Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: திட்டும் மக்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
28-1422417762-obama-michalle-609878.jpg

சவுதியில் முக்காடு அணியாத மிஷல் ஓபாமா: ட்விட்டரில் திட்டும் மக்கள்.

ரியாத்: சவுதி சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷல் தலையில் ஸ்கார்ப் அணியாதது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது மனைவி மிஷலுடன் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 25ம் தேதி இந்தியா வந்தார். அவர்கள் நேற்று கிளம்பி சவுதி அரேபியா சென்றனர். ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர்.

சவுதியில் மிஷல் ஒபாமா தலையில் ஸ்கார்ப் அணியாதது தான் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சவுதியில் பெண்கள் தலையில் ஸ்கார்ப் அணிய வேண்டும் அல்லது புர்கா அணிந்து முகத்தை மறைக்க வேண்டும். இந்நிலையில் மிஷல் ஸ்கார்ப் அணியாதது பற்றி பலரும் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இது குறித்து #ميشيل_أوباما_سفور (roughly, #Michelle_Obama_unveiled) என்ற ஹேஷ்டேக்கில் மட்டும் 1,500 ட்வீட்கள் செய்யப்பட்டுள்ளன. மிஷல் இந்தோனேசியா சென்றபோது மட்டும் ஸ்கார்ப் அணிந்தாரே. சவுதி அரேபியாவில் மட்டும் ஏன் அணியவில்லை என்று சிலர் கேட்டுள்ளனர்.

அவசரமாக சவுதி வந்ததால் மிஷலை யாரும் குறை கூறக் கூடாது என்று சிலர் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளனர். இஸ்லாத்தை அவமதித்து பிளாக்கில் எழுதியதற்காக ரைப் பதாவி என்பவருக்கு பொது இடத்தில் கசையடி கொடுக்கப்பட்டதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் ஒபாமா சவுதி சென்றுள்ளார். அவர் மறைந்த மன்னருக்கு அஞ்சலி செலுத்தியதுடன் புதிய மன்னர் சல்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

அதிபரும் ஒரு முஸ்லிம்தானே அதனால் மக்கள் திட்டுவதில் நியாயம் இருக்கிறது!

  • தொடங்கியவர்

எப்ப..... இருந்து, அதிபர் முஸ்லீம். :o

  • கருத்துக்கள உறவுகள்

ஒபாமாவின் தலை மொட்டையானதிலிருந்து அவர் முசுலீம்.... :D  :D  :lol:

மிசல் ஒபாமா அவர்கள் ஒன்றும் வீட்டு வேலைக்கு சவுதி அரபியா செல்லவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.மனிதாபிமான முறையில் ஒரு மரணச்சடங்கிற்கு சென்றார்.ஆக்ரா சென்று தாஜ் மஹாலை பார்க்கும் திட்டத்தை கூட ரத்து செய்துவிட்டு அவர்கள் சவுதி கிளம்பினர்.அவசரமாக சவுதி வந்ததால் மிஷலை யாரும் குறை கூறக் கூடாதுஅவர் ஒரு அடக்கமான உடைத்தான் அணிந்திருக்கின்றார் இது ஒன்றும் முஸ்லீம் உலகமில்லை.தயவு செய்து குரானில் கூறியபடி அனைவரையும் மதித்து நடக்கப்பழகுங்கள்.இதே குரானில் கூறப்பட்ட வாசகம்" இவ்வுலகில் தீர்ப்பு சொல்ல யாருக்கும் முடியாது.அல்ஹா ஒருவனே நீதிபதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற்றினத்து பெண்கள் முஸ்லீம் நாட்டுக்கு போகும் போது முக்காடு போட வேண்டுமென்றால்...... அதே முஸ்லீம் நாட்டு பெண்கள் கிறிஸ்தவ நாடுகளுக்கு வரும்போது முக்காடு இல்லாமல் வரத் தயாரா????  :D

ஒவ்வொரு நாட்டுக்கும் செல்பவர்கள் அவ் நாட்டினதும், அங்குள்ள மதத்தினதும் இனத்தினதும் சட்டங்களை மதிக்க தானே வேண்டும். சவூதியில் முக்காடு போட்டுத்தான் பெண்கள் போக வேண்டும் என்றால் அதை எதிர்த்து அங்குள்ள பெண்கள் போராடட்டும், அவ் போராட்டத்தில் வெல்லட்டும், அது வரைக்கும் வெளிநாட்டவர்கள் அதை கடைப்பிடிக்கத்தானே வேண்டும்? கிறிஸ்தவ நாடுகளில் முக்காடு போடுவது சட்டப்படி தவறல்ல என்பதால் முஸ்லிம்கள் அங்கு முக்காடு போடுவதில் என்ன தவறு?

