Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள திரைப்பட இயக்குனரைப் புகழ்ந்து பேசிய கவிஞர் ஜெயபாலன் தமிழ் உணர்வாளர்களால் நையப்புடைப்பு!

Featured Replies

தமிழகத்தில் சர்ச்சையை ஏற்றபடுத்தியுள்ள பிரசன்னா விதானகேவின் சிங்கள With you without you திரைப்படம்  நேற்று  தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும்,  பத்திரிகையாளர்களுக்கும் பிரத்தியோக் காட்சி  மாலை 7 மணிக்கு சென்னை வடபழனியில் உள்ள RKV ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது. 


இதில் இரண்டு இடங்களில்  பயங்கரவாதிகள் என்று சொல்லபட்டதிற்கு கடும் எதிர்ப்பினை தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.
 


 

ஆனால் அங்கு  சில  நபர்களுடனும் குடும்பத்தினருடனும் வந்திருந்த கவிஞர் ஜெயபாலன் சிங்கள இயக்குனர்  பிரசன்னா விதானகேவையும் அவருடைய படத்தையும் பாராட்டியும் ஆதரித்தும் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள்  கவிஞர் ஜெயபாலனைத் தாக்க முயன்றனர். ஆனால் ஜெயபாலனுடன் வந்த நபர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.
 


 

தொடர்ந்து  சிங்கள இயக்குனர்  பிரசன்னா விதானகேவிடம் குறித்த திரைப்படம் தொடர்பில் கடும்  எதிர்ப்பினையும்,  பல்வேறு கேள்விகளையும் இயக்குனர் கவுதமன் , மே 17 இயக்க தோழர்கள் , மாற்றம் மாணவர் இயக்க பிரதீப் குமார் , தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் ஊடகவியலாளர்கள் கேட்டனர்.



jeyapalan_india_attack1.jpg

 
குறிப்பாக இயக்குனர் கவுதமன்  அங்கு நடந்தது இனபடுகொலை என்பதை நீங்கள் ஒரு படைபளியகவோ அல்லது சிங்களவராகவோ அல்லாமல் ஒரு மனித நேயமிகவர் என்ற நிலையில் உங்கள் பதிலை சொலுங்கள் என்றார். ஆனால் அதற்கு முழுமையான பதிலை அவர் அளிக்கவில்லை.


 
jeyapalan_india_attack2.jpg

 
மேலும்  தமிழ் உணர்வாளர்கள்   சிங்கள இயக்குனர்  பிரசன்னா விதானகேவிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டது , சில கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது திக்குமுக்காடியபோது  அந்த சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக தன்னை திரைப்பட கலைஞர் என்று கூறிக்கொண்டு ஈழத்தமிழர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசுடன் இன்றுவரை தொடர்பில் இருக்கும் வா.சே.ஜெயபாலன் உணர்வார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.



jeyapalan_india_attack3.jpg

 
இதனை  தொடர்ந்து ஜெயபாலனுக்கு போலீஸ்  பாதுகாப்பு  வழங்க பட்டது.

தொடந்து சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது தமிழ் உணர்வாளர்கள் அரங்கம் நிறைய இருந்ததால் ஜெயபாலனால் சமாளிக்க முடியவில்லை . அதேவேளை ஜெயபாலனுக்கு ஆதரவாக அவரது மணவி  தமிழ் உணர்வாளர்களை தகாத வார்த்தையில் திட்டினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் அவருடனும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.



jeyapalan_india_attack4.jpg

கடைசியில்  தமிழ் உணர்வாளர்களால்  நையப்புடைபட்டார். ஜெயபாலனுடன்  லீனா மணிமேகலை, சோமிதரன் ஜெயபாலன் மனைவி பிள்ளை மற்றும் சில நபர்களும் வந்திருந்தனர் .
 
இறுதியில் தமிழ் உணர்வாளர்களால் மீது காவல்துறையிடம் முறைப்பாடு செய்தார் ஜெயபாலன்.

 

http://www.pathivu.com/news/31895/57//d,article_full.aspx

  • Replies 81
  • Views 7.1k
  • Created
  • Last Reply

ஈழத்தமிழர் போர்வையில் காட்டி கொடுக்கும் சிலர் புதிதாக அவதாரமெடுத்துள்ளனர் உணர்வாளர்கள் கவனம் .....

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவன் யாழ் இணையத்தை மஞ்சள் பத்திரீகை ஆக்கவேண்டாம்.

 

திரை அரங்கிற்க்கு வந்த தமிழ் உணர்வாலர்கள் பலர் உட்பட பெரும்பாலானவர்களுக்கு படம் தமிழருக்கு எதிரானதல்ல சார்பானது என்ற கருத்தே இருந்தது. குரல்மூலம் அவர்கள் அதனை வெளிப்படுத்தினார்கள்.                                                                                                                    

 

  மிக சிறுபாண்மையினரே ஒருசிலர் மட்டுமே கூச்சல்போட்டனர். கவிதமன் போன்ற ஒரிருவர் மட்டுமே நியாயமான சந்தேகங்களை கேட்டு உரையாடினர். ஒரு கைகலப்போ பொலிஸ் முறைப்பாடோ இடம்பெறவில்லை.

