Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

30-1414644372-milk34-600.jpg

 

இரண்டு கிளாஸ்க்கு மேல் தினமும் பால் குடித்தால் சீக்கிரமே “பால்” –

லண்டன் ஆய்வில் ”திடுக்” தகவல்.

 

லண்டன்: எங்குபார்த்தாலும் பால் உடம்புக்கு நல்லது என்ற கூற்று நிலவி வருகின்ற நிலையில் தினமும் இரண்டு கிளாஸ்க்கு அதிகமான பால் குடித்தால் உயிருக்கே ஆபத்து என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

இந்த ஆய்வின் முடிவினை கண்டறிந்தவர்கள் உப்சலா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் தலைமையிலான குழுவினர் ஆவார்கள்.

 

இந்த ஆய்வின் முடிவில், அதிக அளவில் பால் குடிப்பதால் எலும்புகளுக்கு கிடைக்கும் நன்மை சிறிதளவுதான். ஆனால், பாதிப்புகளோ கடுமையானது என்று தெரிவித்துள்ளனர்.

 

20 ஆண்டுகளாக ஆய்வு:

அவர்கள் இதுகுறித்து, "பால் குடிப்பதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு நடத்தினோம். 61 ஆயிரம் பெண்கள், 45 ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம்.

 

அரை லிட்டரில் ஆபத்து:

இதில் தினமும் இரண்டு கிளாஸ்க்கும் அதிகமாக அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்போருக்கு பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு விரைவிலேயே உயிரிழப்பு ஏற்படுவது தெரியவந்துள்ளது.

 

விரைவில் உயிரிழப்பு:

குறைவாக பால் குடிப்போரை விட அதிகமாக பால் குடிப்போர் மிக விரைவாக உயிரிழப்பதையும் எங்கள் ஆய்வில் உறுதி செய்துள்ளோம்.

 

சர்க்கரைத் தன்மையால் வினை:

பாலில் கலந்திருக்கும் "லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ்" என்ற பொருட்களின் சர்க்கரை தன்மை காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாக எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது" என்று

 

தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

வளர்ந்த பின்னும் மனிதர்கள் மட்டுமே பால் அருந்துகிறார்கள்.

இரண்டு கிளாசுக்கு மேலே பால் குடித்தாலும் ஆபத்து , சூஸ் குடித்தாலும் ஆபத்து, சூப் குடித்தாலும்  ஆபத்து... இப்படி பீதிய கிளப்புறது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு வேலையாப் போச்சு !!

 

 
நல்லா வேலையைப் பாரு ..
நல்லா சாப்பிடு
நல்லா சரக்கடி 
சந்தோசமா இரு !! 
 
இப்படி யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க?? :(
 
Note :எழுத்துப்  பிழைக்காக திருத்தப்பட்டது 

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

பாலாகவே உள்ள அமலாபால் இன்னமும் உயிரோடும், அங்க அழகும் பொலிவும்கொண்டும் விளங்குகிறாரே......!! :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு கிளாசுக்கு மேலே பால் குடித்தாலும் ஆபத்து , சூஸ் குடித்தாலும் ஆபத்து, சூப் குடித்தாலும்  ஆபத்து... இப்படி பீதிய கிளப்புறது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு வேலையாப் போச்சு !!

 

 
நல்லா வேலையைப் பாரு ..
நல்லா சாப்பிடு
நல்லா சரக்கடி 
சந்தோசமா இரு !! 
 
இப்படி யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க?? :(
 
Note :எழுத்துப்  பிழைக்காக திருத்தப்பட்டது 

 

 

ஐயையோ... ஆதித்ய இளம் பிறையன்....

தமிழ் நாட்டில்... சரக்கடி என்பதற்கு ஒரு அர்த்தம்.

ஈழத்தில்... அதுக்கு, வேறு அர்த்தம் ஐயா. :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

பாலாகவே உள்ள அமலாபால் இன்னமும் உயிரோடும், அங்க அழகும், பொலிவும்  கொண்டும் விளங்குகிறாரே......!! :wub:

 

பாஞ்ச்.. பாஞ்ச்..! கண்ணாடியை நன்கு சுத்தம் செய்து, பார்த்து எழுதுங்கோ..! :lol::rolleyes:

 

Spoiler
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு! :)

 

 

 

ஐயையோ... ஆதித்ய இளம் பிறையன்....

தமிழ் நாட்டில்... சரக்கடி என்பதற்கு ஒரு அர்த்தம்.

ஈழத்தில்... அதுக்கு, வேறு அர்த்தம் ஐயா. :lol:  :D

 

 

ஆகா !! இப்படி வேற இருக்க !!??  :rolleyes:

எந்தப் பாலைக் குடித்தால் ஆபத்துன்னு சொல்லவே இல்ல !!
 
