Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 வருடங்களின்பின் யாழ் ரயில் நிலையத்தை யாழ் தேவி அடைந்தது

Featured Replies

24 வருடங்களின்பின் யாழ் ரயில் நிலையத்தை யாழ் தேவி அடைந்தது
2014-10-13 11:14:59

 

7261_yarldevi600a_zps4a67c516.jpg

 

யாழ் தேவி ரயில் சற்றுமுன் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை அடைந்தது. கடந்த 24 வருடங்களின்பின் யாழ் தேவி ரயில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணத்தை அடைந்தமை இதுவே முதல் தடவையாகும்.

 

பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று விஸ்தரிக்கப்படும்  இந்த ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்து அதில் பயணம் செய்தார்.

 

வவுனியாவுக்கு அப்பாலான வடபகுதி ரயில் சேவையானது யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தன. 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிடைவந்தபின்  இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன்  வடபகுதி ரயில் பாதைகள் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ் தேவியின் ஆரம்பம்

இலங்கையில் ரயில் சேவை 1864 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. வடபகுதிக்கான ரயில் சேவை1894 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை 1905 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது.

யாழ் தேவி அதிவேக ரயில் சேவை 1956 ஆம் ஆண்டு ஆரம்பமாகியது.  மலையகத்துக்கான உடரட்ட மெனிக்கே, தென் பகுதிக்கான ருகுணு குமாரி, யாழ்ப்பாணத்துக்கான யாழ் தேவி ஆகிய 3 ரயில் சேவைகளின் ஆரம்பம் குறித்த விளம்பரத்தை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் திகதி 'அன்புகொண்ட மூன்று சகோதரிகள் எனும் தலைப்பில் இலங்கை ரயில்வே திணைக்களம் வெளியிட்டிருந்தது.

அதன்பின் வடபகுதிக்கும் தென் பகுதிக்கும் இடையிலான முக்கிய போக்குவரத்து மார்க்கமாக விளங்கிய யாழ் தேவி ரயில் சேவை 1990 ஆம் ஆண்டு வவுனியாவுடன் நிறுத்தப்பட்டது.

யுத்தத்தின் முடிவில் வவுனியாவிலிருந்து வடபகுதியை நோக்கிய 146 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதையை நீர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.


இதற்காக இந்திய அரசாங்கம் 800 மில்லியன் டொலர்களை கடனுதவியாக வழங்கியது.

இண்டியன் ரயில்வே கொன்ட்ஸ்ரட்ஷன் கம்பனி (இர்கோன்) எனும் நிறுவனத்திடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. சுமார் 3 வருடகாலத்தின் இந்தரயில் பாதை நிர்மாணிப் பணிகள் பூர்த்தியடைந்தன. அதேவேளை, யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை புனரமைப்பதற்காக இலங்கை வங்கி 85 மில்லியன் ரூபாவை வழங்கியது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையான ரயில் பாதையானது மணித்தியாலத்துக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் ரயில்கள் பயணிக்கக்கூடிய நிர்மாணிக்கப்பட்டுள்ளாகவும் இலங்கையில் மிக வேகமான ரயில் பாதையாக இது விளங்குவதாகவும் இந்த ரயில்பாதை நிர்மாணத் திட்டத்தின் பணிப்பாளர் ஷியாம் லால் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த ரயில் சேவை கடந்த வருடம் செப்டெம்பர் 14 ஆம் திகதி கிளிநொச்சி வரை நீடிக்கப்பட்டது. கடந்த மார்ச் 3 ஆம் திகதி பளை முதல் இச்சேவை நீடிக்கப்பட்டது.


இந்த ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை நீடிப்பதற்கான   சோதனையோட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 24 வருடங்களின்பின் யாழ்ப்பாணம் வரையிலான யாழ் தேவி ரயில் சேவை இன்று  உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=7261#sthash.tDdSQbff.dpuf

இலங்கையில் முதன் முதலாக தொடரூந்து சேவையை ஆரம்பித்த ஆங்கிலேய அன்றைய மகாதேசாதிபதிகூட இவ்வளவு டாம்பீகமாக அதை ஆரம்பித்து வைத்திருக்க மாட்டார்.

Edited by tulpen

  • தொடங்கியவர்

2ஆம் அத்தியாயம்...
திங்கட்கிழமை, 13 ஒக்டோபர் 2014 13:28

யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர், இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

 

17642_zpse3c8013b.jpg

 

24086_zpsbe83d313.jpg

 

42218_zpsc751757b.jpg

 

52081_zps6eaf8137.jpg

 

72220_zpsb1a2454c.jpg

 

62233_zps5c171f17.jpg

 

111794_zpsbbc9a204.jpg

 

14397_zps8a46ce0f.jpg

 

16278_zps0626b8b9.jpg

 

18148_zps402eab46.jpg

 

19125_zpsecd24438.jpg

 

2079_zps23a22ffd.jpg

 

2157_zps0ceca016.jpg

 

http://tamil.dailymirror.lk/--main/130029-2-.html

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கேட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா - சிறீலங்கா வழங்கிய அதிஉச்ச உரிமை.. யாழ் தேவி. :lol::rolleyes:

  • தொடங்கியவர்

வடக்குக்கு மீண்டும் யாழ்தேவி

பளை­யி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை­யான ரயில் பாதையை நிர்­மா­ணிக்கும் மற்றும் தண்­ட­வா­ளத்தின் தரத்தை பரீட்­சிக்கும் இயந்­திரம் பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. அதன் உள்ளே உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்கள் பய­ணித்­த­வாறு ரயில் பாதையை பார்­வை­யி­டு­கின்­றனர். ரயில் தண்­ட­வா­ளத்தின் இரண்டு புறங்­க­ளிலும் சிறு­வர்கள் உள்­ளிட்ட மக்கள் ஆச்­ச­ரி­ய­மாக இதனை பார்க்­கின்­றனர். அனை­வ­ரது முகங்­க­ளிலும் மீண்டும் யாழ்­தேவி ரயில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வரப்­போ­கின்­றது என்ற எதிர்­பார்ப்பே காணப்­ப­டு­கின்­றது. ஆம். 24 வரு­டங்­க­ளுக்குப் பின்னர் யாழ்ப்­பா­ணத்­துக்கு யாழ்­தேவி ரயில் பய­ணிக்­கப்­போ­கின்­றது.
''யாழ் தேவி '' இது வடக்கு மக்­களின் இத­யங்­களில் பதிந்த ஒரு பெய­ராகும். இந்த யாழ் தேவி என்ற பெயரில் எத்­த­னையோ கதைகள் நாட­கங்கள் அரங்­கே­றி­யி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் 24 வரு­டங்­க­ளுக்கு முன்னர் யுத்தம் கார­ண­மாக யாழ்­தேவி ரயில் சேவை தடைப்­பட்­டது.

