Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தி, சிவாகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்

Featured Replies

itk.jpg

 

தீர்மானத்துக்கு முரணான கருத்து வெளியிட்டமை மற்றும் தீர்மானத்துக்கு முரணான முறையில் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், தமிழரசுக்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவாகரன் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், சனிக்கிழமை (10) தெரிவித்தார்.

 

இது தொடர்பாக தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இடைநீக்கியுள்ளதாக அறிவிக்கவுள்ளோம்.

 

அடுத்த கட்டமாக இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் மிக விரைவில் நடைபெறவுள்ளது. விசாரணையின் பின்னர்  குறித்த உறுப்பினர்களின் பதவி மற்றும் உறுப்புரிமை நீக்குவது தொடர்பாக மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.  

 

http://www.tamilmirror.lk/137406#sthash.0uJxvauo.dpuf

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மாவையார் தன்ர வீரத்தை இந்த இளைய மக்களுக்காக உண்மையைப் பேசும் உறுப்பினர்கள் மீது காட்டுறார்.

 

இதே நடவடிக்கையை தேசிய தலைவரை சர்வாதிகாரி என்று இந்திய ஊடகங்களுக்கு சொன்ன.. சம்பந்தன் மீது எடுப்பாரா..??! மேலும் இவர் அருகில் இருக்கவே விடுதலைப்புலிகள் அமைப்பை ஈவிரக்கமற்ற கடும்போக்கு இராணுவ அமைப்பு என்று விமர்சித்ததற்கு எதிராகவும் சம்பந்தன் மீது நடவடிக்கை எடுப்பாரா..??!

 

இது மாவையின் கீழ்த்தரமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஒன்றாகவே தென்படுகிறது.

 

இது தொடர்பில் மாவை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கும் அவர் தகுந்த விளக்கமளிக்க வேண்டும். இவர்கள் மட்டுமன்றி கூட்டமைப்பைச் சேர்ந்த வேறு பலரும் தேர்தலை சுயவிருப்புக்கு அமைய புறக்கணிக்கும் அறிவிப்பை விடுத்திருந்தார்கள். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை இன்றி.. அனந்தி மற்றும் சிவாகரன் போன்ற இளையவர்கள் மீது குறிப்பாக பழிவாங்கல் செய்வது ஏன்..???!

 

மாவை இவற்றிற்கு விளக்கம் தரல்லைன்னா.. மாவையை தூக்கி கூட்டமைப்புக்கு வெளியில் போடும் நடவடிக்கையை புலம்பெயர் சமூகம் மேற்கொள்ள வேண்டும். ஒற்றுமையோடு. இவர்கள் அதிகம் வாலாட்ட வெளிக்கிட்டால் தமிழ் மக்களை அடிமையாகவே நடத்த முனைவார்கள். :icon_idea::):rolleyes:

நல்ல நடவடிக்கை. வெளிநாட்டு புலிவாலுகளின்ட கதை கேட்டு நடக்க வெளிக்கிட்டா இதுதான் நடக்கும்.
பிரபாகரனை சர்வாதிகாரி வி.பு அமைப்பு கடும்போக்கு ராணுவ அமைப்பு என்ற விமர்சனங்களில் ஏதாவது பிழை இருக்கா?
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கிடைத்த வெற்றியை தப்பா புரிஞ்சுகிட்டு தலைகால் புரியாம ஆடுறாங்க

நாம் வாழும் மேற்குலகில் சாதாரண பொதுமக்களுக்கு கருத்து சுதந்திரம் உண்டு.ஆனால் அரசியல் கட்சி  உறுப்பினர்கள் கட்சிக்  கட்டுப்பாட்டை மீறக்கூடாது. கருத்து சுதந்திரம் கட்சிக்குள்ளே  உபயோகிக்க வேண்டும்.. இதை மீறியவர்கள்  அரசியல் அஸ்தமனம்  பெற்றிருகிரார்கள். சம்பந்தன கூறிய கருத்து சரியோ பிழையோ உலகமும்  ஏன் சாதாரண புலி  உறுப்பினரும்   ஏற்றுகொண்டது. மற்றவர்கள் மீது அவர்கள்  சார்ந்த அமைப்புகள்  நடவடிக்கை  எடுக்க வேண்டும்.  எடுக்காவிட்டால் அந்த அமைப்புகளுக்கு எதிர் காலத்தில் ஆபத்து உண்டு. அதை நாம் கண்முன்னே காண்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நடவடிக்கை. வெளிநாட்டு புலிவாலுகளின்ட கதை கேட்டு நடக்க வெளிக்கிட்டா இதுதான் நடக்கும்.