 

பதிவு போன்ற பதிரிகைகள் ஆதாரமில்லாத மஞ்சள் செய்திகளை யாழில் வெளியிடுவது வேதனை அளிக்கிறது. அத்தகைய சேதிகளை யாழில் மறுபிரசுரம் செய்ய  மோகன் நிழலி போன்றவர்கள் எப்படி அனுமதிக்கிறார்கள்.

 

ஜெர்மனியைச் சேர்ந்த என் உறவினரான இலங்கைபெண்ணை டெல்ஹியில் தடுத்து வைத்துத் துன்புறுத்தி அவர் தப்பி ஓடிய சம்பவம் தொடர்பாக திருமுருகனோடும் வளர்மதியோடும் எனக்கு மோதல் நடைபெறுவது இரகசியமல்ல. ஈழம் பற்றி அவர்கள்பேசுவதாலேயே பொலிஸில் முறையிடவில்லை என்பதும் இரகசியமல்ல.

 

. என்னை சுடப்போவதாக மே17 ஆட்க்களுடன் வந்த குட்டையான ஒருவர் (வட்டுக்கோட்டை என்றாராம்) சொன்னதால்தான் என் அனைவி வாசுகியும் சிலரும் அவரை திட்டினார்கள். 

 

மோகனும் நிழலியும் யாழில் ஆதரமில்லாத மஞ்சள் செய்திகளை வெளியிடும் இணையதளங்களில் இருந்து செய்திகள் பகிரபடுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேணும்.

Edited by poet

கொலை மிரட்டலுக்கான ஆதாரம்?   ஓ இதெல்லாம் லீனா மணிமேகலை அம்மையாரோட திரைக்கதையா?

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு சினிமாவை சினிமாவாக பார்க்க தெரியாதா ?

விளையாட்டை விளையாட்டாக பார், சினிமாவை சினிமாவாக பார் அதில் அரசியல் கலக்காதே என்று அவ்வப்போது குரல்கள் எழும், ஆனால் இந்த குரல்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக எழாது. ஆதிக்கத்தில் உள்ளவனை காப்பாற்ற நடுநிலை எடுக்கும் அறிவுசீவிகள் எடுக்கும் நிலை தான் இது.

With You, Without You என்ற படமும் அப்படித் தான். ஆதிக்கத்தில் உள்ள சிங்களவனுக்கு இந்த படம் புத்தி சொல்லலாம். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழனின் பிரச்சனையை பதிவு செய்ய தவறி இருக்கிறது. இது சிங்களவர்களுக்கான படம். தற்போது நடந்து வரும் போலி "மறுவாழ்வு" திட்டத்திற்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு படம் என்றே இதை காண வேண்டியுள்ளது. சிங்களவர்களுக்கு வலி உள்ளது என்று படம் சொல்கிறது. இது தான் போருக்கு பின்னர் அரச பயங்கரவாதத்தை நிகழ்த்தும் சிங்களம் செய்து வரும் பிரச்சாரம். அதை திறம் பட செய்திருக்கிறது இந்தப் படம். ஒரு கலை நேர்மையாக இருக்கும் போது மட்டுமே அது சிறந்த படைப்பாக மாறுகிறது. இந்த படத்தில் அந்த நேர்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். திரைப்படம் பல கேள்விகளை எழுப்புகிறது.

1. படத்தின் களம் குறிப்பாக காலம் தெளிவாக இல்லை. 2009 ஈழ போருக்கு முந்தையதா? அதற்கு பின்னானதா? கதை சொல்லவில்லை

2. திரிகோண மலையில் ஒரு ராணுவ முகாமில் தமிழ் பெண் சில சிங்கள ராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது, திரிகோணமலையில் கடந்த பத்தாண்டுகளாக தமிழர் படைகளுக்கும் - சிங்கள இராணுவத்திற்கும் மோதல் நடந்ததா என்ற கேள்வி எழுகிறது? பதில் இல்லை

3. படத்தின் நாயகி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறார், எப்படி? யாழ்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு சிங்களம் பேசுவது இலகுவானதா?

4. சிங்களவர்களால் பிரச்சனை என்று நம்பும் ஒரு பெண், சிங்களப் படைகளால் தனது சகோதரர்களை பலிகொடுத்த ஒரு பெண், பெற்றோர்களை தொலைத்து தனியாக இருக்கும் ஒரு தமிழ் பெண், ஒரு சிங்கள ஆணைப் பற்றி எந்த தகவலும் தெரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா? போர் காயங்களை தமிழர்கள் மறக்கத்துவங்கி விட்டார்கள் என்று இயக்குனர் நிறுவ முயல்கிறாரா?

5. யாழ்பாணத்தில் உள்ள திரையரங்குகளில் போர் காட்சிகளை மட்டுமே திரையிடுவார்கள் என்று அந்த தமிழ் பெண் கூறுகிறார். 

