Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புங்குடுதீவில் மாணவி கடத்தப்பட்டு சடலமாக மீட்பு

Featured Replies

நினைக்கும் போது பொறுமையாக இருக்க முடியல

ஒவ்வொரு கணமும் பற்கள் நறநறவென தானாக தம்மைத்தாமே கடிக்கின்றது .

தூசன வார்த்தைகளை தவிர வேறு எதுவும் மனதில் இருந்து வருதில்லை ....

கொல்லனும் என்ற கொலை வெறி வார்த்தையை மட்டும் என் வாய் உச்சரிக்குது .

  • Replies 169
  • Views 17k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

மனதை தளர விடாதீர்கள் அஞ்சரன். பிள்ளையின் குடும்பத்துக்கு யாழ் களம் மூலம் எதேனும் உதவி செய்ய வேண்டுமென்றால் தயங்காமல் சொல்லுங்கள்.

செய்தியை வாசித்ததில் இருந்து மனம் வெறுமையாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

எங்கள் பாதுகாப்பும் எங்கள் வாழ்வும் எமக்குள்ளிருந்தே மீளெழுச்சி பெறவேண்டும்.  பேயுலவும் நிசியிலும் பீதியின்றி பெண் உலவிய காலம் எங்களிடம் இருந்தது. இப்போது... கைமீறிப்போய்விட்டது. காலம் ஆற்றமுடியாத காயங்கள் பல இந்தச்சின்னவளின் கொடிய மரணமும் அதனோடு ஒன்றாக.....குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது மக்களால் வழங்கப்படவேண்டும்...அத்தண்டனையானது இன்னொரு பெண்ணை எந்த மிருகமும் மனதால்தன்னும் தீண்ட எண்ணாதநிலையை வழங்கவேண்டும்.

மகளே உன் கொடிய மரணம் மண்ணின் கண்களைத் திறக்கட்டும்.

....குற்றவாளிகளுக்கு தண்டனை என்பது மக்களால் வழங்கப்படவேண்டும்...அத்தண்டனையானது இன்னொரு பெண்ணை எந்த மிருகமும் மனதால்தன்னும் தீண்ட எண்ணாதநிலையை வழங்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சங்கிலி களவெடுத்தவரையெல்லாம் படம் போட்டு பக்கம்பக்கமாக எழுதும் ஊடகங்கள் எங்கே போய்விட்டன? காமுகர்களின் படத்தை வீதிக்கு வீதி ஒட்டி விட வேண்டும்.
 
எமது ஊர் பெண்களை எவரும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அது இன்றும் இருக்கின்றது. காரணம் சும்மா விசிலடித்தவனுக்கே கொடுத்த வைத்தியங்கள் அப்படி!!!!
முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இலங்கை பொலிசையும் சட்டத்தையும் எதிர்பார்த்தால் பேயன் பித்தனாகத்தான் திரிய வேண்டி வரும். 
 
அறுக்கணும் கருவோடு அறுக்கணும்.
  • கருத்துக்கள உறவுகள்

கள உறவு அஞ்சரனுக்கும், இப் பிள்ளையின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள். வெளிநாட்டின் உறவுகள் நண்பர்களிடையேயான பிணக்குகள் தாயகத்தில் உள்ளவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாக மாறுகின்றது.

கள உறுப்பினர் அஞ்சரனுக்கும் அவரின் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

30 வருடங்களுக்கு முன் வடமராட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது , இலங்கை நீதிமன்ற தீர்ப்பு கொலை செய்தவங்களுக்கு ஒரு தண்டனையும் கொடுக்க வில்லை, அப்பதான் இயக்கங்கள் முளைவிட தொடங்கிய காலம் , இயக்கம் முதல் வேலையா வழக்கை தலைகீழா புரட்டின வக்கீல போட முயற்சிக்க , வக்கீல் லண்டனுக்கு ஓடினார்.

நான் அறிந்த வரை , அந்த கடத்தல்+ கொலை செய்த கும்பலில் எவரும் நல்லா வாழ்ந்ததா இல்லை.

ஆழ்ந்த இரங்கல்கள். வித்தியாவின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரனுக்கும், இச்சிறுமியின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நினைக்கும் போது கோபமும் ஆத்திரமும் தான் வருகிறது. சன நடமாட்டம் இல்லாத வளியால் செல்லும் மாணவர்கள், 2-3 பேர் சேர்ந்து செல்வது கொஞ்சம் பாதுகாப்பாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

aaeb6737a3ca5574c0ab9b8a8d4dc3af

  • கருத்துக்கள உறவுகள்

வார்த்தை இல்லை சொல்ல.அஞ்சரனுக்கும் அந்தப்பிள்ளையின் குடும்பத்துக்கும் அனுதாபங்கள்.

