Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்தரப் பரீட்சை முடிவுகள் - 2014; யாழ் இந்து கணிதத்தில் முதலிடம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
உயர்தர பரீட்சை - கணிதத்தில் யாழ் இந்து முதலிடம்.
jaffna%20hindu.jpg?itok=2q2REbsU
 

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகின. 

 

இதில் அகில இலங்கை ரீதியாக விஞ்ஞான பிரிவில் மாத்தறை சுஜாதா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த எச்.ஜீ.ஹிருணி உதாரா முதலாம் இடத்தைப் பிடித்துள்ளதோடு, மூன்றாம் இடத்தினை திருகோணமலையைச் சேர்ந்த சிவகுமார் இந்துஜன் பெற்றுக் கொண்டுள்ளார். 

 

மேலும் கணிதப் பிரிவில் யாழ் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த பாகியராஜ் தருகீசன் முதலிடத்தை வசப்படுத்தியுள்ளார். 

 

வர்த்தகப் பிரிவில் காலி சவுத்லண்ட் வித்தியாலயத்தின் பியூமி தனஞ்சனா முதலிடத்தைப் பெற்றுள்ளார். 

 

மேலும் கலை பிரிவில் கொழும்பு விஷாகா பாலிகா மகா வித்தியாலயத்தின் நெத்சலா பதிரண முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

 

http://www.eelanatham.net/articles/2014/12/27/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

 

முகனூலில் போட்டிருந்தார்கள். தமிழர்கள் தலைநிமிர் கழகமும் இதுவே என்று.   :D

 

வாழ்த்துக்கள் தருகீசன்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியாக உள்ளது, தருகீசன்.
சிவகுமார் இந்துஜனுக்கும் வாழ்த்துக்கள்.
மேலும் பல சாதனைகளைப் பெற, வாழ்த்துக்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
1513770_1060256427333744_321499474722646
இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர்தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்.
 
பாக்கியராஜா டாருகீசன்  என்ற மாணவனே முதலிடம் பெற்றுள்ளார்.
 
இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார்.
 
அதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கணிதப்பிரிவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர்.
 
மாவட்ட நிலையில் கு.கதீஸ்(3ஏ) முதலாம் இடத்தையும் கா.சங்கீர்த்தனன் (2ஏ,பி) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
 
அத்துடன் விஞ்ஞானப் பிரிவில் மாவட்ட நிலையில் முதலாமிடத்தை இதே பாடசாலை மாணவர் இராமமூர்த்தி ஜனத் (3ஏ) பெற்றுள்ளார்.
 
கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்ற டாருகீசன், 8ஆம் இடம் பெற்ற யாழ் இந்துக்கல்லூரி மாணவன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் இரு இடங்களையும் கணிதப் பிரிவில் பெற்றுக் கொண்ட கிளி/மத்திய கல்லூரி மாணவர்களுக்கும் விஞ்ஞானப்பிரிவில் முதலிடத்தைப் பெற்ற மாணவருக்கும் மேலும் வட மாகாணத்தில் சாதனைகள் படைத்த அனைத்து மாணவர்களுக்கும் ‘Daily Jaffna’ இணையம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

கல்வியிலும், வியைளாட்டிலும் சாதித்துக் காட்டியது அருணோதயா! 2 மருத்துவம் 2 பொறியியல்

 
 
arunodaya_college%2B.jpg
அருணோதயா கல்லூரியில் 2014 ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இம்முறை பல மாணவர்கள் சித்திபெற்று பல்கலைக்கழக அனுமதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
 
மருத்துவபீடத்துக்கும் இரண்டு மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கும் இரண்டு மாணவர்கள் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
இவர்களுள் மருத்துவப் பீடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவன் கௌசிகன் கல்லூரி அதிபர் திரு.நா.கேதீஸ்வரனின் மகன் என்பதும் மாணவர்கள் லவணண் மற்றும் குவைசியா கோலூன்றிப் பாய்தல் போட்டியில் தேசிய மட்ட சாதனைகளை நிகழ்த்தியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.dailyjaffna.com/2014/12/2-2.html

  • கருத்துக்கள உறவுகள்

அருணோதயாக் கல்லூரியில் சாதனை படைத்த... மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அருணோதயாக் கல்லூரியில் தான்... சுண்டலும், ஆரதியும் படித்தவர்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தருகீசன்.

