Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்- 1

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

37200083.jpg

அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன!

மாலை நேரத்தில் அவன் அந்தக் கடற்கரைக் கோவிலுக்கு வருவதும், அந்தக் கடற்கரையின் ஓரத்தில் காலடிகள் பதிய நடப்பதும், சற்று நேரத்தில் அந்தச் சிற்றலைகள் அவனது காலடிகளை நனைத்து அழிப்பதும், அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடந்து வரும் சம்பவங்கள்!

தகிக்கும் தாம்பாளத் தட்டாக, கதிரவனும் தனது அன்றைய பணியைச் செவ்வனே செய்த ஆத்ம திருப்தியுடன், மெல்ல மெல்ல மேல் திசையில் மறையும் காட்சியும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்!

அவனது பெயர், அவனுக்கே மறந்து போய் விட்டு நீண்ட நாட்களாகி விட்டது! இப்போதெல்லாம் அவனுக்கு ஊர்ச்சனம் வைத்த பெயரே, அவனது பெயராக நிலைத்து விட்டது. அந்தப் பெயர் தான் ‘விசரன்' ! கொஞ்சம் வளர்ந்த சனங்கள், கொஞ்சம் மரியாதையாக அவனைக்காணும் போது ‘ தம்பி’ என்று அழைப்பார்கள்! மற்றவர்களும் அவரவர் வயதுக்கேற்ப… விசரன் அண்ணா என்றோ, அல்லது விசரன் மாமா என்றோ அழைப்பது கூட வழக்கமாகி விட்டது!

அவனே பல சந்தர்ப்பங்களில்… தான் உண்மையில் விசரன் தானா என்று தனக்குள்ளேயே கேள்வியை எழுப்பியிருக்கிறான்! ஆனால் இன்னும் அவனால், தான் விசரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

அந்த ‘விசரன்’ என்ற பெயர் இந்தக் கோவிலடியில் தான் முதன் முதலில் தனக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தனக்குள் தானே நினைத்துக்கொண்டான்!

இரண்டு சம்பவங்கள் அவனுக்கு இன்னும் நன்றாக நினைவில் நிற்கின்றன!

ஒரு நாள் அந்தப் பத்திரகாளியம்மனுக்குப் ‘ படையல்' நடந்தது! அப்போது அவனுக்கு ஒரு பன்னிரண்டு வயதிருக்கலாம் என்று அனுமானித்துக் கொண்டான்!

வரிசையாகப் பொங்கல் பானைகள் பொங்கிக் கொண்டிருந்தன! ஒரு ஐந்தாறு பேர் வட்டமாக நின்று.. பறை மேளம் அடித்துக் கொண்டிருந்தார்கள்! சில பெண்கள் 'உரு' வந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்! அவர்களது வாய்களிலிருந்து, ஊரவர்கள் சிலரது பெயர்கள் விழுந்து கொண்டிருந்தன! அந்தப் பெயருள்ளவர்கள், தங்கள் இருதயங்கள் ஓவராகத் துடித்து, வாய்க்குள்ளால் வெளியே வந்து விடாதவாறு வாய்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, பத்திரகாளியில் முழு நம்பிக்கையும் வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தார்கள்! எந்தப் புத்துக்குள்ளால் இருந்த எந்தப் பாம்பு வருமோ என்ற பயம் பலரது முகத்தில் தெரிந்தது! சில 'உரு' வந்தவர்கள் கதைக்கின்ற ‘ மொழி' அவனுக்கு விளங்கவேயில்லை! ஒரு வேளை… அது தான் கடவுளின் மொழியோ என்றும் நினைத்துக்கொண்டான்!

