Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு சேவை மூலம் இரண்டு நாட்களில் சுமார் 10 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டியது ரயில்வே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Yal-Devi-train-150.jpg

யாழ்தேவி ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் சுமார் 10 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்.ரயில் நிலைய அதிபர் நா.தபானந்தன் தெரிவித்தார். 24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம் திகதி பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி ரயில் சேவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான ரயில் சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாக நா.தபானந்தன் கூறினார்.

அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதிவிசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன் கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதிவிசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=118815&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இனி எங்கடை சனம் கால் பேசில் காற்று வாங்கவும் காலையிலை வெளிக்கிட்டுப்போய்  இரவு திரும்பிவரவும்செய்யும்...எல்லம் புலம்பெயரெம்மவரால் அரசங்கத்திற்கு செய்யும் உதவி....

  • கருத்துக்கள உறவுகள்
இரண்டு நாட்களில் 9 லட்சம்
8141bb5870c4e3512a0d3212f54e1a6e.jpg

 யாழ்தேவி ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு இரண்டு நாட்களில் 9 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர் நா.தபானந்தன் இன்று தெரிவித்தார்.

24 வருடங்களுக்கு பின்னர் கடந்த 13ம் திகதி பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான யாழ் தேவி புகையிரத சேவையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார்.
 
அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத சேவைகளில், 3 லட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையில், 6 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைத்துள்ளதாக நா.தபானந்தன் கூறினார்.
 
அந்தவகையில், இரு தினங்களும் 9 லட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும், அதிவிசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன் கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதிவிசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுவதாகவும் பிரதான புகையிரத அதிபர் தெரிவித்தார்.
 
இதேவேளை, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் பயணிகளுக்கு 52.60 சதம் பெறுமதியான பயணச் சீட்டுகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=820403552916257413#sthash.rddk12c1.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

செய்த விளம்பரத்துக்கும்.. கொட்டிய செலவுக்கும்.. இது காணாதே..! இது இன்னும் கொஞ்ச நாளில...??! எதுக்கும் வெளிநாட்டவர்கள் மீதான தடையை நீக்கினால் தான்... கொலிடே தமிழர்களை கவரலாம். அவர்களால் தான் ஏதாவது நிமிர்வு வர முடியும். பொல்லைக் கொடுத்து அடியும் வாங்கிறது தமிழனுக்கு கைதேர்ந்த கலை..!! :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று இலங்கை போக்குவரத்து திணைக்களத்திற்கு சோறு போட்டது வடபகுதி போக்குவரத்து சேவைகள் தான்.

அதில் மெயில்ரயிலும்,யாழ்தேவியும் முக்கிய பங்கு வகிக்கும்.

அவர்கள் விட்டதை பிடிக்க இருவருடங்கள் போதும். :)

வரும் கோடைகால விடுமுறைக்கு புலம்பெயர் நாடுகளிலிருந்து யாழ்தேவியை பார்க்க சனம் படையெடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. :icon_idea:

இலங்கைக்கு போக தேவையில்லை என்றிருந்தால்...நாளுக்கு நாள் ஒருக்கால் போனால் என்ன என்றும் எண்ண தோன்றுகிறது...

கதிர்காமம்...செல்வச்சந்நிதி ...கோணேஸ்வரம்..கேதீச்வரம் (இடையில் மடு..கண்டி..சிகிரியா..நுவரேலியா என்று முன் போகாத இடங்களிலும் ஒரு ஸ்டாப்)..என்று சாட்டிக்கொண்டு போகலாமா என்றும் ஒரு ஆவல்

  • கருத்துக்கள உறவுகள்

:D  :D

:D  :D

கொழும்பன் நீங்கள் இணைத்த காணொலி ஏற்கனவே பார்த்ததுதான். உங்களை போலவே எனக்கும் இந்த கனவு உண்டு. இதை பார்க்கும் போது உண்மையில் மிகவும் சந்தோசமாக உள்ளது. ஆனால் தமிழருரும் சிங்களவரும் ஒருவர் மற்றவரின் உரிமைகளை அங்கீகரிக்காமல் இதற்கான சாத்தியமே இல்லை. அதுவரை இது ஒரு ஜதாரத்தத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கனவு காணொலியே. இதற்கும் யாழ்தேவிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதே யாழ்தேவி சீராக ஓடிய போதே 1958,  1977ல் அநுராதபுர புகையிரத நிலைய படுகொலையும் நடைபெற்றது. அப்போது ஆயுத போராட்டமே தொடங்கிருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

. இதே யாழ்தேவி சீராக ஓடிய போதே 1958,  1977ல் அநுராதபுர புகையிரத நிலைய படுகொலையும் நடைபெற்றது. அப்போது ஆயுத போராட்டமே தொடங்கிருக்கவில்லை.

tulpen .......நீங்கள் அதை எல்லாம் மறந்துவிடவேண்டும்.....கடந்த 30 வருட போராட்டத்தில் புலிகள் விட்டபிழையால் சிங்களவர்கள் ஆத்திரமடைந்து எம்மை தாக்கினார்கள் அதில் நியாயம் இருக்கு என்று சொல்லவேண்டும்.....30 வருடத்திற்கு முதல் நடந்த இனப்படுகொலைகளை மறப்போம் மன்னிப்போம்...:D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு சேவை மூலம் இரண்டு நாட்களில் சுமார் 10 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டியது ரயில்வே!

