Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் தெரிந்தவர்களும் யூதர்களுக்கு நிகரான புத்திசாலிகள் என்றும் தம்மைத் தாமே பீத்திக்கொள்பவர்கள் எதற்கு வன்னி மக்களை காவுகொடுத்தனர்? அதுவும் ராசதந்திரமோ?

சிங்களப்பேரினவாதத்திற்க ஆதரவாக இருந்து போருக்கு பின்புலமாக பெரும் உதவிகளை செய்தார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தடுக்கும் படியான அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் போர்குற்றம் என்றார்கள். இவ்வாறுதான் இந்த தடைகளும் நீக்கல்களும். இலங்கை அரசுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள பேரங்கள் அழுத்தங்கள் சார்ந்து பயன்படுத்தப்படும் துருப்புக்களாகவே இவை இருக்கின்றது.  :) 

  • Replies 200
  • Views 13.5k
  • Created
  • Last Reply

சிங்களப்பேரினவாதத்திற்க ஆதரவாக இருந்து போருக்கு பின்புலமாக பெரும் உதவிகளை செய்தார்கள். பல்லாயிரம் மக்கள் பலியாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். தடுக்கும் படியான அத்தனை போராட்டங்களையும் அலட்சியப்படுத்தினார்கள். பின்னர் போர்குற்றம் என்றார்கள். இவ்வாறுதான் இந்த தடைகளும் நீக்கல்களும். இலங்கை அரசுக்கும் ஐரோப்பாவுக்கும் உள்ள பேரங்கள் அழுத்தங்கள் சார்ந்து பயன்படுத்தப்படும் துருப்புக்களாகவே இவை இருக்கின்றது.  :) 

கு.சா அண்ணா இப்படி அவநம்பிக்கையோடு இருக்காதீங்க...இங்குள்ள ரஞ்சிதாக்களின் துள்ளலை பார்த்தால்...இன்னும் மூன்று மாதத்தில் EU Peace Keeping forces இலங்கையில் இறங்கினாலும் இறங்கலாம்....பொசிட்டிவா பாருங்கோ...

இந்த தடை நீக்கத்தால் ஐரோப்பாவில் சிறையில் வாடும் தமிழர்களுக்கு நன்மை பிறந்தால் மகிழ்ச்சி. மற்றும்படி இது ஒரு காலம் கடந்த தீர்ப்பு. மறுபடியும் சிங்களம் திகைத்தது இந்தியா பதை பதைத்தது என்று தேசிய குத்தகைதாரர் புல்லரிக்க மட்டும் தான் இது உதவும். இந்த தடையை வைத்து செய்ய வேண்டிய அனைத்து அழிவுகளும் செய்து முடித்தாயிற்று. தடை நீங்கியதால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உயிர்கள் மீண்டும் வரப்போவதும் இல்லை.
 
கவுண்டமணி சொன்னமாதிரி இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?

"கவுண்டமணி சொன்னமாதிரி இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன? வராட்டி என்ன?" :lol:

Edited by naanthaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீரிலே இருக்கும் மீன் கருவாடகலாம் ஆனால் கருவாடு மீன் ஆக முடியாது. எங்களுக்கு புலிவாந்தி லட்சியம் தான் முக்கியம். தடைபோட்டால் நாங்கள் அப்படி வருவோம் தடை எடுத்தால் இப்படி வருவோம்.

இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க..

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  மகிழ்ச்சியான செய்தி...! ஆனால் நம்ம யாழ் கள மாற்றுகருத்தாளர்கள் நித்திரையற்று உள்ளது போல் இருக்கு கருத்துக்கள் பதியபட்ட நேரங்களை கவனியிங்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்
இதில் இரண்டு விடயங்களை பார்க்கலாம் ...........
 
ஒன்று பயங்கரவாத அமைப்பாக இல்லாத ஒரு அமைப்பை பொய்யாக தடை செய்திருக்கிறார்கள். சட்டங்கள் ஊடாக சென்றபோது தடைக்கான ஆதாரம் இல்லாமல் இருந்து இருக்கிறது.
 
