Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணக்கம்.....

Featured Replies

எப்பிடி ஆக்கங்களை ஆரம்பிப்பது என்று யாரும் விளக்கம் தரமுடியுமா ?


எனது சிறு நினைவு குறிப்பை இணைக்க முடியுமா

 

யாழ் இந்துவின் பெருந்தன்மை

கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த காலங்கள் 1990 நடந்த சம்பவம் ஒன்று நினைவில். இந்தியன் இராணுவ கால கட்டத்தின் பின் கிரிகெட் 19 வயது அணி சிரமத்தின் மத்தியில் மீளமைக்கப்பட்டது. பல வீரர்கள் குடாவை விட்டு பிரிந்தோ பறந்தோ சென்ற காலங்கள். தயாளன் அண்ணை அவரகள் சிரமப்பட்டு ஒரு அணியை ஒழுங்கு செயதார். அணிக்கான உபகரணங்கள் தேடி எடுக்கப்பட்டன. பல மிகவும் பாவனைக்கு உபயோகமற்றதாக இருந்தது. அத்துடன் பல காணமல் களவு போய்விடது. இன்றுவரை நினைத்ததுண்டு அந்த கனமான துடுப்பாட்ட உபகரணங்கள் எந்த வகையில் அவர்களுக்கு உபயோகபட்டிருக்கும் ?

இருந்த உபகரணங்களை வைத்து பயிற்சி ஆரம்பமாகியது, உடல் பயிற்சி, கள தடுப்பு முதலில் ஆரம்பமாகியது. 7 – 9 வீரர்கள் மட்டுமே ஆரம்பத்தில் வந்திருந்தார்கள் எனவே மாணவர் மத்தியில் மீண்டும் விளம்பரம் செய்ய பட 19 வயதிலும் குறைந்த மாணவர் சிலர் ஒன்று சேர அணி ஓரளவு நிறைவாகியது. போர் நிறுத்த காலத்தில் லொத்தர் அடித்த மாதிரி ஸ்ரீ லங்கா அரசு பல புதிய உபகரணங்களளை அனுப்பிவைத்தது. ஒரு மாதிரி ST அண்ணை பாய் தரையை ஒழுங்கு அமைத்து கொடுத்தார். அணி பாடசாலை முடிவடைந்ததும் பயிற்சியை ஆரம்பிக்கும் இது மணி 6 வரை தொடரும். மாணவர் சிலர் பிரத்தியோக வகுப்புகளை கட் செய்து பயிற்சிகளை தொடந்தனர்.

உப அதிபர்கள் சோமசுந்தரம் , மகேந்திரன் ஆகியோர் அணியை மீளமைப்பதில் மிக்க கவனம் எடுத்துக் கொண்டார்கள் . நாங்களும் பந்து அவர் வீட்டுக்குள் போனால் மதில் பாய்ந்து செல்வதில் மிக்க ஆர்வம் காட்டியது வேறு கதை. ஒருவாறாக பிரபல வீரர்கள் (சுல்தான், வரதன், நரேன், ஜெயராஜ், கோபி ) ஒன்று  சேர அணி நல்ல வகையில் உருவாக தொடங்கியது. பயிற்சி முடிவில் தரும் நடா அண்ணையின் போண்டா , தேநீர் மட்டுமே என்னை அணியில் நிலைக்க வைத்தது.

பயிற்சி  சில வாரங்கள் பகிடியும் பம்பலுமாக சென்று கொண்டிருந்தது நானும் எனது கறுப்பு பாடசாலை சப்பாத்தில் இருந்து ஒரு பழைய விளையாட்டு சப்பாத்து ஒன்றை இரவல் வாங்கி இருந்தேன். அதை பலமுறை நய்லோன் நூல் வைத்து தைதத்தில் அதன் உருவமே மாறி இருந்தது. பதினைந்து வயது கூட முடியாத எனக்கு  கிரிக்கெட்ல் ஆர்வம் அதிகம் இருந்தாலும் இந்த ஜாம்பவான்களுடன் 19 வயதிற்கு உட்பட பிரிவில் விளையாட திறமை இருக்கவில்லை. என்னவே பத்தோடு பதினொன்றாக நானும் ஒட்டிகொண்டேன். பந்து பொறுக்குவதில் ஆரம்பித்து ஒரு சுழல் பந்து வீச்சுக்கான பிரிவில் சிறு இடம் இருப்பதை அறிந்து அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து ஓரளவு தேயற்சியும் அடைந்தேன். அணியில் இடம் பிடிக்க ஏற்கனவே பல முக்கிய புள்ளிகளின் பரீட்ச்சயம் பெரிதும் உதவியது. வாழ்க்கையில் கூட கதவுகள் திறபத்திற்கு அறிமுகம் அவசியம் பிறகு முன்னேற உங்கள் திறமை அவசியம்.