தமிழனா

கொக்கா......

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு சேவை மூலம் இரண்டு நாட்களில் சுமார் 10 இலட்சம் ரூபா வருமானம் ஈட்டியது ரயில்வே!

தமிழனா

கொக்கா......

அடுத்த வருட நல்லூர் திருவிழா காலத்தில் மட்டும் ரயில்வே திணைக்களம் ஒரு கோடி வருமானத்தை ஈட்டும்

tulpen .......நீங்கள் அதை எல்லாம் மறந்துவிடவேண்டும்.....கடந்த 30 வருட போராட்டத்தில் புலிகள் விட்டபிழையால் சிங்களவர்கள் ஆத்திரமடைந்து எம்மை தாக்கினார்கள் அதில் நியாயம் இருக்கு என்று சொல்லவேண்டும்.....30 வருடத்திற்கு முதல் நடந்த இனப்படுகொலைகளை மறப்போம் மன்னிப்போம்... :D

நீங்கள் கூறியது மிகவும் சரி புத்தன். தமிழர்களுக்கு எவரானும்  மேற்கொள்ளபடும் குற்றங்கள் படுகொலைகள் அனைத்தும் ஹாட்டிஸ்கில் இருந்து அழிக்கபட்டு குப்பை கூடைக்குள் போடபட்ட பைல்க்ள் போன்றவை.  30 நாட்களுக்குள் தானாக அழிந்து விடும். அது பற்றி பேசினாலேயே சில தமிழர்களுக்கு கூட சமாதானத்தை குலைப்பதாக கோபம் வருகிறது. ஆனால் தமிழ் தரப்பால் செய்யபட்ட சிறிய சிறிய  குற்றங்கள் கூட  ஹார்ட் டிஸ்கில் Backup எடுக்க்ப்பட்டு நிரந்தரமாக பேணப்படவேண்டும் என்றே சிலர் எழுதுகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில பலர் 90 களின் பின்னர் பிறந்தவர்களாக இருக்கும் அவர்களுக்கு ரயில் பயணம் கன்னி பயணமாக இருக்கும் போக போக பழகிடும் 

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்தபட்சம் என்னமும் 5 வருடங்கள் அந்தப் பக்கம் போகவே வாய்ப்பில்லை என்பதால் இதில் ஏறப் போக இப்போதைக்கு வாய்ப்பில்லை. ஆனால் ஏற்கனவே சொன்னபோது போல சிங்கள அரசு காட்டுகின்ற வடக்கின் அபிவிருத்தி என்பது அரசாங்கத்துக்கு ஏற்படுத்துகின்ற வருவாயே அன்றி, அடிப்படை வசதிகள் இன்றிப் பரிதவிக்கும் தமிழ்மக்களுக்காக இல்லை என்பதே யாதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாந்தான் கட்டாயம் ஊருக்குப் போய்ப்வாருங்கள். புலத்து மக்கள் குறிப்பாக யாழ்களத்தில் எழுதும் விசைபலகை வீரர்கள் மக்களிடம் இருந்து எவ்வகை அந்நியப்பட்டுளர் என்பதை காணலாம்.

பல நல்ல விடயங்களை, சீரான பாதைகள், இயல்பு வாழ்க்கை, மக்களின் முகத்தில் சந்தோசம் ( அல்லது துக்கமின்மை), திருவிழாக்கள், இப்படி காணலாம். மோசமான விடயங்களாக குடியேற்றங்கள், முகாம்கள், விகாரைகள் முளைப்பது இவற்றையும் காணலாம்.

மொக்குத்தனமாய் சனம் என்னமோ வேலையிலாமல் ரெயினில் ஏறிப்போறமாரி சிலர் இங்க கதையளக்கினம்.

உண்மை என்னவென்றால் கொழும்பு-யாழ் பிரயாணம் இப்போ பலர் செய்கிறார்கள். இதுவரை பஸ்ஸில் போன ஆன்ம இப்ப வசதியான ரயில் வந்ததும் அதில போகுஹுகள்.

தெற்க்கை நேர்ந்த பஸ் முதலாளி களின் கல்லா பெட்டியை நிறைக்கும் பணம், புகையிரத திணைக்கள கல்லாவை நிறைதால் என்ன?

ஒரு ஊரில் ஆட்கள் குடியேறுவதிலும் .......
மக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்த பாதுகாப்பு படையினர் முகாம்கள் அமைப்பதிலும்.
சண்டை நடந்த பூமியில் உலகில் சாந்தியையும் சமாதானத்தையும் வலியுறுத்திய புத்தபிரானின் கோவில்கள் அமைவதிலும் என்ன மோசமான விடயம் இருக்கிறது???
 
