Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்துவில் ஜனாதிபதி .

Featured Replies

யாழ் இந்து முக புத்தகதில் இருந்து சில படங்கள் .10710959_732121653507661_7998579702089281798500_732120490174444_954424896666440910646795_732120046841155_72542741940782010731187_10152303422551467_3796713838310

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

யாழிந்துவிற்கு ஒரு அவமானம்....

யாழிந்துவிற்கு ஒரு அவமானம்....

 

அப்ப என்ன செய்யலாம் ? .....

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரமும்.....அடக்குமுறை எண்னமும் கொண்டவர் எங்கும் நுழைந்து படம் காட்டலாம்...இது இலங்கையில் சாதாரணம்....அதைவைத்து அங்குள்ள மக்களை எடைபோடுவது சரியல்ல.... சிலர் இதனை தமது வெற்றிபோல் தூக்கிபிடிப்பது அவர்களின் அரசியல் அறியாமையே....நிச்சயமாக இந்த சனாதிபதி வருகை ...எம்மக்களை இன்னும் உறுதியான முடிவை எடுக்கவைக்கும்.....

நியானி: சீண்டும் வரிகள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

10646795_732120046841155_72542741940782010731187_10152303422551467_3796713838310

 

யாழ் இந்துவின் அதிபர் நன்றாகவே வளைந்து கொடுக்கின்றார்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயக ஆட்சி எனும் போர்வையில் சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாட்டில் சிரிப்பதை தவிர வேறென்ன செய்யமுடியும்???? 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சாதாரணமாக கண்டபடி கதைக்கலாம், ஆனால் வசந்தி அரசரத்தினம் மற்றும் யாழ் மாகாணசபையின் செயலாளர் ஆகியோரது எந்த நடவடிக்கையையும் யாரும் விமர்சிக்கவில்லை.

 

திறந்தவீட்டுக்குள்ள ...... புகுவதுபோல் கண்டதுகள் எல்லாம் கண்ட இடங்களில நுளைவது தவிர்க்க முடியாது.

 

யாழ் மக்கள் இவற்றையெல்லாம் பழகிவிட்டார்கள் தவிர படித்தமட்டம் என்பது எதற்கும் வளைந்துபோகும் மதில்மேர் பூனைகள்ஆகி கனநாட்கள் ஆகிவிட்டது.

 

மீளவும் புலிகளது வருகையே இவற்றையெல்லாம் சரிக்கட்டுமெனிலும் கண்ணுக்கெட்டியதூரம் வரைக்கும் அப்படி ஒரு சங்கதி நடக்கும் என்பதற்கான அறிகுறி இல்லை.

 

தவிர, அவர்களது தேவையை நாம் இதுவரைக்கும் முற்றுமுழுதாக உணரவில்லை.

 

மாறாக விஜைக்கும் அஜித்துக்கும் பால் ஊத்தும் கலாச்சாரத்தை உடைய ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பியிருக்கிறோம்.

 

அதற்காக புலம்பெயர் தமிழர்கள் எல்லோரும் பெரும் கொம்பர்கள் என எண்ணிவிடவேண்டாம். இங்கேயும் அதற்கிணையான பொறுக்கிக்கூட்டம் நாட்டுக்கு நாடு பரவிக்கிடக்குது.

 

இதில் மகிந்தவயோ அன்றேல் யாழ் இந்து போன்றவற்ரையோ குறைகூறிப்பிரயோசனம் இல்லை.

 

எங்கு முதற்கரும்புலி தன்னை சிதறடிச்சு சிங்கள ஆக்கிரமிப்பின் கனவுகளை சிதறடிச்சாணோ, அங்குகூடச் சென்று தனது கால்தடத்தைப் பதித்துத் தமிழர்க்கு சிலவிடையங்களைச் சொல்லாமல் சொல்லியிருக்குச் சிங்களம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீண்டும் வரிகளை விட சீண்டும் படங்களும் செய்திகளும் முதலில் நீக்கப் படவேண்டும்.....யாழ்கள தணிக்கையாளரே...ஏனெனில் நாமும் பாதிக்கப் பட்டவர்கள்தான்...அதிகார மிடுக்குடன்  எதேச்சிகார ..சனாதிபதி செய்யும் செய்திகளில் மற்றவவர் மனதை புண்படுத்தும் செய்திகளை குத்தும் தலைப்புடன் போடும் செய்திகளை முதலில் தணிக்கை பண்ணுங்கள்.....இனத்தின் இழப்பில் இன்பம் காணுபவ்ர்களை இனம் காணுங்கள்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இந்திய அமைதிப் படைக்கு நினைவு தூபியும்,இந்தியாவின் துணைதூதகரமும் இருக்கலாம் என்றால் யாழ் இந்துவிற்கு ஜனாதிபதி வருவது பெரியவிடயம் இல்லை....

