Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயிலிருந்து திருமணத்துக்காக யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நோர்வேயிலிருந்து திருமணத்துக்காக யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!?

colombo-300x168.jpgதிரு­ம­ணத்­திற்­காக நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்த குடும்பம் தங்­கி­யி­ருந்த வெ ள்ள­வத்­தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பணம் மற்றும் நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­பவம் வெள்ள­வத்தை பீற்­றர்சன் ஒழுங்­கையில் உள்ள தொடர்­மா­டி வீடொன்றில் நேற்று முன்­தினம் நள்­ளி­ர­வுக்குப் பின்னர் இடம்­பெற்­றுள்­ள­து.

எதிர்­வரும் 20 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் திரு­மணம் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் நோர்­­வேயில் உள்ள மாப்­பிள்­ளையும் குடும்­ப­த்­தி­ன­ரு­மாக 13 பேர் கடந்த வாரம் இலங்கை வந்­துள்­ளனர். இவர்­களில் ஒரு பகு­தி­யினர் யாழ்ப் பாணம் சென்ற நிலை யில் மாப்­பிள்­ளையின் சகோ­த­ரனும் அவ­ரது மனை­வியும் பிள்­ளையும் குறித்த வீட்டில் தங்­கி­யி­ருந்த சம­யமே இந்த கொள்ளைச் சம்­பவம் இடம்­­பெற்­றுள்­ளது.

திரு­மணத்திற்­கா­க சேக­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்த தங்க நகை­க­ளும் நோர்வே நாண­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருந்த 30 இலட்சம் வரை­யான பண­மு­மே கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. மிக சூட்­சு­ம­மான முறையில் நான்கு மாடிகள் ஏறி­வந்து வீட்டின் குளி­ய­லறை ஜன்னல் ஊடாக உள்­நு­ழைந்து இந்த கொள்ளை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

வெள்­ள­வத்தை பீற்­றர்சன் லேனில் 70/18 என்ற இலக்­கத்தில் ஆறு மாடி­களைக் கொண்ட குடி­யி­ருப்புத் தொகுதி உள்­ளது. குறித்த தொடர்மாடி குடி­யி­ருப்புத் தொகு­தியின் நான்காம் மாடியில் உள்ள ஒரு வீட்டில் நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த தமிழ் தம்­ப­தி­யினர் தங்­கி­யி­ருந்­தனர்.

நேற்று முன்­தினம் இரவு 12 மணி­ய­ளவில் வீட்­டி­லி­ருந்த மூவரும் வீட்டின் வலது புற­முள்ள தமது அறையில் நித்­தி­ரைக்கு சென்­றுள்­ளனர். குறித்த அறை குளி­ரூட்­டப்­பட்­டி­ருந்­ததால் அறைக் கதவு இலே­சாக மூடப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் நேற்று அதி­காலை சுமார் 4 மணி­ய­ளவில் நித்­தி­ரை­யி­லி­ருந்த எழுந்த மனை­விக்­கு சத்தம் கேட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து விழித்துக் கொண்­டுள்ள அவர் வெளியே மழை பெய்­வ­தாக நினைத்து மீண்டும் நித்­தி­ரைக்கு செல்ல முற்­பட்ட போது மூடப்­பட்­டி­ருந்த அறைக் கதவு மெல்ல திறக்­கப்­பட்டு டோர்ச் ஒன்­றி­னூ­டாக ஒளி பாய்ச்­சப்­பட்­டது.

நபர் ஒருவர் தமது அறைக்குள் டோர்ச் ஊடாக ஒளி பாய்ச்­சு­வதை அவ­தா­னித்­துள்ள குறித்த யுவதி திருடன் திருடன் என சத்­த­மிட்­டதை அடுத்து குறித்த நபர் வீட்டின் இடது புற அறையின் ஜன்னல் வழி­யாக குதித்து தப்பிச் சென்­றுள்ளார்.

