Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் பிரச்னை பின்னணியில் பிரபலங்கள்! சுப்ரமணிய சாமியின் அடுத்த 'குண்டு'

Featured Replies

இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு, பெரும்பாலான விசைப்படகுகளுக்கு மறைமுக சொந்தக்காரர்களான தமிழக அரசியல் பிரபலங்கள் தான் காரணம்' என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி, நேற்று, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பரபரப்பான தகவலை பகிரங்கப்படுத்தினார்.
 
போராட்டம் :
நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீனவர்கள், 15 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு, இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட, 319 தமிழக மீனவர்களின், 64 விசைப்படகுகளையும் இலங்கை அரசு திருப்பிக் கொடுக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த, 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த சூழலில், 'இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் சொல்லி, நான் தான், தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பி கொடுக்க தடை போட்டேன்' என, சுப்ரமணிய சாமி தெரிவித்த கருத்து, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
தலைவர்கள் கண்டனம் :
 
அவருடைய கருத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்நாலாபுறமும் தன்னை நோக்கி கணைகள் பாய்ந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சுப்ரமணிய சாமி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:ஜெயலலிதாவை பொறுத்த வரையில், என் மீது என்றைக்கும் கோபமாகத் தான் இருப்பார். காரணம், அவர் மீது ஊழல் வழக்கு போட்டு, அவருடைய செயல்பாடுகளை வெளியுலகிற்கு நான் தான் கொண்டு வந்தேன். பெங்களூரில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கையும் நான் தான், தாக்கல் செய்தேன்.அதேபோல தான் கருணாநிதியும். '2ஜி' வழக்கில், தி.மு.க., தரப்பு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை முதன் முதலில் அறிந்து, வழக்கு போட்டதால், கருணாநிதியும் என்னை திட்டுகிறார். சேது சமுத்திர திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது, 1990ல் ஆட்சி கலைப்பு என, தி.மு.க., என் மீது நிறைய கோபம் வைத்திருக்கிறது. அதற்காக, ஒருநாளும் நான் வருந்தியதும் இல்லை; அஞ்சியதும் இல்லை.'மீனவர்கள் பிரச்னை குறித்து பேச, சுப்ரமணிய சாமி யார்?' என்று சிலர் கேட்பதாக, அறிகிறேன். மத்தியில் பா.ஜ., ஆட்சி ஏற்படுவதற்கு முன்பே, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் பலர், என்னை சந்தித்தனர். அப்போது, 'ராஜபக்ஷே உடன் நல்ல நட்பில் இருக்கும் நீங்கள் தான், எங்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டனர். அதன்பின் தான், மீனவர் பிரச்னையில் கவனம் செலுத்தினேன்.
 
அதிர்ச்சி தகவல்:
 
இப்பவும் கூறுகிறேன்... நான் தான், இலங்கை அதிபர் ராஜபக் ஷேவிடம் பேசி, இலங்கையில் சிறைபட்டிருந்த, தமிழக மீனவர்களை விடுவித்தேன். அதற்காக நான், ராஜபக்ஷேவிடம் பேசிய போது, அவர் அதிர்ச்சிகரமான பல 
தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்பின் தான், நான், 'அப்படியென்றால், மீனவர்களை மட்டும் விடுதலை செய்யுங்கள்; அவர்களின் விசைப்படகுகளை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள்' என, கூறினேன். அதன்படியே, அவரும் செய்தார்.தமிழகத்தில், மீன் பிடி தொழிலில் இப்போது பெரிய பெரிய விசைப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகளில் பெரும்பாலானவை, சசிகலா, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு சொந்தமானவை. அவர்கள் தான் மீனவர்களை தூண்டிவிட்டு, பெரிய அளவில் மீன்பிடிக்க வைக்கின்றனர்.
 
எல்லை தாண்டுகின்றனர் :
இப்படி விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்ததால், இந்திய கடல் எல்லையில் இருந்த மொத்த மீன் வளமும் போய் விட்டது. இப்போது, இலங்கை கடல்பகுதியில் தான் மீன் வளம் இருக்கிறது என்பதால், விசைப்படகுகள் மூலம், மீனுக்காக, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர். இதனால் தான், நம் மீனவர்களையும் விசைப் படகுகளையும் சிறை பிடிக்கின்றனர்.தமிழக அரசியல் பிரபலங்கள் குறித்து, ராஜபக் ஷே, என்னிடம் கூறிய தகவல்கள் அனைத்தையும், பிரதமர் மோடியிடம் சொல்லிவிட்டேன். என்னை பற்றி, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்துக்கு, பதில் கடிதத்தை மோடிக்கு நான்அனுப்பி உள்ளேன். அதில் பல விவரங்களை தெளிவாக கூறியுள்ளேன்.இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் குழு, டில்லிக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்தது. அப்போது, 'தனி ஈழம் அமைய, நீங்கள் உதவ வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதற்கு மோடி என்ன கூறினார் தெரியுமா?
 
'ஒன்றுபட்ட இலங்கையின் அமைதிக்குத் தான் இந்தியா உதவும். இலங்கைப் பிரிவினைக்கு, இந்திய அரசு உதவாது. இலங்கையில், எல்லா மக்களும் அமைதியாக வாழ, ராஜபக் ஷேவிடம் வலியுறுத்துவோம். மற்றப்படி, ராஜபக் ஷே மட்டும் தான் பிரச்னைகளை தீர்க்க முடியும். அதனால், அவரிடம் பேசி நல்ல முடிவெடுங்கள்' என, தெள்ளத் தெளிவாக கூறி விட்டார்.அதன்பின் தான், அவர்கள், இங்கிருக்கும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா என, யாரையும் சந்திக்காமல், இலங்கை திரும்பி விட்டனர். தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களால், இலங்கை அரசு, இங்கிருப்பவர்களை நன்றி இல்லாதவர்களாக நினைத்துத் தான் மீண்டும் மீனவர்களை கைது செய்திருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
 
பிரதமருக்கு கடிதம்:
'தமிழக சட்டசபை தேர்தலுக்காக, மீனவர் பிரச்னையை, முதல்வர் ஜெயலலிதா அரசியலாக்குகிறார். இதற்காக, எல்லாமே தன்னால் தான் நடந்ததாகக் கூறி, பெருமை சேர்க்கிறார்' என, பிரதமர் மோடிக்கு, சுப்ரமணிய சாமி கடிதம் எழுதியுள்ளார்.கடந்த மாதம், இலங்கை யில், அந்நாட்டின் அதிபர் ராஜபக் ஷேவை சந்தித்த பின், தமிழக மீனவ பிரச்னை குறித்து, சில கருத்துக்களை சுப்ரமணிய சாமி வெளியிட்டார். 
இதற்கு கண்டனம் தெரிவித்து, பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடிதம் எழுதிஇருந்தார்.
 