தருகீசன், சிவகுமார் இந்துஜனுக்கும் வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
அனைவரது ஊக்கமுமே எனது வெற்றிக்கு காரணம்; யாழின் சாதனை மாணவன் டாருகீசன்
4e987a856ddd9f25d3d76148f0db2123.jpg
'எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம்', என க.பொ.த உயர்தரப்பரீட்சையில் கணிதப்பிரிவில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற யாழ். இந்துக்கல்லூரி மாணவன் பாக்கியராஜ் டாருகீசன் தெரிவித்துள்ளார். 
 
 
 
நேற்று வெளியாகிய க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகளின்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் டாருகீசன் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 
 
தனது சாதனை குறித்து உதயன் இணையத்திற்கு வழங்கிய செவ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 
 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
 
எனது சொந்த இடம் மீசாலை தற்போது நாச்சிமார் கோயில்ப்பகுதியில் வசித்து வருகின்றோம். 
 
எனது தந்தை தென்மராட்சி முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர். நான் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலும் சாவகச்சேரி இந்து ஆரம்பப்படசாலையிலும் எனது ஆரம்பக்கல்வியை கற்றேன். 
 
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து யாழ். இந்துக்கல்லூரியில் எனது கல்வியை ஆங்கிலமொழி மூலம்  தொடர்ந்தேன். 
 
க.பொ.த சாதாரண தரத்தில் 8ஏ சீ பெற்று உயர்தரத்தில் கணிதப்பிரிவைத் தேர்ந்தெடுத்து கற்று 2014 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சையில் தோற்றி தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டேன். 
 
இதையிட்டு நான் மிகவும் சந்தோசப்படுகின்றேன். என்னை ஊக்கப்படுத்திய பெற்றோருக்கு நான் நன்றி கூறுகின்றேன். 
 
 
அத்துடன் எனக்கு வழிகாட்டியாக இருந்த கற்பித்த ஆசிரியர்களுக்கும் நண்பர்களுக்கும் நான் நன்றிகளைக் கூறுகின்றேன்.
 
 
எனது விடாமுயற்சியும் அனைவரது ஊக்கமுமே நான் முதலிடத்திற்கு வரக்காரணம் என்றார். 
 
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=291643757028658014#sthash.DXvuv37L.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

தருகீசன், சிவகுமார் இந்துஜனுக்கும் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கணிதப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த தருகீசனுக்கும் மற்றைய மாணவர்களுக்கும் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள் :)

உ/த பெறுபேறுகளின் பிரகாரம் தமிழ் மாணவர்கள் இருவர் இடம்பிடிப்பு

 

2014ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொது தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

இந்த முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் யாழ். இந்து கல்லூரி மாணவன் பாக்கியராஜ் தாருகீஷன், கணிதப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

கணித, விஞ்ஞான, வணிகம் மற்றும் கலை பிரிவுகளின் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கணிதம்

முதலாமிடம் - யாழ். இந்து கல்லூரி மாணவன் பாக்கியராஜ் தாருகீஷன்
இரண்டாமிடம் - கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் பி. பானுக மாலிக் சில்வா
மூன்றாமிடம் - ரம்புக்கனை, பின்னவல மத்திய கல்லூரி மாணவி எம். கசுன் இமேஸா விக்கிரமசிங்க

விஞ்ஞானம்

முதலாமிடம் - மாத்தறை சுஜாதா மகா வித்தியால மாணவி எச்.ஜி.ஹிருணி உதார
இரண்டாமிடம் - காலி சங்கமமித்தை பெண்கள் கல்லூரி மாணவி டீ.வை.பி.தேவஸ்ரீநாராயணா
மூன்றாமிடம்-  திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா மத்திய கல்லூரி மாணவன் சிவக்குமார் இந்துஜன்

வணிகம்

முதலாமிடம் - காலி, சவுத்லேன்ட் கல்லூரி மாணவி யு.ஜி.பியூமி தனஞ்சய
இரண்டாமிடம் - பாணந்துறை பெண்கள் கல்லூரி மாணவி எஸ்.எ.ராவிந்தி சாந்தினி
மூன்றாமிடம் - கண்டி மகாமாய பெண்கள் கல்லூரி மாணவி ஜீ.எ.ஜீ.செவ்வந்தி ரத்னாயக்க

