Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையை என்ன துறையில் படிக்க விடலாம்? எஞ்சினீர் / டாக்டர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை, விரும்பியதை படிக்க விடும் எண்ணம் என்னிடம் இல்லை. இதை பலர் எதிர்க்கலாம். பிள்ளை தான் விரும்பியதை படிச்சு போட்டு, திரும்பவும் என்னிடம் தான் வந்து கையை நீட்டிக்கொண்டு நிக்கும். பிள்ளை விரும்பியதை அறிந்து அது சார்ந்ததாக, அதாவது பிள்ளை எஞ்சினீர் என்றால், எந்த எஞ்சினீர்க்கு இலகுவாக நல்ல சம்பளத்துடன் வேலை எடுக்கலாம் என்று ஆராய்ந்து அதை படிக்க சொல்வது (வழிநடத்துவது) தான் பெற்றோர் கடமை.

உதாரணமாக இலங்கயில் பலர் சிவில் எஞ்சினீர் படிச்சுபோட்டு, UK ல் கடைதான் போட்டு இருக்கினம். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர் படிச்சா பலர் நல்ல சம்பளத்தோட வேலை பாக்கினம்.

என்னை பொறுத்தவரை Electronic & Telecommunication க்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்குது. நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் எதிர்காலத்தில் இந்த துறை எப்படி இருக்குமெண்டு தெரியாது. இதுக்கு அடுத்தபடி சாப்ட்வேர் இன்ஜினியரிங் நல்லது. ஆனால் எது எப்படியோ பிள்ளைக்கு அந்த துறயில் கொஞ்சமாவது விருப்பம் இருந்தால் தான் அந்த துறயில் முன்னுக்கு வர முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவத்துறை (டாக்குத்தர் மட்டுமல்ல) சார் மற்றும் சமூக சுகாதாரக் கல்வி கற்பது வேலையில் நீண்ட காலம் நீடித்து நிலைக்க உதவும்.

அறிவியல் ஆய்வாளர் கல்வியும் சிறந்தது. ஆனால் அது வாழ்க்கை பூரா கல்வியில் கவனம் செலுத்தினால் மட்டுமே உபயோகமானது.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

சான்றிதழ் எந்தத் துறையில் எடுத்தாலும் குழந்தைகளை சமூக அறிவுள்ளவர்களாக வளர விடுங்கள்! பகுதி நேர வேலைக்கு அனுப்புங்கள், இருக்கிற சமூகத்தின் நல்ல தீய பக்கங்களை உள்வாங்கக் கொஞ்சம் அனுமதியுங்கள்..இல்லையேல் எந்தத் துறையில் சான்றிதழ் எடுத்தாலும் முதுகு சொறியத்தான் பயன் படும்..உங்களுக்குச் சொல்ல வேணுமா எம்.பி இதைப் பற்றி? :D

  • கருத்துக்கள உறவுகள்

கல்விக்கும், பணம் சம்பதிப்பதற்கும் தொடர்பு இல்லீங்கோ?

பணம் பற்றி சொல்லிக் கொடுப்பது, அதை தேடுவது, புத்திசாலித்தனமாக முதலிடுவது, கடன் கேட்டு வருபவர்களுக்கு, கதை சொல்லி அனுப்புவது, பண விடயத்தில், வாக்கு கொடுக்காமல் இருப்பது, கொடுத்தால்அதை காப்பது போன்ற விடயங்கள், செட்டியார்கள் தமது மகன்களுக்கு சொல்லிந்தரும் பாடம். :lol:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை, விரும்பியதை படிக்க விடும் எண்ணம் என்னிடம் இல்லை. இதை பலர் எதிர்க்கலாம். பிள்ளை தான் விரும்பியதை படிச்சு போட்டு, திரும்பவும் என்னிடம் தான் வந்து கையை நீட்டிக்கொண்டு நிக்கும். பிள்ளை விரும்பியதை அறிந்து அது சார்ந்ததாக, அதாவது பிள்ளை எஞ்சினீர் என்றால், எந்த எஞ்சினீர்க்கு இலகுவாக நல்ல சம்பளத்துடன் வேலை எடுக்கலாம் என்று ஆராய்ந்து அதை படிக்க சொல்வது (வழிநடத்துவது) தான் பெற்றோர் கடமை.

உதாரணமாக இலங்கயில் பலர் சிவில் எஞ்சினீர் படிச்சுபோட்டு, UK ல் கடைதான் போட்டு இருக்கினம். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர் படிச்சா பலர் நல்ல சம்பளத்தோட வேலை பாக்கினம்.

