Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMGH_05022.JPG

எனக்கெண்டு இப்பிடியானதேல்லாம் வருகுது நான் என்ன செய்ய ????

என்ர வீட்டில பன்னிரண்டு வருடப் பழைய தொலைகாட்சிப் பெட்டி தான் இன்றுவரைக்கும் இருக்கு. என்னவோ தெரியேல்ல எங்கட வீட்டை வாற எலெக்றிக் பொருட்கள் ஒண்டுமே லேசில பழுதாகாத வரத்தை கடவுள் தந்திட்டார்.  பெரிய பெட்டிதான் எண்டாலும் இந்தக் காலத்தில வயதுபோன கிழடுகள் கூட அதை வச்சிருக்காதுகள். என் கணவர் நப்பி எண்டு சொல்ல முடியாது. ஆனால் ஒன்று பழுதாகாமல் பாக்கக் கூடிய நிலையில் இருக்கேக்கை ஏன் புதுசு என்பது அவரின் கேள்வி.

நானும் அடிக்கடி டிவி பாக்கிறது இல்லை. கடைசி மகளும் தகப்பனும் தான் மாறிமாறிப் பாக்கிறது. மாதத்தில ஒன்று இரண்டு படம் நான் பாக்கிறதோடை சரி. ஆனால் அந்த நேரங்களில எல்லாம் எனக்கு என் தங்கை வீட்டில் இருக்கும் பெரிய பிளாஸ்மா டிவி தான் கண்ணுக்கு முன்ன வரும். அடுத்த இரண்டு நாட்கள் புதிய டிவி பற்றி ஒரே வாக்குவாதம் நடக்கும்.  பிறகு நான் மறந்திடுவன்.

என் நண்பருடன் கதைத்தபோது நேற்று எப்பிடியோ இந்தக் கதை வந்திட்டுது. டிவி யைப் பழுதாக்க என்ன செய்யலாம் என்று ஐடியா கேட்க தண்ணியை எடுத்து ஊத்திவிடு என்று சொன்னார். தண்ணி ஊத்தினா பளுதாகுமோ என்று அப்பாவியாய் நான் கேட்க, ஊத்திப்பார் தெரியும் என்றார்.

அதுக்குள்ளையும் பயம். எக்குத்தப்பா நான் தண்ணி ஊத்த நெருப்புக் கிருப்புப் பிடிச்சு மினைக்கெட்டுப் பெயின்ட் அடிச்ச சுவர் பழுதானா என்ன செய்யிறது எண்டு. இண்டைக்குக் காலமை எழும்பி வந்த உடன

கண்ணில பட்டது டிவி தான். தண்ணி ஊத்துவம் எண்டு நினைக்கவே நெஞ்சு பதறியதை நினைக்க இப்பவும் எதோ செய்யுது. பன்னிரண்டு வருசமா எங்களோடையே இருக்கு. எப்பிடிச் செய்யிறது என்று மனம் பதைக்க ஆசை வென்றது.

ஒரு கப்பில் தண்ணியை எடுத்துக் கொண்டுபோய் கொஞ்சத்தை இருந்த இடைவெளியில் ஊத்தினன். அது நேர நிலத்தில விழுற மாதிரிச் சத்தம் போட, என்ன கோதாரி இது என எண்ணியபடி கொஞ்சம் எட்டி ஊத்தினன். அப்பாவும் அதே சத்தம். அதுக்கு மிஞ்சி  ஊத்தத் துணிவு வரேல்லை. சரி நடக்கிறது நடக்கட்டும் எண்டு துணி எடுத்துக்கொண்டு வந்து மேல இருந்த தண்ணியைத் துடைச்சிட்டு  வேலைக்கு வந்திட்டன். அதையும் மறந்திட்டன்.

ஒரு ஒன்பது மணி இருக்கும் எனது மகள் தொலைபேசியில். என்ன என்றதற்கு டிவி வேலை செய்யுதில்லை என்றாள். மனம் இறக்கை கட்டி வானம் வரை பறக்க அடக்கிக் கொண்டு ஏன் வேலை செய்யேல்லை. திரும்ப நிப்பாட்டிப் போடுங்கோ என்றேன். இரண்டு தரம் நிப்பாட்டிப் போட்டுட்டன். பச்சை நிறக் கோடுகள் தான் வருது என்றவுடன் அப்ப புது டிவி வரப்போகுது என்னும் சந்தோசம் எட்டிப் பாக்க, வெளியே காட்டாமல் எனக்கு உதைப் பற்றி ஒண்டும் தெரியாது அப்பாட்டைக் கேளுங்கோ என்றுவிட்டுப் போனை வைத்துவிட்டேன்.