மற்றது சந்தடி சாக்கில் ........... புலிகளுக்கு ஆதரவான குரல்வளைகளை சிங்களவனை விட கொடூரமாக இப்படியான தடைகளை காட்டி நெரித்து வந்தது (இங்கு யாழ் களம் உட்பட) ஒரு ------ அதுக்கு ஒரு செருப்படியாக இது இருக்கிறது.
புலிக்கொடியை தமிழ் மக்களிடம் இருந்து புடுங்கி எடுக்க திரிந்தவர்களுக்கு இது ஒரு கசப்பான மருந்து. மெல்ல முண்டி விழுங்குவதை தவிர வேறு வழியில்லை.
 
எதார்த்த போதை ஏறி அப்பப்ப எதார்த்தம் எதார்த்தம் என்று வெறியில் திரிபவர்கள் .......... ஒன்றை புரிந்து கொள்ளமுடியும் தெளி நிலை இருப்பின்.  தமிழருக்கு உலகில் முகவரி தேடி கொடுத்தவர்கள் புலிகள்தான் (அவர்களுடன் தனிபட்ட விரோதம். அவர்கள் கொள்கை பிடிக்காமை என்று எது இருப்பினும்) என்பது கல்லில் எழுதிய உண்மை. புலிக்கொடியை கண்டால் தமிழ்கொடி என்றுதான் உலகின் பிரபல ஊடகங்களே எழுதுகின்றன. தமிழர்களையும் புலிகளையும் இன்னும் ஒரு 200 வருடங்களுக்கு பிரிக்க முடியாது. தலை கீழாக  நடக்கலாம் ............... தத்துவாந்தம் பேசலாம் ............. தண்ணிய போட்டுட்டு ரோட்டில் கூட நின்று கத்தலாம். உண்மையான உண்மை என்பது அதுதான்.
 
மற்றயபடி இந்த தடை நீக்கம் அது இதெல்லாம் அவர்களுக்கு எது லாபமோ அதன்படி செய்தார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நேற்று சிரிய நாட்டு குர்திஸ் போராளிகளுடன் அமெரிக்க உத்திய பூர்வமாக பேசி இருக்கிறது. அந்த போராளி அரசியல் கட்சி கடந்த 18 வருடமாக அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் இருந்து வருகிறது. மேலதிக பேச்சுக்கள் அவர்களுக்கான நேரடி உதவிகள் செய்வதென்றால் அமெரிக்க சட்டபடி  அந்த பட்டியலில் இருந்து அவர்களை நீக்க வேண்டும்.
இதற்கிடையில் நேற்று ரசிய அதிபர் புட்டின் இத்தாலியில் வைத்து உக்க்ரையின் தலைவரை சந்தித்து இருக்கிறார். 

Edited by நிழலி
நாதாரிக் கூட்டம் போன்ற சொற்களை பாவிப்பதை தவிர்க்கவும்

இதில் இரண்டு விடயங்களை பார்க்கலாம் ...........
 
ஒன்று பயங்கரவாத அமைப்பாக இல்லாத ஒரு அமைப்பை பொய்யாக தடை செய்திருக்கிறார்கள். சட்டங்கள் ஊடாக சென்றபோது தடைக்கான ஆதாரம் இல்லாமல் இருந்து இருக்கிறது.
 
மற்றது சந்தடி சாக்கில் ........... புலிகளுக்கு ஆதரவான குரல்வளைகளை சிங்களவனை விட கொடூரமாக இப்படியான தடைகளை காட்டி நெரித்து வந்தது (இங்கு யாழ் களம் உட்பட) ஒரு -----  அதுக்கு ஒரு செருப்படியாக இது இருக்கிறது.
புலிக்கொடியை தமிழ் மக்களிடம் இருந்து புடுங்கி எடுக்க திரிந்தவர்களுக்கு இது ஒரு கசப்பான மருந்து. மெல்ல முண்டி விழுங்குவதை தவிர வேறு வழியில்லை.
 
