Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காயாவும் கணபதியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காயாவும் கணபதியும்

 

 

அந்த நான்கு அடுக்கு மாடிக்கட்டிடத்தின் மூன்றாம் அடுக்கில் அவசர எக்சிற்றுக்கு (exit) அருகாமையில்தான் அவர்களுடைய குடியிருப்பு. எக்சிற்றிற்கு அருகாமையில் இருப்பது எவ்வளவு தூரம் வசதியானதோ அவ்வளவுக்கு தொல்லைகளும் நிறைந்தது. செக்யூரிற்றி பாதுகாப்பு பெரிதாக இல்லாத அந்தப்பழைய கட்டிடத்தில் பல வகையான சங்கடங்கள் இருக்கத்தான் செய்தது. கஞ்சாவுக்கும் போதைக்கும் அடிமையான சிலர் அந்தக்கட்டிடத்தின் எக்சிற் வழிகளில் உமிழ்வதும் சிறுநீர் கழிப்பதும் குப்பைகளை போடுவதும் என்று அசுத்தச்சூழலுக்கு குறையில்லாமல் இருந்தது. வாடகைப்பணம் குறைவு என்பதால் குமரன் அவ்விடத்தில் தொடர்ந்து குடியிருந்தான் ஆனால் சமீபத்தில் தாயகத்திலிருந்து வந்த காயாவால் இவற்றை ஜீரணிக்க முடியவில்லை. நீண்டகாலமாக அவ்விடத்தில் குடியிருக்கும் குமரனுக்கு அவ்விடம் பெரிதான பாதிப்பைக் கொண்டதாகத் தெரியவில்லை. காயாவும் அவ்விடத்தை விட்டு வேறு எங்காவது குடியேறலாம் என்று குமரனிடம் எவ்வளவு சொல்லியும் அவன் அதனைக்காதில் போட்டதாகத் தெரியவில்லை. கடைசியில் காயா தனக்கு கணபதியால் நேரும் தொல்லைகளை எடுத்துரைத்தும் குமரன் அதனைப் பெரிது படுத்தவில்லை. இன்னும் கொஞ்சக்காலம் இவ்விடத்தில் சமாளிக்கலாம் பின்னர் வசதியான இடத்திற்குச் செல்லலாம் என்று பொருளாதாரத்தை சுட்டிக்காட்டி மறுத்து விட்டான். ஆனால் கணபதியின் தொல்லையால் நாளுக்கு நாள் காயா சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் அவளுடைய பொறுமை எல்லை மீறத் தொடங்கியிருந்தது. தன்னுடைய சிரமத்தையும் அலட்சியம் செய்யும் குமரனிடமும் தாளாத கோபம் ஏற்பட்டது.  இவருக்கு என்னில் அக்கறையும் இல்லை அன்பும் இல்லை இருந்திருந்தால் கணபதியின் தொல்லைக்கு ஒரு முடிவு கட்டியிருப்பார்… வேலை வேலை என்று ஓடும் குமரனிடம் கணபதியின் தொல்லைக்கு சரியான தீர்வை மேற்கொள்ளமுடியாது என்று நினைத்தவளுக்கு… திடுமென்று ஒரு ஐடியா பிறந்தது. கணபதிக்கு தானே துணிந்து பாடம் புகட்டுவது என்று தீர்மானித்துக் கொண்டாள்….  கணபதியும் சரியான புத்திசாலி குமரன் இருக்கும் நேரத்தில் காயாவுக்கு தொல்லை கொடுக்காமல் குமரன் வெளியேறிய பின்னர் காயாவுக்கு தொல்லை கொடுப்பது. குமரன் வீட்டில் இருந்தால் புறம்பாகத்தெரியும் ரிவியோ அம்பிளியரோ அலறிக் கொண்டிருக்கும் அதுதான் குமரன் வீட்டில் நிற்பதற்கு அடையாளம் குமரன் வெளியே போனால் மிக அமைதியாக அந்தக்குடியிருப்பு இருக்கும். இதைக் கணபதி அவதானிக்கத் தவறவில்லை. வீட்டில் காயா தனிமையில் அமைதியாக இருக்கும்போதே தன்னுடைய அடாவடித்தனத்தை கணபதி மேற் கொள்வது வழமை.