சம்­பவம் தொடர்பில் வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்­கப்­பட்­டதை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் ஸ்தலத்­துக்கு சென்று தட­யங்­களை சேக­ரித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

நான்காம் மாடியின் பின்­பக்­க­மாக வந்­துள்ள திருடன் அந்த வீட்டின் குளி­ய­லறை ஜன்­னலை திறந்து துவாய் ஒன்றை அதன் கட்­டுக்­களில் விரித்து உடல் காயங்கள் ஏற்­படா வண்ணம் உள்­நு­ழைந்­துள்ளான்.

குளி­ய­ல­றையின் வலப்­பக்­க­மாக உள்ள அறை­யினுள் நுழைந்து அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த அலு­மா­ரியை உடைத்து அதி­லி­ருந்த தங்க நகைகள் மற்றும் வெளி­நாட்டு நாண­யங்­களை கொள்­ளை­யிட்­டுள்ளான். எனினும் அந்த அறை­யி­லி­ருந்து புதிய கைய­டக்க தொலை­பேசி, மடிக் கணனி, வீட்டின் பிர­தான அறை­யி­லி­ருந்த இலத்­தி­ர­னியல் பொருட்கள் என்­பவை கொள்­ளை­யி­டப்­ப­ட­வில்லை.

சுமார் 50 இலட்­சம் ரூபா­வுக்­கு அதி­க­மான தங்க நகை பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக வீட்­டு­ரி­மை­யா­ளர்கள் கேச­ரி­யிடம் குறிப்­பிட்­டனர்.

ஸ்தலத்­துக்கு பொலிஸ் மோப்ப நாய்கள் வர­வ­ழைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில் கை ரேகை தட­வியல் நிபு­ணர்­களும் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து நேற்று மாலை வரை பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் ஒரு­வரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்லர் கேசரியிடம் குறிப்பிட்டார்.

விசாரணைகள் தொடரும் நிலையில் மிக விரைவில் சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அப் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://tamilleader.com/?p=39168

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தொகைப் பணத்தை கையில் எடுத்துச்செல்ல வளர்ந்த நாடுகளிலேயே யோசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு தொகைப் பணத்தை கையில் எடுத்துச்செல்ல வளர்ந்த நாடுகளிலேயே யோசிப்பார்கள்.

வரி கட்டாத வருமானமாக இருந்தால் அதை கையில் காசாக எடுத்து செல்வார்கள். வேறு வழியில் மாற்ற வெளிக்கிட்டால் வங்கி முதல் அரசாங்கம் வரை பலருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இவர்கள்  நோர்வேயில் திருமணம் செய்வதற்கு ஏதும் தடைகள் இருந்ததா? 
 
நோர்வேயில் அல்லது புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று திருமணம்,சாமத்தியம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன??
 
தங்களது உறவினர்களுக்கு படம் காட்ட வெளிகிட்டு எல்லாத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறார்கள்....

கஷ்டபட்டு நேர்மையாக உழைத்த காசு என்றால்...மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்....."வேறு வழியில்" சேர்த்தது என்றால் அவர்கள் நிறைய வருத்தப்பட மாட்டார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

பயணம் செய்ய இருப்போர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வாய் இருக்கும்.

குறித்த தொடர்மாடி குடி­யி­ருப்புத் தொகு­தியின் நான்காம் மாடியில் உள்ள ஒரு வீட்டில் நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த தமிழ் தம்­ப­தி­யினர் தங்­கி­யி­ருந்­தனர்.

குறித்த யுவதி திருடன் திருடன் என சத்­த­மிட்­டதை அடுத்து குறித்த நபர் வீட்டின் இடது புற அறையின் ஜன்னல் வழி­யாக குதித்து தப்பிச் சென்­றுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களது உறவினர்களுக்கு படம் காட்ட வெளிகிட்டு எல்லாத்தையும் தொலைத்து விட்டு நிற்கிறார்கள்....

கஷ்டபட்டு நேர்மையாக உழைத்த காசு என்றால்...மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்....."வேறு வழியில்" சேர்த்தது என்றால் அவர்கள் நிறைய வருத்தப்பட மாட்டார்கள்....

