Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தின் வாசனை ~ மலேசிய விமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை 
எத்தனை தடவை சொன்னேன்,
அந்த கறுப்புப் பை கவனம் என்று  
மனைவி கவலைப்பட்டாள்,
அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே...
 
காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் 
அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள்
இன்னும் 10 நாட்கள்  கடற்கரையில்
உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ...
 
இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு
தொலைபேசி செய்தியில் மூழ்கிப்  போனான்
நாளைய நாள் கண் முன்னே நடமாடியது,
அலுவலகத்தில் முக்கிய மூன்று  சந்திப்பு,
நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும்
அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ...     
 
முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார்,
நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் 
மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்,
பேரக் குழந்தைகளை கவனிப்பதே  அவள் வேலை
அடுத்த வாரம்  அவளை முருகனிடம் அழைத்துப் போகவேணும்,
உடைந்த மூக்குத்தியும் மாற்றவேணும் ...
  
பாதிரியார் வந்தவரைய்  பார்த்து முறுவலித்தார்,
கையில் இருந்த பைபிளில் தொலைந்து போனார் 
26 அநாதை சிறுவர்கள்,  யார் யார்க்கு என்ன தேசமோ  
கவலையானார், இது பெரும் பொறுப்பு தான்   
நல்லபடியாக எல்லாம் அமைய வேணும்
யேசுவே, கண் கலங்க மனதுக்குள் மன்றாடினார்...
 
சிறுவன் கணணி விளையாட்டில் சாப்பிட மறுத்தான்,
அன்னை சலித்துக்கொண்டாள் 
அப்பாவிடம் சொல்லி உன்னை என்ன செய்கிறேன்,
பார் சிறுவனுக்கு பயம் காட்டினாள்
அப்பா சிறுவனிடம் பாசமாக கெஞ்சினார்,
முதலில் சாப்பாடு அதன் பிறகு தான் விளையாட்டு ...
 
உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ...
 
யாரோ ஒருத்தி தலைக்கு மேல் இருந்த
பெட்டியை தட்டி தடவி இறக்கிக்கொண்டு இருந்தாள் 
அதை இங்கு தான் வைத்தேனா,
இல்லை பெரிய பெட்டியில் போட்டேனா,
தலையை சொரிந்தாள்,
போன மாதம் வாங்கிய புகைப்பட கருவி,
கொஞ்சம் கவலையானாள்,
எங்கும் போகாது காலையில் தேடுவோம் நினைத்துக்கொண்டாள்...
 
கைக் குழந்தை சிணுங்கிற்று,
அம்மா புட்டியில் பாலை ஊற்றி வாயில் திணித்தாள் 
குழந்தை அமிர்தம் கண்டது,
அன்னையை பார்த்து கண்ணை சிமிட்டியது,
பால் வெளியே வழிந்தது
அன்னை குழந்தை முகத்தை கொஞ்சினால், தடவினாள் ,
கனவுகளோடு சஞ்சரித்து  தூங்கிப் போனார்கள்.. 
 
அழகிய அந்த பெண்
கள்ளம்  கபடம் இல்லாமல் சிரித்தாள்,  
ஓடி ஓடி உபசரித்தாள், சுத்தம் செய்தாள் 
குழந்தைகளுக்கு பரிசு தந்தாள்,
முதியவருக்கு போர்வை தந்தாள்,
விளக்கை அணைத்து வணக்கம் சொன்னாள்,
இன்னும் ஏதும் வேணுமா என்று திரும்ப கேட்டாள்,
அயர்ச்சியோடு பணிவிடை செய்தாள் ..
 
ஒருவன் வக்கீல், ஒருவன் நோயாளி,
ஒருவன் ஆசிரியன், ஒருவன் படைப்பாளி...
ஒருத்தி மணப் பெண், ஒருத்தி கர்ப்பிணி,
ஒருத்தி சினிமா பிரபலம், ஒருத்தி மூதாட்டி ...
அவர் அவர் வாழ்க்கை, இயந்திரமாய் 
கரையும் பொழுதுகள், எல்லோரும் நல்லவரே ...
 