ஜெயலலிதாவின் கடிதத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையில், மோடிக்கு, சுப்ரமணிய சாமி எழுதியுள்ள கடிதம் வருமாறு: இலங்கையில், ராஜபக் ஷேவை சந்தித்தபோது, தமிழக மீனவர் பிரச்னை குறித்து, அவரிடம் பேசினேன். அப்போது, சிறையில் உள்ள தமிழக மீனவர்களை, ஜாமினில் விடுதலை செய்வதாகவும், அவர்களிடம் பறிமுதல் செய்த இயந்திர படகுகளை விடுவிப்பதாகவும் உறுதி அளித்தார்.இதற்கிடையே, தமிழக மீனவர்கள் சங்கம் சார்பில், என்னிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அதில், இலங்கை கடற் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றபோது, அந்நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட, இயந்திரப் படகுகளை விடுவிக்க வலியுறுத்துமாறு தெரிவித்திருந்தனர். ஆனால், இக்கோரிக்கையை நான் ஏற்கவில்லை. இந்த இயந்திரப் படகுகள் பெரும்பாலும்,தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு சொந்தமானவை.
 
இவர்கள், வசதி படைத்தவர்கள் என்பதால், அந்த படகுகளை விடுவிக்க, நான் வலியுறுத்தவில்லை. என் கோரிக்கை எல்லாம், பாதுகாப்பற்ற ஏழை மீனவர்களை விடுக்க வேண்டும் என்பது தான்.என் கோரிக்கையின் படி, தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை, ஜெயலலிதா, தனது வெற்றி என, அபகரிக்க முயற்சிக்கிறார். அவர், மீனவர்கள் பிரச்னை குறித்து பிரதமர்களுக்கு கடிதம் எழுதி, அதை பத்திரிகைகளில் செய்தியாக்குவதை தவிர, வேறெதுவும் செய்ததில்லை.ஆனால், தமிழகத்துக்கு கிடைத்த வெற்றிகளை எல்லாம், தன்னால் கிடைத்த வெற்றி என, பறைசாற்றுகிறார்.
 
சிலை அமைத்து...:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம், பார்லிமென்ட் வளாகத்தில், தேவர் சிலை அமைத்தது, '2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் சேது சமுத்திர விவகாரம் ஆகியவை அனைத்தும், தன்னால் தான் நடந்தவை என, கடந்த தேர்தல்களில், அவர் பிரசாரம் செய்துள்ளார். தற்போது, மீனவர் பிரச்னையையும், 2016 தமிழக சட்டசபை தேர்தலுக்காக பயன்படுத்த முயற்சிக்கிறார். 
 
எனது கடின உழைப்பினால், தமிழகத்துக்கு கிடைத்த வெற்றிகளை, அவரால் கிடைத்த வெற்றி என, தவறாக பிரசாரம் செய்கிறார்.மேற்கு வங்கம் போல, தமிழகத்தில், 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட வேண்டும். காமராஜருக்குப் பிறகு, தமிழகத்தில் தேசிய கட்சி ஆட்சி இல்லாத நிலையில், பா.ஜ., ஆட்சியை, தமிழகத்தில் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு, அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 
- நமது சிறப்பு நிருபர் -
 
 

 

நாய் வால் நிமிர்ந்தாலும் நிமிரும் சுப்பு வாய் மூடவே மூடாது.  :)  :)
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் கொஞ்சம் விசயமானவர் ,என்று இவரோட படங்களை ,இவர்க்கு இருக்கும் தொடர்புகளை பார்த்து நினைச்சிப்போட்டன் 
இப்பதான் பாக்கைக்க தெரியுது இது ஒரு அறளை .....கதைக்கவேணும் என்பதற்காக வாயில வாற எல்லாத்தையும் உளறுது 

 ஆள் ஒன்றை மட்டும் தெளிவா செய்யுது ...இந்தியாவில் குந்திக்கொண்டிருந்து  அரசியல் என்ற பெயரில் ஹார்வார்ட் மானத்தை வாங்குது ..

என்னப்பா ஹர்வார்டிலையும் 5 லட்சத்திற்கு இப்ப Phd கொடுக்கிறாங்களா...?.

இந்த ஆள் கொஞ்சம் விசயமானவர் ,என்று இவரோட படங்களை ,இவர்க்கு இருக்கும் தொடர்புகளை பார்த்து நினைச்சிப்போட்டன் 

இப்பதான் பாக்கைக்க தெரியுது இது ஒரு அறளை .....கதைக்கவேணும் என்பதற்காக வாயில வாற எல்லாத்தையும் உளறுது 

 ஆள் ஒன்றை மட்டும் தெளிவா செய்யுது ...இந்தியாவில் குந்திக்கொண்டிருந்து  அரசியல் என்ற பெயரில் ஹார்வார்ட் மானத்தை வாங்குது ..

என்னப்பா ஹர்வார்டிலையும் 5 லட்சத்திற்கு இப்ப Phd கொடுக்கிறாங்களா...?.

 

இவரை 2011இல் ஹார்வர்ட் கலைத்து விட்டு விட்டது என்று நினைக்கிறன்....முஸ்லீம்களை கலைக்க/மசூதிகளை இடிக்க வேண்டும் என்று உளறியபடியால்.....

இவர் ஒரு summer school  டீச்சர் ஹர்வார்டில்...

 

 

 

நியானி: ஒருமையில் விளித்து எழுதியவை திருத்தப்பட்டுள்ளன.

Edited by நியானி

உந்த ஆள் உண்மைதான் கதைக்கிது ஆனால் எங்களுக்குத்தான் அப்படியானவர்களை பிடிக்காதே .

 

எமது மீன் வளத்தை  பெரிய இயந்திர ரோலரில் வந்து அள்ளிக்கொண்டு போகின்றார்கள் .எத்தனை தரம் சொல்லியும் கேட்காதவர்களை சுட்டு தள்ளினாலும் பிழையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

....

எமது மீன் வளத்தை  பெரிய இயந்திர ரோலரில் வந்து அள்ளிக்கொண்டு போகின்றார்கள் .எத்தனை தரம் சொல்லியும் கேட்காதவர்களை சுட்டு தள்ளினாலும் பிழையில்லை .

 

எத்தனை தரம் சட்டம் ஒழுங்கு நிலை அடைக்கலம் பெற்ற ஈழத்தமிழர்களால் தமிழக எல்லையில் மீறப்பட்டுள்ளது..? அப்பொழுது தமிழக காவல்துறை உங்கள் நியாயப்படி சுட்டுத்தள்ளியிருக்க வேண்டுமே? செய்தால் சரியா?

