Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்! தீர்வுக்காக உழைப்போம்!- இரா.சம்பந்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆறாவது உறுப்பினர்  கிடைக்காதபடியால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு எட்ட இருந்த தீர்வுக்கான காலவரை அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

:shocked:

  • Replies 67
  • Views 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

:shocked:

என்ன மருதங்கேணியாருக்கும் மூச்சு போட்டுதோ:shocked:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

விசுகு
யதார்த்தமான தீர்வு என்பது தமிழர்களது அபிலாசைகள ஓரளவு பூர்த்தி செய்வதாகவும் (நிச்சயமாக இங்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்) சிங்களவர்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதான நடைமுறையில் சிக்கலற்ற ஒரு தீர்வு. இங்கு தாயகத்தில் இப்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கையில் - இவை தொடருமாயின் தமிழர்களிற்கென்று ஒரு தீர்வு தேவையில்லை என்ற நிலை சில 10 வருடங்களில் வந்தாலும் வரலாம். ஆனாலும் எமது இருப்பை அடையாளத்தையும் எதிர்காலத்திலும் தக்க வைக்க காணி, காவல்துறை, முதலீடு போன்றவற்றில் தன்னிச்சையாக செயற்படக்கூடிய ஒரு தீர்வு முறை தேவை. இத் தீர்வானது சுதந்திர இலங்கைக்குள் ஒரு சுயநிர்ணய உரிமையற்ற அலகாக இருக்கும் என்பது எனது கருத்து.

எமக்குத் தேவை தனிநாடு இல்லை இப்போது. எமது மக்கள் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக இந்த தீவில் வாழ ஒரு தீர்வு மட்டுமே. 
அதற்கான காலம் கனிந்துள்ளதாகவே தெரிகின்றது.

 

சொந்த மண்ணில் விட்டுக்கொடுப்புகளா!!!!! எதற்கு?
சிங்களவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு!!!!! அப்படியென்ன கேட்கக்கூடாத உரிமைகளை இலங்கை தமிழர்கள் கேட்டுவிட்டார்கள்? சிங்களவர்களைப்போல் சம உரிமைகளைத்தானே இலங்கைத்தமிழர்கள் கேட்டார்கள்.

இனவாதத்தை விடுத்து ஒரு சாதாரண மனித ரீதியில் கூட அடிப்படை உரிமைகளை தர சிங்கள அரசு பலத்தயோசனை செய்கின்றது. இங்குதான் சிங்கள இனம் தமிழினத்தை அடிமையாக வைத்திருக்க நினைக்கின்றது.அது உங்கள் விட்டுக்கொடுப்பு அவசியத்திலேயே தெரிகின்றது.

நாட்டிலிருந்து ஓடிவந்த எம்மையே!!!!!!  புலம்பெயர்ந்த நாடுகள் இன மத நிற பேதமின்றி ஒரு நாட்டு குடிமகனுக்குரிய  சகல அந்தஸ்து உரிமைகளையும் தந்து ஜனநாயகத்தை பேணுகின்றார்கள்..

ஆனால் சொந்தமண்ணில் சொந்த காணி பூமிக்காக அல்லல் படவேண்டியுள்ளது.

எம்மவர்கள் உலகின் அதிமுக்கிய சம உரிமை நாடுகளில் குடியிருந்தாலும் ஜனநாயகத்தைக்கூட போராடித்தான் பெறவேண்டும் என நினைப்பது வேடிக்கைத்தனம்.:grin:

வெளிநாடு வந்தும் திருந்தவில்லை என யாழ்கள சான்றோர்கள் அடிக்கடி இங்கே சொல்வார்கள். ஒருவேளை கையால் சாப்பிடுவதையும்....போலி வாழ்க்கை வாழத்தெரியாததையும் குறிப்பிட்டார்களோ என்னமோ!!!!  :cool:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் ஒட்டி களைத்தாத்து, இனி தேசியகட்சிகள், இனி எப்பவும் திருந்த போறதில்லை. 

இப்பவந்த முடிவையே விளங்க முடியாத நீங்கள் 77ம் ஆண்டுக்கு போவது சிரிப்பாய் இருக்கு. 

 

 

வாத்தியார், உங்களுக்கு பாடம் எடுக்கும் பக்குவம் எனக்கு இருக்கோ தெரியாது.

உண்மையை சொன்னால் அந்த அரசியல் நடவடிக்கை என்பது என்று ஒன்றும் இல்லை, அனாலும் அதுதான் தெரிவு.

