Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிசேன அரசை நம்ப முடியாது.. சொல்கிறார் ருத்திரகுமாரன்

Featured Replies

லண்டன்: ராஜபக்சேவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தினர். சிறிசேன அரசால் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிசேன அரசை நம்பவும் முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

22-1421915802-rudrakumaran-1-600.jpg

வன்னி, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை தோற்கடிப்பதற்காகவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தினர். இதற்காக மைத்திரிபாலவின், ஆட்சியில் தமிழ் மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்பமுடியாது.

மைத்திரிபாலவும் வன்னியின் இறுதிப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரால் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தொடர்பாக விசாரணைகளை நடத்த முடியாது என்று ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.oneindia.com/news/international/we-cannot-trust-srisena-says-rudhrakumaran-219418.html

  • கருத்துக்கள உறவுகள்

முதலில உங்களை யார் நம்பினம் ?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில உங்களை யார் நம்பினம் ?

மீராவின் இந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்க இருந்தேன்! :o

நீங்கள் உண்மையில் தலைவரின் பிரதிநிதிகளா ? தேசியம் என்றதில் மாற்று கருத்து இல்லை ஆனால் இப்போது எது சாத்தியமோ அதனைத்தான் நாம் முதலில் செய்ய வேண்டும் . தலைவரும் இடைக்கால தீர்வுக்கு சம்மதித்தவர் ஏனெனில் அப்ப இருந்த சூழ்நிலை . இப்பவும் அதுதான் முக்கியம் . 
 
விலகி இருந்தால் திரும்பவும் புல்லுருவிகள் புகுந்து விடிவர்கள் (டக்லஸ் கருணா) . சமயோதித்த புத்தி மிக முக்கியம் . கூட்டமைப்பின் நகர்வு நல்லதே . 
  • கருத்துக்கள உறவுகள்

இதிலும் பார்க்க..... உருத்திரகுமாரன், வாயை திறக்காமலே இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதில என்ன தப்பிருக்குது..??!

காணாமல் போன  உறவுகள் தொடர்பில் புதிய அரசின் கொள்கை என்ன..???!

போர்க்குற்றவாளிகளை சர்வதேச விசாரணைக்கு கையளிக்குமா இந்த அரசு..??!

போருக்கு முந்தைய நிலைக்கு இராணுவத்தை குறைக்குமா வடக்குக் கிழக்கில்..???!

போருக்கு முந்தைய நிலைக்கு குடிப்பரம்பலை சரிசெய்யுமா.. இந்த  அரசு..???!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சொத்திழந்த மக்களுக்கு சரியான நட்ட ஈட்டை வழங்குமா இந்த அரசு..??!

புலிகளுடனான போர் முடிவுற்றதும்.. சமஷ்டி பற்றி சிந்திக்கலாம்  என்று சொன்னவர்கள்.. 13+ என்றவர்கள்.. இன்று.. 13 இல் நிற்கிறார்கள். தமிழீழத்துக்கு டெசோ மாநாடு போட்ட கருணாநிதியும்  இதையே வரவேற்கிறார். தமிழ் மக்கள் 13 அமுலாக்கமா கேட்டு போராடி மடிந்தார்கள்...??!

மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில்..இவற்றிற்கு பதில் இருக்குதா...???!

இல்லையே.

மாறாக..

போர்க்குற்றம் மனித உரிமை மீறலுக்கு   உள்ளக விசாரணை.. அதனை தானே எல்  எல்  ஆர்   சி  அதுஇதென்று மகிந்தவும் முன்னெடுத்தார்..!

காணாமல் போனோர் தொடர்பில் மகிந்தவும் மெளனமே தான் காத்தார்.

ரோட்டு.. யாழ் தேவியும் போடுவதில்... விடுவதில்  இருந்த  அவசரம்   போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலவாழ்வு நோக்கி   இருக்கல்லையே..??!

13 வதுக்கு மேல போவம்  என்றவர்கள்.. ஐக்கிய சிறீலங்காவுக்கு பாதகம்   ஏற்படாத வகைக்கு 13 ஐ அமுல் செய்வினமாம். அதாவது காணி பொலிஸ்  அதிகாரங்கள் கிடையாது. சுயாதீன ஆணைக்குழுக்களை அமைச்சிட்டு.. அதுக்குள்ளால  பிரச்சனைகளை முடியுங்கோ என்றுவார்கள்.

ஆக..

மைத்திரி அரசு.. தமிழர்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும்.. சில சலுகைகளுக்குள் அடக்கி.. சர்வதேச  அழுத்தத்தில்... இருந்து சிங்கள முன்னாள்..  இன்னாள்.. தமிழினப் படுகொலை  ஆளும் வர்க்கத்தை தப்பிக்க செய்யவே முனைகிறார்கள்.