பிரபாகரனை சர்வாதிகாரி வி.பு அமைப்பு கடும்போக்கு ராணுவ அமைப்பு என்ற விமர்சனங்களில் ஏதாவது பிழை இருக்கா?

பிழை இருக்கு.. இப்ப சொன்னதை மே 2009க்கு பிறகு சொல்லியிருந்தால் ஒரு நம்பகத்தன்மை இருந்திருக்கும்.. இத்தனை வருசம் கழிச்சு சொல்லுவதால், இந்திய வாலுகளின் சொல்கேட்டு ஆடுகிறார் என்பதுதான் இதுக்கு அர்த்தம். :lol:

காலையில் வாசித்த செய்திகளில் மிகவும் சந்தோசம் தந்த செய்தி. அனந்தி சசிதரனை நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்கியிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சரியான நடவடிக்கை.

நல்லவேளை மாவை தலைவராய் இருக்கப் போய் தலை தப்பியது. 2009 கு முன் யாராவது இப்படி கூட்டமைப்பில் இருந்து ஜனநாயக குரல் கொடுத்திருந்தா இப்ப அந்தியேட்டிதான் :)

ரவிகரன் போல் தன் தீர்மானத்தில் ஆதரவில்லை எனும் நிலைப்பாட்டை சொல்லிப்போட்டு விலகி நிண்டால் அது உட்கட்சி ஜனநாயகம்.

இப்படி மகிந்தவின் பெட்டிக்கு ஆசைப்படும் ஆக்களோடு சேர்ந்து கூத்தடிக்கும் போக்கு தண்டிக்கப் படவேண்டியதே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி, சிவாகரன் கட்சியில் இருந்து இடைநீக்கம்

 

 

காலையில் ஒரு பொறுப்பில்லாத  அச்சம்  தரும் செய்தி

வரலாறு 

இதையும் தாண்டிச்செல்லும்.... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

மே 2009 முதல் சம்பந்தர் இதே கருத்தைச் சொல்லி இருந்தால் ஏற்றுக்கொண்டு இருக்கலாம்.ஆனால் அப்போது தலைவருடன் கைகுலுக்கி விட்டு கூட்டமைப்பு தலைவர் பதவியையும் பெற்று விட்டு இப்போது சொல்வது ஏற்றுக்கொண்டார் கொள்ளக்கூடிய கூடயதல்ல.கூட்டமைப்பை விட்டு வெளியேறி அதன்பின் தாராளமாகச் சொல்லட்டும்.இது விடயத்தில் ஆனந்தசங்கரி,டக்ளஸ் எவ்வளவோ மேல்.

அடுத்து பல்லாயிரக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை கண்ட படி நீக்க முடியாது.வேண்டுமானால் அடுத்த தடவை அவர்களை வேட்பாளர் ஆக்காமல் விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏகோபித்து ஒரு கட்சியில் இணைந்து அந்த தலைமையை ஏற்றுக்கொண்ட பின் கட்சிக்கு வெளியில் சரியோ பிழையோ அந்த கட்சிக்கு எதிராக செயல்ப்படுவது என்பது கண்டிக்கப்பட வேண்டும் அந்த வகையில் ஒழுக்க நடவடிக்கை எடுக்க அந்த கட்சி என்ற ரீதியில் முழு உரிமை அவர்களுக்கு இருக்கு..... ஆனந்தி செய்தது சரி என்றால் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து கருணா செய்ததும் சரி என்றாகிவிடும்......