சகோதரி வித்தியாவின் இறுதி யாத்திரையின் சிறு பகுதி....
 
https://www.facebook.com/annasinna.thampi/videos/vb.100002519581090/826771630750149/?type=2&theater
 
Edited by ராஜன் விஷ்வா

  • கருத்துக்கள உறவுகள்

vidiyaa.jpg

அன்புச்சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்

இவரின் இழப்பு ஒவ்வொரு தமிழனின் வீட்டில் நடந்த இழப்பாக கருதப்படுகின்ற போதும், ஒரு சில எளியதமிழனே இதை செய்திருப்பது மிகக்கேவலமான விடயம்

மக்கள் இடம்பெயர்ந்து காடுபத்திபோயிருக்கும் அழகியதீவகப்பகுதிகளில் இவ்வன்செயல்கள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன

இந்நேரத்தில் உறவுகளிடம் ஒரு அன்பான, நியாயமான கோரிக்கையை வைக்கலாம் என நினைக்கின்றேன்

"ஈழத்தில் உள்ள உங்கள் வீடு வளவுகளை துப்பரவு செய்து பராமரிப்பதன் மூலமோ அல்லது முடியாதவிடத்து அதை அங்குள்ளவர்களுக்கு நியாயமான விலையில் வித்துவிடுவது இவ்வாறான பாழடைந்த பிரதேசங்களை குறைக்க உதவியாக இருக்கும்."

அன்பு உறவு அஞ்சரனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மாணவி கொலை சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு!

[saturday 2015-05-16 07:00]
vithya-murder-140515-250-seithy.jpg

புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவலோகநாதன் வித்தியா கடந்த புதன்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மாலைவரை வீடு திரும்பாத நிலையில் நேற்றுமுன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மக்கள் வழங்கிய தகவலையடுத்து மரத்தில் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இவருடைய சடலம் ஊர்காவற்றுறை பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.

இவர் மூன்றிற்கு மேற்பட்ட நபர்களால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாகவும், உடலில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பிரேதப் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு வல்லனை பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபரான ரவி என்ற நபர் முதலில் கைதுசெய் யப்பட்டதாகவும், அவர் வழங்கிய தகவல்களையடுத்து செந்தில் மற்றும் சின்னாம்பி என்ற இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் மூவரும் சகோதரர்கள் என்றும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதுசெய்யப்பட்ட மூவரும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில், பொலிஸாரால் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு ஊர்காவற்றுறை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர்களில் ஒருவர் ஏற்கனவே கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலையானவர். அத்துடன், இவர் ஒப்பந்த கொலைகாரர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=132156&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

-------

சந்தேகநபர்களில் ஒருவர் ஏற்கனவே கொலைக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு விடுதலையானவர். அத்துடன், இவர் ஒப்பந்த கொலைகாரர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒருவர் 10,000 ரூபாய்க்கு கொலை செய்வாராம்.

அதாவது... 66 €க்கு ஒரு  கொலை செய்யக் கூடியவர். :o

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் 10,000 ரூபாய்க்கு கொலை செய்வாராம்.

அதாவது... 66 €க்கு ஒரு  கொலை செய்யக் கூடியவர். :o

அதைச் சொல்லுறது யாரு. சொறீலங்கா பொலிஸ். அப்ப சொறீலங்கா பொலிஸ் அவரை தெரிஞ்சு கொண்டு தான் வெளில உலாவ விட்டிருக்குது. தாங்கள் செய்யுறதை அவன் செய்து பிழைக்கட்டென்னு போல. :icon_idea::rolleyes::(

ஏற்கெனவே.... கொலைக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர், வெளியெ.... விடப்பட்டதால்,

வரும் ஆபத்தை, பொலிசார் கணிக்கத் தவறி விட்டார்கள்.

அல்லது... தமிழர் பகுதியில், வேண்டுமென்றே... உலாவ விட்டிருக்கின்றார்கள். :mellow:  :(

தமிழ் பகுதிகளில் நீதிபதிகள் பெரும்பாலும் தமிழர்களே.

கொலை குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தவர் ஒரு நீதிபதியாகவே இருக்க வேண்டும்.

  1. ஏன் ஒரு தமிழ் நீதிபதி இந்த நபரை வெளியில் விட அனுமதித்தார்?
  2. இதனால் வரும் ஆபத்தை கவனிக்க இந்த நீதிபதி ஏன் தவறினார்?
  3. யாழ் களத்தில் உள்ளவர்கள் ஏன் இந்த நீதிபதியின் முடிவு பற்றி கேள்வி எழுப்பவில்லை? 
  4. சிவில் சமுகத்தின் சட்ட வல்லுனர்களான குமாரவடிவேல் குருபரன் போன்றவர்கள் இவ்வாறான முடிவுகளில் தவறிழைக்கும் தமிழ் மக்களின் நீதி துறை தலைமைகள் பற்றி எதுவும் பேசுவதில்லையே? ஏன்? 
  5. யாழ் கல உறுப்பினர்கள் அது பற்றி சிவில் சமுகத்தின் சட்ட வல்லுனர்களிடம் கேள்வி எழுப்புவதும் இல்லையே? ஏன்?