சரத் பொன்சேக்காவை காத்த மாதிரி...   மகிந்தவும் காப்பாற்றப்படுவார். அப்போது.. இன்று மைத்திரிக்கு சாமரம் வீசும் எம்மவர்கள்.. தொலைநோக்கற்ற   தமது அரசியல் சிந்தனை.. செயல் வரட்சியை இட்டு அழுவார்கள்.  கவலைப்படுவார்கள்.

உருத்திரகுமாரின்  இந்தக் கருத்துக்கள் கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியதோடு.. சர்வதேச மனித  உரிமை அமைப்புக்களின்  ஊடாக.. சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்த  அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகிக்கவும்.. தமிழர்களுக்கு சிங்கள தேசத்தில் நிகழும்.. நிகழ்ந்த  அரசியல் பாகுபாடுகள்.. இனக்குரோத நடவடிக்கைககள்.. இனப்படுகொலை நிகழ்வுகள் தொடர்பில்.. தொடர்ந்து சர்வதேசம்  அறிவூட்டப்படுவதும் அவசியம்.

எந்த சிங்கள ஆளும் தரப்பையும் முழுமையாக நம்ப முடியாது. இதுதான்... உருத்திரகுமாரன் சொல்லும் விடயம். இதையே தான்  சிங்களவர்களோடு அகிம்சை வழியில்.. பயணித்து பல ஒப்பந்தங்களைப் போட்ட தந்தை செல்வாவும்  இறுதியில் சொல்லிச் சென்றது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் உண்மையில் தலைவரின் பிரதிநிதிகளா ? தேசியம் என்றதில் மாற்று கருத்து இல்லை ஆனால் இப்போது எது சாத்தியமோ அதனைத்தான் நாம் முதலில் செய்ய வேண்டும் . தலைவரும் இடைக்கால தீர்வுக்கு சம்மதித்தவர் ஏனெனில் அப்ப இருந்த சூழ்நிலை . இப்பவும் அதுதான் முக்கியம் . 
 
விலகி இருந்தால் திரும்பவும் புல்லுருவிகள் புகுந்து விடிவர்கள் (டக்லஸ் கருணா) . சமயோதித்த புத்தி மிக முக்கியம் . கூட்டமைப்பின் நகர்வு நல்லதே . 

தலைவர் சம்மதித்த இடைக்கால தீர்வை கொடுத்தவர்கள்.... இப்போ கூட்டமைப்பு கேட்ட உடன் கொடுக்க போகிறார்கள்.... 

இந்த இடைக்காலம்... நீண்ட காலம் எல்லாம் சிங்களத்தின் காலம் கடத்தும் செயல்... பழுத்த அரசியல் தலைமைக்கு தங்கள் தலைமைபதவிமேல் இன்னும் அக்கறை அதை விட்டிட்டு ஏன்...!

மீராவின் இந்தக் கேள்வியைத்தான் நானும் கேட்க இருந்தேன்! :o

எங்களுக்குள் பலர் தங்களை தாங்களே நம்பினது கிடையாது தானே..?  பிறகு எப்பிடி மற்றவர்களை நம்புவார்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரச்சனைகளுக்கு தீர்வு தருவங்கள் என்று சிங்களவனை நம்ப முடியாது. அப்படி சிறிசேன & கோ தருவம் என்று வெளிக் கிட்டாலும், சுத்தி உள்ளதுகள் என்ன சுண்டல் கடலை சாப்பிட்டுக் கொண்டா இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொன்னதில என்ன தப்பிருக்குது..??!

காணாமல் போன  உறவுகள் தொடர்பில் புதிய அரசின் கொள்கை என்ன..???!

போர்க்குற்றவாளிகளை சர்வதேச விசாரணைக்கு கையளிக்குமா இந்த அரசு..??!

போருக்கு முந்தைய நிலைக்கு இராணுவத்தை குறைக்குமா வடக்குக் கிழக்கில்..???!

போருக்கு முந்தைய நிலைக்கு குடிப்பரம்பலை சரிசெய்யுமா.. இந்த  அரசு..???!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சொத்திழந்த மக்களுக்கு சரியான நட்ட ஈட்டை வழங்குமா இந்த அரசு..??!

புலிகளுடனான போர் முடிவுற்றதும்.. சமஷ்டி பற்றி சிந்திக்கலாம்  என்று சொன்னவர்கள்.. 13+ என்றவர்கள்.. இன்று.. 13 இல் நிற்கிறார்கள். தமிழீழத்துக்கு டெசோ மாநாடு போட்ட கருணாநிதியும்  இதையே வரவேற்கிறார். தமிழ் மக்கள் 13 அமுலாக்கமா கேட்டு போராடி மடிந்தார்கள்...??!

மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில்..இவற்றிற்கு பதில் இருக்குதா...???!

இல்லையே.

மாறாக..

போர்க்குற்றம் மனித உரிமை மீறலுக்கு   உள்ளக விசாரணை.. அதனை தானே எல்  எல்  ஆர்   சி  அதுஇதென்று மகிந்தவும் முன்னெடுத்தார்..!

காணாமல் போனோர் தொடர்பில் மகிந்தவும் மெளனமே தான் காத்தார்.

ரோட்டு.. யாழ் தேவியும் போடுவதில்... விடுவதில்  இருந்த  அவசரம்   போரால் பாதிக்கப்பட்ட மக்களின் நலவாழ்வு நோக்கி   இருக்கல்லையே..??!

13 வதுக்கு மேல போவம்  என்றவர்கள்.. ஐக்கிய சிறீலங்காவுக்கு பாதகம்   ஏற்படாத வகைக்கு 13 ஐ அமுல் செய்வினமாம். அதாவது காணி பொலிஸ்  அதிகாரங்கள் கிடையாது. சுயாதீன ஆணைக்குழுக்களை அமைச்சிட்டு.. அதுக்குள்ளால  பிரச்சனைகளை முடியுங்கோ என்றுவார்கள்.

ஆக..

மைத்திரி அரசு.. தமிழர்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும்.. சில சலுகைகளுக்குள் அடக்கி.. சர்வதேச  அழுத்தத்தில்... இருந்து சிங்கள முன்னாள்..  இன்னாள்.. தமிழினப் படுகொலை  ஆளும் வர்க்கத்தை தப்பிக்க செய்யவே முனைகிறார்கள்.

சரத் பொன்சேக்காவை காத்த மாதிரி...   மகிந்தவும் காப்பாற்றப்படுவார். அப்போது.. இன்று மைத்திரிக்கு சாமரம் வீசும் எம்மவர்கள்.. தொலைநோக்கற்ற   தமது அரசியல் சிந்தனை.. செயல் வரட்சியை இட்டு அழுவார்கள்.  கவலைப்படுவார்கள்.

உருத்திரகுமாரின்  இந்தக் கருத்துக்கள் கவனத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டியதோடு.. சர்வதேச மனித  உரிமை அமைப்புக்களின்  ஊடாக.. சர்வதேச போர்க்குற்ற விசாரணை குறித்த  அழுத்தங்களை தொடர்ந்து பிரயோகிக்கவும்.. தமிழர்களுக்கு சிங்கள தேசத்தில் நிகழும்.. நிகழ்ந்த  அரசியல் பாகுபாடுகள்.. இனக்குரோத நடவடிக்கைககள்.. இனப்படுகொலை நிகழ்வுகள் தொடர்பில்.. தொடர்ந்து சர்வதேசம்  அறிவூட்டப்படுவதும் அவசியம்.

எந்த சிங்கள ஆளும் தரப்பையும் முழுமையாக நம்ப முடியாது. இதுதான்... உருத்திரகுமாரன் சொல்லும் விடயம். இதையே தான்  சிங்களவர்களோடு அகிம்சை வழியில்.. பயணித்து பல ஒப்பந்தங்களைப் போட்ட தந்தை செல்வாவும்  இறுதியில் சொல்லிச் சென்றது. :icon_idea:

இவ்வளவு விடயங்களை எதிர்பார்க்கும் நீங்கள் ஊரில் இருந்து எதிர்பார்த்தால் உங்கள் பாதங்களில் மலர் தூவுவதற்கு நாம் தயார்.

மைத்திரிபால அரசிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றீர்கள்.

அவர்கள் முன்னைய அரசினை விட தளர்வுப் போக்கினை கையாள்கின்றனர்.

மீண்டும் குட்டையினை குழம்ப உங்களைப் போன்ற புலம்பெயர்வாதிகள் தயாராகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே 19-க்குப் பின்னைய காலத்துக்குப் பின்னர் எமக்கு எதனையும் வழங்கக்கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக இருந்த இடத்தில் மைத்திரி வந்து ஓரளவு செய்ய முனைகின்றார். பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விடயம்.

எடுத்த வீச்சில் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது.