எங்கோ ஒரு தேசம், இருள் சூழ்ந்த நேரம்,  
தூரத்தில் இரைச்சல், இவன் தான் முதலில் அவதானித்தான் 
சிறிதாய் வெளிச்சம், அதுவாய் இருக்குமோ,
பரபரப்பானான், செய்தி அனுப்பினான்
அங்கே தாடியோடு இருந்தவன் சுருட்டை பற்ற வைத்தான்,
உள்ளே இழுத்து வெளியே புகையை விட்டான்
 
உனக்கு பாடம் நான் போதிப்பேன் இன்று,
மனதுக்குள் கருவிக்கொண்டான், 
எழுந்து சென்று கட்டளை இட்டான்,
இயந்திரங்கள் முடுக்கப்பட்டன, 
300 கனவுகளை  சுமந்து வந்த மலேசிய பட்சி நான் ..
சின்னத் திரையில் தெளிவாய் முடக்கப்பட்டேன்     
 
உஷ்ணம் உணரப்பட ஒளிக் கீற்றுகள் சீரிப்பாய
மரணத்தின் வாசனை மண்ணை தொட்டது,          
அனர்த்தம் நிகழ்ந்தது, அனைத்தும் அதிர்ந்தது
அவள், அவன், பெரியவர், பாதிரி, குழந்தை, காதலன் ....
எல்லோருக்கும் ஒரே புள்ளியில் அஸ்தமனம்,
நான் புள்ளியாய் சிறு புள்ளியாய் பஸ்மம் ஆகிறேன்
மீண்டும் ஒருமுறை செய்தியாய் மாறுகிறேன்..
"Missile downed Malaysia Airlines"  CNN, BBC அலறுகிறது!!
 
  • கருத்துக்கள உறவுகள்

பச்சை முடிந்துவிட்டது நாளை இடப்படும்....வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொருத்தரும் அடுத்த நிமிடத்ததை நினைத்துகொண்டே வாழ்கின்றான்....

சசி அண்ணா நன்றாக எழுதியுள்ளீர்கள்.   நாளை நம் கையில் இல்லை மீண்டும் நினைவுறுத்துகின்றது இந்த கோர விபத்து.  அந்த விமானத்தில் இருந்த ஒவ்வொருவரது எண்ணங்கள், ஆசைகள், கற்பனைகள் இப்படி பல விடயங்கள் ஒரு நிமிடத்தில் .............? :(

தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை எதிர்பாக்கின்றோம்.

சசி ,ஒரு புள்ளியில் அத்தனை உயிர்களையும் அவர்தம் நினைப்புகளையும்  இணைத்த விதம் அபாரம் .

 

 

"உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ..." ------அர்ஜுன் . :icon_mrgreen: 
 

அடடா...சசிக்கு கவிதை எழுதவும் வருமா? இது உங்கள் முதல் முயற்சியா?

 

கவிதையின் மொழி சர சர வென்று பல இடங்களில் மாறி மாறி வந்து சுவை தருகின்றது. தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நீர்க்குமிழிபோல் நிலையற்ற வாழ்க்கை ஆனாலும் அதற்குள் எத்தனை ஆதங்கங்கள். அதிகாலையில் சசியின் கவிதை மனதைக்கனக்க வைத்தது. மரணத்தின் வாசைன மண்ணைத் தொட்ட வேளை எத்தனை எதிர்பார்ப்புகள் ஏக்கங்களாகவே அஸ்தமித்துவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

சசி உங்கள் ஆதங்கம் புரிகின்றது. மலேசிய விமானத்தின் பரிதாபம் மட்டுமல்ல
இன்னும் எத்தனையோ இழப்புக்கள் உங்களை வாட்டியிருக்கும் எங்களையும் மனம் நோக வைத்திருக்கும்
இருந்தாலும் உங்கள் கவிதை இந்த கொலைக்களத்தை எதிர்னோக்கியவர்களின் பார்வையில் இருந்து வந்தது
மிகவும் வேதனை தருகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடச்சுட எழுதின கவிதை போலை இருக்கு :D ...நல்லதொரு ஆதங்க கவிதை. :)

  • கருத்துக்கள உறவுகள்

நிஜ வாழ்வின் சம்பவங்களைச் சுமந்து மிகவும் அழகாக நகர்கின்றது, கவிதை....!