கலை

முதலாமிடம் - கொழும்பு விசாகா பெண்கள் கல்லூரி மாணவி ஷாவிந்தி நதிஷா பெரேரா
இரண்டாமிடம் - தங்காலை பெண்கள் மகா வித்தியாலய மாணவி எம்.கே.ஆயிஷா நில்மினி
மூன்றாமிடம் - நாரம்மல, மயூபாத மத்திய கல்லூரி மாணவன் கே.பி.காயத்ரி திவங்க நவரத்ன பெற்றுக்கொண்டார்.
இதேவேளை ஹொரணை தக்ஷிதா மத்திய மகா வித்தியாலயத்தில் பிரெய்லி முறையில் கல்விபயின்ற மாணவி ரித்மி அதபான்கொட களுத்துறை மாவட்டத்தில் கலை பிரிவில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 

www.tamilmirror.lk/136581#sthash.gxT6gVcb.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கணிதப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்த தருகீசனுக்கும் மற்றைய மாணவர்களுக்கும் மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள்.  :) 

எமது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்னை விட சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் - மேகலாதரன் 
 
 
எமது கல்லூரியில் கற்கும் எதிர்வரும் சந்ததியினர் என்னைவிட சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும் என்பதே எனது ஆசை என வடமாகாணத்தில் விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன் எஸ்.மேகலாதரன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.மேகலாதரன் தற்போது வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞான பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று வடமாகாணத்தில் முதல் நிலையிலும் மாவட்ட மட்டத்தில் முதல் நிலையிலும் தேசிய ரீதியில் 18வது இடத்தினையும் பெற்றுள்ளார். 
 
இந்த மாணவன் தனது வெற்றி குறித்து கருத்து தெரிவிக்கையில் -
mekalataran%2068695.jpg
எஸ்.மேகலாதரன்
 
எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த நிலையை அடைவதற்கு வழிகாட்டிய எனது பெற்றோர், பாடசாலை சமூகம், எனது வகுப்பாசிரியர் ரி.சிவராசா ஆசிரியர், எனக்கு கற்பித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். எதிர் வரும் காலத்தில் எமது பாடசாலை இதை விட சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்னனியில் வரவேண்டும். இதுவே எனது ஆசையாகவுள்ளது.- எனத் தெரிவித்தார். இதே பாடசாலையைச் சேர்ந்த பி.வைஸ்ணவன் விஞ்ஞான பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று வடமாகாணத்தில் இரண்டாம் நிலையிலும், மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையிலும் தேசிய ரீதியில் 21வது இடத்திதையும் பெற்று சித்தியடைந்துள்ளார்.
 
பி.வைஸ்ணவன் இந்த மாணவன் தனது வெற்றி குறித்து கூறுகையில் -
vishnavan%205754546.jpg
பி.வைஸ்ணவன் 
 
 
மாகாண மற்றும் மாவட்ட ரீதியாக எமது பாடசாலையை கௌரவப்படுத்தியதில் சந்தோசம். இதைவிட எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பாடசாலை சமூகத்திற்கும் எனது நன்றிகள். எனது வகுப்பாசிரியர் ரி.சிவராசா ஆசிரியர் அவர்கள் எமக்கு நல்ல வழிகாட்டியாக இருந்தார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் எமக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு எனது மிகுந்த நன்றிகள். என்னில் பலர் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்களுக்கும் எனது நன்றிகள். எதிர்காலத்தில் எமது பாடசாலை இதே மாதிரி சிறந்த பெறுபேறுகளை பெறவேண்டும்.- எனத் தெரிவித்தார். அத்துடன் இதே பாடசாலையில் கணிதப் பிரிவில் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலை மாணவனாக தெரிவாகியுள்ள ர.கிரோஸ்குமார் தனது வெற்றி குறித்து கூறுகையில் -
kiroshkumar%205454544.jpg
ர.கிரோஸ்குமார்
 