சந்திரிகாவிடம் இருந்து யாழ்ப்பாணத்தினை உனது கையில் முழுமையாக வாங்கித் தருகின்றேன் என்று அன்டன் பாலசிங்கம் பிரபாகரனிடம் தெரிவித்த அதேவேளையில் அதுவரைக்கும் அவசரப்பட்டு போரைத் தொடங்காதே என்று பிரபாகரனை பொறுக்குமாறு கேட்க, அவரோ எமது படை அணிகள் எங்கும் தயாராக இருக்கின்றனர். நாம் உடனே போரைத் தொடங்க வேண்டும் என்று பாலசிங்கத்தினை பிரபாகரன் வற்புறுத்த- இதன் பின்னர் பாலசிங்கம் தொலைநகல் அனுப்ப 48 மணி நேரத்தின் பின்னரே இரு தரப்பாரில் ஒருவர்; போரில் இருந்து விலக வேண்டும் என்கின்ற ஒப்பந்தத்தினை காற்றில் பறக்கவிட்டு உடனடியாகவே திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற இரு கப்பல்களை தகர்த்தனர் புலிகள்.

அதிகமான போரை விடுதலைப் புலிகளே அவசரப்பட்டு தொடங்கினர் என்பதே வரலாற்று உண்மை. ஏனெனில் பிரபாகரன் எந்தவொரு சிங்கள அரசுக்கும் வாய்ப்புக்களை கொடுக்கவில்லை. மாறாக, தனக்கு எந்தவொரு அரசிலும் நம்பிக்கை இல்லை என்று கூறி தனது தமிழீழ கனவினை நிறைவேற்ற விரும்பி போரை தொடுத்தார்.

Edited by nirmalan

அவரை போன்று நீங்களும் தாயகத்திலிருந்து அவரது கருத்தை விமர்சித்திருந்தால் வரவேற்றிருக்க முடியும்.  

அது சரி எதுக்கு எடுத்தாலும் ஏன் சிலபேர் தலைவர் பிரபாகரனையும்... விடுதலைப்புலிகளையும்  உள்ள இழுக்கிறீங்க? 

அண்ணா, சந்திரிக்கா காலத்து பேச்சு வார்த்தை காலத்தில; யார் சார்பாக பேச்சு வார்த்தைக்கு போனீர்களோ தெரியாது... ஆனால் உங்கள் வாதத்தின் அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்கள் தந்தை செல்வா காலத்தில் இருந்து அதிகம்... என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உண்மையில் தலைவரின் பிரதிநிதிகளா ? தேசியம் என்றதில் மாற்று கருத்து இல்லை ஆனால் இப்போது எது சாத்தியமோ அதனைத்தான் நாம் முதலில் செய்ய வேண்டும் . தலைவரும் இடைக்கால தீர்வுக்கு சம்மதித்தவர் ஏனெனில் அப்ப இருந்த சூழ்நிலை . இப்பவும் அதுதான் முக்கியம் . 
 
விலகி இருந்தால் திரும்பவும் புல்லுருவிகள் புகுந்து விடிவர்கள் (டக்லஸ் கருணா) . சமயோதித்த புத்தி மிக முக்கியம் . கூட்டமைப்பின் நகர்வு நல்லதே . 

அவற்றை கருத்துக்குள் நீங்கள் ஏன் கூட்டமைப்பை புகுத்துகிறீர்கள் ?
 
அவர் சொல்கிறார் மைத்திரியை நம்ப முடியாது என்று.
 
எப்படி நம்ப முடியும் என்றுதான் நீங்கள் விளக்கம் எழுத வேண்டும் ....
மாறாக இப்படி எழுதுகிறீர்கள் ??

இவ்வளவு விடயங்களை எதிர்பார்க்கும் நீங்கள் ஊரில் இருந்து எதிர்பார்த்தால் உங்கள் பாதங்களில் மலர் தூவுவதற்கு நாம் தயார்.

மைத்திரிபால அரசிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றீர்கள்.

அவர்கள் முன்னைய அரசினை விட தளர்வுப் போக்கினை கையாள்கின்றனர்.

மீண்டும் குட்டையினை குழம்ப உங்களைப் போன்ற புலம்பெயர்வாதிகள் தயாராகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே 19-க்குப் பின்னைய காலத்துக்குப் பின்னர் எமக்கு எதனையும் வழங்கக்கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக இருந்த இடத்தில் மைத்திரி வந்து ஓரளவு செய்ய முனைகின்றார். பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விடயம்.

எடுத்த வீச்சில் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது.

சந்திரிகாவிடம் இருந்து யாழ்ப்பாணத்தினை உனது கையில் முழுமையாக வாங்கித் தருகின்றேன் என்று அன்டன் பாலசிங்கம் பிரபாகரனிடம் தெரிவித்த அதேவேளையில் அதுவரைக்கும் அவசரப்பட்டு போரைத் தொடங்காதே என்று பிரபாகரனை பொறுக்குமாறு கேட்க, அவரோ எமது படை அணிகள் எங்கும் தயாராக இருக்கின்றனர். நாம் உடனே போரைத் தொடங்க வேண்டும் என்று பாலசிங்கத்தினை பிரபாகரன் வற்புறுத்த- இதன் பின்னர் பாலசிங்கம் தொலைநகல் அனுப்ப 48 மணி நேரத்தின் பின்னரே இரு தரப்பாரில் ஒருவர்; போரில் இருந்து விலக வேண்டும் என்கின்ற ஒப்பந்தத்தினை காற்றில் பறக்கவிட்டு உடனடியாகவே திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற இரு கப்பல்களை தகர்த்தனர் புலிகள்.

