Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

12718263_10153954758691738_2049329000758

விபச்சார ஊடகங்களான...
எம் நாட்டுப் பத்திரிகைகளுக்கும்....
காறித்துப்பும் போது...
சூடு,சுரணை,இல்லாத...
மானங்கெட்ட ஊடகங்களுக்கும்...
இந்தப் பத்திரிக்கை சமர்ப்பணம்.
#பாசை புரியாதவன்....
வருணனையோடு வடிக்கிறான் 

  • Replies 1.7k
  • Views 119.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் உண்மையான அசிங்கமான சாதிவாதம்.

ஒரு சிவகங்கை கிறீஸ்தவ செட்யூள் காஸ்ட் நாடாராகதான் இங்கே சீமான் பேசுகிறார், ஜாதிகளைத்தாண்டிய தமிழ்த்தேசியவாதியாக அல்ல.

கண்ணியமாய் பேசும் ஒருவரின் தாயைப் பழித்து எப்படி கீழ்தரமாய் பேசுறார் பாருங்கள்.

இந்த சுயகண்ணியம் இல்லாதவர்தான் பிரபாகரனின் தம்பியாம். சாதிய மறுப்பில் பிரபா எங்கே? சீமான் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்

கோசன்,

மிகவும் அதிகமாக எழுதுகிறீர்கள். பல உவமானங்கள், குறிப்புகள் சேர்தாலும், வழக்கம் போல, (Lol) மெயின் பொயின்றில் இருந்து நழுவுகிறீர்களே.

சிங்கள அரசியல்வாதிகள், குறிப்பாக பண்டா, JR போன்றவர்கள் அமைதியாக இருந்த நாட்டை தமது சுயநல அரசியலுக்காக இனவாதம் பேசி நாசமறுத்தார்கள்.

ஹிட்லர் இனவாதம் பேசி தான் ஜேர்மனையை நாசமறுத்தார்.

இரு நிலைமைகளிலும், சிறுபான்மையாக இருந்த தமிழர்களும், யூதர்களும் கொல்லப்பட்டார்கள், துரத்தியடிக்கப்பட்டார்கள்.

அண்ணாத்துரை ஆட்சிக்காலத்தில் ஊழல், லஞ்சம் இருக்கவில்லை. அவர் காமராஜரை வீழ்த்தியிருந்த போதும் மக்கள் இனரீதியாக பிரித்துப் பார்க்கவில்லை. தேவை இருக்கவில்லை.

எனது பிரதமர்களில் மிகுந்த திறமை மிக்கவர் என விக்டோரியா மகாராணியாரால் குறிப்பிடப்பட்ட, பென்ஜமின் டிசரேலியின் அதீத திறமை, ஆளுமை தான் பார்க்கப்பட்டதே அன்றி அவரது இனம் அல்ல.

இன்று அசுரபலம் கொண்ட கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஊழலின் உச்சம். இருவர் பெயரிலும் ஊழல் வழக்குகள் உச்ச நீதிமன்றில்...

எம்ஜியாரின் கீப் என்பதை தவிர ஜெயலலிதாவின் தகுதி என்ன? கருணாநிதி ??

இருவரையும் அரசியலில் இருந்து திரத்தி, தமிழ் நாட்டைக் காக்க வழி ஒன்றை முன்வைத்து விட்டு, சீமானின் வழி தவறு என்று சொல்லுங்கள், ஏற்கின்றேன்.

தென் ஆபிரிக்காவில், மிக மோசமான அநியாயம் செய்த வெள்ளையர்களை வெளியேறுமாறு கோராது, சேர்ந்தே வாழும் நிலையில், பலநூறாண்டுகள் ஆண்ட வெள்ளையர்கள் வெளியேறுமாறு போராடிய இந்தியர்கள் தவறு செய்தார்களா? 

சீமானின் அரசியல் தென்னாபிரிக்க அரசியலுக்கு ஒப்பானதாகவே இருக்கும். ஏனெனில் யாரையும் வெளியேற்ற முடியாத வகையில் மத்திய அரச கட்டுப்பாடு இருக்கும்.

ஆனால் தமிழர் கையில், அது சீமானாக இருக்க வேண்டும் என்று இல்லையே, அதிகாரம் வருவது நியாயமானது. அதை தவறு என்று சொல்ல முடியாது. 

சீமான் முதல் கல்லை விட்டு எறிந்து விட்டார். இனி அன்புமணியோ, வாசனோ, சிதம்பரமோ, திருமாவளவனோ அந்தவழியில் பயணிக்கலாம். 

பிரித்தானியாவில், ஜரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து குடியேறுபவர்களுக்கு வாக்குரிமை இல்லை. என்ன காரணம் என்று தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சீமானின் உண்மையான அசிங்கமான சாதிவாதம்.