சரி, அமெரிக்க சனாதிபதி நல்லூர் கோவிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு போனால் அதை நாம் கண்டிக்க மாட்டோமா?

மிஷெல் ஒபாமா இஸ்லாமிய மத தலத்துக்கு முக்காடு அணியாமல் சென்றால் அது தவறு,ஆனால் அவர் சவுதிக்கு தானே சென்றார், அது தவறில்லையே நாம் என்ன ஒபாமா தம்பதியினர் யாழ்ப்பாணம் வந்து நல்லூருக்கு செருப்புடன் சென்றால் அது தவறு தான், ஆனால் அங்கு வந்து அவர்கள் அவர்கள் வேட்டி சேலை அணிய வேண்டும் என்று நாம் வற்புறுத்தினால் தான் அது தவறு,

நல்ல பதில், டாஷ். :) 

இதற்கு, நிழலியின்... பதிலை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். :D

சவூதிக்கு செல்லும் எந்த பெண்களும் கண்டிப்பாக முக்காடு அணிய வேண்டும் என்பது அவர்களின் சட்டம். உதாரணத்துக்கு டுபாயில் இருந்து கட்டார் நோக்கிச் எவராவது வீதி வழியே வாகனத்தில் சென்றால் சவூதியின் பிராந்தியங்களைக் கடக்க வேண்டும். அப்படி கடக்கும் போது கூட பெண்கள் கண்டிப்பாக முக்காடு போட வேண்டும். அத்துடன் பெண்கள் வாகனம் செலுத்தவும் கூடாது.

(நான் இரண்டு முறை இவ்வாறு சென்று இருக்கின்றேன்)

சவூதியினைச் சேர்ந்த பெண்கள் கண்டிப்பாக உடல் முழுதும் கறுப்பு உடையால் மூட வேண்டும் என்றும் விதியுள்ளது. அத்துடன் அவர்கள் அருகில் கணவன் அல்லது சகோதரம் மட்டுமே இருக்கலாம் என்பதும் விதிகள். ஆனால் இவை வெளிநாட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல. இவற்றில் தாராளமான தளர்வுகள் உள்ளது.

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம். முக்கியமாக அங்குள்ள பெண்கள் அதையிட்டு கவலை கொள்ள வேண்டிய விடயம்.

ஒரு நாட்டுக்குள் செல்பவர்கள் கண்டிப்பாக அவ் நாட்டின் விதிகளையும் சட்டங்களையும் மதிக்க வேண்டும். அது ஒபாமாவாக இருந்தால் என்ன ஓமக்குச்சி நாரயணணாக இருந்தால் என்ன.  அதிலும் முக்கியமாக மனிதவுரிமைகளை சற்றும் மதிக்காத சவூதியின் மன்னராட்சியை தாங்கிப் பிடித்து உதவிகள் செய்யும் அமெரிக்க / ஒபாமா அரசுகள் இவ் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

ஆகவே யுவர் ஆனர், ஒபாமாவின் மனைவி முக்காடு போடாதது பிழை பிழை பிழையே ஆகும் என்று கூறி என் வாதங்களை நிறைவு செய்கின்றேன்.

இப்ப திருப்தியா... :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப திருப்தியா... :)

இல்லை

உங்களது நாட்டு

வீட்டு சட்டங்கள் எப்படியும் இருக்கட்டும்

ஒருவரது மரண வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருபவரை

எமது சட்டப்படிதான்  வரவேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

தமிழனாய் பிறந்தது எனது தவறு இல்லையாயினும் தமிழனாய் பிறந்ததற்காக நான் பலமுறை என்வாழ்வில் கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்படிபட்ட முஸ்லீம் நாடொன்றில் முஸ்லீமாக பிறக்காத்து குறித்து திருப்தியே.