தயாளன் அண்ணையின் வழிநடத்தல் ரொம்பவித்தியாசம்தான். பிற பயிறுவிப்பாளர்கள் ரொம்பவே படுத்துவார்கள். அதிலும் பழய மாணவர் வந்து உதவி பயிறுவிப்பாளர்கள் ஆக இருந்தால் கதை கந்தல் நம்மை பிரட்டி ஓட உருள வைப்பார்கள். தயாளன் அண்ணை எங்களை பல வழிகளில் எம்மை தயார் படுத்தினார். போட்டிகள் தொடங்க சில வாரங்கள் இருக்கையிகல் ஜொலி ஸ்டார்ஸ் விளயாட்டு கழகம் நடத்தும் சுற்றுபோட்டியும் தொடங்க இருந்தது. Shabra நிதி நிறுவனம் உதயன் பத்திரிகை ஆதரவுடன் பல இந்து கல்லூரி மாணவர்கள் இடம் பெற்ற ஒரு அணி. இவர்கள் நாம் விளையாடுவதை அறிந்து ஒரு பயிற்சி போட்டி ஒன்றை ஒழுங்கு செய்தார்கள்.

நேரம் நாள் எல்லாம் குறித்து இந்து கல்லூரி மைதானத்தில் ஒரு சனிகிழமை போட்டி. தயாளன் அண்ணை எல்லோரையும் கண்டிப்பாக வரச்சொல்லி ஆர்டர் போட்டுவிட்டார். நாமும் PK பாலசிங்கதின் விஞ்ஞான வகுப்பை கட் செய்து வடிவேலு மாதிரி கட்டதுரை போல லோங்க்ஸ் ஒன்றை மாட்டிகொண்டு கல்லூரி மைதானத்தை நோக்கி சென்றேன்.

நேராக எமது மாற்றல் அறைக்கு சென்று உடைகளை மாறியபின் வெளியில் வந்து அழகான அந்த மைதானத்தை பார்கிறேன். மிக சிறிய மைதானம் ஒருபக்கம் மதிலாலும் மறுபக்கம் தகரதினாலும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆறு வயதில் இருந்து என்னோடு உறவாடிய அந்த மைதானம் எல்லோராலும் வளவு என்று பழிக்க பட்டாலும் இந்துவின் மைந்தர்களுக்கு அது ஒரு கோவில் என்றே சொல்ல வேண்டும். துவிச்சக்ர வண்டியை மதிலில் சாய்த்து விட்டு நடு உச்சி வெயிலில் மேட்ச் பார்ப்பது ஒரு தனி சுகம். மதிய போசன இடைவேளையில் துவிச்சக்ர வண்டியை வலித்து வீடு சென்று உணவருந்தி மீண்டும் ஓடி வருவது...எல்லாம் ஒரு கனா போல இப்போ

 

எமது மாற்றல் அறையில் இருந்து வலபக்கம் திரும்பி பார்கிறேன் SHABRA அணியினர் உடல் பயிற்சி செய்த படி மைதானத்தில் உலாவிய வண்ணம் இருந்தனர். அவரகளது உருவம் அந்த வயதில் என்னை பிரமிக்க வைத்தது. சரி நான் தான் விளையாட போவதில்லையே சும்மா ஓரமா இருந்து மேட்ச் பார்த்து பின் மதிய போசன இடைவேளையில் நல்ல கட்டு கட்டுவம் என்ற நினைப்பில் நான் . நினைப்பில் மண் போட தயாளன் அண்ணை  வந்து சொன்னார் சில பொடியள் பிரத்தியோக வகுப்புகள் காரணமாக வர முடியலை அதனால நீ இறங்கி விளையாடு.