Edited by Jude

பிள்ளையை இழந்த குடும்பத்தினருக்கும் கள உறவு அஞ்சரனுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அந்த பிள்ளையின் முகத்தை பார்க்கும் பொழுது இயலாமையும் ஆத்திரமும் தான் ஏற்படுகின்றது. 
 
மேலை நாடுகளில் neighbourhood watch போன்ற மக்கள் கட்டமைப்புகளை இந்த பகுதிகளில் உருவாக்க வேண்டும். கனடா பல்கலைகழகங்களில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட இவ்வாறான கட்டமைப்புகள் பல உள்ளன. இரவில் அல்லது ஆள் நடமாற்றம் அதிகம் இல்லாத பகுதிகளால் செல்லும் மாணவிகளுக்கு இந்த கட்டமைப்பில் இருப்பவர்கள் துணையாக அவர்களின் வீடு வரை சென்று விட்டுவிட்டு வருவார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பகுதிகளில் நீதிபதிகள் பெரும்பாலும் தமிழர்களே.

கொலை குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தவர் ஒரு நீதிபதியாகவே இருக்க வேண்டும்.

  1. ஏன் ஒரு தமிழ் நீதிபதி இந்த நபரை வெளியில் விட அனுமதித்தார்?
  2. இதனால் வரும் ஆபத்தை கவனிக்க இந்த நீதிபதி ஏன் தவறினார்?
  3. யாழ் களத்தில் உள்ளவர்கள் ஏன் இந்த நீதிபதியின் முடிவு பற்றி கேள்வி எழுப்பவில்லை? 
  4. சிவில் சமுகத்தின் சட்ட வல்லுனர்களான குமாரவடிவேல் குருபரன் போன்றவர்கள் இவ்வாறான முடிவுகளில் தவறிழைக்கும் தமிழ் மக்களின் நீதி துறை தலைமைகள் பற்றி எதுவும் பேசுவதில்லையே? ஏன்? 
  5. யாழ் கல உறுப்பினர்கள் அது பற்றி சிவில் சமுகத்தின் சட்ட வல்லுனர்களிடம் கேள்வி எழுப்புவதும் இல்லையே? ஏன்?

நீதிபதியாக ஒரு ரோபோ கூட இருக்கலாம். அங்கு வழங்கப்படும்.. சிபார்சுகளுக்கு அமையத் தான் கைதிகளுக்கு பிணை வழங்கப்படுகிறது. அந்தச் சிபார்சுகளை யார் செய்வது..?! ஒரு கடும் குற்றவாளியின் வெளியக நடவடிக்கைகள் குறித்து நீதிபதிக்கு தெரியவாய்ப்பில்லை. அதனை சரிவரத் தெரிய வேண்டியவர்கள்.. காவல்துறையினர். அவர்களின் சிபார்சில்லாமல்.. ஒரு கைதி விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. அந்த வகையில்.. சட்டத்தையோ.. நீதிபதியையோ திட்டிப் பிரயோசனம் அதிகம் இல்லை. ஆனால் அவர்களை தவறாக வழிநடத்தக் கூடிய காவல்துறை குறித்துத்தான் மக்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.

கொலையாளிகளை நீதிபதி கைது செய்வதில்லை. காவல்துறை தான் கைது செய்கிறது. சான்றுகளோடு நீதிமன்றில் நிறுத்துகிறது. பின் பிணை வழங்கவும் சம்மதம் சொல்கிறது. அப்படி ஆபத்தான நபர்களை வெளியில் விடும் போது நீதிபதி அவர்களை கண்காணிப்பதில்லை. காவல் துறைதான் அதைச் செய்ய வேண்டும்.

இக்கொலையில்.. காவல்துறையின் மாற்றான் தாய் மனப்பான்மையே முக்கியமாக கொலையாளிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இக்கொலையில் சிங்கள காவல்துறையின் மறைமுக நோக்கமும் பங்களிப்பும்.. உள்ளது... அதில் மாற்றுக் கருத்திருப்பதாகத் தெரியவில்லை.