 

பச்சை பின்னேரம்...!

 

நன்றிகளும் வாழ்த்துக்களும், சசி....!

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆதங்க கவிதை.

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கோ... நடந்த ஒரு விமானத் தாக்குதல் என்று அதனை செய்தியாக வாசித்து விட்டுப் போகாமல்,
அதில்... பயணம் செய்தவர்களின்... கனவுகளையும், எண்ண ஓட்டங்களையும்... கவிதையில் கொண்டு வந்து,
எம்மையும்... அந்தச் சோகத்தில், பங்கெடுக்க வைத்தது....

சசிவர்ணத்தின் காலத்துக்கு ஏற்ற... கவிதை.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மனம் நெகிழ்வோடு அனைவருக்கும் நன்றி கூறுகிறேன்.
செய்தியை அர்ஜுன் தான் முதலில் திண்ணையில் எழுதியிருந்தார், 
பார்த்தபின்னர் மிகவும் ஆதங்கம் அடைந்திருந்தேன்.
மனதில் தோன்றிய உணர்வுகளை கோர்வையாக எழுதினேன் .
கவிதை என்று நினைத்து எழுதவில்லை. 
இந்த எழுத்து உங்களை தொட்டது எனில்; அதை நான் 
பாதிப் பயணத்திலேயே  சடுதியாக பறிக்கப்பட்டவர்களின் 
ஆன்மாவுக்கு அஞ்சலியாய் சமர்பிக்கிறேன்.
 
வரிகளை தொட்டுச்சென்ற மற்றும்  கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
 
  • கருத்துக்கள உறவுகள்

300.. பேர்.. உடனடியாக நடுநிலையான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு. எந்த விசாரணையும் இன்றி.. இது சர்வதேச குற்றவியல் என்று பட்டமும் சூட்டி விட்டார்கள்.

 

300 அப்பாவிகளின் இழப்பு மிகவும் வருந்தத்தக்கது. உலகின் இந்த வருத்தம் புரிகிறது. அதே 40,000 உயிர்களை வன்னியில்.. இந்த உலகம் பலியிட்ட போது..???????! இந்த 300 உயிர்களும் அதனை வேடிக்கை தானே பார்த்தன...பல மில்லியன் உயிர்களோடு சேர்ந்து நின்று..???! என்ற கேள்வியும் சோகத்தின் மத்தியிலும் முளைக்காமல் இல்லை.


ஏக்கம் கலந்த ஆக்கம் சரியான நேரத்தில். நன்றி சசி வர்ணம் அண்ணா.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சசி ....உங்களது இந்த கவிதை தமிழ்முரசு அவுஸ்ரேலியாவில் பிரசுரமாகியுள்ளது.....http://www.tamilmurasuaustralia.com/2014/07/blog-post_5.html#more

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணிவான நன்றிகள் புத்தன் ...
நான் எழுதிய ஒரு கிறுக்கல்
யார் தயவாலோ எங்கோ ஒரு நாட்டில்
பத்திரிகையில் இடம் பிடித்து இருக்கிறது...
மனசெல்லாம் மத்தாப்பூ போல
சந்தோசம் நிரவி இருக்கிறது..

மிக்க நன்றிகள்...... 

  • 4 months later...

 

சசி ,ஒரு புள்ளியில் அத்தனை உயிர்களையும் அவர்தம் நினைப்புகளையும்  இணைத்த விதம் அபாரம் .

 

 

"உயரமாய் தெரிந்தவர்
சிறுநீர் கழிக்க வரிசையில் போய் நின்றார்,
சாப்பாடு சுவையாய்  இல்லை நொந்து கொண்டார்
எதிரே இருந்த இளம் பெண்ணை பார்த்து ஆனந்தமானார்,
என்ன அழகு இவள் 24 இருப்பாளா ?
பள்ளி நாட்களில் பழகிய ஒருத்தி,
இவளை போலதான் இருப்பாள்,
பழைய நினைவோடு சிறுநீர் கழித்தார் ..." ------அர்ஜுன் . :icon_mrgreen: 

 

ஜேஏஏஏஏஏஏஏ ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

மனிதம் பேசிய வரிகள் எனை வருத்துகிறது ...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.