ஒரு சிவகங்கை கிறீஸ்தவ செட்யூள் காஸ்ட் நாடாராகதான் இங்கே சீமான் பேசுகிறார், ஜாதிகளைத்தாண்டிய தமிழ்த்தேசியவாதியாக அல்ல.

கண்ணியமாய் பேசும் ஒருவரின் தாயைப் பழித்து எப்படி கீழ்தரமாய் பேசுறார் பாருங்கள்.

இந்த சுயகண்ணியம் இல்லாதவர்தான் பிரபாகரனின் தம்பியாம். சாதிய மறுப்பில் பிரபா எங்கே? சீமான் எங்கே?

கோசன்,

இந்த வீடியோ பூச்சுத்தல்களை நீங்கள் நம்புவது மட்டுமல்ல, இங்கே பதிவிடுவதும் அப்பாவித்தனம்.

நேற்று ஒரு வீடியோ, சீமான் கிறிஸ்தவர்களை அவமதித்து விட்டாராம் 2013 பேச்சு ஒன்றில்... இப்ப மன்னிப்பு கேட்கனுமாம்.

பல மமிக்சிரி, போட்டோசொப் சுத்துமாத்து வீடியோக்கள் யூரீயூப்பீல் என்று பிரபலமானவர்கள் எல்லோருமே சொல்கிரார்களே.

அண்மையில் மு.க. அழகிரி பெயரில், தகப்பனுக்கு எதிராக வந்த முகநூல் அறிக்கை பற்றி குறிக்கும் போது, எனக்கு முகநூல் கணக்கே இல்லையே என்று சொன்னாரே, அழகிரி.

இங்கே, சீமானின் தலை சொருகப்பட்டிருப்பதை கவனித்தீர்களா?

இந்த மாதிரி விடயங்களை நம்பி, உங்கள் அபிப்பிராஜங்களை உருவாக்காதீர்கள்.

சீமான் சாதியம் பேசுகிறாரா? என்ன சொல்கிறீர்கள்?

சாதியம் வேண்டாம், தமிழனாக இணைவோம் என்று தானே சீமான் சொல்கிறார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

மன்னிக்கணும் நான் தலைப்பை ஒட்டியே உரையாடுகிறேன். இதுக்கு முந்திய பதிவில் நீங்களும் இசையும் சொன்ன ஒவ்வோர் விடயத்துக்கும் ஆதார, வரலாற்று தர்ககங்களையே முன்வைத்துள்ளேன். அவற்றை ஒன்றைக்கூட மறுக்க முடியவில்லை, அதனால்தானோ மெயின்பொயின்ற்றில் இருந்து நழுவுவதாய் பொத்தாம் பொதுவில் சொல்லி நீங்கள் நழுவுவது போலவும் தோன்றுகிறது.

அது ஒரு புறம் இருக்க.

நான் இங்கே கண்டிப்பது சீமானின் தமிழ்தேசியத்தை அல்ல. சாதிய அடிப்படையில் யார்தமிழர்கள் எனும் சீமானின் வரையறுப்பையே.

ஜெவும் கருணாநிதி குடும்பமும் அகற்ற படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதுக்கும் நாயக்கருக்கும் என்ன சம்பந்தம்?

வைகோ மீது தமிழினத் துரோகி எனச் சொல்லும் அளவுக்கு அவர் செய்த குற்றம்தான் என்ன?

வைகோவை எதிர்க்கும் மூர்க்கத்துடன் ஜெவையோ சு சாமியையோ வேறு எந்த பார்பனரையோ சீமான் எதிர்பதில்லை.

ஜெவின் அழிவு (இயற்கை, வழக்குகள்) வெகுதூரத்தில் இல்லை. ஜெவின் வெற்றிடத்தை, திமுக எதிர்ப்பு புள்ளியை, வைகோ நிரப்புவார் அதன் மூலம் ஒரு உண்மையான சாதிகள் கடந்த தமிழ் தேசிய உணர்வு தமிழ்நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுவிடுமோ என்று பார்ப்பன/ஹிந்திய ஆதிக்க சக்திகள் அஞ்சுகிறன. அதனாலேதான் வைகோ தமிழரே இல்லை என்று ஒரு நுட்பமான சதிவலையை, சாதியவலையை சீமான் எனும் ஏஜெண்ட் மூலம் பின்னுகிறார்கள்.

மூன்றாவது,

ஈயூ பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஆக்களுக்கு யூகே பார்லிமென்று தேர்தலில் மட்டுமே வாக்குரிமை இல்லை. அவர்கள் லோக்கல் கவுன்சில் மற்றும் ஐரோபிய தேர்தல்களில் பங்கு எடுக்கலாம். 