தவறை சுட்டுங்கள், ஆனால் வார்த்தை மீறல் வேண்டாம். நன்றி கெட்ட உலகம்! :wub:

ஒருவர் கூறியதன் கருத்தினைப் பார்க்காமல் கருத்தினை யார் கூறுகின்றார் என்பதற்கு முன்னிரிமை கொடுப்பதால் தான் பல விடயங்களை உற்று உணர முடியாமல் போகின்றது

 

சு,சு சொல்லும் இந்த விடயம் மிகவும் சரியானது. படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருப்பதும் மிகவும் சரியானது.

 

யாழில் ஆதவன் தொடர்ந்து இணைத்து வரும் பின்வரும் திரியை வாசித்துப் பாருங்கள். அத்துடன் நேற்று முந்தினம் வடக்கு முதலமைச்சர் விக்கி சொல்லியிருப்பதையும் வாசித்து பாருங்கள்.

 

நீர் | நிலம் | வனம்!

 

முதலமைச்சர் சொல்லியிருப்பது:

 

இந்திய- இலங்கை மீனவர்களிடையே இருக்கும் இருக்கும் பிரச்சினை முடிவுகள் இன்றி தொடர்ந்தும் இழுபறியில் உள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவை சுற்றியுள்ள கடல் வளம் மிக மேம்பட்டதாக இருந்தது. இந்த இழுவைப்படகின் பாவனையால் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு வெறும் தரை மட்டும் இருக்கும் நிலை தற்போது காணப்படுகின்றது.  அவ்வாறு அங்கு இருப்பதால் தான் இங்கு வந்து எங்களுடைய கடல்வளத்தையும் அவர்கள் சூறையாட துணிந்துள்ளனர். இதற்கு ஒரு தீர்வைக்காண வேண்டும். -
http://onlineuthayan...h.tRTAm8Yz.dpuf

 

     
நீர் நிலம் வனம் தொடரில் வந்த முக்கியமான பல விடயங்களில் கீழே சொல்லப்பட்டு இருப்பதும் ஒன்று

 

 

 

“அதாம் நேத்து சொன்னேனே தம்பி, ரெண்டு வர்க்கம். மொத வர்க்கம், அன்னாடப் பொழப்புக்கு ஓடுது. ரெண்டாவது வர்க்கம், பணத்தப் பெருக்க அலையிது. கடக்கரைக்கு மொதலீட்டோட வந்த இந்த ரெண்டாவது வர்க்கம், கடலுக்குள்ள போவாமலே சம்பாதிக்குது தம்பி. அதுக்குக் கைக்கூலிங்க இந்த மொத வர்க்கத்துலேந்து, எங்க வர்க்கத்துலேர்ந்து வெல போனவங்ங. பாரம்பரியக் கடலோடி அன்னியில எவனும் கடலுக்குள்ள நொழய முடியாது தம்பி. வெல போயிட்டாம். ஆனா, அப்படிப் போனவம் எண்ணிக்கை கம்மி.

இன்னிக்கும் மொத்தக் கடலோடிங்கள்ல விசைப்படகு, டிராலர எண்ணிக்க எவ்வளவு, கட்டுமரம் - நாட்டுப்படகுங்க எண்ணிக்கை எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க? பத்துல ஒரு பங்கு. அவ்ளோதாம். அதுல தர்மத்துக்குக் கட்டுப்பட்டு ஆழ்கடலுக்குப் போயித் தொழில் செய்யிறவன் தானும் உசந்து, தான் தலமொறயயும் உசத்துதாம். காசுக்கும் குடிக்கும் ஆசப்பட்டு, ரெட்ட மடி இழுவ மடி போட்டுதவம் கடலையும் நாசம் பண்ணி, தான் தலமொறையயும் நாசம் பண்ணுதாம். இதுல நீங்க இன்னொரு கணக்கையும் பாக்கணும். ஓடுற படகுல பத்துல ஒண்ணுதாம் விசைப்படகுன்னேல்ல, ஆனா, புடி படுற மீனுல பெரும் பகுதி விசைப்படகு, டிராலருதாம். இந்த அக்கிரமத்த எதுத்து எவ்வளோ போராட்டம்கிறீங்க? ஒருகட்டத்துல விசைப்படகுங்களை அங்கைக்கு அங்க வச்சி எரிச்சதெல்லாம் கடக்கரையில நடந்தது. இப்பம் நீ மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போ, நான் மூணு நாளைக்குத் தொழிலுக்குப் போன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு, வாரத்துக்கு ஒரு நா படகைக் கரையில கட்டிப்போட்டு கடல பாத்துக்கிட்டிருக்கம்.

இழுவ மடி, ரெட்ட மடிக்கு அரசாங்கம் தட விதிச்சுப் பல வருசம் ஆவுது தம்பி. ஆனா, யாரும் தடுக்க இல்ல. ஏன்னா, கடலைச் சூறயாடுற கையி கடக்கரையில இல்ல. அது வெளியில இருக்கு. வெவ்வேற கம்பனி பேருல. கம்பனிக்குப் பின்னாடி இருக்குற வெள்ளைச் சட்ட சோக்கு மனுசங்க பேருல. நம்ம நாட்டுக் கடலேந்து எவ்வளவு ஏத்துமதி ஆவுது, எறா ஏத்துமதியில மட்டும் வருசத்துக்கு எவ்வளவு பொழங்குதுன்னு நீங்க விசாரிங்க. யாரு யாரு பினாமி பேருல கப்பலுங்க ஓடுது, கம்பனிங்க நடக்குதுன்னு, அந்தக் கப்பலுங்க, கம்பனிங்க பின்னாடி இருக்குற கைங்க எத்தன நீளம்னு உங்களுக்குப் புரியும்” என்றவாறு என் கையிலிருந்த சங்காயத்தை வாங்கிக் கீழே வைக்கிறார்.

“கடலம்மா, மன்னிச்சுக்க. தடுக்க முடியாத இந்தப் பாவிய... சூறையாடுதானுவோளேம்மா, அந்தப் பாவிய” - முணுமுணுத்தவாறே சங்காயத்தைப் பார்த்து நிற்கிறார் வேலாயுதம்.

 

 

ஆழ்கடலில் அந்நியக் கைகள்

இந்தத் தொடர் உரையாடலின் தொடர்ச்சியாக டிராலர் முதலாளிகளிடம் பேசினேன். அவர்கள் தரப்பு நியாயங்களை அடுக்கினார்கள். போகிற போக்கில் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடியது. "நம்மளோட கடல் எல்லையில தாய்வான்காரனும் வியட்நாம்காரனும் கப்பல்ல வந்து வேட்டையாடுறான். எல்லாம் பெரிய அளவுள்ள, எல்லா வசதியும் கொண்ட நவீனக் கப்பலுங்க. சுறாவைப் புடிக்கிறான். கப்பலுக்குள்ளேயே வெட்டுறான், தூவிய எடுத்துக்கிட்டு, ஒடம்பத் தூக்கி வீசுறான். எறாலைப் புடிக்கிறான். கண வாயைப் புடிக்கிறான். எல்லாத்தையும் கப்பலுக்குள்ளேயே சுத்தம் பண்ணி, பதப்படுத்தி, டப்பாவாக்கிட்டு, கழிவெல்லாம் கடல்லயே வுட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கான். யாரும் அவனை ஒண்ணும் பண்ண முடியலை."