இது தற்கால தமிழ்மக்களின் இயல்பு நிலையை குழப்பிவிட ...........புலம்பெயர் புளுகு கூட்டம் அவிழ்த்துவிட்ட குறளிதனம். இதெற்கெல்லாம் எடுபட்டு போக கூடிய நிலையில் இனியும் மக்கள் இல்லை. நாட்டில் மக்கள் நல்ல தெளிவாகவே இருக்கிறார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களின் இயல்பு நிலையை குழப்பிவிட ...........புலம்பெயர் புளுகு கூட்டம் அவிழ்த்துவிட்ட குறளிதனம். இதெற்கெல்லாம் எடுபட்டு போக கூடிய நிலையில் இனியும் மக்கள் இல்லை. நாட்டில் மக்கள் நல்ல தெளிவாகவே இருக்கிறார்கள். 

மருது சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் கொஞ்சம் பிழைகளை எழுதினால் கோசான் கோவிப்பார்.. பிறகு அவரே லிமிட்டடா சில பிழைகளை எழுதுவார். அதை யாரும் கண்டுக்கப்படாது. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. அதில் பிழைகளும் இருக்கும் சரிகளும் இருக்கும். இரண்டையும் உள்ளபடி சொல்வதே கருத்து நேர்மை. ஒரு கொள்கையின் மீது அல்லது தலைவன் மீது அல்லது அமைப்பு மீது உள்ள விசுவாசத்தால் அவர்கள் காலத்தில் பாலும் தேனும் ஓடியதாயும், இப்போ வட கிழக்கில் தினசரி தமிழ் பெண்கள் ஆயிரக்கணக்கில் வன்புணரபடுவதாயும், மக்கள் எல்லாம் எதோ சிறைக்கைதிகள் போல் வாழ்வதாயும், 2009 ற்க்கு பின் ஊர்ப்பக்கமே தலைவைத்தும் படுக்காமல் கதை புனைபவர்களுக்கு இது புரிய நியாயமில்லை.

உண்மையில் எவருமே அவ்வாறு கூறவில்லை. இவர் அவ்வாறு மற்றவர்களை கூறுவதாக கூறி மற்றவர்களின் மீது பழி போடுகிறார் தானும் ஒரு பு. பு வாக இருந்து கொண்டு மற்றவர்களை பு. பு என்று எள்ளி நகையாடும் இவரே உண்மை தமிழன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

images(1297).jpg

-எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவை மூலம், கடந்த நான்கு நாட்களில் 18 இலட்சத்து 31 ஆயிரத்து 765 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கூறினார்.

ரயில் சேவையின் முதல் நாளான 14ஆம் திகதி 3 இலட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும், 15ஆம் திகதி - 6 இலட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபாவும், 16ஆம் திகதி - 4 இலட்சத்து 8400 ரூபாவும், 17- ஆம் திகதி 4 இலட்சத்து 42 ஆயிரத்து 840 ரூபாவும் வருமானமாக கிடைத்துள்ளன என்று அவர் கூறினார்.

கடுகதி (இன்ரசிற்றி), குளிரூட்டப்பட்ட கடுகதி, யாழ்தேவி, தபால் ரயில் ஆகிய 4 ரயில்கள் மூலம் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவற்றில் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலின் இருக்கைகளுக்கான கேள்வி அதிகமாகவிருப்பதாக அவர் மேலும் கூறினார். 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/130422------4--18--.html

வரும்...வரும்...வருமானம் இன்னும் வரும்... :D

வாற சமருக்கு..... ஒருநாளைக்கு இரண்டு இன்ரசிற்றி எயார் கொண்டிசன் ரயில் ஒண்டுக்கு பின்னாலை ஒண்டு விடவேண்டி வரும் என சிறிலங்கன் கவுண்மேந்துக்கு எச்சரிக்கிறன்...... :lol:

ஏனெண்டால் யாழ்தேவியை  பிள்ளையளுக்கு காட்டோணுமெண்டு கொஞ்சப்பேர் அடம்பிடிக்கினம் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர்பார்த்ததை விட சிறப்பாகவே செய்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது. ஒருநாளைக்கு 4 தரம் என்பது மிகவும் வசதியானதே. அதுவும் இன்று நடக்கிற வீதி விபத்துகள் நிறைந்த தரைவழி பயணத்தோடு ஒப்பிடும் போது.

இன்னும் 4 சேவைகளை அதிகரித்தால் யாரோ சொன்னது போல சனம் கால் பாசில் காத்து வாங்கவும் போட்டுவரும். சீரான தரை வழி பாதை வரும் மட்டும் , குறித்த நேரங்களுக்கு என மட்டுபடுத்த பட்டிருக்கும் புகை வண்டிகளுக்குரிய தேவை இருக்கவே செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.