இதை விளங்கப்படுத்த மாச்ஸீட் ஒப்பந்தம் வரை போக வேண்டும். சுருங்க கூறின். நாடுகளின் கூட்டுப் பொறுப்பாக European Commision அமைகிறது. ECக்கு ஒவ்வொரு நாடும் அதன் பிரதிநிதிகளை அனுப்பும். அதை தீர்மானிப்பது அந்த நாடுகளில் ஆட்சிக்கு வரும் கட்சி. ஆக ஒரு ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் வாக்குரிமையை பயன்படுத்தினால் - அது ஜனநாயகத்தை மழுக்கடிப்பதாய் அமையும்.

இரண்டாம் காரணம் free movement of people தான் ஐரோப்பிய ஒன்றிய நோக்கம். ஆகவே ஈயு காரர் இங்கே தங்கு தடையின்றி தங்கலாம் ஆனால் காலாகாத்துக்கும் அவர்கள் வேற்று நாட்டுப் பிரசைகளே.

ஆனல் 5 வருடத்தின் பின் யூகே சிடிசன்சிப் எடுத்தாலோ அல்லது டுயல் சிடிசன்சிப் எடுத்தாலோ எல்லா தேர்தல்களிலும் பங்கு பெறலாம். 1ம் உலகயுத்த காலதேதான் aliens எனும் பிரித்தானிய முடிக்குகீழ் வராதவர்களுக்கு வாக்குரிமை இல்லை எனும் சட்டம் வந்தது. அதுகூட நேசனாலிட்டி அடிப்படியிலே அமைந்தது. இங்கிலாந்து வாழ், யூகே பாஸ்போர் உடைய வீட்டில் ஜேர்மன் பேசிய பல யூதருக்கு அப்போதும் வாக்குரிமை இருந்தது.

ஆக இங்கே இன சாதி அடிப்படியில் இது தீர்மானிக்கப் படவில்லை. ஜனநாயகத்தின் நம்பகத்தன்மை மற்றும் சிட்டிசன் சிப் அடிப்படியிலே இது நடக்கிறது.

இதை ஒரு போதும் நாயக்கர் பிரச்சினையோடு ஒப்பிட முடியாது. 

ஒரு பேச்சுக்கே நாளைக்கு தமிழ்நாடு தனிநாடாகி விட்டது என வைப்போம். அப்போ வைகோ உட்பட்ட நாயக்கர் எல்லோர்க்கும் தமிழ்நாட்டுப் பாஸ்போர்ட்/சிடிசன்சிப் தானே? அப்புறம் அவர்கள் தலைவர் மட்டும் ஆக முடியாதென்றால்?

இது பக்கா சாதிவாதம் அன்றி வேறில்லை.

யுடியூப் விடியோ

அந்தகாலத்து ஆள் நீங்களே அறிந்திருக்கும் போது நான் போட்டோசொப் பற்றி அறியாமல் இருப்பேனே? 

இந்த வீடியோவின் படங்கள் நையாண்டிக்காக ஒட்டப்பட்டவை என்பது விரல் சூப்பும் குழந்தைக்கும் தெரியும். ஆனால் ஆடியோ உண்மை.

இதில் பெயர் சொல்லி இன்னார் என்று கதைக்கிறார்கள்.

பொய் என்றால் ஏன் சீமான் வழக்குப்போடவில்லை.

மறுப்பறிக்கை கூட இல்லை.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20.02.2016: நாம் தமிழர் வரலாறு.. தந்தி தொலைகாட்சியில் ..

 

11 hours ago, goshan_che said:

அவன் எல்லோர்க்கும் சிங்களம் எனும் அடையாளம் கொடுத்து ( நீர்கொழும்பு தமிழரையும்) உள்வாங்கி கொள்ள, நீங்களோ சேர, சோழ பாண்டிய, பல்லவ, பின் வடக்கு கிழக்கு, இப்போ நாயக்கன் நாயக்கன் இல்லாதவன் இப்படி மேலும் மேலும் துண்டு துண்டாகி போகிறீர்கள்.

 

"நாங்கள் பிரித்து வைத்திருக்கிறோம்" என்று எழுதாமல் "நீங்கள் பிரித்து  வைத்திருக்கிறீர்கள்" என எழுதிய காரணம் என்ன? உங்களை தமிழர்களிடம் இருந்து நீங்களே வேறுபடுத்தி வைத்திருப்பதால்தானே? ஐ லவ் திஸ் பூனைக்குட்டி .. tw_blush:

நிற்க.. நீங்கள் எழுதும் எல்லாவற்றுக்கும் பதில் எழுத நேரம்  இல்லை. மறுபடியும் முதல்ல இருந்தா என்கிற மாதிரி இருக்கு.. :mellow:
அதனால் என்னிடம் பதில் இல்லை என பொருள் கொள்ளாதீர்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விக்கு பதில் இல்லையா?