அதிகமான போரை விடுதலைப் புலிகளே அவசரப்பட்டு தொடங்கினர் என்பதே வரலாற்று உண்மை. ஏனெனில் பிரபாகரன் எந்தவொரு சிங்கள அரசுக்கும் வாய்ப்புக்களை கொடுக்கவில்லை. மாறாக, தனக்கு எந்தவொரு அரசிலும் நம்பிக்கை இல்லை என்று கூறி தனது தமிழீழ கனவினை நிறைவேற்ற விரும்பி போரை தொடுத்தார்.

2015 ஆம் ஆண்டு பிறந்த செய்தியை யாரவது இவருக்கு சொல்லிவிடவும்.
 
கி.மு 1500 முருகனின் ஆட்சியில் என்ன நடந்த நமக்கு என்ன ?
மைத்திரியின் ஆட்சியில் என்ன நடக்கும் என்றால் ....
 
அதே பாட்டு கொப்பியுடனேயே வருகிறார்களே.....?
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன்: ராஜபக்சேவை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் மக்கள் தங்களது வாக்குகளைப் பயன்படுத்தினர். சிறிசேன அரசால் தமிழ் மக்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சிறிசேன அரசை நம்பவும் முடியாது என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இலங்கையின் புதிய அரசாங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களான பாலகுமாரன், புதுவை இரத்தினதுரை, யோகி மற்றும் திலகர் ஆகியோருக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

வன்னி, முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இறுதிப் போரின் போது இவர்கள் அனைவரும் இலங்கைப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவை தோற்கடிப்பதற்காகவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை பயன்படுத்தினர். இதற்காக மைத்திரிபாலவின், ஆட்சியில் தமிழ் மக்களுக்கு மாற்றம் வரும் என்று நம்பமுடியாது.

மைத்திரிபாலவும் வன்னியின் இறுதிப் போரின் போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் என்ற அடிப்படையில் அவரால் இறுதிப் போரின் போது போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் தொடர்பாக விசாரணைகளை நடத்த முடியாது என்று ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஒரு அரசியல் அமைப்பின் தலைவர்

அதன் கொள்கை படியும்

யாப்பு படியும்  தான் அவரது பேச்சு இருக்கும்.

அதன்படி சரியாகவே  சொல்கிறார்...

எனக்கு இவர் மீதும் இவரது நாடுகடந்த அரசு மீதும் சில நம்பிக்கையீனங்கள்

கேள்விகள் இருக்கின்றன...

ஆனால்  இந்த விடயத்தில் சிங்களவனிடமிருந்து நாம் பாடம் கற்கணும்

தாயகம் சம்பந்தமாக அவனிடம் எந்த விட்டுக்கொடுப்பும்

தமக்குள் அடிபாடும்  இல்லை

நாம் தான் எமக்குள் எல்லாவற்றையும்  பிய்த்து புடுங்கி 

எமது கேள்வியையே பூச்சியமாக்கிவிடுகின்றேன்

எமக்கு நாமே தான் எதிரி......

இந்த நிலை மாறவேண்டும்

அடுத்த சந்ததியாவது  தன் இனத்தின் தேவைகள் சார்ந்து ஒரே பாதையில் செல்லணும்

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விடயங்களை எதிர்பார்க்கும் நீங்கள் ஊரில் இருந்து எதிர்பார்த்தால் உங்கள் பாதங்களில் மலர் தூவுவதற்கு நாம் தயார்.

மைத்திரிபால அரசிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றீர்கள்.

அவர்கள் முன்னைய அரசினை விட தளர்வுப் போக்கினை கையாள்கின்றனர்.

மீண்டும் குட்டையினை குழம்ப உங்களைப் போன்ற புலம்பெயர்வாதிகள் தயாராகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே 19-க்குப் பின்னைய காலத்துக்குப் பின்னர் எமக்கு எதனையும் வழங்கக்கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக இருந்த இடத்தில் மைத்திரி வந்து ஓரளவு செய்ய முனைகின்றார். பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விடயம்.

எடுத்த வீச்சில் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது.