காயாவின் தீர்மானப்படி கணபதியை தண்டிக்கவேண்டும் அதற்கு குமரன் எந்த வகையிலும் உதவ மாட்டான் சதா வேலை என்று அலைந்து கொண்டிருப்பவனுக்கு அவளுடைய வேதனையைப் புரிந்து கொள்ள அவகாசம் இல்லை. தீர்மானத்தின்படி காயா அந்த அடுக்கு மாடிக்கட்டிடத்திற்கு முன்பாக இருக்கும் ஹோம் டீப்போர்ட்டிற்குச் சென்று சில ஸ்பிரே, பசைகளை வாங்கி வீட்டுக்கு வந்து கதவைத் திறந்தவள் அவ்வாசலில் நின்றே வீட்டின் நாலாபுறமும் பார்வையை ஓடவிட்டாள். சில மூலைப்பகுதிகளை தீர்க்கமாக தன்னுடைய திட்டமிடல் பட்டியலில் குறித்துக் கொண்டாள் கதவைத் சாத்திவிட்டு சில மறைவான பகுதிகளில் பசையை வைத்துவிட்டு ஸ்பிரேயை தன் கையோடு வைத்துக் கொண்டாள். மேசை சோபா என்பனவற்றை இடம் மாற்றி வைத்துவிட்டு வழமையை மாற்றி அந்நியமான சூழலை உருவாக்கினாள். மீண்டும் வாசலோரம் சென்று உட்பக்கம் நோட்டமிட்டாள். கணபதியின் தொல்லைக்கு இன்று முடிவு கட்டவேண்டும் என்ற தீர்மானம் மனதிற்குள் வெறித்தனமாக அலைந்தது. தொலைபேசி மணி ஒலித்தது. இலக்கத்தைப் பார்த்தமாள் குமரன் அழைத்தான். தன்னை தன் சிரமங்களை அலட்சியப்படுத்தும் குமரனின் அழைப்பை அலட்சிப்படுத்தினாள். தொலைபேசி மணி ஒலித்து நின்றதும் ரிசீவரை எடுத்து பிரித்து வைத்தாள் அது எங்கேஜ் ரோனைப் பிரசவித்துவிட்டு ஒலியடங்கியது. தனிமை , அமைதி, ஆனால் கணபதியைக் காணவில்லை கணபதிக்கான அவளின் வெறித்தனமான காத்திருப்பு வினாடிகளை நகர்த்தவே பெரும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் வியர்த்து ஒழுகியது. இதுவரை வாழ்வில் செய்தறியாத ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பதில் ஏற்பட்ட திக் திக் பொழுதில் வியர்த்து ஒழுகுவது மனித இயல்புதானே……. இவளின் தேடல் அதிகரித்தது. கணபதிக்குத் தெரிந்திருக்குமோ? கொஞ்சங் கொஞ்சமாக மனதிற்குள் கேள்வி வியாபிக்கத் தொடங்கியது.

கீச்…கீச்…கிச்சென்று வீட்டின் ஒரு மூலையிலிருந்து வேதனை ஓலம் எழுந்தது சட்டென்று அமர்ந்திருந்த சோபாவிலிருந்து துள்ளிக்குதித்தவள் ஒலி வந்த பக்கம் நோக்கி ஓடினாள். மூலையில் வைக்கப்பட்ட பசையில் ஒட்டிப்போன லி ஒன்று கிச் கீச் கீச்சென்று வீறிட்டு அலறி மரண ஓலம் எழுப்பிக் கொண்டிருந்தது. காயாவுக்கு நெஞ்சமெல்லாம் அதிர உடல் பதற கண்கள் கலங்கின. ஐயய்யோ பெரிய பாவம் செய்து விட்டோமே என்று சட்டென ஏதாவது செய்யவேண்டுமே என்று நினைத்தவள் ஓடிச் சென்று சமையல் அறையில் கிடந்த எண்ணெயை எடுத்து வந்து அந்தப்பசையில் ஊற்றினாள். துடித்து , எழும்பி , துள்ளி ஒருவழியாக பசையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட எலி தலை தெறிக்க ஆங்காங்கே முட்டிமோதி ஓடி மறைந்தது.

காயாவுக்கு இப்போதெல்லாம் கணபதியின் தொல்லை சிறிதும் இல்லை ஆனால் காயா கணபதியைத் தேடவும் காதலிக்கவும் தொடங்கிவிட்டாள். கணபதியின் வரவை எதிர்பார்த்தே தனிமையையம் அமைதியையும் அதிகரித்திருந்தாள். காயாவைக் கவரத் தெரியாத குமரன் தொலைபேசி அழைப்பு அடிக்கடி வீட்டில் எங்கேஜ் வருவதன் காரணம் தெரியாமல் இன்னும் சம்பாத்தியத்தில் அதிகம் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான். :lol: :lol: :D

 

 

 

 

பிழை திருத்தம்

ஒலியாக இருந்தது எலியாக மாற்றப்பட்டது

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

:D  :D  :D காயா கணபதியைத் தேடவும் காதலிக்கவும் தொடங்கிவிட்டாள்.