அதன் பின்னர் வட பகு­திக்­கான போக்­கு­வரத்­துக்­காக மக்கள் எதிர்­கொண்ட துன்­பங்கள் துய­ரங்கள் அசெ­ள­க­ரி­யங்கள் என்­பன சொற்­க­ளினால் விப­ரிக்க முடி­யா­த­வை­யாக இருந்­தன. போக்­கு­வ­ரத்து முழு­மை­யா­ன­தாக இருக்­க­வில்லை. கட்­டுப்­பா­டு­க­ளுடன் சில­ காலம் ஏ -9 வீதி­யூ­டாக வட பகு­திக்­கான போக்­குவ­ரத்து இருந்­தது. ஒரு சம­யத்தில் முற்­றாக வட பகு­திக்­கான போக்­கு­வ­ரத்து துண்­டிக்­கப்­பட்­டது. வடக்­குக்கு கடல் மார்க்­க­மாக மக்கள் பய­ணிக்­க­வேண்­டிய நிர்ப்­பந்­தமும் காணப்­பட்­டது.

இந்­நி­லையில் யாழ்­தேவி ரயில் கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு பய­ணிக்­க­போ­கின்றது என்ற செய்­தி­யா­னது வடக்கு மக்­களை பொறுத்­த­வரை இனி­மை­யான செய்­தி­யாகும். யாழ்­தேவி யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து காங்கே­சன்­துறை வரையும் செல்­லப்­போ­கின்­றது. மீண்டும் ரயில் தடங்கள் ஒலிக்­கப்­போ­கின்றன. வடக்கு மக்­களின் கனவு நன­வா­கப்­போ­கின்­றது. யாழ்­தேவி ரயில் என்­பது இந்த நாட்டு மக்­களின் இத­யங்­களில் ஒன்­றித்­துப்­போன ஒன்­றாகும். அந்­த­வ­கையில் அந்த கனவு தற்­போது நன­வா­கப்­போ­கின்­றது.

ஆனால் இந்தக் கனவு வெறு­மனே நன­வா­க­வில்லை. இதற்கு பின்னால் இரண்டு அர­சாங்­கங்­களின் கடின உழைப்பு உள்­ளது. எதிர்­வரும் 13 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ் தேவி ரயில் பயணம் பளை ரயில் நிலை­யத்தில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் ஆரம்­பித்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது.

வடக்கு ரயில் பாதைக்­கான வர­லாற்றை பார்ப்­போ­மானால் மத­வாச்­சி­யி­லி­ருந்து தலை மன்னார் வரை­யான ரயில் சேவை 1914 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது 106 கிலோ மீற்றர் தூரத்­தைக்­கொண்­ட­தாகும். மேலும் பொல்­க­ஹ­வெல முதல் காங்­கே­சன்­துறை வரை­யான ரயில் பாதை 1894 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது 339 கிலோ மீற்றர் தூரத்­தைக்­கொண்­ட­தாகும்.

அந்­த­வ­கையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இலங்கை அர­சாங்கம் வடக்­குக்­கான ரயில் பாதையை மீள் புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு ஆரம்­பித்­தது. அதன்படி இந்­தி­யாவின் இர்கொன் என்ற நிறு­வனம் வடக்கு ரயில் பாதையை அமைப்­ப­தற்கான பணியை பொறுப்­பெ­டுத்­தது. இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உடன்­ப­டிக்­கையின் அடிப்­ப­டையில் இந்த வேலைத்­திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டையில் மத­வாச்­சி­யி­லி­ருந்து தலை­மன்னார் வரையும் ஓமந்­தை­யி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை­யி­லு­மான ரயில் தண்­ட­வா­ளத்தை அமைப்­பதே இந்த இர்கொன் நிறு­வ­னத்தின் பணி­யாகும். தற்­போ­தைய நிலை­மையில் ஓமந்­தை­யி­லி­ருந்து பளை ரயில் நிலையம் வரை தண்­ட­வாளம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு ரயில் சேவை இடம்­பெ­று­கின்­றது. ஓமந்­தை­யி­லி­ருந்து பளை வரை­யான தூரம் 90 கிலோ மீற்­றர்­க­ளாகும். தற்­போது பளை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் வரை ரயில் தண்­ட­வாளம் அமைக்­கப்­பட்­டு­விட்­டது. அதன்­படி கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் வரை­யி­லான ரயில் சேவையை எதிர்­வரும் 13 ஆம் திகதி ஆரம்­பிப்­ப­தற்­கான அனைத்து பணி­களும் தயா­ராக உள்­ளன. யாழ்ப்­பாணம் ரயில் நிலை­யத்தை அழ­கு­ப­டுத்தும் செயற்­பா­டுகள் தற்­போது இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை­யான ரயில் பாதையும் 90 வீதம் அமைக்­கப்­பட்­டு­விட்­டது. இவ்­வ­ருடம் டிசம்பர் மாதம் காங்­கேசன் துறை வரை­யான ரயில் பாதையும் அமைக்­கப்­பட்­டு­விடும்.

மத­வாச்­சி­யி­லிருந்து தலை­மன்னார் வரை­யான ரயில் பாதையை நிர்­மா­ணிக்கும் பணியும் இர்கொன் நிறு­வ­னத்­தினால் முன்­னெ டுக்­கப்­ப­டு­கின்­றது. மத­வாச்­சி­யி­லி­ருந்து மடுரோட் ரயில் நிலையம் வரை ரயில் பாதை நிர்­மா­ணிக்­கப்­பட்டு தற்­போது ரயில் சேவை இடம்பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இது 42 கிலோ மீற்றர் தூரத்­தைக்­கொண்­ட­தாகும். மடுரோட் ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து தலை மன்னார் வரையான ரயில் பாதையும் இவ்­வ­ருடம் டிசம்பர் மாதம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு முடிந்­து­விடும். இது 63 கிலோ மீற்றர் தூரத்­தைக்­கொண்­ட­தாகும். அந்­த­வ­கையில் இந்­திய கட­னு­த­வியில் இந்த ரயில் பாதை நிர்­மா­ணிக்கும் திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. மொத்­த­மாக 650 மில்­லியன் டொலர் செலவில் இந்த திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் வடக்கின் ரயில் பாதையை பார்­வை­யிடச் சென்ற உள்­நாட்டு மற்றும் வெளி­நாட்டு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளிடம் கருத்து வெளி­யிட்ட இலங்­கையில் ரயில் பாதை புனர்­நிர்­மா­ணத்தை முன்­னெ­டுக்கும் இர்கொன் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் குப்தா தகவல் வெளி­யி­டு­கையில் எமது இர்கொன் நிறு­வனம் என்­பது இந்­தி­யாவின் ரயில்வே அமைச்­சுக்கு கீழ் வரு­கின்ற அரச நிறு­வ­ன­மாகும். உலகில் பல நாடு­களில் நாங்கள் ரயில் பாதை அமைக்கும் திட்­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றோம். உட்­கட்­ட­மைப்பு வச­தித்­திட்­டங்­க­ளையும் முன்­னெ­டுக்­கின்றோம்.

கடந்த 38 வரு­டங்­க­ளாக 20நாடு­களில் 100 திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். இலங்­கையில் 2009 ஆம் ஆண்டு முதல் எமது வேலைத்­திட்­டங்­களை ஆரம்­பித்தோம். முதலில் தெற்கில் ரயில் பாதையை நிர்­மா­ணித்தோம்.அதன் பின்னர் வடக்கில் எமது வேலைத்­திட்­டத்தை ஆரம்­பித்தோம். வடக்கில் மொத்­த­மாக 250 கிலோ மீற்றர் தூரம் ரயில் பாதையை அமைத்தோம். மத­வாச்­சி­யி­லி­ருந்து தலை­ மன்னார் வரை 106 கிலோ மீற்றர் தூரம் ரயில் பாதை அமைக்­கப்­ப­டு­கின்­றது.