சந்திரிகாவிடம் இருந்து யாழ்ப்பாணத்தினை உனது கையில் முழுமையாக வாங்கித் தருகின்றேன் என்று அன்டன் பாலசிங்கம் பிரபாகரனிடம் தெரிவித்த அதேவேளையில் அதுவரைக்கும் அவசரப்பட்டு போரைத் தொடங்காதே என்று பிரபாகரனை பொறுக்குமாறு கேட்க, அவரோ எமது படை அணிகள் எங்கும் தயாராக இருக்கின்றனர். நாம் உடனே போரைத் தொடங்க வேண்டும் என்று பாலசிங்கத்தினை பிரபாகரன் வற்புறுத்த- இதன் பின்னர் பாலசிங்கம் தொலைநகல் அனுப்ப 48 மணி நேரத்தின் பின்னரே இரு தரப்பாரில் ஒருவர்; போரில் இருந்து விலக வேண்டும் என்கின்ற ஒப்பந்தத்தினை காற்றில் பறக்கவிட்டு உடனடியாகவே திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற இரு கப்பல்களை தகர்த்தனர் புலிகள்.

அதிகமான போரை விடுதலைப் புலிகளே அவசரப்பட்டு தொடங்கினர் என்பதே வரலாற்று உண்மை. ஏனெனில் பிரபாகரன் எந்தவொரு சிங்கள அரசுக்கும் வாய்ப்புக்களை கொடுக்கவில்லை. மாறாக, தனக்கு எந்தவொரு அரசிலும் நம்பிக்கை இல்லை என்று கூறி தனது தமிழீழ கனவினை நிறைவேற்ற விரும்பி போரை தொடுத்தார்.

பிரபாகரனை விட போரில் ஆர்வமாய் விறுவிறுப்பாய் எழுதிய பேப்பர்காரார் இருந்தவை

அவற்றை கருத்துக்குள் நீங்கள் ஏன் கூட்டமைப்பை புகுத்துகிறீர்கள் ?
 
அவர் சொல்கிறார் மைத்திரியை நம்ப முடியாது என்று.
 
எப்படி நம்ப முடியும் என்றுதான் நீங்கள் விளக்கம் எழுத வேண்டும் ....
மாறாக இப்படி எழுதுகிறீர்கள் ??

2015 ஆம் ஆண்டு பிறந்த செய்தியை யாரவது இவருக்கு சொல்லிவிடவும்.
 
கி.மு 1500 முருகனின் ஆட்சியில் என்ன நடந்த நமக்கு என்ன ?
மைத்திரியின் ஆட்சியில் என்ன நடக்கும் என்றால் ....
 
அதே பாட்டு கொப்பியுடனேயே வருகிறார்களே.....?

என்ன செய்ய மருது சிலரிடம் ஒரே பாட்டுகொப்பிதான் இருக்கு. எந்த சடங்கிற்கும் அதே பாட்டு கொப்பிதான்.

அவர் ஒரு அரசியல் அமைப்பின் தலைவர்

அதன் கொள்கை படியும்

யாப்பு படியும்  தான் அவரது பேச்சு இருக்கும்.

அதன்படி சரியாகவே  சொல்கிறார்...

எனக்கு இவர் மீதும் இவரது நாடுகடந்த அரசு மீதும் சில நம்பிக்கையீனங்கள்

கேள்விகள் இருக்கின்றன...

ஆனால்  இந்த விடயத்தில் சிங்களவனிடமிருந்து நாம் பாடம் கற்கணும்

தாயகம் சம்பந்தமாக அவனிடம் எந்த விட்டுக்கொடுப்பும்

தமக்குள் அடிபாடும்  இல்லை

நாம் தான் எமக்குள் எல்லாவற்றையும்  பிய்த்து புடுங்கி 

எமது கேள்வியையே பூச்சியமாக்கிவிடுகின்றேன்

எமக்கு நாமே தான் எதிரி......

இந்த நிலை மாறவேண்டும்

அடுத்த சந்ததியாவது  தன் இனத்தின் தேவைகள் சார்ந்து ஒரே பாதையில் செல்லணும்

எமக்கு தாயகத்தில் கூட்டமைப்பு நாம் நம்பவேண்டிய ஒரு சக்தி. புலத்தில் ஓரளவாவது நம்ப வேண்டிய சக்தி இவர்கள். நாடு கடந்த அரசு புலம்பெயர்ந்தவர்கள் யாவரையும் ஒண்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தமிழர்களின் அபிலாசைக்கு துணைபோகும் நாளை நானும்தான் எதிர்பார்க்கின்றேன்.

மிக மகிழ்ச்சி

முதலில் எதுவும் நம்மிலிருந்து ஆரம்பிக்கணும்

அதுவே உண்மை வடிவமாக

யதார்த்தகரமான முடிவாக இருக்கும் என நம்புகின்றேன்...