 

பயம்மாக இருந்தாலும் கண்ணில காட்டி கொள்ளாமல் அதுக்கு என்ன என்று சொல்லி போட்டு திரும்பி பாகிரன் சும்மா மலை மாதிரி SHABRA அணி நிக்குது. இவர்கள் எல்லாம் நான் முன்பு  மேட்ச் பார்க்கேக்க சும்மா விசுக்கி விசுக்கி அடிச்ச ஆக்கள். முருகவேள் , வித்தி, ஜெயந்தன் , இளங்கோ, விஜயகுமார், வீரா ..மற்றும் சென்ற்றலிட்ஸ், KCC என்று பல பேர்கள். ஓகே நம்மட பொடியளும் சின்ன சைஸ் என்டாலும் விடாமல் அடிப்பாங்கள் என்ற நம்பிகையில நான். சுல்தான் பந்து போட்டு சமாளிப்பான் எண்டு தெரியும். சுல்தான் பந்து போடேக ரோம்ப அருகில் கள தடுப்பு செய்யிற நான், தரை பாயில் பந்து விழுந்து வரும் போது சும்மா சீறி கொண்டு வரும். பெரிய தேனீ போற சத்தம் ஒண்டு வரும் பக்கத்தில நிக்கிற என்னக்கே வயித்த கலக்கும். வெளிநாடுகளில் உள்ள  மண் தரையில அவ்விளவு வேகமோ சத்தமோ இல்லை. வரதன், நரேன் நல்லா பந்து  போடுவங்கள் சரி மட்சை வெளியில நிண்டு பாகிறதுகு உள்ள நிண்டு பார்ப்பம் எண்டு ஜோசிதுகொண்டு நிக்கேக்க ஜெயராஜ் டோஸ் போட்டு சைகை மூலம் துடுப்பு என்று காட்ட நான் சந்தோசமா மணல் கும்பல் நோக்கி நடை போட்டேன்.

 

 

மதியம் 11.30 யாழ் இந்து 19 வயது அணி 150 / 9 கடைசி துடுபாட நான் சரி போறது தான் போறம் ஸ்டைல் ஆக போவம் எண்டு எல்லை மண்ணை தொட்டு கும்பிட்டு மூலையில தெரிஞ்ச வயிரவரை நினைத்து கொண்டு உள்ளே போனேன். வயித்தில வண்ணத்தி பூச்சிகள் பறக்க முதல் 3 பந்துகள் ஒரு மாதிரி மறிச்சு போட்டன். ஒவ்வொரு பந்து மட்டையில படவும் கை தான் ரொம்ப அதறியது. பின்னால் இருந்த வித்தி அண்ணை சொல்லி கேக்குது முந்தி தான் கடைசி விக்கெட் சும்மா விசுகுவாங்கள் இப்ப நல்ல ஒட்டி விளையடுராங்கள் என்று. நமகுதானே தெரியும் நம்ம கஷ்டம்.

 

ஒருவாறாக யாழ் இந்து 160 ஓட்டங்களுக்கு ஆட்டமிளந்தது Shabra துடுப்பாட தொடங்கியது நானும் அரசமர நிழல் பார்த்து ஒதுங்கி கள தடுப்பில் ஈடுபட்டேன். போட்டி அமைதியாக சென்று கொண்டிருக்க தீடீரென்று யாரோ என் பெயர் சொல்லி கூப்பிட திடுகிட்டு திரும்பி பார்த்தேன். நம்மளை பந்து போட சொல்லி அன்பாக கேட்க ஒரு கணம் பதறி போனேன். சரி யார் தான் என்னை எதிர் கொள்ள போகிறார்கள் என்று பார்த்தல் அது வீரா (மனிப்பாய்) தாடியும் துடுப்புமாக ஒரு வைரவர் நிற்கும் போல இருந்தது. முதல் பந்து மெதுவாக விழுந்து திரும்ப சடார் என்று ஒரு சத்தம் அடிச்ச அடியில் பந்து மதிலில பட்டு திரும்பி எனக்கு  கிட்ட வந்து நின்றது. மயான அமைதி கோபி அண்ணை ஓடி வந்து சில அறிவுரை பகிர்ந்து சென்றார். இப்படி அடுத்த பந்துகளும் எல்லை கோடுகளுக்கு மேலலையும் கீழ்ழாலயும் போக அந்த ஓவர் முடிவுக்கு வந்தது. இனி மேல் பந்து போட கேட்டாலும் பந்து போடுவதில்லை என்ற முடிவுடன் நான் அரசமர நிழல் பார்த்து ஒதுங்கினேன். பிறகு பொடியள் நல்லா பந்து போட்டு SHABRA வை 190 குள் அவுட் ஆக்கி போட்டாங்கள். அப்படா என்று ஹொஸ்டல் பக்கம் நடையை கட்டினேன். அங்க தானே நல்ல மதிய சாப்பாடு பாயசத்தோட. இனி நம்ம பொடியள் மேட்ச்சை சமநிலை ஆக்கி போடூவாங்கள் என்ற நம்பிக்கையில் நான் அந்த சைவ சாப்பாடை நல்ல கட்டு கட்டினேன். வாழை இலையில் பாயாசத்தை விட்டு குடிப்பதை சிலர் விநோதமாக பார்த்த வண்ணம் கடந்து சென்றனர். நமக்கு அதுவா முக்கியம் பாயசம் தானே முக்கியம்.