"அதெப்படி அந்நியக் கப்பல்கள் நம்முடைய எல்லைக்குள் அத்துமீறி வந்து மீன்பிடிக்க முடியும்?"

"ம்... கப்பல் அவன் பேருல இருந்தாத்தானே? கப்பலோட உரிமம் நம்மாளுங்க பேருலல இருக்கும்? டெல்லி ராஜ்ஜியத்துல செல்வாக்குள்ள ஆளுங்க கையும் அதுல இருக்குதே? இத யார் கேக்க?"

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் பிரச்னை பின்னணியில் பிரபலங்கள்! சுப்ரமணிய சாமி

 

இதில் உண்மையுண்டு

பெரும் அரசியல்

மற்றும் பண பேரங்களும் உண்டு

 

அப்பாவி  மக்களுக்கு இவை தெரிய  வாய்ப்பில்லை

கருணாநிதி வாய் மூடி  இருந்ததற்கும்

கடிதம் எழதுவதுடன் நிறுத்திக்கொண்டதற்கும்

இதற்கும் தொடர்பிருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

மீன்படகு முதலாளிகள்தான் பிரச்சினை என்பதே எனது புரிதலும். அதற்காக மீனவர்களின் உயிரைப் பறிப்பது நியாயமற்ற செயல். இந்திய கடலோர பாதுகாப்பு படை என்று ஒன்று உள்ளது. அவர்களிடமும் பொறுப்பு உள்ளது.

அலாஸ்கா எல்லையில் ரஷ்ய அமெரிக்க மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். யாரும் எல்லை தாண்டுவதில்லை. அதற்குரிய பொறிமுறைகள் படகிலேயே உண்டு. அப்படியே மீறுபவர்களும் கண்காணிக்கப்பட்டு அந்தந்த நாடுகளாலே கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கச்சதீவு... தமிழ்நாட்டுக்குச் சொந்தமாக இருந்தது. அது அனைவரும் அறிந்த விடயம்.
 

இதனை... தமிழ்நாட்டிடம், அபிப்பிராயம் கேட்காமல் இந்திரா காந்தி,

இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த போது..... எழுதிய ஒப்பந்தத்தில்,

இரு நாட்டு மீனவர்களும்... கச்ச தீவு பகுதியில், மீன் பிடிக்கலாம் என்றும்....

கச்சதீவில் தங்கி தமது வலைகளை உலர்த்திப் போடலாம் என்றுதான்.... உள்ளது.

 

இப்போ.... ஸ்ரீலங்கா, கச்சதீவு பகுதி தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று, எப்படி உரிமை கொண்டாட முடியும்?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் கூறியதன் கருத்தினைப் பார்க்காமல் கருத்தினை யார் கூறுகின்றார் என்பதற்கு முன்னிரிமை கொடுப்பதால் தான் பல விடயங்களை உற்று உணர முடியாமல் போகின்றது

 

சு,சு சொல்லும் இந்த விடயம் மிகவும் சரியானது. படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி வைத்திருப்பதும் மிகவும் சரியானது.

 

யாழில் ஆதவன் தொடர்ந்து இணைத்து வரும் பின்வரும் திரியை வாசித்துப் பாருங்கள். அத்துடன் நேற்று முந்தினம் வடக்கு முதலமைச்சர் விக்கி சொல்லியிருப்பதையும் வாசித்து பாருங்கள்.

 

நீர் | நிலம் | வனம்!

 

முதலமைச்சர் சொல்லியிருப்பது:

 

     

நீர் நிலம் வனம் தொடரில் வந்த முக்கியமான பல விடயங்களில் கீழே சொல்லப்பட்டு இருப்பதும் ஒன்று

 

பிரச்சனை என்ன அதற்கான தீர்வு என்ன என்று ஆராயாமல்,

 சூனாச்  சூனா  படகுகளைப் பிடித்து வைத்திருங்கள் என இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறினாராம்..... அப்படிச் செய்தால் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களின் பிரச்சனைக்கு முடிவு வந்துவிடுமா ?

சூனாச் சாமியார் சிங்களவனுக்கு வக்காலத்து வாங்கும் நிலையை நாம்

ஆதரிக்கும் நிலைதான் கவலைக்கிடமாக இருக்கின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆள் உண்மைதான் கதைக்கிது ஆனால் எங்களுக்குத்தான் அப்படியானவர்களை பிடிக்காதே .

 

எமது மீன் வளத்தை  பெரிய இயந்திர ரோலரில் வந்து அள்ளிக்கொண்டு போகின்றார்கள் .எத்தனை தரம் சொல்லியும் கேட்காதவர்களை சுட்டு தள்ளினாலும் பிழையில்லை .

 

"சென்னை கனவு"  என்னும்.... தலைப்பில் எழுதும் அர்ஜுனா.... 

இப்படியான... கருத்தை, எழுதியவர். :o

 

நம்பவே..... முடியவில்லை.

 

நரம்பு... இல்லாத  நாக்கு, என்னவும் கதைக்கும்.

அதை கட்டுப்படுத்த, மூழை தேவை.

 

அது, இவருக்கு... இல்லைப் போலுள்ளது.

அடுத்த.... சு. சாமியா வர ஆசைப்படுகிறார் போலுள்ளது.

உண்மை பொய் சரி பிழை என்று ஒன்று உண்டு .வெறும்போலிகளுக்கு அது விளங்காது .போராட்டம் என்றவுடன் ஓடி வந்து விட்டு போடத்தொடங்கிய வேஷம் அது .

 

சென்னை எனக்கு பிடித்த நகரம் தமிழ் நாட்டு மக்கள் எமக்கு பெரிதாக உதவினார்கள் என்பதற்காக அவர்கள் வந்து எமது கடல் பரப்பில் மீன்களை அள்ளிக்கொண்டு செல்வதை சரி என்று சொல்லுவதா?

உங்கள் அறிவு அந்த அளவு தானா ?

 

புலிகள் விட்ட பிழைகளையும் சரி என்று கொண்டு சிறீலங்கா அரசு செய்யும் ஒரு சில நல்லவற்றையும் பிழை என்று சொல்ல நான் இங்கு உள்ள பலர் போல வேஷதாரி இல்லை .

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சுப்பிரமணியம் சுவாமி சொல்வதெல்லாம் உண்மை என்ற வகைக்கு சிலர் முன்னெடுக்கும் பிரச்சாரம்.. கேவலமாக உள்ளது.