பிழைகளை பிழைகளாக ஏற்றுக்கொள்ளுகின்ற மனப்பக்குவம் வர வேண்டும்....

ஒரு கட்சியில் 10 உறுப்பினர்கள் இருந்தால் 6 பேர் ஒரு முடிவை ஆதரித்தால் அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் ....

வேற வழி இல்லை....

துயரனமான மிடிவு இருந்தாலும், கட்சி என்று இருந்தால் அது கட்சியாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் ஒரு அரசியல் அமைப்போ அல்லது மக்களால் தேர்வுசெயயபட்டு தேர்தலின் மூலம் வந்தவர்களோ இல்லை.
அரச அடக்குமுறைக்கு அடிபணியாது ஆயுதம் ஏந்தி அரசு படைகளை வெற்றி கண்டு நாட்டில் ஒரு நிழல் அரசை உருவாக்கியபோதும்.
அரச ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடர்ந்தும் போரை எடுப்பது என்பதை முதன்மையாக கொண்டவர்கள்.
தமக்கு என்று சில கட்டுபாடுகள் தனி தன்மைகள் என்பதை உலகில் வேறு யாரும் இதுவரை கடைபிடிக்காத வடிவில் ஒழுங்கமைத்து அதில் வெற்றி கண்டவர்கள்.
தமது இயக்க பணத்தை களவாடினார் என்று அவர்கள் கருணாவை வெளியேற்றியபோது.
அதை எதிர்த்து குரல் கொடுத்த பலர் இப்போ .....

மக்களால் தேர்வு ஆகி ...
ஜெனநாயக வழியாக வந்தவர்களை கட்சி தலைமை அதிகாரத்தை பயன்படுத்தி. தட்டிவிடுவதை ஆதரிக்கிறார்கள்.

என்ன நடக்கிறது என்பதில் இவர்களுக்கு அக்கறை இல்லை.
நாடு எக்கேடு கெட்டாலும் அதில் அவர்களுக்கு ஒரு குறையுமில்லை.
யார் என்ன செய்கிறார்கள் என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும்போது. இவர்கள் கருத்தை யாரும் செவி சாய்த்து கேட்கவேண்டும் என்று நான் நம்பவில்லை.

ஜெனநாயக வழி பாதையில் 2009இட்கு பின்பு புலிகள் வென்றார்கள். புலிகளை இந்திய-சிங்கள காடைக்ளால் தமிழரிடம் இருந்து அப்புற படுத்தமுடியவில்லை. அது முடியவும் முடியாது.
ஆனால் இப்படியான துப்பு கெட்ட செயல்களை பணத்தின் உதவியோடு செய்யத்தான் போகிறார்கள். தமிழகத்திலும் கட்சிகள் பிளவு பட்டு போகும்.
தமிழர்களுக்கு என்று ஒரு உறுதியான கட்சி இருக்க அவர்கள் விட போவதில்லை.
கூலிக்கு விலைபோகும் துப்பு கெட்டவர்கள்தான் இனி தமிழர்களின் தலைவர்களாக இருக்க முடியும்.
நாமும் வேண்டுமானால் சம்மந்தரையோ ... மாவை ஐயாவையோ திட்டி தீர்க்கலாம். ஆனால் அவர்களாலும் எதையும் இனி செய்யமுடியாது எனபதே தற்போதைய நிலைமை.
அவர்கள் தமக்கு இருக்கும் புற நிலை அழுத்தங்களை உணர்ந்து தமது வயது போன்றவற்றையும் கருத்தில் கொண்டு.
தமிழர் மீது உண்மையான அக்கறை இருப்பின் ஒரு இளைய தலைமுறையிடம் கூட்டமைப்பை ஒப்படைக்க வேண்டும்.
அதை இன்றோ நாளையோ செய்ய முடியாது..... இளைய தலைமுறை புலிகளை வெளியாக ஆதரித்ததாகவும் இருக்க முடியாது.
தமிழர்களுடைய பெருத்த தோல்வி என்பது இனிமேல்தான் நடக்க போகிறது.