 

இரண்டாம் இன்னிங்க்ஸ் யாழ் இந்து 160 / 5 நேரமும் இருட்டு பட தொடங்கியது. சரி நல்ல நாள் ஒருமாதிரி வீடு பொய் சேருவம் எண்டு நினைக்கேக்க வித்தி அண்ணையும் தயாளன் அண்ணையும் ஏதோ கதைக்கினம் சரி ஏதோ நடக்க போது எண்டு விளங்கீற்று. பார்த்தா யாழ் இந்து இரண்டாம் இன்னிங்க்ஸ் நிப்பாடி Shabra வுக்கு ஒரு 130 ஓட்டங்கள் ஒரு எட்டு ஓவரில் என்று தீர்மானிக்கபட்டது. இதை எப்படி அடிபாங்கள் அதுவும் சுல்தான் வரதன் நரேன் இருக்கேக்க. எல்லாரும் மைதானதில இறங்கியாச்சு Shabra முருகவேல் ஜெயந்தன் இறங்கி விளையாடினம். முருகவேல் அடிச்சு விளையாட பார்க்க பொடியள் ஒருமாதிரி அவுட் ஆக்கி போட்டாங்கள். அடுத்ததா பார்த்தா வித்தி அண்ணை  வாரார் என்ன இது இவர் நல்லா பின்னுக்கு தானே வாறவர் எண்டு யோசிக்க முதல் பந்துளால் மேலாலும் கீழ்ழாலயும் கதறி கொண்டு போகுது. பொடியள் வலு வேகமாக போட பந்து இன்னும் வேகமா வெளியில் போகுது. நானும் மதில் ஏறி பந்தெடுத்து களைச்சு போனேன். அடியெண்டா  மக்ஸ்வெல் / மில்லேர் கலந்து அடிச்சமாதிரி ஒரு அடி. நாங்கள் எல்லாம் கிலிச்சு போய் ஒராளை மாறி மற்றாள் பார்க்க முதல் மேட்ச் முடிஞ்சு போச்சு. நாளை உதயனில் (shabra நிறுவன பத்திரிகை ) யாழ் இந்து மானம் கப்பல் ஏற போகுது எண்ட நினைபோட வீடு நோக்கி ரொமபவே கடுப்போடு சென்றேன்.

 

மறுநாள் அதிகாலை துவிச்சக்ர வண்டியை வலித்து தட்டாதெரு சந்தியில் வாழைபழ கடையில் உதயன் பத்திரிகையும் வாழைபழமும் வாங்கி கொண்டு  லுமாலாவில் நின்றபடி கடைசி பக்கம் புரட்டிபார்கிறேன். பெரிய தலைப்பில் யாழ் இந்துவின் பெருந்தன்மை .....SHABRA வென்றது. அப்போது அறிந்து கொண்டேன் இந்துவின் மைந்தர்கள் எப்போதும் தங்கள் வெற்றியில் கூட யாழ் இந்துவை முதன்மை படுத்துவர் என்று .....

 

இது நடந்து 23 வருடங்கள் இப்பொது நிலமை வேறாக இருக்கலாம் ....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாருங்கள்..!

வணக்கம்! வாங்கோ!!  :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.. வாருங்கள்


"அது வீரா (மனிப்பாய்) தாடியும் துடுப்புமாக ஒரு வைரவர் நிற்கும் போல இருந்தது" :lol:  :D 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குஞ்சி...!

 

 

தங்கள் வரவு நல்வரவாகட்டும் !

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சியை.... வருக, வருக என்று வரவேற்கின்றோம். :)

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குஞ்சி வாருங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்  இந்துவின் பெருமையுடன் வரும் குஞ்சி அவர்களுக்கு வாத்தியாரின்  வந்தனங்கள் உரித்தாகட்டும் :D

Edited by வாத்தியார்

  • தொடங்கியவர்

வணக்கம் தந்த உறவுகளுக்கு பதில் வணக்கம் ..