6. ஓய்வு பெற்ற சிங்கள ராணுவ விரனை திருமணம் செய்த அப்பெண், அவன் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் காப்பாற்றியவன் என்று தெரிந்தவுடம் அதிர்ச்சிக்குள்ளாகுவதாக கதை சொல்கிறது. ஆனால் அவனை மன்னித்து மீண்டும் அவனுடன் வாழ முனைகிறாள். தொடர்ந்து மனச்சிதைவுக்குள்ளாகும் அவள், உன்னைக் காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடு என்றவாறே தற்கொலை செய்து கொள்கிறார். இது தமிழர்கள் சிங்களவர்கள் அன்பு செலுத்தினால், அவன் பல கொலைகளை செய்த ராணுவ வீரனாகவும் இருந்தாலும் மன்னிக்கிறார்கள் என்றவாறு புரிந்து கொள்ளப்படுகிறது. ஈழ இனப்படுகொலை மறந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதைப் போன்றது இது.

ஒரு படத்தின் திரைக்கதை, படத் தொகுப்பு, ஒளிப்பதிவு என்று எல்லாமும் உலகத் தரத்துடன் இருந்தாலும் அது சொல்ல வரும் நியாயம் என்பது மிக முக்கியம், குறிப்பாக அரசியல் சார்ந்த படங்கள். அந்த வகையில் இந்த படம் கண்டிப்பாக அரசியல் நியாயத்தை மழுப்பும் செயலையே செய்திருக்கிறது.
 - Saravanan Kumaresan

Poet, you cannot be intellectual as well as popular at the same time. Do not waste your time answering these comments if you want to be intellectual.

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு

தொழில்

வியாபாரம்

கொள்கை

விடுதலை..............

 

இவை  ஒவ்வொன்றும்

ஒவ்வொன்றுக்கு முரணானவை

இவற்றை ஒரு சமனுக்குள் கொண்டுவர முடியாது

தோழர் அதைச்செய்ய முயல்கிறார்

அதனாலேயே  அவமானப்படுகிறார்

தேவையற்ற  சிக்கல்களுக்குள் மாட்டிக்கொள்கின்றார்..

 

எமது சொத்து ஒன்று  இவ்வாறு  முரண்பாடுகளுக்குள் மாட்டிக்கொண்டு அவமானப்படுவது கவலை தருகிறது.. :(  :(  :(

  • தொடங்கியவர்

 poet /// ஆதாரம் இல்லாமலா  வீடியோ போட்டு இருக்கிறது  .

ஈழத் தமிழ் போராட்டத்தை மிக மோசமாக சித்தரித்து பல தமிழ்ப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதை யாரும் எதிர்ப்பதற்கு முன்வரவில்லை. பில்லா 2 திரைப்படத்தில் கொலைகளும் கள்ளக்கடத்தலும் செய்யும் கதையின் நாயகன் ஒரு ஈழத் தமிழனாகத்தான் சித்தரிக்கப்பட்டான்.

ஆதரவாக எடுக்கின்றோம் என்கின்ற பெயரில் கூட சில இயக்குனர்கள் ஈழத்தமிழரின் போராட்டத்தை கேனைத்தனமாக சித்தரித்திருப்பார்கள்.

ஆனால் இதை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லை.

ஒரு சிங்கள இயக்குனர் தன்னுடைய பார்வையில் இருந்து ஒரு படத்தை எடுத்தால், அதைப் இப்படி எதிர்ப்பதும், குழப்பங்கள் செய்வதும் முட்டாள்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ் போராட்டத்தை மிக மோசமாக சித்தரித்து பல தமிழ்ப் படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதை யாரும் எதிர்ப்பதற்கு முன்வரவில்லை. பில்லா 2 திரைப்படத்தில் கொலைகளும் கள்ளக்கடத்தலும் செய்யும் கதையின் நாயகன் ஒரு ஈழத் தமிழனாகத்தான் சித்தரிக்கப்பட்டான்.

ஆதரவாக எடுக்கின்றோம் என்கின்ற பெயரில் கூட சில இயக்குனர்கள் ஈழத்தமிழரின் போராட்டத்தை கேனைத்தனமாக சித்தரித்திருப்பார்கள்.

ஆனால் இதை எல்லாம் யாரும் எதிர்க்கவில்லை.

ஒரு சிங்கள இயக்குனர் தன்னுடைய பார்வையில் இருந்து ஒரு படத்தை எடுத்தால், அதைப் இப்படி எதிர்ப்பதும், குழப்பங்கள் செய்வதும் முட்டாள்தனம்.

 

நீங்கள்

இப்படியான வேளைகளில் மட்டும்  நித்திரையால் எழும்பிவருவதால்..........

நாட்டு நடப்புக்களை  அறிய  சந்தர்ப்பங்கள் இல்லை...... :(

படத்தின் இயக்குனர் தான் நினைத்ததை சொல்லி இருக்கிறார்..அவரின் மீதான நம்பகத் தன்மையை நாம் பரிசீலிக்க வேண்டியதை விட,படத்தை தமிழர்களுக்கு திரையிட்டுக் காட்டி ,ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்க முனைபவர்களின் பின் புலம் குறித்து சிந்திப்பது தமிழர்களுக்கு அவசியமான ஒன்று....இப்படம் திரையிடுவதன் மூலம் தமிழர்களின் மத்தியில் சிங்களர்களின் பேரன்பை..? புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழர்களுக்கு உணர்த்த முயன்றிருக்கிறார்கள்...நாமும் அப்பேரன்பை நம்புவோமாக...ஆமென்.