ஆனாலும் இருப்புக் கொள்ளவில்லை. கணவர் தண்ணி ஊத்தினதைக் கண்டு பிடிச்சிடுவாரோ என்று மனம் கிடந்தது அடிக்க, பொறுமையாக இருந்தேன். ஒரு அரை மணித்தியாலம் போவதே பெரும் பாடாய் இருக்க மீண்டும் நானே போன் எடுத்தேன் வீட்டுக்கு. மகள் தான் மீண்டும். என்ன செய்யிது டிவி என்று நானும் கேட்க சோகத்தோடு திரும்ப வேலை செய்யிது அம்மா என்றாள் அழாக் குறையாக. எப்பிடி என்று எரிச்சலை அடக்கியபடி கேட்க, அப்பா நிப்பாடிப் போட்டுப் போட வேலை செய்யிது. நானும் புது டிவி கிடைக்கப் போகுது என்று நினைச்சன் அம்மா என்றாள். 

இப்ப சொல்லுங்கோ நான் என்ன செய்ய ??????

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Replies 50
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்திலயும் சின்னப் பிள்ளைகள் மாதிரி நடப்பது கொஞ்சம் அதிகம் தான் என்ன செய்வது..

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுக்குடுத்திட வேண்டியதுதான் அண்ணையிடம்

  • கருத்துக்கள உறவுகள்

IMGH_03553.JPG

DST_Zeilentrafo.jpg

இந்த பழைய குழாய் தொலைக்காட்சி பெட்டிகளில்(Cathode Ray Tube -CRT) மிக உயர் அழுத்த மின்சாரம்  (சுமார் >50 ஆயிரம் வோல்ட் மேலே தான்) கொடுத்து படத்தை தொலைக்காட்சி குழாயில் தெரிய எல்.ஓ.டி(Line Output Transformer or Flyback Votage Transformer) என ஒரு மின்சாரக் கருவி இருக்கும் (படத்தில் சிவப்பு நிற தடித்த ஒயர் செல்லும் கருவி). இதன் அருகே தண்ணீரை ஊற்றி பின் மின்சாரத்தை செலுத்தினால் டிவி. பெட்டியும் காலி, அது வெடிக்கும் போது அருகே இருக்கும் மனிதர்களும் காலி... :wub: :wub: :wub: :wub:

ஏம்மா... விளையாடுகிறீர்களா...?

எதனோடு விளையாடனும்னு ஒரு வரைமுறையே கிடையாதா? :wub:

உயிர் வாழனும்னு ஆசை இல்லையா?

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிக்கும் ஒரு கதை எழுத சுமேரியரால்தான் முடியும் .

போட்டுக்குடுத்திட வேண்டியதுதான் அண்ணையிடம்

அந்த நண்பர் யார் என்று சொன்னால் போட்டுக்கொடுக்க உதவியாக இருக்கும் :D

சுமோ, உங்கள் நண்பி  உங்களை சொர்க்கம் அனுப்ப நினைச்சிட்டா போலை!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்விரும்பியாதை வாங்கி ஒன்றை ஹால் இலும்  மற்றதை பெட் ரூம் இலும்   வைக்க வேண்டியது தான்... :D

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடத்துக்கு முன்னர் எனது வீட்டிலும்  இப்படியொரு நிலை  இருந்தது

மக்கள் வளர்ந்தவர்கள்  மற்றும் உதைபந்தாட்டம்  மற்றும்  இன்ரநெற் உபயோகிப்பவர்களாக இருந்ததால்

புது ஐடங்களுடனான ரிவி  வேண்டம் என்று கேட்டார்கள்

நான் சொன்னதும் இதே போலத்தான்

அதுவாக  பழுதாகட்டும்

அதுவரை மாற்றத்தேவையில்லை

இது ட இல்லாத சனம் நாட்டில எவ்வளவோ இருக்கு என்றதான்

அத்தடன் இன்னொரு  எச்சரிக்கையையும் விட்டிருந்தேன்

தானாக பழுதாகணும்

யாராவது வேண்டும் என்றே பழுதாக்கினால்

தண்டனையாக 2 வருடங்களுக்க ரிவி  இந்த வீட்டுக்குள் வராது

அது தான் தண்டனை என.