சட்டம் என்றால் சட்டம்தான் என்கிற நிழலியின் நிலைப்பாட்டுக்கு நானும் ஆதரவு. :D அந்தச் சட்டம் பிடிக்காவிட்டால் சவுதியின் எண்ணையே வேண்டாம் என்று ஒபாமா புறக்கணிக்க வேணும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மிஷல் ஒபாமாவின் ஒப்புக்கு வேசம் போடாத நேர்மை பாராட்டத்தக்கது. :)

முஸ்லீம்கள் தங்களது அடையாளங்களை மற்றவர்கள் மீது திணிப்பதை நிறுத்துவதோடு.. முஸ்லீம் பெண்கள் மீதான அனைத்துவித அடக்குமுறைகளையும் கைவிட முன்வர வேண்டும். :):icon_idea:

நெடுக்ஸ்.. இதுக்குத்தான் சில பழமொழிகளை எழுதி வைத்திருக்கிறார்கள். :D

1) நக்குண்டார்.. நாவிழந்தார். :huh:

2) You cannot have the cake and eat it too.

3) You cannot have it both ways.

எண்ணைக்காக ஒபாமா எதையெல்லாம் சகிக்கவேண்டி இருக்கு.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முக்காடு போட்டிருந்தாலும் விமர்சனத்திற்கு ஆளாகியிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

சவூதிக்கு செல்லும் எந்த பெண்களும் கண்டிப்பாக முக்காடு அணிய வேண்டும் என்பது அவர்களின் சட்டம். உதாரணத்துக்கு டுபாயில் இருந்து கட்டார் நோக்கிச் எவராவது வீதி வழியே வாகனத்தில் சென்றால் சவூதியின் பிராந்தியங்களைக் கடக்க வேண்டும். அப்படி கடக்கும் போது கூட பெண்கள் கண்டிப்பாக முக்காடு போட வேண்டும். அத்துடன் பெண்கள் வாகனம் செலுத்தவும் கூடாது.

(நான் இரண்டு முறை இவ்வாறு சென்று இருக்கின்றேன்)

சவூதியினைச் சேர்ந்த பெண்கள் கண்டிப்பாக உடல் முழுதும் கறுப்பு உடையால் மூட வேண்டும் என்றும் விதியுள்ளது. அத்துடன் அவர்கள் அருகில் கணவன் அல்லது சகோதரம் மட்டுமே இருக்கலாம் என்பதும் விதிகள். ஆனால் இவை வெளிநாட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல. இவற்றில் தாராளமான தளர்வுகள் உள்ளது.

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம். முக்கியமாக அங்குள்ள பெண்கள் அதையிட்டு கவலை கொள்ள வேண்டிய விடயம்.

ஒரு நாட்டுக்குள் செல்பவர்கள் கண்டிப்பாக அவ் நாட்டின் விதிகளையும் சட்டங்களையும் மதிக்க வேண்டும். அது ஒபாமாவாக இருந்தால் என்ன ஓமக்குச்சி நாரயணணாக இருந்தால் என்ன.  அதிலும் முக்கியமாக மனிதவுரிமைகளை சற்றும் மதிக்காத சவூதியின் மன்னராட்சியை தாங்கிப் பிடித்து உதவிகள் செய்யும் அமெரிக்க / ஒபாமா அரசுகள் இவ் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

ஆகவே யுவர் ஆனர், ஒபாமாவின் மனைவி முக்காடு போடாதது பிழை பிழை பிழையே ஆகும் என்று கூறி என் வாதங்களை நிறைவு செய்கின்றேன்.

இப்ப திருப்தியா... :)

நாட்டின் விதி முறைகளை நிட்ச்சயமாக மதிக்க வேண்டும்.
யாழ்ப்பான வீதிகளில்  வெள்ளைகார பெண்கள் நாகரீகமாக உடை அணிந்து போகிறார்கள்.
இங்கிருந்து (எங்களின்) போன சில அலுகோசுகள் அங்கே வெளிநாடு காட்டுகிறார்கள்.
 