நான் இந்த நிலையை அடைவதற்கு எனக்கு கற்பித்த ஆசிரியர்களே காரணம். எனக்கு பாடசாலையிலும் வெளியிலும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இதேவேளை, இந்தப் பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
 
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப்பேரினவாத அரசின் கொடிய மட்டுப்படுத்தல் என்னும் இனத்தின் கல்வியை அழிக்கும் பேயை தாண்டி பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களை வாழ்த்தும் அதேவேளை அனைத்துப்பாடங்களில் சித்தியடைந்தும் பல்கலைக்கழகம் போகமுடியாமல் நிர்க்கதியாக்கப்பட்ட மாணவர்கள் தற்பொழுது கிடைக்கும் தனியார் கல்வி நிறுவனங்களூடாக தமது கல்வியை தொடர்ந்து தமது எதிர்காலத்தை வளப்படுத்திக்கொள்ளவேண்டும்..

கல்வி நிறுவனங்கள் சிலவற்றை இவ் இணைப்பில் காணலாம் http://www.yarl.com/forum3/index.php?/topic/116376-இலங்கையில்-அங்கீகரிக்கப்பட்ட/

-------

இதுகுறித்து மாணவன் ஒருவனின் பதிவொன்று

"தோல்வி வெற்றி என்பது இயற்கை மாத்திரமே இயற்கை தவிர வேறில்லை, மிகவும் நேசிக்கத்தகுந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன் நீ எப்பவும் தோல்வி பற்றி தான் பேசுற அது நெகரிவ் திங் இல்லயா

வெற்றிபற்றி யோசித்து பெரிதாக வரும் தோல்வியை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியாமல் போகுமோ அதைவிட பெரிய அளவில் கொண்டாடக்கூடியது தான் தோல்வி பற்றி சிந்திக்கும் போது கிடைக்கிற சிறிய வெற்றியும்

நீ வித்தியாசம்

இல்ல நான் தான் கொமன்

வெற்றிபெற்றவரை எவ்வளவுக்கு உயர்த்தி பேசும் நம் கூட்டத்தவர்களால் தோல்வியடைந்தவர்களை ஆறுதல் படுத்த முடியுறேல காரணம் மனிதனின் சிந்தனை வறட்சி இரக்க வறட்சி , பகுத்தறிவு வறட்சி மட்டுமே . நான் A/L ரிசல்ட் முதல் தடவை வந்த போது என்னை நினைத்தே அழுதிட்டிருந்தன் , அம்மா அப்பா வால் ஆறுதல் சொல்லினார்கள் பிறகு கையை அறுத்து விட்டேன் இரத்தம் ஓடிக்கொண்டிருக்க சிறிய காயம் என்பதால் காப்பாற்றப்பட்டேன் , பிறகு அதை விட பல குடும்ப சிக்கல்கள் வந்த போது தான் இது வெறும் முட்டாள் தனம் என்று உறுதியானது .

முக்கியமாக இந்த சமூகம் என்னை கேவலமாக பார்க்குது என்டது தான் என்ர பிரச்சனையா இருந்தது , நிறய நாள் யோசிச்சன் இந்த சமூகம் எத செய்து கிளிச்சதால நான் சமூகத்த பார்த்து பயப்பிடுறன் என்டு . சமூகம் எதையும் எப்போதும் புரிந்து கொள்ள போறதில்ல எந்த நியாயப்படுத்தல்களும் சமூகத்திற்கு தேவையில்லை , சமூகம் ஒரு சுயநல அமைப்பு அது தன்னை தானே நியாயப்படுத்திக்கொள்ளும். இது வெறும் தோல்வி தான் அடுத்த அடியை உறுதியாக வைக்கும் சிந்தனைக்கான சிறு சறுக்கல்

தோல்வியில் இருக்கும் எல்லா தம்பி தங்கைகளுக்கும் இங்கே ஒரு தோல்வியை கொண்டாடும் அண்ணண் இருக்கிறான் என்னைப்போல் பல அண்ணண்கள் உங்களுக்கு

நன்றி ஆதி.பார்த்தீபன்(முகநூல்) "

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லது சுபேஸ்.

 

இலங்கையில் இப்போதுள்ள பல்கலைக்கழக அனுமதி முறையில்.. 25,000 மாணவர்கள் வரை தான் பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்பட முடியும். ஆனால் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம்.