1) கேள்வி கேட்டவரைப் பார்த்து தன்மை, முன்னிலை, படர்க்கை கூட விளங்காமல், ஒரு மொக்கை ஜோக் ஒன்றை சொல்லி அசடு வழியுங்கள்.

2) இதெல்லாம் நாம் எப்பவோ பதில் சொல்லியாச்சு என்று பீலா விடுங்கள்.

3) பாட்டுப்போடுங்கள்.

பதில் சொல்ல உங்களலாலும் முடியாது சீமானாலும் முடியாது ஆனால் கேள்விகள் தொடரும். காரணம் கேள்வியின் நோக்கம் பதில் பெறுவதல்ல மாறாக சீமானின் சாதிய நச்சை புடம் போட்டுக் காட்டுவது.

  • கருத்துக்கள உறவுகள்

கோசன்,

உங்களுக்கு பதில் தரமுடியுமாயினும், இங்கே, இசையின் திரியில், கும்மியடிக்காமல் தனித்திரி தொடங்கினால் தொடர்ந்து விவாதிக்கலாம்.

பழுத்த அனுபவம் கொண்ட உங்களுடன் விவாதிப்பது இனிய அனுபவம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இராமநாதபுரத்தில் இரு தொகுதிகளில் வழக்கறிஞர் அறிவுச்செல்வனும், மருத்துவர் சிவக்குமாரும் வேட்பாளர்களாக..

 

நாம்தமிழர் கட்சியின் தேர்தல் வரைவில் தமிழர் பண்பாட்டு மீட்பில் "தமிழர் மெய்யியல் வரையறையை" அண்ணனுடன் இணைந்து உருவாக்கும் பணியில் வீரத்தமிழர் முன்னணி

12734057_165463697168022_242214763051680

12715440_165463767168015_715188936701947

12745868_165463780501347_702407703922378

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tw_blush:tw_blush:tw_blush:

 

Quote

 

கேட்டதை எழுதுகிறேன்.
-------------------------------------
உங்களுக்காக 
சொம்படித்துக்கொண்டிருந்தபோது 
அதோ போர்வாள் என்றீர்கள்.

எங்களுக்கான 
போர்வளை சுழற்றும்போது 
இதோ சொம்பு என்கிறீர்கள்.

தமிழ்- திராவிடத்திடம் கேட்கிறது.

 

- ஏகலைவன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடன் உரையாடுவது ஒரு சுகானுபவம் நாமு.

இன்னொருதிரி திறந்தும் பேசலாம்.

ஆனால் இந்த திரி எதோ சீமான் மீட்பர் என்பது போலவும் நாடாரும் தேவரும் மட்டுமே தமிழர் என்பது போலவவும், வைகோ ஒரு தமிழினத்துரோகி என்பது போலவும் ஒரு பொய்விம்பத்தை கட்டி எழுப்ப விழைகிறது.

இதை தட்டிக்கேட்க இங்கே யாருக்கும் தோன்றவில்லை என்பதை கருத்தெழுத்காமல் ஒதுங்கி இருந்த போதே கண்டு வருந்தினேன்.

ஆகவே இங்கே சீமான்/ஆதரவாளர்கள் பதிலளிக்க திணறும் கேள்விகளும், முகத்திரை கிழிப்பும் தொடரும்.

தேர்தலில் சனங்கள் டெபோசிட்டை கிழிக்கும் வரைக்குமாவது ???

நாம்தான் தமிழன் என்ற ஒரே காரணுத்தால் பாலி போதை கடத்தல்காரனைக் கூட ஆதரித்து நின்றோர் ஆயிற்றே.

இங்கே தமிழர் தமிழர் என்று குத்தி முறியும் இவர்களுக்கு எப்படிப் புரியும், சீமானின் வரையறைப் படி அநேக யாழ்ப்பாணத் வேளாளர் சாதித் தமிழர் மலையாளா வம்சாவழியினர் என்பது?

தேசவழமை சட்டமே The Thesawalamai is a collection of the Customs of the Malabar Inhabitants of the Province of Jaffna (collected by Dissawe Isaak) and given full force by the Regulation of 1806 என்றுதான் அறியப்படுகிறது.

தமிழில் இருந்து மலையாளம் பிரியமுன் மலபார் பகுதியில் இருந்து வந்து குடியேறியயோரே யாழ்பாணத்து பிள்ளைகள். இதுக்கு உடை, உணவு, பேச்சு, உறவுமுறை என பலதில் நாம் கேரளவாடையுடன் இருப்பதே சான்றாகிறது. 