அப்போது அந்த பறைமேளம் அடிப்பவர்களுக்குக் கிட்டப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்! அந்தச் சத்தம் அவனுக்குப் பிடித்திருக்கவே, அங்கு மேளமடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஒரு சின்ன மேளத்தை வாங்கித் தட்டத் தொடங்கினான்! அந்தச் சிறுவன் அவனிடம் அந்த மேளத்தைத் தரத் தயங்கியது அவனுக்கு ஏன் என்று அப்போது புரியவில்லை! அப்போது அவனது அண்ணா அங்கு ஓடி வந்து மேளத்தைப் பறித்து எறிந்தார்! பின்னர் ஆவேசமாக அந்த மேள காரச் சிறுவனைத் தாக்கத் தொடங்கினார்! அவனது ஆச்சியும் அங்கு ஓடிவந்து …. ஐயோ. ஐயோ என்று தலையையும் விரித்துவிட்ட படி மார்பில் இரு கரங்களாலும் அடித்த படி ஏதோ பிரளயம் ஒன்று அங்கு நிகழ்ந்து விட்டதைப் போல...உரத்த குரலில் அழத்தொடங்கினார்! அவனுக்கு… ஆச்சியா அல்லது மூலஸ்தானத்தில் அமர்ந்திருப்பதா… பத்திரகாளி என்று குழப்பம் ஏற்பட்டது!

அவன் ஏதோ சொல்ல முயன்றபோது அவனை ஆச்சி அழைத்த பெயர் … விசரன்!

இரண்டாவது சம்பவம்… சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது!

ஊரெல்லாம் மரவள்ளித் தடி நட்டுக்கொண்டிருந்த காலம்! படித்து விட்டு வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் ‘ முத்தரையன் கட்டில' இலவசமாய்க் காணி குடுக்கிறாங்கள் எண்டு.. முத்தரையன் கட்டை நோக்கி ஓடிய காலம்!

சீனிக்குப் பதிலாய்.. பேரீச்சம் பழம் வந்து.. ஊர் மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நக்கத் துவங்கியதால்.. கை ரேகைகள் மறைந்து விடுமோ என்று ‘சாத்திரம்' சொல்லுபவர்கள் கவலைப்படத் தொடங்கிய காலம்!

அந்தக் காலத்தில் தான்.. நம்ம ஊரிலும்.. பெற்றோல் இருக்கலாம் என்று ‘ரஸ்ஸியாக் காரர்'  ஊரெல்லாம் ‘ அமத்து வெடி' வைச்சுத் திரிஞ்ச காலம்!

தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது! ஊர்ப்பெருசுகள் சும்மா கிடந்த கடற்கரைக் காணிகளுக்கெல்லாம் 'கதியால்' போட்டுக் கிடுகு வேலியடைக்கத் தொடங்கிய காலமும் அது தான்! ஒரு வேளை, தங்கள் வளவுகளுக்குள்ளையும் பெற்றோல் இருந்தால்…. அவர்களுக்கு அந்த நினைவே புல்லரிக்க வைத்திருக்க வேண்டும்!

சிலரது நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தில், அந்தப் புல்லரிப்பே நிரந்தரமாகியும் போய் விட்டது இன்னொரு கதை!

அப்படியான ‘ பெற்றோல்' பரிசோதனை ஒன்றின் போது ‘காளி கோவிலடி' யிலும் சில பரீட்சார்த்தக் கிணறுகள் தோண்டினார்கள்! ‘டெரிக்' ஒன்று கடற்கரையில் துளையிட்டுக் கொண்டிருக்க.. ஒரு ‘ரஸ்சியன்' சாதாரண காற்சட்டையுடனும் வெறும் மேலுடனும், கொதிக்கும் வெயிலில் நின்று ‘திரவ சீமெந்து' போன்ற ஒன்றை அந்தத் துளைக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்! அந்தத் துளையைச் சுற்றித் திரவச் சீமெந்தும்.. ஊர்ச்சனமும் நிறைந்திருந்தனர்!

சிறிது நேரத்தில் அந்தத் திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

அந்த சீமெந்துத் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது! அப்போது எங்கட ஊர் ‘எஞ்சினியர் ஐயா' கோவில் மதில் நிழலில் நின்று கொண்டிருந்தார்! அவருக்கு வெயில் சுட்டு விடாது நம்ம ‘விசரன்' குடை பிடித்துக் கொண்டிருந்தான்!   