 

பணக்காரர்கள் செய்யும் முதலீட்டில் தானே இந்திய பொருண்மியமே.. ஏன் சுப்பிரமணியம் சுவாமிக்கு சாப்பாடே விழுகுது. அப்படி இருக்க.. முதலீட்டாளர்களின் படகுகளை வைத்துக் கொண்டு தானே வறிய மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி செய்தாக வேண்டும். இல்ல சுப்பிரமணியம் சுவாமி நன்கொடை அடிப்படையில் மீன்பிடி வள்ளங்களை தமிழக மீனவர்களுக்கு அளிப்பாரா..???!

 

பிரச்சனையின் உண்மையான வடிவத்தை இங்கு பேச எவருக்கும் நோக்கமிருப்பதாகத் தெரியவில்லை.

 

இலங்கையில்.. எமது மீனவர்கள் மீது சிங்கள அரசின் எடுபிடிகள் மீதான அழுத்தம்.

 

இந்திய தரப்பில் இந்திய மீனவர்கள் மீது மத்திய ஆளும் வர்க்கத்தின் வேண்டாப் பொண்டாட்டி.. நிலைமை..!

 

வடக்குக் கடல் இப்போது சிங்கள மீனவர்களால் முஸ்லீம் மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அண்மையில்.. முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த வடக்கு முதல்வரிடம்.. உள்ளூர் தமிழ் மீனவர்கள் சொல்லி இருப்பது.. யுத்த காலத்தில் கஞ்சியாவது குடிச்சம்.. இப்ப அதுவும் இல்லை. சிங்கள குடியேற்ற மீனவர்களால்.. எமக்குப் பிரச்சனை.. மீன் பிடிக்க வசதியில்லை.. என்று.

 

பெரிசாக.. புலிகளின் தவறையும்.. சிங்களத்தின் நன்மையையும் பற்றி பறைசாற்றுகிறோம் என்போர்.. ஏன் புலிகளின் நன்மையையும்.. சிங்களத்தின் தீமையையும் பேச மறுக்கிறார்கள். ஏன்னா.. அது அவர்களுக்கு பேச்சுப் பொருளாவதில்.. கிஞ்சிதமும் அக்கறை இல்லை. புலி தவறானது என்ற படம் காட்டலை செய்வதே இங்கு வருவதன் நோக்கம்.

 

அதேதான்.. சுப்பிரமணியம் சுவாமியின் கொள்கையும். தான் சொல்வதே நியாயம். அதனை நியாயப்படுத்த அது எதையும் பேசும்.

 

எமது மீனவர்கள் மீது.. சிங்கள.. மீனவர்கள்.. கடற்படையினர் கொண்டான அழுத்தத்தை விட.. தமிழக மீனவர்கள்  சார்ந்து வரும் அழுத்தம் என்பது ஒப்பீட்டளவில் ஆபத்துக் குறைந்தது.

 

இருக்கும் பிரச்சனை.. மீன்பிடி முறைமை பற்றியதும்.. வளக் கட்டுப்பாடு பற்றியதுமே ஆகும்.

 

இங்கிலாந்து - பிரான்ஸ் மீனவர்கள் இடையேயும் கூட இந்தப் போட்டி உள்ளது. பிரான்ஸ் மீன்வளத்தைப் பெருக்க முனைகின்ற காலங்களில் இங்கிலாந்து மீன்பிடித்துக் கொள்கிறது. இதனால்.. முட்டுப்பாடுகள். அதற்காக பிரான்ஸ் இங்கிலாந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற நடவடிக்கைகளை எடுப்பதில்லை..!

 

எமது வளத்தை இந்திய ரோலர்கள் பயன்படுத்தும் தவறான மீன்பிடி முறைகள் மீள் தகவுக்கு இடமளிக்காது அள்ளிச் செல்வது தான் உள்ள பிரச்சனை. படகுகள்.. கருணாநிதியுடையதா.. சுப்பிரமணியம் சுவாமி உடையதா என்பதல்ல.. பிரச்சனை. சுப்பிரமணியன் சுவாமி பிரச்சனைகளின் மூல காரணங்களைப் பற்றிப் பேசாமல்.. தனது வியாபாரத்துக்கு விளம்பரத்துக்கு எது தேவையோ அதையே பேசி வரும் ஒருவர். அவர் அப்படித்தான் பேசுவார்.

 

சிங்கள மீனவர்கள் எமது நிலங்களையும் கடல் வளங்களையும் சிங்களக் கடற்படையின் பாதுகாப்போடு.. சிங்கள அரசின் முழு ஒத்துழைப்போடு திருடுவதில் உள்ள ஆபத்து என்பது மிகவும் மோசமான.. நாம் நினைத்தாலும் மீள முடியாத ஒன்றாக உள்ள நிலையில்.. அதனை சிறுமையாக்கிக் காட்டி.. தமிழக மீனவர்களோடு எமது மீனவர்களுக்கு பிரச்சனைகளை முடிந்துவிட்டு.. அதில் குளிர்காய்கிறது சிங்கள அரசும் அதன் அடிவருடிக் கூட்டமும்.

 

தமிழக மீனவர்கள் சார்ந்த பிரச்சனை.. எமது மீனவர்களும்.. தமிழக மீனவர்களும்.. வளப் பாதுகாப்பு.. மீன் பிடி முறை அமுலாக்கம்.... வளப் பகிர்வு பற்றி பரஸ்பரம் பேசிக் கொண்டு நடைமுறைப்படுத்தினால்.. மிகவும் சுலபமாகத் தீர்க்கப்படக் கூடியது. ஆனால்.. சிங்கள பெரும் முதலாளிகள்.. எமது வளங்களை எமது அனுமதி இன்றி.. எம்மீதான எந்த அக்கறையும் இன்றி சுரண்டிச் செல்வது.. எம் வளம் இழக்கப்படுதல் மட்டுமன்றி.. எமது மீன்பிடி பொருண்மியம் மீது பலத்த அடியும் விழுகிறது. அது பற்றி இங்கு சிங்கள அரசின் நன்மைகள் குறித்து பிரஸ்தாபிக்க பாடுபடுவோர்.. எமது மக்கள் அதே அரசின் திட்டமிட்ட செயல்களால் சந்திக்கும் தீமைகளை பிரஸ்தாபிக்க பிந்தங்கி இருப்பதோடு.. சிங்கள அரசின் திட்டங்களுக்கு மறைமுக ஆதரவளிக்கும் சு. சுவாமிக்கு வக்காளத்து வாங்குவது.. கொடுமையிலும் கொடுமை.

 

இவர்கள்.. தமிழ் மக்களுக்கு நன்மை தீமை பற்றி வகுப்பெடுப்பது.. அதைவிடக் கொடுமை..!!!!