கோண்டாவில்லில்...
தமிழ் இரண்டாம் இடத்தில் போய் இருக்கிறது.
அதை கண்டுகொள்ளாது...... வந்த ரயிலுக்கு பா பாடும் கூட்டம்தான் யாழில் மேலே இருக்கும் கருத்தை ஆதரித்து எழுத போவது.
இனத்தை இல்லது ஒழிக்க ஆயுத அச்சுறுத்தல் மூலம்தான் முடியும் அல்லது அப்படி செய்தால்தான் அது இன அடக்குமுறை என்ற பாணியில் ஒரு போதை மயக்கத்தில் இருப்பவர்களுடன்.
ஒரு விவாதத்தை முன்னெடுக்க முடியாது எமக்கும் அவ்வாறான ஒரு போதை மயக்கம் வரும் வரை.

அனந்தி தனது நிலைபாட்டை ...
கட்சிதலைவர்களுடந்தான் முதலில் பேசி இருக்க வேண்டும். எழுந்த மாத்திரத்தில் செய்தியாளரை கூப்பிட்டு கட்சிக்கு எதிரான ஒரு போக்கை அறிவிப்பது கட்சிக்கு அவமானம் ஆகும்.

அனந்தியின் முடிவு
கட்சி பற்றியது....

இவர்களின் (மேல் உள்ள) முடிவு
ஜெனாயகம் பற்றியது...

இதை புரியும் நிலையில் இதை ஆதரிப்பவர்கள் இல்லை.
அதிவேக ரயில் வந்தால் ....
நாட்டில் இன பிரச்சனயே இல்லை என்று அவர்கள் சொன்னால் அதில் ஆச்சரிய படவும் ஏதும் இல்லை.
அது உண்மையும் கூட அப்ப தமிழ் பேசினால் அவதாரம் என்று ஒரு நிலை கூட இருக்கலாம் அதலால் யாரும் தமிழ் பேசாது இருந்தால்..???
ஒரு இனம்தானே இருக்கும் எப்படி இன பிரச்சனை இருக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒழுக்காற்று நடவடிக்கை நிச்சயம் அவசியம். ஆனால், அது கட்சியில் இருந்து இடைநீக்கி வைப்பதாகத்தான் அமையவேண்டும் என்று இல்லை.

 

அனந்தி சசிதரன் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர் இல்லை. அவரை பலர் தமது தேவைகளிற்கு கிள்ளுக்கீரையாக பயன்படுத்த முயற்சித்து இருக்கலாம். எனவே, அனந்தி சசிதரனிற்கு அவரிற்கு தொடர்ந்தும் விருப்பம், ஈடுபாடு இருந்தால் கட்சியில் நிலைப்பதற்கு உதவுவதே முறையான நடவடிக்கை ஆகும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயற்படுவது இன்றைய இக்கட்டான, இடர் மிகுந்த புறச்சூழலில் வினைத்திறன் அற்றது.

 

அதேசமயம், அனந்தி சசிதரனிற்கு கட்சியின் தலமை, கொள்கைகள், நடவடிக்கைகளுடன் உடன்பாடு இல்லை என்றால் தானாகவே கட்சியில் இருந்து கெளரவமாக விலகி புதியதோர் கட்சியினை ஆரம்பித்து அதன்கீழ் தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்வது சிறந்தது. 

 

அடுத்த தடவை ஒரு தேர்தல் வரும்போது மக்களின் அமோக ஆதரவு எங்கு செல்கின்றது என்பதை பார்க்கத்தானே போகின்றோம்.

Edited by கிழவி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதும் சிலருக்கு.. சர்வாதிகாரம்.. ஈவிரக்கமற்ற இயக்கம் என்பதன் பின்னால் உள்ள விளக்கம் தெரிவதில்லை.
 