இப்படிப் சீமான் வரைவிலக்கணப் படிபார்க்கையில் பிரபாவே தமிழர் இல்லை என்றாகிறது. இந்த மலபாரிகள் சொல்கிறார்கள் நாயக்கர் தமிழர் இல்லையாம்.

நல்ல கொமெடி.

 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

உங்களுடன் உரையாடுவது ஒரு சுகானுபவம் நாமு.

இன்னொருதிரி திறந்தும் பேசலாம்.

 

இல்லை, தவறு. சீமானுக்கு ஆதரவாகவே அவர் திறந்த திரி. பிடித்தால் சேர்ந்து பயணிப்பது நாகரிகம். பிடிக்காவிடில் தனித்திரி திறப்பது கம்பீரம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் ஒரு கருத்தை ஆதரித்து திறக்கிறார் எனில் அந்த கருத்துக்கு ஜால்ரா அடிப்பவர் மட்டுமே அந்த திரியில் பங்களிக்க வேண்டும், எதிர்கருத்து சொல்பவர் வேறு திரி திறக்க வேண்டும் என்பது இல்லையே?

இது நாம் தமிழர் அரசியல் எனும் தலைப்பில் அந்த அமைப்பு அதன் ஒருங்கிணைப்பாளரை முன்னிலைப் படுத்தும் திரி. அதில் அப்பட்டமான சாதியம் எனும் நஞ்சு கலக்கப் படுகிறது என்பதை அதே திரியில் வைத்து சொல்வதுதான் நெஞ்சுரம், நேர்மை. அதுதான் அரசியல் விவாதத்துக்கு ஏற்பானது.

இல்லாமல் இது பிறந்தநாள் வாழ்த்து, அந்தியேட்டி நன்றிநவிலல் திரி அல்லவே - எதிர்பதில் அளிப்பது நாகரீகம் இல்லை என்று சொல்ல.

சீமான் தமிழ் நாயக்க சாதியை மிககடுமையாய் பேசி சாதிவாத்தை தூண்டுகிறார். யார் தமிழர் எனும் அவரின் வரைவிலக்கணம் சாதிவாரியாக தமிழரை கூறு போடுகிறது.

இதை சொன்னால் - எல்லாம் முடிய சீமான் எங்கே சாதிவாதம் பேசினார்? என்பது வடிவேலுவின் " என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?" கொமெடியைதான் நினைவு படுத்துது ?

மட்டுமில்லாமல் வைகோ உட்பட பல நாயக்கர் இன மக்கள் ஈழ தமிழருக்கு முன்பு உதவியுளனர். நாயக்கர், வன்னியர் இன மக்களிடம்தான் ஈழ ஆதரவு நிலை அதிகம். நாடார் முக்குலத்தோரை விட.

சீமானுக்கு நாம் சொம்பு தூக்கப் போய், வைகோவை ஒரு காரணுமில்லாமல் துரோகியாக்கி எமக்கான ஆதரவு தளத்தை நாமே குறைக்கிறோம் என்பதும் உண்மை.

Edited by goshan_che

51 minutes ago, goshan_che said:

வடிவேலுவின் " என்ன கையப் பிடிச்சு இழுத்தியா?"

 

இதுவா அது

 

தமிழ் தமிழர் தமிழர் வழமை என்பது பண்பாடு . இதில் அரசியல் கலந்த அனைவரும் மண்ணை கவ்வினர் .  மேலும் தெளிவான அரசியல் இன்றி கனவுலகம் அல்லது நடைமுறை சாத்தியங்களற்ற வழிமுறைகளால் தோல்வியடைந்து பின்னர் தமிழனுக்கு சொரணை இல்லை அல்லது தமிழ் பற்றுள்ளோர் வெல்ல முடியாது என்ற மாய தோற்றம் பலரால் வந்தது அல்லது உருவாக்கினர் . அந்த வரிசையில் இப்போது சீமான் . 

1. ஈழம், பிரபாகரன் இரண்டும் தமிழ் நாட்டில் தமிழர்களை ஜாதி, மதம், கட்சி மறந்து ஒன்று பட வைத்த மந்திர சொற்கள் . அதை மதி கேட்டு அரசியலில் கலந்து அதன் வீரியத்தை பலர் காலி செய்தனர் .  சீமானும் அப்படியே .

2. சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக்களால் செய்யப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடியவர் பிரபாகரன் . ஆனால் தமிழ் நாட்டில் சிறுபான்மை ( பிற மொழியினர் ) மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வு மூட்டுகிறார் இவர்.

3. தெளிவான கோட்பாடுகளோ அல்லது கொள்கைகள் இன்றி  காமா சோமா கைதட்டல் கட்சியை தொடர்ந்து இருக்கிறார் .