 

குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல .............................கல்வி அழகே அழகு ......

 

............( மறந்து விட்டது பெரியவர்கள் யாராவது உதவி செய்யவும் )

 

இதில் வரும் குஞ்சி அல்ல ...குண்சி.....என்பதே ...அல்லது குஞ்சி என்றே தொடருங்கள்  ...உங்கள் விருப்பம்...

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல, நெஞ்சத்து
நல்லம்யாம் எனும் நடுவு நிலையான்
கல்வி அழகே அழகு".

எந்த அழகான உடைகளோ சிங்காரித்த தலைமுடியின்   அழகோ அழகல்ல
மஞ்சள் பூசி மினுக்கி வெளிக்கிட்டாலும் நெஞ்சிலை வஞ்சம் இல்லாமல் எல்லாரையும் சமனாப் பாக்கின்றவர்களின்
கல்வி அறிவே மனிதனுக்கு அழகு

 


வணக்கம் வாருங்கள்

  • தொடங்கியவர்

நாலடியாரின் கல்வி அதிகாரத்தின் முதற் பா வை பொழிப்புரை உடன் தந்த பாரியாரிக்கு நன்றியும் வணக்கமும் ..இதன் மூலம் உலகத்திற்கு ஏதோ சொல்ல வாறிங்க போல உள்ளது.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் குஞ்சி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள்

யாழ் இந்துவின் பெருந்தன்மை!!!!!!!!!!!!! சொல்ல வாருங்கள் வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் குஞ்சி! தங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

 
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் குஞ்சி! தங்கள் வரவு நல்வரவாகட்டும் !!

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

 

யாழ் இந்துவின் பெருந்தன்மை  பிடித்திருக்கு...!!!

வாங்கோ சந்திக்கு ,

உங்கள் பதிவில் இருக்கும் பலர் எனக்கும் பழக்கம் ,(தயாளன் ,வித்தி,சுல்தான் சற்று யூனியர் )

உதே நேரம் கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் விளையாடிஇருப்பார்கள் என்று நம்புகின்றேன் .

சப்ரா சரவணபவன் பற்றி சொல்ல தேவையில்லை (வித்தியின் மச்சான் ).

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

-------

இதில் வரும் குஞ்சி அல்ல ...குண்சி.....என்பதே ...அல்லது குஞ்சி என்றே தொடருங்கள்  ...உங்கள் விருப்பம்...

 

"குண்சி" என்று நாம் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது.... கடைசி எழுத்தை பிழையாக அடித்து விட்டால், வில்லங்கமாய் போய் விடும் என்ற படியால், நாங்க "குஞ்சி" என்றே கூப்பிடுகிறோம். :D

  • தொடங்கியவர்

"குண்சி" என்று நாம் அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது.... கடைசி எழுத்தை பிழையாக அடித்து விட்டால், வில்லங்கமாய் போய் விடும் என்ற படியால், நாங்க "குஞ்சி" என்றே கூப்பிடுகிறோம். :D

 

நன்றி தமிழ் சிறி  உங்கள் அப்ப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு....

 

சரி குஞ்சிதபாதம் , குஞ்சம்மா , குஞ்சப்பு , குஞ்சாச்சி , குஞ்சு போன்றன நல்ல தமிழ் பெயர்கள் அது மாதிரி குஞ்சி யும் ஒன்று என்ன நினைகிறேன்....

  • தொடங்கியவர்

வாங்கோ சந்திக்கு ,

உங்கள் பதிவில் இருக்கும் பலர் எனக்கும் பழக்கம் ,(தயாளன் ,வித்தி,சுல்தான் சற்று யூனியர் )

உதே நேரம் கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் விளையாடிஇருப்பார்கள் என்று நம்புகின்றேன் .

சப்ரா சரவணபவன் பற்றி சொல்ல தேவையில்லை (வித்தியின் மச்சான் ).

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி .

 

சோமசுந்தரம் ,மகேந்திரன் மாஸ்டர்களின் பங்களிப்பு அளப்பெரியது அதிலும் விளையாட்டுத்துறையில்...சில குறைகள் பல நிறைகளை விட அதிகமாக பேசபடுவது நாம் ஊர் வழக்கம் தானே .....

 

கொக்குவிலில் குணன் ,பாலா ,ரஞ்சிற்,உமாசங்கர் ..சிலர் நினைவில் உள்ளது ..

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குஞ்சி வாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.