Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுதிரும்பினார் சம்பந்தன்! யாருக்கு ஆதரவு? - கூடுகின்றது கூட்டமைப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடுதிரும்பினார் சம்பந்தன்! யாருக்கு ஆதரவு? - கூடுகின்றது கூட்டமைப்பு:

[sunday 2014-12-28 13:00]

sambanthan-tna-350-seithy5.jpg

எதிர்வரும் 08ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலான இறுதி முடிவை அறிவிக்கும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை கூடிப்பேசவுள்ளது. இக்கூட்டம் கொழும்பில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் மத்திய குழுவினர் தெரிவிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதேவேளை யாரை ஆதரிப்பது என்ற முடிவினை மேற்கொண்ட பின்னர் தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்குமுகமாக கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாட்டை கூட்டமைப்பு நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=123509&category=TamilNews&language=tamil

  • Replies 54
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிறர் எடுத்த முடிவை அறிவிக்க வருகின்றார்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னாது சம்மந்தர் நாடு திரும்பிட்டாரா? உலக மகா அதிசயம்......உடனடியாக ஐக்கியநாடுகள் கூட்டப்பட வேண்டும்....பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட வேண்டும்.....சம்மந்தரின் அடுத்த நகர்வு....என்னவாக இருக்கும் என்று ஆராய வேண்டும்......வீட்டுக்கு போய் இழுத்து போர்த்திட்டு தூங்கிடுவாரா.....இல்லை மீண்டும் இந்தியாக்கு போக டிக்கெட் யாரு கொடுப்பாங்க என்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பாரா?

 

மற்றவனை விமர்சிக்க முன் உன்னை நினை ,நீ சார்ந்த சமுகத்திற்கு என்ன செய்தாய்

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது உங்கள் அவதாரில் என்ன புடுங்கினீர்கள் என்று போட்டால்ச்சரி

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் அரசியல்வாதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

 

சம்பந்தன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளாராம். அப்படின்னா அவர் நிரந்தரமா இந்தியப் பிரஜை ஆகிட்டாரா..?! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளாராம். அப்படின்னா அவர் நிரந்தரமா இந்தியப் பிரஜை ஆகிட்டாரா..?! :lol::icon_idea:

 

சம்பந்தன், ஊரிலை... வெட்டிப் புடுங்கிற நேரத்தை விட இந்தியாவில் வெட்டிப் புடுங்கிற நேரம் தான்... அதிகம்.

அங்கை இருந்து... என்ன இழவைச் செய்யிறாரோ.... ஆருக்குத் தெரியும்.

5´ம் திகதி, ஆருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல வந்திருப்பார்.

பிறகு... வேதாளம், முருங்கை மரம் ஏறின கதைதான். :D  :lol:

மற்றவனை விமர்சிக்க முன் உன்னை நினை ,நீ சார்ந்த சமுகத்திற்கு என்ன செய்தாய்

விமர்சனத்திற்கு அப்பால் எந்த தனிநபரோ கட்சியோ இல்லை ,கூட்டமைப்பு எமது மக்களின் பிரதிநிதிகள் என்று எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும் ஆனால் அவர்கள் பிழை விடும்போது சொல்லும் உரிமை எமக்கு இருக்கு (முன்னர் புலி விசுவாசிகளின் நிலையை நீங்களும் எடுக்க நினைப்பது தவறு )

தனக்கு தனக்கு என்று வரும் போது சுழகு படக்கு படக்கு என்று அடிக்குமாம் என்பது போலிருக்கு உங்கள் பதிவு .

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல், பொதுவாழ்வு, பொதுத் தொண்டு என்று மக்கள் நலன் சார்ந்து செயற்படுதில் ஈடுபடுபவர்கள் எப்போதும் விமர்சனங்களுக்குப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். விமர்சனத்திற்கு அம்மக்கள் கூட்டத்தில் ஒருவராக இருப்பதே போதுமான தகுதி. இது விளங்காதவர்கள் அரசியலில் அல்லது சமூகத் தொண்டில் ஈடுபடும்போது சர்வாதிகாரத்தைக் கையில் எடுக்கின்றார்கள். தாங்கள் நினைப்பதுதான் சரியென்று மமதைகொள்கின்றார்கள். அதற்காக நிறையச் சதித் திட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். அதனை இராஜதந்திரம் என்று மக்களுக்கு விற்க முயல்கின்றார்கள்.