மறு­கட்­டமாக ஓமந்­தை­யி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை­யான ரயில் பாதை 145 கிலே மீற்றர் தூரத்தைக்­கொண்­டது. ஏற்­க­னவே ஓமந்­தை­யி­லி­ருந்து பளை மற்றும் மத­வாச்­சி­யி­லி­ருந்து மடு
ரோட் வரை­யான பாதை நிர்­மா­ணிக்­கப்­பட்டு ரயில் சேவை இடம்­பெ­று­கின்­றது. அடுத்­த­கட்­ட­மாக பளை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம் வரை­யான பாதை நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­விட்­டது. எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனா­தி­ப­தி­யினால் பாதை திறந்து வைக்­கப்­ப­ட­வுள்­ளது. முழு வடக்கு மக்­களும் இதனை எதிர்­பார்த்­துள்­ளனர். அந்த எதிர்­பார்ப்பை நாங்கள் நிறை­வேற்­று­கின்றோம். கனவு நன­வா­கப்­போ­கின்­றமை குறித்து மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். தெற்­கி­லி­ருந்து யாழ்ப்­பாணம் வரை மக்கள் பய­ணிக்­கலாம்.

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து காங்­கே­சன்­து­றை­வரை 18 கிலோ மீற்றர் தூரம் உள்­ளது. இதில் இடையில் காணப்­பட்ட அதி­யுயர் பாது­காப்பு வலய சிக்கல் கார­ண­மாக தாம­த­மா­கி­யது. எனினும் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாது­காப்பு வலயம் நீக்­கப்­பட்டு எமக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. எனவே இவ்­வ­ருடம் டிசம்பர் மாத பகு­தியில் காங்­கே­சன்­து­றை­வ­ரை­யான ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டு­விடும்.

மடுரோட் நிலை­யத்­தி­லி­ருந்து திருக்­கே­திஸ்­வரம் வரை­யான 30 கிலோ மீற்றர் ரயில் பாதை நவம்பர் மாதம் ஆரம்­பிக்­கப்­படும். அதன் பின்னர் தலை­மன்னார் வரை­யான பாதையும் அடுத்த வருடம் ஆரம்­பத்தில் ஆரம்­பிக்­கப்­படும். கொழும்பு -  யாழ்ப்­பாணம் வரை­யான ரயில் சேவையில் மக்கள் 8 மணித்­தி­யா­லங்­களில் பய­ணிக்­கலாம் என்­ப­தனை குறிப்­பி­டு­கின்றோம். கொழும்பு - யாழ்ப்­பாணம் வரை­யான ரயில் பாதை சுமார் 400 கிலோ மீற்றர் தூரத்­தைக்­கொண்­டது. இந்த தூரத்தை வாக­னங்­களில் செல்­வது கடி­ன­மாகும்.

நாம் நிர்­மா­ணித்­துள்ள ஓமந்தை முதல் யாழ்ப்­பாணம் வரை­யான பாதை 120 கிலோ மீற்றர் வேகத்தில் பய­ணிக்க முடி­யு­மான அமைப்­பைக்­கொண்­டது. ஆனால் சாதா­ர­ண­மாக ரயில் 100 கிலோ மீற்றர் வேகத்தில் பய­ணிக்கும். அந்­த­வ­கையில் சுமார் 400 கிலோ மீற்றர் தூரத்­தைக்­கொண்ட கொழும்பு - யாழ்ப்­பாணம் வரை­யான ரயில் பாதையின் தரத்தை உயர்த்­தினால் 5 மணித்­தி­யா­லங்­களில் கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பாணம் வரை பய­ணிக்­கலாம். எந்­த­வொரு களைப்பும் இன்றி மகிழ்ச்சி­யாக பய­ணிக்­கலாம்.

தற்­போது கூட கொழும்­பி­லி­ருந்து ஓமந்தை வரை ஒரு குறைந்த வேகத்தில் பய­ணித்­தாலும் பளை­யி­லி­ருந்து யாழ்ப்­பாணம்வரை 120 கிலோ மீற்றர் வேகத்தில் பய­ணிக்கலாம்.எமது நிர்­மாணம் அந்தள­விலேயே விடப்பட்டுள்­ளது.எனவேகொழும்­பி­லி­ருந்து ஓமந்தை வரை­ யான ரயில் பாதை தர­மு­யர்த்­தப்­ப­டு­வ­தா­னது அவ­சி­ய­மாகும். இதற்கான யோச­னையை அர­சாங்­கத்­துக்குவழங்­கி­யுள்ளோம். அதனைமுன்­னெ­டுப்­பதா இல்­லையாஎன்­ப­தனை இலங்கை அரசாங்­கமே தீர்­மா­னிக்­க­வேண்டும். அண்மையில் கூட மாஹோவில் ரயில் தடம்புரண்­டது நினைவி­ருக்­கலாம். பாது­காப்பான ரயில் சேவையை வழங்­கு­வது அர­சாங்­கத்தின் கட­மை­யாகும்.

இந்­தி­யாவில் நாங்கள் 160 கிலோ மீற்றர் வேகத்தில் பய­ணிக்கும் ரயில் பாதை அமைத்­துள்ளோம். அடுத்­த­தாக இந்­தி­யாவில் 350 கிலோ மீற்றர் வேகத்தில் பய­ணிக்கும் ரயில் பாதையை அமைக்க திட்­ட­மிட்­டுள்ளோம். அதனை இலங்­கையில் அமைத்தால் என்ன நடக்கும். மாத்­த­றை­யி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு 560 கிலோ மீற்றர் தூரத்தை ஒன்­றரை மணி­நே­ரத்தில் சென்­ற­டை­யலாம். ஆனால் தற்­போது 120 கிலோ மீற்றர் வேகத்தில் பய­ணிக்கும் பாதையை ஓமந்­தை­யி­லி­ருந்து யாழ்ப்பாணம் வரை அமைத்­துக்­கொ­டுத்­துள்ளோம்.

மேலும் சமிக்ஞை அமைக்கும் வேலைத்­திட்­டத்தையும் நாம் முன்­னெ­டுத்­துள்ளோம். அதுவும் மிகவும் செயற்­தி­ற­னான சமிக்ஞை கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­யுள்ளோம். வீதி பய­ணத்தை­விட ரயில் பயணம் மிகவும் சிறந்­தது. எரி­பொருள் சிக்­கனம் வாய்ந்­தது. மகிழ்ச்­சி­யாக பய­ணிக்­கலாம்.நாம் எதிர்­கொண்ட சவால்கள் என்ற வகையில் முதலில் சிறிய கற்­களை பெறு­வதில் சிக்­கல்­களை எதிர்­கொண்டோம். எவ்­வா­றெ­னினும் இறு­தியில் அவற்றை பெற்றோம். அடுத்த சவா­லாக யாழ்ப்­பா­ணத்­திலி­ருந்து காங்­கே­சன்­துறை வரை­யான ரயில் பாதையை ஆரம்­பிக்­கும்­போது அங்கு அதி­யு
யர் பாது­காப்பு வலய பிரச்­சினை ஏற்­பட்­டது. பாது­காப்பு தரப்பு மிகவும் தாம­த­மா­கியே குறித்த பகு­தியை எமக்கு விடு­வித்­தது. இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னரே அவற்
றை பெற்றோம்.