பெற்றோர் காணவில்லை என்று முறையிட்ட உடனேயே நடவடிக்கையில் இறங்கி இருந்தால்.. அந்தப் பிள்ளை இப்போ உயிரோடு நல்ல நிலையில்.. மீண்டிருக்கக் கூடும். அந்தத் தவறை நீதிபதி செய்யவில்லை. சிங்கள காவல்துறையே செய்துள்ளது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியாக ஒரு ரோபோ கூட இருக்கலாம். அங்கு வழங்கப்படும்.. சிபார்சுகளுக்கு அமையத் தான் கைதிகளுக்கு பிணை வழங்கப்படுகிறது. அந்தச் சிபார்சுகளை யார் செய்வது..?! ஒரு கடும் குற்றவாளியின் வெளியக நடவடிக்கைகள் குறித்து நீதிபதிக்கு தெரியவாய்ப்பில்லை. 

  1. தமிழ் நீதிபதிகளும் தமிழ் அரச சட்டத்தரணிகளும் (அரசு சார்பில் குற்றவாளிகளை  விடுவிப்பதை எதிர்க்க வேண்டியவர்கள்) தமிழ் பகுதிகளிலேயே வெறும் பொம்மைகளாக இருந்து கொண்டு, தாம் முடிவெடுத்து கட்டளை பிறப்பிக்க கூடிய அதிகாரத்தை கொண்டு இருந்தும் அதனை பயன்படுத்துவதற்கு கூட சிங்கள  பொலிசாரிடம் தங்கி இருக்கும் வரை..
  2. கடும் குற்றவாளிகளை  பற்றி கேட்க வேண்டிய கேள்விகளை பொலிசாரிடம் கேட்க முடியாத அளவுக்கு அறிவு குறைவானவர்கள் நீதிபதிகளாகவும் தலைவர்களாகவும் இருக்கும் வரை ..
  3. அவ்வாறு அவர்கள் இருப்பது தவிர்க்க முடியாதது என்று தமிழ் மக்கள் கருதும் வரை ..

தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழும் ஆற்றலை தாமாகவே ஒதுக்கி வருவதாகவே தெரிகிறது.

இக்கொலையில் சிங்கள காவல்துறையின் மறைமுக நோக்கமும் பங்களிப்பும்.. உள்ளது... அதில் மாற்றுக் கருத்திருப்பதாகத் தெரியவில்லை.

குற்றவாளியை வெளியில் விட்ட நீதிபதிக்கு இதில் எந்த பங்கும் இல்லை என்ற வகையில் நீங்கள் எழுதுவது இவ்வாறன கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கு ஆர்வம் உள்ளதா அல்லது நீங்களும் இந்த படுமோசமான கொலையை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துகிறீர்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

  1. தமிழ் நீதிபதிகளும் தமிழ் அரச சட்டத்தரணிகளும் (அரசு சார்பில் குற்றவாளிகளை  விடுவிப்பதை எதிர்க்க வேண்டியவர்கள்) தமிழ் பகுதிகளிலேயே வெறும் பொம்மைகளாக இருந்து கொண்டு, தாம் முடிவெடுத்து கட்டளை பிறப்பிக்க கூடிய அதிகாரத்தை கொண்டு இருந்தும் அதனை பயன்படுத்துவதற்கு கூட சிங்கள  பொலிசாரிடம் தங்கி இருக்கும் வரை..
  2. கடும் குற்றவாளிகளை  பற்றி கேட்க வேண்டிய கேள்விகளை பொலிசாரிடம் கேட்க முடியாத அளவுக்கு அறிவு குறைவானவர்கள் நீதிபதிகளாகவும் தலைவர்களாகவும் இருக்கும் வரை ..
  3. அவ்வாறு அவர்கள் இருப்பது தவிர்க்க முடியாதது என்று தமிழ் மக்கள் கருதும் வரை ..

தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழும் ஆற்றலை தாமாகவே ஒதுக்கி வருவதாகவே தெரிகிறது.

C_V_Wigneswaran_18_May_2015_109504_445.j

tnpf_18_May_2015_109500_445.jpg

இரண்டு சட்டம் தெரிந்த.. தமிழர்களையே மேய்ப்பவனாக அதிகாரத்தையும் ஆயுதத்தையும் கையில் வைச்சுக் கொண்டு தான் சிங்களவன் தமிழ் மண்ணில் இருக்கிறான்.

இந்த நிலையில் தான் உள்ளது.. நீதி என்பது தமிழர்களுக்கு..!! :icon_idea::o

படங்கள்: தமிழ்நெட்

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு சட்டம் தெரிந்த.. தமிழர்களையே மேய்ப்பவனாக அதிகாரத்தையும் ஆயுதத்தையும் கையில் வைச்சுக் கொண்டு தான் சிங்களவன் தமிழ் மண்ணில் இருக்கிறான்.

இந்த நிலையில் தான் உள்ளது.. நீதி என்பது தமிழர்களுக்கு..!! :icon_idea::o

நான் ஏற்கனவே எழுதியது போல தமிழர்கள் தம்மை தாமே ஆழும் ஆற்றல் குறைந்தவர்கள் என்பதற்கு உங்கள் இந்த வாதமும் ஒரு உதாரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.