அதையே  இங்கு தொடர்ந்து எழுதியும் வருகின்றேன்

அந்தவகையில் இங்கு உங்களது முடிவும் நிலைப்பாடும்

எனது முடிவும் நிலைப்பாடும் 100 வீதம்  பொருந்துவது மகிழ்ச்சி தருகிறது..

தொடர்வோம்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

-----

எந்த சிங்கள ஆளும் தரப்பையும் முழுமையாக நம்ப முடியாது. இதுதான்... உருத்திரகுமாரன் சொல்லும் விடயம். இதையே தான்  சிங்களவர்களோடு அகிம்சை வழியில்.. பயணித்து பல ஒப்பந்தங்களைப் போட்ட தந்தை செல்வாவும்  இறுதியில் சொல்லிச் சென்றது. :icon_idea:

எந்தச் சிங்கள அரசையும், நம்ப முடியாது என்று எமக்கும் தெரியும் தான்....

ஆனால், முன்பு ஜனாதிபதியாய் இருந்து அனுபவம் இல்லாத ஒருவர்,

வந்து... கதிரையில் அமர முதல், நா.க.அரசு அவசரப் பட்டு அறிக்கை விட வேண்டிய அவசியமில்லை.

எதனைச் சொல்வதற்கும், ஒரு நாசூக்கு தன்மை தேவை. :D 

எல்லாரையும் உடனே... எதிரியாகப் பார்க்கும் தன்மை, எமது மக்களுக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி அரசு.. தமிழர்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும்.. சில சலுகைகளுக்குள் அடக்கி.. சர்வதேச  அழுத்தத்தில்... இருந்து சிங்கள முன்னாள்..  இன்னாள்.. தமிழினப் படுகொலை  ஆளும் வர்க்கத்தை தப்பிக்க செய்யவே முனைகிறார்கள்.

சரத் பொன்சேக்காவை காத்த மாதிரி...   மகிந்தவும் காப்பாற்றப்படுவார். அப்போது.. இன்று மைத்திரிக்கு சாமரம் வீசும் எம்மவர்கள்.. தொலைநோக்கற்ற   தமது அரசியல் சிந்தனை.. செயல் வரட்சியை இட்டு அழுவார்கள்.  கவலைப்படுவார்கள்.

இது தான் உண்மை

எல்லோரும் நம்பிய பின்னர் இந்த அறிக்கை வருவதால் வைத்த நம்பிக்கையை மீளப்  பெறச் சிறியகால அவகாசம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=TcF3MnnLv1c

"சிற்று வேஷன் சாங்."
தொப்பி.... அளவானவர்கள் போட்டுக் கொள்ளவும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் தமிழீழ தேசிய பிரதமர் அவர்கள் தமது நாடான தமிழீழத்தின் கருத்தை சொல்லிருக்கிறார். இதில் ஏன் விமர்சனங்கள் வர வேண்டும். (அதுவும், தமிழ் ஈழ பிரஜைகள் அல்லாதவர்கள்?)

ஒரு இறைமையுள்ள நாட்டின் (தமிழீழம்) பிரதமர் தமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டை சொல்ல முடியாதா?

தமிழீழ வெளியுறவுக் கொள்கை, தமிழீழ அரசின் உயர்மட்ட அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கு மேன்மை தங்கிய பிரதமர் ஒப்புதல் கொடுத்ததில், அரசியலமைப்பு சட்டமாகியுள்ளது.

அனைத்து தமிழீழ பிரஜைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை கொண்டுவந்த சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது, ஜனநாயக மரபுசார் அரசியலமைப்பு சட்டம்.

அண்ணன் பிரதமருக்கு வெளிநாடுகளில் அதிக சதவீத புலம்பெயர் மக்கள் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது,

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இனிமேல் இஞ்சை கருத்து எழுதுறதுக்கும் புதுச்சட்டம் கொண்டுவரவேணும் கண்டியளோ.. :lol:
படிச்சவன் தான் எழுதோணும்
துவக்கு தூக்கினவன் தான் எழுதோணும்
போராட போனவன் தான் எழுதோணும்
நாட்டைப்பற்றி நாட்டிலை இருந்துதான் எழுதோணும்
வெளிநாட்டு சிற்றிசன் எடுத்தவனெல்லாம் கதைக்கேலாது.......

ருத்திரா அண்ணைக்கு நேரம் போகாவிட்டால் மணியின் "கண்டு பிடியுங்கள் " போட்டியில் பங்குபற்றலாம் . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விடயங்களை எதிர்பார்க்கும் நீங்கள் ஊரில் இருந்து எதிர்பார்த்தால் உங்கள் பாதங்களில் மலர் தூவுவதற்கு நாம் தயார்.

