Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பீல்ட் மார்ஷல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார் சரத் பொன்சேகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
fieldmarshal-fonseka-220315-200-seithy.j

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று பதவிஉயர்த்தப்பட்டார். இன்று பாதுகாப்பு அமைச்சின் தலைமை அலுவலக மைதானத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஶ்ரீபவன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கெளரவ பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடுபவராக இருக்கமாட்டார். பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்தின்கீழ் பணியாற்றுபவர் அல்லர். பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கொண்டிருக்கும் உரிமைகளைக் கொண்டிருப்பார். ஜனநாயக ரீதியில் அரசியலில் ஈடுபடும் சுதந்திரமும் அவருக்கு இருக்கும். அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்குள்ள அந்தஸ்தை அவர் கொண்டிருப்பார். பீல்ட் மார்ஷல் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சம்பளம் வழங்கப்படும். வாழ்நாள் முழுவதற்கும் அவருக்கான பணியகமும், அதற்கான பணியாளர்களும் வழங்கப்படும்.

பீல்ட் மார்ஷல் ஒருவர் உயிரிழந்தால், இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதுடன் 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்படும். உத்தியோகபூர்வ வதிவிடம், போக்குவரத்து வசதிகள் என்பனவும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும். பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவும் அதிகாரபூர்வ வதிவிடமும் வழங்கப்படும்.

fieldmarshal-fonseka-220315-seithy%20(1)

fieldmarshal-fonseka-220315-seithy%20(2)

fieldmarshal-fonseka-220315-seithy%20(3)

fieldmarshal-fonseka-220315-seithy%20(4)

fieldmarshal-fonseka-220315-seithy%20(5)

http://seithy.com/breifNews.php?newsID=128826&category=TamilNews&language=tamil

பொன்னர் உண்மையிலேயே பீல்ட் மார்ஷல் பதவிக்கு தகுதியானவர்தானா?  :o
சிங்களத்தை பொறுத்தவரை உலக ராணுவ நிபுணர்களே வியந்து போற்றிய 
புலிகளை அவர்களது கரும்புலி தாக்குதலின் படு காயங்களில் இருந்து மீண்டு வந்து 
வீழ்த்திய பொன்னர் ஒரு ஹீரோ. இந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்பது 
அவர்களது எண்ணம். :)
ஆனால் உண்மையில் உலக நாடுகளின் அனைத்து தொழில் நுட்ப 
ஆயுத உதவிகளுடனும் இந்தியா பாகிஸ்தான் சீனாவின் நேரடி உதவியுடனும் இந்தியாவின் 
கமாண்டோ படை பிரிவு நேரடியாக களத்தில் இறங்கியும், உலகிலேயே தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களையும் பாவித்து எந்த ஒரு உதவியும் இல்லாமல் தன்னம்பிக்கையின் உதவியுடன் மட்டுமே போரிட்ட புலிகளை வீழ்த்தியதில் பொன்னரின் தனிப்பட்ட சாதனை என்று ஒன்றுமே கிடையாது. பொன்னர் இப்பதவிக்கு தகுதியற்றவர்.  :D
பொன்னர் ஓயாத அலைகளில் புலிகளை வீழ்த்தியிருந்தால் அத்தகுதியை உண்மையிலேயே பெற்றிருப்பார்.  :(
உண்மையில் இப்பதவிக்கு பொருத்தமான ஒரேயொரு சிங்கள ராணுவ தளபதி டென்சில் கொப்பேகடுவ மட்டும்தான்.  :icon_idea: 

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி அவர்களின் நூறு நாள் திட்டத்தில் இதுவும் ஒன்று.
நன்றி மறக்காதவர் நாட்டின் ஜனாதிபதி.

இத்தனை பிரச்சனைக்குள் இனப்பிரச்சனைபற்றி யோசிக்க அவருக்கு நேரம் கிடைக்குமா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தமிழர்களை அழித்த இனப்படுகொலை செய்த எல்லாரையும் காப்பாற்றிக்கிட்டே இருக்குது. மகிந்த அன்கோவும் அதில் அடங்கும்.