அறுதியா தீர்வு என்று எதுவும் இல்லை.. சமஸ்டி கூட வெறும் வார்தை ஜாலம்தான், இருந்தாலும் கூட்டமைப்பு எடுத்து தரும் தீர்வே நடைமுறையில் எடுக்க முடிந்ததும் சாத்தியமானதும்.

 

இதுக்குமேல என்னால் உங்களுக்கு விளங்கபடுத்த முடியாது.

கனக்க யோசிக்கத் தேவையில்லை. முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைந்த ஒரு மாகாணமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். சம்பந்தருடைய காலத்தில் இதைச் செய்துவிட்டால் தமிழர்கள் அவருக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க யோசிக்கத் தேவையில்லை. முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைந்த ஒரு மாகாணமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். சம்பந்தருடைய காலத்தில் இதைச் செய்துவிட்டால் தமிழர்கள் அவருக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்பார்கள்.

என்ன இந்த நேரத்தில் கனவு வாத்தியார்? :cool:

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்து நடக்கிறதை மட்டும் பாத்துக்கிட்டிருங்கோ, கனக்க கதைக்கக்கூடாது. எல்லாம் சுமந்திரனுக்குத் தெரியும்!:grin::innocent:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இந்த நேரத்தில் கனவு வாத்தியார்? :cool:

இத்தனை காலமும் சைக்கிள் ஒட்டிக் களைத்து விட்டேன்.
இப்ப  வீட்டுக்குள்ளை போய் படுத்திருந்தால் கனவு தானே ஐயா வரும்.:cool::grin:

  • தொடங்கியவர்

கனக்க யோசிக்கத் தேவையில்லை. முதலில் வடக்கையும் கிழக்கையும் இணைந்த ஒரு மாகாணமாக ஏற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். சம்பந்தருடைய காலத்தில் இதைச் செய்துவிட்டால் தமிழர்கள் அவருக்கு நன்றிக் கடன்பட்டவர்களாக இருப்பார்கள்.

வாத்தியார், நம்பிக்கைதான் வாழ்க்கை.

சம்பந்தர் காலத்திலேயே தீர்வு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார், நம்பிக்கைதான் வாழ்க்கை.

சம்பந்தர் காலத்திலேயே தீர்வு வரும்.

அப்ப..... 2016´க்குள் தீர்வு வரும் என்று சொன்னது, புலுடாவா......:grin:

  • தொடங்கியவர்

அப்ப..... 2016´க்குள் தீர்வு வரும் என்று சொன்னது, புலுடாவா......:grin:

 

சைக்கிளுக்கு நீங்கள் விட்ட புலுடாக்களை விட சம்பந்தர் பெரிய புலுடா விடவில்லை.

தீர்வை பற்றி யாருக்கு கவலையோ அவஙக பாத்துக்குவாங்க. வெளினாடுகளில் இருக்கும் உங்களுக்கு எதுக்கு தீர்வு?

தமது பிரச்சனையை தீர்க்க யாருக்கு தகுதி இருக்கோ அவர்களை தேர்வு செய்து அனுப்பியுள்ளார்கள். அவங்களும் சரிவரும்போது நல்ல தீர்வா எடுத்து கொடுப்பினம்.

அதுவரைக்கும் கொஞ்சம் காத்து அடிச்சு பழகுங்கோ. :grin:

தீர்வை பற்றி அதிகம் அறியனுமா? கொன்ஞ்சம் நல்ல தமிழ் உடகங்களை வாசிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

சில கேள்விகள்:

1. ஏன் இது தான் கடைசி பஸ் என உறுதியாக நம்புகிறீர்கள்?

2. கூட்டமைப்பு விஞ்ஞாபனம் உடனடி நிவாரணங்களையாவது சொல்லியிருக்கும் போது, 1% கூட தீர்வுக்கான வாய்ப்பில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

3. முப்பது வருடம் உயிர்களை விலையாகக் கொடுத்துக் கொண்டிருந்த போது தீர்வுக்கு காலவரையறை, மாற்று வழி, உறுதிப் பாடு எல்லாம் கேட்டீர்களா? ஏன் த.தே.கூவிடம் மட்டும் இதையெல்லாம் எதிர் பார்க்கிறீர்கள்?