 

இந்தப் பிரச்சனையில்.. இந்திய.. சிறீலங்கா அரசுகள் சாராது.. தமிழக அரசும்.... வடக்குக்கிழக்கு மாகாண அரசுகளும் பேசிக் கொள்வது கூடிய இணக்கப்பாட்டிற்கு நெருக்கத்திற்கு வழிவகுக்கும்..! இந்திய அரசும்.. சிங்கள அரசும்.. இந்தப் பிரச்சனையில் தலையீடு செய்து.. இந்தப் பிளவை அதிகரிக்க வாய்ப்புத் தேடிக் கொள்வதோடு.. தங்கள் நலன் சார்ந்து கடல் வளத்தை அபகரிக்கவும்.. தமக்கு தேவையானவர்கள் அதிக நன்மை பெறவும்.. அதனைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் தான் இந்தப் பிரச்சனை தீர்வின்றி நீட்டப்படுகிறது..! சுப்பிரமணியம் சுவாமி அதுக்கு வக்காளத்து வாங்குவது.. என்றும் அதிசயம் அல்ல..!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்களின் எல்லைகடந்த மீன்பிடி தடுக்கப்படவேண்டும். இயந்திரப் படகுகள் மூலம் மீன்பிடிக்கும்போது அது நீண்டகால நோக்கில் எமது கடற்பகுதியின் மீன்வளத்தை அற்றுப்போகச் செய்யும். மீன்குஞ்சுகளும் அகப்பட்டு மீன்வளம் முற்றாக அழிக்கப்படுகின்றது. மட்டுமல்லாது இந்திய மீனவர்கள் அத்துமீறி பரம்பரிய முறைகளின் படி மீன்பிடிக்கும் எமது மீனவர்களின் வலைகளை அறுத்து விட்டுச் செல்கின்றனர். நிச்சயமாக இது தவிர்க்கப்படவேண்டும் அல்லது தடுக்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாட்டு மீனவ மக்களாகிய தொழிலாளர்களும் முதலாளிகளும் தங்களக்குரிய கடல்வளத்தை பேராசையால் அழித்துவிட்டு இலங்கைக் கடலுக்குள் நுளைய முற்படுகிறார்கள் இது மாபெரும் அதர்மமாகும் என்று இங்கு ஈழத்தமிழர்கள் நாங்கள் ஆதங்கப்படுகிறோம். ஆனால் எங்களுக்கு இன்று கடலும் சொந்தமில்லை. அது சிங்களவனுடையது. அவன் அனுமதியின்றி இறந்தவர்களுக்குப் பிதுர்க் கடன் செலுத்தக்கூட எங்களால் கடலில் இறங்க முடியாது.
 
தமிழ்நாட்டு மீனவர்கள் கடலைக் கொள்ளையிட்டாலும் அதனால் இலாபமடைவது தமிழர்களே. ஈழத்தமிழர்களுக்கு இன்னல் என்றவுடன் ஒருங்கிணைந்து குரல்கொடுப்பது அவர்களும்தான். ஆனால் சிங்களவன் எங்கள் கடலை ஆக்கிரமித்துள்ளான், மண்ணை ஆக்கிரமித்துள்ளான், தமிழினத்தையே ஆக்கிரமித்து அழிக்கிறான் இதுமட்டும் அதர்மமாக எங்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான் வியப்பக இருக்கிறது. இதன் அர்த்தமென்ன இதுதான் எங்கள் அடிமைப் புத்தியோ??. 
 

உந்த ஆள் உண்மைதான் கதைக்கிது ஆனால் எங்களுக்குத்தான் அப்படியானவர்களை பிடிக்காதே .

எமது மீன் வளத்தை பெரிய இயந்திர ரோலரில் வந்து அள்ளிக்கொண்டு போகின்றார்கள் .எத்தனை தரம் சொல்லியும் கேட்காதவர்களை சுட்டு தள்ளினாலும் பிழையில்லை .

புலிகள் மீதான தனது வக்கிரத்தை தீர்கக தனது பேரப்பிள்ளையை கூட சிங்கள எஜமானின் வீட்டில் அடிமைச் சேவகம் புரிய அனுப்ப தயாராக உள்ள ஒரு கொத்தடிமைத்தனமான கருத்து.

  • தொடங்கியவர்

அரசின் தவறுகளை சேகரிக்கும் சாமி : சீண்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகிறார்

 

'பிடிபட்ட தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை விடுவிக்க வேண்டாம்' என, இலங்கை அதிபர் ராஜபக் ஷேவிடம் வலியுறுத்தினேன் என, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி சொல்ல, விவகாரம் தமிழகத்தில் பற்றி எரிகிறது. மீனவர் சங்கங்களை சேர்ந்தவர்கள், ஆளுங்கட்சி ஆதரவு நிலைபாட்டில் இருக்கும் சிறிய கட்சிகள் என, பலரும் சாமிக்கு எதிராக கச்சை கட்டியிருக்கின்றனர். தமிழகம் முழுவதும் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு

வருகிறது. சாமியின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, நேற்றும், காஞ்சிபுரத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தீனன் என்பவர் தலைமையில், கொடும்பாவி கொளுத்தியிருக்கின்றனர்.
 
இந்த விவகாரத்தில், சாமியை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத, சாமியும் முதல்வரை குற்றம்சாட்டி, மோடிக்கு விளக்க கடிதம் அனுப்பியிருக்கிறார். இதனால், அ.தி.மு.க., தரப்பு சாமி மீது, கூடுதல் எரிச்சலோடு இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே, தமிழகம் முழுவதும் சாமிக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையிலேயே, அ.தி.மு.க., ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் சின்ன சின்ன கட்சிகள், போராட்டம் நடத்திக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். இப்படி போராட்டம் நடத்துபவர்கள், 'சுப்ரமணிய சாமியை நாடு கடத்த வேண்டும்; அவரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம்' என்று, கோஷமிடுகின்றனர். இதனால், அ.தி.மு.க.,வுக்கு எதிராக, சாமி விரைவில் களம் இறங்கப் போவதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
 