இவர்களை நம்பச் சொல்லி.. இவர்களுக்கு நோகாமல் நடக்கச் சொல்லும் எம்மவர்களை என்னென்பது..??!

சிங்களவன்.. உண்மையில் திறமைசாலி. தமிழனை அழித்ததும் இல்லாமல்.. அதில் இருந்து தப்பவும் அவனுக்குத் தெரிஞ்சிருக்குது. தமிழர்களை தமிழர்களைக் கொண்டே முடக்கவும் அடக்கவும் முட்டாளாக்கவும் தெரிஞ்சிருக்குது.

எதுஎப்படியோ.. இந்தப் போர் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தாமல்.. புலம்பெயர்.. மற்றும் உலகத் தமிழினம்.. உறங்கக் கூடாது. தமிழினத்திற்கு நேர்ந்த கதி இன்னொரு மனித இனத்துக்கு நிகழவும் கூடாது. அதுவும் இந்த 21ம் நூற்றாண்டில். :icon_idea::rolleyes:

சொந்த நாட்டு மக்களையே கொன்ரவனுக்கு  மார்சல் பட்டம்.  எந்த நாட்டுடன்  படை  எடுத்தவர்?  

போர்க்குற்றவாளி என்று  தமிழரால் அடையாளம் காட்டப்பட்ட கொடியவர்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த லெக்சனிலை மகிந்த கோஷ்டி வந்தால் பொன்னருக்கு என்ன பட்டம் கிடைக்கும்? 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பறித்ததோட சேர்த்து இன்னும் ஒன்டை சேர்த்து பறிக்க வேண்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sf-the-welikada-jail-colombo-telegraph.j

திருப்பியும் வாளியோடை வரிசையாய் நிக்க வேண்டி வருமெண்டுறியள்  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

There are hundred of Field Marshall all over world, but the only well known field Marshall’s are Gen Vasily Ivanovich Chuikov  (Battle of Stalingrad) and Gen Douglas MacArthur (Pacific Command). This Sarath guy on the other hand, cried for this five star general for his victory over Tamil Tigers. From this, one thing we all can proud how tough the war was against Tamils and how strong we were (I know, Arjun won’t like this, but it is the reality. None of the SL Army generals got this award for the Victory over PLOT or EPRLF or EPDP or TELO)

Edited by ragaa

சரத் பொன்சேகாவுக்கு பீல்டு மார்ஷல் விருது! இந்தியாவும் விருது வழங்கியது!!

இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு அந்நாட்டின் உயரிய விருதான பீல்டு மார்ஷல் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பயங்கரவாதத்தை ஒழித்ததாக கூறி இந்தியாவிலும் சரத் பொன்சேகாவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ராஜபக்சே முதல் முறையாக அதிபர் பதவியேற்றபோது ராணுவ தளபதியாக இருந்தவர் சரத்பொன்சேகா. இவரது தலைமையின் கீழ் தான் இலங்கை ராணுவம் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை நடத்தியது. அதனைத் தொடர்ந்து 2010-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும் ராஜபக்சே அரசு அவர் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தியது. ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு 30 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உலக நாடுகளின் அழுத்தங்களால் 2012-ம் ஆண்டு பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுக்கு பொன்சேகா ஆதரவளித்தார். இதற்கு பிரதிபலனாக பொன்சேகா பாதுகாப்பு செயலராக அல்லது அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் மேற்குலக நாடுகள் இதற்கு எதிராக கடுமையாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. அதே நேரத்தில் பொன்சேகாவிடம் பறிக்கப்பட்ட பதக்கங்கள் திருப்பி அளிக்கப்பட்டன. இதன் உச்சமாக இலங்கையின் "பீல்டு மார்ஷல் " என்ற உயரிய பதவி பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் சிறிசேன இதனை வழங்கி பொன்சேகாவை சிறப்பித்தார். முன்னதாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் இயக்குநராக உள்ள இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடைபெற்ற கருத்தரங்கிலும் சரத்பொன்சேகாவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்ததற்காக விருது வழங்கப்பட்டது. இந்த விருதை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 http://tamil.oneindia.com/news/srilanka/sarath-fonseka-becomes-field-marshal-feature-223154.html