எதார்த்த போதை ஏறி அப்பப்ப எதார்த்தம் எதார்த்தம் என்று வெறியில் திரிபவர்கள் .......... ஒன்றை புரிந்து கொள்ளமுடியும் தெளி நிலை இருப்பின்.  தமிழருக்கு உலகில் முகவரி தேடி கொடுத்தவர்கள் புலிகள்தான் (அவர்களுடன் தனிபட்ட விரோதம். அவர்கள் கொள்கை பிடிக்காமை என்று எது இருப்பினும்) என்பது கல்லில் எழுதிய உண்மை. புலிக்கொடியை கண்டால் தமிழ்கொடி என்றுதான் உலகின் பிரபல ஊடகங்களே எழுதுகின்றன. தமிழர்களையும் புலிகளையும் இன்னும் ஒரு 200 வருடங்களுக்கு பிரிக்க முடியாது. தலை கீழாக  நடக்கலாம் ............... தத்துவாந்தம் பேசலாம் ............. தண்ணிய போட்டுட்டு ரோட்டில் கூட நின்று கத்தலாம். உண்மையான உண்மை என்பது அதுதான்.
 
மற்றயபடி இந்த தடை நீக்கம் அது இதெல்லாம் அவர்களுக்கு எது லாபமோ அதன்படி செய்தார்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நேற்று சிரிய நாட்டு குர்திஸ் போராளிகளுடன் அமெரிக்க உத்திய பூர்வமாக பேசி இருக்கிறது. அந்த போராளி அரசியல் கட்சி கடந்த 18 வருடமாக அமெரிக்கா பயங்கரவாத பட்டியலில் இருந்து வருகிறது. மேலதிக பேச்சுக்கள் அவர்களுக்கான நேரடி உதவிகள் செய்வதென்றால் அமெரிக்க சட்டபடி  அந்த பட்டியலில் இருந்து அவர்களை நீக்க வேண்டும்.
இதற்கிடையில் நேற்று ரசிய அதிபர் புட்டின் இத்தாலியில் வைத்து உக்க்ரையின் தலைவரை சந்தித்து இருக்கிறார். 

இதற்காக தான் புலிகள் இருந்திருக்க வேண்டும்...ஆனால் இலங்கை பிரச்சனை இனி அந்த நிலைமைக்கு போகுமா?

குர்டிஸ் போராளிகளுடன் இப்போது ஏன் கதைகிறார்கள்? அவைகளிலும் பார்க்க ஒரு கொடிய IS உதயமானதால் தானே......

புலிகளின் தடைகளை நீக்கிய படியால்..தங்களின் தடையையும் நீக்க சொல்லி மற்ற தடைப்பட்ட குழுக்கள் தொடங்கும் போது என்ன நடக்கும் என்றும் பார்க்கலாம்...

புலிகள் எப்போதுமே..ஒரு அடக்கு முறை குழு தான்....யார் குத்தி முறிந்தாலும்..

Edited by நிழலி
மட்டுறுத்தப்பட்ட கருத்தின் மேற்கொள் திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் பிறப்பித்த ஆணை செல்லாது என லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். உரிமையும், அதிகாரமும் கோரி ஈழத்தமிழர் நடத்திவரும் அறவழிப் போராட்டத்திற்கு உலகின் ஆதரவை திரட்ட இது உதவும்.
 
ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அந்த அமைப்பின் சார்பில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் 2011 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது சரியல்ல எனக் கூறியுள்ளது.
 
தற்போதைய நிலையில் விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பொருத்தமற்றவை என்றும், அவற்றை அடுத்த 3 மாதங்களுக்குள் நீக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்கு நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் நடத்தியது உரிமைப் போராட்டமே தவிர பயங்கர வாதம் அல்ல என்று உலகின் பல்வேறு நீதிமன்றங்கள் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
 
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதித்திருந்தன. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய ஒன்றியத்தில் அடங்கியுள்ள 27 நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படும்.
 