 

http://kalakam1987.blogspot.in/2014/06/with-youwith-out-you-ngo.html

தகவல்களுக்கு நன்றிகள் வேந்தன். இதோடவது மனுஷன் திருந்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாம இதை ஒரு "கருத்து இன அழிப்பு" நடைபெறுகிறது என்று கட்டுரையா எழுதி "அந்த" இணையத்தளத்தில கொடுத்தா என்ன? இது நமக்கு கைவந்த கலையாச்சே  :lol:

 

uwfdbjft.jpg

யார் மனதையும் புண்படுத்தவல்ல :wub:

Poet, you cannot be intellectual as well as popular at the same time. Do not waste your time answering these comments if you want to be intellectual.

So as far as you are concerned , any body who functions against the concept of an independent state of Tamil Eelam is an intellectual is it ? As I am aware you people trying to bully the Tamil people into submission that Eealam is not possible, your tactics might work with communities that are premitive and backwards , but not with the Eelam Tamils

இந்த சரவணன் குமரேசன் இலக்கிய வட்டங்களை இன்பசுற்றுலா கூட்டி போறவர் இவர் எல்லாம் ஜெயபாலன் போன்றோரை பற்றி பேச அருகதை அற்றவர் முதல் குமரேசன் பெண்களுடன் நல்ல மனிதனா இருக்க சொல்லுங்க .

விளையாட்டை விளையாட்டாக பார், சினிமாவை சினிமாவாக பார் அதில் அரசியல் கலக்காதே என்று அவ்வப்போது குரல்கள் எழும், ஆனால் இந்த குரல்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவனுக்கு ஆதரவாக எழாது. ஆதிக்கத்தில் உள்ளவனை காப்பாற்ற நடுநிலை எடுக்கும் அறிவுசீவிகள் எடுக்கும் நிலை தான் இது.

With You, Without You என்ற படமும் அப்படித் தான். ஆதிக்கத்தில் உள்ள சிங்களவனுக்கு இந்த படம் புத்தி சொல்லலாம். ஆனால் பாதிக்கப்பட்ட தமிழனின் பிரச்சனையை பதிவு செய்ய தவறி இருக்கிறது. இது சிங்களவர்களுக்கான படம். தற்போது நடந்து வரும் போலி "மறுவாழ்வு" திட்டத்திற்காக எடுக்கப்பட்டுள்ள ஒரு படம் என்றே இதை காண வேண்டியுள்ளது. சிங்களவர்களுக்கு வலி உள்ளது என்று படம் சொல்கிறது. இது தான் போருக்கு பின்னர் அரச பயங்கரவாதத்தை நிகழ்த்தும் சிங்களம் செய்து வரும் பிரச்சாரம். அதை திறம் பட செய்திருக்கிறது இந்தப் படம். ஒரு கலை நேர்மையாக இருக்கும் போது மட்டுமே அது சிறந்த படைப்பாக மாறுகிறது. இந்த படத்தில் அந்த நேர்மை இருக்கிறதா என்றால் இல்லை என்றே கூறலாம். திரைப்படம் பல கேள்விகளை எழுப்புகிறது.

1. படத்தின் களம் குறிப்பாக காலம் தெளிவாக இல்லை. 2009 ஈழ போருக்கு முந்தையதா? அதற்கு பின்னானதா? கதை சொல்லவில்லை

2. திரிகோண மலையில் ஒரு ராணுவ முகாமில் தமிழ் பெண் சில சிங்கள ராணுவ வீரர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது, திரிகோணமலையில் கடந்த பத்தாண்டுகளாக தமிழர் படைகளுக்கும் - சிங்கள இராணுவத்திற்கும் மோதல் நடந்ததா என்ற கேள்வி எழுகிறது? பதில் இல்லை

3. படத்தின் நாயகி சரளமாக சிங்களத்தில் உரையாடுகிறார், எப்படி? யாழ்பாணத்தை சேர்ந்தவர்களுக்கு சிங்களம் பேசுவது இலகுவானதா?

4. சிங்களவர்களால் பிரச்சனை என்று நம்பும் ஒரு பெண், சிங்களப் படைகளால் தனது சகோதரர்களை பலிகொடுத்த ஒரு பெண், பெற்றோர்களை தொலைத்து தனியாக இருக்கும் ஒரு தமிழ் பெண், ஒரு சிங்கள ஆணைப் பற்றி எந்த தகவலும் தெரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொள்வாரா? போர் காயங்களை தமிழர்கள் மறக்கத்துவங்கி விட்டார்கள் என்று இயக்குனர் நிறுவ முயல்கிறாரா?

5. யாழ்பாணத்தில் உள்ள திரையரங்குகளில் போர் காட்சிகளை மட்டுமே திரையிடுவார்கள் என்று அந்த தமிழ் பெண் கூறுகிறார். 