சம்பந்தன்.. கூட ஒரு சர்வாதிகாரி தான். எத்தினை தவறுகள். எத்தனை தோல்விகள். எதற்கும் அவர் பொறுப்பேற்று பதவிகளை இழந்ததும் இல்லை துறந்ததும் இல்லை. எப்போதும்.. தானே ஒன்றில்.. கூட்டமைப்புக்கு தலைவர்.. அல்லது தமிழரசுக் கட்சிக்கு தலைவர். இவர் எப்போ கடைசியாக உட்கட்சி தேர்தலை நடத்தி தலைவர் பதவிக்கு வந்தார்..???! இத்தனைக்கு வெளியில் இனங்காட்டிக் கொள்வது.. மிதவாத ஜனநாயகவாதிகள்.
 
விடுதலைப்புலிகள் அமைப்பு ஒரு போராளி இயக்கம். இராணுவ.. அரசியல் வழிமுறைகளில் மக்களின் சுதந்திரத்துக்காக போராடிய இயக்கம். அது முழுமையான ஜனநாயகக் கட்சி அல்ல. அதன் தலைமைத்துவப் பண்புகள் வேறானவை.
 
மேற்குநாடுகள்.. காந்தியையும் தான் தீவிரவாதி.. சர்வாதிகாரி என்று சிறையில் போட்டார்கள். மண்டேலாவையும் தான் போட்டார்கள். அதற்காக மக்கள் அவர்களை எல்லாம் சர்வாதிகாரின்னு சொன்னது.. நினைத்ததில்லை.
 
உண்மையான விடுதலைப் புலி போராளி.. அல்லது தமிழ் மக்கள் தேசிய தலைவரை சர்வாதிகாரின்னு நினைக்க.. எண்ண எந்த காரணமும் இல்லை. அவர்கள் கொண்ட கொள்கைக்கு.. மக்கள் விரோதமின்றி செயற்பட்டவர். அதுதான் ஒரு போராளி அமைப்பின் தலைமைக்கு அவசியம்.
 
ஆனால் சம்பந்தன்.. ஜனநாயக முலாம் பூசிக்கொண்டு திரியும் முழு சர்வாதிகாரி. எந்த தவறுக்கும் பொறுப்பேற்பதில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொண்டு சிங்கள அரசின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த தவறிய எல்லா சந்தர்ப்பங்களிலும் சம்பந்தன் அவற்றிற்கு பொறுப்பேற்று பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால்.. இந்த சர்வாதிகாரி எந்த ஈவுஇரக்கமும் இன்றி.. அதில் குந்தி இருந்து கொண்டு.. மறப்போம் மன்னிப்போம் என்று வேதாந்தம் பேசுகிறார். தன் சொந்தக் குடும்பத்தை பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு.
 
இங்கு சிலர் மேற்கு நாடுகளில் வாழ்ந்தாலும் அதன் அரசியலை புரிந்து கொள்ளவில்லை என்று தெரிகிறது. பிரிட்டனில் ஆளும் கட்சியில்.. கூட.. பக் பெஞ்சில் உள்ளவர்கள் ரெபலியனாக (backbench rebellion) கருத்துச் சொல்கிறார்கள். கட்சித் தலைமை அவர்களை உடனே கட்சியை விட்டு தூக்குவது கிடையாது. டொனி பிளேயர் ஆட்சியை விட்டு போக.. சொந்தக் கட்சி ரெபலியன்களாக இருந்த பிரவுனின் செயற்பாடுகள் காரணமாக இருந்தன.
 
இதில் வியப்பு என்ன வென்றால்.. அரசியல் ஜனநாயக வேதாந்தம் பேசும் நிழலி கூட.. அனந்தியின் ரெபலியன் நிலைப்பாட்டை ஏற்க முடியாமல் தவிப்பது தான்.
 