அந்த ‘ரஸ்ஸியாக்' காரனும்.. எமது ஊர் எஞ்சினியர் ஐயாவைப் பார்த்துத் திட்டிய படியிருந்தான்! அவன் மீண்டும், மீண்டும் அவரைப்பார்த்துத் திட்டியது, அவருக்குப் புரியாவிட்டாலும்… நம்ம விசரனுக்குப் புரிந்தது!  புரிந்ததும் அவன் உடனே, நம்ம இஞ்சினியர் ஐயாவுக்குப் பிடித்திருந்த குடையைக் கொண்டு போய்.. அந்த ரஸ்ஸியாக காரனுக்குப் பிடிக்கத் தொடங்கினான்!

அப்போது.. அந்த இஞ்சினியர் ஐயா.. அவனை நோக்கி.. உரத்துக் கத்திய குரல்...’ விசரன்"!    

(ஆறுதலாகத் தொடரும்.....)

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

-----

அப்போது அந்த திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

அந்த சீமெந்தும் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது!

-----

ஸ்ரான்லி வீதியில், கிடைக்காத நட்டா?

ஒருக்கா அங்கு விசாரித்து பார்த்து விட்டு, ரஸ்சியன்காரன்.... சீமெந்து கலவையில் காலை வைத்திருக்கலாம்.

அதற்குள்... சீமேந்து இறுகி விடும், என்று சொல்கிறீர்களா...   வாஸ்தவம் தான்..... :D

நீண்ட நாட்களின் பின், புங்கையின் கதையை படிக்க ஆவலாக உள்ளோம். :)

  • கருத்துக்கள உறவுகள்
தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது
புங்கை மீண்டும் ஒரு கலக்கல் கதை வெகு சீக்கிரம் தொடருங்கோ வாசிக்க ஆவலாய் உள்ளோம்....
  • கருத்துக்கள உறவுகள்

விரைவா மிகுதியை போடுங்கப்பா ..

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை

தனி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மன அமைதி போல ஒரு சமுதாயத்துக்கும் மன அமைதி அவசியம்.
 
எங்கட சமுதாயத்துக்கு அது இல்லை. 
 
அது இருந்தால் குறைபாடுள்ளவர்களை அணைத்திருப்பார்கள்.
 
மிகுதியை வாசிக்க ஆவல்.  
  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம ரோமியோ கன காலத்திற்குப்பிறகுகளத்தில குதித்துள்ளீர்கள்....... உங்கள் ஆரம்பமே எங்களை விசராக்க முன்னர் அடுத்த பதிவைப்போடுங்கள்.... ஆவலுடன் வாசிக்கவும் அதன் பின்னர் உங்களை வறுக்கவும் காத்திருக்கிறேன் :lol:  ஏன்னா நானும் விசரிதான்... :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தொடரை எழுதத் தொடங்கிவிட்டு ஆறுதலாகத் தொடரும் என்று போட என்ன துணிவு. :lol: கெதியா மிச்சத்தையும் எழுதுங்கோ புங்கை.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
(ஆறுதலாகத் தொடரும்.....)

றிம்மிலை நிக்கிறதை வைச்சுக்கொண்டு என்னெண்டு கெதியாய் வாறது? :D .....எதுக்கும் உடம்பு குலுங்காமல் ஆடாமல் ஆறுதலாய் வாங்கோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரான்லி வீதியில், கிடைக்காத நட்டா?

ஒருக்கா அங்கு விசாரித்து பார்த்து விட்டு, ரஸ்சியன்காரன்.... சீமெந்து கலவையில் காலை வைத்திருக்கலாம்.

அதற்குள்... சீமேந்து இறுகி விடும், என்று சொல்கிறீர்களா...   வாஸ்தவம் தான்..... :D

நீண்ட நாட்களின் பின், புங்கையின் கதையை படிக்க ஆவலாக உள்ளோம். :)

வணக்கம், தமிழ் சிறி!

ஸ்டான்லி வீதியில் இல்லாத இல்லாத நட்டா?  :D

ஆனால் எனக்கும், உங்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இதை வைத்திருங்கள்!

அவன் தேடியெடுத்த பிறகு, நட்டைப் பார்த்தேன்... அது ஒரு சராசரிப் பனங்கொட்டையின் அளவு! :o 

வருகைக்கும், பச்சைக்கும் நன்றி! 