கதைக்கு போட்ட படம் யார் கணபதி என்றதை உடனே காட்டிக் கொடுத்து விட்டதே.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேறு படம் ஒன்று தெரிவு செய்தேன் யாழ் இணையம் அதனை ஏற்க மறுக்கிறது..... :(


நிலாக்கா நிழலி இருவருக்கும் நன்றிகள் வரவுக்கும் பதிவுக்கும்

 

Edited by வல்வை சகாறா

அந்த படத்தை மட்டும் இணைக்காமல் விட்டிருந்தால் வாசிக்கும் போது கூடுதல் சுவாரிசியம் இருந்திருக்கும் :)

தொடர்ந்து எழுதுங்கள் சகாறாக்கா.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நாய் என்று நினைப்பு வந்தது.. :D பிறகு கரப்பான் பூச்சியோ என்று நினைத்தேன். அதுக்குப் பிறகு கணபதி என்கிற பெயர் காட்டிக்கொடுத்து விட்டது. நல்ல கதை.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் படத்தைத் திரும்பவும் இணைத்து விடவும்...!

 

யார் அந்தக் கணபதி என்று அறிய அவா!

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் படம் இல்லாமலேயே பசை என்றவுடன் விளங்கிவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

சகாறா , கயாவுக்குத் தொல்லை குடுத்தது ஒரு கணபதியா , கண கணபதியா...! :)

  • கருத்துக்கள உறவுகள்

கணபதி நல்லாத்தான் காயாவுக்கு தொல்லை குடுத்த்திருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

பாவி

நானும் வெள்ளிக்கிழமைக்கதையாக்கும் என்று நேரம் ஒதுக்கி

தனிமையை  ஒருவாக்கி  வாசித்தேன் :lol:  :D

 

தொடர்க......

  • கருத்துக்கள உறவுகள்

கணதெய்யோ பாவம்.....:D கதைக்கு நன்றிகள்

ஒட்டிப்போன ஒலி
ஒட்டிப்போன எலி என்றுவரும் எனநினைக்கிறேன்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் போடும்வரைக்கும் உந்த கதையை வாசிக்கிறேல்லையெண்டு முடிவெடுத்துட்டன்.... <_<

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கணபதிகளின்   தொல்லைக்கு கணவன்மாரின் நேரத்தை வீணடிக்கலாமா தப்பில்லையா :D

  • கருத்துக்கள உறவுகள்

புதிதாக.... திருமணம் முடித்து, கனடாவுக்கு வந்த காயாவை....
கணபதி என்ற வயோதிப மனுசன், இவ்வளவு தொல்லை கொடுத்ததும்.....
வேலை, வேலை ஓடிக் கொண்டிருக்கிற குமரன், ஒரு கேனைப்பயலாக இருக்கிறானே.... என்று ஆத்திரம் வந்தது. :huh:

 

மூன்றாவது பந்தியில்.... "கீச்…கீச்…கிச்சென்று வீட்டின் ஒரு மூலையிலிருந்து வேதனை ஓலம் எழுந்தது" என்பதை... வாசித்தவுடன், கணபதி ஆரென்று விளங்கி விட்டது. maus_0125.gif:D

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த படத்தை மட்டும் இணைக்காமல் விட்டிருந்தால் வாசிக்கும் போது கூடுதல் சுவாரிசியம் இருந்திருக்கும் :)

தொடர்ந்து எழுதுங்கள் சகாறாக்கா.

 

வரவுக்கும் வாசிப்பிற்கும் நன்றி தமிழினி

 

முதலில் நாய் என்று நினைப்பு வந்தது.. :D பிறகு கரப்பான் பூச்சியோ என்று நினைத்தேன். அதுக்குப் பிறகு கணபதி என்கிற பெயர் காட்டிக்கொடுத்து விட்டது. நல்ல கதை.. :D

 

 

திரியைக் கொளுத்திவிடுவதற்கு இந்தக்களத்தில்  உங்களை மிஞ்ச ஆள் இல்லை இசை :lol:

அந்தப் படத்தைத் திரும்பவும் இணைத்து விடவும்...!