மக்களைத் தேர்தலில் சந்திக்க முடியாத சுமந்திரன் எப்படி கூட்டமைப்பின் முழு அதிகாரமும் தன் கையில் உள்ளதாக மைத்திரி குழுவினருக்கு ஆதரவளித்துவிட்டு அதனை ஏற்றுக்கொள்ள வைக்க கூட்டமைப்பில் உள்ள கட்சியின் தலைவர்களையே மைத்திரி குழுவினர் முன் அழைத்துச் சென்றார் என்று யாழில் விபரமான செய்தி உள்ளது. அரசியலில் ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை வேண்டும். குறைந்த பட்சம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடகு வைக்காத நேர்மை வேண்டும். இவை எதுவும் இல்லாதவர்கள் தமிழர்கள் மீது சவாரி விட்டுக் கொண்டு தமிழர்களை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்வதைப் பார்த்தும் வாய்மூடி மெளனிகளாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனம்.

வலைப்போக்கன்

 

கருத்துக்கள உறவுகள்

PipPipPip

9,360 posts

Gender:Male

Location:முடிவிலி வளையம்

Interests:போஜனம், சயனம்

Posted 19 December 2014 - 03:10 PM

Gari, on 19 Dec 2014 - 12:46 AM, said:

கோமாளிகளின் தொல்லை சகிக்கமுடியவில்லை .

 

பல பந்திகளில் ஏன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்று சொல்லப்பட்டதை அக்கட்சியின் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்வு மூலம் ஒற்றை வரியில் நிராகரிக்க அரசியலில் ஆர்வம் உள்ள உங்களால் முடிகின்றது. ஆனால் கோமாளித்தனத்திற்குக் காரணத்தைச் சொல்லியிருக்கலாம்.

 

முன்னர் மகிந்தவை ஜனாதிபதியாக்க தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்பது இராஜதந்திரமாகத் தெரிந்திருக்கும். ஆனால் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று இப்போது புரிந்திருக்கவேண்டும்.

அதே நேரத்தில் இந்தியா போய் வந்தும் தேர்தல் தொடர்பாக இன்னும் ஒரு முடிவை எடுக்கத் திராணியற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் மும்மூர்த்திகளான கனவான்களும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க முழுத் தகுதியும் உள்ளவர்கள் என்று நினைப்பதும் முரண்நகையான விடயம்!

இக் கருத்து பதிவிட்டது 19ம் திகதி ,அனால் சம்பந்தன் ஐயா நாடு திரும்பியது நேற்று ,இதிலிருந்து தெரிகின்றது கருத்து எழுதுகிறவர்களின் உண்மைத்தன்மை .

அறிக்கை அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் வெளிவரும் .

இன்றைக்கு விமர்சிக்கும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் நீங்கள் எல்லோரும் புலிகள் இருந்தபோது எங்கை போயிருந்தீர்கள் .

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

அதே கேள்வி தான் நாங்களும் கேக்கிறோம்.புலிகள் இருந்தபோது நீங்க எங்க ஐயா இருந்தியல்

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இங்கே நாங்கள் மட்டும்தான் தமிழ்க் கூட்டமைப்பு ஏதோ கிங் மேக்கர் ரேஞ்சுக்குக் கதைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த பில்டப் எல்லாம் சிங்களவனுக்குத் தெரியுமா?? அவன் எங்களை ஒரு பொருட்டாகத்தன்னும் மாதிக்கிறானா?? அல்லது தமிழகத்து வாக்குகளளை கிங் மேக்கர் ரேஞ்சுக்கு நம்பியிருந்து இறுதியில் அவர்களின் வாக்குகளைக் கணக்கில்க் கூட எடுக்கத் தேவையில்லாத அளவிற்கு மோடியின் அரசு வெற்றிபெற்றது, அது நடந்தாலும் நடக்கலாம் கூட்டமைப்பிற்கு !