அனந்தி தனக்காக.. தன் குடும்பத்துக்காக ரெபலியனாக இல்லை. தனக்கு வாக்குப் போட்ட மக்களின் குரலை தான் அவர் பிரதிபலித்துள்ளார். மாவை அதற்கு தீர்வு தேடாமல்.. அனந்தியை கட்சியை விட்டு விரட்டுவது ஜனநாயக விரோதம் மட்டுமல்ல.. மக்கள் விரோத செயற்பாடும் ஆகும். இது மிகவும் கண்டிக்கத்தக்க சர்வாதிகாரப் போக்கு ஆகும். மாவை ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவர். ஒரு போராளி அமைப்பின் தலைவர் அல்ல. இந்த வேறுபாட்டை முதலில் விளங்கிக் கொண்டு செயற்படுவதோடு..
 
தேசிய தலைவர்.. புலிகள் அமைப்பு..விமர்சனம்.. மற்றும் அனந்தி சிவாகரன் மீதான நடவடிக்கைகள் தொடர்பில் மாவையும்.. சம்பந்தனும்.. மக்களுக்கு நேரடி விளக்கம் அல்லது மக்களோடு நேரடி விவாதத்திற்கு வர வேண்டும். பதுங்கி இருந்து கொண்டு இதனைச் செய்தால் அது மிகக் கொடிய சர்வாதிகார ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே நோக்க வேண்டி இருக்கும். இது தமிழ் மக்கள் விரும்பும் ஜனநாயகத்துக்கு உதவாது. :icon_idea:

HS2: Cameron faces backbench rebellion.
David Cameron is facing a backbench rebellion over the HS2 high-speed rail link when MPs vote on Monday.
 
At least 30 Tory MPs will vote against or abstain at the bill's second reading, according to research by BBC Radio 4's The World This Weekend.
 
But it will not be enough to block the legislation, as Labour say they will back the government.
 
http://www.bbc.co.uk/news/uk-politics-27180654
 

 

 

நியானி: ஒரு சொல் தணிக்கை

Edited by நியானி

இது ஒரு சின்ன வெருட்டு என்று தான் நம்புகின்றேன் .

அனந்திக்கு மட்டும் இல்லை எவர் தான்தோன்றித்தனமாக நடந்தாலும் இதுதான் நடக்கும் என்ற செய்தியை சொல்லியிருக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தனது கணவரை பிடித்து ஒளித்து வைத்திருந்த மகிந்த / மைத்திரி கும்பலுக்கு வாக்குப்போட மாட்டேன் என்று தைரியமாகச் சொன்ன அனந்தியைப் பாராட்ட வேண்டும். அதைச் சொல்லும் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் மறுப்பார்களாயின், இவர்கள் தமிழர்களுக்கு என்ன தீர்வை வழங்கிவிடப்போகிறார்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. நிரந்தரமாக நீக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தனது கணவரை பிடித்து ஒளித்து வைத்திருந்த மகிந்த / மைத்திரி கும்பலுக்கு வாக்குப்போட மாட்டேன் என்று தைரியமாகச் சொன்ன அனந்தியைப் பாராட்ட வேண்டும். அதைச் சொல்லும் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் மறுப்பார்களாயின், இவர்கள் தமிழர்களுக்கு என்ன தீர்வை வழங்கிவிடப்போகிறார்கள்?!

அனந்தி அதை சொல்லிவிட்டு கட்சியை விட்டு தானாக விலகி இருந்தால் அதற்கு மதிப்பு இருந்து இருக்கும்.

  1. மகிந்த / மைத்திரிக்கு வாக்களித்த கட்சியில் இருக்கவும் வேண்டும்.
  2. அந்த கட்சி மூலம் கிடைத்த பதவியும் வேண்டும்.
  3. ஆனால் கட்சிக்கு கட்டுப்படவும் முடியாது என்றால்?

இதுவே விடுதலை புலிகளாக இருந்திருந்தால் மாத்தையாவின் கதி தான் இவவுக்கும்.

மாவையின் தலைமையில் இந்த கட்டுப்பாட்டு மீறல் நடந்தது பற்றி அனந்தி உண்மையில் ஆறுதல் அடைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆனந்தி சசிதரனின் கருத்துக்களோ, மற்றும் அவர் அரசியல் செயல் பாடுகள் குறித்து அதிகம் நான் வாசிக்கவில்லை என்ற படியினால் இந்த செய்தியின் பின்னணி சரியாக எனக்கு புரியவில்லை.
இதில் கருத்து எழுதும் உங்களில் யாருக்கும் இது குறித்து அறிந்திருக்கும் விடயங்களை  தயவு செய்து விரிவாக விளக்குவீர்களா?
 