அதுவும் பழுதாகிற  மாதிரி தெரியல

கடைசியாக போன வருடம்

வீட்டு வேலைகள் செய்யும்  போது

மக்கள் தங்களது விருப்பத்துக்கு கோலைச்செய்யப்போவதாக சொன்னார்கள்

தொலைக்காட்சிச்சிக்கல் வந்தபோது

அப்பா  அப்பா  என்று ஒரே கொஞ்சல்

நானும் பார்த்தேன்

செய்திருக்கும்  வேலைப்பாடுகளுக்குள்ளும்

கடந்த 5 வருடத்திற்குள் தொலைக்காட்சிகளில் வந்திருக்கும் மாற்றங்களுக்குமாக

மாற்றத்தான்வேண்டும்.

சரி  என்றதுதான் தாமதம்

தொலைக்காட்சி வந்துவிட்டது

(காசும் அவர்களதே)

அதே நேரம்

அந்த பழைய  தொலைக்காட்சி

வேறு எவரும் பாவிக்கும் வகையில் வெளியில் வைக்கப்பட்டது

அடுத்தநாள் அதைக்காணோம்

இதையே  சுமேக்கும் சிபாரிசு செய்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் இருக்கும் தொலைக்காட்சிக்கும் ஒரு கதை எழுத சுமேரியரால்தான் முடியும் .

அந்த நண்பர் யார் என்று சொன்னால் போட்டுக்கொடுக்க உதவியாக இருக்கும் :D

சுமேயிடம் அடிமைப்பட்டு கிடக்கும் அந்த ஜீவனைதான் சொன்னேன் வாத்தியார்
  • கருத்துக்கள உறவுகள்

சுத்த கேணைத்தனமான லூசுத்தனமான பதிவு இது.....

நல்ல கவிதைகளை எழுதக் கூடியவர்களில் பலரது சில செய்கைகள் சிரிப்பை வரவழைப்பதாக, குழந்தைத் தனமாக இருக்கும். சுமேயின் இந்த செயலும் அப்படித்தான்... :)  

நண்பர் சொன்ன தகவல் தப்பு .

நல்ல சீனி போட்ட தேத்தண்ணியை ஊத்திப்பாருங்கோ .பலன் கிடைக்கும் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சுமே ! தெரிஞ்சு செய்தீங்களோ , தெரியாமல் செய்தீங்களோ, பொறுத்த இடத்தில தண்ணீர் தேங்கி நின்டிருந்தால் டி.வி.யுடன் புதுவீடும் கிடைத்திருக்கும்...!

  • கருத்துக்கள உறவுகள்

சுமேயின் செய்கைகளை பார்க்கும்போது முட்டாளத்தனங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பாரோ என்று தோன்றுகிறது. ஒன்று மட்டும் புரிகிறது சிக்கல்களை இவர் தேடிப்போகவேண்டியதில்லை எல்லாவற்றையும் தன்னாலே வருவித்துக் கொள்ளக்கூடியவர். எதைச் சொன்னாலும் தன்னுடைய முட்டாள்த்தனத்தை எப்படி மற்றவர்கள் இரசிககும் வகையில் எழுதலாம் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். என்ன வாசிப்பவர்களும் ஆகா சுமே இப்படி செய்து விட்டு ஒரு பதிவை இட்டுள்ளாரே நாமும் ஏன் இப்படியான எதையாவது செய்துவிட்டு அதனை எழுதக்கூடாது என்று நினைக்காமல் இருந்தால் சரி. இருந்தாலும் தோமஸ் அல்வ எடிசன் கோழிக்குஞ்சு பொரிக்க கோழிக்கு உதவி செய்த கதையும் இவ்விடத்தில் நினைவுக்கு வந்து போகாமல் இல்லை. :lol: :lol: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இன்றைய காலகட்டதில் நடக்கும் சமூக யதார்த்தில் இதுவும் ஒன்று......
யதார்த்தத்தை இங்கே யாரும் பகிர்வதில்லை....
 