இதுகுறித்து, சாமி ஆதரவாளர்கள் கூறியதாவது: இலங்கையில் பிடிபட்ட, 319 தமிழக மீனவர்களை மீட்க, சாமி தான் முயற்சித்தார். ஆனால், அது குறித்து எந்த முயற்சியும் எடுக்காதவர்கள், இப்போது, சாமிக்கு எதிராக, பலரையும் தூண்டி விடுகின்றனர். இப்படி செய்கிறவர்கள், மீனவப் படகுகளையும், புதிதாக பிடிபட்ட, 15 மீனவர்களையும் மீட்க, உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? அதைவிட்டு விட்டு, சாமிக்கு எதிராக, ஆதரவு கட்சியினரை தூண்டுவதால், அ.தி.மு.க.,வுக்கு தான் சிக்கல் ஏற்படும். தன்னை கண்டித்து, முதல்வர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியதும், அதற்கு விளக்கம் அளித்து, சாமியும் மோடிக்கு கடிதம் அனுப்பினார். அதில், ஜெயலலிதாவை விமர்சித்து சில விவரங்களை குறிப்பிட்டிருந்தார். அது தொடர்பாக, இதுவரை பதிலளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, மவுலிவாக்கம் கட்டட இடிபாடு உட்பட, தமிழக அரசின் செயல்பாடுகளில் உள்ள குளறுபடிகள், தவறுகள் குறித்து, சாமி விவரம் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார். தேவையில்லாமல், சாமியை சீண்டுபவர்களுக்கு, தக்க பாடம் புகட்டுவார். முன்னதாக, உள்ளாட்சி இடைத்தேர்த லில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக, பா.ஜ., வுக்கு ஆதரவாக சாமியை பிரசாரம் செய்ய வைக்கவும், ஏற்பாடுகள் நடக்கின்றன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
 

சுப்பிரமணி இதுவரை கையிலெடுத்த எந்த பிரச்சனைக்காவது ஒரு சுமூகமான முடிவு கிடைத்திருகிறதா? இல்லை... அது தான் தமிழ்நாட்டில் துரத்தி அடிகிறார்கள்......

 

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கொல்ல வெளிக்கிட்டது புலிகள் மீனவர்கள் போல் வந்து தாக்கிய படியாலும்...புலிகளுக்கு அவர்கள் எரிபொருள், மருந்து கடத்தலில் ஈடுபட்டதாலும்.....அதை நாம் ஏற்று கொள்ள மாட்டோமே.....

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு மீனவ மக்களாகிய தொழிலாளர்களும் முதலாளிகளும் தங்களக்குரிய கடல்வளத்தை பேராசையால் அழித்துவிட்டு இலங்கைக் கடலுக்குள் நுளைய முற்படுகிறார்கள் இது மாபெரும் அதர்மமாகும் என்று இங்கு ஈழத்தமிழர்கள் நாங்கள் ஆதங்கப்படுகிறோம். ஆனால் எங்களுக்கு இன்று கடலும் சொந்தமில்லை. அது சிங்களவனுடையது. அவன் அனுமதியின்றி இறந்தவர்களுக்குப் பிதுர்க் கடன் செலுத்தக்கூட எங்களால் கடலில் இறங்க முடியாது.

தமிழ்நாட்டு மீனவர்கள் கடலைக் கொள்ளையிட்டாலும் அதனால் இலாபமடைவது தமிழர்களே. ஈழத்தமிழர்களுக்கு இன்னல் என்றவுடன் ஒருங்கிணைந்து குரல்கொடுப்பது அவர்களும்தான். ஆனால் சிங்களவன் எங்கள் கடலை ஆக்கிரமித்துள்ளான், மண்ணை ஆக்கிரமித்துள்ளான், தமிழினத்தையே ஆக்கிரமித்து அழிக்கிறான் இதுமட்டும் அதர்மமாக எங்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான் வியப்பக இருக்கிறது. இதன் அர்த்தமென்ன இதுதான் எங்கள் அடிமைப் புத்தியோ??.

சிந்திக்கவைக்கும் கருத்து. ஆனால் உணர்வுகளை சற்று தள்ளிவைத்துவிட்டுப் பார்ப்போமானால் சில விடயங்களை ஆராயலாம்.

கனடாவின் கிழக்குக் கரையில் பல கைவிடப்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. காரணம் இரண்டு தசாப்தங்களுக்கு முன வரையில் வகைதொகையின்றி மீன் பிடித்தார்கள். கடற் படுகையை வழித்து எடுக்கும் வலைகளைப் பயன்படுத்தினார்கள். இதனால் கடல் உயிரினங்கள் அழிக்கப்பட்டு மீன்கள் இல்லாத பகுதிகள் உருவாகிவிட்டன. இன்று அதை உருவாக்கிய மீனவக் கிராமங்களும் வெறிச்சோடிவிட்டன.

இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட அரசுகள் மீன்பிடி அளவில், முறைகளில் பாரிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்துவிட்டன. உதாரணமாக, சிலவகை நண்டுகள் பிடிபட்டால் திருப்பி கடலுக்குள் விட்டுவிட வேண்டும். சில மீன் வகைகளுக்கும் இதே கட்டுப்பாடுகள். பிடிக்கப்படும் அளவுகளிலும் வருடத்திற்கு வருடம் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். கடல்வளம் ஒருமுறை அழிந்துவிட்டால் அது மீள உருவாகுவதற்குப் பல தசாப்தங்கள் தேவைப்படும்.

எமது கடல்களில் கட்டுமரங்கள், சிறுவலைப் படகுகள்கொண்டு மீனவர்கள் தொழில் செய்து வந்தவரைக்கும் ஒரு சிக்கலும் இல்லை. கடல்வளம் பல நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்டே வந்துள்ளது. எப்போது சிறு/பெருமுதலாளிகள் கால் பதித்தார்களோ அன்றிலிருந்து ஆரம்பித்தது சிக்கல்.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் இப்போதுதான் கடல் வளத்தை இழந்துகொண்டு வருகின்றன. வெள்ளைக்காரன் விட்ட அதே பிழையை நாங்களும் விட்டுத்தான் பாடம் கற்கவேண்டி உள்ளது.

எங்கள் கடல்களில் சீன, கொரிய என ஐரோப்பிய "பாரிய" இழுவை கப்பல்கள் வழித்து மீன்களை அள்ளுகிறார்கள்....இந்திய இலங்கை கடற்படைகள் அவற்றை கவனிக்கவேண்டும்...அல்லது இந்த தமிழ்நாட்டு இழுவைப்படகுகள் மற்ற இடங்களில் போய் பிடிக்க வேண்டும்...ஆனால் தமிழ்நாட்டு இழுவைக்கப்பல்கள் சீன/கொரிய கப்பல்களுடன் ஒப்பிடும்போது ஒரு "கொசு".....

உண்மை பொய் சரி பிழை என்று ஒன்று உண்டு .வெறும்போலிகளுக்கு அது விளங்காது .போராட்டம் என்றவுடன் ஓடி வந்து விட்டு போடத்தொடங்கிய வேஷம் அது .

 

சென்னை எனக்கு பிடித்த நகரம் தமிழ் நாட்டு மக்கள் எமக்கு பெரிதாக உதவினார்கள் என்பதற்காக அவர்கள் வந்து எமது கடல் பரப்பில் மீன்களை அள்ளிக்கொண்டு செல்வதை சரி என்று சொல்லுவதா?

உங்கள் அறிவு அந்த அளவு தானா ?