  • கருத்துக்கள உறவுகள்

ராகா பீத்திக்கொள்வது ஓகே, ஆனால் தமிழில் பீத்திக்கொள்ளவும்.

பீட்டர் வேண்டாமே :)

பெண்கள்  படையணியிடம்  அடிவாங்கி  ஓடி  போனவர் இப்ப பீல்ட் மார்ஷல் என்ன  கொடுமை சாள்ஸ்  அன்ரனி  தளபதி வீரமணியின்  கள அனுபவும்  கூட  இருக்காது  ஆளுக்கு   :( 

  • கருத்துக்கள உறவுகள்

"தாக்குதலில் வெண்டால் தலைவரின் திறமை; தோத்தால் எங்கட பிழை"

இது முன்னாள் யாழ் அரசியல் பொறுப்பு டொமினிக் சொன்னது.

எல்லா இடத்திலும் இதுதான் நடந்தது.

உண்மையான வீரர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sarath+Fonseka.jpg

  • கருத்துக்கள உறவுகள்

-----   

கெளரவ பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடுபவராக இருக்கமாட்டார். பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்தின்கீழ் பணியாற்றுபவர் அல்லர். பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் கொண்டிருக்கும் உரிமைகளைக் கொண்டிருப்பார். ஜனநாயக ரீதியில் அரசியலில் ஈடுபடும் சுதந்திரமும் அவருக்கு இருக்கும். அமைச்சரவை அமைச்சர் ஒருவருக்குள்ள அந்தஸ்தை அவர் கொண்டிருப்பார். பீல்ட் மார்ஷல் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சம்பளம் வழங்கப்படும். வாழ்நாள் முழுவதற்கும் அவருக்கான பணியகமும், அதற்கான பணியாளர்களும் வழங்கப்படும்.

பீல்ட் மார்ஷல் ஒருவர் உயிரிழந்தால், இராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படுவதுடன் 21 பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்பட்டு மரியாதை அளிக்கப்படும். உத்தியோகபூர்வ வதிவிடம், போக்குவரத்து வசதிகள் என்பனவும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படும். பீல்ட் மார்ஷல் பதவியில் இருக்கும் ஒருவர் இறக்கும் பட்சத்தில், அவரது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் கொடுப்பனவும் அதிகாரபூர்வ வதிவிடமும் வழங்கப்படும்.

அடப் பாவிங்களா......

ஒருத்தனை, சும்மா உட்கார வைத்து.... சம்பளம் கொடுக்கப் போறீங்களா? :o

  • கருத்துக்கள உறவுகள்

sf-the-welikada-jail-colombo-telegraph.j

திருப்பியும் வாளியோடை வரிசையாய் நிக்க வேண்டி வருமெண்டுறியள்  :lol:

General-Fonseka.jpg:D

அடப் பாவிங்களா......

ஒருத்தனை, சும்மா உட்கார வைத்து.... சம்பளம் கொடுக்கப் போறீங்களா? :o

அவருக்கு எப்படியும் ஓய்வுதியம் போகும்தானே அத்தோட கொஞ்சம் அதிகமா போகுமாக்கும். எங்கட கருணா அம்மானுக்கு அதை விட கூட குடுக்ககிறாங்க அதுக்கு இது தேவலை. 

"தாக்குதலில் வெண்டால் தலைவரின் திறமை; தோத்தால் எங்கட பிழை"

இது முன்னாள் யாழ் அரசியல் பொறுப்பு டொமினிக் சொன்னது.