அந்த வகையியில் சுமேரிக்கு என் பாராட்டுக்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/655uZTywQ5I

பழைய குழாய் வடிவ தொலைக்காட்சி(CRT TVs) பெட்டிகளினுள்ளே இருக்கும் ஃப்ளை பேக் வோல்ட்டேஜ் ட்ரான்ஸ்பாமரின்(Flyback Voltage Transformer) மூலம் பிக்சர் ட்யூப் ஒளிர்ந்து படம் தெரிய தேவையான உயர் அழுத்த மின்சாரம்(Extra High Tension - EHT voltage) எந்தளவிற்கு வெளிவரும் என்பதை விளக்கும் ஒரு சோதனை காணொளியை மேலே காணலாம்.

இந்த உயர் மின் அழுத்தம், தொலைக்காட்சி பிக்சர் ட்யூபின் அளவிற்கு(Diagonal size) ஏற்றாற் போல் மாறுபடும். உதாரணமாக 18" முதல் 20" அளவுள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டியென்றால் தோராயமாக >60 ஆயிரமாகவும்,  21" முதல் 23" அளவென்றால் >80 ஆயிரம் வோல்டேஜ் மேலேயும் இருக்கும்.

எச்சரிக்கை : இதை யாரும் முயற்சி செய்து பார்த்துவிடாதீர்கள்...!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இது ஒரு படுமுட்டால் தனமான செயல்....இவர் தண்ணியை ஊத்திபோட்டு பாதுகாப்பாக வேலைக்கு போய் விட்டார்.... இவருடைய மகள் தொலைக்காட்சிக்கு மிக அருகாமையில் நின்று டிவி போடுகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள் தட்சமையம் அந்த டிவி வெடித்து சிதறி இருந்தால் என்ன ஆகி இருக்கும்?

இதை வாக்குமூலமாக வைத்து குடும்ப உறுப்பினர்களிக்கு சேதம் ஏற்படுத்த முயற்சித்தார் என்று ஒரு வழக்கு போடவா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலகட்டதில் நடக்கும் சமூக யதார்த்தில் இதுவும் ஒன்று......
யதார்த்தத்தை இங்கே யாரும் பகிர்வதில்லை....
 
அந்த வகையியில் சுமேரிக்கு என் பாராட்டுக்கள்.

குமாரசாமியண்ணா,
இந்தக்காலத்தில் இப்படியும் இருக்கிறார்களா எனவும் எண்ணத்தோன்றுகிறது. நீங்கள் குறை நினைக்கப்படாது. இக்காலத்து பொருளாதார இறுக்கம் எவ்வகையில் சேமிக்கலாம் என்பதே உண்மையான உழைப்பவர்களின் சிந்தனை. சந்தணம் மெத்திய இயல்புகளை என்னதான் செய்வது.
 
நம்புவீர்களோ தெரியாது. இது என்வீட்டு அனுபவம் :- தொலைக்காட்சி முதல் வாங்கியது மகன் பிறந்த போது 1996 யூலை. அப்போது ஒரு சின்ன கிறைண்டரும் வாங்கினேன். தொலைக்காட்சி போவருடம் வரையும் வேலை செய்தது. ஆனால் 2வருடமாக கோடுகள் விழுந்து இடைக்கிடை அதுவும் இழுபறி. ஆனால் போனவருடம் தான் ஒரு சின்ன ரீவி 200€வுக்கு வாங்கினோம். 
 
மகனுக்கு யூலை 15 பதினெட்டு வயது வரப்போகிறது. அவன் பிறந்த போது வாங்கிய சின்ன கிறைண்டர் இன்றுவரையும் பாவிக்கிறேன். அதன் கப் எல்லாம் வெடித்து உயிர்போகும் நிலமை ஆனால் வவுனியன் கப்களை வடிவாக ஒட்டி இன்றும் பாவிக்கும் வகையில் வைத்திருக்கிறேன். 
 
எல்லா பிள்ளைகளும் ஐபோட்  ஐபோன் என பெரும்பாலும் குழந்தைகள் கூட ஐபாட் இல்லாமல் குறைவு. ஆனால் எனது பிள்ளைகள் 2பேரையும் நானும் கேட்டேன்  வேணுமோண்டு. ஆனால் இருக்கிற கணணியே போதும் என்று இந்த நவீனத்தை வேண்டித்தரச்சொல்லி இடைஞ்சல் பண்ணுவதில்லை. 
 
