந்தது:

ஜேர்மன் யூதர்கள் கொன்றது. துருக்கு அர்மேனியர்களை கொன்றது. எனவே நீங்கள் செய்யாத கொலையா சம்மந்தப்பட்டவர் செய்துவிட்டார்? அவரை நிரபராதி என விடுதலை செய்கின்றேன். 

//உன்னை இந்த மாதிரியெல்லாம் பேச சொல்லி யார்ரா சொல்லிக்குடுக்கிறா?// :icon_idea: 

xozjhlsd.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்திக்கு நாவடக்கம் தேவை ,எழிலன் என்ன செய்தார் என்பதை வன்னி மக்களிடமும் ,திருக்கோணமலை மக்களிடமும் கேட்டால் தெரியும் .சுருக்கமாக சொன்னால் எழிலன் அரசியல் பொறுப்பாளராக இருந்த பொழுது திருமலையில் சொதப்பியதுதான் மிச்சம் .இங்கு சிலர் ஆதாரம் கேட்கின்ற போர்வையில் உங்களுடைய பல்லைக்குத்தி ம --- முயற்சிக்காதீர்கள் .

அனந்திக்கு சுமந்திரனின் பின் கதவுவழியாக வருகின்ற கள்ளத்தனமும் ,மற்றவர்கள் போரடிப்பெற்ற அரசியல் வெற்றிகளை தன்னுடைய ராசதந்திரமாக பீத்திக்கொள்ளும் கபடத்தனமும் வேணும்.

சிங்களம் செய்த கொலைகள் இன்று கேள்வியில்லாமல் போவதற்கு ஒரே காரணம் அதற்கு இணையாக புலிகள் செய்த கொலைகள் தான் .

எந்த கோர்ட்டிற்கு சென்றாலும் நீங்கள் திறமோ என்று கேட்கின்றான் .

பொத்திக்கொண்டு வரவேண்டிக்கிடக்கு .

நீங்கள் கட்டாயம் இனி ஆங்கில செய்திகள் வாசிக்க தொடங்கவேண்டும்.

சிங்களவன் கொலைகளில் இருந்து தப்பிவிட்டான் என்றால் ஐ.நாவில் என்னத்திற்கு குத்தி முறிக்கிறான்?

ஏன் டொரோண்டோ வர உங்கள் சக்கரவர்த்தி பயபடுறார்?

அங்கு ஒருத்தனும் நீங்கள் திறமோ என்று கேட்கவில்லை. இல்லாத புலிகளிலும் குற்றம் என்கிறார்கள்.

புலியில்லை இப்ப பிரச்சினை! தங்களுக்கு எல்லாம் தெரிந்தது போல் புலிவாந்தி எடுக்கும் சில அரை குறைகள் தான்.

நீங்களும் வாயால வட்டிலப்பம் சுட்டு ஏதாவது தேற்றுகிறீர்கள் என்று நம்புகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

எது உண்மை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் நல்லது .கதை கேட்டு கதை விடக்கூடாது

ஓ எனக்கு மறந்தே போய் விட்டது நீங்கள் மு.வாய்க்கால் இறுதி வரைக்கும் அங்கே நின்று எல்லாத்தையும் கண்ணால பார்த்திட்டு வந்து எழுதிறீங்கள் இல்லையா? அப்ப நீங்கள் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்

ஒரு விசயத்தில உங்கள பாராட்டோனும் மற்றாக்கள் மாதிரி இயக்கத்தில் இருக்கையில் ஒரு கதை,விட்ட்ப் பிறகு ஒரு கதை என்று கதைக்காமல் உங்கட அரசியல் துறை பிழை செய்தது என்று தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் பாருங்கோ.அங்க தான் நிற்கிறீங்கள் நீங்கள்

அர்ஜுன்,

நீங்கள் எவ்வளவோ அனுபவமும் அறிவும் உள்ளவராக இருந்தும் இங்கு பலரும் உங்களை அவமதிக்கும் விதமாக எழுதுவதற்கு உள்ள பல காரணங்களில் ஒன்று உங்களுக்கும் இன்னும் கோபம் தீராமல் இருப்பதாகும். அது மேலுள்ள கருத்திலும் தெரிகிறது. இலங்கையில் சிங்களவர், தமிழர், புலிகள், பிளாட் இப்படி ஆயுதம் தூக்கிய பெரும்பாலனவர்கள் மோசமான கொலைகாரராகவே இருந்திருக்கிறார்கள். இலங்கை வன்முறையால் அழிந்து போகும் ஒரு நாடு. இந்த வன்முறைகள் பற்றி கேள்வி இல்லாமல் போனதுக்கு முக்கிய காரணம் புலிகள் இல்லை. அவர்களால் தான் இன்று அமெரிக்கா கேள்வி கேட்கிறது. இலங்கையை போரால் அழித்து, இராஜபக்ஷவிடம் கொடுத்து, சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வைத்து, அமெரிக்காவை எதிரியாக்கி, இன்று வட கொரியாவின் அளவுக்கு உலகம் ஒதுக்க வைத்தது புலிகள். ஆனால் அதற்கு கொடுத்த விலையும் அழிவும் மிக மோசமானது.