 

ஜஸ்டின் தற்போது இதற்க்கு என்னிடம் விடையில்லை 
ஆனால் மிக விரைவில் இதற்க்கு விடை நான் அளிக்க தேவையில்லை எல்லோருமே புரிந்து கொள்வீர்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் ஒரு தனித்துவமான இனம் அவர்களுக்கென்று தனித்துவமான மொழி கலை கலாச்சாரங்களுடன்.தொடர்ச்சியாக வாழ்ந்ததற்கான தாயகம் இருக்குது. ஆகவே அவர்கள் சுய நிர்ணயத்திற்கு உரித்துடையவர்கள். இதைக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ்கட்சிகளும் ஏற்றுக் கொள்கிறார்கள்.ஏன் தமிழ்மக்களுக்கு என்ன மாதிரியான தீர்வு தேவை என்று கூட்டமைப்பு ஒரு சர்வசன வாக்கெடுப்பை சர்வதேசத்திடம் கோரக் கூடாது.தமிழ்மக்களின் ஜனநாயகத் தெரிவாளரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவ்வாறு கோரும் பட்சத்தில் அப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்த முடியாது என்று சொல்ல எந்தக்காரணமும் இல்லை.அப்படி இருந்தும் கூட்டமைப்பின் தலைவர்கள் அப்படியான கோரிக்கையை இதுவரை ஏன் முன் வைக்கவில்லை. தடுப்பது யார்? இந்தியாவா???

Edited by புலவர்

தடுப்பது யார்? இந்தியாவா???

உங்கள் கேள்விக்கான 75% பதிலும் உங்களது பதிவிலேயே உள்ளதே.

தற்போது இதற்க்கு என்னிடம் விடையில்லை 
ஆனால் மிக விரைவில் இதற்க்கு விடை நான் அளிக்க தேவையில்லை எல்லோருமே புரிந்து கொள்வீர்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை 

மிக விரைவில் இதற்க்கு விடை நான் அளிக்க தேவையில்லை எல்லோருமே புரிந்து கொள்வீர்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை . ஆனால் தீர்வானது புலம் பெயர்ந்தவர்களிற்கானது இல்லை, தாயக மக்களிற்கானது. அவர்களது விருப்பு வெறுப்புகளை வரும் மாகாணசபைத் தேர்தலில் நிசசயம் வெளிக்கொணர்வர்கள். அப்போது மீண்டும் உரையாடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் தற்போது இதற்க்கு என்னிடம் விடையில்லை 
ஆனால் மிக விரைவில் இதற்க்கு விடை நான் அளிக்க தேவையில்லை எல்லோருமே புரிந்து கொள்வீர்கள் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை 

உங்களை நையாண்டி செய்வதற்காகச் சொல்லவில்லை. ஆனால், இது எதிர் பார்த்த பதில் தான். Naysayers ஆக இருக்கும் கருத்தாளர்கள், எந்த வித ஆதாரத் தகவல்களும் அளவீடுகளும் இல்லாமல் தான் இந்த விடயத்தில் கருத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனெனில், அவர்களில் பலரது நோக்கம் தமிழர்களுக்குத் தீர்வு வர வேண்டும் என்பதல்ல! தாங்கள் தாங்கள் விரும்பும் தீர்வு தமிழர்களுக்கு வர வேண்டும், அது வரை வெட்டினால் மொட்டை, வளர்த்தால் குடுமி என்ற மாதிரி இருக்க வேண்டும்! கிடைக்கும் வாய்ப்புள்ள இடைக்கால நிவாரணங்களைக் கூட உதறி விட வேணும்! என்பது தான். இக்கருத்தை வெளிநாட்டில் சௌகரியமாக வாழும் தமிழர்கள் சொல்லும் போது, அது இன்னும் நகைப்புக்கிடமான கருத்தாகப் போகிறது. இது விளங்குவதில்லைப் பலருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

//யாழ். மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன. //

அந்த... ஆறு வாக்குகளும், நமது சொந்தக்காரங்க போட்ட வாக்குகள்.
சம்பந்தன்... யாழ்ப்பாணத்தில், சிங்கக் கொடியை ஆட்டியதற்கு கிடைத்த எதிர்ப்பு  வாக்குகள்.:)