ஆட்டுப் பாலா, மாட்டுப் பாலா, ஒட்டகப் பாலா .... :)
 
 
 
 
 
அலுவலகத்தில் வெட்டியா இருந்தா இப்படியெல்லாம் கேட்க தோணும் போல  ...!!

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச்.. பாஞ்ச்..! கண்ணாடியை நன்கு சுத்தம் செய்து, பார்த்து எழுதுங்கோ..! :lol::rolleyes:

 

ஏன் வன்னியரே பால் கெட்டுவிட்டதா..???. அதனால்தான் ஆதித்ய இளம்பிறையன் ஆட்டுப்பால், மாட்டுப்பால், ஒட்டகப்பாலைத் தேடுகிறாரா?? :o :o

 

ஏன் வன்னியரே பால் கெட்டுவிட்டதா..???. அதனால்தான் ஆதித்ய இளம்பிறையன் ஆட்டுப்பால், மாட்டுப்பால், ஒட்டகப்பாலைத் தேடுகிறாரா?? :o :o

 

 

ஆட்டுப்பால், மாட்டுப்பால், ஒட்டகப்பாலை தேடினா பிரச்னை இல்லை... பெண்பாலைத் தேடினாத்தான் பிரச்னை ...
 
(யாரும் எதுவும் தவறான அர்த்தத்தில எடுத்துக்காதீங்க... 
பெண்பால் : தமிழ்மொழியில் மக்களை உணர்த்தும் சொல் உயர்திணை. இதில் பெண்ணைக் குறிக்கும் சொல் பெண்பால். இது பெண் ஒருத்தியை மட்டுமே குறிக்கும். அவள், இவள், உவள், எவள், பேடி, மகள், மகள், மகடூஉ போன்றவையும் உயர்திணைப் பெயர்கள் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.)

நல்ல காலம் பியர் குடித்தால் என்று தலையங்கம் இருந்து அது என் மனைவியின் கண்ணில் பட்டு.......... அப்பாடா தப்பிச்சேன்.

  • கருத்துக்கள உறவுகள்

 

இரண்டு கிளாசுக்கு மேலே பால் குடித்தாலும் ஆபத்து , சூஸ் குடித்தாலும் ஆபத்து, சூப் குடித்தாலும்  ஆபத்து... இப்படி பீதிய கிளப்புறது இந்த ஆராய்ச்சியாளர்களுக்கு வேலையாப் போச்சு !!

 

 
நல்லா வேலையைப் பாரு ..
நல்லா சாப்பிடு
நல்லா சரக்கடி 
சந்தோசமா இரு !! 
 
இப்படி யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க?? :(
 
Note :எழுத்துப்  பிழைக்காக திருத்தப்பட்டது 

 

 

 

கொஞ்சநாளாக

இவர் ரொம்ப மோசமாக சிந்திக்கிறார்.. :icon_mrgreen:  :lol:

 

என்னாச்சு?? :D

  • கருத்துக்கள உறவுகள்
பால் எல்லாம் இப்ப எங்க கிடைக்குது .............
 
ஊசி அடிச்சு இல்லாத கெமிக்கலை ஏத்த ஒரு மாமிச மலை நின்ற இடத்திலேயே நின்று வளருது. அதில் ஒரு பைப்பை கொழுவி சுவிச்ச போடா அதுக்குள் இருந்து இது எதையோ வைக்கும் பண்ணி எடுக்குது.
அதை கொண்டுவந்து ............ சீஸ் மொசரெல்லா பட்டர் என்று எல்லாம் செய்து முடிய மிஞ்சின கழிவை 
2% 1% என்று கொண்டுவந்து விற்கிறார்கள்.
 
கொழுப்பு 0% சத்து 0%  ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லம் வாங்கி குடியுங்கள் என்று அவன் விற்கிறான்.
 
எருமை ஏரோபிளேன் ஓடுது என்று சொன்னா நம்பவும் ஒருகூட்டம் இருந்து வாங்கி குடிக்கிறது.  

இன்றிரவு நான் பால் குடிப்பதா வேண்டாமா.... கெதியாக ஒரு முடிவுக்கு வாருங்கள் ப்ளீஸ்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிரவு நான் பால் குடிப்பதா வேண்டாமா.... கெதியாக ஒரு முடிவுக்கு வாருங்கள் ப்ளீஸ்...

 

இந்தப்பூனையும்  பால் கு(க)டிக்குமா??? :icon_mrgreen:

 

ஏதோ  நாங்க சொன்னால்

இவர் விட்டுருவாராம்....