மிசாலின் முக்காடு விடயம் ....
அரசியலோடு தொடர்பு பட்டு இருக்கிறது.
தெரியாமல் போகவில்லை .... தெரிந்துதான் போயிருக்கிறார். 
அந்த ரீதியில் இது ஏற்றுகொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறது.

சவூதிக்கு செல்லும் எந்த பெண்களும் கண்டிப்பாக முக்காடு அணிய வேண்டும் என்பது அவர்களின் சட்டம். உதாரணத்துக்கு டுபாயில் இருந்து கட்டார் நோக்கிச் எவராவது வீதி வழியே வாகனத்தில் சென்றால் சவூதியின் பிராந்தியங்களைக் கடக்க வேண்டும். அப்படி கடக்கும் போது கூட பெண்கள் கண்டிப்பாக முக்காடு போட வேண்டும். அத்துடன் பெண்கள் வாகனம் செலுத்தவும் கூடாது.

(நான் இரண்டு முறை இவ்வாறு சென்று இருக்கின்றேன்)

சவூதியினைச் சேர்ந்த பெண்கள் கண்டிப்பாக உடல் முழுதும் கறுப்பு உடையால் மூட வேண்டும் என்றும் விதியுள்ளது. அத்துடன் அவர்கள் அருகில் கணவன் அல்லது சகோதரம் மட்டுமே இருக்கலாம் என்பதும் விதிகள். ஆனால் இவை வெளிநாட்டவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை அல்ல. இவற்றில் தாராளமான தளர்வுகள் உள்ளது.

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம். முக்கியமாக அங்குள்ள பெண்கள் அதையிட்டு கவலை கொள்ள வேண்டிய விடயம்.

ஒரு நாட்டுக்குள் செல்பவர்கள் கண்டிப்பாக அவ் நாட்டின் விதிகளையும் சட்டங்களையும் மதிக்க வேண்டும். அது ஒபாமாவாக இருந்தால் என்ன ஓமக்குச்சி நாரயணணாக இருந்தால் என்ன.  அதிலும் முக்கியமாக மனிதவுரிமைகளை சற்றும் மதிக்காத சவூதியின் மன்னராட்சியை தாங்கிப் பிடித்து உதவிகள் செய்யும் அமெரிக்க / ஒபாமா அரசுகள் இவ் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடித்து இருக்க வேண்டும்.

ஆகவே யுவர் ஆனர், ஒபாமாவின் மனைவி முக்காடு போடாதது பிழை பிழை பிழையே ஆகும் என்று கூறி என் வாதங்களை நிறைவு செய்கின்றேன்.

இப்ப திருப்தியா... :)

நீங்கள் கூறுவது அவர் தனிப்பட்ட விஜயத்தின் நிமித்தமாக செல்லும் போது மட்டுமே , ஆனால் இவர் உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்கவை பிரதிநிதிபடுத்துகிறார், எனவே அவர் அமெரிக்க பெண் ஒருவர் அணியும் உடையுடன் சென்றது தவறில்லை

https://www.youtube.com/watch?v=o-q6DN1Cv9E

சவுதிக்காரரின் கொடுமைகளும்............ இந்தப்படத்தில் ஹோமார் என்னும் வார்த்தை கழுதை எனப் பொருள் படும்.  அதே போல கயவான் - விலங்கு  ஹறாமி-கள்வன்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு நாட்டுக்கும் செல்பவர்கள் அவ் நாட்டினதும், அங்குள்ள மதத்தினதும் இனத்தினதும் சட்டங்களை மதிக்க தானே வேண்டும். சவூதியில் முக்காடு போட்டுத்தான் பெண்கள் போக வேண்டும் என்றால் அதை எதிர்த்து அங்குள்ள பெண்கள் போராடட்டும், அவ் போராட்டத்தில் வெல்லட்டும், அது வரைக்கும் வெளிநாட்டவர்கள் அதை கடைப்பிடிக்கத்தானே வேண்டும்? கிறிஸ்தவ நாடுகளில் முக்காடு போடுவது சட்டப்படி தவறல்ல என்பதால் முஸ்லிம்கள் அங்கு முக்காடு போடுவதில் என்ன தவறு?