உங்களது   முதலாவது வசனத்தைப்படித்துப்போட்டு

கொஞ்சம் ரென்சனாகிட்டன்.. 

பிள்ளையின் விருப்பத்தை

ஈடுபாட்டை  பாடசாலையுடன் தொடர்புகளைப்பேணுவதனூடாக அறிந்து

அவர்களது ஆலோசனை ஏற்று முடிவுகளை எடுப்பதே சரியானதாகும்.

இதற்கு நமது நேரடி அனுபவங்களையும்

வளர்ப்புக்களையும் சொல்வதே பொருந்தும்

ஆனால் தற்பொழுது அவை எம்மைத்திருப்பித்தாக்கும் ஆபத்தான  கருவிகளாக யாழில் உள்ளன..

எனவே

மௌனம் சிறந்தது 

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையின் விருப்பத்தை

ஈடுபாட்டை பாடசாலையுடன் தொடர்புகளைப்பேணுவதனூடாக அறிந்து

அவர்களது ஆலோசனை ஏற்று முடிவுகளை எடுப்பதே சரியானதாகும்.

நன்றி.

டொக்டரா வர படி என்றுதும், அதில பெயில் விட்டா, அக்கவுண்டன்சியை படியன் எண்டுறதும் ஊர் விளயாட்டு.

ஜேர்மனில், பாடசாலை ஆசிரியர்கள் தான் மாணவர்க்கு உகந்த துறை குறித்து தீர்மானிக்கிறார்கள் என கேள்விப் பட்டேன்.

இலண்டனில், பாடசாலை ஆசிரியர்கள் உடன் கலந்து தீர்மானிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Problem solving, critical thinking, பொருளாதார அறிவு, சரி பிழைகளை பகுத்தறியும் தன்மை போன்ற தகமைகளை சிறுபிராயத்தில் இருந்தே வளர்க்கவேண்டும். சவாலான விடயங்களை துணிவுடன் எதிர்கொள்ளும் நேரான சிந்தனையும் செயற்திறனும் வளர்க்கப்பட்டால் பிள்ளைகள் தமக்குரிய துறையைத் தாமே தெரிவு செய்வார்கள். ஒரு பிள்ளைக்கு விருப்பமில்லாத ஒன்றைப் பெற்றோர்கள் திணிக்கக்கூடாது. சரியான வழிநடத்தலை பாடசாலை ஆசிரியர்களுடன் சேர்ந்து கொடுக்கவேண்டும். தனிய கல்விசார் அறிவை மட்டும் கொடுத்தால் போதாது!

எதிர்காலத்தில் மிகவும் சவாலானதும் மனித குலத்திற்கு முக்கியமான தேவையுமாக உள்ளவை:

1. Biomedical engineering - கணிதம், உயிரியல், இரசாயனவியல், இலத்திரனியல், கணினி அறிவியல் எல்லாம் கலந்த மிகவும் சவாலான துறை. அதிக வேலை வாய்ப்புக்கள் உள்ளன.

2. Aritificial intelligence.

3. Financial engineering - உயர் கணிதம், பொருளாதாரம் கலந்த துறை. அதிக சம்பளம் கொடுக்கும் முதலீட்டு வங்கிகளில் வேலைவாய்ப்புக்கள் உள்ளன.

ஆனால் சமூக சேவையில் அக்கறையுள்ள பிள்ளைகள் வருமானத்தைக் குறியாகக் கொள்ளாது சுயதிருப்திக்காக ஆசிரியராகவோ, குழந்தை மருத்துவத்திலோ ஈடுபாடு காட்டினால் அதனைத் தடுக்காது ஊக்கம் கொடுக்கவேண்டும். தமிழ்ப் பெற்றோர் பலர் வசதியான வாழ்வையும், பெருமையான வாழ்வையும் விரும்புவதால் பிள்ளைகளுக்கு தமது சுயநலமான சொந்த விருப்பங்களைத் திணிக்க முற்பட்டு பிள்ளைகளுடன் முரண்பாட்டை வளர்க்கின்றனர்!

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணமாக இலங்கயில் பலர் சிவில் எஞ்சினீர் படிச்சுபோட்டு, UK ல் கடைதான் போட்டு இருக்கினம். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர் படிச்சா பலர் நல்ல சம்பளத்தோட வேலை பாக்கினம்.