6. ஓய்வு பெற்ற சிங்கள ராணுவ விரனை திருமணம் செய்த அப்பெண், அவன் பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் காப்பாற்றியவன் என்று தெரிந்தவுடம் அதிர்ச்சிக்குள்ளாகுவதாக கதை சொல்கிறது. ஆனால் அவனை மன்னித்து மீண்டும் அவனுடன் வாழ முனைகிறாள். தொடர்ந்து மனச்சிதைவுக்குள்ளாகும் அவள், உன்னைக் காயப்படுத்தியதற்கு மன்னித்துவிடு என்றவாறே தற்கொலை செய்து கொள்கிறார். இது தமிழர்கள் சிங்களவர்கள் அன்பு செலுத்தினால், அவன் பல கொலைகளை செய்த ராணுவ வீரனாகவும் இருந்தாலும் மன்னிக்கிறார்கள் என்றவாறு புரிந்து கொள்ளப்படுகிறது. ஈழ இனப்படுகொலை மறந்துவிடுங்கள் என்று சொல்லாமல் சொல்வதைப் போன்றது இது.

ஒரு படத்தின் திரைக்கதை, படத் தொகுப்பு, ஒளிப்பதிவு என்று எல்லாமும் உலகத் தரத்துடன் இருந்தாலும் அது சொல்ல வரும் நியாயம் என்பது மிக முக்கியம், குறிப்பாக அரசியல் சார்ந்த படங்கள். அந்த வகையில் இந்த படம் கண்டிப்பாக அரசியல் நியாயத்தை மழுப்பும் செயலையே செய்திருக்கிறது.
 - Saravanan Kumaresan

 

 

 

உப்படியான தமிழ் நாட்டு ------- கணக்கில் யார் எடுக்கின்றார்கள் .

சும்மா குரைத்து விட்டு படுத்துவிடுங்கள் .

Edited by நிழலி
அவமரியாதைக்குரிய சொல் நீக்கப்பட்டது

இந்த சரவணன் குமரேசன் இலக்கிய வட்டங்களை இன்பசுற்றுலா கூட்டி போறவர் இவர் எல்லாம் ஜெயபாலன் போன்றோரை பற்றி பேச அருகதை அற்றவர் முதல் குமரேசன் பெண்களுடன் நல்ல மனிதனா இருக்க சொல்லுங்க .

 

ஜெயமோகன் தனது வலை தளத்தில் பெண் எழுத்தாளர்கள் பல்வேறு உத்திகள் மூலம் ஊடக வெளிச்சம் பெறுகிறார்கள் என்று எழுதினர்.  அது தான் நீங்கள் கேட்ட தகுதிய?

  • கருத்துக்கள உறவுகள்

'வித் யூ, வித்அவுட் யூ' சர்ச்சைக்குரிய படமா?- ஒரு சிறப்புப் பார்வை

 

 

 'வித் யூ, வித்அவுட் யூ' என்ற ஆங்கிலத் தலைப்புடன் 2012-ல் வெளியாகி சர்வதேச விழாக்களில் பல விருதுகளை அள்ளிக் குவித்த படம்தான், இலங்கையைச் சேர்ந்த பிரசன்ன விதானகே இயக்கிய 'ஒப நத்துவா ஒப எக்கா' எனும் சிங்களப் படம்.

 

'டைரக்டர்ஸ் ரேர்' என்ற தலைப்பில் சர்வதேச விழாக்களுக்கு செல்லும் படங்களை, பி.வி.ஆர் நிறுவனம் இந்தியா முழுவதும் விநியோகம் செய்து வந்தனர். அந்த வகையில், சென்ற வாரம் அவர்களால் வெளியிடப்பட இருந்த இப்படம், சர்ச்சைக்குள் சிக்கி பாதுகாப்பு குறித்த காரணங்களால் சென்னைத் திரையரங்குகளிலிருந்து ஞாயிறு அன்று விலக்கிக் கொள்ளப்பட்டது.

 

இலங்கை அரசால் முதலில் தடைசெய்யப்பட்டு, பிறகு வெளியிடப்பட்ட இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோஸில் செவ்வாய்க்கிழமை சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. தமிழ் ஸ்டூடியோ அமைப்பு இதற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தது.

 

சர்ச்சைக்குரிய விஷயங்கள் படத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? இப்படம் இலங்கைத் தமிழர்களை தவறாக சித்தரிக்கிறதா? என்ற தேடல் படம் பார்க்க வந்த பலரிடமும் தெரிந்தது. இவர்களைத் தவிர சினிமா ஆர்வலர்களும் படத்திற்கு வந்திருந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் சீட்டில் அமர்ந்தும், இடம் கிடைக்காத நூற்றுக்கணக்கானோர் நின்றபடியும் இப்படத்தைப் பார்த்தனர்.

 

போருக்குப் பிந்தைய கதை

உள்ளூர் ரசிகர்கள் எளிதில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் உள்ளதால், இப்படத்தின் கதையை விவரிக்க விரும்புகிறேன். எப்போதும் ஒரு கதை, வாழ்வில் நடந்த நிகழ்வுகளாய் சொல்லப்படும்போது, அது ஒரு மையக் கதாப்பாத்திரத்தின் துணையினால் சொல்லப்படுவதுண்டு. இயக்குனர் அக்கதாப்பாத்திரத்தின் வாயிலாக, தாம் கூற நினைத்ததை கூறிவிடுவார். சரத்சிறி எனும் நடுத்தர வயது சிங்களத்தவர் பார்வையிலே இப்படத்தின் கதை துவங்குகிறது. உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய காலம்.