தற்­போது அந்­தப்­பா­தையை அமைத்­து­ வ­ரு­கின்றோம். அடுத்­த­தாக கண்­ணி­வெ­டி­ய­கற்றும் பணி­க­ளிலும் சவால்­களை எதிர்­கொண்டோம். மத­வாச்­சி­யி­லி­ருந்து தலை­மன்னார் வரை இந்­திய நிறு­வனம் கண்­ணிவெ­டி­ய­ கற்றும் பணி­களை மேற்­கொண்­டது.ஓமந்­தை­யி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை இலங்கை இரா­ணுவம் அந்தப் பணி­களை முன்­னெ­டுத்­தது.

இவற்றில் ஏற்­பட்ட தாம­தமும் ரயில் பாதை நிர்­மா­ணிக்கும் செயற்­பாட்டில் தாம­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது. எவ்­வா­றெ­னினும் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எங்­க­ளுக்கு பாரிய உத­வியை வழங்­கினார். அவரின் உதவி இல்லா­விடின் இதனை சாதித்­தி­ருக்க முடி­யாது.

நாங்கள் மரக்­கட்­டை­களை அமைக்­க­வில்லை.மாறாக கொங்ரீட் தூண்­க­ளையே அமைக்­கின்றோம் என்றார்.யாழ்­தேவி மீண்டும் யாழ்ப்­பா­ணத்­துக்கு வரப்­போ­கின்­றது என்­பதில் மக்கள் பல்­வேறு எதிர்­பார்ப்­புக்­க­ளு­ட­னேயே உள்­ளனர். வடக்­குக்கு கொழும்­பி­லி­ருந்து மீண்டும் ரயில் பாதை அமைக்­கப்­பட்டு ரயில் சேவை ஆரம்­பிக்­கப்­ப­டு­வது வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும். அந்த விட­யத்தில் இந்­திய அர­சாங்கம் வழங்கும் உத­வியும் பாராட்­டத்­தக்­கது.

மீண்டும் யாழ்­தேவி யாழ்ப்­பா­ணத்­துக்கு செல்லப்போகின்றது என்றார்.

 

http://www.virakesari.lk/articles/2014/10/13/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் முதன் முதலாக தொடரூந்து சேவையை ஆரம்பித்த ஆங்கிலேய அஅன்று மகாதேசாதிபதிகூட இவ்வளவு டாம்பீகமாக அதை ஆரம்பித்து வைத்திருக்க மாட்டார்.

 

அவர்கள்  புலிகளை  வெல்லவில்லை

எனவே இவ்வளவும் புலிகளின் திறனையே  வெளிப்படுத்தி  நிற்கின்றன..........

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka's Colombo-Jaffna railway reopens.

 

_78171503_d938ce6b-c285-4498-a1b9-a09346
 
The reopening of the railway station is considered a positive symbol of post-war Sri Lanka
 

A popular Sri Lankan rail service known as the "Queen of Jaffna" has reopened, linking the capital, Colombo, to Jaffna in the country's north.

 

President Mahinda Rajapaksa inaugurated the newly renovated railway line, which was closed 24 years ago during Sri Lanka's bloody civil war.

The railway had provided a vital link between north and south, transporting goods and people through the country.

 

Its reopening is seen by many as a positive symbol of post-war Sri Lanka.

 

_78171529_f534af5c-7ca5-4c82-8b59-f1c2eb
 
Jaffna station has been decorated ahead of Monday's ceremony
 
_78171527_2a68cc93-0fea-475f-abdf-3ba73f
 
Before its closure in the war, the railway line played an important role linking Sri Lanka's north and south
 
_78171525_3d20e8f0-13b8-4f0b-851e-63c8a8
 
Jaffna station has been rebuilt and renovated
 

The train will offer Jaffna's young a new experience - many of them have never seen a train before, the BBC's South Asia analyst Jill McGivering reports.

 

For decades, Tamils had used the service to travel the length of Sri Lanka, going back and forth between home villages in the north and jobs in the south, our correspondent adds.

 

During the civil war, government troops used the service to access the north - and the trains became a target for attack as they passed through areas controlled by the Tamil Tiger rebels.

 

The civil war, which lasted from 1983 to 2009, killed more than 70,000 people. The conflict ended in May 2009, when government forces seized the last territories held by the Tamil Tigers.

 

http://www.bbc.co.uk/news/world-asia-29592232

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

யாழ்.சென்றடைந்தது யாழ்தேவி
திங்கட்கிழமை, 13 ஒக்டோபர்

1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர், இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் சென்றடைந்தது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், இந்த உத்தியோகபூர்வ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தையும்  ஜனாதிபதி சற்றுமுன்னர் திறந்துவைத்தார்.

 

பளை ரயில் நிலையத்திலிருந்து இன்று முற்பகல் 10.09 சுபமுகூர்த்த வேளையில், யாழ்தேவியில் ஏறி அமர்ந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், ஆயிரக்கணக்கான மக்களுடன் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர்.

இந்திய அரசின் நிதியுதவில் இலங்கை ரூபாய்ப்படி 10,400 கோடி ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்ட நிலையில், யாழ்தேவி தனது உத்தியோகபூர்வ பயணத்தை இன்று மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/130014-2014-10-13-05-19-46.html

முதல் முதல் வடக்கு மக்கள் ரயிலை பார்த்தனர் இன்று... வாயால் ரெயில் ஓட முடியாது என்று உணர்த்த நாள் இன்று  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு பிளேன் ஏறி வந்த தமிழர்களே ரெயிலை காணாத மாதிரி எல்லோ கதை அளக்கினம்..!! எஜமான விசுவாசம் மட்டும் எக்கச்சக்கமா இருக்குது. :lol::icon_idea:

யாழ் தேவியும், மகிந்த படைகளும்!

பளையிலிருந்து புறப்பட்ட 'யாழ் தேவி' ரயில் 64 நிமிடங்களில் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை இன்று (13) முற்பகல் 11.13இற்கு சென்றடைந்தது.


ரயில் சேவையை ஆரம்பித்து வைத்து அதில் பயணித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை வரவேற்பதற்காக யாழ் ரயில் நிலையம் மாத்திரமன்றி முழு நகரமும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


எப்போதும் கையில் வைத்திருக்கும் மந்திரக் கவசத்துடன் ஜனாதிபதி மகிந்த சென்றிறங்கிய நிகழ்வில் செய்தி சேகரிக்க ஏராளமான ஊடகவியலாளர்களும் கூடியிருந்தனர்.


இன்று யாழ் நகரம் முழுவதும் திருமண வீடாக மாறியதாக யாழ் செய்திகள் தெரிவித்தன. இலங்கை மற்றும் இந்திய தேசியக் கொடிகள் அங்கு பறக்கவிடப்பட்டிருந்தன.


எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களோ, வடக்கு முதலமைச்சரோ அவர்களின் பிரதிநிதிகளோ இதில் கலந்துகொள்ளவில்லை.