நாடு அந்த மாதிரி  இருக்கு என்கிறீர்கள்

அதை நம்பி  வந்தவர்களை  படம் காட்டுகிறார்கள் என்கிறீர்கள்.....

பாண் வாங்கி  நிம்மதியாக வீடு திரும்பும் நாட்டில்.......

உங்கள் தகவல்களை  நம்பியோர்..

நாலாம் மாடி  ஐன்னலால்  களவு நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் இவ்வளவு தொகை பணத்துடன் அங்கே தங்கியருப்பது யாருக்கோ தெரிந்திருந்த படியால் தானே இப்படி சம்பவம் நடந்தது. யார் அந்த கறுப்பு ஆடு?  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனது உறவு ஒருத்தர்  அண்மையில் வன்னிக்கு சென்றிருந்தார்

இரவு

அவர் தங்கியிருந்த வீட்டுக்கு திருடன் வந்துள்ளான்

ஐன்னலைத்திறந்து அதனூடாக பெரிய  தடி  ஒன்றின் மூலம்  இவரது கைப்பையை  எடுத்து

அதற்கள் இருந்த சிறு பணம்  மற்றும் இவரது பாட்டி போட்ட அருமையான  காப்ப ஒன்றையும் எடுத்துவிட்டு

கைப்பையை  இருந்தபடியே  மூடி இருந்த இடத்திலேயே  வைத்துவிட்டு சென்றுவிட்டான்

ஆனால் அவர் இன்னொரு கைப்பையிலே மிகவும் அதிக  பணமும் ஈரோக்களும்  நகைகளையும் வைத்திருந்தார்

அது அவனது கண்களில் படவில்லை

பட்டிருந்தால்  அவன் அன்றிலிருந்து கோடீசுவரன்....... :o  

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  நோர்வேயில் திருமணம் செய்வதற்கு ஏதும் தடைகள் இருந்ததா? 
 
நோர்வேயில் அல்லது புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று திருமணம்,சாமத்தியம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன??

இதை நீங்கள் யாழில் கேட்பது போல.. இப்படிச் செய்யும் சிலரிடம் மூஞ்சிக்கு நேர கேட்க.. அவர்கள் சொன்ன பதில்..

1. ஊரில போய் இவ்வாறான நிகழ்வுகளைச் செய்வது செலவு குறைவாம். லண்டனில் மணவறைக்கு மட்டுமே.. 3000.. 4000 பவுன்ஸாம்.. (உண்மையாவா..??!)

2. ஊரில உள்ள சொந்த பந்தங்களோடு கூடிச் செய்ய வாய்ப்பாம். கூடிய சந்தோசமாம்.

3. அவுஸி.. நியுஸி.. கனடா.. அமெரிக்கா சொந்தங்கள் எல்லாம் இலங்கை வாறது சுலபமாம். செலவும் குறைவாம். அதனால.. ஊரில செய்தால்.. எல்லா சொந்தங்களும் கூட முடியுமாம்..!

4. பாதுகாப்பு பிரச்சனை இல்லையோ என்று கேட்க... அது இயக்கத்தில இருந்த ஆக்களுக்குத்தானாம் பிரச்சனை. மற்றவைக்கு ஒரு பிரச்சனையும் இல்லையாம். (அப்ப எப்படி அகதி அந்தஸ்து கேட்டவை..??!)

5. பிள்ளைகளுக்கு ஊர் நடைமுறைகளை.. சொந்தங்களை அறிமுகம் செய்ய முடியுமாம். ஊரோடு ஒட்டி உறவாக விட முடியுமாம். அதனால் பிள்ளைகள் எதிர்காலத்தில்... வெள்ளைக்காரன்..காரி.. கறுப்பன்.. கறுப்பி கூட ஓடிடாமல் தடுக்க முடியுமாம்.