தொடர்ந்து கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் தடை உடைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஈழத்தமிழர்களுக்கு தாயகத்தை அமைப்பதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல இந்தத் தீர்ப்பு பெரிதும் உதவியாக இருக்கும்.
 
விடுதலைப்புலிகள் மீது முதன்முதலில் தடை விதித்தது இந்தியா தான். அதைப் பின்பற்றியே மற்ற நாடுகளும் தடை நடவடிக்கைகளை மேற்கொண்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் கூறியுள்ள காரணங்கள் அனைத்தும் இந்தியாவுக்கும் பொருந்தும். எனவே, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது கடந்த 24 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
 
நன்றி நக்கீரன்.கொம்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக தான் புலிகள் இருந்திருக்க வேண்டும்...ஆனால் இலங்கை பிரச்சனை இனி அந்த நிலைமைக்கு போகுமா?

குர்டிஸ் போராளிகளுடன் இப்போது ஏன் கதைகிறார்கள்? அவைகளிலும் பார்க்க ஒரு கொடிய IS உதயமானதால் தானே......

புலிகளின் தடைகளை நீக்கிய படியால்..தங்களின் தடையையும் நீக்க சொல்லி மற்ற தடைப்பட்ட குழுக்கள் தொடங்கும் போது என்ன நடக்கும் என்றும் பார்க்கலாம்...

புலிகள் எப்போதுமே..ஒரு அடக்கு முறை குழு தான்....யார் குத்தி முறிந்தாலும்..

நாய்வாலை யார் குத்தி முறிந்தாலும் நிமிர்த்த முடியாது........... !!!
நான் ஒரு நிமிடம் கூட அதை நிமிர்த்த முயற்சி செய்ததில்லை.
 
அது பிறவியிலேயே நெளிந்துவிட்டது. 
  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பிடிக்கக் கூடாது என்று சொன்ன மேதாவிகள் இப்ப என்ன சொல்லுகினம்.இதன் மூலம் புலிக்கொடி பிடித்த தமிழர் எல்லாம் பயங்கரவாதிகள் என்னும் முடிவு முறியறிடிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா பிணையில் "விடுதலை" புலிகளுக்கு தடை நீக்கம்

புலிக்கொடி பிடிக்கக் கூடாது என்று சொன்ன மேதாவிகள் இப்ப என்ன சொல்லுகினம்.இதன் மூலம் புலிக்கொடி பிடித்த தமிழர் எல்லாம் பயங்கரவாதிகள் என்னும் முடிவு முறியறிடிக்கப்பட்டுள்ளது.

புலிக்கொடி பிடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை துவக்கு போட்ட புலிக்கொடியை பிடிக்கவேண்டாம் என்றுதான் சொன்னோம் ......மேதாவி புத்தன்...:D

  • கருத்துக்கள உறவுகள்
 
இந்திய அரசு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும்: திருமாவளவன்
 
விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
’’ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கி, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளனர். 2006 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளின் மீது விதித்திருந்த தடையைத் தற்போது விலக்கிக் கொண்டிருக்கிற ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம், இந்திய அரசின் நடவடிக்கைகளையும் விமர்சித்துள்ளது.
 
இந்திய அரசு, இலங்கை பிரச்சினையில், ஒரு சார்பான அணுகுமுறைகளைக் கொண்டிருக்கிறது என்றும், எனவே, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அரசு முன்வைக்கும் கருத்துகளில் நம்பிக்கை இல்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான அவதூறுகளைப் பரப்பி சர்வதேச நாடுகளை நம்ப வைத்துள்ளது. அதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் விடுதலைப்புலிகள் மீது தடைவிதித்திருந்தது. தற்போது, சட்டபூர்வமாக விசாரணை நடத்தியதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிபதிகள் அக்கருத்தை மாற்றிக்கொண்டு, புலிகள் மீதான தடையை விலக்கிக் கொண்டுள்ளனர்.
 