 

தமிழர்களும் வாழும் மலைப்பகுதியில் அடகு கடை நடத்தி வரும் அவர் முகத்தில் எப்போதும் அவமானம், இழிவுணர்ச்சி, இனம் புரியாத வெறுமை. பைக்கில் ஏறி பயணம் செய்வது, நகைகளை வாங்கிக்கொண்டு பணம் தருவது, தொலைக்காட்சியில் டபிள்யூ.டபிள்யூ.எஃப் சண்டையைப் பார்ப்பது. இதுதான் இவரின் வாடிக்கை.

தன் கடைக்கு நகைகளை அடகு வைக்க வரும் செல்வி (தமிழ்ப் பெண்) மீது இவருக்கு ஈர்ப்பு. உறவுகளை, உடமைகளை இழந்து நிற்கும் செல்வி தன் சொந்த ஊரான யாழ்பாணத்திலிருந்து விலகி வந்து தன் இனத்தவர் நடத்தி வரும் ஓர் இல்லத்தில் வாழ்ந்து வருகிறார்.

 

வறுமையால் வயது முதிந்தவரை மணக்க வேண்டியச் சூழல். இதை அறியும் சரத், செல்வியிடம் தன் காதலை கூறி, தன் வாழ்க்கைத் துணைவியாக வருமாறு வேண்டுகிறான். இனம், மதப் பிரிவினையும் கடந்து இவர்கள் இணைகின்றனர். இவ்விருவரும் மணம் முடிக்கும் இப்படலத்திலிருந்து படத்தின் மையக்கதை துவங்குகிறது.

இதுவரை சரத் வாழ்வில் பரவிக் கிடந்த தனிமை, செல்வியின் வருகையால் உடைகிறது. தான் தேடிய ஏதோ ஒன்றிற்கான விடையை அவளிடம் காண்கிறான். தனியே சென்ற மோட்டார் பயணங்கள் இப்போது டபுள்ஸாக மாறுகிறது. வசதியான வாழ்க்கை செல்வியையும் முதலில் ஈர்க்கிறது. வீட்டில் ஆடலுடன் புன்னகை சிந்திடும் செல்வியினால், சரத் ஆறுதல் காண்கிறான். இருவரும் கட்டிலறையில் காதல் கொள்கிறார்கள்.

 

கணவனுடன் தன் ஆசைகளைப் பகிரத் தொடங்கும் செல்வி, தான் கடந்த பாதையை, தன் சின்ன சின்ன ஆசைகளை கூறத் தொடங்குகிறாள். இதற்கெல்லாம் அவன் செவிசாய்க்கவில்லை, இவன் தேடிய ஒன்றை மட்டும் அவளிடம் எப்போதும் கண்டான். அவளைக் கண்டிட இவன் மனம் விழையவில்லை. சரத்துடைய பின்னணியை அறிய நினைக்கும் செல்விக்கு அவனிடமிருந்து விடை கிடைக்காமலே இருந்தது.

 

இவள் பார்க்கும்போதெல்லாம் அவன் கடையில் இருப்பான், இல்லை சோகம், சந்தோஷம், பூரிப்பு எதையும் பிரதிபலிக்காத ஒரு முகத்துடன் தொலைக்காட்சியில் சண்டைக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பான். ஒரு மண வாழ்க்கைக்குரிய உணர்ச்சிப் பரிமாற்றம் இருவரிடமும் நடக்காமலே இருந்தது.

 

இப்படி வழக்கமாக செல்லும் இவர்களின் வாழ்க்கை சரத்துடன் வேலை பார்த்த நண்பன் வீட்டிற்கு வர மாற்றம் காண்கிறது. அந்நண்பர் செல்வியிடம் யதேச்சையாக உரையாடல் கொள்ள, அப்போது அவள் கணவனின் கடந்த காலத்தை பற்றி கூறுகிறான். தன் கணவன் சிங்களப் படையில் ஒரு ராணுவ வீரனாக இருந்தது செல்விக்கு தெரிய வருகிறது.

 

உறவு, உடமைகளை இழந்து நிற்கும் செல்வியால், தன் இனத்தவரை அழித்தவருக்கு மனைவியாக இருக்கின்ற நிலையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தக் கடந்த காலத்தின் கசப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள், செந்நீரால் மனதில் தீட்டப்பட்டிருந்த கோலம் இருவரின் வாழ்க்கையை கரையானாய் கசிக்கத் தொடங்கியது. சரத், தான் கடந்த காலத்தில் செய்த இழிவிற்கு பிராயச்சித்தம் தேடும் பொருட்டு செல்வியை மணந்திருக்கிறார்.

செல்வி: நீ எத்தனை அப்பாவிகளை கொன்றிருக்கிறாய், எத்தனைப் பெண்களின் கற்புச் சிதைவிற்கு காரணமாக இருந்திருக்கிறாய்?

 

சரத்: (இது எதற்கும் பதில் கூற முடியாத நிலையில்) நான் என் கடமையை மட்டும் செய்தேன்.

செல்வி: உன்னைப் போன்றவர்களால் நான் என் அப்பாவித் தம்பிகளை இழந்தேன், பெற்றோரைத் தொலைத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறேன். ஏன் என்னிடம் முன்பே உன்னைப் பற்றிக் கூறவில்லை?