இப்படி சொல்லிச்சினம்... இதுக்கு நீங்க.. நாங்க என்ன சொல்லுறது..???! வாயை மூடிக்கிட்டது தான். எல்லாம் காலம் விட்ட கோலம்...! :lol::)

எங்கட சனம் திருந்தமாட்டுதுகள்  

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சனம் திருந்தமாட்டுதுகள்  

நீங்கள் இப்படிச் சொல்ல.. சனம் சொல்லுது என்னத்த திருந்தக் கிடக்குது.. எல்லாமே திருத்தமாகத்தானே செய்யுறம் என்று..!! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  நோர்வேயில் திருமணம் செய்வதற்கு ஏதும் தடைகள் இருந்ததா? 
 
நோர்வேயில் அல்லது புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று திருமணம்,சாமத்தியம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன??

அங்குள்ள ஏழைகளுக்கு வசதி இல்லாத கஸ்ரத்தில் வாழும் மக்களுக்கும் பந்தா காட்டத்தான்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் திருந்தவே ..மாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நாடு அந்த மாதிரி  இருக்கு என்கிறீர்கள்

அதை நம்பி  வந்தவர்களை  படம் காட்டுகிறார்கள் என்கிறீர்கள்.....

பாண் வாங்கி  நிம்மதியாக வீடு திரும்பும் நாட்டில்.......

உங்கள் தகவல்களை  நம்பியோர்..

நாலாம் மாடி  ஐன்னலால்  களவு நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் :(  :(  :( 

பாண் வாங்கி வாறவனுக்கும் இவளவு பெறுமதியை வைத்திருப்பவனையும் ஒரு தாராசில் நிறுத்த முடியுமா.மற்றது கொள்ளை என்பது இப்ப அய்ரோப்பிய நாட்டிலையும்தான் நடக்குது.இந்த சம்பவத்துக்கும் நாடு நல்லாய் இருக்குது இல்லை என்றதற்க்கும் முடிச்சு போடக் கூடாது.நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ எங்கள் உறவுகள் அங்கு வாழ்கிறார்கள்.அவர்கள் இதை எல்லாம் சாமளித்து தான் வாழ வேண்டும்.அங்கு இனவாதம் இருக்குத்தான் .அதுக்காக எல்லா நாட்டிலையும் நடக்கிற இப்படியான சில்லறை விடையங்களையும் இனவழிப்பு  அரச பங்கர வாதம் என்று கூறத் தொடங்கினால் ஒருத்தரும் எங்களை கணக்கெடுக் மாட்டார்கள்.மற்றது எங்கடை பெரும்பாலான சனம் பிலிம் காட்டத்தான் அங்கை போறவை என்டதிலை எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

சீமான் தான் எங்கள் அடுத்த மேய்ப்பர் ( i mean மீட்பர்) என்பவர்களுக்கு என்ன சொல்லி என்ன பயன்......

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தான் எங்கள் அடுத்த மேய்ப்பர் ( i mean மீட்பர்) என்பவர்களுக்கு என்ன சொல்லி என்ன பயன்......

இந்தியாதான் எங்கள் மேய்ப்பர் ( i mean மீட்பர்) என்று சொல்லும் உங்களுக்கு, இந்தியரான சீமான் மேய்ப்பராக( i mean மீட்பர்) இருக்கக் கூடாதா நாந்தான்...? :o:huh::lol:

பாண் வாங்கி வாறவனுக்கும் இவளவு பெறுமதியை வைத்திருப்பவனையும் ஒரு தாராசில் நிறுத்த முடியுமா.மற்றது கொள்ளை என்பது இப்ப அய்ரோப்பிய நாட்டிலையும்தான் நடக்குது.இந்த சம்பவத்துக்கும் நாடு நல்லாய் இருக்குது இல்லை என்றதற்க்கும் முடிச்சு போடக் கூடாது.நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ எங்கள் உறவுகள் அங்கு வாழ்கிறார்கள்.அவர்கள் இதை எல்லாம் சாமளித்து தான் வாழ வேண்டும்.அங்கு இனவாதம் இருக்குத்தான் .அதுக்காக எல்லா நாட்டிலையும் நடக்கிற இப்படியான சில்லறை விடையங்களையும் இனவழிப்பு  அரச பங்கர வாதம் என்று கூறத் தொடங்கினால் ஒருத்தரும் எங்களை கணக்கெடுக் மாட்டார்கள்.மற்றது எங்கடை பெரும்பாலான சனம் பிலிம் காட்டத்தான் அங்கை போறவை என்டதிலை எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