இந்திய அரசம் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றும் புலிகளின் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டு மென்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கம் வெகுமக்களின் பேராதரவு பெற்ற ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம் எனவும் இந்திய அரசு அங்கீகரிக்க ஏற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது’’என்று கூறியுள்ளார்.
 
நன்றி நக்கீரன்.கொம்

இதனை வைத்து தமிழ் மக்களுக்கு சாதகமாக பயன்படுத்த கூடிய  மனப்பாங்கில் இப்போது  உள்ளவர்கள் இருக்கிறார்ளோ எனக்கு தெரியாது. எதிர்கால சந்த்திகாக தம்மை கொடுத்த கொடையாளிகளேயே மறந்து சுயநலத்துடன் செயற்படுவர்களும், யாரோ ஒரு சிலரை சீண்டி கோபமூட்டவேண்டும் என்பதற்காக அந்த உன்னதமானவர்களை கூட கொச்சைபடுத்தி சிங்கள அரசை கூட வக்காலத்து வாங்கி  இங்கு  எழுதிவருபவர்களும்  அதிகம் இருக்கும் நிலையில் இது சாத்தியமோ என்பது எனக்கு  தெரியாது.

அதை விடுவோம் ஆனால்  சட்டத்துறை பயில்வதை தனது சவாலாக ஏற்று சட்டக்கல்வி பயின்ற லதனின் இந்த சமூக நோக்கிலான  முயற்சிக்கு கிடைத்த வெற்றியை நிச்சயம் பாராட்டவேண்டும். சிறு வயதில் இருந்தே அவரை அறிவேன்.ரீன் ஏஜ பருவத்திலேயே Sozialkompetenz  அதிகம் உள்ள  இவரை போன்ற இளம் தமிழ் மகனின் தொழில்சார் திறமைக்கு கிடைத்த ஊக்கமாக இதனை பார்க்கிறேன். லதன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்தான். ஆனால் இத்தடைமீதான நீதிமன்றத் தீர்ப்பு புலிகள் இருந்த காலத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

எனக்கென்னவோ இனிமேல் புலிகள் மீள வரப்போவதில்லை என்கிற தொனியில்த்தான் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்களோ என்னவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புலிகளைத் தடைசெய்தபோது இந்த நாடுகளும் அமைப்புக்களும் நடந்துகொண்ட விதம் எல்லோரும் அறிந்ததுதான். உண்மையாகவே இன்றுவரை இலங்கையில் நடந்துவருவது தமிழின அழிப்புத்தான் என்பதில் இந்த நாடுகளுக்குச் சந்தேகம் இருந்திருக்கும் என்று நான் துளியளவும் நம்பவில்லை. இன்ரர் நெட்டைப் பார்த்தும், விக்கிப்பீடியாவை வாசித்தும், இந்தியாவைப் பின்பற்றியும்தான் இந்த முடிவை எடுத்தார்கள் என்று சொல்வது சிறுபிள்ளைத்தனமானது. எல்லாம் தெரிந்துகொண்டே இந்தத் தடை கொண்டுவரப்பட்டது. புலிகளை எப்பாடு பட்டாவது அழிக்கவேண்டும் என்று விரும்பினார்கள், அதற்கான தலத்தை இந்தத் தடைமூலம் ஏற்படுத்தினார்கள். மீதியை இந்தியாவும் இலங்கையும் பார்த்துக்கொண்டன. ஆகவே எல்லோரும் சேர்ந்து புலி அழிப்பைச் செய்தும் முடித்தார்கள். தம்மை அழிக்க மாட்டார்கள் என்று புலிகள் நம்பியிருக்க கண்களை மூடிக்கொண்டே அடித்து முடித்தார்கள். "நீங்கள் அடித்துமுடியுங்கள், இழப்புக்களை பின்னர் பார்த்துக்கொள்லலாம்" என்று ஜோன் ஹோம்ஸ், மற்றும் அன்றைய பாதுகாப்புச்சபயின் ஜப்பானியப் பிரதிநிதி உற்படப் பலரும் வெளிப்படையாகவே சொல்லியிருந்ததும் நினைவிலிருக்கும்.