புங்கை மீண்டும் ஒரு கலக்கல் கதை வெகு சீக்கிரம் தொடருங்கோ வாசிக்க ஆவலாய் உள்ளோம்....

சரி...சரி...அவசரப்படாதையுங்கோ... எழுதிறன்! :lol:

வரவுக்கு நன்றி புத்தன்..!

விரைவா மிகுதியை போடுங்கப்பா ..

பொறுங்கப்பா.... நீங்கள் பருத்தித்துறை...மானிப்பாய்... எக்ஸ்பிரஸ் பஸ் ரூட்டில பழகின சனம்! :o

நாங்கள்... மணித்தியாலத்துக்கு ஒண்டு... அதுவும் ஆக்கள் சேர்ந்தால் தான் எண்டு பழகின சனம்! :lol:

வேகம் கொஞ்சம்  அப்படி இப்பிடித்தான் இருக்கும்.. ஆனால் ' பஸ்' இடையில நிண்டு கிண்டு குழப்படி பண்ணாது!

கட்டாயம் முடிவிடம் வரை போய்சேரும்..!

வருகைக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

37200083.jpg

அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன!

1- அந்தச் சிறுவன் அவனிடம் அந்த மேளத்தைத் தரத் தயங்கியது அவனுக்கு ஏன் என்று அப்போது புரியவில்லை! 

அப்போது அவனது அண்ணா அங்கு ஓடி வந்து மேளத்தைப் பறித்து எறிந்தார்! பின்னர் ஆவேசமாக அந்த மேள காரச் சிறுவனைத் தாக்கத் தொடங்கினார்! அவனது ஆச்சியும் அங்கு ஓடிவந்து …. ஐயோ. ஐயோ என்று தலையையும் விரித்துவிட்ட படி மார்பில் இரு கரங்களாலும் அடித்த படி ஏதோ பிரளயம் ஒன்று அங்கு நிகழ்ந்து விட்டதைப் போல...உரத்த குரலில் அழத்தொடங்கினார்! அவனுக்கு… ஆச்சியா அல்லது மூலஸ்தானத்தில் அமர்ந்திருப்பதா… பத்திரகாளி என்று குழப்பம் ஏற்பட்டது!

அவன் ஏதோ சொல்ல முயன்றபோது அவனை ஆச்சி அழைத்த பெயர் … விசரன்!

இரண்டாவது சம்பவம்… சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது!

2-ஊரெல்லாம் மரவள்ளித் தடி நட்டுக்கொண்டிருந்த காலம்! படித்து விட்டு வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் ‘ முத்தரையன் கட்டில' இலவசமாய்க் காணி குடுக்கிறாங்கள் எண்டு.. முத்தரையன் கட்டை நோக்கி ஓடிய காலம்!

3- சீனிக்குப் பதிலாய்.. பேரீச்சம் பழம் வந்து.. ஊர் மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நக்கத் துவங்கியதால்.. கை ரேகைகள் மறைந்து விடுமோ என்று ‘சாத்திரம்' சொல்லுபவர்கள் கவலைப்படத் தொடங்கிய காலம்!

அந்தக் காலத்தில் தான்..

4-நம்ம ஊரிலும்.. பெற்றோல் இருக்கலாம் என்று ‘ரஸ்ஸியாக் காரர்'  ஊரெல்லாம் ‘ அமத்து வெடி' வைச்சுத் திரிஞ்ச காலம்!

தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது! ஊர்ப்பெருசுகள் சும்மா கிடந்த கடற்கரைக் காணிகளுக்கெல்லாம் 'கதியால்' போட்டுக் கிடுகு வேலியடைக்கத் தொடங்கிய காலமும் அது தான்! ஒரு வேளை, தங்கள் வளவுகளுக்குள்ளையும் பெற்றோல் இருந்தால்…. அவர்களுக்கு அந்த நினைவே புல்லரிக்க வைத்திருக்க வேண்டும்!

சிலரது நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தில், அந்தப் புல்லரிப்பே நிரந்தரமாகியும் போய் விட்டது இன்னொரு கதை!