 

சில நகர்ப்புற மாணவர்கள்.. சிறந்த பெறுபேறு பெற்றும் பல்கலைக்கழகம் புக முடியாத நிலையை காண்கிறோம்.

 

இது இலங்கையின் சமூக.. பொருண்மிய கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தினாலும்.. அதற்கு ஒரு உருப்படியான தீர்வை கொண்டு வருவதில்.. இலங்கையில் சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் தோற்றே வருகின்றனர்.

 

எதுஎப்படியோ.. இப்ப பல்கலைக்கழக கல்விக்கு மாற்றீடாக பல கற்றல் முறைகள் வந்துள்ளன. பல வெளிநாட்டு கற்கை நெறிகளை உள்நாட்டிலேயே அதுவும் வீட்டில் இருந்தே கற்கும் வசதிகள் பெருகி உள்ளன. அதுபோக இலங்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும்..பிரிட்டனில் உள்ளது போல தொலைக்கல்வி மற்றும் பாரம்பரிய கல்வி முறை அடங்கி திறந்த பல்கலைகழகம் உள்ளது. இந்த வசதிகளை பல்கலைக்கழகம் நுழைய முடியாத மாணவர்கள் பாவித்தும் வாழ்க்கையில் முன்னேறலாம்.

 

நம்மவர்களில் சிலர் குறிப்பாக புலம்பெயர் தமிழர்கள் சிலர் ஊரில் உள்ள பிள்ளைகளை வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளோடு ஒப்பிடும் கலாசாரத்தை வளர்த்து வருகிறார்கள். அது மிகவும் தவறானது. குறிப்பாக பிரிட்டனை எடுத்துக்கொண்டால் 120 பல்கலைக்கழகங்கள் உள்ளன. ஏ/ எல் (ஏ எஸ்.. ஏ2) பாஸ் ஆகல்லைன்னாலும் foundation year படிச்சு பட்டப்படிப்பை தொடரலாம். எல்லாரும் யுனிக்கு போகிறோம் என்று தான் சொல்வார்கள். எல்லோருக்கும் அரசு கடனுதவி வழங்குகிறது. மானியக் கொடுப்பனவுகளும் செய்கிறது. இந்த நிலையை சரிவர விளங்கிக் கொள்ளாமல்.. அங்குள்ள பிள்ளைகள் மீது ஒப்பீட்டு மதிப்பிடல் செய்வது தவறாகும். அங்கு நிலைவேறு.. வெளிநாடுகளில் நிலை வேறு. பரீட்சை முறைகளும் வேறுபட்டவை. அங்கு நடப்பது போட்டிபரீட்சை. வெளிநாடுகளில் குறிப்பாக மேற்குநாடுகளில் நடப்பது திறன் மதிப்பீட்டுப் பரீட்சைகள். இரண்டுக்கும் கொள்கை அடிப்படையில் பலத்த வேறுபாடு உண்டு. :):icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை உயர்தரப்பரீட்சை முடிவு- 2014 The Department of Examinations of  Sri Lanka has released the results of the G.C.E Advanced  Level Examination held in August 2014.Eighteen (18) students obtained A’s in all three  subjects,while 30  Students got 2A.Miss.Narmatha Thirugnanaselvan  of Bio stream secured the 3rd rank in district level and Miss.Mathumai Thevamanoharan is 5th in district. Best Results in G.C.E(A/L) 2014
 

Bio Stream (English Medium)

3A

  1. Ann Vinsala Antony Vinson Mariyanayagam (District Rank 41)

2A,B

  1. Apinaiya Thavayokarajah (District Rank 55)

A,2B

  1. Sharmija Jeyarajah
  2. Thanujah Murugathas

ABC

  1. Sayani Sivam
  2. Narththanah Satkunam
  3. Inthuja Gunaratnam

3B

  1. Amizhthini Nakkeeran

Bio Stream (Tamil Medium)

3A

  1. Narmatha Thirugnanaselvan (District Rank 03,Island Rank 72)
  2. Mathumai Thevamanoharan- (District Rank 05,Island Rank 98)
  3. Roshana Nagaratnam (District Rank 19)
  4. Mathusobiga Thivyakumaran (District Rank 20)