சரத்: ஏன் நான் ஒரு ராணுவ வீரன் என்று தெரிந்திருந்தால் என்னை மணந்திருக்க மாட்டாயா?

செல்வி: நிச்சயமாக மாட்டேன்!

 

இப்படியே நீண்டு கொண்டே செல்லும் உரையாடல் இருவரின் வாழ்க்கையில் பிளவினை ஏற்படுத்துகிறது. ஜன்னலை நோக்கி அமைந்திருக்கும் இருக்கையில் வானத்தை பார்த்தபடியே நீண்ட நேரங்கள் அமர்ந்தபடி இருக்கும் செல்வி தன் கணவனின் கடந்தகால வாழ்க்கை தெரிந்த பிறகு ஜீவனற்று போகிறாள். விலகிச் செல்லும் இவளிடம் அன்பைக் காட்டுகிறான், கதறி அழுகிறான், பரிவாக மனம் உடைந்து பேசுகையில், தன் நண்பர்கள் இணைந்து ஒரு அப்பாவிப் பெண்ணின் கற்பை சூரையாடியதையும், நண்பர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காக்க, அதை தான் மறைத்த உண்மையையும் அவளிடம் சரத் உரைக்கிறான்.

 

உண்மை செல்வியை உறையச் செய்கிறது. தான் செய்த தவறை உணர்ந்து வருந்தி வாழும் தன் கணவனை தண்டிக்க செல்விக்கு மனமில்லை. இருப்பினும் தான், தன் இனத்தவர் தன் கணவன் நண்பர் போன்றோரால் சந்தித்த இழப்பீடுகள் இவளின் நிம்மதியை சிதைத்துக் கொண்டே வந்தது. அமைதியாக ஜன்னலை பார்த்தபடி அமர்ந்திருந்த இவள், திடீரென்று ஜன்னலின் மீதேறி கீழ் விழுகிறாள். செல்வியுடன் இந்திய செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்த சரத் வழக்கம் போல் தன் பைக்கில் பயணம் செய்து வீடு திரும்பிகிறான். அப்போதுதான் தன் மனைவி தன் உயிரை அழித்துக் கொண்டதை உணர்ந்து கதறுகிறான்.

 

தான் செய்தது தவறு என்பதை உணராமலே மனிதன் மிருகமாய் மாறியதையும், போருக்குப் பின்பு மக்களின் மனதில் படர்ந்து கிடக்கும் அழியாத வடுக்களை விளக்கும் பொருட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதை போன்றுதான் தோன்றியது.

 

போரின் பெயரில் அப்பாவி உயிர்களை சூறையாடிவர்கள் தன் இனத்தவரே ஆனாலும், அவர்களின் இழி செயலை உரைக்கும்படி உரைத்த பொருட்டு, தன் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளையும் தாண்டி இப்படி ஒரு படைப்பை திரையுலகிற்கு வைத்த விதத்தில் பிரசன்ன விதானகே சிறந்த படைப்பாளி என்ற அங்கீகாரம் பெறுகிறார்.

 

அழகியலும் அரசியலும்

போருக்குப் பிந்தைய படங்கள் பலவும் உணர்வுப்பூர்வமாகவே அணுகும் வகையறா கொண்டவையாகவே பெரும்பாலும் இருக்கும். இப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததே.

ஒவ்வொரு காட்சிகளிலும் அழகியலும் அழுத்தமும் நிறைந்திருப்பது, படத்தின் தரத்தை உலக அளவுக்கு உயர்த்திப் பிடிக்கின்றன. குறிப்பாக, காட்சிகளுக்கு வலுசேர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பின்னணி இசையைச் சொல்லலாம். பெரும்பாலும் மெளன கீதம்தான் கையாளப்பட்டுள்ளது. அதுவே, கதாபாத்திரங்கள் மீதான கவனத்தை அழுத்தமாகப் பதியச் செய்கிறது.

 

போரின் கொடுமையைச் சொல்வதற்கு படைப்பில் ரத்தம் தெளிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் இப்படம் நிரூபித்திருக்கிறது. வன்முறைகளை அப்படியே காட்டுவதைவிட, அதனால் ஏற்பட்ட வலியை உணர்வுகளால் உணர்த்துவதுதான் மக்களின் மனதை ஆழமாக தைக்கும் என்பதை அனுபவிக்க முடிகிறது.

இப்படத்தில் மையக் கதாப்பாத்திரமான முன்னாள் சிங்கள ராணுவ வீரர்தான் ஒட்டுமொத்த சிங்கள ராணுவத்தினரின் பிரதிநிதியா? மற்றொரு மையக் கதாப்பாத்திரமான செல்விதான், எஞ்சியிருக்கும் தமிழர்களின் பிரதிநிதியா? - இப்படி ஒரு கேள்வி எழக்கூடும். அப்படி இல்லை என்பதை படத்தின் கதையும், திரைக்கதையும் உணர்த்திவிடுகின்றன.