எல்லா இடத்திலும் இதுதான் நடந்தது.

உண்மையான வீரர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் :)

டொமினிக் சொன்னதாக  உங்களைப்போன்ற ஒரு cipolla  சொல்ல அதை நீங்க இங்கு வந்து சொல்ல...........................

Trinco,

அருகில் இருந்து பார்த்தவர்கள் சொல்லும்போது குழம்பக்கூடாது :rolleyes: :rolleyes: :rolleyes:

There are hundred of Field Marshall all over world, but the only well known field Marshall’s are Gen Vasily Ivanovich Chuikov  (Battle of Stalingrad) and Gen Douglas MacArthur (Pacific Command). This Sarath guy on the other hand, cried for this five star general for his victory over Tamil Tigers. From this, one thing we all can proud how tough the war was against Tamils and how strong we were (I know, Arjun won’t like this, but it is the reality. None of the SL Army generals got this award for the Victory over PLOT or EPRLF or EPDP or TELO)

ராகா வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவராக இருக்கவேண்டும் .அதனால் தான் அவருக்கு தமிழும் தெரியவில்லை நாட்டில் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை .

மற்ற இயக்கங்கள் அழிக்கப்பட்டது புலிகளால் என்று கூட அவருக்கு தெரியவில்லை .விட்டால் இந்தியன் ஆமியுடன் சண்டை பிடித்து வென்றதற்கு கூட ஒரு சிங்கள ஆமிக்கு விருது கொடுக்கவில்லை என்றும் எழுதுவார் .

ஆயுதஎழுத்தையாவது வாசித்து எமது ஆரம்பகால போராட்ட வரலாற்றை அறியலாம் .

கண்ணால் பார்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய்

தீர விசாரித்து அறிவதே மெய்

  • கருத்துக்கள உறவுகள்

ராகா வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவராக இருக்கவேண்டும் .அதனால் தான் அவருக்கு தமிழும் தெரியவில்லை நாட்டில் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை .

மற்ற இயக்கங்கள் அழிக்கப்பட்டது புலிகளால் என்று கூட அவருக்கு தெரியவில்லை .விட்டால் இந்தியன் ஆமியுடன் சண்டை பிடித்து வென்றதற்கு கூட ஒரு சிங்கள ஆமிக்கு விருது கொடுக்கவில்லை என்றும் எழுதுவார் .

ஆயுதஎழுத்தையாவது வாசித்து எமது ஆரம்பகால போராட்ட வரலாற்றை அறியலாம் .

இதிலும் பார்க்க நீங்க ,புதியதோர் உலகத்தை வாசிக்கிறதே நல்லம் :)

ஆயுதஎழுத்தையாவது வாசித்து எமது ஆரம்பகால போராட்ட வரலாற்றை அறியலாம் .

எனக்கும் ஆயுத எழுத்து வாசிக்க ஆசை. எங்கு எப்படி வாங்கலாம். தயவு செய்து அறியத்தர முடியுமா?

எனக்கும் ஆயுத எழுத்து வாசிக்க ஆசை. எங்கு எப்படி வாங்கலாம். தயவு செய்து அறியத்தர முடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?/topic/155146-லண்டனில்-ஆயுத-எழுத்து/

இங்கே கூறப்பட்டுள்ளது

இதற்காக நான் ஆயுத எழுத்தை ஆதரிப்பவன் அல்ல

இங்கே கூறப்பட்டுள்ளது

இதற்காக நான் ஆயுத எழுத்தை ஆதரிப்பவன் அல்ல

நன்றி
 
வாசிக்காமல் நான் கருத்து கூறமாட்டேன்.

நன்றி
 
வாசிக்காமல் நான் கருத்து கூறமாட்டேன்.

மன்னிக்கவும் நீங்கள் கொடுத்த திரியை பார்த்தேன்.
 
வாசிக்கவும் விருப்பமில்லை, கருத்து எழுதவும் பிடிக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.