அப்படியான

5-‘ பெற்றோல்' பரிசோதனை ஒன்றின் போது ‘காளி கோவிலடி' யிலும் சில பரீட்சார்த்தக் கிணறுகள் தோண்டினார்கள்! ‘டெரிக்' ஒன்று கடற்கரையில் துளையிட்டுக் கொண்டிருக்க.. ஒரு ‘ரஸ்சியன்' சாதாரண காற்சட்டையுடனும் வெறும் மேலுடனும், கொதிக்கும் வெயிலில் நின்று ‘திரவ சீமெந்து' போன்ற ஒன்றை அந்தத் துளைக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்! அந்தத் துளையைச் சுற்றித் திரவச் சீமெந்தும்.. ஊர்ச்சனமும் நிறைந்திருந்தனர்!

சிறிது நேரத்தில் அந்தத் திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

அந்த சீமெந்துத் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது! அப்போது எங்கட ஊர் ‘எஞ்சினியர் ஐயா' கோவில் மதில் நிழலில் நின்று கொண்டிருந்தார்! அவருக்கு வெயில் சுட்டு விடாது நம்ம ‘விசரன்' குடை பிடித்துக் கொண்டிருந்தான்!   

அந்த ‘ரஸ்ஸியாக்' காரனும்.. எமது ஊர் எஞ்சினியர் ஐயாவைப் பார்த்துத் திட்டிய படியிருந்தான்! அவன் மீண்டும், மீண்டும் அவரைப்பார்த்துத் திட்டியது, அவருக்குப் புரியாவிட்டாலும்… நம்ம விசரனுக்குப் புரிந்தது!  புரிந்ததும் அவன் உடனே, நம்ம இஞ்சினியர் ஐயாவுக்குப் பிடித்திருந்த குடையைக் கொண்டு போய்.. அந்த ரஸ்ஸியாக காரனுக்குப் பிடிக்கத் தொடங்கினான்!

அப்போது.. அந்த இஞ்சினியர் ஐயா.. அவனை நோக்கி.. உரத்துக் கத்திய குரல்...’ விசரன்"!    

(ஆறுதலாகத் தொடரும்.....)

கதையுடன் நினைவுகளை  மீட்டுவதில் வல்லவரய்யா தாங்கள்

எனது  ஊர் பழைய  நினைவுகளை மீட்டு வந்துள்ளீர்கள்

அது ஒரு கனாக்காலம்

தொடருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் கதை வழக்கம் போல அசத்தலாக இருக்கிறது. சிறீமாடகாலத்தில அழிஞ்ச கை ரேகையை ஞாபகப்படுத்தி இருந்தீர்கள். நீங்கள் கதை சொல்லும் பாங்கே தனிதான். தொடருங்கள் காத்திருக்கிறோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை

வருகைக்கு நன்றிகள், ரதி!

தனி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மன அமைதி போல ஒரு சமுதாயத்துக்கும் மன அமைதி அவசியம்.
 
எங்கட சமுதாயத்துக்கு அது இல்லை. 
 
அது இருந்தால் குறைபாடுள்ளவர்களை அணைத்திருப்பார்கள்.
 
மிகுதியை வாசிக்க ஆவல்.  

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், ஈசன்!

என்ன காரணமாய் இருக்கும் என்று பல தடவைகள் சிந்தித்துள்ளேன்!

ஆனாலும் இதுவரை விடை கிடைக்கவில்லை!

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..ஈசன்!

அட நம்ம ரோமியோ கன காலத்திற்குப்பிறகுகளத்தில குதித்துள்ளீர்கள்....... உங்கள் ஆரம்பமே எங்களை விசராக்க முன்னர் அடுத்த பதிவைப்போடுங்கள்.... ஆவலுடன் வாசிக்கவும் அதன் பின்னர் உங்களை வறுக்கவும் காத்திருக்கிறேன் :lol:  ஏன்னா நானும் விசரிதான்... :D:rolleyes:

உங்களுக்குத் தனித்துவமான ஒரு திறமை உண்டு என்பதைப் பல இடங்களில் அவதானித்துள்ளேன், சகாறா!

நீங்கள் விசரி என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றேன்! :D

அப்படியானால் 'விசரன்' யாரென்பது தான் எனக்குப் புரியவில்லை? :rolleyes:

வருகைக்கு நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.