4. ரொம்ப அறிவோடு செய்வதாக / பேசுவதாக நினைத்து கொண்டு வாயை கொடுத்து தொடர்ச்சியாக கேவலபட்டும் / மாட்டிக்கொண்டும் வருகிறார்.

5. ராமனை திட்டுவார் . முருகனுக்கு காவடி எடுப்பார் . ( முரண் )

6. திருமலை நாயக்கர் மகால் அவமான சின்னம் / தெலுங்கன் வந்தேறிகள் என்பார் . அப்படின்னா எல்லா பள்ளிவாசல்களையும் / முகமதிய அன்பர்களையும் ???

7. இவரை  கிருஸ்துவன் என தொடர்ச்சியாக விமர்சிப்பதால் உடனே ஏசுவை ஏசிவிட்டார் . பிறமதங்களை மதிக்க தெரியாதவன் தமிழர்களின் தலைவனா ???

இன்னும் நிறைய இருக்கு . அப்புறம் வர்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து தொடர்ந்து வாங்க பைத்தியம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் பல திரிகளில் கருத்து எழுதியிருந்தாலும் முத்தான கருத்துக்கள் இந்தத் திரியில் தான் இருக்குது...எழுத்து நடை குறுக்காலபோவானை ஞாபகப்படுத்துகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் நேர்காணல் – நேர்முகம், இமயம் டிவி – 20பெப்ர2016

http://tamilcat.com/seeman-20160220-interview-to-nermugam-imayam-tv/

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 50 ஆண்டு கால திராவிடச் சக்தியில் சிக்கிய பலருக்கு சீமான் கசப்பாக அமைவது ஒன்றும் வியப்பல்ல.

அசிங்கம் எம் ஜி ஆரின் மனைவியோடு சட்டையைப் பிடிச்சு  அடிபிடிப்பட்டு.. அதிகாரத்துக்கு வந்தவர் தான் இன்றைய ஜெயலலிதா.. இவரை எல்லாம் எப்படி தமிழக மக்கள் தலைவராக அங்கீகரித்தார்கள்...................................

மொழிப் போராட்டம்.. தமிழருக்கு தனி நாடு கேட்டுப் போராட்டம் மூலம் தங்களை முன்னிறுத்திய..அண்ணாவை அரசியலுக்கு கொண்டு வந்ததும் இதே தமிழக மக்கள் தான். அந்த அண்ணா அரசில் (ஆட்சிக்கு வந்ததும் மொழிப் போராட்டம்.. தனி நாடு.. தமிழ்நாடு ஆனதோடு அடங்கிவிட்டது அது வேற கதை).. இரண்டு ஊழல் பெருச்சாளிகள் இருந்தன.. அதில் ஒன்று தான் இன்றும் ஊழல் செய்யும் கருணாநிதி..

இத்தனை அண்டை மாநில.. திராவிட அசிங்கங்களை எல்லாம்... தமிழனுக்கு ஆட்சிப் பொறுப்பென்று.. சிம்மாசனம் ஏற்றும் போது வராத கோபம்.. தாபம்.. விமர்சனம்..

ஒரு இலட்சியப் போராளியான பிரபாகரனையும்.. தமிழக மக்களையும்.. ஒட்டுமொத்த தமிழினத்தையும். தமிழ் நாட்டின் எதிர்காலத்தையும்..  தமிழ் மொழியின் இருப்பையும்.. சாதி மத பால் பிளவுகளுக்கு அப்பால்  தமிழன் தமிழாக.. ஊழல்கள்..கொடுமைகள்.. ஏழ்மை.. வறுமை.. நோய் நொடி இன்றி இதர முதலாம் தர நாடுகளுக்கு இணையான வசதியோடு.. வாழனும் என்று.. கணக்கில் எடுத்து.. நாம் தமிழராக ஒரு இளைய சமூகம் அரசியலுக்கு வருவதை ஏன் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை..

அண்ணன் பைத்தியம் தன் சிற்றறிவால் விளக்குவாரா...??! tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதிகம் காய்கிற மரத்துக்கு தான் கல்லெறி விழும். பி கே வாசன் குறித்து யாரும் எழுதுவதில்லை. 

விஜயகாந்த் மொட்டை மரம். கல்லெறி இப்போது விழுவதில்லை.

தமிழக அரசியலில், கருணாநிதி, ஜெயலலிதா, எம் ஜி ஆர் வாங்காத வசவுகளா?

எம் ஜி ஆர் மரண ஊர்தியில் இருந்து இழுத்து வீசப் பட்டவர் தான் ஜெயலலிதா.

எதிர்ப்புக்கள் வரும் போது, துவண்டு விடாமல் நின்று பிடிப்பவன் தான் தலைவராக ஏற்றுக் கொள்ளப் படுகின்றார்.