ரயில் நிலையத்தில் இடம்பெற்ற சிறிய நிகழ்வின் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஜனாதிபதி சென்றுவிட்டதாக அந்த செய்திகள் மேலும் தெரிவித்தன.

 

யாழ் தேவியின் உத்தியோகபூர்வ பயணத்திற்கான அலங்காரங்கள், பாதுகாப்புக்கள் என மகிந்த படையினர் பரபரப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்ததாக யாழிலில் இருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://www.tamil.srilankamirror.com/news/2612-2014-10-13-12-43-47

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் அல்ல தங்கள் வாழ்வில் மாற்றத்தை விரும்பி ஏக்கத்தோடு வந்தவர்கள்.

வேடிக்கை பார்க்க வந்தவர்கள் அல்ல வேலை தேடி நின்றவர்கள்.

இங்கு வாழ்த்து சொல்ல வந்தவரில்லை பிச்சை வேண்ட வந்தார்கள்.

கைகள் தட்டப்பட்டாலும் வாழ்த்த மறுக்கும் மனசு.

இது ஊரில் இருந்து எனது அண்ணாவின் மகன் எழுதியனுப்பியது.

10626552_985926284758201_441108803549255

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலமே ‘யாழ்தேவி’ – ஜனாதிபதி

 

 
  •  
     
  •  
 

president.jpg

வட பகுதிக்கான ரயில் சேவை, மற்றுமொரு போக்குவரத்து மார்க்கம் மாத்திரமன்றி, வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவுப் பாலம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

பளை முதல் யாழ்ப்பாணம் வரையான ரயில் மார்க்கத்தை திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையே கடந்த காலங்களில் நிலவிய சகோதரத்துவம் மற்றும் கலாசார பிணைப்பை இந்த ரயில் போக்குவரத்தின் ஊடாக மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியுமென ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2014/10/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/

ஏதோ தன்ட அப்பன் வீட்டு சொத்தை வைச்சு ரயில் விட்ட மாதிரி என்னா ஒரு பில்டப்பு!
 
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவினா சரி. மற்றும்படி யாழ்தேவி வருகையையும் தமிழரின் உரிமையையும் போட்டு குழப்பத்தேவையில்லை. 

 

ஏதோ தன்ட அப்பன் வீட்டு சொத்தை வைச்சு ரயில் விட்ட மாதிரி என்னா ஒரு பில்டப்பு!
 
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவினா சரி. மற்றும்படி யாழ்தேவி வருகையையும் தமிழரின் உரிமையையும் போட்டு குழப்பத்தேவையில்லை. 

 

 

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவுவதே ஒரு அரசின் கடமை.  ஆனால் இலங்கையில் அரசு  உபத்திரவம் செய்யாமல் விட்டாலே மக்கள் இயல்பாக வாழ்வார்கள் என்பதே நிஜம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவிக்கு முதல் திரும்ப வேண்டியது தொலைந்து போன மக்களின் வாழ்க்கை!-

 

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்-

jaffna%20man_CI.jpg

 

ஈழத் தமிழ் இனம் தன்னுடைய நியாயமான அரசியல் கோரிக்கைகளை பெறுவதில் தடைகள் இருப்பதென்பதற்கப்பால் பாதையற்ற நிலையில் தவிக்கிறது. ஊரைக் காணாதவர்களும் வீடுகளைப் பார்க்காதவர்களும் எங்கள் மக்கள். வவுனியாவைத் தெரியாதவர்களும் யாழ்ப்பாணத்தை தெரியாதவர்களும் வன்னியைத் தெரியாதவர்களும் என்று துண்டிக்கப்பட்ட போர் வலயங்களில் எங்கள் மக்கள் வாழ நிர்பந்திக்கப்பட்டார்கள். பல்லாண்டுகளாக மூடப்பட்ட பாதைகளும் பல்லாண்டுகளுக்குப் பின்னர் திறக்கப்பட்ட வீதிகளும் எங்களுடைவை. அறுந்த வீதிகளும் தடைப்பட்ட வீதிகளும் எங்கடையவை. போராடும் ஈழத் தமிழினம் பாதைகளுக்காகவும் போராடியிருக்கிறது. எங்களுடைய பயணத்தின் பாதைகள் இன்னும் இறுக மூடப்பட்டிருக்கின்றன.    

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் போருக்குப் பிந்தைய அபிவிருத்தி என்கிற பெயரில் ஒரு சர்வதேச மாநாடு நடந்தது. அந்த மாநாட்டுக்கு வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக் காந்தா இன்னும் ஒரு வருடத்தில் யாழ்தேவி திரும்பும் என்று குறிப்பிட்டிருந்தார். யாழ்தேவி திரும்புதல் என்பது எதனை குறிக்கும்? உரிமைக்காகப் போரடிய ஈழத் தமிழினம் ஒரு தீர்வைப் பெற்றுக் கொண்டதைக் குறிக்குமா? அல்லது இலங்கை அரசாங்கம் குறிப்பிடுவதுபோல ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில் வசந்தம் திரும்பிவிட்டது என்பதைக் குறிக்குமா? 

வடக்கு கிழக்கில் மக்கள் திரும்பாத கிராமங்கள் பல இருக்கின்றன. அதைப்போலவே திறக்கப்படாது மூடுண்ட வீதிகள் பலவும் இருக்கின்றன. ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை கோரிப் போராடிய பொழுது, இருந்த வீதிகளும் மூடுண்டு போயின. இருந்த கிராமங்களும் பறிக்கப்பட்டன. வாழ்க்கை மூடுண்ட வரலற்றுச் சோகத்தில் வாழும் ஈழத்து மக்களுக்கு வாழ்க்கை திரும்புதல் என்பது உண்மையில் எப்படியிருக்கும்? என்றே கேட்கத் தோன்றுகிறது. இலங்கை இனப்பிரச்சினையினையும் ஈழப்போரையும் வைத்துக் கொண்டு ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை திரும்புதல் என்பது எப்படியிருக்கும் என்பதை மெய்யான புரிதலுடன் நேர்மையாக அணுகுவது முக்கியமானதாகும். 

yarl%20thevi%20rail%204.JPG

இந்தியா ஈழத் தமிழர்களுக்காக அக்கறையோடு இருக்கிறது! இந்தியா ஈழத் தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்!! இந்தியா யாழ் தேவி ரயிலை திருப்பி அனுப்பும்!! என்கிற அறிக்கைகள் இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவைப் காப்பாற்றுவதைக் குறித்து முயற்சிக்கிறதே தவிர அது ஈழத் தமிழர்களின் வாழ்வை திரும்பி கொடுத்து விடாது என்பதே முக்கியமானது. 

யாழ் தேவி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் தொடருந்து சேவையாகும். இதன் நீளம் 411 மீட்டர்கள் ஆகும். இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது இராகமை, பொல்காவலை, மாகோ, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. தற்போது இச்சேவை இலங்கையின் இடம்பெற்ற போர் காரணமாக வவுனியாவுடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது. 1990 ஜூன் 12 ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. ஆனாலும், மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.