குறிப்பாக மகன் Abitur படிக்கிறான். அவன் போடும் உடுப்புகள் கூட அதிக விலையில் வாங்கமாட்டான். இனி உது வேண்டாம் புது உடுப்பு வாங்கென்று கடைக்கு வில்லங்கப்படுத்தித்தான் கூட்டிப்போய்தான் வேண்டிக் விரும்பியதை எடு என்று சொன்னாலும் இருக்கும் உடுப்புகளில் விலைகுறைந்ததே பார்த்து எடுப்பான்.
 
அண்மையில் உறவினர்கள் வந்து நின்றார்கள் இந்தக்காலத்தில இப்பிடியொரு பிள்ளை இருக்கோ என சொல்லீட்டு போயினம். மகளும் இதுபோலத்தான் அவளும் நானும் உடுப்பு ஒரே அளவு என்பதால் அவள் போட்டு 2வருடம் போக அந்த உடுப்புகளை நான் போடுவேன். இப்படித்தான் இப்போதைய பொருளாதார சுமைகளை ஒவ்வொரு குடும்படும் சமாளிக்க செலவீனங்களை குறைக்க இருப்பதையே பாதுகாக்கத்தான் விரும்புவார்கள். 
 
இங்கு நான் எழுதியதை யாரும் தற்பெருமையென்று நினைக்காதீர்கள். பொதுவாக பெண்கள் அடுத்தவர் அனுபவிக்கும் வாழ்வை எதிர்பார்ப்பார்கள் என்ற தவறான கருத்துக்கு உடந்தையாக இல்லாத பெண்ணாக நானும் இருக்கிறேன்.என்போல இருப்பதை வைத்து திருப்தியோடு வாழும் பெண்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதனை இங்கு சொல்ல வேண்டியதால் எழுதியிருக்கிறேன்.
 
யாரையும் எனது கருத்து கோபப்படுத்தினாலோ அவமதிப்பதாக நினைத்தாலோ மன்னித்துக் கொள்ளுங்கள். இது எனது கருத்தும் எனது வாழ்வும் இதனை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

Edited by shanthy

இதுவும் யதார்த்தமான கருத்துரையாடல்.....மாறுபட்ட கருத்து. ஆனால் இது எதிர்க்கருத்தல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. உண்மையில் நீங்கள் எல்லாம் எழுதியதை வாசித்த பின்னர் தான் என் தவறு எனக்கு விளங்கியது. உடனேயே கணவரிடமும் பிள்ளைகளிடமும் நான் தண்ணீர் ஊற்றியதைக் கூறிவிட்டேன். எத்தனை பெரிய மடை வேலை பார்த்திருக்கிறேன் என்று இப்போதான் புரிகிறது. எதோ நான் செய்த புண்ணியம் ஒருவருக்கும் ஒன்றும் நடக்கவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன் அண்ணா போட்ட படத்தைப் பார்த்தவுடன் எனக்கு நடுக்கமே ஏற்பட்டு விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்துக்களை எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி. உண்மையில் நீங்கள் எல்லாம் எழுதியதை வாசித்த பின்னர் தான் என் தவறு எனக்கு விளங்கியது. உடனேயே கணவரிடமும் பிள்ளைகளிடமும் நான் தண்ணீர் ஊற்றியதைக் கூறிவிட்டேன். எத்தனை பெரிய மடை வேலை பார்த்திருக்கிறேன் என்று இப்போதான் புரிகிறது. எதோ நான் செய்த புண்ணியம் ஒருவருக்கும் ஒன்றும் நடக்கவில்லை.

நீங்கள் செய்த புண்ணியத்தையும் எங்களுடன் பகிருங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்த புண்ணியத்தையும் எங்களுடன் பகிருங்கள்.

புண்ணியம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மட்டும் தான். அதை மட்டும் தர முடியாது யாருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் எல்லோரும் என்னை நன்றாகத்தான் பயப்பிடுத்தி விட்டீர்கள்.மிகப் பழைய தொலைக்காட்சிப் பெட்டிகள் தான்  வெடித்துப் பறக்கும். இது எதுமெண்டால் அதற்குள் இருக்கும் பியூஸ் போவதுடன் வேலை செய்யாது நின்றுவிடும் என்று வாசித்தேன். இப்பதான் குற்ற உணர்வு அற்றுப் போய் இருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.