அதே கேள்வி தான் நாங்களும் கேக்கிறோம்.புலிகள் இருந்தபோது நீங்க எங்க ஐயா இருந்தியல்

 

புலிகளிருந்த போது ஒன்றில் அனுதாபியாக இருந்திருப்பார், அல்லது அண்ணை எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்கிற நினைப்பில் இருந்திருப்பார்.

 

அதெல்லாம் பழைய கதை, இப்போது கதை கூட்டமைப்பும் அதன் ஒப்பற்ற தலைவர் சம்பந்தர் பற்றி மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, இங்கே நாங்கள் மட்டும்தான் தமிழ்க் கூட்டமைப்பு ஏதோ கிங் மேக்கர் ரேஞ்சுக்குக் கதைத்துக்கொண்டிருக்கிறோம். இந்த பில்டப் எல்லாம் சிங்களவனுக்குத் தெரியுமா?? அவன் எங்களை ஒரு பொருட்டாகத்தன்னும் மாதிக்கிறானா?? அல்லது தமிழகத்து வாக்குகளளை கிங் மேக்கர் ரேஞ்சுக்கு நம்பியிருந்து இறுதியில் அவர்களின் வாக்குகளைக் கணக்கில்க் கூட எடுக்கத் தேவையில்லாத அளவிற்கு மோடியின் அரசு வெற்றிபெற்றது, அது நடந்தாலும் நடக்கலாம் கூட்டமைப்பிற்கு !

புலிகளிருந்த போது ஒன்றில் அனுதாபியாக இருந்திருப்பார், அல்லது அண்ணை எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்கிற நினைப்பில் இருந்திருப்பார்.

அதெல்லாம் பழைய கதை, இப்போது கதை கூட்டமைப்பும் அதன் ஒப்பற்ற தலைவர் சம்பந்தர் பற்றி மட்டும்தான்.

2009 தேர்தலில இந்தியாவில காங்கிரசு ஆட்சி மாறும் அப்ப முள்ளிவாய்க்கால் தடுத்து நிறுத்தப்படும் எனப் பகற்கனவு கண்டு நம்பி ஏமாந்ததும் பழைய கதைதானே! ^_^
  • கருத்துக்கள உறவுகள்

வாஸ்த்தவம்தான். 2009 இல் ஒருவேளை மோடி வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை இப்போது பார்க்கிறோமே. ஆக எமக்கு விழுந்த அடி கட்டாயம் விழுந்துதான் இருக்கும், எவர் வந்திருந்தாலென்ன . 2009 இற்கு முன்னர் எல்லாமே ஒரு கனவுலக சஞ்சரிப்புத்தான் போங்கள் ! :(

  • கருத்துக்கள உறவுகள்

1899720447sam.jpg

ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்து கூட்டமைப்பு பேச்சு: சம்பந்தன் முடிவை அறிவிப்பார்!

December 29, 2014  10:28 am

lg-share-en.gif
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்கூட்டம் நேற்று (28) இரவு கொழும்பு மாதிவெலயில் நடைபெற்றது. 

இந்தியாவில் சிகிச்சைப் பெற்றுவந்த கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியுள்ள நிலையில் அவரது தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது இரு வேட்பாளர்கள் தொடர்பிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்குப் பாதகமான விடயங்கள் தொடர்பாக இதில் பங்கேற்றிருந்தவர்கள் எடுத்துக் கூறினார்கள். 

அத்துடன் ஆட்சி மாற்றத்தின் அவசியம் குறித்தும், எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் சம்பந்தமாக எதுவுமே சொல்லப்படாத குறைபாடுகள் பற்றியும், தமிழ் மக்களது பிரச்சினைகள் சம்பந்தமாகவும் நீண்டநேரமாக கலந்துரையாடப்பட்டது. 