உப்பிடி எல்லாம் சொல்லக்கூடாது, பிறகு உங்கட சொந்தங்களுக்குத்தான் ஆபத்து. ஒரு தடவை அமிர்தலிங்கம் கூட்டத்துக்கு வந்தபோது ஒரு இளைஞன் கறுப்புக் கொடி காட்டினானாம். சில காலங்களின் பின் பயங்கர தடைச்சட்டத்தின் கீழ் அவன் கைது செய்யப்பட்டான். அவன் சிறையில் இருக்கும்போதே அவன் தந்தை இறந்து விட்டார். அவரது இறுதிச் சடங்கில்  சிறையிலிருக்கும் மகன் கலந்து கொள்வதற்கு அனுமதி பெறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினரின் கடிதம் தேவைப்பட்டது. ஆனால் அமிரோ கடிதம் கொடுக்க மறுத்து விட்டார். காரணம் கறுப்புக் கொடி  விவகாரம். சுவருக்கும் காது இருக்கு பாத்துப் பேசுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

 

விசுகு
யதார்த்தமான தீர்வு என்பது தமிழர்களது அபிலாசைகள ஓரளவு பூர்த்தி செய்வதாகவும் (நிச்சயமாக இங்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்) சிங்களவர்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதான நடைமுறையில் சிக்கலற்ற ஒரு தீர்வு. இங்கு தாயகத்தில் இப்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கையில் - இவை தொடருமாயின் தமிழர்களிற்கென்று ஒரு தீர்வு தேவையில்லை என்ற நிலை சில 10 வருடங்களில் வந்தாலும் வரலாம். ஆனாலும் எமது இருப்பை அடையாளத்தையும் எதிர்காலத்திலும் தக்க வைக்க காணி, காவல்துறை, முதலீடு போன்றவற்றில் தன்னிச்சையாக செயற்படக்கூடிய ஒரு தீர்வு முறை தேவை. இத் தீர்வானது சுதந்திர இலங்கைக்குள் ஒரு சுயநிர்ணய உரிமையற்ற அலகாக இருக்கும் என்பது எனது கருத்து.

எமக்குத் தேவை தனிநாடு இல்லை இப்போது. எமது மக்கள் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக இந்த தீவில் வாழ ஒரு தீர்வு மட்டுமே. 
அதற்கான காலம் கனிந்துள்ளதாகவே தெரிகின்றது.

 

சிங்களவர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடைமுறையில் சிக்கலற்ற தீர்வு என்றால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கள். அதாவது தற்போதுள்ள அதிகாரமற்ற மாகாணசபை ஓக்கேயா?60 அண்டுகால போராட்டமும் இரத்தம் சிந்தல்களுக்கும் பொறுப்புக் கூறத் தேவையில்லை.அதென்ன தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுப்புகள் செய்ய வேண்டும். சிங்களவர்கள் 1இஞசியும் இறங்கி வரமாட்டார்களாம். எற்கெனவே படுகுழியில் இருக்கும் தமிழர்கள் மேலும் இறங்கி வரவேண்டுமாம்.இதுக்கு வீட்டுக்குப் போடாமல் யானைக்கோ வெற்றிலைக்கோ போட்டிருக்கலாம். உலகின் பல நாடுகளிலில் நடைமுறையில் உள்ள சமஸ்டித் தீர்வைத்தான் தமிழர்கள் கேட்கிறார்கள். தங்கள் நாடுகளில் நடைமுறையில் உள்ள பொறிமுறையை தமிழர்கள் கேட்டால் பிரிவினை என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நந்தி மாதிரி குறுக்கே நிற்பது இந்தியா!இந்தியா!!இந்தியா!!! தமிழர்கள் காட்டுமிராண்டிகள் மாதிரி கோவணத்துடன் ஏனைய இனங்களுக்கு அடிபணிந்து வாழ வேண்டும். இப்படியான அடிமை வாழ்வை எற்க வேண்டும் என்று சில தமிழர்களும் சொல்வது வேடிக்கையானது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நடைமுறையில் சிக்கலற்ற தீர்வு என்றால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரப்பரவலாக்கள். அதாவது தற்போதுள்ள அதிகாரமற்ற மாகாணசபை ஓக்கேயா?

தீர்வு வந்து விட்டது போன்று தெரிகின்றது ......மாவட்ட அமைச்சர்கள் மூலம்....

என்ன செய்வது உங்களை போன்றவர்களை நம்ப வேண்டிய கேடான சூழலில் தமிழன் ....எத்தனை நாளைக்கு நீங்கள் நடிப்பீர்கள் பார்ப்பம் ....ஒரு சரியான அரசியல் செய்யக்கூடியவர்கள் எமக்கு கிடைப்பின் உங்கள் எதிர்காலம் 0 தான் ...அதுவரை உங்கள் வண்டி இழுக்க தான் செய்யும் ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.