ஹலோ எம்.பி.. சிவில் எஞ்சினியரிங் படிச்சால் மட்டும் காணாது.. common sense, professional judgement, sense for structures எல்லாம் இருக்கவேணும்.. இல்லாவிட்டால் கடைதான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அட நாசமாய்போக......... மூன்று நேரமும் மூக்குமுட்ட சாப்பிடுற சாப்பாடு எங்கிருந்து வருது எண்டதை ஒருத்தரும் சிந்திக்கவேயில்லையா?
 
விவசாயம் எண்டால் அவ்வளவு கேவலமாய்ப்போச்சோ??
 
விடிஞ்சால் பொழுதுபட்டால் டாக்குத்தர் எஞ்சினியர் சாப் சாறி எஞ்சினியர் எக்கவுண்டன் இதை விட்டால் வேறை தொழிலே தெரியாத மேட்டுக்குடி தவளைகள்.  :D  :lol:

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொறுத்தவரை Electronic & Telecommunication க்கு நல்ல வேலைவாய்ப்பு இருக்குது. நல்ல சம்பளமும் கிடைக்கும். ஆனால் எதிர்காலத்தில் இந்த துறை எப்படி இருக்குமெண்டு தெரியாது. இதுக்கு அடுத்தபடி சாப்ட்வேர் இன்ஜினியரிங் நல்லது. ஆனால் எது எப்படியோ பிள்ளைக்கு அந்த துறயில் கொஞ்சமாவது விருப்பம் இருந்தால் தான் அந்த துறயில் முன்னுக்கு வர முடியும்.

சொல்வது சரிதான். பிள்ளை படங்களை பார்த்து போட்டு விமானி ஆக வர விரும்பினால் விட்டு போட்டு ஒவ்வொரு முறை விமானம் விழும் போதும் யோசிச்சுகொண்டு இருப்பதை விட ஒரு ஏலேக்ட்ரோனிக் எஞ்சினீர்க்கு படிக்க வைப்பது நல்லது. Drone செய்து அதை பறக்க விடட்டும்.

மருத்துவத்துறை (டாக்குத்தர் மட்டுமல்ல) சார் மற்றும் சமூக சுகாதாரக் கல்வி கற்பது வேலையில் நீண்ட காலம் நீடித்து நிலைக்க உதவும்.

அறிவியல் ஆய்வாளர் கல்வியும் சிறந்தது. ஆனால் அது வாழ்க்கை பூரா கல்வியில் கவனம் செலுத்தினால் மட்டுமே உபயோகமானது.  :icon_idea:  :)

நீங்கள் சொல்வது சரிதான். பொருளாதார நெருக்கடி வந்தாலும் வேலை போகாது. பொருளாதார நெருக்கடி வரும்போது வைத்தியசாலை வரும் ஆட்கள் தான் கூடும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது   முதலாவது வசனத்தைப்படித்துப்போட்டு

கொஞ்சம் ரென்சனாகிட்டன்.. 

பிள்ளையின் விருப்பத்தை

ஈடுபாட்டை  பாடசாலையுடன் தொடர்புகளைப்பேணுவதனூடாக அறிந்து

அவர்களது ஆலோசனை ஏற்று முடிவுகளை எடுப்பதே சரியானதாகும்.

இதற்கு நமது நேரடி அனுபவங்களையும்

வளர்ப்புக்களையும் சொல்வதே பொருந்தும்

ஆனால் தற்பொழுது அவை எம்மைத்திருப்பித்தாக்கும் ஆபத்தான  கருவிகளாக யாழில் உள்ளன..

எனவே

மௌனம் சிறந்தது 

நன்றி.

எனக்கு தெரிந்த ஒருவரின் பிள்ளைக்கு, உங்க UKல் ஒரு grammer ஸ்கூல்லில், வானியலில் ஈடுபாடு இருக்கு என்பதால் அது சார்பாக படிக்க விடும்படி சொல்லி இருக்கினம். அதை படிச்சு போட்டு வேலை எடுப்பது மிகவும் கஷ்டம். விருப்பத்துக்கு படிப்பது சோறு போடாது என்பது பிள்ளைக்கு தெரியாது. நானும் இப்படி ஏதோ படிக்க வேணும் என்று கனவும் கண்டனான். படிச்சு இருந்தால் கிழிஞ்சு இருக்கும் இப்ப.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/148018-எனது-வாழ்வில்மகிழ்ச்சியான-தரு/

மேலுள்ள பதிவில்.... உறவுகள் தந்த ஆலோசனைகள் உண்டு,
உங்களுக்கு, பிரயோசனமாக... இருக்கும் என்று நம்புகின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

  இங்கு பலரும் பல துறைகள்பற்றி ஏற்கனவே எழுதிவிட்டார்கள்....