பின்பு தமிழ் தேசியக் கூட்;டமைப்பின் முடிவினை அதன் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் ஓரிரு தினங்களுக்குள் பத்திரிகை மகாநாடு ஒன்றில் வைத்து அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ராகவன், கருணாகரம், இரா.துரைரெட்ணம், ஹென்றி மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களுக்கு தலைமை தாங்க சுமத்திரன் யார். அவர் தமிழ்மக்களின் உரிமைக்காக செய்த போராட்டங்கள் யாவை?அவரை அரசியலுக்குக் கொண்டு வந்த சம்பந்தரின் இராஜதந்திரம்தான் என்ன? அவர் பியசேனவை விட மோசமானவர்?உள்ளிருந்தே கெடுப்பவர்.மாவைக்கு இல்லாத என்ன தகுதி சுமத்திரனுக்கு இருக்கிறது.தனியே ஆங்கில அறிவு இருந்தால் அரசியல் செய்து விட முடியுமா?முதலில் இந்த சுமந்திரன் கூட்டமைப்பிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர்.மக்களுக்கு தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்று நன்றாகத் தெரியும். அவர்கள் செய்ய வேண்டியதைச் சரியாகச் செய்வார்கள். சுமத்திரனோ,சம்பந்தரோ ஒன்றும் சொல்லத்தேவையில்லை.அவர்கள் இந்தியா சொல்வதைச் செய்பவர்கள்.தமிழ்மக்கள் தாங்கள் நினைப்பதைச் செய்பவர்கள்.சுமந்திரன் வீரம்பினால் கூட்டமைப்பை விட்டு விலகி எதிரணிக் கூட்டணியில் இணைந்து கொள்ளட்டும்.த அதனால் தமிழ் மக்களுக்கு நன்மையே ஒழிய தீமை எதுவும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவனை விமர்சிக்க முன் உன்னை நினை ,நீ சார்ந்த சமுகத்திற்கு என்ன செய்தாய்

 

உங்கள்  கேள்வி  சரியானதே...

 

குற்றமற்றவர்கள் முதல்கல்லை எறியுங்கள் என்பது தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்ப்பட்டது

நான் என்றிருக்காமல்

நமது நாடு என்று சிந்தித்து ஒவ்வொருவரும் உழையுங்கள் என்பதும் தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்ப்பட்டது தான்..

 

இதன்படி

தமிழீழத்தை கைவிட்டால் என்னையும் சுடலாம் என்றார் பிரபாகரன்

இதன் மூலம் அவர் சொன்னது

அந்தளவு பொறுப்பு என்னுடையது என்பதை  காட்டத்தான்...

இதையே சம்பந்தரிடமும் எதிர்பார்க்கிறார்கள் போலும்...

நல்லதொரு சந்தர்ப்பம் அவருக்கு...

பார்க்கலாம்

சம்பந்தன், ஊரிலை... வெட்டிப் புடுங்கிற நேரத்தை விட இந்தியாவில் வெட்டிப் புடுங்கிற நேரம் தான்... அதிகம்.

அங்கை இருந்து... என்ன இழவைச் செய்யிறாரோ.... ஆருக்குத் தெரியும்.

5´ம் திகதி, ஆருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல வந்திருப்பார்.

பிறகு... வேதாளம், முருங்கை மரம் ஏறின கதைதான். :D  :lol:

 

அவருக்கு சுகமில்லை அதனால் இந்தியாவில் இருந்திருக்கிறார். 

 

சம்பந்தருக்கு பிறகு வடக்கையும் கிழக்கையும் இணைத்து வைத்திருக்கக்கூடிய ஒரு அரசியல் தலைவரை நீங்கள் கண்டுகொண்டால் எங்களுக்கு தெரியப்படுத்தவும். 

 

உங்களுக்கு மிஞ்சுவது சிவாஜிலிங்கமும் டக்கிலசும்தான் அவர்களை வைச்சு தமிழ் ஈழத்தை வென்றெடுங்கோ.

 

இல்லாவிட்டால் நல்ல தலைவர் வேண்டும் என்று ஆடியம்மாவாசை விரதம் இருங்கோ.

 

 

யாருக்கு ஆதரவென்று முடிவெடுக்காமல் இல்லை அதை அறிவிக்காமல் இருப்பதே பொருத்தமானது. 