தமக்குத் தேவையென்றால் தடை செய்வார்கள், தேவையில்லை என்றால் நீக்குவார்கள்.

நல்லது நடந்தால் சரிதான். 

  • கருத்துக்கள உறவுகள்

தமக்குத் தேவையென்றால் தடை செய்வார்கள், தேவையில்லை என்றால் நீக்குவார்கள்.

நல்லது நடந்தால் சரிதான். 

நாடுகளுக்கு எல்லை வகுத்த எஜமானர்களின் தூரநோக்கு அது...இந்தியாவுக்கு அருகில் சிறிலங்கா,மலேசியாவுக்கு அருகில் சிங்கப்பூர்,சீனாவுக்கு அருகில் ஹொங்ஹொங்....இந்தியாவுக்கு பல மைல்கள் அப்பால் உள்ள அந்தமான் இந்தியாவுடன் இணைத்த எஜமானர்கள் ஏன் 22 மைல் தொலைவில் உள்ள சிறிலங்காவை இந்தியாவுடன் இணைக்கவில்லை ?நீண்ட நாட்கள் எனக்குள் இருக்கும் விடை தெரியா வினா

ரொம்ப  சாதாரண  பதில்..

ஏனெனில் சிங்களவன் குள்ளநரி

அவன் இவர்களது கண்ணுக்குள் விட்டு ஆட்டுகின்றான்...

இதில் கவனிக்கவேண்டிய  முக்கிய  விடயம் என்னவெனில்

இதற்கு முழு ஆலோசனையும் கொடுப்பவர்கள் தமிழர்கள் என்பதே.....

  • கருத்துக்கள உறவுகள்

நான்தான் போன்றவர்கள் புலிக் கொடியைப் பிடிக்க வேண்டாம். அப்படி யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் பிடிக்கின்றவர்களைத் தடுக்கும் வண்ணம் எங்களைக் கட்டாயப்படுத்துகின்ற வேலைகளில் நீங்கள் ஈடுபட வேண்டாம். சில சிங்கள அரசின் அடிவருடிகள், எனிமே ஆயுதப் போராட்டம் இல்லை.. இது புலிகளுக்கான வெற்றி இல்லை என்ற வகையில் எழுதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சில அடிப்படைத் தத்துவார்த்தங்கள் இங்கு உள்ளன.

புலிகள் ஆயுதப் போராட்டரங்களை விடுதலைக்கான முடிவாகச் சொன்னதில்லை. ஒவ்வொரு முறையும் புதிய அரசாங்கங்கள் வரும்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்து தான் இருந்தன், பிரேமதாசா, சந்திரிக்கா, ரணில், மகிந்த என்று ஒவ்வொரு தடவையும் சமாதானக் கதவுகளைத் திறந்தே வைத்திருந்தனர். தவிர ஓயாத அலைகள் 3 இன் பெருவெற்றிக்குப் பின்னர் கூட சமாதானப்பேச்சுவார்த்தைக்குச் சந்திரிக்காவை அழைத்தனர். ஆனால் அக்கினிச்சுவாலை என்று சண்டையை அவளே முன்னேடுத்தாள். ஆனால் சிங்கள அரசு செய்த காலஇழுத்தடிப்புக்களே அடுத்த சண்டைக்கான கதவினைத் திறந்தன. கடைசியாக நடந்த நீண்டடடட கால இழுத்தடிப்பு பெரு அழிவினை தமிழருக்குத் தந்தது. உண்மையில் புலிகள் போரை ஒரு தீர்வுக்கான வழியாகத் தான் பாவித்தனர். அவ்வளளே!! எனவே இனி ஆயுதப் போராட்டம் சரி வராது என்கின்ற சிங்கள அடிவருடிகள் சில விடயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழம் தேவை என்ற எண்ணக்கரு ஆயுதங்களால் வடிவமைக்கப்பட்டதல்ல. அது தொடர்கின்ற சிங்கள அரசின் அடக்குமுறைகள், நில ஆக்கிரமிப்புக்கள், மொழி அழிப்பு போன்ற அக்கிரமங்களால் உருவானது. அவற்றைச் சிங்கள அரசு நிறுத்தாதவரை தமிழீழம் என்ற தேவையை வலியுறுத்திக் கொண்டு தான் இருக்கப் போகின்றன. தமிழீழம் என்பதற்கு, ஆயதம், அகிம்சை என்று ஏதோ ஒரு வழியைத் தேடத் தமிழ்மக்கள் தவிர்க்க வேண்டும் என்றால் உங்கள் எஜமானர்களிடம் தமிழர்களின் பிரச்சனகளைக் கதையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் முடிந்த சமயத்தில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திடம் தடைநீக்கம் குறித்து ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு குறைந்தது ஐந்து வருடங்கள் செல்லும் என பதில் தந்திருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக தான் புலிகள் இருந்திருக்க வேண்டும்...ஆனால் இலங்கை பிரச்சனை இனி அந்த நிலைமைக்கு போகுமா?