நம்புங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு விடயங்கள்:

1. ஸ்கண்டினேவிய நாடுகளின் மக்கள் மீது நடத்தப் படும் ஆய்வுகள் எங்களுக்குப் பொருந்தாமல் போகக் கூடும்! இந்த நாடுகளின் மக்கள் ஒரே மாதிரியான பரம்பரை அமைப்புக் கொண்டவர்கள். பல்லினத் தன்மை (diversity) குறைவு. எல்லா ஜீன்களும் கலந்து கட்டி உருவான பிறவுன் தோல் காரரான நாங்கள் கொஞ்சம் பலமான ஆட்கள் இவர்களை விட. எனவே இந்த ஆய்வை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்களே கோடி காட்டியிருக்கிறார்கள்.

2. நடத்தப் பட்ட ஆய்வின் பல தகவல்கள் கேள்விக் கொத்து மூலம் திரட்டப் பட்டவை. இது மாதிரியான ஆய்வுகளில் கேட்கப் படும் கேள்விகள் சில சமயம் சார்பு (bias) ஏற்படுத்தி விளைவுகளையும் மாற்றி விடும்!

எனவே பால் குடிப்பதை நான் நிறுத்தப் போவதில்லை! குறைந்த கொழுப்புள்ள (low fat) பால் குடிப்பதை நீங்களும் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை! :D


"...Our results might not apply to people of other ethnic origins, such as those with a high prevalence of lactose intolerance, or to children and adolescents. Nutrient concentrations in milk and other dairy products are variable and depend on factors such as food fortification, biosynthesis, the animal’s diet, and physicochemical conditions,51 which might affect the generalisability of our results. Theoretically, the findings on fractures might be explained by a reverse causation phenomenon, where people with a higher predisposition for osteoporosis may have deliberately increased their milk intake."

 

BMJ 2014; 349 doi: http://dx.doi.org/10.1136/bmj.g6015(Published 28 October 2014) Cite this as: BMJ 2014;349:g6015

  • கருத்துக்கள உறவுகள்

பாலை கிளாசுக்க விட்டுக் குடிக்காமல் நேரடியாகக் குடிச்சால் ஆபத்தில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் இரண்டு கப்புக்கு சான்ஸ் இல்லை.. :o மாசச் செலவு கூடிப்போகும் எண்டு சொல்ல வந்தன்.. :D

ஐயையோ .... சுட்டபாலா ,சுடாதபாலா என்று விளக்கமாக சொல்லுங்கள் ... :D
 
தேநீருக்கு பால் இல்லாமல் நான் குடிப்பதில்லை ,,,,,,, :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பாலில் கொஞ்சநச்சுத்தன்மை இல்லையென விஞ்ஞானிகளும் மறுப்பு தெரிவிக்கவில்லை.
 
நூறு லீட்டர் பாலை ஒரேயடியாய் குடிச்சால் உடனை செத்துப்போவாய்.
அதை...
கொஞ்சம் கொஞ்சமாய் குடிச்சியெண்டால் கொஞ்சம் கொஞ்சமாய் சாவாய்.
அதின்ரை அர்த்தம் கான்சர் வருமெண்டதுதான்  :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

1. ஸ்கண்டினேவிய நாடுகளின் மக்கள் மீது நடத்தப் படும் ஆய்வுகள் எங்களுக்குப் பொருந்தாமல் போகக் கூடும்! இந்த நாடுகளின் மக்கள் ஒரே மாதிரியான பரம்பரை அமைப்புக் கொண்டவர்கள். பல்லினத் தன்மை (diversity) குறைவு. எல்லா ஜீன்களும் கலந்து கட்டி உருவான பிறவுன் தோல் காரரான நாங்கள் கொஞ்சம் பலமான ஆட்கள் இவர்களை விட. எனவே இந்த ஆய்வை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்களே கோடி காட்டியிருக்கிறார்கள்.

 

 

காச்சல்வந்தால் ஊரில் வாழைப்பழமோ, தயிரோ கண்ணிலும் காட்டமாட்டார்கள். இங்கு மேலைநாட்டில் காச்சலுக்கும் காலை உணவில்கூட வாழைப்பழமும், தயிரும் தட்டை அலங்கரிக்கும். காச்சலும் பறந்துவிடும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிரினங்களில் சாகும் வரைக்கும் பால்குடிக்கும் இனம்  எது?

 

மனித இனம். :D

  • கருத்துக்கள உறவுகள்

மனிசருக்கு செத்த பிறகும் பால் தான்:D

  • கருத்துக்கள உறவுகள்

எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லதே
இதற்காக 20 வருடங்கள் இவர்கள் ஆராய்ச்சி செய்யத்தான் வேண்டுமா :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.