ஆனந்தி அவர்கள் செய்த அல்லது செய்து கொண்டிருக்கும் அரசியல் தவறுகள் என்ன?
இந்த தவறுகள் எவ்வாறு தமிழர் அரசியல் தலைவிதியை / எங்களை பாதிக்கும்?
இந்த தவறுகள் திருத்தப்பட கூடியனவா ? மன்னிக்கப்படகூடியனவா? 
இவரை வாக்களித்து தெரிவு செய்த சாமானிய  மக்களின் பார்வை இவர் மீது எப்படி உள்ளது?
  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி அதை சொல்லிவிட்டு கட்சியை விட்டு தானாக விலகி இருந்தால் அதற்கு மதிப்பு இருந்து இருக்கும்.

  • மகிந்த / மைத்திரிக்கு வாக்களித்த கட்சியில் இருக்கவும் வேண்டும்.
  • அந்த கட்சி மூலம் கிடைத்த பதவியும் வேண்டும்.
  • ஆனால் கட்சிக்கு கட்டுப்படவும் முடியாது என்றால்?
இதுவே விடுதலை புலிகளாக இருந்திருந்தால் மாத்தையாவின் கதி தான் இவவுக்கும்.

மாவையின் தலைமையில் இந்த கட்டுப்பாட்டு மீறல் நடந்தது பற்றி அனந்தி உண்மையில் ஆறுதல் அடைய வேண்டும்.

கட்சிக்காக அனந்திக்கு வாக்கு விழுந்தது / அனந்திக்கு விருப்பு வாக்குகள் விழுந்தன போன்ற முடிவற்ற வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.. அனந்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படட ஒரு உறுப்பினர்.. அவரது பேச்சுரிமையை மறுப்பது மடமை..

கூட்டமைப்பால் செய்திருக்கக்கூடிய விடயங்கள் இரண்டு.

1) அனந்தியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்கிற அறிக்கை.

2) அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்காமை.

மற்றும்படி ஆயுதப் போருக்கும், ஜனநாயக வடிவத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன.. ஆகவே விடுதலைப்புலிகள் ஒப்பீடு பிரியோசனம் இலலாதது.. அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த சமயத்திலும் ஜனநாயக சூழல் இருந்ததில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிக்காக அனந்திக்கு வாக்கு விழுந்தது / அனந்திக்கு விருப்பு வாக்குகள் விழுந்தன போன்ற முடிவற்ற வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.. அனந்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படட ஒரு உறுப்பினர்.. அவரது பேச்சுரிமையை மறுப்பது மடமை..

கூட்டமைப்பால் செய்திருக்கக்கூடிய விடயங்கள் இரண்டு.

1) அனந்தியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்கிற அறிக்கை.

2) அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்காமை.

மற்றும்படி ஆயுதப் போருக்கும், ஜனநாயக வடிவத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன.. ஆகவே விடுதலைப்புலிகள் ஒப்பீடு பிரியோசனம் இலலாதது.. அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த சமயத்திலும் ஜனநாயக சூழல் இருந்ததில்லை..

 

 

நன்றாக கவனியுங்கள்

தற்போதைய  நிலையில் 

கூட்டமைப்பு செய்யும் எல்லாவற்றையும் வரவேற்போர்

விடுதலைப்புலிகள் இவ்வாறு செய்தவை தவறு என்போராக இருப்பர்

 

அதாவது 

ஆயுதப்போராளிகளிடம் ஐனநாயகத்தை எதிர்பார்த்தவர்கள்

ஐனநாயகவாதிகளிடம் எதேச்சதிகாரத்தை ஊக்குவிக்கிறார்கள்.. :(  :(  :(

Edited by விசுகு

கட்சிக்காக அனந்திக்கு வாக்கு விழுந்தது / அனந்திக்கு விருப்பு வாக்குகள் விழுந்தன போன்ற முடிவற்ற வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.. அனந்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படட ஒரு உறுப்பினர்.. அவரது பேச்சுரிமையை மறுப்பது மடமை..