எதிர்காலத்தில் வேலை தட்டுபாட்டை கொண்டுவரக்கூடிய துறையில் ஒன்றாக 
நெட்வேர்க் செகிருடி என்ஜீனியரிங் network security engineer இருக்கும் என்பது எனது எதிர்பார்ர்ப்பு.
 
பாங்க் அரச அலுவலகங்கள் பெரிய கொம்பனிகள் போன்றவைக்கு 
தமது நெட்வொர்க்கை பாதுகாப்பது என்பது இன்றி அமையாத ஒன்றாக இருக்கும்.
காக்கர்சிடம் இருந்து கூடிய பாதுகாப்பு என்பது .... இன்றி அமையாத ஒன்று. 
இலகுவான வேலையாகவும் இருக்கலாம்.
நோ டென்சன் நோ ஸ்ட்ரெஸ். 

MP அது சரி வருடத்திற்கு 200K உழைக்கும் நீங்கள் பெரிய தொழில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து அது சார்ந்த கற்கை நெறியை கற்பிக்கலாமே?

Edited by Surveyor

எந்த துறையில் படித்தாலும் அதை ஒழுங்காக படித்தால் சரி .

நம்ம யாழ் இந்து கனடா பழைய மாணவர் இலங்கையில் பொறியியலாளர் .கனடா வந்து புகைப்படம் எடுக்கும் ஸ்டுடியோ தொடங்கினார் (யாழ் இந்து புகைபடங்கள் அங்குதான் எடுப்போம் )

பின்னர் பல வருடங்களின் பின் ரியல் எஸ்டேட் ,இப்ப வீடு கட்டியும் கொடுக்கின்றார் .

தனது ஸ்டுடியோவிற்கு அருகில் காணி வாங்கி மில்லியன் டாலர் வீடு கட்டியிருக்கின்றார் 

கடை வைத்திருக்கும் எனது அத்தானும் நாட்டில் Economics விரிவுரையாளர் .மற்ற அத்தான் நாட்டில் Planning Officer .ஸ்கொலர்ஷிப்  தான் வெளிநாடு வந்தவர் .அவரும் கடை தான் போட்டார் . Downtown இல் வியாபாரம் செய்த கட்டிடமும் வாங்கிவிட்டார் .வாடகைக்கு கொடுத்துவிட்டு இந்தியாவில் வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார் .

கடை என்று நக்கல் அடிப்பவர்களுக்கு தான் இந்த செய்தி . :lol:

செவ்வன திருந்த செய்தால் சரி .செய்யும் தொழிலே தெய்வம் .

  • கருத்துக்கள உறவுகள்

வரும்காலத்தில் எந்த துறையாய் இருந்தாலும் ஆல்வின் டப்ளர் சொல்லியது தவிர்க்க முடியாதது.

gud-quote.jpg

பிள்ளை, விரும்பியதை படிக்க விடும் எண்ணம் என்னிடம் இல்லை. இதை பலர் எதிர்க்கலாம். பிள்ளை தான் விரும்பியதை படிச்சு போட்டு, திரும்பவும் என்னிடம் தான் வந்து கையை நீட்டிக்கொண்டு நிக்கும்.

MP, பெற்ற பிள்ளையை ஒருமையில் விழிப்பதை தவிர்க்கலாமே!

  • கருத்துக்கள உறவுகள்

எம்பி, உஅகட பிள்ளைக்கு அவன் கஸ்டப்படுகிற காலத்தில ஏதாவது உதவி தேவைப்படுமிடத்தில் ஒரு சதமும் குடுக்கமாட்டன் எண்டு கூறுகிறியள் பிறகௌ எதுக்கு சம்பாதிக்கிறியள்? பிறகு எதுக்கு அவனை என்ன துறையில படிக்கவிடலாம் எண்டு கேக்குறியள், அவனுக்கு என்ன வருகுதொ அதைச்செய்ய விடுங்கோ அனால் இப்போதே சொல்லிப்போடுங்கோ என்னெண்டாலும் படி ஆனால் எதிர்காலத்தில என்னை எதிர்பாராதே என.

கெட்டித்தனமான பிள்ளை எதைச்செய்தாலும் மனதுக்குத் திருப்தியாகச் செய்தால் நல்லா வருவான். அதுக்காக சின்ன வஜசில கண்டதையெல்லாம் வாங்கிகொடுத்து அவனைக் கெடுத்திடவேண்டாம்.