தனித்து நிற்காமல், துவண்டு, கூட்டணி என்று ஓடி 'சார்ந்து' நின்ற படியால், தகுதி இருந்தும், அங்கீகாரம் இன்றி வைக்கோ இன்று தள்ளாடுகின்றார்.

சீமானின் நிலைப்பாடுக்கு மக்களின் அங்கீகாரம் உள்ளதா, இல்லையா, என்பது இன்னும் மூன்று மாதங்களில் தெரிந்துவிடும்.

அது வரை இங்கே, நேரத்தை விரயம் செய்வதில் அர்த்தம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளங்காதவர்களுக்கு இன்னொரு முறை கேட்க...

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tamil paithiyam said:

தமிழ் தமிழர் தமிழர் வழமை என்பது பண்பாடு . இதில் அரசியல் கலந்த அனைவரும் மண்ணை கவ்வினர் .  மேலும் தெளிவான அரசியல் இன்றி கனவுலகம் அல்லது நடைமுறை சாத்தியங்களற்ற வழிமுறைகளால் தோல்வியடைந்து பின்னர் தமிழனுக்கு சொரணை இல்லை அல்லது தமிழ் பற்றுள்ளோர் வெல்ல முடியாது என்ற மாய தோற்றம் பலரால் வந்தது அல்லது உருவாக்கினர் . அந்த வரிசையில் இப்போது சீமான் . 

1. ஈழம், பிரபாகரன் இரண்டும் தமிழ் நாட்டில் தமிழர்களை ஜாதி, மதம், கட்சி மறந்து ஒன்று பட வைத்த மந்திர சொற்கள் . அதை மதி கேட்டு அரசியலில் கலந்து அதன் வீரியத்தை பலர் காலி செய்தனர் .  சீமானும் அப்படியே .

2. சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மை மக்களால் செய்யப்படும் கொடுமைகளை எதிர்த்து போராடியவர் பிரபாகரன் . ஆனால் தமிழ் நாட்டில் சிறுபான்மை ( பிற மொழியினர் ) மக்களுக்கு எதிராக வெறுப்பு உணர்வு மூட்டுகிறார் இவர்.

3. தெளிவான கோட்பாடுகளோ அல்லது கொள்கைகள் இன்றி  காமா சோமா கைதட்டல் கட்சியை தொடர்ந்து இருக்கிறார் .

4. ரொம்ப அறிவோடு செய்வதாக / பேசுவதாக நினைத்து கொண்டு வாயை கொடுத்து தொடர்ச்சியாக கேவலபட்டும் / மாட்டிக்கொண்டும் வருகிறார்.

5. ராமனை திட்டுவார் . முருகனுக்கு காவடி எடுப்பார் . ( முரண் )

6. திருமலை நாயக்கர் மகால் அவமான சின்னம் / தெலுங்கன் வந்தேறிகள் என்பார் . அப்படின்னா எல்லா பள்ளிவாசல்களையும் / முகமதிய அன்பர்களையும் ???

7. இவரை  கிருஸ்துவன் என தொடர்ச்சியாக விமர்சிப்பதால் உடனே ஏசுவை ஏசிவிட்டார் . பிறமதங்களை மதிக்க தெரியாதவன் தமிழர்களின் தலைவனா ???

இன்னும் நிறைய இருக்கு . அப்புறம் வர்றேன் 

வணக்கம், தமிழ் பைத்தியம்!

நீங்கள் ஒரு அவதார புருஷா மாதிரி!

இப்படியான பிரச்சனைகள் வரும் போது மட்டும் களத்துக்கு வந்து தலையைக் காட்டுவீர்களாக்கும்!

 

ராமனை திட்டுவார் . முருகனுக்கு காவடி எடுப்பார் . ( முரண்)

இங்கு எங்கே 'முரண்' காணுகிறீர்கள்?

 

இராமன்  ஆரியன்! முருகன் தமிழன்!

ஆரியர் முருகனைக் காவிக்கொண்டு போர்.. இந்திரனுக்கு மருமகனாக்கிய கதையைப் பிறகு விரிவாகக் கதைப்போம்!

 

பிரபாகரனின் புகழ் பாடியபடி வருகின்றீர்கள்!

 

தள்ளாடும்  தேகம்....எனினும் தள்ளாடாத நோக்கம்!