 

புலிகள் விட்ட பிழைகளையும் சரி என்று கொண்டு சிறீலங்கா அரசு செய்யும் ஒரு சில நல்லவற்றையும் பிழை என்று சொல்ல நான் இங்கு உள்ள பலர் போல வேஷதாரி இல்லை .

 

பிரச்சினை என்ன என்பதும் அதன் ஆழம் தெரியாமல் எல்லாத்துக்கையும் புலிகளை இழுப்பது தேவை இல்லாதது... 

 

இந்த பிரச்சினையின் ஆழம் தெரிய  தலைமன்னாரின்  ஊர்களான வங்காலை பேசாலை மக்கள் யாரையாவது தெரிந்தால்  அவர்களிம் பேசி விட்டு  பிரச்சினைக்கு வாருங்கள்.. 

 

மன்னார் தீவை அண்டி இருக்கும் கடல் பரப்பும் யாழ் தீபகற்ப பகுதிகளும்  ஆளம் குறைந்தமையால் அவர்களால்  இழுவை படகுகளை  பாவிக்க முடியாது...  

 

ஆனால்  விடத்தல் தீவு முதல்  பூநகரி வரையன மக்களும்  மாவிட்டபுரம் முதல்  அளம்பில் வரையான மக்களும்  இழுவை படகுகளை பாவிக்க முடியும்... 

 

சரி... இதில்  இந்த இழுவை படுகளை பாவிக்கும் தமிழர்கள் எத்தினை விகிதம்...??  ஏன் இழுவை படகுகளை  அவர்களால் பெரிய அளவில் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஈடாக பாவிக்க முடியவில்லை... ???    காரணம் என்ன அண்ணை...  பணப்பிரச்சினையா... ?? 

 

இங்கை சிங்களம் உங்களுக்கு ஏதோ  நன்மையை அள்ளி வீசுகிறது எண்று புழுகி தள்ளும் உங்களில் எத்தினை பேருக்கு  தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இலங்கை அரசு செய்யும்  ஓரவஞ்சனை தெரியும்.....?? 

 

 

உதாரணத்துக்கு ஒண்டை சொல்கிறேன்...  சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து சிங்கள மீனவர்களும் தாங்கள் வைத்து இருந்ததை விட பலமடங்கு  நிவாரணம் வழங்கப்பட்டு இருந்தனர்...   ஆனால் தமிழ் மீனவர்கள்...  ??   மரபு வளியான உபகரனங்களே வளங்கப்பட்டன... !!  

 

இண்டைக்கு தமிழக மீனவர்கள் மட்டும் இல்லை அங்கே ஈழத்தமிழ் மீனவர்களின் படகுகள் போனாலும் இதே கதிதான்... 

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை என்ன என்பதும் அதன் ஆழம் தெரியாமல் எல்லாத்துக்கையும் புலிகளை இழுப்பது தேவை இல்லாதது... 

 

இந்த பிரச்சினையின் ஆழம் தெரிய  தலைமன்னாரின்  ஊர்களான வங்காலை பேசாலை மக்கள் யாரையாவது தெரிந்தால்  அவர்களிம் பேசி விட்டு  பிரச்சினைக்கு வாருங்கள்.. 

 

மன்னார் தீவை அண்டி இருக்கும் கடல் பரப்பும் யாழ் தீபகற்ப பகுதிகளும்  ஆளம் குறைந்தமையால் அவர்களால்  இழுவை படகுகளை  பாவிக்க முடியாது...  

 

ஆனால்  விடத்தல் தீவு முதல்  பூநகரி வரையன மக்களும்  மாவிட்டபுரம் முதல்  அளம்பில் வரையான மக்களும்  இழுவை படகுகளை பாவிக்க முடியும்... 

 

சரி... இதில்  இந்த இழுவை படுகளை பாவிக்கும் தமிழர்கள் எத்தினை விகிதம்...??  ஏன் இழுவை படகுகளை  அவர்களால் பெரிய அளவில் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஈடாக பாவிக்க முடியவில்லை... ???    காரணம் என்ன அண்ணை...  பணப்பிரச்சினையா... ?? 

 

இங்கை சிங்களம் உங்களுக்கு ஏதோ  நன்மையை அள்ளி வீசுகிறது எண்று புழுகி தள்ளும் உங்களில் எத்தினை பேருக்கு  தமிழ் மீனவர்களுக்கும் சிங்கள மீனவர்களுக்கும் இலங்கை அரசு செய்யும்  ஓரவஞ்சனை தெரியும்.....?? 

 

 

உதாரணத்துக்கு ஒண்டை சொல்கிறேன்...  சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து சிங்கள மீனவர்களும் தாங்கள் வைத்து இருந்ததை விட பலமடங்கு  நிவாரணம் வழங்கப்பட்டு இருந்தனர்...   ஆனால் தமிழ் மீனவர்கள்...  ??   மரபு வளியான உபகரனங்களே வளங்கப்பட்டன... !!  

 

இண்டைக்கு தமிழக மீனவர்கள் மட்டும் இல்லை அங்கே ஈழத்தமிழ் மீனவர்களின் படகுகள் போனாலும் இதே கதிதான்... 

 

இதைத்தான் நானும் எழுதவந்தேன்...

 

கட்டிவிடப்பட்ட நாயின் தூரம்தான் எமது எல்லை..

கட்டி விட்டவனை  விட்டுவிட்டு

சுதந்திரமாக திரிபவனில் ஆத்திரப்படுகின்றோம்..

இதைவேறு அறிவுயீவிகளின் பார்வை  என்கின்றோம்... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் கடல்களில் சீன, கொரிய என ஐரோப்பிய "பாரிய" இழுவை கப்பல்கள் வழித்து மீன்களை அள்ளுகிறார்கள்....இந்திய இலங்கை கடற்படைகள் அவற்றை கவனிக்கவேண்டும்...அல்லது இந்த தமிழ்நாட்டு இழுவைப்படகுகள் மற்ற இடங்களில் போய் பிடிக்க வேண்டும்...ஆனால் தமிழ்நாட்டு இழுவைக்கப்பல்கள் சீன/கொரிய கப்பல்களுடன் ஒப்பிடும்போது ஒரு "கொசு".....

இந்த கொரிய, சீனப் படகுகள் எல்லாம் வந்து மீன் பிடிப்பது புலிகளின் மறைவுக்குப்பின். இப்போது உங்களின் நிலைமை புலிகள் வந்தால்தான் மீன்களும் தப்பும். இது எப்பிடி இருக்கு.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை விழுங்கும் சிங்கள  அரசைத்தட்டிக் கேட்க முடியாத

சுப்பிரமணிய சாமி அவர்கள்  இலங்கைத்  தமிழ் மீனவர்களுக்கு ஆதரவாக இந்திய முதலாளிகளை எதிர்க்கின்றாராம். தாங்க முடியலை அப்பா சாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.