உலகத்துக்கு உணவிடுதலே மிகவும் நல்லதொழில் அதுக்காக மண்வெட்டியைக்கொடுத்து வன்னிக்கு அனுப்பச்சொல்லவில்லை, உயிரினம் இருக்கும்வரை எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கும் ஆகவே அதுசம்பந்தமாகப் படிப்பதே நல்லது எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நாசமாய்போக......... மூன்று நேரமும் மூக்குமுட்ட சாப்பிடுற சாப்பாடு எங்கிருந்து வருது எண்டதை ஒருத்தரும் சிந்திக்கவேயில்லையா?
 
விவசாயம் எண்டால் அவ்வளவு கேவலமாய்ப்போச்சோ??
 
விடிஞ்சால் பொழுதுபட்டால் டாக்குத்தர் எஞ்சினியர் சாப் சாறி எஞ்சினியர் எக்கவுண்டன் இதை விட்டால் வேறை தொழிலே தெரியாத மேட்டுக்குடி தவளைகள்.  :D  :lol:

ஒரு சிறு அனுபவத்தை எழுதலாம்

அண்மையில் சம்பந்தம் பேசும் இடத்தில் இருந்தேன்

பொடியன் எஞ்சினியர்

படித்துவிட்டு வேறு ஆட்களிடம் வேலைக்குப்போகாமல்

தானே  பல ஏக்கர் நிலத்தை  விலைக்கு வாங்கி ஒரு பண்ணையையும் தோட்டத்தையும் உருவாக்கி

அங்கு மரக்கறிகள்

மற்றும் மாட்டுப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணை வைத்திருக்கிறார்

அவரே எல்லாவற்றையும் தற்போதைய விஞ்ஞான முறைப்படி பராமரிக்கிறார்...

இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்ற மறுத்த  பெண் சொன்ன காரணம்

அதுக்குள்ள (மாடு கோழி விவசாயம்) என்னால் வாழமுடியாது என்று....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு என்ஜினியர் இலங்கையிலா, நம்பவே முடியல. இப்படி பலபேர் இந்தியாவில் இருக்கினம். US போய் உழைத்து போட்டு ப்ரோக்ராம் எழுதுவதில போர் அடிச்சவுடன் இந்தியா வந்து பொழுது போக்குக்கு விவசாயம் செய்கினம். விவசாயம் போர் அடித்தவுடன் என்ன செய்வினமோ தெரியாது

ஆடு மாடு மேய்க்கலாம் . :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சிறு அனுபவத்தை எழுதலாம்

அண்மையில் சம்பந்தம் பேசும் இடத்தில் இருந்தேன்

பொடியன் எஞ்சினியர்

படித்துவிட்டு வேறு ஆட்களிடம் வேலைக்குப்போகாமல்

தானே  பல ஏக்கர் நிலத்தை  விலைக்கு வாங்கி ஒரு பண்ணையையும் தோட்டத்தையும் உருவாக்கி

அங்கு மரக்கறிகள்

மற்றும் மாட்டுப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணை வைத்திருக்கிறார்

அவரே எல்லாவற்றையும் தற்போதைய விஞ்ஞான முறைப்படி பராமரிக்கிறார்...

இந்த மாப்பிள்ளையை வேண்டாம் என்ற மறுத்த  பெண் சொன்ன காரணம்

அதுக்குள்ள (மாடு கோழி விவசாயம்) என்னால் வாழமுடியாது என்று....

இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்..
 
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்திபூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
 
நான் ஆராரோ என்று தாலாட்ட..
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
 
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
 
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே.. அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட..
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
 
தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்
போற்றும் புகளுரைகள்..
 
தூக்க மருந்தினை போன்றவை பெற்றவர்
போற்றும் புகளுரைகள்..
நோய் தீர்க்கும் மருந்தினை போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள்..கூறும் அறிவுரைகள்..
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்திபூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்..
 
ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலா..ம்
 
ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலா..ம்
தினம் நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலா..ம்  நாடும் நலம் பெறலா..ம்
நான் ஆராரோ என்று தாலாட்ட..
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட
 
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை…
 
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை…
நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை
பேர் சொல்லி வாழ்வதில்லை
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்திபூவில்
தொட்டிலை கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்..
நான் ஆராரோ என்று தாலாட்ட..
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.