யென்ன இலங்கை பிரச்சனை முடிந்து விட்டதா??  சொல்லவே இல்லை.

குர்டிஸ் போராளிகளுடன் இப்போது ஏன் கதைகிறார்கள்? அவைகளிலும் பார்க்க ஒரு கொடிய IS உதயமானதால் தானே......

குர்டிசை வைத்து தான் போட வேண்டிய ஆட்களை போடத்தான். இதில் என்ன பெரிய ரகசியம் உள்ளது.

புலிகளின் தடைகளை நீக்கிய படியால்..தங்களின் தடையையும் நீக்க சொல்லி மற்ற தடைப்பட்ட குழுக்கள் தொடங்கும் போது என்ன நடக்கும் என்றும் பார்க்கலாம்...

5 வருடங்கள் ஆயுதங்கள் தூக்காதவர்கள் இருக்கிறார்களா? அப்படி இல்லை எனின் யாரின் தடையும் நீக்கப்படாது.

புலிகள் எப்போதுமே..ஒரு அடக்கு முறை குழு தான்....யார் குத்தி முறிந்தாலும்..

நீங்களும் உங்களை போன்றவர்களும் எப்படி குத்தி முறிந்தாலும் எதுவும்  நடக்கப்போவதில்லை. உங்கள் உப்பு சப்பற்ற கருத்துக்களையும் யாரும் போருட்டாக எடுப்பதும் இல்லை. புலிகளின் தடை எடுபடாது போன்ற கனவுகள் தகர்க்கப்பட்டுள்ளது. இன்னும் வரும். பார்த்து கொட்டாவி விட்டால் போதுமானது.  :icon_mrgreen: 

இத் தடை நீக்கத்திற்கு பொருள்

-இந்தியப் பிரதமர் உட்பட்ட இலங்கை அரசியல் தலமைகளை கொன்றது

-தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அதை உலகிற்கு அறிமுகமாக்கியது

-மதவாரியாக ஒரு தொகை மக்கள் கூட்டத்தை அகதிகளாக்கியது மற்றும் படுகொலைகள் செய்தது

-ஏனைய இயக்கங்களை அழித்து அதன் உறுப்பினர்களை படுகொலை செய்தது

-கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் சிறுவர்களை படையில் இணைத்தது