2A,B

  1. Krishni Manoharan (District Rank 16)
  2. Janaky Rajaratnam (District Rank 18)
  3. Shawya Gajarohanan (District Rank 23)
  4. Hamsavakini Nadarajah (District Rank 24)
  5. Dhadchayini Rajahram (District Rank 32)
  6. Shythaky Jeyarajah (District Rank 39)
  7. Vaishnavi Shakthivelu (District Rank 40)
  8. Rishanthini Punniyarajah (District Rank 52)
  9. Thiluckshana Parameshwarampillai (District Rank 56)
  10. Samithyah Sriskantharajah (District Rank 58)
  11. Piranavi Thiyagamoorthy (District Rank 62)
  12. Shanthatharani Sriskantharasa (District Rank 66)
  13. Sansiya Tharmakulasingam (District Rank 68)
  14. Sinthuja Raveendrathasan (District Rank 89)

2A,C

  1. Abiramy Sothithasan (District Rank 57)
  2. Saranga Sabhanayakam (District Rank 71)
  3. Dayani Pavalakumar (District Rank 92)
  4. Yalini Sivaladchanam (District Rank 127)
  1. Vishakaja Panchayuthan (District Rank 148)

A,2B

  1. Yathushna Arunakirivasan
  2. Subeka Kamalanathan
  3. Sambavi Nagendramoorthy
  4. Saranya Amarasingam

ABC

  1. Thuksigha Puvnenthirarajah
  2. Priyanthini Sathiyaseelan
  3. Niroji Sivakumar
  4. Kajeepa Thilainathan
  5. Thivakari Ramanathan

3B

  1. Ragavi Bakeerathan
  2. Tharshika Sathiyathasan

Maths Stream (English Medium)

3A

  1. Anosha Ignatius (District Rank 18)
  2. Thilaksi Chandrasekar (District Rank 28)

 2A,B

  1. Kanjana Senthinathan (District Rank 80)

A,2B

  1. Saranya Uthayakumar

Maths Stream (Tamil Medium)

3A

  1. Abivarshi Kanagarajah (District Rank 15)
  2. Piruntha Navanesan (District Rank 21)
  3. Vinushika Panchalogaranjan (District Rank 41)

2A,B

  1. Thevega Thevakumar (District Rank 69)

A,2B

  1. Darshika Karunarasan

ABC

  1. Banusha Aruchunarajah
  2. Mayuravaani Mathuranathan
  3. Vidyapiratha Raveendirarasa

3B

  1. Vatageve Vethanayahan

Commerce Stream

3A

  1. Mathurika Nithyananthan (District Rank 05)
  2. Sobana Balakumaran (District Rank 06)
  3. Kohula Sadagopan (District Rank 09)
  4. Shamini Sivakumar (District Rank 30)
  5. Thuvaraga Selvaratnam (District Rank 31)
  6. Varanitha Ramakrishnarajah (District Rank 43)

2A,B

  1. Thamiliny Thanarasa (District Rank 19)
  2. Dayana Fransis Segar (District Rank 65)
  3. Larina Kaneshalingam (District Rank 72)
  4. Vishnupriya Srikanthan (District Rank 73)
  5. Thilaxana Gunabalasingam (District Rank 99)

2A,C

  1. Vithusha Jeyakumaran (District Rank 93)

A,2B

  1. Karthiga Punniyamoorthy (District Rank 84)
  2. Kesiga Ganasegaram (District Rank 98)
  3. Komathy Yogeswaran (District Rank 105)
  4. Gamsanaa Theivendrem (District Rank 106)
  5. Nathiya Rajeswaran (District Rank 116)
  6. Lakshika Kulasingam(District Rank 122)
  7. Kirusha Thiyaharasha (District Rank 145)
  8. Abarna Krishnathasan (District Rank 152)
  9. Thanushya Sandradeva (District Rank 160)

Arts Stream

3A

  1. Nirojini Kanakasuntharam (District Rank 07)
  2. Elilarasi Ledchumikanthan (District Rank 40)

2A,B

  1. Sansika Selvaraththinam (District Rank 149)

2A,C

  1. Gowsiya Rajeswaran (District Rank 101)

http://www.vembadi.sch.lk/web/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.