உண்மையிலேயே அவர் வந்து போனது விடயமல்ல. இல்லை. அதில். தவறு கூட கிடையாது. பத்தோடு பதினொன்றாம் அதை பெருப்பித்து ஆர்ப்பாட்டமாக செய்தி வெளியிட்ட சின்னத்தனமான செயல் இலங்கை இந்திய அரசியல் கீழ்தர சிந்தனையின் வடிவமே. தான். விசுவாசம் வைத்திருப்பவரின்களின் செய்திகளை பகட்டாக காட்டும் சிறிய அறிவு அங்கு சாதாரணமானது.அகவே அந்த அறிவிலிகளின் செல்களை விடுத்து எமது கருமங்களைபார்ப்போம் யாழ்களத்தில் நண்பர்களே.

Edited by tulpen

இதில் அவமானப்படுவதற்கு எதுவும் இல்லை. மாறாக தாயகத் தமிழர்கள் எத்தகைய அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பதையெ இந்த விஜயமும் படங்களும் உணர்த்துகின்றன. மாறாக சுதந்திரமான ஜனநாயகம் மலர்ந்த இந்த நிலையில் மகிந்த வருகிறார் விரும்பியவர்கள் சென்று வரவேற்கலாம் என்ற நிலையிருந்து இத்தனை பேர் கூடி வரவேற்பளித்தால் ஒரு இனப்படுகொலையாளிக்கு யாழ் மைந்தர்கள் வரவேள்பளிக்கிறார்களே என்று எரிச்சல் படலாம். ஆனால் இது சிறைக்குள் வாழும் தமிழர்கள் சிறைக்காவலாளிக்கு வழங்கும் மரியாதை போன்றது தான். இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசிப்போம்...

 இது சிறைக்குள் வாழும் தமிழர்கள் சிறைக்காவலாளிக்கு வழங்கும் மரியாதை போன்றது தான். இந்த நிலையை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசிப்போம்...

 

ரொம்ப சரியான பதில் ...

  • தொடங்கியவர்

எமக்கு பிடிக்குதோ இல்லையோ நாட்டின் ஜனாதிபதி ராஜபக்சாதான் .இலங்கை  அரசுதான்  அனைத்து அரச ஊழியர்களுக்கும்  சம்பளமும் கொடுக்குது.நாட்டில் இருப்பவர்கள் அதை எல்லாம் அனுசரித்துத்தான் போகவேண்டும் .யாதார்த்தம் அதுதான் .இலங்கை ஜனாதிபதி தேர்தல் மூலம் தான் பதவிக்கு வந்தவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் .

 

 

 

Edited by arjun
சீண்டல் வரிகள் நீக்கப்பட்டன

  • கருத்துக்கள உறவுகள்

1798500_732120490174444_9544248966664409

 

இதில வெள்ளை தாடியோட இருக்கிறது இந்திய பிரதமர் மோடி தானே? நான் கேட்கவில்லை. என்னோட வேலை செய்யிற வெள்ளை கேட்குது  :D

எமக்கு பிடிக்குதோ இல்லையோ நாட்டின் ஜனாதிபதி ராஜபக்சாதான் .இலங்கை  அரசுதான்  அனைத்து அரச ஊழியர்களுக்கும்  சம்பளமும் கொடுக்குது.நாட்டில் இருப்பவர்கள் அதை எல்லாம் அனுசரித்துத்தான் போகவேண்டும் .யாதார்த்தம் அதுதான் .இலங்கை ஜனாதிபதி தேர்தல் மூலம் தான் பதவிக்கு வந்தவர் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும் .

 

ஸ்ரீ லங்கா போன்ற சர்வாதிகரமான / இனவாத நாடுகளில் இது தான் நிலமை.

 

வெளிநாடுகளில் சம்பளம் கொடுபவருக்கு அனுசரித்து போக வேண்டிய அவசியம் இல்லை. அது போல் தேர்தல் மூலம் பதவிக்கு வந்தாலும் அனுசரித்து போக வேண்டிய அவசியம் இல்லை.