 

யார் அந்தக் கணபதி என்று அறிய அவா!

 

ரோமியோ நான் போட எத்தனித்த படம் யாழின் நீலப்படப்பட்டியலில் இருக்கும்போல அதனால சுவார்சியமான படத்தை இணைக்கமுடியவில்லை பிறகு தெரிவு செய்து இணைத்த படம் உடனேயே காட்டிக் கொடுத்துவிட்டது அதான் அதனை அகற்றினேன். :icon_mrgreen:

அந்தப் படம் இல்லாமலேயே பசை என்றவுடன் விளங்கிவிட்டது

 

நல்லா எலியோடு அனுபவப்பட்டிருக்கிறீர்கள்போல   வரவுக்கும் வாசிப்பிற்கும் நன்றிகள் சுமே

சகாறா , கயாவுக்குத் தொல்லை குடுத்தது ஒரு கணபதியா , கண கணபதியா...! :)

 

கன கணபதிகளாக இருக்கும் கன கணபதி என்று எழுதினால் கதை சப்பென்று போய்விடுமல்லோ சுவி அண்ணா

கணபதி நல்லாத்தான் காயாவுக்கு தொல்லை குடுத்த்திருக்கிறார்

 

சமையல் செய்யும் பெண்களுக்குத்தானே தெரியும்  வாதவூரான்.

பாவி

நானும் வெள்ளிக்கிழமைக்கதையாக்கும் என்று நேரம் ஒதுக்கி

தனிமையை  ஒருவாக்கி  வாசித்தேன் :lol:  :D

 

தொடர்க......

 

இந்த ஆளை இப்படி அலையவிட்ட பாவம் யாழுக்குத்தான்...... :lol:

கணதெய்யோ பாவம்.....  கதைக்கு நன்றிகள்

 

ஒட்டிப்போன எலி என்றுவரும் எனநினைக்கிறேன்

 

 

கணபதித் தெய்யோவை திருத்தம் செய்திட்டேன் புத்தர் சுட்டிக்காட்டியதற்கு நன்றி புத்தர் தற்சமயம் உங்களைப்போல் இருக்கிறேன்... மதிப்பளிப்பதற்கு பொன்னாடை மட்டுமல்ல பன்னாடையும் இல்லையே.... :lol:

படம் போடும்வரைக்கும் உந்த கதையை வாசிக்கிறேல்லையெண்டு முடிவெடுத்துட்டன்....

 

வாசித்துவிட்டு என்னைத் திட்டுவதைவிட வாசிக்காமல் இருப்பது உங்களுக்கும் எனக்கும் நல்லது கு.சா அண்ணை

இப்படியான கணபதிகளின்   தொல்லைக்கு கணவன்மாரின் நேரத்தை வீணடிக்கலாமா தப்பில்லையா

 

கணவன்மாரின் நேரம் வீணடிக்கப்படுவதற்கு அவர்களே காரணம் வாத்தியார்

 

புதிதாக.... திருமணம் முடித்து, கனடாவுக்கு வந்த காயாவை....

கணபதி என்ற வயோதிப மனுசன், இவ்வளவு தொல்லை கொடுத்ததும்.....

வேலை, வேலை ஓடிக் கொண்டிருக்கிற குமரன், ஒரு கேனைப்பயலாக இருக்கிறானே.... என்று ஆத்திரம் வந்தது.

 

மூன்றாவது பந்தியில்.... "கீச்…கீச்…கிச்சென்று வீட்டின் ஒரு மூலையிலிருந்து வேதனை ஓலம் எழுந்தது" என்பதை... வாசித்தவுடன், கணபதி ஆரென்று விளங்கி விட்டது. maus_0125.gif

 

கணபதியால் கவரப்பட்ட காயாவை இன்னும் தன்வசப்படுத்தமுடியாத குமரனுக்கு நீங்கள் வைத்தபெயர் சரிதான் இலையான் கில்லர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ச்ச கடைசியில எலி கதையா இது நானும் அங்க இருக்கிற  ரவுடிகளோ என நினைத்தேன் :rolleyes: :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ச்ச கடைசியில எலி கதையா இது நானும் அங்க இருக்கிற  ரவுடிகளோ என நினைத்தேன் :rolleyes: :rolleyes:

 

எலிக்கதைதான் முனிவர்ஜீ :icon_mrgreen: :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.