சரி, அமெரிக்க சனாதிபதி நல்லூர் கோவிலுக்குள் செருப்பு அணிந்து கொண்டு போனால் அதை நாம் கண்டிக்க மாட்டோமா?

மோட்டுத்தனமாக தண்டனை எனும் பெயரில் கழுத்து,கை கால்களை வெட்டும் ஒரு நாட்டிலிருந்து பெண்களை போராடச்சொல்கின்றீர்கள்.!
 
முஸ்லீம் நாட்டு சட்டத்தை கலாச்சாரத்தை இதர நாட்டவர்கள் மதிக்க வேண்டுமென்றால்.....முஸ்லீம்களும் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு வரும் போது அந்தந்த நாட்டு சட்டங்கள் கலாச்சாரங்களை கடைப்பிடிக்க வேண்டுமல்லவா?
 
இந்த விடயத்தில் பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு வணக்கம் சொல்கின்றேன்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

------

சவூதியில் இருக்கும் இத்தகைய விதிகள், சட்டங்கள் பிற்போக்கானவையா அவை நீக்கப்படல் வேண்டுமா என்பது வேறு விவாதம்.

-----

சவூதியின் சட்டங்களை, விரிவாக எழுதியமைக்கு நன்றி நிழலி.

சவூதியின் சட்டம் மட்டுமல்ல, முஸ்லீம் நாடுகளில் கடைப் பிடிக்கப் படும் பல சட்டங்களில் எனக்கு உடன்பாடு இல்லை.

மற்றைய மக்களின்... கலாச்சாரத்தையும், மதத்தையும் மதிக்கும் பண்பு, இவர்களிடம் அறவே இல்லை.

இப்படிப் பார்த்தால்.....

நேற்று பா.ஜ.க. முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இந்திய அரசியல் சட்டத்தில் இருந்து.... "இந்தியா மதச்சார்பற்ற நாடு" என்பதில் அற்ற என்ற சொல்லை நீக்க வேண்டும் என்று கூறிய, கருத்தும் சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் பிறந்தது எனது தவறு இல்லையாயினும் தமிழனாய் பிறந்ததற்காக நான் பலமுறை என்வாழ்வில் கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்படிபட்ட முஸ்லீம் நாடொன்றில் முஸ்லீமாக பிறக்காத்து குறித்து திருப்தியே.

அருமை துல்பன்,
 
இதையேதான் நான் தினமும் நினைப்பேன்.
 
அரபு நாடுகளில் வாழும் எனக்கு தெரியும் இங்கு எவ்வளவே கொடுமைகள் தினம், தினம் நடக்கின்றன என. பல சட்டங்கள் இங்கு இருக்கின்றன மிகவும் மனித தன்மையே இல்லாத சட்டங்கள்.
 
சொன்னல் நம்ப மாட்டீர்கள் என்னுடய கடவுச்சீட்டு என்னிடம் தான் உள்ளது, ஆனால் நான் நினைத்த நேரம் எனக்கு இந்த நாட்டை விட்டு செல்ல முடியாது. 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாய் பிறந்தது எனது தவறு இல்லையாயினும் தமிழனாய் பிறந்ததற்காக நான் பலமுறை என்வாழ்வில் கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்படிபட்ட முஸ்லீம் நாடொன்றில் முஸ்லீமாக பிறக்காத்து குறித்து திருப்தியே.

முற்றிலும் தவறு. 

தமிழைக் கொண்ட தமிழானாய் பிறந்ததற்கு நிச்சயம் பெருமை கொள்ளவேண்டும்,

உங்கள் செயல்களால், ஒற்றுமையின்மையால் அழிந்த விரக்தியில், இனத்தின் அடையாளத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம், துல்பன். சமீப காலமாக இந்த விரக்தி தொற்று வியாதி போல் ஈழத்தமிழர்களை மிக வேகமாக பீடித்து வருகிறது. விழுந்தவர்கள் மீண்டதாய் எத்தனையெத்தனையோ சரித்திரங்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் முக்காடு போடாமல் சவுதிக்கு போனால் நாட்டுக்கு உள்ளே விட மாட்டார்களா

தண்டிப்பார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.