 

தமிழ் மக்கள் அங்கு அனுசரித்து தமக்கு வேண்டியதை பெற்று கொள்ளலாம் . இதை நாம் தடுக்க தேவை இல்லை. இது போல் இந்கிருபவர்கள் தேவை இல்லாமல் ஜனாதிபதிக்கு கொடி பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவுக்கு வாறாரோ, தெருக்கள் போடுகிறாரோ, மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பை திட்டமிட்டு ஓரம் கட்டுகிறாரோ என்பதல்ல முக்கியம். ஒரு தேர்த்தல் வரும் போது மக்கள் இவரை ஒரம் கட்டுகிறார்கள் பாருங்கள். அங்கை தான் மக்கள் நிற்கிறார்கள்.

  • தொடங்கியவர்

அரசியல் என்பது மிக விபரமான ஒரு விடயம் .அதை எல்லோராலும் விளங்கிகொள்ளவும் முடியாது .

 

இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சி ராஜபக்சா நல்லவர் என்று எவரும் எழுதியதில்லை .ராஜபக்சாவிற்கு கொடியும் பிடிக்கவில்லை,

அதற்காக நாட்டில்  நடப்பவை உண்மையில்லை என்று ஆகிவிடாது .கனவில் இருப்பவர்களை அடிக்கடி எழுப்பவேண்டிக்கிடக்கு .முப்பது வருடங்கள் கனவில் இருந்தவர்களை எழுப்புவது ரொம்ப கஷ்டம் இருந்தாலும் முயற்சி திருவினையாக்கும் என்பதை நம்புகின்றேன் .

 

 

பாஜக தமிழ் நாட்டு தேர்தலில் அடைந்த வெற்றி பற்றி சொல்லிதெரியத்தேவையில்லை அதற்காக அவர் இந்திய பிரதமர் இல்லை என்று ஆகிவிடமுடியாது .Clean India என்ற கோசத்தை மோடி வைத்த போது கமல் அதில் ஒருவராக அதை ஏற்றுக்கொண்டார் .அதை விளங்கிகொள்ளவேண்டும் .

 

 

அரசியல் என்பது மிக விபரமான ஒரு விடயம் .அதை எல்லோராலும் விளங்கிகொள்ளவும் முடியாது .

 

இலங்கையில் நடப்பது ஜனநாயக ஆட்சி ராஜபக்சா நல்லவர் என்று எவரும் எழுதியதில்லை .ராஜபக்சாவிற்கு கொடியும் பிடிக்கவில்லை,

அதற்காக நாட்டில்  நடப்பவை உண்மையில்லை என்று ஆகிவிடாது .கனவில் இருப்பவர்களை அடிக்கடி எழுப்பவேண்டிக்கிடக்கு .முப்பது வருடங்கள் கனவில் இருந்தவர்களை எழுப்புவது ரொம்ப கஷ்டம் இருந்தாலும் முயற்சி திருவினையாக்கும் என்பதை நம்புகின்றேன் .

 

 

பாஜக தமிழ் நாட்டு தேர்தலில் அடைந்த வெற்றி பற்றி சொல்லிதெரியத்தேவையில்லை அதற்காக அவர் இந்திய பிரதமர் இல்லை என்று ஆகிவிடமுடியாது .Clean India என்ற கோசத்தை மோடி வைத்த போது கமல் அதில் ஒருவராக அதை ஏற்றுக்கொண்டார் .அதை விளங்கிகொள்ளவேண்டும் .

 

 

அவர்கள் காயபடாமல்  எழுப்புங்கள் ..... நீங்கள் அவர்களை சீண்டுவதாக நினைகிறார்கள் or அப்படி தோன்றுகிறது

 

அங்கு இருப்பது நிஜம் இங்கு இருப்பது கனவு என்று நினைத்தால் பாலமாக இருங்கள் ...இன்றைய நிலைமையில் எல்லோருக்கும் எல்லாரும் தேவை.......onwards & upwards.....

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்து இதையும் தாண்டிப் போகும்.

 

காலத்திற்கு ஏற்ப இசைவாகி.. இலட்சியத்தில் உறுதியாக இருக்கத் தெரிந்தவள்.. யாழ் இந்து அன்னை..! மகிந்த மாதிரி ஆக்களை நிறையக் கண்டுவிட்டாள். இதுகளுக்கு எல்லாம் மயங்கிற ஆள் கிடையாது. அதேவேளை கல்விக்காக கிடைப்பதை விடுவதும் இல்லை. கிடைப்பதை பெற்று தான் நிமிர்ந்து நிற்கும் சமூகத்தின் வளர்ச்சிக்கு அதனை முதலிடுபவளே யாழ் இந்து அன்னை..!! :icon_idea::)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.