யாழ் தேவி ரயிலை மீண்டும் வருவதற்கு முன்பாக அது எதனால் எப்பொழுது நின்று போனது என்பதைக் குறித்து ஆராயவேண்டியது அவசியமானது. இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை முற்றி ஆயுதப்போராட்டமாக வெடித்த பொழுது 1990இல் யாழ் தேவி உட்பட வடக்கிற்கு வந்து போன ரயலகளின் பாதைகள் அறுந்து போயின. அந்த பாதை துண்டிப்பும் பயண நிறுத்தஙகளும் இலங்கைத் தீவில் இனப்பிரச்சினை ஏறபடுத்திய பிளவுகளை மிகத் தெளிவாக காட்டின. வடக்கைப் பொறுத்தவரை ரயில்கள் வந்து போன இடங்களில் எரிந்த பெட்டிகள் சிலது மட்டும் மிஞ்சயிருந்தன. அவை யுத்தகளங்களில் பதுங்கி சண்டையிடும் பெட்டிகளாகவும் அகதிகள் வந்து தஞ்சமடையும் பெட்டிகளகவும் மாறின. ஈழத்தில் ரயிலைப் பார்க்காத ரயிலின் சத்தத்தை அறியாத தலைமுறைப் பிள்ளைகள் பலர் உருவாகினார்கள். அவர்கள் பாடப்புத்தங்களிலும் புகைப்படங்களிலும் சத்தமற்ற ரயிலை கண்டனர். சத்தத்தை வாசித்தறிந்தனர். 

ரயிலைப் பார்க்காத வாழக்கை என்பது துண்டிக்கப்பட்ட பாதைகளில் மூடுண்ட யுத்த வலயங்களின் வாழக்கையைத்தான் குறிக்கின்றது. பல்வேறு பொருட்களும் வளங்களும் நீண்ட காலப் பயணங்களும் என்று எல்லாமே தடைபட்ட சூழலில் வடக்கலும் கிழக்கிலும் உருவாக்கப்படடதைக் குறிக்கின்றது. ஈழத் தமிழ் மக்கள் எதற்காக இத்தகைய சூழலில் வாழ்கிறார்கள்? என்றும் எதற்காக இத்தகைய சூழலில் வாழ இலங்கை அரசுகளால் நிர்பந்திக்கப்படுகிறார்கள்? என்றும் எதற்காக இப்படியான சூழல் உருவானது? என்பதுமே இங்கு முக்கியமானது.  

yarl%20thevi%20rail%203.jpg

யாழ்ப்பாணத்தின் புகையிரத நிலையம் இன்று அழிவின் பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கிறது. ஒரு யுத்த நகரத்தில் ஒரு யுத்த நிலத்தில் பல பத்தாண்டுகளாக ரயிலே வராத ஒரு நிலையத்தின் அழிவின் தோற்றத்தை, மீண்டும் மீண்டும் யுத்தத்திற்கு முகம் கொடுத்த அந்த நிலையத்தின் சுவர்களில் உள்ள காயங்களின் கதைகளை நமக்குப் புலப்படுத்துகிறது. யாழ்ப்பாணப் புகையிர வழிகளில் உள்ள கதைகள்தான் யாழ் தேவி என்கிற ரயில் திரும்புவதன் மெய்யான அர்த்தத்தை அவசியப்படுத்துகிறது. 

தாயகம் கேட்டுப் போராடிய நிலையில் கொடும் யுத்தம் காரணமாக ஈழத்து மக்களின் வாழ்க்கை தெருவுக்கு வந்தது. அகதிகளாக அல்லலுறும் சனங்களாக தெருவுக்கு வந்த மக்களின் நீண்ட துயரத்தை யாழ்ப்பாண புகையிரத வழிகள் புலப்படுத்துகின்றன. புகையிரத வழி நீட்சிக்கும் பிரிபடாத இணைப்புக்கும் உதாரணங்களாக சொல்லப்படுவதுண்டு. ஆனால் ஈழ மக்களின் வாழ்வில் அவலத்தின் நீட்சிக்கும் பிரசசினைகளின் சிக்கலுக்கும் புகையிரத வழிகள் உதாரணமாகிவிட்டது.  

யாழ் புகையிரத வீதியில் திருவெல்வேலிப் பகுதியில் சில சனங்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அந்தத் தெருக்கரையில் உள்ள ஆலமரத்தடியில் ஒரு முதியவர் எப்பொழுதும் இருப்பார். அங்கு ரயில் வராததினால் உருவாகியிருக்கும் ஆலயத்தின் முன்பாக உள்ள திட்டு ஒன்றில் அவர் குந்தியிருப்பைதயும் படுத்துறங்குவதையும் அடிக்கடி காணமுடியும். சில நேரங்களில் அவர் உறங்கிக் கொய்டிருக்கும் பொழுது சில நாய்களும் ஆடுகளும் மாடுகளும்கூட அவருடன் சேர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும். 

இந்தத் தெருக்களில் ரயில் செல்வதை அவர் பார்த்திருக்கிறார். உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது ரயில் செல்வதாக தான் திடுக்கிடுவதாக குறிப்பிட்டார். சில தருணங்களில் ரயில் தனக்கு மேலால் ஏறிச் செல்வது போலவும் அதிரச்சியடைந்து எழுவதாக அவர் குறிப்பிட்டார். ஒரு நிம்மதியான தூக்கத்தை அவர் தூங்கவில்லை என்பதுடன் அதை இழந்து இருபது வருடங்களாகின்றன என்பதுதான் மிகுந்த துயரம். முப்பது வருடங்களாக வீட்டை நிலத்தை இழந்து தெருவில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதூன் இங்கு சனங்களின் சோமாகமாக இருக்கிறது.  

yarl%20thevi%20rail%202.JPG

ஆரம்பத்தில் யாழ் புகையிர நிலையத்தில் பல குடும்பங்கள் தஞ்சமடைந்திருந்தனர். புகையிரத வழிகளில் தஞ்சமடைந்திருந்த பலரும் வலிகாமம் வடக்கு உட்பட உயர்பாதுகாப்பு வலயம் என்கிற பெயரில் நிலம் அபகரிக்கப்பட்ட பிரதேசங்களின் மக்களே. இந்த மக்கள் புகையிரத வழி நெடுகவும் அதன் கட்டிடங்களிலும் சிறிய சிறிய கூடாரங்களை அமைத்தும் குடியிருந்தனர். இந்த மக்களை அகற்றுவதற்கு தீர்மானித்த பொழுது காவல்துறையினர் மூலம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கப்பட்டது. எங்கள் சொந்த நிலத்திற்கு எங்களை விட்டால் நாங்கள் ஏன் தெருவில் இருக்கப் போகிறோம்? என்று மக்கள் கேட்டார்கள். சொந்த நிலத்திற்கு மக்களை அனுப்புவது குறித்து ஏதுவும் சொல்லப்படாத நிலையில் அந்த வழியில் இருந்த மக்களை அகற்றுவதில் அரச தரப்பு குறியாயிருந்தது. 