கூட்டமைப்பால் செய்திருக்கக்கூடிய விடயங்கள் இரண்டு.

1) அனந்தியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்கிற அறிக்கை.

2) அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்காமை.

மற்றும்படி ஆயுதப் போருக்கும், ஜனநாயக வடிவத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன.. ஆகவே விடுதலைப்புலிகள் ஒப்பீடு பிரியோசனம் இலலாதது.. அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த சமயத்திலும் ஜனநாயக சூழல் இருந்ததில்லை..

 

இல்லை இசை நீஙகள் கூறுவது தவறு உங்களுக்கு உலகம்  தெரியாது.   உலகம் முழுவதும் எல்லா காலங்களிலும் உள்நாட்டு போர் நடைபெற்ற இடங்களில் எல்லாம் உயர்ந்த அளவிலான  ஜனநாயகம் இருந்தது. மிக மிக அன்புடனேயே அவர்கள் எல்லோரும் யுத்தம் செய்தார்கள்.  ஈழப்போரில் மட்டும் தான் ஜனநாயகம் இருக்கவில்லை.

கட்சிக்காக அனந்திக்கு வாக்கு விழுந்தது / அனந்திக்கு விருப்பு வாக்குகள் விழுந்தன போன்ற முடிவற்ற வாதங்கள் ஒருபுறம் இருக்கட்டும்.. அனந்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படட ஒரு உறுப்பினர்.. அவரது பேச்சுரிமையை மறுப்பது மடமை..

கூட்டமைப்பால் செய்திருக்கக்கூடிய விடயங்கள் இரண்டு.

1) அனந்தியின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்கிற அறிக்கை.

2) அடுத்த தேர்தலில் வாய்ப்பு வழங்காமை.

மற்றும்படி ஆயுதப் போருக்கும், ஜனநாயக வடிவத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன.. ஆகவே விடுதலைப்புலிகள் ஒப்பீடு பிரியோசனம் இலலாதது.. அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்த சமயத்திலும் ஜனநாயக சூழல் இருந்ததில்லை..

முதல் பந்தியுடனும் கடைசி பந்தியுடனும் முற்றாக உடன்படுகின்றேன் 

கூட்டமைப்பு செய்திருக்க வேண்டிய விடயங்கள் அதில் உடன்பாடு இல்லை .

 

கட்சிக்குள் தனது தனிப்பட்ட முடிவை சொல்லவும் அவர்களுடன் முரண்படவும் அனந்திக்கு முழுஉரிமையும் இருக்கு ஆனால் கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படவேண்டியதும் அதைவிட முக்கியம் .

 

ஒரு கட்சி கூடி அதன் முடிவை அறிவிக்கும் என்று எல்லாரும் எதிர்பார்ப்பது அதைத்தான் இல்லாவிடில் தனித்தனிய உங்கள் முடிவு என்ன வென்று எல்லோரையும் கேட்டிருப்பார்கள் . 

 

கூட்டமைப்பின் முடிவு என்ன ? எப்ப அறிவிப்பார்கள் என்றுதான் நாங்கள் விசனபட்டுக்கொண்டு இருந்தோமே ஒழிய விக்கியின் முடிவு என்ன ? அனந்தியின் முடிவு என்ன ? சுரேஷின் முடிவு என்ன என்று எவரும் கேட்டுக்கொண்டு திரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுவித்தால் யார் ஒருவர், ஆடாதாரோ கண்ணா ... என்ற பாடல் தான் ஞாபகம் வருகிறது. ஒன்று விளங்குகின்றது, மக்கள், தேசியம் பற்றி அதிகம் கவலைப் படுபவர்கள் கூட்டமைப்பில் இருந்து களை எடுக்கப்படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.