மைத்திரிபால அரசிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கின்றீர்கள்.

அவர்கள் முன்னைய அரசினை விட தளர்வுப் போக்கினை கையாள்கின்றனர்.

மீண்டும் குட்டையினை குழம்ப உங்களைப் போன்ற புலம்பெயர்வாதிகள் தயாராகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே 19-க்குப் பின்னைய காலத்துக்குப் பின்னர் எமக்கு எதனையும் வழங்கக்கூடாது என்பதில் மகிந்த அரசு உறுதியாக இருந்த இடத்தில் மைத்திரி வந்து ஓரளவு செய்ய முனைகின்றார். பொறுத்து இருந்து பார்க்க வேண்டிய விடயம்.

எடுத்த வீச்சில் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாது.

சந்திரிகாவிடம் இருந்து யாழ்ப்பாணத்தினை உனது கையில் முழுமையாக வாங்கித் தருகின்றேன் என்று அன்டன் பாலசிங்கம் பிரபாகரனிடம் தெரிவித்த அதேவேளையில் அதுவரைக்கும் அவசரப்பட்டு போரைத் தொடங்காதே என்று பிரபாகரனை பொறுக்குமாறு கேட்க, அவரோ எமது படை அணிகள் எங்கும் தயாராக இருக்கின்றனர். நாம் உடனே போரைத் தொடங்க வேண்டும் என்று பாலசிங்கத்தினை பிரபாகரன் வற்புறுத்த- இதன் பின்னர் பாலசிங்கம் தொலைநகல் அனுப்ப 48 மணி நேரத்தின் பின்னரே இரு தரப்பாரில் ஒருவர்; போரில் இருந்து விலக வேண்டும் என்கின்ற ஒப்பந்தத்தினை காற்றில் பறக்கவிட்டு உடனடியாகவே திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற இரு கப்பல்களை தகர்த்தனர் புலிகள்.

அதிகமான போரை விடுதலைப் புலிகளே அவசரப்பட்டு தொடங்கினர் என்பதே வரலாற்று உண்மை. ஏனெனில் பிரபாகரன் எந்தவொரு சிங்கள அரசுக்கும் வாய்ப்புக்களை கொடுக்கவில்லை. மாறாக, தனக்கு எந்தவொரு அரசிலும் நம்பிக்கை இல்லை என்று கூறி தனது தமிழீழ கனவினை நிறைவேற்ற விரும்பி போரை தொடுத்தார்.

சில பத்திரிகைகளில் பெட்டி அடித்த கதை எழுதிய ஆட்கள் 2009 க்கு பின் 6 வருடங்களில்( இன்னுமொரு கிரகத்துக்கு செல்லும் காலத்தில் :)  ) யார் மகிந்த அரசை குழப்பினார்கள் தமிழருக்கு தீர்வு  தர என சொன்னால் நன்றாக இருக்கும். ஒரு வேளை சம்பந்தர் ஐயா தான் குழப்புகிறார் என நாசுக்காக சொல்கிறீர்களா? :icon_mrgreen:

தண்ணீர் வற்றிய  குளத்தில் எவரும் இருப்பதில்லை  என்பதற்கு உதாரணம் இந்த பெட்டி அடித்து வழி காட்டிய அரசவை கட்டுரையாளர்கள்.

தற்பொழுது

புலி

ஒருங்கிணைப்புக்குழு...  என்றாலே

நான் அவனில்லை என எல்லைகளைக்கடந்து  ஓடிவிடுகிறார்கள்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தயான் ஜயதிலக்காஅண்மையில் எழுதிய கட்டுரையை தமிழில் போட்டால் நல்லது. அவரின் கட்டுரைப்படி மங்கள சமரவீர டில்லிக்குப் போய் கொடுத்த உறுதிகள்:

வடக்கு கிழக்கில் இராணுவ அழுத்தம் குறைக்கப்படும்/நீக்கப்படும்.

13+ திருத்தச் சட்டமூலம் மூலம் மாகாண சபைகளுக்கு மேலதிக அதிகாரம் வழங்கப்படும்.

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

இப்படி நல்லதுகளைத் தமிழர்களுக்குச் செய்யவுள்ள அரசை உருத்திரகுமாரன் நம்பாமல் இருப்பது சிங்களவர்கள் ஒருபோதும் தமிழர்களை சமமாக நடாத்தமாட்டார்கள் என்ற தமிழர்களின் நம்பிக்கையீனத்தில் இருந்து வந்தது என்று ஏன் பார்க்கக்கூடாது?

மங்கள சொன்னவை இலங்கையில் நடக்கச் சிங்களவர்கள் சம்மதிப்பார்கள் என்று எத்தனை பேர் நம்புகின்றீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.