இது மாறுவேடத்தில் வரும் இந்திரனைப் பார்த்துக்   'கர்ணன்' சொல்வது...! (கர்ணன் படத்து வசனம்)

 

மிச்சத்தையும் எழுதுங்கோ.... நானும் பதில் கருத்தெழுதுகிறேன்!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தோற்பதர்க்காக நிற்கவில்லை...
தொடங்குவதற்காக நிற்கிறோம்...
வென்றால் மகிழ்ச்சி ..
தோற்றால் பயிற்சி 
தொடரும் எங்கள் முயற்சி
இது மாற்றத்துக்கான எழிய மக்களின் புரட்சி  tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

12717175_195524694136723_375457392453095

ஈனத்திராவிடன் தெலுங்கன் இனப்படுகொலைக்காவலன் கருணாநிதியை ஆதரித்து நின்ற பாவத்தைக் கழுவும் வைரமுத்து.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சிலவற்றை எழுதவேண்டி இருக்கிறது.. வைகோ அவர்கள் ஒரு ஈழ ஆதரவாளர். இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இவருக்காகத்தான் தெலுங்கு ஆதிக்கத்தை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது என்று பொருள் அல்ல. மாறாக மாற்று மொழிச் சமூகங்களை ஆட்சி அதிகாரத்தில் வைக்காதீர்கள் என்றுதான் மக்களைக் கேட்கிறார்கள். அதற்கு வலுவான காரணமும் ஒன்று உள்ளது. இந்த ஐம்பது ஆண்டுகள் இந்தத் திராவிட ஆட்சிகள் செய்து வைத்த காரியங்கள்தான் அவை. இது சரியான கோரிக்கையா என்பதை தமிழகம் தீர்மானிக்கும்..

நாம் தமிழர் கட்சியின் இந்தக் கொள்கை ஏற்கனவே ஆதித்தனார், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் என்று ஏற்கனவே பலரால் முழங்கப்பட்டதுதான்.

நாம் தமிழர் என்கிற அடிப்படையில் வைகோ போன்ற தலைவர்கள் இயக்கம் காண்பதில் மகிழ்ச்சி. இந்த மண்ணுக்கு சேவை செய்வது மகிழ்ச்சி.. ஆனால் அரசியல் அதிகாரத்தை அவர் இங்கு பெற முயற்சிப்பது தர்மம் அல்ல. ஏன்?

இதற்கு அண்மைய உதாரணம் மக்கள் நலக் கூட்டணியை முன்னெடுப்பதற்காக ஈழப்பிரச்சினையையும், அணு உலைப் பிரச்சினையையும் கைவிட்டுவிட்டார். இதுதான் அயலார் செய்வது.

மேலும் சாதி என்பதையும், இனம் என்பதையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறார் கோசான். நாயக்கர் என்பது சாதிதான். ஆனால் அவர்க் தெலுங்கு இன சாதியினர். நாயுடு, ரெட்டி இன்னும் பல.. இவர்களை "தமிழர்கள்" என்று ஏற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள் சிலர். அட அவர்களே தாங்கள் ஆண்ட பரம்பரை.. தெலுங்கு வம்சம் என்று சொல்லித் திரிகிறார்கள்.

அண்மையில் ஒரு முகநூல் உரையாடலைக் காண நேர்ந்தது. அவர் மிக அப்பாவியாகவே கேட்டிருந்தார். தான் ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் பல தலைமுறைகளாக தங்கள் குடும்பம் தமிழகத்தில் வாழ்ந்து வருவதாகவும், தமிழிலேயே கல்வி கற்றதாகவும், இப்போது தாம் தமிழரா இல்லையா எனவும் கேட்டிருந்தார். அதற்கு ஒருவர் நீங்கள் வீட்டில் என்ன மொழியில் பேசுவீர்கள் எனக் கேட்டார். தெலுங்கு எனப் பதில் வந்தது. இவர் தமிழரா?

கனடா நாட்டில் வளரும் எமது புதிய தலைமுறைக்கு ஆங்கிலம் அத்துப்படி. வீட்டில் தமிழில் கதைப்பார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனால் அவர்கள் ஆங்கிலேயர் ஆகிவிட்டார்களா? அல்லது சில நூற்றாண்டுகள் கழித்து ஆகிவிடுவார்களா? கனேடியன் தமிழ் என்கிற அடையாளம்தான் அவர்களுக்கு நிலைக்கும்.

யூதர் இங்கிலாந்தை ஆளவில்லையா என்கிற வாதம் வைக்கப்பட்டது. தாராளமாக.. தமிழ் கனேடியர்கள் கூட கனடாவை ஆளலாம். ஆனால் ஆட்சிக்கு வந்துவிட்டு ஆங்கில மொழியை அழித்தாலோ அல்லது நேட்டோவை விட்டு விலக முயன்றாலோ, இங்கே கொள்ளையடித்துவிட்டு வெளிநாட்டில் சொத்து சேர்த்தாலோ தூக்கி எறியப்படுவது திண்ணம். ஆனால் தமிழர்கள் மிக நல்லவர்கள். ஐம்பது ஆண்டுகளாகச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.