அதே கேள்வி தான் நாங்களும் கேக்கிறோம்.புலிகள் இருந்தபோது நீங்க எங்க ஐயா இருந்தியல்

நாங்கள் எப்பவும் மக்களுடன் இருந்து மக்கள் எதை எதிர்பாக்கின்றார்களோ அதை மக்களுக்கு செய்கின்றோம் ,இங்கு உள்ள சிலரைப்போல புலிமேல் சவாரி செய்பவனில்லை .உங்கள் ஒவ்வொருவருக்கும் மக்கள் நலனிலும் ,தாயக மண்ணிலும் அக்கறை இருந்தால் ஏன் மற்றவனை எதிர் பார்க்கின்றாய் நீ முன்மாதிரியாக செய்யவேண்டியதுதானெ .

எல்லோருக்கும் ஒரு கொசுறுத்தகவல் ,சிரான் அமைப்புக்கு திருகோணமலைக்கு ஒருவர் தேவையென புலிகளின் தளபதிகள் கேட்டபொழுது சிபார்சு செய்தது அடியேன்தான் ,உங்களுக்கு தொடர்பிருந்தால்?,இதனுடன் தொடர்புபட்டவர் நோர்வேயில் உள்ளார் .

இங்கு எல்லோரும் வாந்தி எடுத்தார்கள் ,மைத்திரி கூட்டமைப்பை ஆட்டத்தில் சேர்க்கவில்லை என்று ,அனால் இப்ப மைத்திரியே பகிரங்க அழைப்பு விட்டிருக்கின்றார் தலை வரட்டும் என்று பாத்திருந்தாரோ :)

 

 

 

நியானி: ஒருமையில் விளிப்பதைத் தவிர்க்கவும்.

Edited by நியானி

உங்கள்  கேள்வி  சரியானதே...

 

குற்றமற்றவர்கள் முதல்கல்லை எறியுங்கள் என்பது தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்ப்பட்டது

நான் என்றிருக்காமல்

நமது நாடு என்று சிந்தித்து ஒவ்வொருவரும் உழையுங்கள் என்பதும் தத்துவமாக ஏற்றுக்கொள்ளப்ப்பட்டது தான்..

 

இதன்படி

தமிழீழத்தை கைவிட்டால் என்னையும் சுடலாம் என்றார் பிரபாகரன்

இதன் மூலம் அவர் சொன்னது

அந்தளவு பொறுப்பு என்னுடையது என்பதை  காட்டத்தான்...

இதையே சம்பந்தரிடமும் எதிர்பார்க்கிறார்கள் போலும்...

நல்லதொரு சந்தர்ப்பம் அவருக்கு...

பார்க்கலாம்

சம்பந்தர் ஐயா இந்தியாவால் வந்தவுடன் சொன்னவிடயம் கட்சி என்றிருந்தால் மக்களை சரியாக வழிநடத்தவேண்டும் ,தான் எல்லோருடனும் கலந்து பேசி முடிவை அறிவிப்பேன் மைத்திரிக்கு ஆதரவாத்தான் அறிக்கை வரும் .

அதாவது உங்கள் அவதாரில் என்ன புடுங்கினீர்கள் என்று போட்டால்ச்சரி

இன்னொன்றையும் சேர்க்கலாமே என்ன மசிர் புடுங்கினீர்கள் என்று-பொன்மொழி நந்தன் அடிகள்

குறிப்பு மசிர் கேட்டவார்த்தையில்லை என்று உங்களுக்குதமிழ் ஈழம் எடுக்க உழைக்கும் சீமானின் பேச்சிலிருந்து

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப உங்களுக்கும்

சம்மந்தர் கும்பலுக்கும் தமிழீழம் வேண்டாமா?

தலைவர் மாவையார் யுக்க சம்மந்தன் யார் முடிவெடுக்க? ?

எந்த தூதரகத்தில் தண்ணி

பாட்டி கொடுக்கிறாங்க எண்டு காத்திருந்து முதலால அங்க போய் கிளாச கையில வைச்சுக்கொண்டு நிக்கும் சம்மந்தருக்கு தமிழ் மக்களின் சார்பாக ஒழுங்கா முடிவெடுக்க முடியுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் இப்போது பயணக்களைப்பால் சில நாட்களுக்கு ஓய்வெடுத்துவிட்டுத் தான் தனது முடிவை அறிவிப்பாராம் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.