பலரின் முப்பது வருட பிழைப்பை  இரண்டு வரியில் கெடுக்க கூடாது .

Edited by arjun

இந்தியாதான் எங்கள் மேய்ப்பர் ( i mean மீட்பர்) என்று சொல்லும் உங்களுக்கு, இந்தியரான சீமான் மேய்ப்பராக( i mean மீட்பர்) இருக்கக் கூடாதா நாந்தான்...? :o:huh::lol:

சீமான் தகுதியானவராக இருந்திருந்தால் எனக்கு ஏற்பதில் பிரச்சனையில்லை...வடைந்தியனை நம்புறவங்க தமிழரை நம்ப மாட்டோமா? :)  தமிழீழத்தில் ஒரு பழமொழியுண்டு...யாரை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே என்று :) சீமானும் அப்படியோ என்று ஒரு டவுட் ...சீமானின் நடவடிக்கைகள் ஒரு காலத்தில் ஜெகத் கஸ்பர் செய்த மாதிரியும்...முழு சினிமா வாசமும் (மிகசரியாக சொன்னால்...விஜய் தனது படங்களில் செய்வது போலவுமே) அடிப்பதால் தான் அவரை பார்க்க சிரிப்பாக உள்ளது...ஈழ தமிழர்கள் இப்போ (எப்போவுமே :) ) எடுப்பார் கைப்பிள்ளை :)

Edited by naanthaan

சரி, சீமானை வுட்டுருவோம்.. இந்த எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கக்கூடாதென்றுதானே சில இயக்கங்கள் இருந்து அழிந்தன. அவற்றை ஏன் நீங்கள் ஆதரிக்கவில்லை? :huh:

உங்கள் மேய்ப்பர் இந்நாள் வரையும் உங்களை ஏய்ப்பவராகவே இருந்துள்ளார் என்பதை அறிவீர்கள்.. அந்த வடக்த்தியானை நம்புவீர்கள், அவன் உங்களை அழித்தாலும் ஆதரவளிப்பீர்கள், ஆனால் உங்கள் அருகிலேயே இருந்தவ்ர்களை ஆதரவளிக்க மாட்டீர்கள்...? ஏன் இந்த முரண்? :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேய்ப்பருக்கும்.. ஏய்ப்பருக்கும் வித்தியாசம் காண முடியாதவன் தான் ஈழத்தமிழன். விடுங்க ராஜவன்னியன் அண்ணா. இதுங்க திருந்தவே போறதில்லை..! இப்படியே சிந்திச்சுதுங்க.. உதுங்களுக்கு அசைலத்தை தவிர வேற ஒன்றும் கிடைக்காது.. இந்த உலகில்..! அதுங்களுக்கு உரிமையை விட அசைலம் தான் முக்கியம்..! :lol::D

சரி, சீமானை வுட்டுருவோம்.. இந்த எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கக்கூடாதென்றுதானே சில இயக்கங்கள் இருந்து அழிந்தன. அவற்றை ஏன் நீங்கள் ஆதரிக்கவில்லை? :huh:

அவர்களும் எங்களை மேய்க்க வெளிகிட்டபடியால் தான்.....

அவர்கள் சரியானவர்கள் என்றால் ஏன் அவர்களுக்கு எதிரிகள் முளைதிருப்பார்கள்?