இதை அமெரிக்காவே விரும்பவில்லை. இன்றுவரை புலிகளுக்கு அமெரிக்காவில் தடை இருப்பதற்கான காரணங்களில் ஒன்று, இவ்வாறாக அமெரிக்காவை புலிகள் தமது திட்டப்படி இலங்கைக்கு எதிரியாக்கியதாகும். ஆனால் இதுதான் அங்கு உள்ள மக்களுக்கு விடிவுக்கான வழியானால், கொலைகளுக்கு இதுதான் முடிவு தருமானால், அவர்கள் தான் அதற்கு வழி வகுத்தவர்கள்.

கிலரிக்கு இன்று செருப்பு எறிந்தார்கள் .கேஜ்ரிவாலுக்கு கன்னத்தில் அறைந்தார்கள் .இதானால் அவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கமுடியாது .ஏறிகின்றவர்கள் யார் என்பதுதான் முக்கியம் .

இவ்வளவு அழிவுகளையும் புலிகள் செய்யது அல்லது இலங்கை அரசை செய்ய வைத்தது அமெரிக்க அரசை எமது பக்கம் திருப்ப என்பது மிக மிக பிற்போக்கான சிந்தனை .

இவ்வளவு அழிவுகளும் நடந்து முடிய இலங்கை அரசு மேற்குலகின் சொல்லை கேட்டிருந்தால் தமிழர்களின் அவ்வளவு இழப்பும் குப்பை கூடைக்குள் போயிருக்கும் .

மேற்குலகின் சொல்லை கேட்க தொடங்கினால் தொடர்ந்து ஆட வேண்டிவரும் என்று இலங்கை அரசு செய்யும் சுயபரிசோதனை தான் இன்று நடக்கும் அரசியல் .இதில் வெற்றி தோல்வியை பொறுத்துத்தான் நாட்டில் இருக்கும் தமிழர்களின் தலைவிதி நிர்ணயிக்கபட போகின்றது .

ராஜபக்சா இப்படிதான் செய்வார் ,முள்ளிவாய்கால் எதிர்பார்த்ததுதான் அல்லது நாமே ஏற்படுத்தினோம் என்று முன்றாம் தர அரசியல் அவர்களை போல் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச விசாரண என வரும் போது புலிகள் அரசு ஆகியோர் விசாரணை செய்யப்படுவார்கள். கிழக்கில் முஸ்லிம் மக்களையும் ,ஆயுதமற்ற காவல்துறையினரையும் கொன்ற தற்போதைய அமைச்சர் கருணா அம்மானும் விசாரிக்கப்பட வேண்டும்.
 
அது சரி எழிலன் எங்குள்ளார்  என்று கண்டு பிடித்து விட்டார்களா விசாரிப்பதற்கு? அனந்தி தேடிப்பார்க்காத இடம் இல்லை என நினைக்கிறேன்.
  • கருத்துக்கள உறவுகள்

ஓ எனக்கு மறந்தே போய் விட்டது நீங்கள் மு.வாய்க்கால் இறுதி வரைக்கும் அங்கே நின்று எல்லாத்தையும் கண்ணால பார்த்திட்டு வந்து எழுதிறீங்கள் இல்லையா? அப்ப நீங்கள் சொன்னால் உண்மையாகத் தான் இருக்கும்

ஒரு விசயத்தில உங்கள பாராட்டோனும் மற்றாக்கள் மாதிரி இயக்கத்தில் இருக்கையில் ஒரு கதை,விட்ட்ப் பிறகு ஒரு கதை என்று கதைக்காமல் உங்கட அரசியல் துறை பிழை செய்தது என்று தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் கதைக்கிறீங்கள் பாருங்கோ.அங்க தான் நிற்கிறீங்கள் நீங்கள்

நன்றி ரதி நிதானமான கருத்துக்கு,இங்கு கருத்து வைக்கும் புலி எதிர்ப்பு வாதிகளும்,விடுப்பு கதை விடுவோரும் புலியையோ,போராட்டத்தையோ நேரடியாக உணர்ந்தவர்கள் கிடையாது.செவிவழிக்கதைகளையும்,இலங்கை அரசிற்கு பிற்பாட்டு பாடும் யோ.கர்ணன் போன்றோரின் கதைகளுக்கும் இன்னும் கொஞ்சம் உப்பு,புளி போட்டு அள்ளிவிடுகின்றார்கள்

இன்னும் ஒரு பத்து வருசம் விட்டாலும் அர்ச்சுணும் சிலதுகளும் இதே அரைச்ச மாவை அரைச்சு கொண்டே இருப்பினம்....   போர் முடிந்து ஐஞ்சு வருசமாச்சு...  என்னத்தை கிளிச்சார்கள் எண்டு கேட்டு பாருங்கோ...  புலிகளை திட்டினம் எண்டதுக்கு மேலை ஒண்டுமே இருக்காது...   

விமர்ச்சனம் மட்டும் செய்கிறவர்களுக்கு பெயர் மாற்றுக்கர்த்தாளர்களா......??    

செயலாற்றியவர்களாக இருந்தாலும் இண்டு செயலாற்றுபவர்களாக இருந்தாலும் எல்லாம் புலிகளின் பின்னாலை நிண்டவர்களாலை மட்டும் தான் முடியுமாக்கும் ...  மற்றவை அவர்கள் பிழை விட்டார்கள் எண்டு  மறைஞ்சு நிண்டு  ஓலமிடுவினம்... 

ஒருவேளை தடை பட்டியலிலை தங்கட பெயரும் வந்திடும் எண்டு பயப்பிடுகினமோ...?? 

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.