-வன்னியின் வறிய மக்களை மனிதக்கேடயங்களாக்கி படுகொலைக்களத்தில் தள்ளியது

என்னும் ஒரு தொகை பட்டடியல்கள் உள்ளது. அவைகள் எல்லாம் பயங்கரவாதம் அல்ல. அவற்றை இவ்வுலகம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று புலித் தேசீயவாதிகள் கற்பனையில் குதிக்கின்றார்கள். ஆனால் இவைகள் எல்லாம் பயங்கரவாதம் என்று பிரகடனம் செய்து புலிகளை வேரோடு அழித்தொழித்தபின்னர் அவர்கள் மீதான தடையை எடுப்பதுக்கு கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் போல் ஆனந்தக் கூத்தாடுகின்றார்கள். புலிக்கொடி தூக்கவும் விசிலடிக்கவும் மாவீர யாவரம் குளு வாதம் கோஷ்டி குஸ்திகளுக்கும் ரவுடித்தனம் செய்து காசு பாரக்கவும் என பழைய நிலை வர இத்தடை வழி வகுக்கும் என்ற கனவு பலமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இன்னும் காணேல்லேயே எண்டு பார்த்தால் இண்டைக்கு பரவலா ஆரம்பிச்சிருக்காங்க TCCதான் வெட்டி விழுத்தினதாம்.. இன்னும் எத்தினை அமைப்புக்கள் வரிசையாக வரப்போறிங்க வேகமா வாங்க... தமிழண்டா... :D

---------

தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக திறமையாக வழக்காடிய தாடைகளை உடைத்தவர்களுக்கு - உலகத்தமிழர்கள் நன்றிகளை தெரிவிப்போம்..

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை லக்சம்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய நீதிமன்றத்தால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. (TCC ) தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் இத் தீர்ப்பு தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை கொடுத்த மாவீரர்களுக்கும் , மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும் . தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக திறமையாக வழக்காடிய மூன்று வழக்கறிஞர்கள் Victor Koppe , Thamara Buruma, மற்றும் A.Marike van Eik ஆகியோர்களுக்கு உலகத்தமிழர்கள் நன்றிகளை தெரிவிப்போம்.

https://www.facebook.com/photo.php?fbid=836514686393155&set=a.104106339633997.2670.100001038951448&type=1&theater

http://www.pathivu.com/news/34632/57//d,article_full.aspx

Edited by சுபேஸ்

எவர் என்ன கூறினாலும் புலிகள்தான் தமிழ்மக்களின் உண்மையான, நேர்மையான, பணத்திற்கோ, பதவிகளுக்கோ சோரம் போகத இலட்சியவாதிகள். போலி அரசியல்களுக்கும், தமிழ்மக்களிற்கு எந்தவித அரசியல் உரிமை கொடுக்காது இதுவரை தமிழ்மக்களையும் உலகையும் ஏமாற்றும் சிங்கள அரசுக்களுக்கும், புலிகளை தங்களின் விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்த நினைத்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கும்,இலட்சியங்களை கைவிட்டு தமிழ்மக்களுக்கு எதிராக செயல்பட்ட ஒட்டுக்குழுக்களுக்கும் புலிகள் சிம்ம சொப்பனமாகவும்,பயங்கர எதிரிகளாகவும் இருந்தார்கள். புலிகளை அழிப்பதற்கே எல்லா சாத்தான்களும் ஒன்றுபட்டு சதிதிட்டங்கள் தீட்டின. இதில் ஒன்றுதான் பூச்சாண்டிகாட்டி புலிகளைதடைசெய்ய வைத்தது. உடனே வெளி நாடுகளில் இதற்கு எதிராக செயல்பட்டு தடையை எடுத்து இருந்தால் இவ்வளவு அழிவு நேர்ந்து இருக்காது. பரவாயில்லை இப்போதவது செயல்பட்டுள்ளார்கள். அடுத்து 3 மாதங்களிலும் இலங்கையின் செயல்பாடுகளை உண்ணிப்பாக கவனிக்கவேண்டும். அதற்கேப்ப தெளிவுபடுத்தல்களை உடன் செய்யவேண்டும் இல்லையேல்..பழைய குருடிதான்.

Edited by வழிகாட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இத் தடை நீக்கத்திற்கு பொருள்

-

-தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் அதை உலகிற்கு அறிமுகமாக்கியது

கனவு பல.

எல்லாம் சரி ஆனால் ஜப்பான் காரனுக்கும் புலிகள் தான் தற்கொலை தாக்குதல் செய்ய காட்டிக்கொடுத்தது என்று நீங்கள் சொல்லக்கூடாது.....அது புலி ஆதரவு

Edited by putthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.