(அதுவும் எதிரியுடன் சேர்ந்து அவர்களை அழிக்கும் அளவுக்கு..பிற குழுக்கள் தான் பிழைஎன்றாலும்....அவர்களுடன் இருந்து உபதலைவர்களாக இருந்தவர்களே அடைக்கலம் தேடியது யாரிடம்?????)

இங்கும் நீங்களே பார்த்திருக்கலாம் அவர்களின் ஆதரவாளர்களின் "தொனியை"....

உங்கள் மேய்ப்பர் இந்நாள் வரையும் உங்களை ஏய்ப்பவராகவே இருந்துள்ளார் என்பதை அறிவீர்கள்.. அந்த வடக்த்தியானை நம்புவீர்கள், அவன் உங்களை அழித்தாலும் ஆதரவளிப்பீர்கள், ஆனால் உங்கள் அருகிலேயே இருந்தவ்ர்களை ஆதரவளிக்க மாட்டீர்கள்...? ஏன் இந்த முரண்? :o:lol:

இதில் முரண் இல்லை...வாடஇந்தியர்களுடன் சேர்ந்தால் நாங்களும் இன்னும் சுருட்டலாமே என்னும் எண்ணம் தான் :)

எல்லாருக்கும் பல்லக்கு ஏறத்தான் ஆசை :)

சிங்களவன் இப்போ எங்களை வைத்திருக்கும் நிலையிலும் பார்க்க எந்த விதத்தில் 1988 இல் கிடைத்த தீர்வு கீழானது???

என்னை பொறுத்த மட்டும் அப்போது கிடைத்த தீர்வு எங்களை சிங்களவன் பரமசிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு ஆக வைத்திருந்திருக்கும்.....இப்போ சிங்களவன் அந்த பரமசிவனின் இருக்கும் பாம்பாக மாறி இருக்கிறான்... :) (இந்தியா சீனா என எல்லாரிலும் பயணிக்கிறான்)..இது எனது எண்ணம் மட்டுமே...நான் பிழையாக இருக்கலாம்...நான் பார்த்த அளவில் எனது கணிப்பு பிழையாக தெரியவில்லை....ஆனால் இனி ஏதாவது நான் அறிந்து  நான் நினைத்தது பிழையென்று உணருகிறேனோ அப்போது எனது எண்ணத்தை மாற்றுவேன்... :)

நீங்கள் தான் சொல்லுங்களேன்..எங்களை மேய்ப்பவர்கள் எப்படி எங்களை ஏய்க்கிறார்கள் என்று...???

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

பாண் வாங்கி வாறவனுக்கும் இவளவு பெறுமதியை வைத்திருப்பவனையும் ஒரு தாராசில் நிறுத்த முடியுமா.மற்றது கொள்ளை என்பது இப்ப அய்ரோப்பிய நாட்டிலையும்தான் நடக்குது.இந்த சம்பவத்துக்கும் நாடு நல்லாய் இருக்குது இல்லை என்றதற்க்கும் முடிச்சு போடக் கூடாது.நாங்கள் விரும்பியோ விரும்பாவிட்டாலோ எங்கள் உறவுகள் அங்கு வாழ்கிறார்கள்.அவர்கள் இதை எல்லாம் சாமளித்து தான் வாழ வேண்டும்.அங்கு இனவாதம் இருக்குத்தான் .அதுக்காக எல்லா நாட்டிலையும் நடக்கிற இப்படியான சில்லறை விடையங்களையும் இனவழிப்பு  அரச பங்கர வாதம் என்று கூறத் தொடங்கினால் ஒருத்தரும் எங்களை கணக்கெடுக் மாட்டார்கள்.மற்றது எங்கடை பெரும்பாலான சனம் பிலிம் காட்டத்தான் அங்கை போறவை என்டதிலை எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

உங்களது கருத்தோடு எனக்கும் உடன்பாடுண்டு..

நன்றி.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் சரியானவர்கள் என்றால் ஏன் அவர்களுக்கு எதிரிகள் முளைதிருப்பார்கள்?

அவர்கள் = ஒட்டுக்குழுக்கள்  :)  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.