வீதியில் வாழ்தல் என்பது ஒரு போராட்டமாகவும் இருக்கிறது. அபகரிக்கப்பட்ட நிலத்திற்கு எங்களை வாழ அனுமதி! எங்கள் நிலத்தை எங்களிடம் தா!! என்கிற கோரிக்கைகள் உள்ளடங்கயிருப்பதை உணர்த்துகின்றன. புகையிரத வீதியில் வாழ்ந்து கொண்டு நிலத்தை கோரும் இந்தப் போராட்டம் பெரும் அவலமாக நீண்டிருந்தது. அத்துடன் உயர்பாதுகாப்பு வலயச் சுவர்கள் வரை முட்டிக் கொண்டிருந்தது. எங்களுக்கு இந்த அடையாளம் தேவைதானா? என்று கோண்டாவில் பகுதியில் புகையிரத அலுவலக கட்டடிங்களில் வசிக்கும் மக்கள் கேட்கின்றனர். 

இன்று புகையிரத வழியில் இருப்பவைகளை 'குப்பத்து மக்கள்' என்று சிலர் அழைக்கிறார்கள். காலம் காலமாக வாழ்ந்த நிலத்தை இழந்து 'குப்பத்துச்சனங்கள்', 'சேரிச்சனங்கள்' என்ற அடையாளத்தை இந்த மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது எவ்வளவு சோகமானது? திருவெல்வேலிப் பகுதியில் விளையாடும் புகையிரத வழியில் வசிக்கும் குழந்தைகளை 'குப்பத்துப் பிள்ளையள்' என்று பலரும் அழைக்கக் கேட்டிருக்கிறேன். அந்தக் குழந்தைகளின் புகையிரத வழியில் கொட்டப்படும் குப்பைகளைத்தான் பொழுது போக்காக பொறுக்குகிறார்கள். அவர்களின் கைகளில் விளையாட பொம்மைகளோ, படிப்பதற்கு புத்தகங்களோ இருக்கவில்லை. 

யுத்தம், இடப்பெயர்வு, நிலமிழப்பு என்பன இப்படித்தான் எங்கள் சந்ததியின் அடையாளத்தையே அழித்து வடுகிறது. எதிர்காலத்தின் பசுமையை கருக்கிவிடுகிறது. இனத்தின் அடையாளத்தை மாற்றி விடுகிறது. புகையிர வழியில் பிறந்து அதற்குள்ளே வளர்ந்த பல பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டடிருப்பதாக புகையிரதவழியல் வசிப்பவர்கள் சொல்லுகிறார்கள். எல்லோருடைய பிள்ளைகளைப் போலவும் எங்களின் பிள்ளைகளும் படிக்க வேண்டும் அவர்களின் எதிர்காலம் வளம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த ஆசை நியாயமான ஆசை என்பதைவிடவும் அவசியமான தேவை என்றே குறிப்பிட வேண்டும். 

 

இந்த மக்களின் கதைகள் இப்படியிருக்க, இந்தப் பகுதியில் சனங்கள் வாழ்ந்தார்களா? என்று கேட்கும் அளவில் உயர்பாதுகாப்பு வலயங்கள் என அபகரிக்கப்பட்ட இந்த மக்களின் பிரதேசங்கள் பாழடைந்திருக்கின்றன. அங்கு மக்களின் வீடுகள் உடைந்து சிதிலங்களோடிருக்கின்றன. இராணுவத்தினரின் முட்கம்பி சுருள்களும் மண்மேடுகளும் உயர்பாதுகாப்பு வலயக் கிராமங்களின் அடையாளங்களாகிவிட்டன. சில வீடுகள் இராணுவத்தின் தங்குமிடங்காளாகவும் பாசறைகளாகவும் இருக்கின்றன. மக்கள் வெளியேற்றப்பட்ட இந்த வீடுகளுக்கு இந்தக் கிராமத்திற்கு மக்கள் திரும்பமுடியாமல் உள்ள பொழுது யாழ் தேவி ரயில் எங்கு செல்லப் போகிறது? எதற்காக செல்லப் போகிறது என்கிற கேள்விகள் எழுகின்றன.  

வறுமை பகுப்பாய்வுக்கான நிறுவனத்தின் செயற்பாட்டாளர் பிரியந்தி பெனாண்டோ இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி சாதாரண மனிதர்களை கணக்கிலெடுக்காதவை என்று குறிப்பிடுகிறார். பாதுகாப்பிற்காக நிலங்கள் அபகரிக்கப்படும் என்று சொல்லப்பட்டதுபோய் அபிவிருத்திக்காக நிலங்கள் அபகரிக்கப்படும் என்று சொல்லப்படும் சூழல் உருவாகும் அபாயம் காணப்படுகிறது. எது அபிவிருத்தி? தமிழர்களின் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பின்னால் பல்வேறு அரசியல்கள் உள்ளன. இவை அரசிலுக்கான அபிவிருத்தியாகும். அநுராதபுரத்தின் புராதன நகரத்தை பாதுகாத்துக் கொண்டு புதிய நகரத்தை கட்டமைத்திருக்கையில் யாழ்ப்பாணத்து புராதன வீதிகளை உடைத்து புதிய நகர வீதிகள் அமைக்கப்படுகின்றன. அதைவிட அபிவிருத்தி என்ற பெயரால் மக்களின் காணி நிலங்களை அபகரிக்கும் அபாயமும் இப்பொழுது உருவாகியுள்ளது. 

தமிழ் மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பட்டடினியாலும் நோயாலும் தண்டிக்கப்பட்டவர்கள். மூடுண்ட இராணுவ வலயங்களில் கொலை செய்யபட்டவர்கள். பல பத்தாண்டுகளாக யாழ்ப்பாணத்தற்கான தரை வழிப்பாதை துண்டிக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை நடைமுறையில் இருந்த பொழுதே யுத்தம் வெடித்து ஏ-9 பதை மூடப்பட்ட பொழுது மனிதாபிமான ரீதியாக அந்தப் பாதையை திறக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிய பொழுது அரசாங்கம் அதனை நிராகரித்து பாதையை மூடி வைத்திருந்தது. சந்திரிகா அரசாங்கம் ஏ-9 பாதைக்கான யுத்தமாக பல்வேறு படை நடவடிக்கைகளை திறந்து மக்களை யுத்த அவலத்தில் தள்ளியது. எனவே பாதைகளை மூடுவதற்கும் துண்டிபதற்கும் அபகரிப்பதற்கும இப்படிப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே பாதைகள் அமைத்தலுக்கும் திறத்தலுக்கும் தமிழ் மக்கள் எதிரானவர்களில்லை. சனங்கள் இல்லாத கிராமங்களுக்கு யாழ்தேவி செல்லுவதில் என்ன அர்த்தம் என்பதே தமிழர்களின் கேள்வியாக உள்ளது. 

Jaffna-Railway-station.jpg

தற்பொழுது யுத்தம் நடந்த பகுதியில் உள்ள ஏ-9 பாதை புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பாதைகளின் புனரமைப்பு பணிகள் முடிந்தவுடன் இந்தப் பாதை திறப்புக்கள் பெரும் அரசியலாகவும் தமிழர்கள்மீதான தாக்குதலாகவும் அமையும். வன்னிப் பகுதியில் ஏ-9 பாதையை விட்டு சற்றுத் தூரத்திற்குச் செல்லும் பொழுதே போருக்குப் பிந்தைய மக்களின் வாழ்க்கை எப்படியிருக்கிறது? போருக்குப் பிந்தைய அபிவிருத்தி எப்படியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். வடக்கில் வீசுவது வசந்தமா? அவலமா? என்பதைப் பார்க்க முடியும். ஏனெனில் ஏ-9 பாதையின் சில இடங்கிலும் அதற்கு சற்று இறங்கி உள்ளே செல்லும் பொழுதும் சனங்கள் வாழ முடியாத காலக்கொடுமை மிகுந்த கூடாரங்களை பார்க்க முடியும். குண்டுகளும் குளங்களும் உள்ள செம்மண் வீதிகளைப் பார்க்க முடியும். இடிந்து போன வாழ்க்கையை பார்க்க முடியும். 

தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடத் தொடங்கிய பொழுது ஓடிக் கொண்டிருந்து யுத்தம் காரணமாக நின்றுபோன யாழ் தேவி ரயிலை மீண்டும் ஓட வைப்பதன் மூலம் இந்தியா குறிப்பிடுவதுபோல ஈழத் தமிழ்ர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடாது. ஈழத் தமிழ் மக்கள் அவர்களின் தாயகத்தில்  அமைதியாகவும் உரிமையோடும் வாழக்கூடிய தீர்வு ஒன்று உருவாக்கப்பட்டாலே ஈழத் தமிழர்களின் மெய்யான வாழ்க்கை திரும்பும்., யாழ் தேவிக்கு முன்பாக மக்களும் மக்களின் வாழ்க்கையும் அதனுடன் தொடர்புடைய பலவிடயங்களும் திரும்ப வேண்டும். அல்லது சனங்களில்லாத கிராமங்களுக்கே யாழ் தேவி ரயில் திரும்பும். 

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச் செல்வன்-

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/81213/language/ta-IN/----.aspx

 

317_thumb_cartoon_14-10-2014.jpg

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவியும் வந்தாச்சுது மகிந்தவும் வந்திட்டார்
தேர்தல் எப்ப வரும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஹய்யா ஜாலி....யாழ்ப்பாணத்துக்கு யாழ் தேவி வந்தாச்சு......

எங்களுக்கு தமிழீழம் கிடைச்சாச்சு.....

தமிழர்கள் பிறவிப்பயன் அடைஞ்சாச்சு....

மாவீரர்களின் கனவு பலிச்சிடிச்சு......

இனி புலம்பெயர் Tamils ஜாலியா யாழ் தேவியில் போயிட்டு வந்து

யாழ் தேவியில் ஒரு ஜாலி பயணம் .....சும்மா அந்த மாதிரி அதிருதில்ல.....

என்று கட்டுரை கட்டுரையா எழுதி தள்ளுவினம்.....

அப்பிடியே.....என்ன தான் Eurostarல சண்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு போனாலும்......யாழ் தேவியில் புட்டும் முட்டபொறியலும் சாபிட்டிடு போற மாதிரி வாறது என்று அள்ளி விடுவினம்.....

இதெல்லாம் கேட்க தயராகிங்க மக்களே....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்தேவி ரயில் வரவேற்பில் கட்டாயமாக அழைக்கப்பட்ட மக்கள்- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

ஜனாதிபதியை அங்கிள் மாமா என அழைக்குமாறு மாணவர்ளிடம் கூறிய ஈபிடிபி:-

jaffna_train_sri_lanka_mahinda1_CI.jpg


யாழ்தேவி ரயிலை வரவேற்க யர்ழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் ஈபிடிபியும் இணைந்து மேற்கொண்டிருந்தன. 24 வருடங்களின் பின்னர் ரயில் பாதைகளும் ரயில் நிலைய கட்டங்களும் புனரமைக்கப்பட்டு யாழ் தேவி நேற்று திங்கட்கிழமை யாழ் சென்றது.


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வரவேற்கும் நிகழ்வுகளில் யாழ்ப்பாண மக்கள் எவரும் முழுமனதுடன் கலந்துகொள்ளவில்லை. ஈபிடிபியின் ஏற்பாட்டில் அவர்களுக்கு ஆதரவான மக்கள் பேரூந்துகளில் அழைத்து செல்லப்பட்டு யாழ், பளை, நாவற்குழி ரயில் நிலையங்களில் இறக்கிவிடப்பட்டதாக நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஒருவர் கூறினார்.


பாடசாலை மாணவர்களையும் ஈபிடிபியினர் அழைத்துச் சென்றதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அருகில் வந்ததும் தேசிய கொடிகளை அசைத்து அங்கிள், மாமா என்றும் அழைக்குமாறு கூறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய கொடிகளை படையினர் வழங்கியிருந்தனர்.


அரச ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக வரவழைக்கப்பட்டனர். அரச ஊழியர்கள் எவருக்கும் அன்றைய தினம் விடுமுறை வழங்கப்படவில்லை. பிரதேச செயலகங்கள் மற்றும் திணைக்களங்களில் பணிபுரியும் வெளிக்கள அரச ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது என்றும் அதனால் மோட்டார் சைக்கிளை பெறவிருந்த அனைத்து அரச ஊழியர்களும் கடடாயமாக நிகழ்வுகளில் பங்குகொள்ள வேண்டும் என ஆளுநர் அலுவலகம் வலியுறுத்தியிருந்தது.


அதேவேளை தென்பகுதியில் இருந்தும் பேரூந்துகளில் சிங்கள மக்கள் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பாக அம்பாந்தோட்டை தங்காலை பிரதேசங்களில் இருந்து 40 இற்கும் மேற்பட்ட பேரூந்துகளில் அழைத்து வரப்பட்டதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.


இவ்வாறு கட்டாயமாக அழைக்கப்பட்ட மக்களை தவிர யாழ்ப்பாண மக்கள் எவரும் இந்த நிகழ்வுகளில் பங்குகொள்ளவில்லை என்றும் யாழ் தேவி வருகின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வருகின்றார் என்றும் யாரும் அலட்டிக்கொள்ளவில்லை எனவும் அந்த நிகழ்வை மக்கள் புறக்கணித்தனர் என்றும் கூறப்படுகின்றது.

  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/112576/language/ta-IN/article.aspx

 

படத்தினைப் பெரிதாக்க படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்

 

Yarl%20devi%20Final%201500.jpg

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

srilanka_25c_r.jpg

 

இப்போ.... பிளாட் பார ரிக்கற், என்ன விலை என்று யாருக்காவது தெரியுமா?
முன்பு.... 25 சதம் விற்றார்கள்.அதை கொடுக்க மனமில்லாமல் :D,

தண்டவாளத்தாலை நடந்து போய், பிளாட் பாரத்தில் ஏறி...

நண்பர்களை.... கொழும்புக்கு பிரயாணம் அனுப்புவதும் ஒரு திரிலான... அனுபவம். :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

...

முன்பு.... 25 சதம் விற்றார்கள்.அதை கொடுக்க மனமில்லாமல் :D,

தண்டவாளத்தாலை நடந்து போய், பிளாட் பாரத்தில் ஏறி...

நண்பர்களை.... கொழும்புக்கு பிரயாணம் அனுப்புவதும் ஒரு திரிலான... அனுபவம். :lol:

 

நீங்கள் அப்பவே 'அந்தமாதிரி' தானா? :lol::)

 

மதுரையிலும் வழியனுப்ப, வரவேற்க செல்வதனால், நடைமேடை சீட்டு வாங்க வேண்டும், ஆனால் யார் வாங்குறா..? :D:)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.