 

ராணுவத்தில் இருக்கும் ஒருவன் தன் கடமையைத்தான் செய்தேன் என்று சுலபமாகத் தப்பித்துக்கொள்ளும் சராசரி மனிதனைக்காட்டிலும் பிறருக்கு இழைத்த கொடுமைகள் மனதில் கரையானை அரிக்க குற்ற உணர்வு கொள்ளும் ஒரு மனிதார்த்த உணர்வுகளைக் கொண்ட மனிதனாகவே அந்தக் கதாபாத்திரத்தைப் பார்க்க முடியாதா?

தன் குற்ற உணர்வில் இருந்து விடுபடுவதற்காக, தனக்கு மனைவியான தமிழ்ப் பெண்ணின் காலைப் பிடித்துக் கதறி மன்னிப்புக் கோரும் சரத்-தின் செயல் உணர்த்துவது என்ன?

 

வீட்டில் மர்மப் பெட்டியில் இருக்கும் துப்பாக்கியை அவ்வப்போது பார்க்கும் செல்வி, தனது கணவனின் முந்தைய வாழ்க்கை தெரியவந்ததும் அந்தத் துப்பாக்கியை வைத்து அவரை கொல்ல முற்பட்டுத் தோற்பதன் மூலம் சொல்ல வருவது என்ன?

 

தன் தவறுகளை மன்னித்துவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பியவளுடன், புதிய வாழ்க்கையைத் தொடர மகிழ்ச்சியுடன் முனைகிறான் சரத். ஆனால், தன் கணவரின் மனநிலையைப் புரிந்துகொண்டாலும், அவனுடன் எஞ்சி இருக்கும் காலத்தில் வசதியுடன் வாழ முற்படாமல், தன் இனத்தவரின் வலியைச் சுமந்துகொண்டு வாழ்க்கையை முடித்துக்கொள்ள முடிவு செய்த செல்வியின் செய்கை உணர்த்துவது என்ன?

 

கடைசி வரை செல்வியின் எண்ண ஓட்டத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடிந்திடாத இயலாமையில் வழக்கமான குற்ற உணர்வுடன் கூடிய தனிமை வாழ்க்கைக்கு நகரும் சரத் மூலம் சொல்ல முற்படுவது என்ன?

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் இப்படம், அவரவர் மனநிலை, ரசனை, அறிதலுக்கு ஏற்ப அந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடிக்கொள்ளவும், அடுத்தகட்ட நகர்வுக்கான விவாதத்தைத் தூண்டவும் சொல்கிறது இந்தப் படைப்பு.

 

மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றை காதல் எப்போதும் கடந்து வெற்றிகொள்ளும் திரைப்படங்களை பார்த்துப் பழகியவர்களுக்கு, காதலும்கூட இனம், மொழி ஆகியவற்றுக்குள்ளே செயல்படும் உறவுகளை மீறி வெற்றிகொள்ளாது என்பதைக் கூறும் இந்தப் படத்தை ஏற்றுக்கொள்வது சற்று சிரமம்தான். 

 

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article6148278.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இன அழிப்பை இப்படியான திரைக்கதைகளின் வாயிலாக... சாதாரணமாக்கி.. மக்களின் மனங்களில் உள்ள இன அழிப்புத் தொடர்பான எண்ண அலைகளை மழுங்கடிக்கும் குறுகிய நோக்கம்.. இப்படத்திலும்.. பின்னணியிலும் உள்ளது.

 

தமிழின அழிப்புக்கு திரைப்படங்கள் தீர்வு சொல்ல முடியாது. சர்வதேச சட்டங்களும் நீதிமன்றங்களும் மட்டுமே நீதி சொல்ல முடியும். சொல்ல வேண்டும். இன்றேல்.. மீண்டும் ஒரு போரும் பழிவாங்கல் அழிவுகளும் தான் சரியான பதிலை சிங்களத்துக்குச் சொல்ல முடியும்...! :icon_idea:


சிங்கள இராணுவம் ஆயுத முனையில் தமிழ் பெண்களை பயமுறுத்தி திருமணம் செய்து கொள்ளும் அநாகரிகத்தை.. இன அழிப்பின் அம்சத்தை மூடி மறைக்கும் நோக்கமும் இதில் உள்ளது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 Marx_color2.jpg j_zps811cae9e.jpg

 

உருவத்திலை Karl Marx மாதிரி இருக்கிறார்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

hussein_saddam.jpg

 

 

இவரும் தானே. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொண்ட கொள்கை மாறாமல் தூக்கு மேடையிலும் அமெரிக்கனை திட்டித்தீர்த்த தியாகி.. :D

  • கருத்துக்கள உறவுகள்


இந்தப் பாட்டை பாடி மக்களை உசுப்பேத்தித் திரிந்த... உமாமகேஸ்வரன் குழுவினர்.. யுத்தம் கண்டனரோ இல்லையோ....... பல கண்டங்கள் கண்டனர். அந்தப் பாசறையில் இருந்து வந்த தோழர்களை.. கால்மாக்ஸ். சதாமோடு.. ஒப்பிடுதல் தவறு தான்..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கை மாறாமல் தூக்கு மேடையிலும் அமெரிக்கனை திட்டித்தீர்த்த தியாகி.. :D

 

இதுக்கு பச்சை

அதே தன்னுடைய  இனத்தில் ஒருத்தில கொள்கையில் விடாப்பிடியாக .இருந்தால்  அவன் முட்டாள்......??? :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.